பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, December 14, 2009

யார் செய்தது சரி ? யார் செய்தது தப்பு ? யார் செக்யூலர் ?

குத்து விளக்கு ஏற்ற மத்திய மந்திரி அஹமது மறுப்பு ; ஜேசுதாஸ் வெளிநடப்பு - இது தான் செய்தி...

இந்தியா-ஜப்பான் வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு சார்பில் கட்டமைப்புகளின் நிலை குறித்த தேசிய கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடந்தது.

இந்த விழாவில் மத்திய ரெயில்வே இணை மந்திரியும், கேரளா முஸ்லிம் லீக் தலைவருமான இ.அகமது கலந்து கொண்டார்.

பாரம்பரிய வழக்கப்படி குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைக்குமாறு அவரிடம் கேட்கப்பட்டது. ஆனால் மத்திய மந்திரி அகமது குத்துவிளக்கு ஏற்ற மறுத்து விட்டார்.

இது தொடர்பாக விழா அமைப்பாளர் ஒருவர் கூறும் போது முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் குத்து விளக்கு ஏற்ற மாட்டார்கள். அவர் இஸ்லாமியர் என்பதால் குத்துவிளக்கு ஏற்ற மறுத்து விட்டார் என்றார்.

இந்த விழாவில் பாடகர் கே.ஜே.ஜேசுதாசும் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக கலந்து கொண்டார். மத்திய மந்திரியின் செயலை கண்டித்து அவர் வெளிநடப்பு செய்தார்.

யார் செக்யூலர் ? முஸ்லிம் விழா சென்று கஞ்சி குடிக்கும் ஜெயலலிதா கருணாநிதியா ? அல்லது வெளிநடப்பு செய்த ஜேசுதாஸா ? அல்லது அரசு விழாவில் குத்துவிளக்கு ஏற்ற மறுத்த அமைச்சரா ?

53 Comments:

நானும் செக்குலருங்கோ! said...

சந்தேகமே இல்லாமல் ஜேசுதாஸ் தான் செக்குலர். அகமது மாதிரி மாங்காயையெல்லாம் மந்திரியாக்கியவர்களை சொல்லனும்!

ரிஷபன்Meena said...

இவரைத் தான் குருவாயூர் கோவிலில் உள்ளே விட மறுத்தனர். கோவில் நடைமுறை அனுமதிக்க வில்லை போலும் இருந்தாலும் இவரைப் போன்றவர்களுக்கு விதிவிலக்கு தரமுடியுமா என்பதை நிர்வாகம் பார்க்க வேனும்.

தனிமனித ஒழுக்கம் மற்றும் நடத்தையில் தனிப்பட்டு தெரிபவர் ஜேசுதாஸ்.

பணத்திற்கு ஓட்டு விற்கும் சமுதாயத்தில் இவரைப் போன்ற ஒரு சிலருக்கு கொஞ்சம் நெஞ்சுறுதியும் முதுகெலும்பும் உள்ளது.

sundaikai said...

இந்தியா மத சார்பற்ற நாடு என்றால் அரசு விழாவில் குத்துவிளக்கு ஏற்றுவது ஏன்? இந்துகளின் நாடாய் இருப்பின் இந்து பாரம்பரியத்தை பின் பற்ற வேண்டும். மத சார்பற்ற கூட்டனிக்கு (காசை வாங்கி கொண்டு - வாங்கி கொண்டவர்களை மட்டும் சாடுகிறேன் ) வோட்டு போட்டு அவர்கள் ஆட்சி நடத்திக்கொண்டு இருக்கும் பொழுது இது என்ன பிதற்றல்.

இன்னும் இந்துகளின் சதவிகிதம் மற்ற மதத்தின் சதவிகிதத்தை விட கூட இருக்குமா என்பதே சந்தேகம், இதில் குத்து வில்லுக்கு மட்டும் தான் குறையா? இட்லி வடையாரே இது தேவை தானா?

வலைஞன் said...

மாவீரன் யேசுதாஸ் வாழ்க!
ஒரு இந்து கூட இவ்வளவு வீரமாக நடந்திருக்க மாட்டார்

வந்தே மாதரம் பாட மாட்டோம்;குத்துவிளக்கு ஏற்ற மாட்டோம்.அவர்கள் மதகட்டுப்பட்டுடன் நடந்து கொள்கின்றனர் பாராட்டுக்கள்

குத்துவிளக்கு "அவாள்" சமாசாரம் என இன்று முரசொலி முழங்கும்

ஒருவர் சின்ன வயசில் குத்தாட்டம் ஆடியவர்; மற்றவர் முதுமையில் குத்தாட்டத்தை ரசிப்பவர்
இவர்களுக்கும் குத்துவிளக்குக்கும்
என்னய்யா சம்பந்தம்?

ஒருவர் மிகவும் மதம் பிடித்தவர் மற்றவர் (தம்)மதம் பிடிக்காதவர் இவர்கள் கஞ்சி குடித்தால் என்ன,கஷாயம் குடித்தால் என்ன?

