பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, December 21, 2009

ஜனநாயகக் கடமை சர்ச்சைக்குரியதா?

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில், திருச்செந்தூர் மற்றும் வந்தவாசி இடைத்தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. திருமங்கலம் போன்றே வரலாறு காணாத வாக்குப்பதிவு நடந்துள்ளது. திருச்செந்தூர் மற்றும் வந்தவாசியில் முறையே 78 மற்றும் 82 இரண்டு சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. திருமங்கலத்தை விட திருச்செந்தூரில் ஓட்டுக்களின் விலை குறைக்கப்பட்டாலும், வாக்கு சதவிகிதம் குறிப்பிட்ட அளவில் அதிகரித்தேயுள்ளது. சாதாரணமாக தேர்தல்களில் 50 முதல் 60 சதவிகிதம் வரை வாக்குகள் பதிவாவதே செய்தியாக்கப்படும் நிலையில் சராசரியாக இரண்டு இடங்களிலும் 80 சதவிகிதம் வரை வாக்குகள் பதிவாகியுள்ளது. பெரும்பாலும், படித்தவர்கள் வாக்களிப்பதில்லை என்ற நிலை கழகத்தால் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கழக வழி கரன்ஸி வழி. ஆனால் கரன்ஸி வழியில் வாக்குகள் வியாபாரமாக்கப்படுவது மீடியாக்களால் சர்ச்சைக்குரிய வழிமுறையாக சித்தரிக்கப்படவில்லை. ஜெயா டிவி மட்டும் தேர்தலுக்கு முன்னும் பின்னும் சில நாட்கள் கதறிவிட்டு ஓய்ந்து விடுகிறது.


இந்நிலையில், தேர்தலில் வாக்களிக்கும் ஜனநாயகக் கடமையை ஆற்றாமல் வீட்டிற்குள் முடங்கிக் கிடப்பவர்களுக்கு வேட்டு வைக்கும் விதமாக குஜராத் மாநில சட்டசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உள்ளாட்சிக்கான தேர்தல்களில் அனைவரும் வாக்களிக்க வேண்டும். அவ்வாறு வாக்களிக்காதவர்கள், ஏன் வாக்களிக்கவில்லை என்பதற்கான காரணத்தை ஒரு மாத கெடுவிற்குள் விளக்க வேண்டும். காரணம் அரசாங்கத்தை திருப்திப்படுத்தாவிடில் அவர்கள் தண்டனையை சந்திக்க நேரிடும். இதுதான் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள சட்டம். வழக்கம்போல் எதிரிக்கட்சிகளின், குறிப்பாகக் காங்கிரஸின் எதிர்ப்புக் கூக்குரலுக்கிடையே இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இச்சட்டம், வட இந்திய ஆங்கில மீடியாக்களால் ”சர்ச்சைக்குரிய” என்று அடைமொழியிட்டு வர்ணிக்கப்படுகிறது. அதாவது குஜராத் முதல்வர் நரேந்திர மோதியுடன் தொடர்புடைய எந்த விஷயமாக இருப்பினும் அது சர்ச்சைக்குரிய என்று மீடியாக்களால் வழங்கப்படுவது வழக்கமாகிவிட்டது.

இவ்வாறான முறை ஏற்கனவே உலகளவில் 32 நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. நான் அறிந்தவரையில் சிங்கப்பூரில் சரியான காரணமின்றி வாக்களிப்பைப் புறக்கணித்தால் ஆறு மாதகாலம் அரசாங்க விருந்தாளியாக இருக்கலாம். தமிழகத்தில் கழகம் பணத்தின் மூலமாக சாதிப்பதை மோதி பணத்தை மிச்சப்படுத்துவதற்காக செய்கிறேன் என்கிறார். இரண்டிற்கும் உள்ள வித்யாசம் மலைக்கும் மடுவிற்குமானது. இச்சட்டத்திற்காக அவர் கூறும் காரணங்கள் இதோ..

