பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, December 12, 2009

நேர்மை உறங்கும் நேரம்

தலைப்பு, சோ வினுடைய நாடகம். அதில் ஒரு காட்சி!! அதன் உரையாடல் இவ்வாறாக போகிறது.

காண்டிராக்டர்: அதெப்படிங்க இடைத்தேர்தல்-ல ரீ-கவுண்ட்ல மூவாயிரம் ஓட்டு வித்யாசத்துல ஜெயிச்சீங்க?


சோ : இப்ப உங்க வீட்டுல வெண்டக்காய் தோட்டம் இருக்கு. ராத்திரி வெண்டக்காய எண்றீங்க. காலைல, ராத்திரி எண்ணினத விட மூவாயிரம் வெண்டக்காய் அதிகமா இருக்கு. ஏன் அதிகமா இருக்குன்னா கேக்கறீங்க?? அதே மாதிரிதான் எலெக்ஷனும். ராவோட ராவா வெண்டக்காய் வளருது.....அதே மாதிரிதான் ஓட்டும்!! ராவோட ராவா வளருது.


ஏனோ ப.சிதம்பரத்தின் வெற்றி நினைவிற்கு வந்து போனது. போகட்டும்!! நடந்து முடிந்த விஷயம். அக்கால அரசிலையொட்டி இப்படியும் நடக்கலாம் என்ற ரீதியில், சோ அவர்கள் அரசியலை நையாண்டியாகச் சித்தரித்த நாடகம் இப்பொழுது நிதர்சனமாகி விட்டது. இதற்கு சமீபகால இடைத்தேர்தல்கள் சாட்சி.

திருமங்கலம்!! வரலாறு காணாத பண வெள்ளம். ஒரு ஓட்டு ஐயாயிரம் ரூபாய் வரை வியாபாரமாகி ஜனநாயகம் கேலிக்கூத்தாக அடிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்தேறின. இடைத்தேர்தலை ஆளுங்கட்சி ஒரு கவுரவப் பிரச்சனையாக பாவிக்கும் போக்கு இப்பொழுதெல்லாம் நிலவுவது இதற்கொரு காரணம். இடைத்தேர்தலில் தோற்றால், எங்கே அரசுக்கு எதிரான போக்கு நிலவுவதாக எதிர்க்கட்சிகள் நினைக்ககூடுமோ என்று அஞ்சி தேர்தல் முறைகேடுகள் கட்டுக்கடங்காமல் நடைபெறுகின்றன. இதனைத் தடுக்க வேண்டிய நிலையிலிருக்கின்ற தேர்தல் ஆணையம் செய்வதறியாது திகைத்து நிற்கிறது. பால் காரர்களையும், பேப்பர் காரர்களையும் கண்காணிப்போம் என்று தேர்தல் ஆணையம் நேற்றைய முன்தினம் வெளியிட்டுள்ள அறிவிப்பு, ஜனநாயகம் இவ்வளவு கீழ்த்தரமாகவும், கேலிக்கூத்தாகவும் அடிக்கப்பட்டுவிட்டதே என்று நடுநிலையாளர்களை வேதனையில் ஆழ்த்துகிறது.

மற்ற நாட்களில் மக்களிடையே பணப்புழக்கம் இருக்கிறதோ என்னவோ, ஆனால் இடைத்தேர்தல்கள் வந்து விட்டால் அத்தொகுதி மக்களிடையே பணம் கரைபுரண்டு ஓடுகிறது. ஒவ்வொரு தேர்தலுக்கும் வேட்பாளர்கள் இவ்வளவுதான் செலவு செய்யலாம் என தேர்தல் ஆணையம் வரையறுத்திருக்கிறது. ஆனால் வரையறுக்கப்பட்ட அளவிற்கு மேல் செலவு செய்கிறார்களா என்பதனை தேர்தல் ஆணையம் கண்காணிக்கிறதா என்று தெரியவில்லை. இன்னும் சொல்லப் போனால் தேர்தல் ஆணையம் இயங்குகிறதா என்பதே தெரியவில்லை. அதற்கு சில வருடங்களுக்கு முன் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்கள் மற்றும் திருமங்கலம் இடைத்தேர்தல்களே சான்று. சமீபத்திய, நிகழ்வில் இருக்கிற கண்கூடான உதாரணம், திருச்செந்தூர் மற்றும் வந்தவாசி இடைத்தேர்தல்கள்.