2012 இல் உலகம் அழியுமோ என்னவோ,2011 இல் தமிழகம் அழியும் போலிருக்கிறது
கவுண்டமணி ஒரு படத்தில் சொல்வதுபோல்,'கழகம்' என்று பெயரில் முடியும் எந்தக்கட்சிக்கும் நான் ஒட்டு போடமாட்டேன் என்று எப்பொழுது
தமிழன் சொல்வானோ அன்றுதான் விடிமோட்சம்!

கௌதமன் said...

அஹமது, ஜேசு, அரசினர், அரசியல்வாதிகள் - யாரும் செக்யுலரிஸ்ட் கிடையாது. எல்லோரும் செய்வது பொலிடிகல் ஸ்டண்ட். அவ்வளவே!

விவேகானந்தன் said...

இதில் ஹிந்து. முஸ்லிம், கிறிஸ்டியன் என்று ஏன் பிரித்து பார்க்கவேண்டும். ஒரு இந்தியன் தனது பாரம்பரியமான பழக்கத்தை ஏன் மாற்றுகிறார் என்று கேள்வி கேட்கலாம். அதுவும் ஒரு விருந்தாளி(ஜப்பானை சேர்ந்தவர்) முன் இவ்வாறு நடந்து கொண்டதற்காக அந்த மந்திரியை, இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்க சொல்லலாம். யோ... இந்த ஆள எல்லாம் தேர்ந்து எடுத்த நம்மள தான் அடிச்சுக்கணும்... உனக்கு உன் மதம் முக்கியம்னா அப்பறம் எதுக்கு இந்த பதவிக்கு வந்த... அது சம்பந்தமான வேலைய போய் பார்க்க வேண்டியது தான...

COMMON MAN said...

மெழுகுவத்தி வெச்சு ஷு போட்டுக்கொண்டு இவங்க நடத்துற குத்து விளக்கு கூத்துக்கு (வார்த்தை சரிதானே??) அத ஏத்தாமலே போனது நல்லதுதான்.. ஆமா மத்திய மந்திரி சிகரெட்டாவது பத்தவெப்பாராமா??? இவனுங்களுக்கு ஒட்டு மட்டும் எல்லா ஜாதிக்காரனும் போடணும்..குல்லா போட்டுக்கொண்டு கஞ்சி குடிப்பவர்கள் கண்களுக்கு பார்பான்கள் மட்டும்தான் இளிச்ச வாயன்கள்... பகுத்தறிவாம் ... வெங்காயம்...

Anonymous said...

ஏசுதாஸைப் பற்றித் தெரிந்தது அவ்வளவுதான் போலிருக்கிறது. பிறப்பால் கிறித்துவராக இருந்தாலும், அவர் ஒரு இந்துவாக வாழ்பவர். இந்துமதக் கொள்கைகளைப் பின்பற்றுபவர். வேஷம் போடும் அரசியல் வியாதிகள் மத்தியில் அவர் செய்தது நியாயம் தான். அவர்களுக்கு கொஞ்சமாவது சூடு, சொரணை இருந்தால் தாங்கள் செய்வது உறைக்கட்டும்.

விளக்கேற்றுவதெல்லாம் ‘அவாள்’ பழக்கம் என்று சொன்னால் அது முட்டாள்தனமானது. சிலம்பிலேயே கூட விளக்கேற்றுவது குறித்து தகவல் இருக்கிறது. பண்டை இலக்கியங்களிலும் அதுபற்றிய தகவல்களைக் காணலாம்.

மங்கல விளக்கேற்றுவது தமிழரின் பண்பாடு.

// இந்தியா மத சார்பற்ற நாடு என்றால் அரசு விழாவில் குத்துவிளக்கு ஏற்றுவது ஏன்?//

அப்புறம் ஏன் அப்பத்தைப் பகிருந்துண்ண வேண்டும்? கஞ்சி காய்ச்சிக் கொடுக்க வேண்டும்?

உண்மையான மதச்சார்பு இல்லாதவர்கள் என்றால் நோன்புக் கஞ்சி குடிக்கும் அதே ”கொள்கை வீரர்கள்” அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றும் போதும் வந்து குடிக்க வேண்டும். ஏன் செய்வதில்லை. இந்த அரசியல் வியாதிகளில் யார் மதச்சார்பு இல்லாமல் இருக்கிறார்கள்?

எல்லாம் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகளே!

ஹேட்ஸ் ஆஃப் ஜேசுதாஸ். இன்னும் ஆயிரம் ஜேசுதாஸ்கள் வந்தாலும் இந்த அரசியல் ”மாக்கள்” திருந்த மாட்டார்கள் என்பதே உண்மை.

இட்லி ப்ரியன்

Anonymous said...

Sreedharan from Sharjah said,

Dear Idlyvadai,

Thanks for the news. Let all the maramandais who voted against BJP atleast now understand who is secular ?

In this strange land of India, BJP is touted as communal whereas Muslim League is secular !!!

Anonymous said...

13.12.09 was PARELIMENT ATTAK DAY. INDIA'S ONE OF THE BLACK DAY. PLS REMEMBER IT.

THE JAVAN'S DETHE'S WAS NO VALUE.

