பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, December 10, 2009

ராஜிவ் கொலை வழக்கு - மர்மம் விலகும் நேரம்!

முன் குறிப்பு: முதலில் பின் குறிப்பை படிப்பது நல்லது.

ராஜிவ் காந்தி கொலை பற்றி சில புத்தகங்களும் ஒரு டாக்குமெண்டரியும் இதுவரை வந்திருக்கிறது அது திரு.ரகோத்தமன் தயாரித்த "Human Bomb" என்ற டாக்குமெண்டரி. இதை 2006ல் பார்த்திருக்கிறேன். கடைசியில் பொட்டு அம்மான் பற்றிய க்ளூவை கிரைம் நாவல் மாதிரி சொல்லியிருப்பார்கள். நினைவிருக்கிறது.

இந்த மாதிரி புத்தகங்கள் முதலில் ஆங்கிலத்தில் தான் வரும் பிறகு மற்ற மொழியில் மொழி பெயர்க்கப்படும். பச்சை தமிழரான வீரப்பர் கூட முதலில் ஆங்கிலத்தில் தான் வந்தார். பிறகு தான் தமிழில்.

முதல் முறையாக இந்த மாதிரி புத்தகம் தமிழில் வருகிறது. இந்த புத்தகம் பிறகு ஆங்கிலத்தில் வரும் என்று நினைக்கிறேன், வரும் போது டெல்லியில் புயலைக் கிளப்பலாம்.

பிரபாகரன் இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளியாக இருந்தபடியால், தலைமைப் புலனாய்வு அதிகாரி என்ற முறையில் எப்போது அவர் பிடிபட்டாலும் முதல் சாட்சியாக நீதிமன்றத்துக்கு ரகோத்தமன் வந்தாக வேண்டும். அதனால்தான் இதுவரை விசாரணை பற்றி அவர் பேசவேயில்லை. இப்போது இலங்கை அரசே, லக்சுமன் கதிர்காமர் கொலை வழக்கில் குற்றவாளி இறந்துவிட்டதாக அவர்களது உச்சநீதிமன்றத்துக்கு கடிதம் எழுதிவிட்டபடியால், அந்த வழக்கு மூடப்பட்டு இருக்கிறது. இதனால் பிரபாகரன் இறந்தது உறுதி என்று முடிவு செய்து, இப்போது வெளிப்படையாகப் புத்தகம் எழுதியிருக்கிறார் ரகோத்தமன்.

இவர் சி.பி.ஐயின் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைமைப் புலனாய்வு அதிகாரி.


புத்தகத்தில் என்ன சிறப்பு?

* விசாரணை அதிகாரிகளுக்கு நேர்ந்த பலவேறு விதமான இடர்பாடுகள், தடைகள், அதிகாரக் குறுக்கீடுகள் பற்றி விலாவாரியக எழுதியுள்ளார்.
* வைகோ, கருணாநிதி, மரகதம் சந்திரசேகர் போன்றவர்களை விசாரணை அதிகாரிகள் விருப்பப்படி விசாரிக்க அனுமதி கிடைக்கவில்லை என்று சொல்கிறார்.
* கொலையைச் செய்தது புலிகள்தான் என்ரு ஹரிபாபு போட்டோக்கள் கிடைத்ததுமே, (தனுவின் உடலைக் கண்டு, அவரது கால் தொடைகளின் உறுதித்தன்மையைக் கண்டு) கண்டிப்பாக இலங்கை இயக்கம் ஏதோ ஒன்றுதான் செய்திருக்க வேண்டும் என்று புலனாய்வு அதிகாரிகள் முடிவு செய்துவிட, அதன்பிறகும் வெகுநாள் வரை, நிச்சயமாக விடுதலை புலிகள் இல்லை என்று உளவுத்துறை சொல்லிக்கொண்டிருந்ததை எள்ளி நகையாடியிருக்கிரார்
* சிறப்பு புலனாய்வுத் தலைவர் கார்த்திகேயன், ராவின் தலைவர், ஐ.பி அமைப்பின் தலைவர் உள்ளிட்ட பல அதிகாரவர்க்கத்தினர் மீது கடுமையான விமர்சனங்கள் வைத்திருக்கிறார்
*நளினி - முருகன் காதல்தான் ராஜிவ் கொலை வழக்கின் அனைத்து கதவுகளையும் திறந்தது; அது மட்டும் இல்லாவிட்டால் தவித்துப் போயிருப்போம் என்கிறார். தனது காதலரை அடிக்காதீர்கள் என்று கேட்டுக்கொண்டு, அதனாலேயே அனைத்து உண்மைகளையும் நளினி வெளிப்படுத்தியிருக்கிறார்.
*கோடியக்கரை சண்முகம் தற்கொலையின் நிஜமான பின்னணி பற்றி விரிவாகப் பேசியிருக்கிறார்
* விசாரணையின்போது நடந்த பல சயனைட் மரணங்கள் சிபிஐயின் அலட்சியத்தால் தான் ஏற்பட்டதா? நிஜமான பின்னணி என்ன என்பது பற்றி ஆழமாகப் பேசுகின்றார்
* அனைத்துக்கும் சிகரமாக வைகோ, கருணாநிதி போன்ற சில தமிழகத் தலைவர்களின் செயல்பாடுகளில் புலனாய்வு அதிகாரிகளுக்கு இருந்த சந்தேகங்கள், அதை விசாரித்துத் தீர்த்துக்கொள்ள முடியாத அதிகார மட்ட குறுக்கீடுகள், ஜெயின் கமிஷனுக்கு சிபிஐ சரியான ஒத்துழைப்பு தராததன் பின்னணி என்று பல்வேறு விஷயங்களை மிகவும் வெளிப்படையாக விவாதித்துள்ளார்
*டிசம்பர் 15ம் தேதி புத்தகம் கிடைக்குமாம்.

