இரண்டு நியூஸ் நீங்களே முடிவு செய்துக்கொள்ளுங்கள்.
ஒன்று:
சமீபத்தில் ஜார்கண்ட் மாநிலத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட ராஜ்நாத் சிங் சர்ச்சையில் சிக்கியுள்ளார். காரணம், விளக்கு வசதியில்லாத விமான ஓடுதளத்தில் ஜீப் வண்டிகளின் விளக்கு வெளிச்சத்தைக் கொண்டு இவர் பயணித்த ஹெலிகாப்டரை டேக் ஆஃப் செய்ததற்காக. இது அப்பட்டமான விதிமுறை மீறல் என்று உள்நாட்டு விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் கண்டித்துள்ளது, விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது. மறுநாள் பத்திரிக்கைகள் மற்றும் வட இந்திய ஆங்கில மீடியாக்களில் பரபரப்பாக அடிபட்டது. CNN-IBN, NDTV, முதலிய மீடியா ராஜ்நாத் சிங்கை போட்டு தாக்கியது.
இரண்டு:
மேற்கூறிய அதே கதைதான். நபர்தான் வேறு. நபர் எதிர்கால விடிவெள்ளி ராகுல் காந்தி அவர்கள். உத்திரப் பிரதேச மாநிலம் சீதாபூர் பகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, மோசமான வானிலையில், வெளிச்சம் அறவே இல்லாத (Zero Visiblity) ஓடுபாதையில் விமானத்தை தரையிறக்க விமான ஓட்டியை வற்புறுத்தியுள்ளார். விமானமும் தரையிறக்கப்பட்டுள்ளது. இதனை ராகுல் காந்தி திட்டவட்டமாக மறுத்துள்ளார். நானே ஒரு விமான ஓட்டி, எனக்குத் தெரியாதா என்ற ரீதியில் பத்திரிக்கையாளர்களிடம் கடுப்படித்துள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டைக் கூறியது மீடியாவோ அல்லது பாஜக வோ அல்ல. உத்திரப் பிரதேச காங்கிரஸ் கட்சித் தலைவர் ரீடா பகுகுணா. இதற்கு உள்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சகத்திடமிருந்து ஒரு கண்டனமோ, விசாரணை உத்தரவோ ஏதுமில்லை. மீடியாக்களிலும் ராகுல் செய்தது சரி தான் என்பது போன்ற சல்ஜாப்பு.
இரண்டுமே அப்பட்டமான விதிமுறை மீறல் என்ற நிலையிலும், மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம் என்ற ரீதியில் ஆங்கில மீடியாக்களும் இயங்குகின்றன
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, December 09, 2009
மீடியாவிற்கு தெரிந்த வெளிச்சம்
Posted by IdlyVadai at 12/09/2009 06:11:00 AM
Labels: செய்தி விமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)
23 Comments:
இவனுங்க பண்றத பாத்தா உலகம் கண்டிப்பா 2012 ல அழிஞ்சிடும் போல...
At the end of the day, it is their life.... let them take risk... who cares???
MMN is correct.
As long as they dont force, passenger flights to ground, whats our problem?
//As long as they dont force, passenger flights to ground, whats our problem?//
அவர் லேண்ட் செய்ய சொல்லி உங்க வீட்டு மொட்டை மாடியில் இறங்கினால் பரவாயில்லையா ?
இவர்களுக்கு "விளக்கு வெளிச்சம் போட" அதிகார, ஆள் பலம் இருக்கிறது சரி, இந்த மாதிரி அடிப்படை வசதிகள் கூட இல்லாத விமான ஓடு தளங்கள் எதற்காக வைத்து இருக்கிறார்கள்.
What is the problem for IdalyiVaid? Let them die.
இவைங்க எப்பவுமே இப்படிதான் பாஸ்!!!
//At the end of the day, it is their life.... let them take risk... who cares???//
//As long as they dont force, passenger flights to ground, whats our problem?//
இது நல்ல கதையா இருக்கே?
அந்த விமானத்தை ஒட்டினவரோட உயிருக்கும் சேர்த்து இல்ல ரிஸ்க் எடுத்து இருக்காங்க?
//At the end of the day, it is their life.... let them take risk... who cares???//
இவர்கள் மட்டும் 'போனால்' பரவாயில்லை. விமானிகளின் கதி?
"ஆளைச் சொல்லு, ரூலைச் சொல்றேன்", என்பது எக்காலத்துக்கும் பொருந்தும் ஒரு வசனம்.
ha ha ha...!
No need to explain the issue other than the 'yellow comment'.
Also, at this point, I would like to express my view that 'who is Priyanka/Sonia to forgive Nalini?' After all it was not just Rajiv Gandhi got, killed, but also many others.