INDIA IS NOT SECHULAR NATION IT IS A HINDU AGAINST NATION.

யதிராஜ சம்பத் குமார் said...

ஆத்திரத்தில் வார்த்தைகளைக் கொட்டுவதிலோ அல்லது யார் செக்யூலர் என்று பாகுபாடு செய்வதிலோ அர்த்தம் இல்லை. ஹிந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு தேசத்தில், தனது மத சம்பிரதாயங்களுக்கு எதிராக நடக்க முடியாது என்ற நிலைபாட்டை எடுத்திருக்கிறார்; அவரளவில் அவர் செய்தது சரி.


ஹிந்துக்களில் நம்மில் எத்தனை பேர் நமது ஹிந்து மத தர்மங்களைக் கடைபிடிக்கிறோம்?? பலர் தம்மை செக்யூலர் என்று பறையறிவித்துக் கொள்வதில்தான் பெருமிதம் அடைகிறார்கள். இஸ்லாமியர்களிலோ அல்லது கிறித்தவர்களிடையேயோ எத்தனை நாத்திகர்களும் செக்யூலர்களும் இருக்கிறார்கள்? எங்கே தாம் ஒரு ஹிந்து என்று சொன்னால் மதவாதத் தீட்டு ஒட்டிக் கொள்ளுமோ என்று பயந்து சாகிறோம். ஆகவே இது கற்றுக் கொள்ள வேண்டிய தருணம். நீங்கள் முதலில் உங்களது சம்பிரதாயங்களைக் கடைபிடியுங்கள். பிறகு அவற்றை அவமதிப்போரை சாடுங்கள். அவர்கள் செய்வது அதைத்தான்.

யதிராஜ சம்பத் குமார் said...

நமது நடைமுறைகளை நாமே அலட்சியப்படுத்தவதால்தான் அடுத்தவர்களுக்கும் தைரியம் வருகிறது.


வந்தே மாதரம் விஷயத்திலும் நடந்தது இதுவே!! நான் இருந்த பொழுது அந்த தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என்று கூறும் சிதம்பரம் அவ்விதமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை மறுக்கவில்லை. அதற்குப் பிறகு கூட தமது கண்டனத்தைப் பதிவு செய்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை. காரணம்?? நமக்கு நாமே குழி பறித்துக் கொள்வதில் நமக்கு நிகரில்லை.

ஜேசுதாஸ் மதங்களுக்கு அப்பாற்பட்ட இந்தியர். அதனால் அந்நிகழ்வு அவரைக் காயப்படுத்தியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

உண்மையான இஸ்லாமியன் said...

முதலில் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் தங்களது மதவெறியை பறைசாற்றும் எண்ணம் கொண்ட ஒரு ஆளை “மந்திரியை அழைக்கப்போகிறோம்” என்ற வெட்டிப்பெருமையில் இதுபோன்ற நாகரீகமான கூட்டங்களுக்கு அழைத்த அந்த நிகழ்ச்சி அமைப்பாளர்கள் முதல் குற்றவாளிகள்.

எல்லாமதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் சேவை (?) செய்யச் சென்ற அமைச்சர் தனது மதத்தைக் காரனம்காட்டி குத்துவிளக்கு ஏற்றமாட்டேன் என்பது சட்ட ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் விரோதம்.. இவர் இரண்டாவது குற்றவாளி..

கோபித்துக்கொண்டு மேடையிலிருந்து இறங்கியதால் யேசுதாஸ் இஸ்லாமியர்களின் மத உணர்வுகளை புண்படுத்திவிட்டார் என கூக்குரல் எழும்..கூட்டத்தோடு கூட்டமாக செக்யூலர் பஜனை பாடாமல் இப்படி தமது கலாச்சார நிகழ்வு அவமதிக்கப்பட்டதற்கு பொங்கி எழுந்த யேசுதாஸ் மூன்றாம் குற்றவாளி..

சோ எழுதிய நாடகத்தின் பெயர்தான் ஞாபகத்திற்கு வருகிறது..

யாருக்கும் வெட்கமில்லை...

சீனு said...

'ஜே'வுக்கு ஒரு 'ஜெ'

Anonymous said...

The term secular means - separate from religion. An instrument of the government has to be secular. Lighting a lamp is barely hindu. Even Christians light candles. So the act of lighting to celebrate is outside religion and is secular. As a instrument of government the minister is bound to do it. As an individual, no one needs to be secular. It's the government and it's acts that have to be secular.
Our politicians don't even understand this. Drinking poridge in the mosque is just a stunt. I've never seen a non hindu call himself secular(in it's actual sense) and as atheist. I find the politician guilty of not honoring a age old tradition that has barely any connection with religion. In those days, the kuthuvilaku was used for even lighting purposes at houses. It was how Indian lamps are made earlier.

Anonymous said...

I also feel hurt by the actions of these ministers in hurting sentiments of people while
declining to follow established
customs and practices widely prevalant in our country. Let all
these Muslims and Chrisitians ponder who their ancestors were
generations and centuries ago. They belonged to this country as this minister now is, but part of the religion that prevailed in this country. It hurts me as it has many others that this man should exhibit so insolent a conduct in a public function.

