பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, December 07, 2009

சாலை ஒழுக்கம்

நவம்பர் 2009, ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழில் வெளியான ஒரு கட்டுரையின் மொழிபெயர்ப்பு இது. இக்கட்டுரையின் மூலத்தை எழுதியவர் இந்தியா டுடே மற்றும் ரீடர்ஸ் டைஜஸ்ட் குழுமத்தின் எடிட்டர் திரு.மோகன் சிவானந்த் அவர்கள். சாலை விதிகள் மீறப்படுவதையும், அதனால் ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றியும் ஆய்ந்து எழுதியிருக்கிறார். அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.

" சமீபத்தில் வேலை நிமித்தமாக வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, ஒரு நான்முனை சந்திப்பில் சிக்னலில் மஞ்சள் விழுந்ததால் வண்டியை நிறுத்த நேர்ந்தது. சில வினாடிகளில், எனக்குப் பின்னால் வந்த வாகனம் அவசர கதியில் சிக்னலைப் பொருட்படுத்தாது வேகமாகக் கடந்து சென்றது. சென்ற வேகத்தில் எதிர்சாரியிலிருந்து வந்த இரு ஹெல்மெட் அணிந்த இருசக்கர வாகன ஓட்டிகளின் மீது மோதி நின்றது. கீழே விழுந்த இருசக்கர வாகன ஓட்டிகள் எழுந்து நிற்க இயலாமல் தடுமாறினர்.

சிக்னல் பச்சைக்கு மாறியதும், எனது வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு, அவ்விருவரின் உதவிக்கு விரைந்தேன். அதிருஷ்டவசமாக அவ்விருவரும் அதிக காயங்களின்றி தப்பினர். தவிர, மோதிய வாகனத்தின் ஓட்டுனருடன் காரசாரமாக வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டிருந்தனர். மோதிய வாகனத்தின் ஓட்டுனர் அவ்விருவரின் மீதும் குற்றம் சாட்ட முயன்று கொண்டிருந்தார்.

" என்ன நடந்தது என்று நான் பார்த்துக் கொண்டுதானிருந்தேன்" என்று நான் சொன்னேன்.

" நான் கடந்து வந்தபோது சிக்னல் இன்னமும் மஞ்சளில்தானே இருந்தது?" என்று என்னுடைய ஆதரவை எதிர்ப்பார்த்து ஓட்டுனர் வினவினார்.

"இருக்கலாம், ஆனால் மஞ்சள் விளக்கு நீங்கள் வாகனத்தின் வேகத்தைக் குறைத்து நிறுத்த வேண்டும் என்பதற்காகத்தானே?" என்று கேட்டேன்.

"ஆயினும் அந்த ஓட்டுனருக்காக நான் பரிதாபப் பட்டேன். அவர் வாதம் வலுவிழந்து விட்டது என்பதற்காக அல்ல, சாலை விதிகளின் மீதான அவரது அறியாமையை நினைத்து. அவரைப் போலவே பொதுவாக இந்தியர்கள் பலரும் சாலை விதிகளை அறியாதவர்களாகவே இருக்கின்றனர். மஞ்சள் விளக்கு தோன்றினால், வாகனத்தின் வேகத்தைக் குறைப்பதற்கு பதிலாக, சிவப்பாக மாறுவதற்குள் வேகமாகக் கடந்து சென்று விட வேண்டுமென்பதற்கான சமிக்ஞையாகவே மஞ்சள் விளக்கைப் பாவிக்கிறார்கள்."

" ஒருமுறை விபத்தில் காயமுற்றிருந்த எனது கல்லூரி நண்பனைப் பார்க்கச் சென்றிருந்தேன். அவன் கூறியதாவது, " மஞ்சள் விளக்கு சிவப்பாக மாறுவதற்கு முன்பாக கடந்து சென்று விட வேண்டுமென்ற நோக்கில், எதிர் வந்த ஒரு காரின் மீது மோதி விடாமலிருப்பதற்காக, நிறுத்தப்பட்டிருந்த லாரியின் மீது மோதினேன்" என்று விளக்கமளித்தான். ஆயினும் கடைசி வரை தவறு தன்மீதானது என்பதனை அவன் ஒப்புக் கொள்ளவே இல்லை. அவனது தாயாரும் அவனுக்கு ஆதரவாகவே பேசினார். எனது மகன் மிகவும் அருமையான ஒரு ஓட்டுனன். கார் லைசன்ஸ் கூட அதற்கான தேர்வு எதுவும் எடுத்துக் கொள்ளாமலேயே பெற்று விட்டான் என மிகவும் அப்பாவித்தனமாகக் கூறினார். நான் மேலும் அவர்களிடம் அதுபற்றி விவாதிக்கவில்லை. ஏனெனில் டீனேஜ் பருவத்தில் இருப்பவர்கள் எவ்வாறு ஓட்டுனர் உரிமம் பெறுகின்றனர் என்பது தெரிந்த விஷயம்தான்."