As Dinesh said "இவனுங்க பண்றத பாத்தா உலகம் கண்டிப்பா 2012 ல அழிஞ்சிடும் போல..."
Mis-use of power what else?
இவங்க எல்லாம் இப்படித்தாங்க அதிகாரம் இருக்கு,
விட்டா அந்த ஊர்ல இருக்குற கிரவுண்ட்ல கூட இறக்குவாங்க...........
ennatha solrathu ellam antha kadavulukku thaan velicham...
இந்த விதிமுறை மீறல், விசாரணை அதெல்லாமே விடுங்கள். காங்கிரஸ் ஏதோ சில மாதங்களுக்கு முன்பு சிக்கன நடவடிக்கை அது இது என்று இந்தியப் பொருளாதாரத்தையே தூக்கி நிறுத்தப் ப்ரயத்தனப் படுவது போல் ஒரு கேலிக் கூத்து நடத்தினார்களே?? ராகுல் கூட ஷதாப்தி ரயிலில் பயணித்து பத்திரிக்கைச் செய்தியாக்கினாரே??
இப்பொழுது எதுக்கு தில்லியிலிருந்து கூப்பிடு தூரத்திலிருக்கும் உத்திரப் பிரதேசத்திற்கு தனி ஹெலிகாப்டர்? சிக்கன நடவடிக்கைகள் என்னவாயின?
//நபர் எதிர்கால விடிவெள்ளி ராகுல் காந்தி அவர்கள்//
யாருக்கு? இந்தியாவிற்கா? வௌங்கிடும்
சரியான முடிவு எடுக்காமல் இதை மாதிரி பண்ணியவர் தான் இவர் அப்பாவும். Rulesஇக்கு தலை பணியாதவர்கள், அட்லீஸ்ட் அதை அட்வைஸ் பண்ணுபவர்களையாவது friends ஆகா வைத்து இருந்தால் நாடு உருப்படும்.
இவரும் சோனியா மாதிரி தானா, தெரிந்தே தப்பு பண்ணுவாரா?
//ஆங்கில மீடியாக்களும் இயங்குகின்றன//
சிரிப்புத்தான் வருகுதய்யா உமது மஞ்சள் கமெண்டை பார்த்து.
அது என்ன "ஆங்கில மீடியாக்களும்"? தமிழ் போன்ற லோக்கல் மொழி மீடியாக்களாவது தாங்கள் யாரை அல்லது எந்த அரசியல் கட்சியை அல்லது நிலைப்பாட்டை சார்ந்துள்ளோம் என்று வெளிப்படையாகவே தெரிவிக்கின்றன அல்லது நாமே அவை எந்த புள்ளியின் சொந்தம் என்பதை வைத்து முடிவுக்கு வந்து விடலாம். பிரச்னை இல்லை.
ஆனால், இந்த ஆங்கில மீடியாக்கள் நிலைமையே தனி. அவை யாருக்கு சொந்தம் என்பதிலிருந்து யார் அவற்றை நிர்வகிக்கிறார்கள், அவற்றை நிர்வகிக்க பணம் எங்கிருந்து எந்த முறையில் வருகிறது என்பது வரை எல்லாமே "மர்ம தேசம்" போன்றது. அப்பேற்பட்ட வெளிநாட்டு கம்பனியின் நிர்வாகத்தில் உள்ள ஒரு தமிழ் தொலைகாட்சியின் செயல்பாடும் சமீபத்தில் அதன் "hidden agenda" வை வெளிப்படுத்தியது.
http://jayasreesaranathan.blogspot.com/2009/11/watch-vijay-tv-neeyaa-naanaa-tomorrow.html
எனவே, ஆங்கில மீடியா என்றால் எங்கோ தேவ லோகத்திலிருந்து குதித்தார்கள் என்று என்ன வேண்டாம். சாரி...சாரி... ஒருவேளை "பர லோகத்து பரம பிதா" பணத்தை அவர்களுக்கு அனுப்பி இருப்பாரோ?
IdlyVadai said...
//As long as they dont force, passenger flights to ground, whats our problem?//
அவர் லேண்ட் செய்ய சொல்லி உங்க வீட்டு மொட்டை மாடியில் இறங்கினால் பரவாயில்லையா ?
நல்லாதான் IDEA குடுக்கிறீங்க ...:-)
we all know these national media are totally biased against bjp & NDA
Cong's mouthpiece Media is one of the main reasons for BJP's defeat last election.
English media are all CIA funded. otherwise how news readers who got paid rs 200 per session and taxi fare started channels.
CIA wants BJP to perish so that Indians are available for service.
Post a Comment