Yet I agree with Yatiraj Sampath
Kumar that we are ourselves responsible for this insult. It is we who have discarded our
codes and practices. Do you find
a Muslim missing a single worship
at the stipulated time? But we Hindus ask the Vadhyars to come and do Tarpanam early in the morning even before sunrise;(while
it has to be done at noon time, i.e. after performing Maadhyahnikam. How many of the Brahmins do Sandhyavandhanams?
We ignore our functions totally, or
if not, do it in an urgent, peremptory and hurried fashion at
the time most convenient to us so as not miss going to office or do
other non religious work. If we
stuck to our ways and practices,
the others will not have the guts
to insult us.

Anonymous said...

India which has been basically a hindu nation had settlers from other religions. It's a welcome decision for Indian govt to be secular. But the implication of being secular is complicated by the fact that hinduism and over culture are intricately threaded. It's hard to distinguish what is hinduism and what's our culture/tradition. The govt has to adopt the western culture en-masse to be secular or we have to make modification to it's traditional practices, both have the same outcome. Should the govt abandon our culture for being secular? - Yes. Our government is a "big Thyagi" in being secular. I wish India remained a Hindu nation as it's culture/traditions and religion are inseparable.

Anonymous said...

Secularism gets complicated because of Islam. Islam has so many "do nots" than "dos" to be accommodated in secularism without complicating it. If a religion says - anything other than what we say is "haram", You only have one choice - you've to be either the follower of that religion or remain a "harami", there is no choice of being secular.

கௌதமன் said...

போற போக்கப் பாத்தா - எதிர்காலத்தில், மதச் சார்பின்மை மாமனிதர்கள் கூட்டம் கூடும் நாட்களில், குத்துவிளக்கு ஏற்றுவதற்கு பதில் 'மானாட மயிலாட' கும்பல் சேர்ந்துகொண்டு, குத்துப் பாட்டுக்கு டான்ஸ் ஆடுவது என்று கூட கொண்டுவருவார்கள் என்று நினைக்கின்றேன்.

Anonymous said...

யாருக்கும் வெட்கமில்லை...

repeat

Anonymous said...

@@@@@
இட்லி வடை நண்பர்களே வணக்கம். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன்.
@@@@@

சில மாதங்களுக்கு முன் நான் பார்த்த உண்மைச் சம்பவம்.(Nice Incident)

ஒருநாள் எனது நண்பர்(வயதில் மூத்தவர் - இஸ்லாமியர்) + மற்றும் அவரது நண்பர்(வயதில் மூத்தவர் - கிறிஸ்துவர்) = இருவரும் இன்னொரு நண்பரை(மற்றவருக்கு உதவும் நண்பர் - ஹிந்து) பார்க்க போகும்போது வழியில் நான் சந்திக்க நேர்ந்தது.

இந்த மூவரையும்(இஸ்லாமியர்,கிறிஸ்துவர்,ஹிந்து) எப்படி இணைத்து இயற்கை ?

உலகில் உள்ள அனைவரும் அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று வாழ "வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்" என்ற வாழ்த்து.

.
"அன்பே சிவம்" என்ற படம் எனக்கு பிடிக்கும்.

Anonymous said...

@@@@@ குத்து விளக்கு @@@@@

குத்தி விளக்கிய அறிவு

ஆன்மாவை அறிந்து கொண்டால் அதன் உள்ளும், புறமும் இறைவனே செயல்பட்டுக் கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்து கொள்ளலாம். அதற்கான பயிற்சிதான் குண்டலினியோகம். நமக்குள்ளாகவே இருப்பது உயிர்ச்சக்தி, ஆன்மா என்ற உயிர்ச் சக்தியை அழுத்தம் கொடுத்து உணர வைப்பதைத் தான் குத்தி விளக்குவது என்று சித்தர்கள் சொன்னார்கள்.

அது இப்பொழுது குத்து விளக்கு என்றாகி விட்டது. குத்தி விளக்கு; அப்படி விளக்குகிறபோது பஞ்ச இந்திரியங்களும் பஞ்ச பூதங்களும் நன்றாக விளங்கி விடும் என்பதைக் காட்டுவதாகத் தான் குத்து விளக்கில் ஐந்து முகங்கள் வைத்திருக்கிறார்கள். குத்து என்றால் அழுத்து என்பது பொருள். அப்படி அழுத்தி, உனக்குள்ளாக இந்த உயிர்ச்சக்தி இருக்கிறது. அந்த உயிருக்குள்ளாகத் தெய்வமே அறிவாக, சிவமாக இருக்கிறது என்று விளக்கிக் காட்டுவதுதான் அகத்தவப் பயிற்சி.

- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

@@@@@
வாழ்க வையகம் வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
@@@@@

.

Ansar said...

குத்து விளக்கு ஏற்றுவது, பூமி பூஜை பன்னுவது, ஆயுத பூஜை செய்வது.. இவைகளெல்லாம் இந்துக்களின் சம்பிரதாயாமா? இந்தியாவின் சம்பிரதாயமா?

