பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, December 22, 2009

போலாம் ரைட்!!

குளிரடிக்கும் காலை; குன்னூர் பஸ் ஸ்டாண்ட்டிலிருந்து மேட்டுப்பாளையம் கிளம்புகிறது அந்த அரசு பஸ். வேகமாய் ஓடி வந்து நாலு பேர் பஸ் ஏற, "ஏங்க, இவ்வளவு அவசரம், அடுத்த பஸ்ல வரலாமே' என்றால், "இதுல போனாத்தான் இன்னிக்கு நாளு நல்லாயிருக்கும்,' என்று புதிர் முடிச்சுப் போட்டார்கள். அவர்கள் முடிப்பதற்குள் ஒரு கணீர்க்குரல்...

"அன்பார்ந்த பயணிகளுக்கு இனிய காலை வணக்கம். உங்களின் பயணம் இனிமையாக அமையவும், நினைத்துக் கொண்டிருக்கும் காரியங்கள் நிறைவேறவும், எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இனிய வாழ்க்கைக்கு, போதை வஸ்துகளை தவிர்க்க வேண்டும்; முடிந்த அளவுக்கு மரக் கன்றுகளை நட்டு சுற்றுச்சூழலை பாதுகாத்திடுங்கள், பெரியோரை மதிப்போம்; பெற்றோரை பேணுவோம்; ரத்தானம் செய்வோம்...''என்று தொடர்கிறது அந்த உரை. நிகழ்த்துவது அந்த பஸ்சின் கண்டக்டர் கனக சுப்ரமணியம்(54). 28 ஆண்டுகளாக அரசு பஸ் நடத்துனர். பூர்வீகம், நீலகிரி மாவட்டம் கொலக் கம்பை. முதலில் தனது சொற்பொழிவை துவக்கியது கொலக்கம்பை - குன்னூர் வழித்தடத்தில்தான்.


இப்போது குன்னூர்-மேட்டுப்பாளையம் வழித்தடத்திலும் அவரது சிற்றுரை ஒலிக்கிறது. காலையில் வேலைக்கு வரும்போது, தெருவிளக் குகளை அணைப்பது அவர் செய்யும் முதல் வேலை. பஸ்சை சுத்தம் செய்து, பயணிகளிடம் 5 நிமிடம் சொற்பொழிவாற்றுவது அன்றாட வேலை.பஸ்சில் திருக்குறள் எழுதியிருந்தாலும், "தினம் ஒரு திருக்குறள்' என்ற முறையில், ஒரு குறளைச் சொல்லி, அதற்கு விளக்கத் தையும் சொல்கிறார். பஸ் சில் பயணிக்கும் ஒருவரை தேர்வு செய்து, அவருக்கு திருக்குறள் புத்தகத்தை பரிசாகவும் கொடுக்கிறார்.பஸ் புறப்படும் முன் அவர் சொல்லும் உத்தரவாதம்..."எங்கள் ஓட்டுனர், பேருந்தை இயக்கும் போது கைபேசியில் பேச மாட்டார்,''

அவர் சொல்வதை ஆமோதிப்பதைப்போல் திரும்புகிறார் ஓட்டுனர். இந்த காம்பினேஷனில் கவர்ந்திழுக்கப்பட்டு, தினமும் இந்த பஸ்சை தேடி ஓடி வருகிறார்கள் பயணிகள்.பஸ்சில் வரும் குழந்தைகளிடம் தன்னம்பிக்கை கருத்துகளை தெரிவிக்கும் கனக சுப்ரமணியம், ஏழைக்குழந்தைகளுக்கு, இலவச சீருடையும் வாங் கித் தருகிறார். தேர்வில் அதிக மதிப்பெண் வாங்கினால், பயணிகளுக்கு மத்தியில் சந்தன மாலை அணிவித்து கவுரவிக்கிறார்.


"செந்தமிழ்' அறக்கட்டளையை நடத்தும் கனகு, சிறைத்துறையின் அனுமதியோடு, கைதிகளுக்கு போட்டிகளை நடத்தி பரிசும் வழங்குகிறார். நண்பர் ஒருவருடன் சேர்ந்து கோ வையில் இவர் நடத்தும் "சாரோன்' முதியோர் இல்லத்தில் இப்போது இருக்கும் ஆதரவற்ற முதியோர் எண்ணிக்கை 15.எச்.ஐ.வி.,யால் பாதித் தோருக்கு, கோவை "சினேகம்' அறக்கட்டளையுடன் இணைந்து, இலவச மருந்து, சத்து மாவு வழங்கி வருகிறார். தனியார் தொண்டு நிறுவனங்கள் இவருக்கு, "சேவைச்செம்மல்', "கோவை மாமனிதர்', "இலக்கியக் காவலர்', "செம்மொழிச் செல்வர்' என பல பட்டங் களைக் கொடுத்துள்ளன.