பிகு: கிழக்கு பற்றி எழுதினால் உடனே இந்த ஆளுக்கும் கிழக்கும் ஏதோ 'இருக்கு' என்று ஸ்டாம்ப் குத்திவிடுகிறார்கள். நல்ல வேளை "இந்த ஆள் அடிக்கடி கலைஞர் பற்றி எழுதுகிறார்... இவருக்கும் கலைஞருக்கும் ஏதோ... " என்று இதுவரை சொல்லாமல் இருந்தாரே!. யாரோ ஒரு அம்மையார்(தைரியமாக) எழுதி, போடுங்க என்று கொடுத்த பதிவுக்கே, எனக்கு பாஸ்தா முடிச்சு என்றால். இது நானே எழுதும் பதிவு கேட்கவே வேண்டாம் நிச்சயம் நூடுல்ஸ் முடிச்சு தான். வருடா வருடம் புத்தக காட்சியின் போது, புத்தகம் பற்றி எழுதி தாருங்கள் என்று சொல்லிக்கொண்டு தான் இருக்கேன். கொடுத்தால் எடிட் செய்யாமல் போடுகிறேன்.
இப்பவும் ஒரு சின்ன அறிவுப்பு: லிப்கோ டிக்ஷ்னரிக்கு விமர்சனம் எழுதி தந்தாலும் நான் போட தயார். ( எந்த பதிப்பகமாக இருந்தாலும் பரவாயில்லை )

இது இண்டர்நெட் யுகம், படத்தின் இடைவேளையில் விமர்சனம் எழுதும் காலம். அதனால் புத்தகம் வரும் முன்பே எப்படி உங்களுக்கு இந்த தகவல் எல்லாம் கிடைத்தது என்று சிறு பிள்ளை தனமாக கேட்காதீங்க. எனக்கு பல நண்பர்கள் கிழக்கிலும் மேற்கிலும் இருக்கிறார்கள். பலர் சொன்ன தகவலின் அடிப்படையில் இந்த பதிவு. இது புத்தகத்தின் முன்னோட்டம் தான் - விமர்சனமோ, விளம்பரமோ இல்லை.

ஆன்லைனில் புத்தகம் வாங்க இங்கே செல்லவும்

இந்த புத்தகம் கலக்குமா ? யாருக்கு தெரியும், சி.பி.ஐயிடம் தான் கேட்கணும்

16 Comments:

கௌதமன் said...

அமெரிக்க அதிபர் கென்னடி மரணம் போன்றதுதான் ராஜீவ் காந்தி அவர்களின் மரணமும் என்று நினைக்கின்றேன். நிறைய விடுபடாத மர்மங்கள். இன்றும் தொடருகின்றன!

பெசொவி said...

புத்தகம் வருவதற்கு முன்பே சுடச் சுட விமரிசனம், சூப்பர்!
வந்தபிறகு கொஞ்சம் விரிவான விமரிசனத்தையும் எதிர்பார்க்கிறேன்.

மர தமிழன் said...

//எனக்கு பல நண்பர்கள் கிழக்கிலும் மேற்கிலும் இருக்கிறார்கள். பலர் சொன்ன தகவலின் அடிப்படையில் இந்த பதிவு. இது புத்தகத்தின் முன்னோட்டம் தான் - விமர்சனமோ, விளம்பரமோ இல்லை.//

- உங்களுக்கு இந்தவாட்டி சிக்கன் நூடுல்ஸ் தான்...

சைவகொத்துப்பரோட்டா said...

"*டிசம்பர் 15ம் தேதி புத்தகம் கிடைக்குமாம்."

டிசெம்பர் 16ம் தேதி முதல் தினசரிகளுக்கு சூடான தலையங்கம் ரெடி.

Madhavan Srinivasagopalan said...

"உங்களுக்கு இந்தவாட்டி சிக்கன் நூடுல்ஸ் தான்... "

what does this mean?

Also, can anyone explain what's the meaning of 'Auto Varum'?

மர தமிழன் said...

// maddy73 said...
"உங்களுக்கு இந்தவாட்டி சிக்கன் நூடுல்ஸ் தான்... "

what does this mean?