இந்தியா செக்யூலர் நாடு என்றால் சம்பிரதாயம் எதற்கு?

சேட்டைக்காரன் said...

எறியும் தீயில் மதம் இல்லை. இறை மட்டுமே

எறியும் கொள்ளியில் ஊற்றும் எண்ணையில் அரசியல் உண்டு. மனித நேயம் மிஸ்ஸிங்

விளக்கு தாங்கும் உருவத்தில் (குத்து விளக்கோ / மெழுகு வர்த்தியோ)மதங்கள் உண்டு. பாதுகாப்பும் பக்குவமும் மிஸ்ஸிங்

கொழுத்தும் பழக்கத்தில் தேசம் உண்டு. சம தர்மம் மிஸ்ஸிங்

மஞ்சள் கமெண்டாய் திரி கொழுத்திப் போட்டதில் (இட்லி வடைக்கு )ஜேர்னலிஸம் உண்டு. சமூக அமைதி மிஸ்ஸிங்

மாங்கு மாங்கென்று இதற்கெல்லாம் பின்னூட்டம் இடுவதில் சராசரி மனித கீயூராசிட்டி உண்டு. வேலை பார்க்கும் கடமை மிஸ்ஸிங்

Rangarajan S said...

http://idhueppadiirukku.blogspot.com/2009/04/blog-post.html

அரசியல்வாதியின் பகுத்தறிவு
(இது கலைஞரை பற்றி இல்லை.. அட நெசமாத்தான் )

இவர்களுக்கு
நரகாசூரன் என்ற அரக்கனை
கொன்றால் மூடநம்பிக்கை

இறந்தவர் மூன்று நாட்களுக்கு பின்
உயிர்தெழுந்தால் பகுத்தறிவு

அம்மன் கோவிலில் கூழ்
ஊற்றினால் பழிப்பார்

நோம்பு கஞ்சு வைத்தால்
முதல் ஆளாய் போய் நிற்பார்

தீ மிதிப்பதையும் அலகு
குத்துவதையும் நகைப்பார்

உயிர்த்து எழ வைக்கும் கூட்டம்
பற்றி வாய் திறக்க மாட்டார்

தீபாவளி, விநாயகர் சதுர்த்தியை
மற்றொரு விடுமுறையாய் பார்ப்பவர்

ரம்ஜான் கிறிஸ்துமஸ் வாழ்த்து
செய்தி சொல்ல மறப்பதில்லை

Anonymous said...

அகமது படேல் இஸ்லாமியர்களுக்கு மட்டுமான அமைச்சரா அல்லது இந்திய நாட்டின் அமைச்சரா?

குத்துவிளக்கேற்றுவது சம்பிரதாயத்திற்கு இழுக்கு என்றால் மெழுகுவர்த்தி ஏற்றி அணைக்கும் பிறந்த நாள் பார்ட்டியில் ஏன் வெட்கமில்லாமல் கலந்து கொண்டார்?

அப்போது எங்கே போயிற்று சம்பிரதாயம்?

பொதுவாழ்வில் அதுவும் பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது மதத்தைத் தூர வைத்து விட்டு மனிதனாக நடந்து கொள்ள வேண்டும். தனிவாழ்வில் அவர் சமுதாயக் கொள்கைகளை தாரளமாகக் கடைப்பிடிக்கலாம்.

விளக்கேற்றுவது என்பது ஒளியேற்றுவது. அது எங்ஙனம் தவறானது என்பது தெரியவில்லை.

ஆண்டவனே ஒளியாகத் தான் இருக்கிறான் என்பது எல்லா மதத்தினருக்கும் புரியாமல் போனதுதான் வேடிக்கை.

பிதாவே இவர்களை மன்னியும்!

- சுபாஷ் சுப்ரமணியன்
கொத்தவால் சாவடி

Paleo God said...

முதலில் மத சார்பற்ற என்பது எல்லோருக்குமா?? ஹிந்துக்களுக்கு மட்டுமா??

எல்லோருக்கும் என்றால் இன்னும் ஏன் மதவாரியாக ஜால்ராக்கள்... அரசுக்கு மட்டும் என்றால்... மதம் பிடித்தவர்களை ஏன் மந்திரியாக்குகிறீர்கள்..?? மதம் சார்ந்த அனைத்து அரசு உதவிகளையும் நிப்பாட்டிவிட்டு அப்பால பேசலாம் செக்யூலரிசம்..


// Ansar said...
குத்து விளக்கு ஏற்றுவது, பூமி பூஜை பன்னுவது, ஆயுத பூஜை செய்வது.. இவைகளெல்லாம் இந்துக்களின் சம்பிரதாயாமா? இந்தியாவின் சம்பிரதாயமா?


இந்தியா செக்யூலர் நாடு என்றால் சம்பிரதாயம் எதற்கு?//

அதேதான் என் கேள்வி .. ஏற்ற மாட்டேன் என்று போனது செக்யூலரா?? சம்பிரதாயாமா?..

சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம் said...