” முதலில் இது சர்ச்சைக்குரியது என்பதே தவறு. இது உலக அளவில் 32 நாடுகளில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தவிர, ஏற்கனவே இந்தியாவிலும் இதை நடைமுறைப்படுத்துவதற்கான விவாதங்களும் நடைபெற்றுள்ளன. இச்சட்டம் ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்த உதவும். தவிர தற்போதைய தேர்தல் முறையானது, அரசியல் கட்சிகளை முன்னிலைப்படுத்துவதாக உள்ளது. ஆனால் இச்சட்டத்தின் மூலம், தேர்தல் என்பது மக்களை முன்னிலைப்படுத்த உதவும். நமது தேர்தல் முறையில் அரசியல் கட்சிகள்தான் முன்னிற்கின்றனர். முன்னிலைப்படுத்தப்பட வேண்டிய மக்கள் காணப்படவில்லை. ஆகவே இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் போது மக்கள் முக்கியத்துவம் பெறுவர். அதன் மூலம் அனைத்து தரப்பு மக்களின் குறைகளும் முக்கியத்துவம் பெறும்.”

“தவிர இது தேர்தல் செலவினங்களையும் பெருமளவு குறைத்து, கருப்புப் பண புழக்கத்தையும் அகற்ற உதவும். இப்போது கருப்புப் பணமென்பது நமது பொருளாதாரத்திற்கு இணையானதொரு விஷயமாக இருக்கின்றது. அவற்றின் நடமாட்டத்தைக் குறைத்திட இச்சட்டம் பெருமளவில் உதவும்.”

“இச்சட்டத்தின் அடுத்த முக்கியமான அம்சம், "Negative Voting". வாக்காளர்கள் தங்களது ஆத்திரத்தை ஓட்டுப் போடாமல் புறக்கணிப்பதற்கு பதில், இவ்வழிமுறையைப் பயன்படுத்தி வேட்பாளரைப் புறக்கணிக்கலாம். இதன் மூலம் அரசியல் கட்சிகளும் இனிவரும் காலங்களில் மக்கள் தொடர்புடைய பிரச்சனைகளில் கவனமாகச் செயல்படுவர். மும்பைத் தாக்குதலுக்குப் பிறகு தீவிரவாததிற்கெதிராக குரல் கொடுக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, அதே சமயத்தில் தேர்தலில் வாக்களிக்கும் மக்களின் எண்ணிக்கை அதே அளவில்தான் உள்ளது. இதை மாற்றுவதே இச்சட்டத்தின் முக்கிய அம்சம். மொத்தமாக 20 முதல் 25 சதவிகித வாக்காளர்களே தேர்தலில் வேட்பாளரின் கதியை நிர்ணயிக்கிறார்கள். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் தனக்கு வாக்களிக்காத சதவிகிதத்தினவரின் கதியையும் நிர்ணயிப்பவராகிறார். இது தவறான முன்னுதாரணம். இது முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். அதற்கான முன் முயற்சியை குஜராத் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. ”

”இச்சட்டம் குறித்து வாக்களிக்காதவர்கள், தண்டனைகள் குறித்து ஏதும் பயப்படத் தேவையில்லை. இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த ஒரு கமிட்டி ஒன்று அமைக்கப்படும். தவிர, ஒரு ப்ரஜை ஐந்து வருடத்திற்கொரு முறை வரும் தேர்தலுக்காக, தனது ஜனநாயகக் கடமையாற்றும் பொருட்டு வாழ்நாளில் அரை மணிநேரத்தைச் செலவிட முடியாதா? முடியுமென்றே நம்புகிறேன். இது குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும்.”

”குஜராத் இதில் முன்னோடியாக இருக்கும். மற்ற மாநிலங்களும் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்வர வேண்டும். இன்னும் சொல்லப் போனால் பாராளுமன்றத் தேர்தலிலும் இது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.”


இவ்வாறு, சர்ச்சைக்குரியதாக வர்ணம் பூசப்பட்டுள்ள இந்த சட்டத்திற்கு மோதி விளக்கமளித்துள்ளார். இந்தியாவில் ஜனநாயகத்திற்கு அடிகோலிய காங்கிரஸ், இன்று ஜனநாயக வழியில் நம்பிக்கையற்று ஓட்டுக்குப் பணம் கொடுப்பவர்களை ஊக்கப்படுத்துகிறது. அதனால் இச்சட்டத்தை அக்கட்சி எதிர்ப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இச்சட்டத்திற்காக இட்லிவடை சார்பில் நாம் மோதிக்கு பூச்செண்டு அளிப்போம். இது ஒரு நல்ல முயற்சி, சீரழிந்து கொண்டிருக்கிற நமது தேசத்தை சீர்ப்படுத்துவதற்கான முயற்சி. நமக்கு இது சட்டமாக்கப்படவில்லையென்றாலும், ஐந்தாண்டுகளுக்கொருமுறை, அரை மணி செலவழிப்பதில் நமக்கொன்றும் நட்டமில்லை.