Also, can anyone explain what's the meaning of 'Auto Varum'?//



நீங்க ரொம்ப நல்லவருன்னு நிறைய பேர் சொல்லபோறாங்க,,..:0

மர தமிழன் said...

என்னது 5 நிமிஷத்துக்கு ஒரு மெயிலா...?? ரொம்பதான் குசும்பு இ வ..

படத்துக்கு பப்ளிசிட்டிய பார்த்தா எனக்கென்னமோ சிட்டி ஏரியா நீங்கதான் ரிலீஸ் பண்றீங்களோ ன்னு சந்தேகம் :-((

Unknown said...

<<<
நளினி - முருகன் காதல்தான் ராஜிவ் கொலை வழக்கின் அனைத்து கதவுகளையும் திறந்தது; அது மட்டும் இல்லாவிட்டால் தவித்துப் போயிருப்போம் என்கிறார். தனது காதலரை அடிக்காதீர்கள் என்று கேட்டுக்கொண்டு, அதனாலேயே அனைத்து உண்மைகளையும் நளினி வெளிப்படுத்தியிருக்கிறார்.
>>>
இது எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியலை.

<<<
*டிசம்பர் 15ம் தேதி புத்தகம் கிடைக்குமாம்.
>>>

மர்மம் விலகட்டும்.

Anonymous said...

புக் வரட்டும். கண்டிப்பாக படிக்கிறேன்.

பக்கத்து ஸ்டேட் ரெண்டு துண்டாக போவதை பத்தி ஒரு பதிவையும் காணோம்.
இந்த மாறி நியூஸ் எல்லாம் அல்வா மாறி அலசுவீங்களே !!

Anonymous said...

இ. வ, இந்தப் புத்தகத்தின் மின் பதிப்பு கிடைக்குமா?

வீரராகவன் said...

மாற்று கருத்தை உடையவர்கள் உள் நாட்டில் இருந்தாலும் சரி, வெளி நாட்டில் இருந்தாலும் சரி, இந்தியாவில் பதவியில் இருந்தாலும் சரி, பதவிக்கு வருவதற்காக தேர்தலில் போட்டியிடும் போதே கொல்பவர்கள் விடுதலைப் புலிகள். ஜெயவர்த்தனே ஒப்பந்தமோ, அமைதிப் படையினரோ அவர்களை தடுக்க முடியவில்லை. பிரபாகரனின் பதவி வெறிதான் இதற்கு அடிப்படை.
இன்னும் விடுதலைப் புலிகளின் அடிவருடிகளாக இந்தியாவில் நானும் தமிழன் என்றும் சொல்லிக் கொள்பவர்கள் இருப்பது சாபக்கேடு.
உண்மையிலேயே இலங்கைத் தமிழர்களுக்காக கண்ணீர் சிந்துபவர்கள் இனியாவது விடுதலைப் புலிகளை ஆதரிக்காது, இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்விற்காக பாடுபட வேண்டும்.
முடிந்தால் வீர வசனம் பேசுபவர்கள் இங்கிருக்கும் முகாமில் இருப்பவர்களுக்கு பிச்சை போடாமல் கவுரமாக அவர்கள் பிழைக்க வேலை வாய்ப்பு தர வேண்டும்.
ராஜீவ் காந்தியின் மரணத்தில் மரகதம் சந்திரசேகர் மேலும், சுற்று பயணத்தை வகுத்தவர்கள் மீதும், அந்த சமயத்தில் திடிரென சுற்று பயணத்தை மாற்றி அமைத்த அந்த எதிர் அணி அரசியல் தலைவர் மீதும் எனக்கு சில ஐயங்கள் உண்டு.

SUBBU said...

வரட்டும் வரட்டும் !!!

Anonymous said...

//Also, can anyone explain what's the meaning of 'Auto Varum'?//...

I V u can write abt yr experience on 'Auto Vandadu"..and how u survived..

it will be more intereting than Ragothaman's....

Anonymous said...

"Also, can anyone explain what's the meaning of 'Auto Varum'?"

people who want to hit or injur somebody, come in Auto rickshaw...perform the job and escape in AutoRickshaw...

So it becomes difficult to trace the culprits....they also change the Rgn No of the vehicle....

I think this is what ,in shortform called " Auto Varum"

latest version of Auto Varum also welcome from other bloggers

vedanarayanan said...

ராஜீவ் வழக்கு ஒரு பெரிய politics . அவரை assasinate பண்ண காரணமாக இருந்தவர் இறந்து போய் விட்டார்.

Indian or TN politicians cannot be involved in this . To think like that itself is too bad. ஆனால் பொலிடிக்ஸ் பண்ணுவதற்கு இந்த incident இ பயன் படுத்தி இருக்கலாம். ஓர் சிலரை தப்பிக்க உதவி இருக்கலாம். ஆனால் அதுவே பெரிய குற்றம் ஆகாது. The entire things is politics.
ஸ்ரீலங்கன் தமிழ் problem is a big politics in TN and no tamilan has any genuiene interest in solving it or helping them. Especially the tamil film directors stand, is a big joke.

Anonymous said...

Is the book by subramaniam swamy on this issue available in Tamil.