எனக்கு விளக்கு ஏற்றுவதில் விருப்பமில்லை என அமைச்சர் தான் சார்ந்த மதம் காரணமாக மறுத்தது தவறில்லை ஆனால் அதைக் காரணமாக சொல்லி விழாவிலிருந்து ஜேசுதாஸ் வெளி நடப்பு செய்தது அநாகரீகம்

Anonymous said...

இட்லிவடை வலை பதிவாளர் கவனத்திற்கு

கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் ஆன்லைன் மூலம் வேலை வழங்குவதாக பல கோடி மோசடி செய்து உள்ளது தயவு செய்து இது குறித்து தங்கள் வலைத்தளம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும்நன்றி

ஆதாரம் europaygroups.blogspot.com

Anonymous said...

Look at the comment http://thatstamil.oneindia.in/comment/2009/12/93721.html

SRI said...

Mr. Ansar,

If so, why the goverment has to give subsidiary for Haj?

Anonymous said...

whatits the wrong in the minister's acation? He s honestly following his religion.will any pappan go to church and light a candle? If he denies and defends himself b cas he is following his tradation will you accept? if you accept ,there is nothing wrong in minister refusal to light the kuthuvellaku.
Iv .i thing you taking small issues and making it an big news.

Anandkumar said...

Ansar said...
குத்து விளக்கு ஏற்றுவது, பூமி பூஜை பன்னுவது, ஆயுத பூஜை செய்வது.. இவைகளெல்லாம் இந்துக்களின் சம்பிரதாயாமா? இந்தியாவின் சம்பிரதாயமா?

இந்தியா செக்யூலர் நாடு என்றால் சம்பிரதாயம் எதற்கு?
*****

Ansar, All Muslims and Christians want India and Hindus to be secular, but no Muslim / Christian is ready to be secular, dont you think its too idiotic.

Anonymous said...

One should respect the culture and beliefs of the land you live in. Atleast don't insult it like this.

We need Indian Muslims and not Muslim Indians.

Unknown said...

IV

Enna kodumai sir ithu, India is still considered to be Hindu Nation this secular and all other faces and colours are done by our Politicians if anybody says Hindu he is branded ... if a muslim has a right to preach his religion and if a christian is allowed to follow his religion for allowing all these things in our nation we are branded...enna solla kalakkodumai atleast many of our people does not have the guts which Jesudas had.. as far as I know though he is a christian by religion he follows hinduism ithula avarayum kelvikuriyaakki namathu anbargal padutthum paadu
for my muslim friends the way you ask for your right itself says we are secular go and talk about building a temple in Saudi and pakistan then you people talk... I think what Isreal is doing right they have kept them at bay after thoroughly understanding them..

Kamesh

Anonymous said...

Secularism Means

A MUSLIM MUST NOT BE ASKED / FORCED TO PERFORM OTHER RELIGION'S CUSTOMS.

A HINDU MUST NOT BE ASKED / FORCED TO PERFORM OTHER RELIGION'S CUSTOMS.

A CHRISTIAN MUST NOT BE ASKED / FORCED TO PERFORM OTHER RELIGION'S CUSTOMS.

LET US ALL PERFORM OUR RELIGIONS DUTY AND NEVER WORRY ABOUT OTHERS NOT FOLLOWING OUR RELIGIONS CUSTOMS AND TRADITIONS.

Let us all forget the DIFFERENCES and be united as INDIANS.

Let us reserve the religion in our houses and mosques/temples and churches.

In common places we can be neutral and never discuss about religion.

religion is ones belief.

Anonymous said...

For this annonymous poster who posted this comment

"Anonymous said...

whatits the wrong in the minister's acation? He s honestly following his religion.will any pappan go to church and light a candle? If he denies and defends himself b cas he is following his tradation will you accept? if you accept ,there is nothing wrong in minister refusal to light the kuthuvellaku.
Iv .i thing you taking small issues and making it an big news.
"

Have been to velankanni and other few churches, lighted candles, been to durgha couple of times, have offered prayers. So... my advise to you is "Nothing is better than nonsense". btw.. who ever has gone to sabarimala via periya pathai has visited vavar swami durgha.

Baski said...

தாமஸ் ஆல்வா எடிசன் பல்பு கண்டு பிடிக்கிறதுக்கு முன்னாடி எல்லோரும் (முகமது நபி உட்பட) விளக்கு எற்றிஎருக்க தான் வேண்டும்.

ஒரு சிலருக்கு அறிவு கொஞ்சம் கம்மி. யோசிக்க தெரியாது. அஹமது அந்த லிஸ்டில் இருபதில் ஆச்சரியம் என்ன.

மஞ்சள் ஜட்டி said...

ஹைதராபாத்: மனித அரக்கனான ராஜபக்ச இரண்டு முறை திருப்பதி வந்தார். முதல் முறை ஆந்திர முதல்வர் பலியானார். இரண்டாவது முறை வந்து திருப்பதி ஏழு மலையானை வணங்கி விட்டு போனார். இன்று பற்றி எரிகிறது ஆந்திர மாநிலம் முழுதும். இன்னும் என்னென்ன நடக்குமோ என்று பெயர் குறிப்பிட விரும்பாத வைணவ துறவி ஒருவர் கூறியுள்ளார்.

