பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, December 10, 2009

மர மண்டைகள்

இந்த மாதம் 8 ஆம் தேதி துவங்கி 12 நாட்களுக்கு உலகத்தின் பார்வையே டென்மார்க்கின் திசையை நோக்கிக் கொண்டிருக்கும். ( சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன், அப்ப தான் கட்டுரையில் எழுதணும்). டென்மார்க் தலைநகரம் கோபன்ஹேகனில், உலகநாடுகள் அனைத்தும் பங்கேற்கும், காலநிலை மாறுபாடு தொடர்பான ஒரு பெரிய கருத்தரங்கம் 12 நாட்கள் நடைபெறவிருக்கிறது. உலகம் வெப்பமயமாதல் மற்றுமதன் விளைவுகள், பருவ சுழற்சிகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் அதற்கான காரணங்கள், மற்றும் அவற்றை சரி செய்வது தொடர்பான பல விஷயங்கள் அங்கு விவாதிக்கப்படவிருக்கின்றன.

இம்மாநாட்டின் முக்கிய நோக்கமே சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்பதாகும். ஆனால் இம்மாநாட்டின் நோக்கத்திற்கே விரோதமான சம்பவங்கள் உலகின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன. அதற்கு சில உதாரணங்கள்:
முதல் உதாரணம்:

சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கு விரோதமான விஷயம் அதே கோபன்ஹேகனில் நடைபெற்று வருகின்றது. அதாவது இம்மாநாட்டில் பல தேசங்களிலிருந்தும் முக்கியமான தலைவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் கலந்து கொள்ளவிருப்பதால், அவர்களின் உபயோகத்தின் பொருட்டு 1200 லிமோ ரக சொகுசு கார்கள் இயக்கப்படவிருக்கின்றன. இவை தவிர 140 விமானங்கள்!! இவற்றால் வெளியேற்றப்படும் கார்பன் - டை - ஆக்ஸைடின் அளவு மிக அதிகம். இவற்றைத் தவிர்த்தாலே கோபன்ஹேகனின் சுற்றுச் சூழல் பெருமளவு பாதுகாக்கப்படும்.

இரண்டாவது உதாரணம்:

அடுத்த உதாரணம் சம்பவிக்கும் இடம், நமது சிங்காரச் சென்னையில்தான். முதன் முதலாக தற்போதைய தமிழக துணை முதல்வர் முக ஸ்டாலின் சென்னை நகர மேயராகப் பொறுப்பேற்ற போது, சென்னையை சிங்காரச் சென்னையாக மாற்றுவேன் என்று உறுதி பூண்டார். ஆனால் இப்போது நடப்பவை அதற்கு நேரெதிர். சுமார் 2000 மழை தரக் கூடிய முதிர்ந்த மரங்கள் வெட்டப்பட்டு அதன் சமாதியின் மீது புதிய சட்டமன்றக் கட்டிடமும், பெரியார் நூலகமும் கட்டப்பட்டு வருகின்றன. இனி வருங்காலத்தில் மரங்களை அழித்து அதன் மீது எழுப்பபட்ட புதிய சட்டமன்றக் கட்டிடத்தில் சுற்றுச் சூழல் பிரச்சனைகள் குறித்து விவாதிப்பார்கள். நல்ல முன்னுதாரணம்தான்!!