"எனக்கு சத்ய சந்திரன், சத்ய சுதன்னு ரெண்டு மகன்கள் இருக்காங்க, வளர்ப்பு மகன், மகள்கள் நாலு பேர் இருக்காங்க, அவுங்களோட ஒத்துழைப்பு இல்லாம இவ்வளவு வேலைகளை நான் செய்ய முடியாது. எங்க ஆபீசருங்க பண்ற உதவி அதை விடப் பெருசு, நாலு பேருக்கு நல்லது செய்யணும்னாலும் ரெண்டு கையாவது இணைஞ்சாத்தான் நடக் கும். அப்பிடி எனக்கு உதவுற கைகள் நிறைய...,''இரு கைகளையும் அகல விரித்துச் சொல்கிறார் கனக சுப்ரமணியம்.இவரது பஸ்சில் அடிக்கடி பயணிகள் விசில் அடிப்பதுண்டு. அதற்காக இவர் அலுத்துக் கொள்வதில்லை; அத்தனையும் இவரது சொற்பொழிவுக்காக கிடைப்பவை. நல்ல நடத்துனர், நல்ல பயணிகள்... போலாம் ரைட்!

இந்த செய்தி தினமலரில் வந்தது. இந்த செய்தியை எனக்கு அனுப்பி நண்பருக்கு நன்றி.


நல்ல மனிதர்களை பத்தி படிக்கும் போது மனசுக்கு சந்தோஷமா இருக்கு.

29 Comments:

Anonymous said...

Hats Off to Kanagu....He is Following M K Gandhi and M.Kamaraj ...

கிருஷ்ண மூர்த்தி S said...

நல்ல மனிதர்களைப் பற்றி, அவர்கள் செய்து வரும் நல்ல காரியங்களை பற்றி, தெரிந்துகொள்ள முடிவது இன்றைக்குக் கிடைக்கும் வரம்!

இ.வ இன்றைக்கு ஒரு நிறைவான பதிவைப் பரிமாறியிருக்கிறது! நன்றி!

(-!-) said...

நல்ல மனுஷங்களைப் பற்றி எழுதும் போது "மஞ்சள்" பெயிண்ட் அடிக்காமல் பச்சையில் அடிக்கும் உமது "நுகபிநி".

:>

(-!-) said...

பிறந்தது முதல் இன்று வரை காவிரி தண்ணீருக்காக போராடுவதாக அறிக்கை விட்டுள்ள "மஞ்சள்" துண்டு தலைவருக்கு ஒருவரி பாராட்டு போட்டு விடுங்கள் - வழக்கம் போல உங்கள் பாணியில் "மஞ்சள்" பெயிண்டுடன்.

டிஸ்கி-1
என்னோட போன கமெண்ட்டுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

டிஸ்கி-2
"மஞ்சளுக்கு" "பச்சை" போடக்கூடாது என்று நான் சொல்வதாக நீங்கள் தப்பாக என்ன வேண்டாம்.

சுவாசிகா said...

//நல்ல மனிதர்களை பத்தி படிக்கும் போது மனசுக்கு சந்தோஷமா இருக்கு.//

உண்மை..நீங்கள் போட்ட (ஒன் ஆப் தி) உருப்படியான கமெண்ட் and/or ஹைலைட்..

அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me

வேதநாராயணன் said...

மனம் நிறைவான ஒரு நியூஸ்.

ஒரு நல்ல ஆட்சி வந்தால் இவரை தான் TN ஸ்டேட் பஸ் corporationக்கு ஒரு மார்க்கெட்டிங் மேனேஜர் ஆகா போட வேண்டும்.

சைவகொத்துப்பரோட்டா said...

இந்த மாதிரி நல்ல உள்ளங்கள் எல்லா வளமும், நலமும்
பெற அனைவரும் வாழ்த்துவோம்.

மிக்க நன்றி திரு.கனக சுப்ரமணியம்

butterfly Surya said...

வாழ்த்துகளும் அவருக்கு வணக்கங்களும்..

பகிர்விற்கு நன்றி கிருஷ்ணா.

geetha santhanam said...

கனகசுப்ரமணியம் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நல்லது செய்ய தேவையானது மனம் மட்டுமே, பணமோ பதவியோ இல்லை என்பதற்கு எடுத்துடுக்காட்டாய் வாழ்கிறார். ---கீதா

kaliraj said...

Ideal Man

Anonymous said...

Great...God Bless you Sir..

ஆதி மனிதன் said...

நடத்துனர் அண்ணாச்சிக்கு ஒரு சல்யூட்.

எல்லாவற்றையும் இல்லாவிட்டாலும் கூட ஏதாவது ஒன்றையாவது இவரிடமிருந்து மற்ற நடத்துனர்கள் பழகிக்கொண்டால் சந்தோசம்.

RAMesh Kumar SS said...

திரு.கனக சுப்ரமணியம் வாழ்க

வாழ்க வளமுடன்

K Subramanian, Chennai said...

very good human being. When I read about this kind of person i am deciding to do what ever best possible by me to him. But within a day forgetting about . Hence today itself i wanted todo something (atleast thank him). Please give his contact nos.

வீரராகவன் said...