இதுக்கென்ன சொல்லறீங்க இ.வ?

மர தமிழன் said...

சரி விடுங்க வேற ஏதாவது பேசலாம்.... யதி எப்போதும் சொல்றமாதிரி ... அவங்கவங்க வழி அவங்கவங்களுக்கு...

Muthu said...

- சுபாஷ் சுப்ரமணியன்
கொத்தவால் சாவடி....
//பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது மதத்தைத் தூர வைத்து விட்டு மனிதனாக நடந்து கொள்ள வேண்டும்.//

மதத்தைத் தூர வைத்து விட்டு.....!!!! -- இதைத்தான் இஸ்லாமியனும் எதிர் பார்க்கிறான்!!

vedanarayanan said...

எல்லோரும் ரொம்ப குழப்பி கொள்ள வேண்டாம். இதற்கு பெயர் professional compulsions.

௧. ஜேசுதாஸ் ரொம்ப நாளைக்கு முன்னாடியே ஹிந்து gods மேலே உள்ள பக்தி யை சொல்லி விட்டார். அவர் ஒரு secular man தான்.
2. ஆனால் அஹ்மத், ஜெயா, கருணா இவர்கள் எவருமே nonsecular என்று சொல்ல முடியாது. இவர்கள் எல்லோரும் politicsக்காக Muslims exploit பண்ணறாங்க என்பது உண்மை. Only மோடி மட்டும் தான் nonsecular . அஹ்மத் குஜராத்தில் இருந்தால் இந்த மாதிரி பண்ணி இருக்க மாட்டார் என்று மட்டும் சொல்லலாம். அவருக்கு விளக்கு ஏற்றி விட்டால் அடுத்த election இல் முஸ்லிம் vote கிடைக்குமா என்ற கவலை. Communist , Cong இதை வைத்து கேரளா வில் politics பண்ண மாட்டார்கள் என்பதாலும் ஒரு தைரியம்.

Hariharan # 03985177737685368452 said...

//ஹைதராபாத்: மனித அரக்கனான ராஜபக்ச இரண்டு முறை திருப்பதி வந்தார். முதல் முறை ஆந்திர முதல்வர் பலியானார். இரண்டாவது முறை வந்து திருப்பதி ஏழு மலையானை வணங்கி விட்டு போனார். இன்று பற்றி எரிகிறது ஆந்திர மாநிலம் முழுதும். இன்னும் என்னென்ன நடக்குமோ என்று பெயர் குறிப்பிட விரும்பாத வைணவ துறவி ஒருவர் கூறியுள்ளார். //

What to say? Mr. Rajapakse please Keep coming to Tirupathi as your tirupathi visits help to clean India from Erring politician like Samuel Reddy and bring a sense of unity among India how important to remain intact and Integrate ourselves.

Anonymous said...

Ahmed believed he is first a muslim and then a Indian. As a minister he is guilty of this demeanor. There is nothing wrong if Jesudas believes he is Hindu first than an Indian. As an individual he has every right to follow his religion and engulf himself in it, but the government(and it's instruments) being secular cannot do so. Moreover lighting isn't associated with Hinduism alone, it's more an Indian tradition. I think this ends the argument.

VambeSivam said...

//ஹைதராபாத்: மனித அரக்கனான ராஜபக்ச இரண்டு முறை திருப்பதி வந்தார். முதல் முறை ஆந்திர முதல்வர் பலியானார். இரண்டாவது முறை வந்து திருப்பதி ஏழு மலையானை வணங்கி விட்டு போனார். இன்று பற்றி எரிகிறது ஆந்திர மாநிலம் முழுதும். இன்னும் என்னென்ன நடக்குமோ என்று பெயர் குறிப்பிட விரும்பாத வைணவ துறவி ஒருவர் கூறியுள்ளார்.//

ஒ.... அப்ப ராஜசேகர ரெட்டி இறந்ததுக்கு காரணம் தமிழ் நாட்டுல இருக்கற புலி ஆதரவு கும்பல்தானா? அவனுங்கதானே, ராஜபக்சேவை தமிழ் நாட்டுக்குள்ள வர அனுமதிக்க மாட்டோம்னு சொல்லிட்டு திரிஞ்சானுங்க? அவுங்களுக்கு முன்கூட்டியே ஏதோ தகவல் கிடைசிருக்கும்போல தெரியுதே! CBI இத விசாரிச்சா இன்னும் என்னென்ன வண்டவாளம் வெளிய வருமோ?

க.மு.சுரேஷ் said...

//தனிமனித ஒழுக்கம் மற்றும் நடத்தையில் தனிப்பட்டு தெரிபவர் ஜேசுதாஸ்.//
நேற்று வரை இங்கு தமிழன் தான் இல்லை என்று நினைத்தேன்.
செக்யூலர் இல்லையா ???...
நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்.
(செக்யூலர இருந்த அரசு ஒரு இட ஒதுக்கீடு,etc...சலுகைகள்,தொகுதிக்கு ஒரு சீட்டு.. ஏதாவது ஒன்று கிடைத்தால் போதும்.அப்புறம் ??.)