இந்நிலையில், வெட்டப்பட்ட ஒவ்வொரு மரத்திற்கும் பதிலாக ஐந்து மரக் கன்றுகள் சென்னை நகரில் நடப்படுமென்று சென்னை நகர மேயர் திரு.மா.சுப்ரமணியம் அவர்கள் கூறியுள்ளார். அது சரி, சென்னை நகர் முழுவதும் கான்கிரீட் மரங்கள் பெருகி வரும் நிலையில் ஒரு மரத்திற்கு பதிலாக ஐந்து மரத்திற்கு இடத்திற்கு எங்கே போவது?? அதை ஏன் மேயர் விளக்கவில்லை ?
விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் இலவச நிலத் திட்டம் போலாகுமோ?? இவ்வாறான கேள்விக்கு இவர் வைத்திருக்கு இன்ஸ்டண்ட் பதில்...மெரீனா கடற்கரையினையொட்டிய கடற்கரைச் சாலை. அதாவது இம்மரக் கன்றுகள் கடற்கரைச் சாலையில் நடப்படுமாம்.
அங்கே சிலை வைப்பதற்கே இடம் இல்லை மரம் நல்ல ஜோக். வெட்டப்படுவதோ நன்கு உயர்ந்து வளர்ந்த மரங்கள், அதற்கு பதிலாக நடப்படுவதோ மரக் கன்றுகள். இவையனைத்தும் என்னிக்கு வளர்ந்து... வார்டு மெம்பர், கவுன்சிலர்,வட்டச் செயலாளர், வட்டத் தலைவர், ஒன்றியச் செயலாளர், ஒன்றியத் தலைவர், மாவட்டச் செயலாளர் கழக செயலாலர் (இதுக்கு நடுல இளைஞரணி லொட்டு லொசுக்கு எல்லாம் இருக்கு)..அப்பறம் பேராசிரியர்...... அப்படி இப்படி என்று ஆகி கன்று என்று முதலமைச்சர் ஆகும் ? முடியாது. பேராசிரியர் ஆனாலே பெரிசு.

"Trees Foundation Of India" வைச் சேர்ந்த சுப்ரஜா தரணி அவர்கள் கூறுகையில், வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக மரக் கன்றுகள் நடப்படுமா என்பதே சந்தேகமென்ற நிலையில், நடப்பட்டாலும், அனைத்துமே வளர்ந்து பலன் தருமா? என்று கேள்வியெழுப்பியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், பொதுவாகவே வெட்டப்படும் மழை தரும் மரங்களுக்கு பதிலாக, அலங்கார மரங்களே நடப்படும். அவற்றால் விளையும் பலன்களும் மிகக் குறைவு என்று தெரிவிக்கிறார்.

"வளர்ச்சி மற்றும் முன்னேற்றப்பணிகளில் பொதுவாகவே பலிகடாவாக்கப்படுவது சுற்றுச் சூழல்தான்" என்று ஆதங்கப்படுகிறார் வன விலங்குகளின் வாழ்வை படம் பிடிப்பவரும், சுற்றுச் சூழல் ஆர்வலருமான திரு.சரவண குமார். அவர் மேலும் கூறுகையில், மெரினாவில் அனைத்து மரக் கன்றுகளையும் நடுவதற்கு இடமில்லையென்றும், மேலும் நடப்படக்கூடிய கன்றுகள் முற்றும் வளர்ச்சி பெறுமளவு பராமரிகப்படுமா என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். அதாவது சுமார் பத்தாயிரம் மரங்கள் வளர்க்க வேண்டுமென்றால், சுமார் முப்பதாயிரம் கன்றுகளை நடவேண்டுமாம். மெரினாவில் இடமிருக்கிறதா??

ஏற்கனவே தமிழகத்தில் பருவ மழை சரிவரப் பெய்வதில்லை. அதிலும் குறிப்பாக சென்னையில் மழை என்றாலே அது வங்கக் கடல் புயலை நம்பித்தான். இந்த வருடம் அதுவும் சரிவர இல்லை. தவிர, உலக வெப்பமயமாதலால் சென்னை நகரம் 2100 க்குள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்படலாம் என்ற விஞ்ஞானிகளின் பகீர் ஆய்வு வேறு பயமுறுத்துகிறது. இந்நிலையில் இரண்டாயிரம் காஸ்ட்லியான உயிர்களை பலி கொடுத்து பெரியார் பெயரில் ஒரு நூலகமும் (உ.வே.சா பெயர் வைத்தாலும் கூட), சட்ட மன்றக் கட்டிடமும் அவசியம்தானா? ஏற்கனவே இருக்கின்ற சட்டமன்றக் கட்டிடத்தில் விவாதங்கள் நடத்தியே துவரம் பருப்பு விலையையும், காய்கறி விலையையும் குறைக்க முடியவில்லை. மொத்தத்தில் எது முக்கியமோ அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை.