இயன்றவரை மற்றவர்களுக்கு இனியது செய்பவர்கள் வையத்துள் மனிதர் எனப்படுவர்.
திருமந்திரத்தில் கூறியது போல,
`யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி, யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாயுரை, யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரைதானே`
இவரைப் பற்றி அனைத்து ஆசிரிய பெருமக்களும் மாணவர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும். இந்த இடுகையை படிக்கும் வாய்ப்பில்லாதவர்களுக்கு நாம் எடுத்து சொல்லுவோமே. என்ன நான் சொல்றது சரிதானே?

வலைஞன் said...

"உண்மையில்"
கண்கள் பனித்தன
இதயம் இனித்தது

ஸ்ரீ கனகு
வாழ்க நீ எம்மான்
இவ்வையத்து நாட்டிலெல்லாம்

மர தமிழன் said...

// ஆதி மனிதன் said...
நடத்துனர் அண்ணாச்சிக்கு ஒரு சல்யூட்.

எல்லாவற்றையும் இல்லாவிட்டாலும் கூட ஏதாவது ஒன்றையாவது இவரிடமிருந்து மற்ற நடத்துனர்கள் பழகிக்கொண்டால் சந்தோசம்//

சிறு திருத்தத்துடன்...

நாமெல்லாருமே.. பின்பற்றுவோம். அவரை போலவே பிறர்க்கும் எடுத்துச் சொல்வோம். வாழ்க அவர்தம் தொண்டு. பதிவிட்ட இட்லிவடைக்கு நன்றிகள் கோடி.

kalyani said...

I am a regular reader of idlyvadai blog. God bless you Mr.kanaga
Subramaniam.

Griesh Kulangara said...

இவரை தயவு செய்து சென்னைக்கு மாத்திடதிங்க கெட்டுபோயிடுவார்.

Asir said...

நல்ல மனிதர்களை பத்தி படிக்கும் போது மனசுக்கு சந்தோஷமா இருக்கு.


பகிர்விற்கு நன்றி

Hariharan # 03985177737685368452 said...

Super inspiring positive attitude. Wishing this Noble bus conductor great success and good luck.

Dhasarathy said...

Great Service Mr.Kanagu!

Idly-Vadai: I would recommend that it is worth giving space on the right (like Muni update) for identifying and felicitating people like Kanagu.

ராஜ சுப்ரமணியன் said...

நல்ல பதிவு; கண்கள் பனித்தன. கனக சுப்ரமணியத்திற்கு ஆசிகள். ஏதேனும் பண உதவி (இ.வ. மூலம்?) செய்யலாமா?

வளரட்டும் அவரது தொண்டு.

ராஜ சுப்ரமணியன்

Gopal said...

I was depressed due to some family problems from yesterday. On reading the article about Sri.Kanagu,surprisingly, I felt a great relief in my mind. Really it gave a boost in elevating my mood. I am happy that nobody is interfering with his good deeds. I request you to share such good things with your discerning readers. Certainly it will spread positive vibes at least in good people. Thanks for this post.

Itsdifferent said...

முதலில் கனகு அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இறைவன் அவருக்கு இல்லை என்று கொடுப்பானாக.

இங்கு பதில் இட்ட சிலர் அவரின் தொடர்பு அல்லது அவருக்கு பண உதவி செய்ய நினைக்கின்றனர். நல்ல எண்ணம், தவறேதும் இல்லை, அதற்கு மாற்றாக நீங்கள் வசிக்கும் இடத்தில இருந்தே, உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். நிச்சயம், உங்கள் ஊரில் ஒரு பள்ளி இருக்கும், அங்கு சென்று, ஒரு ஏழை மாணவனுக்கு வேண்டிய எல்லா உதவியையும் செய்யலாம். மேலும் இப்படி பல காரியங்களை செய்யலாம். நம் அனைவருக்கும் அத்தகைய ஒரு மன உறுதியும், கடமை உணர்ச்சியும் வந்து விட்டால், வறுமையை கண்டிப்பாக விரட்டி விடலாம்.
Lets make a difference.

R.Gopi said...

//நல்ல மனிதர்களை பத்தி படிக்கும் போது மனசுக்கு சந்தோஷமா இருக்கு.//

அது பற்றிய பதிவுகளை இட்லிவடை போன்ற வலையில் படிப்பது அதைவிட சந்தோஷமா இருக்கு...

கலக்குங்க இட்லிவடை...

நண்பர்களும் இதுபோன்ற நல்ல பல விஷயங்களை பகிரலாமே...!!

Anonymous said...

When most of us do a passive reading online there are some heroes who actually "Do" things in the real world. IV if you can send the contact details of this noble person it will help if someone wants to contribute to this charity works. Besides reading and appreciating some real contributions can also be made.

nerkuppai thumbi said...

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை.
இவர் போல நாம் செய்யத் தோன்ற வில்லையே என ஒரு குற்ற உணர்வு.
இது போன்ற பதிவுகள், உங்கள் வாசகர்களில் சிலரை தன்னால் முடிந்ததை செய்ய வேண்டும் என உந்தும். அவர் பனி தொடர்க; உங்கள் பதிவுகள் தொடர்க.

அமர்ஹிதூர் said...

//நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை.

இவரை போன்றவர்கள் பத்து சதவீதம் இருப்பதால் நம் அனைவரின் வாழ்கையும் ஓடிக்கொண்டுள்ளது.