பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, December 13, 2009

ஒரு கேள்வி, ஒரு பதில்

புதிது புதிதாகப் புத்தகங்கள் சகட்டு மேனிக்குக் குவிந்துகொண்டு இருக்கிறதே. அதில் எத்தனை உருப்படியானவை?

ரஷ்யப் புரட்சி வெற்றி பெற்று சோவியத் ரஷ்யா உருவானதும், நாட்டில் தேவையற்ற புத்தகங்களை ஓர் இடத்தில் அடுக்கித் தீயிட்டார்கள். அந்தத் தீ எரிந்து அடங்க மூன்று நாட்கள் ஆகின வாம். நம் நாட்டில் இப்போது அப்படி தேவையற்ற புத்தகங்களைத் தீயிட்டுக் கொளுத்தினால் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் எரியும். அந்த அளவுக்குக் கண்றாவிகள் எல்லாம் புத்தகம் என்ற போர்வையில் வெளிவருகின்றன. என்ன செய்வது... குப்பையில்தானே குன்றுமணியைத் தேட வேண்டி இருக்கிறது!

( நன்றி: விகடன், நானே கேள்வி, நானே பதில் )

உள்குத்தும் எதுவும் இல்லை. நீங்க ஏதாவது நினைத்துக்கொண்டால் நான் என்ன செய்ய முடியும்

மற்ற கேள்விகள் வரவேற்கப்படுகின்றன...

5 Comments:

Raju said...

எப்படியோ நீங்கள் சார்ந்த பதிப்பகம் - கிழக்கு வெளுத்து சாயம் போய், நல்ல கற்கள் வெளியில் கொண்டு வந்தால் சரி!

vedanarayanan said...

Now with internet , most of the stories are in computer. So no point in putting them to fire.

மக்களுக்கே கேட்டது எது , நல்லது எது என்று தெரியும்.
இப்பொழுது எல்லாம், விகடனின் சில issueகளையே தீயில் போட்டு விடலாம் போல.

Anonymous said...

paththu puththagam pottavaraip paRRiththaane...
What to do.. Idly vadai can publish his blog writing as 100 books and the comments in to another 100 books

வீரராகவன் said...

பதிவுகளில் கூட பல குப்பைதான். இணையத்தை எரிக்க முடியுமா? குப்பை என்பது புத்தகமானாலும் சரி, சினிமாவானாலும் சரி நல்ல தரமானது நிறைய கிடைத்தால் குப்பை குறைந்து விடும்.
வீட்டில் குப்பை பெருகினால் விளக்குமாறு தூங்குகிறது வீட்டிலிருப்போரும் சோம்பலுடன் உள்ளனர்.
நாட்டில் குப்பை பெருகினால், மக்கள் தூங்குகிறார்கள். அரசாங்கமும் சோம்பலுடன் உள்ளது என்று பொருள்.
விழித்திரு, தனித்திரு, பசித்திரு.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

தரமானது புஸ்தகத்தில் இருந்தாலும், வலைப் பூவில் இருந்தாலும், சரி தனித்து, காலத்தை வென்று நிற்கும்.குப்பைகளைப் பற்றிக் கவலை
வேண்டாம்! அவை தாமாகவே மக்கிப் போய்
இருந்த இடம் இல்லாமல் ஆகி விடும் !!
அவற்றைப் பற்றி பேசினால் நமக்குத் தான்
விரயமாகும் ........ நேரம்!!!