இதற்கு என்ன பதில் ?

நமது முந்தைய ஜனாதிபதி திரு.அப்துல் கலாம் அவர்களுக்கும், இன்றைய ஜனாதிபதி திருமதி.ப்ரதிபா பாட்டீலிற்கும் இருக்கும் வித்யாசங்களை எண்ணி மாளாது
முந்தைய ஜனாதிபதி சுற்றுச் சூழலை பாதுகாக்கும் பொருட்டு மரங்களை வளர்க்க வேண்டுகோள் விடுக்கிறார். ஆனால் இன்றைய ஜனாதிபதி சென்ற ஆண்டு அந்தமான் பயணம் மேற்கொண்ட போது அவரது ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்காக சுமார் 400 மரங்கள் அடியோடு வெட்டி சாய்க்கப்பட்டன. இதற்கு பதிலாக ஐந்து மரக் கன்றுகள் வேண்டாம் மொத்தமாக 10 மரக் கன்றுகள் நட்டாலே போறும். வெட்ட பட்ட மரங்களில் பெரும்பாலனவை 100 வயதுக்கு மேல்.

கோபன்ஹேகன் காலநிலை மாநாடு பற்றி வாய்கிழிய விவாதித்தால் மட்டும் போதாது. அதற்கு முன்னுதாரணமாகத் திகழ முயற்சிக்கவாவது வேண்டும். ஒருபுறம் பைசா பெறாத பயணத்திற்காக 400 மரங்களை வெட்டி சாய்க்கிறோம். மறுபுறம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி உபன்யாசம் செய்கிறோம்.

முட்டாள்களை மர மண்டை என்று சொல்லுகிறோம். படத்தில் மரத்துக்கு இருக்கும் அறிவு கூட நமக்கு இல்லை.

( கட்டுரை கூட்டணி: யதிராஜ் + இட்லிவடை )

23 Comments:

vedanarayanan said...

Released CO2 என்பது 70 வருடங்கள் earth இல் இருக்குமாம். ADvantage of having trees is that they absorb CO2 .
அதனால் இப்ப உள்ள எல்லா global warming problem கும் காரணம் USA , ஜெர்மனி போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகள். அவங்க தான் கடந்த சில வருடங்களாக CO2 அதிகமா emit பண்ணினவங்க.

நம்ம சென்னை, பெங்களூர் போன்ற இடங்களில் 20 -25 % people தான் car வைத்து இருகிறார்கள் . Imagine USA has more than 1 car per every household. நாம் இந்த green house emissions பற்றி எதுவுமே பண்ண வேண்டாம் என்பதே ஏன் அபிப்பிராயம். நம்ம city களில் pollution level அதிகமாக உள்ளது ஒரு problem but that does not violate emission standard to create a global warming problem.

Sitrodai said...

இதற்கே இப்படி என்றால், பெங்களூரில் மெட்ரோ - விற்காக மரங்கள் வெட்ட படுவதை பார்த்தால் நொந்து விடுவிர்கள்.

Anonymous said...

//வெட்ட பட்ட மரக் கன்றுகளில் பெரும்பாலனவை 100 வயதுக்கு மேல்.//

Or

வெட்ட பட்ட மரங்களில் பெரும்பாலனவை 100 வயதுக்கு மேல்.

IdlyVadai said...

அனானி - நன்றி

Balu said...