தேர்தலில் வாக்களிக்க பணம் கொடுப்பது என்பது தொன்று தொட்ட அரசியல் நடைமுறை என்று வழக்கமாகி விட்ட நிலையில், நேற்று மதியம் ஜெயா தொலைக்காட்சியில் காட்டப்பட்ட காட்சி மிகவும் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. திமு கவைச் சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினர், தமது கட்சித் தொண்டர்கள் மற்றும் பொது மக்களுக்கு வேஷ்டி சட்டை மற்றும் மதுபான பாட்டில்களை பட்டுவாடா செய்கிறார். மக்களும் வரிசையில் நின்று வாங்கிச் செல்கின்றனர். தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, நலத்திட்டங்களை நிறைவேற்றுவதோ, இலவசங்களை அறிவிப்பதோ சட்ட விரோதம் என்ற நிலையில், ஒரு சட்டமன்ற உறுப்பினரே இலவசங்களை வழங்குவது, அதுவும் மதுபானங்களை வழங்குவது மிகவும் தவறான முன்னுதாரணம். அந்த வீடியோவில் காவலர்கள் வேறு காண்பிக்கப்பட்டனர். இவ்வளவு அராஜகங்களும் காவல் துறையினர் முன்னிலையிலேயே நடைபெறுவது மிகவும் கேலிக் கூத்தானது.

பணப்பட்டுவாடா!! முன்பே கூறியது போல் இது வழக்கமாகிவிட்ட ஒன்று. இந்நிலையில் திருச்செந்தூரில் அதிகாலையிலேயே கழகத்தினர் கர்ம ஸிரத்தையுடன் ஒவ்வொரு வீட்டிலும் ஆஜராகி, கவர்களில் ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் என்று வைத்து கொடுத்து விட்டுப் போகின்றனராம். மக்கள் கவர்களுடன் புதிய ஆயிரம் ரூபாய் நோட்டுக்களைக் காண்பித்தவண்ணம் தொலைக்காட்சிகளில் தென்படுகின்றனர். ஆனால் இதைவிட அதிர்ச்சியான விஷயம் ஒன்றும் திருச்செந்தூரில் நடைபெறுகிறது. காவல் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட, நம்பர் ப்ளேட் இல்லாத டாடா சுமோக்களில் கழகத்தினர் கனஜோராக வலம் வந்து பண விநியோகம் செய்தனர். இதுவும் தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது. எவ்வளவு அப்பட்டமான அராஜகம்?? அது உண்மையிலேயே காவல்துறையின் வாகனமா என்று தெரியவில்லை. அப்படியே காவல்துறை வாகனமாக இருப்பின் அதில் கட்சிப் பிரமுகர்கள் வந்து பண விநியோகம் செய்வது எவ்வளவு பெரிய சட்ட விரோதம்?? அப்படியே காவல்துறையினரின் வாகனம் இல்லையென்றாலும் கூட அது பெரிய மோசடியான கிரிமினல் குற்றம். இதையெல்லாம் செய்வது ஆளுங்கட்சியினர் என்பது வெட்கக் கேடிலும் வெட்கக் கேடு. ஒரு இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இவ்வளவு அராஜகங்கள் தேவையா? அதுவும் காவல்துறையினரின் அனுமதியோடு? தேர்தல் ஆணையம் என்னதான் செய்கிறது என்பது அதன் பொறுப்பாளர்களுக்கே வெளிச்சம்.

இவ்வளவு வெளிப்படையாக நடக்கும் ஆளுங்கட்சியினரின் அராஜகத்தை அனுமதிக்கும் தேர்தல் ஆணையம், பேசாமல் ஆளுங்கட்சியினரே போட்டியின்றி வெற்றி பெற்றாதாக அறிவித்து விடலாம். தேர்தலுக்காக செலவிடப்படும் மக்களின் வரிப்பணமும், தேர்தலின் போது நடக்கும் வன்முறைகளுமாவது மிஞ்சும். இவ்வளவு முறைகேடுகளுக்கிடையில் முன்னரே முடிவு தெரிந்த ஒரு தேர்தலை நடத்தி ஜனநாயகத்தைத் தழைக்க வைக்கிறோம் என்று மார்தட்டுவது அசல் பைத்தியக்காரத்தனம். இவ்வாறான தேர்தல்கள், ஜனநாயகம் என்ற மரத்தின் வேரில் அமிலத்தை ஊற்றுவதற்கு சமமானது.

பால், பேப்பர் போடுபவர்களைக் தேர்தல் கமிஷன் கண்காணித்தால் என்ன செய்வார்கள் ? இது மாதிரி தான் செய்ய முடியும் !

23 Comments:

sreeja said...