ஸ்ரீராம். said...

இதுக்கெல்லாம் ரொம்ப அர்த்தம் தேடாம, பிரச்னையாக்காமப் போனா நம்ம நிம்மதிக்கு நல்லது. புரியாதவனுக்கு சொல்லிப் பிரயோஜனமில்லை....புரிஞ்சவனுக்கு சொல்லத் தேவை இல்லை.
வாழ்க ஜனநாயகம்...!

Anonymous said...

ஒரு முக்கியத் தகவல். இது வ்ரை வெளியே தெரியாத விஷயம் என்று நினைக்கிறேன். யேசுதாஸ் ஒரு வைஷ்ணவப் பெரியவரை தன் வீட்டிலேயே தனி அறையும் மற்ற வசதிகளையும் தந்து சொந்த தந்தையைப் போல வைத்திருந்தார். அவர் குடும்பத்தினரும் பெரியவரைச் ‘சேவிப்பதை” வழக்கமாக வைத்துக் கொண்டு இருந்தார்கள். அவர் பெயர் ஸ்ரீமான் பல்லவி... என்று இருக்கும்.அவர் யேசுதாசுக்கு தனக்குத் தெரிந்த அனைத்தையும் சொல்லித் தந்தார்.

நான் கிருஸ்துவப் பள்ளியில் படித்தேன். தினமும் இறை வணக்கம்
“ ஆதி அந்தமிலானே நமோ’ பிறகு ஆங்கிலத்தில் “அவர் ஃபாதர்”.
ஹூம்.. அது 60 வருஷத்துக்கு முந்தி, மதம் பிடித்தவர்கள் தலைத் தூக்காத காலம்.. அந்த நாளும் வந்திடாதோ!!-- டில்லி பல்லி

Unknown said...

IV,

SECULARISM IN INDIA:

HINDUS FAVOURING MUSLIMS AND MUSLIMS FAVOURING MUSLIMS


KAMESH

Anonymous said...

In future Muslims will oppose greeting each other with two hands with a vanakkam or touching one's feet for a Namaskar, saying it's a Hindu tradition or against Islam. Infact Shahrukh khan has already started doing it.

Indian Muslims are very typical of all the Muslims of the World. They want every respect, appeasement, Social security from the State and when it comes to a rare chance to show their allegiance to the Nation they deliberately fumble it.

உண்மையான இஸ்லாமியன் said...

//
சந்திரமௌளீஸ்வரன் said...
எனக்கு விளக்கு ஏற்றுவதில் விருப்பமில்லை என அமைச்சர் தான் சார்ந்த மதம் காரணமாக மறுத்தது தவறில்லை ஆனால் அதைக் காரணமாக சொல்லி விழாவிலிருந்து ஜேசுதாஸ் வெளி நடப்பு செய்தது அநாகரீகம்//

வாங்க சந்திரமௌளீஸ்வரன்..

உங்கள மாதிரி போலி மதச்சார்பின்மை வாதிகளால்தான் இஸ்லாமியர்களின் ஆணவம் பன்மடங்காகிக் கொண்டிருக்கிறது. அரபு நாடுகளில் அவர்கள் என்ன சொல்லிக் காசுவாங்கி இந்தியவில் குழப்பம் விளைவிக்கிறார்கள் தெரியுமா??

இந்தியாவில் இவர்கள் அப்படியே இந்து தீவிரவாதிகள் கையில் சிக்கி சின்னபின்னமாவதாகவும், இஸ்லாமியர்களைப் பாதுகாக்க பனம் தேவை என்றும் சொல்லி பனம் வாங்குகின்றனர்.

ஆனால் இந்தியாவில் இந்துக்கள் சிறூபான்மையினராக வாழ்வது இந்துக்களுக்கு மட்டுமே தெரியும். குண்டு வைப்பதிலிருந்து, லவ் ஜிகாத் வரை என்னவிதமான மொள்ளமாறித்தனங்கள் உண்டோ அவ்வளவையும் செய்துவிட்டு நீலிக்கண்ணீர் வடிப்பதும், அரசியல்வாதிகளை மிரட்டியும், அவர்களை ஓட்டுவங்கியைக் காட்டி காலை நக்க வைத்தும் தங்களௌக்கு வேண்டிய எல்லாவற்ற்றையும் சாதித்துக்கொள்வதுதான் நடக்கிறது.

பெரும்பான்மையான இந்துக்களின் வரிப்பனத்தில் தனி விமானத்தில் ஏறி ஹஜ்யாத்திரை செய்ய வெட்கமாயிருப்பதில்லை..


ஆனால் இந்தியப் பாரம்பரியங்களை மதிக்க அவர்களது மதம் இடங்கொடாது.. அந்தமாதிரியான சமூகத்தோடு ஒத்துவாழ விரும்பாதவர்களுக்கு உங்களைப்போன்றோரின் ஆதரவும்..

நல்லா இருங்கடே...

Anonymous said...

ada Pongadaaa

ஜெயராஜன் said...

இவர்களெல்லாம் வேறு மதத்தினரின் ஓட்டுவேண்டாம் என்று சொல்வார்களா?