உலகின் நிலப் பகுதி நீர்ப் பகுதியை விட மிக மிக குறைவு விகிதாசாரம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை!, மழை என்பது கடல் மற்றும் இதர நீர்நிலைகள் மூலம் நீர் ஆவியாதலின் விளைவு மட்டும் தான், மரத்திற்க்கும் மழைக்கும் சம்பந்தம் இல்லை....சும்மா பிதட்றாதீர்கள்!!! காற்றில் நிலவும் ஈரப்பதத்தை நிர்ணயம் செய்வது கண்டிப்பாக மரங்களிலிருந்து ஆவியாகும் நீர் அல்ல என்பதை நினைவு கொள்ளுங்கள்.

Mugamoodi said...

Recently I watched a documentary on the initiatives taken by Denmark for this issue. They are encouraging the public to use bi-cycles to commute and Denmark's Environment Minister is standing as an example by commuting in bi-cycle to her office.

சைவகொத்துப்பரோட்டா said...

குளோபல் வார்மிங்இன்னு எங்க பார்த்தாலும் அலறிகிட்டு இருக்கிற இந்த நேரத்துக்கு அவசியமான் கட்டுரை.

சாலை மறியல் நடத்தும்போது "ரொம்ப பயனாக" இருக்கும், அதுக்காகவாவது மரம் நடுங்க.

butterfly Surya said...

அது மட்டுமல்ல. தி.நகர் ஜி.என் செட்டி சாலையிலும் புதிய பாலம் கட்டுவதற்காக போன வருடம் நிறைய மரங்கள் வெட்டப்பட்டன.

சில மாதங்கள் முன் பாலம் திறப்பு விழா தினத்திற்கு முன் தினம் திடீரென் பாலத்தின் இரு புறங்களிலும் சில மரங்களின் பெரும்பாலான கிளைகள் வெட்ட பட்ட போது மரம் வெட்டுபவர்களை பேச்சு கொடுத்து விசாரித்ததில் இரண்டு புறமும் திறப்பு விழாவிற்கு (???? ) வரும் போது பாலத்தின் வியூ நன்றாக இருக்க வேண்டுமாம். அதற்காக வெட்ட சொல்லி உத்தரவு என்றார்கள்.

சென்னை விளங்கிடும் ....

goindu said...

// அனானி - நன்றி //

thanks,

i dont know whether you will take

positive way or not

only i posted by ananymous.

goindu said...

// மரத்திற்க்கும் மழைக்கும் சம்பந்தம் இல்லை....சும்மா பிதட்றாதீர்கள்!!! காற்றில் நிலவும் ஈரப்பதத்தை நிர்ணயம் செய்வது கண்டிப்பாக மரங்களிலிருந்து ஆவியாகும் நீர் அல்ல என்பதை நினைவு கொள்ளுங்கள்.?//

But trees only playing a main role for the rain by spreading the cool air to sky then only rain will come. i studied in the school days
can anybody explain more..

மர தமிழன் said...

போகட்டும்... துணை முதல்வருக்கு ஒரு துணை சட்ட சபை அமைக்க பழைய டிரைவ் இன் இடத்தை தேர்ந்தெடுத்து அதிலுள்ள மரங்களையும் வீழ்த்தாமல் இருக்க பகுத்தறிவு தான் காக்க வேண்டும்.
=========
உலகில் அதிக முறை ஒரு கடற்கரை நடை பாதை போடப்பட்ட இடம் நம் மெரீனா வாகத்தான் இருக்க முடியும்... கின்னஸ் ரெகார்ட் கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதர்க்கில்லை.
=========
bang THE bulb என்று கூவிக்கொண்டிருந்தார்கள்... என்னமோ செல்வ சீமான்கள் குண்டு பல்பு ல தான் காலம் ஓட்டற மாதிரி கேட்ட அதுலதான் அதிகமா வெப்பம் வருதாம்... எனக்கு ஒரு சந்தேகம்... F1 ரேஸ் கள்.., ஊர் ஒலகத்தில் சிகரெட் பிடிப்பவர்கள், எல்லா எடத்திலும் AC போட்டு வாழுபவர்கள், CRIKET DAY-NIGHT மேட்ச் போன்ற வற்றிலேல்லாம் பூமிக்கு குளிர்ந்த காற்று கிடைக்கிறது போல...போகிற போக்கில் அடுப்பெரித்து சமையல் செய்வதையே தவறேன்பார்களோ??? என்னமோ ?? அமெரிக்காவுல குடிச்சிட்டு வாந்தி எடுத்தவனுக்காக நம்ம வாய கழுவ சொல்ற மாதிரி இருக்கு...
=========
மரம் படமெல்லாம் நல்லாத்தான் இருக்கு எதுக்கும் அந்த செடிய எடுத்து வேற எடத்துல வெச்சிடுங்க .. அதுவே அந்த மரத்துக்கு ஆப்பு வெச்சிடபோவுது..:-)