நேர்மை உறங்கி பல வருடங்கள் ஆகிறது. நரேஷ்குப்தா போன்றோர் அதை எழுப்ப முயற்சி செய்கிறார்கள். ஆனால் அந்த கும்பகர்ணன் அதற்கெல்லாமா மசிவான்? விதி..

மதுரை மக்கு said...

சென்ற நாடாளுமன்றத் தேர்தலில், மதுரையில் போட்டியிட்ட ஒருவர், மூன்று லட்சம் வோட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று வேட்புமனு தாக்கல் செய்தவுடன் கூறினார். ஆனால் வென்றது ஒன்றரை லட்சம் வோட்டு வித்தியாசத்தில்தான் என்று ஞாபகம். மீதி ஒன்றரை லட்சம் வோட்டுகள் என்னவாயின?

Unknown said...

பணம் பட்டுவாடா ஆளும்கட்சி மட்டுமா ,தொகை அதிகம்
எல்லோரும் நேர்மையை நேர்யையாக விலை கொடுத்து வாங்க பார்க்கின்றனர்
மக்கள் நேர்மையாக வாங்கி கொள்கின்றனர்
காசு வரும் போது கட்சி மறைந்துவிடும்
தநகளால் முடியவில்லை என்ற ஏக்கம்

பெசொவி said...

எங்க ஊரில இடைத்தேர்தல் வராதன்னு ஏங்க வைக்கிற பதிவு. வயித்தெரிச்சலா இருக்கு, திருசெந்தூர், வந்தவாசி தொகுதி மக்களை நினைச்சா. ஹூம்......! எங்க ஊரிலயும்தான் எம்.எல்.ஏ இருக்காரு, குண்டுக்கல்லா.....

Asir said...

பால், பேப்பர் போடுபவர்களைக் தேர்தல் கமிஷன் கண்காணித்தால் என்ன செய்வார்கள் ? இது மாதிரி தான் செய்ய முடியும் !


!!!!??????

Over nakkal..
COngrats

kasaikannan said...

எங்கள் தொகுதியில் இனி சீக்கிரமே மண்டையைப்போடும் நபர்களே ஜெயிக்கவேண்டும்
என்று எல்லா தொகுதி மக்களும் பொங்கல் வைக்கிறார்களாம் .

kasaikannan said...

எங்கள் தொகுதியில் இனி சீக்கிரமே மண்டையைப்போடும் நபர்களே ஜெயிக்கவேண்டும்
என்று எல்லா தொகுதி மக்களும் பொங்கல் வைக்கிறார்களாம் .

Anonymous said...

Everything will be alright after 2012/2020. Because ...

ராம கிருஷ்ணன் said...

அன்புள்ள இட்லி வடை,
தினகரன் அலுவலகத்தை தீ வைத்து படுகொலைகளை நிகழ்த்திய வன்முறையாலர்களுக்கான ஜட்ஜ்மென்ட் பற்றிய சிறப்பு கட்டுரை வெளிவரும் என எதிர்பார்த்தேன். ஆனால் தினகரனில் செய்தி வெளிவராதது போலவே இட்லிவடையிலும் வெளிவரவில்லை. ஏன்?. எம் அண்ட் எ ரூட்டில் இட்லி வடையும் சன் குழுமத்தில் இணைக்கப்பட்டுவிட்டதா?

சைவகொத்துப்பரோட்டா said...

"தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, நலத்திட்டங்களை நிறைவேற்றுவதோ, இலவசங்களை அறிவிப்பதோ சட்ட விரோதம்"

லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் சட்ட விரோதம்தான், ஆனா கன ஜோரா நடந்துகிட்டுதான்
இருக்கு.

சின்ன மீன போட்டு, பெரிய மீன் பிடிக்கிற வித்தைதான் இது.

vedanarayanan said...

எனக்கு மிக பெரிய வயத்தெரிச்சல் என்னவென்றால், ஒரு election இல் கூட ஜெயிக்க முடியாத மனிஷன், அம்மாவின் சொல் கேட்பார் என்பதால் ஒரு home மினிஸ்டர் ஆகி விட்டார் என்பதே. அவருக்கு மட்டும் மனசாட்ஷி இருந்தால், ஒரு MP ஆகவே காலம் தள்ளி இருக்க வேண்டும்.

Anonymous said...