உலகத்தில் மகிழ்ச்சியான மக்கள் எங்கே வசிக் கிறார்கள்?


தூங்கி எழுந்து காலையில் வாசல் கதவைத் திறக்கிறீர்கள், வாசலில் சில கவர் கள். பிரித்தால் உள்ளே ஆயிரம் ரூபாய்த் தாள்கள். இரண்டு நாட்கள் கழித்து அதே போல் எழு கிறீர்கள். அதேபோல் கவர்கள். வேறு ஒருவர் போட்டிருக்கிறார். இந்த முறை ஒவ்வொரு கவரிலும் ஐநூறு ரூபாய் அதிகம். இன்னும் இது போன்ற கவர்கள் வரும் என்று ஊருக்குள் கிசுகிசுக்கிறார்கள். இப்போதைக்கு மகிழ்ச்சியான மக்கள் வசிப்பது திருச்செந்துரிலும் வந்தவாசியிலும்.
(அரசு பதில்கள், குமுதம்)


20 Comments:

Anonymous said...

ஒட்டு போட்ட உடன் ஓட்டுச்சாவடியில் மூன்று மாதத்துக்கான ரேஷன் சாமான்கள் வாங்கி செல்லலாம் என்று அறிவிக்கலாம்.இப்போது ரேஷன் கடைகளுக்கு தான் மக்கள் வருகிறார்கள்.

Anonymous said...

மக்களை ஓட்டு சாவடிக்கு வரவழைக்க வழிகள்.
1. இலவச பொருட்களை ஓட்டு போட்ட மக்களுக்கு வோட்டு சாவடியிலேயே வழங்கலாம்.
2.ரேஷன் அரிசி , சர்க்கரை மற்றும் இதர பொருட்களை ஓட்டு போட்ட மக்களுக்கு ஓட்டு சாவடியிலேயே வழங்கலாம்
3.வோட்டு போட்டவர்களுக்கு ஓட்டு போட்டதற்க்கான சர்டிபிகேட்டே தரலாம். அது இருந்தால் தான் இலவச பொருட்கள் மற்றும் ரேஷன் பொருட்கள். மற்றும் ஸ்கூல் அட்மிஷன் என்று சொல்லலாம்.
4.தேர்தல் சமயத்தில் (காலை 8 முதல் மாலை 6 மணி வரை) கேபிள் தொலைகாட்சிகளை நிறுத்திவைக்கலாம்.
5.வீட்டுக்கு வரும் மின்சாரத்தை அந்த சமயத்தில் நிறுத்தி வைக்கலாம்.( மக்களை வீட்டை விட்டு துரத்த)
6.வாகன போக்குவரத்தை நிறுத்தி வைக்கலாம். ( மக்கள் ஊர் சுற்ற விடாமல் தடுக்க )
7.அப்படியும் வராவிட்டால் செல் போன் டவரை திருத்தி வைக்கலாம்.( மக்கள் போனில்தான் அதிக நேரம் செலவழிகிறார்கள்.)

சைவகொத்துப்பரோட்டா said...

"உள்ளாட்சிக்கான தேர்தல்களில் அனைவரும் வாக்களிக்க வேண்டும். அவ்வாறு வாக்களிக்காதவர்கள், ஏன் வாக்களிக்கவில்லை என்பதற்கான காரணத்தை ஒரு மாத கெடுவிற்குள் விளக்க வேண்டும். காரணம் அரசாங்கத்தை திருப்திப்படுத்தாவிடில் அவர்கள் தண்டனையை சந்திக்க நேரிடும்."


இதெல்லாமே சரிதான், அதே மாதிரி ஜெயிச்சு வந்தவங்க அதோட அவங்க தொகுதி பக்கம் தலை கூட வச்சு படுக்காம இருப்பாங்களே, அப்ப அவங்களுக்கு என்னை தண்டனை.

ரெங்கசுப்ரமணி said...

Sabash, all the medias completely against this man. Really he is the best person for the PM of India. Hope god will make it.

வேதநாராயணன் said...