IdlyVadai said...

//thanks,

i dont know whether you will take

positive way or not

only i posted by ananymous.//

என் Blood Group கூட B+ve தான் அதனால பயப்படாதீங்க :-)

Madhavan Srinivasagopalan said...

"அப்பறம் பேராசிரியர்...... அப்படி இப்படி என்று ஆகி கன்று என்று முதலமைச்சர் ஆகும் ? முடியாது. பேராசிரியர் ஆனாலே பெரிசு. "Yes, Professor never can be CM.

Madhavan Srinivasagopalan said...

"நமது முந்தைய ஜனாதிபதி திரு.அப்துல் கலாம் அவர்களுக்கும், இன்றைய ஜனாதிபதி திருமதி.ப்ரதிபா பாட்டீலிற்கும் இருக்கும் வித்யாசங்களை எண்ணி மாளாது"

I had the doubt of who's more power PM or President (India)?. Madam(Imported) also might have the same doubt & that's y having both posts under her control.

கானகம் said...

நல்ல கட்டுரை. வாய்ப்பேச்சு வீரர்களே இன்றைக்கு நமக்குக் கிடைத்திருக்கும் தலைவர்கள். சுற்றுச்சூழல் பற்றி நூற்றுக்கு பத்து அரசியல்வாதிக்காவது தெரிந்திருக்கும் என நம்புகிறீர்களா??

இவர்கள்தான் நாலைய சுற்றுச்சூழல்பற்றி வாய்கிழியப் பேசுபவர்கள்..


அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டுச்செல்லப்போவது மஹாமோசமான சுற்றுச்சூழல் அவ்வளவே..

எனிவே, ஊதுற சங்கையாவது ஊதிவைக்கலாமே.. அந்த வகையில் இட்லிவடை + யதிராஜனின் இந்தக் கட்டுரை சிறப்பான ஒன்று.

ஜெயக்குமார்

vedanarayanan said...

பெங்களூர் இல் மரம் வெட்டுவது , சென்னை இல் மரம் வெட்டுவது, இதெல்லாம் பெரிய problem இல்லை.

பெங்களூர் is considered equal to or above Sunnyvale , then why is the necessity to have an agenda of trees &gardens here. Wrong priorities . The city has to be broadened and trees can be on a broadened city .

I feel the problem of our cities is the vertical growth like Hong Hong and singapore . It is a joke , they donot have land and they grow vertically , but we need not .

Bicycle ... dangerous in இந்தியன் roads .

கௌதமன் said...

யார் என்ன சொல்கிறார்களோ அல்லது செய்கிறார்களோ - வீட்டுக்கு ஒரு மரம் (குறைந்தபட்சம்) வளர்க்கவேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். எனக்குச் சொந்தமான வீட்டில் உள்ள மரங்களின் எண்ணிக்கை பத்து.