Most of my relations were from Thirumangalam. The talk during election were, "the opposite house got Rs.1000 more, let us also demand more". We can't blame the election commission, the ball is in people's court. If people shamelessly start getting money and saraku, they don't deserve good leaders. People can always invent more devious ways for getting the money. Should election commission educate the people? Are people really ignorant? The answer is no. The truth is that people are greedy and crooked. Even here the post by an anonymous who wishes for election in his region is a classic example of people's mindset. The few who whine, have no way out but to go to some good countries, so that they atleast have a relief that they're not part of these crooks who malign India. The other option is to change the mindset of people which is very unlikely. I'm sad as slowly India a place of rich heritage has turned into a land of crooks. Going by this, I feel someday India will be ruled by countries like China.

கௌதமன் said...

பங்கு சந்தையில் ஸ்டாக் விலைகள் நிமிடத்திற்கு நிமிடம் ஏறி இறங்குவதைப்போல -- இனிமேல் அரசியல் கட்சி கொடுக்கும் வோட்டு விலைகளும் - மார்க்கட் சானல்களில் காட்டப்படவேண்டும் - உதாரணம்:
DMK : 1000; AIADMK : 500, DMDK: 100
PMK : 50 CPIM -2 etc etc !!

இராயர் said...

ulagam azhiyum naal miga arukil ullathu yendre porul

Loganathan - Web developer said...

கொஞ்சம் வித்தியாசமாக எதிர்பார்க்கிறேன்... அதே பார்முலா போர் அடிக்கிறது.

Anonymous said...

நேற்றுத் தான் Hotel Rwanda படம் பார்த்தேன். படம் முழுக்க ஏனோ நமது நாடும் கழகத்தினரும் வந்து போனதை தவிர்க்க முடியவில்லை. அதிவிரைவில் ஆப்பிரிக்கா போன்று நமது நாடு மாறிக் கொண்டிருப்பதை எண்னும்போது பகீரென்று இருக்கிறது.

மர தமிழன் said...

//sreeja said...
நேர்மை உறங்கி பல வருடங்கள் ஆகிறது//

CORRECTION

சாகடிக்கப்பட்டு...

பொற்கோ said...

என்னைய்யா நீங்க! எந்த உலகத்துல இருக்கிறீங்க, இதெல்லாம் இல்லன்னா இனி நம்ம தேசத்தில தேர்தலே நடத்த முடியாது. வரும் காலம் பணமிருந்தா ஓட்டு கேட்டு வா இல்லையா வந்த வழியிலேயே போயிருன்னு விரட்டும் காலம் வரும் அதையெல்லாம் காண நாம் இந்த உலகத்தில் இருக்க வேண்டும்.

for_rksn said...

Next time ADMK will try to do the same thing. DMK will make a hue and cry. One good thing then will be that Media will become responsible, judges will condemn, JJ will get angry and let out some loose words, MK will pen a stupid letter or poem - when nothing happened in my regime, media made a big issue just because I am not a brahmin ---...Finally DMK will successfully control bribing being planned by ADMK. DMK knows how to deal with these things. They will have the right answer to money power. muscle power. When Makkal lack moral power nothing can be done.

Anony8 said...

Like the other Anony said, I also see the future TN and India, while watching and reading news on Africa.

Unknown said...

IV,

I strongly object that our country is becoming like africa by Anony recently elections were held here in Botswana (it is in the Southern Part of Africa) and there was no malpractice.. no parades / no late night speeches... no wall scriblings no posters also if you want to advt. you have to put vinyl boards or use poster campaings which are on to Street lamps that too for a specific period and for specific amount.. Here an MP went on to ask for Setl.Discount for repairing his Nissan Car and was denied.. Will this ever happen in India so please do not compare our country politics with Africa.. and for your information for over 45 years this country is being ruled by a party and every time they win in a democratic way. There are no Bribes and for every work (if govt related they have a specific deadline) you go by that date and collect your request / docs

Kamesh

Anonymous said...

For me "Mr.Manirathnam in Aayutha yelluththu" dialogue is coming in to my mind. Just we don't discuss about what happened and think how can we "Youth's" stop this kind of activities.

If one person talking the matter is foolish and everyone us should make awareness at least in our street.

அமர்ஹிதூர் said...

காமராஜரை என்னைக்கு நம் உள்ளத்தில் இருந்து தூக்கி எறிந்தோமோ அன்றே
"நாமும் நம் நாட்டு மக்களும் நாசமாய் போய் விட்டோம்". இந்த நாசகாரக் கும்பல் (தமிழினம் தான்) இன்னும் பல துன்பங்களை அனுபவிக்கும். "நம் தலையில் நாமே மண்ணை வாரி தூற்றிக்கொண்டால் துன்பம் ஒன்று தான் நிரந்தரம்"