Though PC & ஜெயா are very rude with மீடியா & பிரஸ் ,
மீடியா இவர்களை positive ஆகவே portray பண்ணுகிறார்கள். அனால் மோடியை மட்டும் (he is also a bit rude with மீடியா) , ரொம்ப நெகடிவ் ஆகா portray பண்ணுகிறார்கள். என்ன காரணம் என்று தெரியவில்லை.

tiruchendar and வந்தவாசி மக்கள் : தன் தலையில் தானே மண் அள்ளி போட்டு கொண்ட யானை.

valaignan said...

I like Woody Allen's philosophy.If you can not eradicate corruption,actively take part in it.
To hell with our democrazy!
When is the next bye election due for Chennai?

Madhavan Srinivasagopalan said...

I stayed in GJ for 10 yrs (not now). I know what sort of person Modiji is.

He is really a good person & looking to do something good to the society. Very able administrator.

Forget what media says..

I really welcome this law.

வலைஞன் said...

Mr.Vedanarayanan.

எந்த நாட்டில் இருக்கிறீர்?

இப்போ நம்ப நாட்டில் இந்த ஊழல அரசியல் வியாதிகளை வைத்துதான் முக்கால் வாசி Doctors,Engineers,Lawyers,CAs,Govt Servants,Media owners அனைவரும் பிழைப்பு நடத்துகின்றனர் அவ்வளவு சீக்கிரம் விட்டுவிடுவார்களா என்ன?

நம் நாட்டில் முதலில் அழியபோவது, எல்லாவற்றையும் உம்மாச்சி பாத்துப்பார் என்று நேர்மையாக வாழும் சாமானியர்கள் தான்!

கானகம் said...

ஊழலில் சேர்த்த பனத்தை ஸ்விஸ் வங்கியிலிருந்து வெளியே எடுக்க விடாமல் காப்பாற்றிக்கொண்டிருக்கும் காங்கிரஸா இதுபோன்ற ஜனநாயக திடங்களை ஆதரிக்கப் போகிறது.

வடநாட்டு மீடியாக்களுக்கு தீனிபோடும் நரேந்திரமோடியக் கண்டாலே ஆகாது.. ஆனால் துரதிருஷ்டவசமாய் அவர்தான் மிகச் சிறப்பாய் செயல்படுகிறார் வடநாட்டைப் பொருத்தவரை..

பாராட்டவேண்டிய முன்முயற்சி இது..

வெண்ணெய்க சினிமா தியேட்டர்ல போய் 3 மணிநேரம் நிப்பானுங்க டிக்கெட் வாங்க.. ஒரு அரைமணிநேரம் ஓட்டுப்போட வரமாட்டானுங்க...

இதுமாதிரி செஞ்சாத்தான் ஓட்டுப்போடுவானுங்க..

ஓட்டுப்போடாமல் அரசியல்வாதியைக் குற்றம்சொல்ல நமக்கு என்ன அருகதை இருக்கிறது என யாருமே நினைப்பதில்லை.

யதிராஜ சம்பத் குமார் said...

இதெல்லாமே சரிதான், அதே மாதிரி ஜெயிச்சு வந்தவங்க அதோட அவங்க தொகுதி பக்கம் தலை கூட வச்சு படுக்காம இருப்பாங்களே, அப்ப அவங்களுக்கு என்னை தண்டனை.//

இதெல்லாம் நம்ம ஊர் நடைமுறை. குஜராத்தில் தற்போதைய அரசாங்கப் பிரதிநிதிகள் எல்லாம் கடமையுணர்ந்தவர்களாக இருப்பதால்தான் எல்லாவற்றிலும் முதல் மாநிலமாக இருக்க முடிகிறது. இதனால்தான் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் குஜராத்தில் பாயை பிறாண்டிக் கொண்டிருக்கிறது.

Anonymous said...

Anita radhakrishnan could have continued as a minister even after moving to DMK. But he said he didn't want anything given by ADMK - holy shit. And resigned the minister post leading to the bye election - a wastage of government money.
Coming to people getting money, when freedom is misused, it is grabbed away. People are misusing their electoral freedom and it'll not be long when miscreants/separatists with money supply from abroad get elected to key posts and sell India to it's enemies.

Santhappanசாந்தப்பன் said...

என்னைப் பொருத்த வரையில் ஒட்டளிக்காமல் இருப்பவர்களில் இளைஞர்கள்தான் அதிகம்.