Anonymous said...

where is ethiraj..veerearagavan.. For this also muka ,dmk than karanamm appdineenutu varingchu kaatindu varuvargalee? if not atleast perumal ..podlanganu orru comment pl..
guys read this article and explore to others by giving link.
special Thanks iv for posting this article

Hariprasad said...

hello,
the population growth in the cities is also responsible for this. The govt should provide same opportunities in the entire state. Still people consider going to chennai from a village and working there is a prestigious issue. If they get the needed jobs in their places, then this can be controlled to great extent. moreover, the development of the state will be uniform.

SUBBU said...

//ஏற்கனவே இருக்கின்ற சட்டமன்றக் கட்டிடத்தில் விவாதங்கள் நடத்தியே துவரம் பருப்பு விலையையும், காய்கறி விலையையும் குறைக்க முடியவில்லை. மொத்தத்தில் எது முக்கியமோ அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை.
//
அதென்னவோ சரிதான்..

krish said...

//உலகின் நிலப் பகுதி நீர்ப் பகுதியை விட மிக மிக குறைவு விகிதாசாரம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை!, மழை என்பது கடல் மற்றும் இதர நீர்நிலைகள் மூலம் நீர் ஆவியாதலின் விளைவு மட்டும் தான், மரத்திற்க்கும் மழைக்கும் சம்பந்தம் இல்லை....சும்மா பிதட்றாதீர்கள்!!! காற்றில் நிலவும் ஈரப்பதத்தை நிர்ணயம் செய்வது கண்டிப்பாக மரங்களிலிருந்து ஆவியாகும் நீர் அல்ல என்பதை நினைவு கொள்ளுங்கள்.//

வந்துட்டாருப்பா விஞ்ஞானி. காலா காலமா படிச்சு நிரூபிச்சத எதிர்க்க வந்துட்டாரு. மரத்த வெட்டுனா சுவாசிக்க என்ன செய்வீங்க ? போடா முட்டாள். உன்ன மாதிரி ஆள் இருக்குற வர 2012 க்குள்ள என்ன இப்போவே உலகம் அழியும்.

Anonymous said...

//முந்தைய ஜனாதிபதி சுற்றுச் சூழலை பாதுகாக்கும் பொருட்டு மரங்களை வளர்க்க வேண்டுகோள் விடுக்கிறார்.//
இதே ஜனாதிபதிதான் நீலகிரி மலைகளில் மரங்களை வெட்டி நீயூட்டிரினோ விஞ்ஞானகூடம் அமைக்க கையெழுத்திட்டார்.

Balu said...

/***வந்துட்டாருப்பா விஞ்ஞானி. காலா காலமா படிச்சு நிரூபிச்சத எதிர்க்க வந்துட்டாரு. மரத்த வெட்டுனா சுவாசிக்க என்ன செய்வீங்க ? போடா முட்டாள். உன்ன மாதிரி ஆள் இருக்குற வர 2012 க்குள்ள என்ன இப்போவே உலகம் அழியும்.****/

நான் ஆக்சிஜனை பற்றி கூறவே இல்லையே Mr.அறிவாளி, மரத்திற்க்கும் மழைக்கும் சம்பந்தம் இல்லை என்று தான் சொன்னேன், சூரிய ஒளியால் ஆவியாகும் நீரின் அளவை மரத்தினால் வெளியேற்றப்படும் (ஆவியாகும்) நீரின் அளவோடு ஒப்பிட்டால் அது மிக மிக குறைவு, உங்களுக்கு கணக்கு போட தெரிந்தால் போட்டு பார்க்கவும், சும்மா காலம் காலமாக படித்தது என்று அதி மேதாவித் தனமாக கூற வேண்டாம், நான் முட்டாளாகவே இருந்துவிட்டு போகிறேன்.காலம் காலமாக நாம் பூமியை சூரியன் சுற்றியது என நம்பியவர்கள் தான் நாம்.
2012 ல் உலகம் அழியும் என நம்பும் உங்களை எல்லாம் ஒண்ணும் செய்ய முடியாது.