எனக்கு தெரிந்த வரையில் என்னுடைய சக நண்பர்கள் யாருமே ஒட்டளிக்கவில்லை. அதற்கு சிலர் சொன்ன காரணம், ஒரு நாள் மட்டுமே விடுமுறை. ஒட்டு போடுவதற்காக எல்லாம், வெளியூரிலுருந்து சென்று வரமுடியாது. இதற்கு இளம் பெண்களும் விதிவிலக்கல்ல.

இளம் பெண்கள் ஒட்டளிப்பதை பெரிய கவுரவ குறைச்சலாகவே கருதுகிறார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலன்று, சன் மியுசிக்கில் பேசிய பெரும்பாலான பெண்கள் தாங்கள் ஒட்டளிக்கவில்லை என்று பெருமையாக(?) சொல்லிக் கொண்டார்கள்.

Santhappanசாந்தப்பன் said...

நாட்டில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான சட்டங்கள் இருக்கின்றன. மக்களுக்கு சட்டத்தின் ஓட்டைகள் அத்துபடி.விளக்கம் கொடுப்பது, தண்டனைகளிலிருந்து தப்பிப்பது எல்லாம் பொது ஜனத்திற்க்கு கை வந்த கலை. பள்ளிகளிருந்தே அதற்கான பயிற்சிகள் தொடங்கி விடுகின்றன.

இருந்தாலும் மோடியின் முய‌ற்சி ந‌ல்ல முன்னுதார‌ண‌ம். ம‌ன‌ம் திற‌ந்து பார‌ட்டுவோம். பூச்செண்டு கொடுத்து கெளரவித்த இட்லிவடைக்கும் பாராட்டுக்க‌ள்.

Anonymous said...

Lalu has extended the support for this act. பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களிலும் ஓட்டுப்போடுவதை கட்டாயமாக்க வேண்டும் என்று ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் கூறியுள்ளார்.

Baski said...

Good move. The law can showcased as following.

i. Either vote by spending due time/efforts.

ii. Or spend Rs.10000/- (or above) for failing to do the same (Shame?).

Note:
There is a good chunk of NRI's who cannot vote. They should be allowed to register their vote via respective Indian consulates. (may be with some additional fee)

Also allow remote voters within country to vote through respective state capitals. (may be with some additional fee).

A person working in far place cannot afford to travel for such frequent elections.

With this, we can see 100% turnout. (I am optimistic).

cho visiri said...

Shree Jayakumar said...//வடநாட்டு மீடியாக்களுக்கு தீனிபோடும் நரேந்திரமோடியக் கண்டாலே ஆகாது.. ஆனால் துரதிருஷ்டவசமாய் அவர்தான் மிகச் சிறப்பாய் செயல்படுகிறார் வடநாட்டைப் பொருத்தவரை..//
A small correction requires to be made, in my view.


Most of the people believe that Media people (right from the management down to the last rung) get fed by those politicians who are opposed to Modijee.

வழிப்போக்கன் said...

தமிழ்நாட்டில் எந்த சட்டமும் செல்லுபடியாகாது.
கேவலம், சாலைப் போக்குவரத்து விதிகளைக் கூட அமல்படுத்த முடியாத அரசு நம் அரசு.
கிருஷ்ணமூர்த்தி

யதிராஜ சம்பத் குமார் said...

Baski::


The whole idea itself is impractical as arranging ballot sheets and voting machine or whatever method in every country's consulate is impossible and will pave the way for confusion. Rather the govt may try online voting for NRI's and people who cannot afford to travel to register their votes.

Like, An NRI elector can login into the election comm's web using their voter's ID Reg. No and cast their vote to the candidate of his /her wish.

வலைபூக்களின் அரசன் said...

ஒவ்வொரு ஊட்டுச்சாவடியிலும் மானாட மயிலாட நடத்தலாம்.

மஞ்சள் ஜட்டி said...

யாரோ சொன்னாங்க....என்னன்னு? (ஆங்...அவ்வ)


"கூடிய விரைவில் 'கேப்டன் டிவி' மற்றும் 'கேப்டன் முரசு' பத்திரிகை வெளி வரப்போகின்றன. கேப்டன் முரசு பத்திரிகையில் நான் 'பெரிய கொண்டை ஊசி' என்ற பெயரில் எழுதப்போகிறேன்."

(நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த்