சிக்னல்களை மதிக்காமல் செல்வது, வேகமாகத் திருப்புவது, அனுமதிக்கப்பட்டதற்கு மீறி வேகமாக செல்வது, மற்றும் தேவையற்ற இடங்களில் ஹார்ன் செய்வது, நேர்மையற்ற முறையில் ஓட்டுனர் உரிமம் பெறுவது போன்ற செயல்கள் எல்லாமே இங்கு சாதாரணமானவை போன்று பாவிக்கப்படுகின்றன. இதன் விளைவு: சாலை விபத்துக்களில் ஆண்டுதோறும் உயிரிழப்போரின் எண்ணிக்கை உலக நாடுகள் அனைத்தை விடவும் இந்தியாவில்தான் அதிகம் (2007-ல் 1.14 லட்சம் பேர்). இந்த புள்ளி விவரம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. மோசமான ஓட்டுனர்கள் அவர்கள் பாதிக்கப்படுவது தவிர, அவரைச் சார்ந்தோர்களையும் துக்கத்தில் ஆழ்த்தி விடுகின்றனர். ஆனால் இது குறித்து எதுவும் செய்ய இயலாத அதிகாரிகளைக் கொண்ட அரசு இயந்திரத்தை நாம் பெற்றிருக்கிறோம். இது குறித்து ஆவன செய்ய வேண்டிய போக்குவரத்து காவலர்களே பல சமயங்களில் கொள்ளைக்காரர்களாக இருக்கின்றனர்.

மும்பையிலுள்ள, பரிச்சயமில்லாத இடத்திலுள்ள ஒரு அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தேன். எனக்கு முன்னால் பல லாரிகள் என்னுடைய பார்வையை மறைத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தன. ஒரு போக்குவரத்துக் காவலர் என்னை நிறுத்தி, லாரிகளைத் தொடர்ந்து நீங்களும் சிவப்பு விளக்கை மீறி வந்து விட்டீர்கள் என்று கூறி, சிக்னலை நீங்கள் பார்க்கவில்லையா?? என்று கேட்டார்.

"என்னுடைய தவறுதான்" என்று ஒப்புக் கொண்டேன்.

" நூறு ரூபாய் அபராதம் என்று கூறிய அவர், மேலும் எனது ஓட்டுனர் உரிமத்தைத் தற்காலிகமாகப் பறிமுதல் செய்து கொள்வார் என்றும், அபராதத்தை மண்டல போக்குவரத்து அலுவலகத்தில் செலுத்தி விட்டு ஓட்டுனர் உரிமத்தை பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறினார். சற்றே அயர்ந்தேன். சில வினாடிகளுக்குப் பிறகு வேறு ஒரு யோசனை கூறினார்.

" இப்பொழுதே என்னிடம் ஐம்பது ரூபாய் கொடுத்து விடுங்கள். உரிமத்தையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்" என்றார்.

"அதற்கான அபராத ரசீது கொடுப்பீர்களா?" என்று கேட்டேன்.

"இல்லை" என்று பதில் வந்தது.

" அப்படியானால் அந்த அபராதத் தொகை யாரைச் சென்றடையும்? என்று கேட்டேன்.

" அது வேறு விஷயம்" என்று பீடிகையுடன் விளக்க முனைந்தார்.

" நீங்கள் எனது உரிமத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். நான் அது தொடர்பான அலுவலகத்திலேயே அபராதம் செலுத்தி விட்டு, ரசீது பெற்றுக் கொள்கிறேன்" என சற்றே குரலை உயர்த்தினேன்.

" போ போ என்று வெறுப்புடன் கூறிவிட்டு என்னிடமே உரிமத்தையும் எறியாத குறையாகக் கொடுத்தார்.

இவ்வாறான சிறு சிறு லஞ்சங்கள் கொடுப்பதன் மூலம் நாம் தப்பித்து விட்டோம் என்று எண்ணுவதில் அர்த்தமில்லை. தவிர, ஏற்கனவே சீரழிந்த ஒரு அரசு இயந்திரத்தை மேலும் சீரழிக்க நாமும் துணை போகிறோம் என்பதில் நமக்கு சிறுமைதான்.

"மற்றொரு தினம், ஒரு பிரபல பள்ளி அருகே இருந்த பிஸியான சிக்னலில் சிவப்பு விளக்கில் நின்று கொண்டிருந்த போது, எனக்குப் பின்னாலிருந்த ஒரு பெண் வாகன ஓட்டி, பள்ளிச் சீருடையிலிருந்த தனது மகனுடன் காரிலிருந்து என்னை நகரும் படியாக தொடர்ந்து ஹார்ன் எழுப்பிக் கொண்டிருந்தார். அப்போது சிக்னல் பணியில் எந்த ஒரு காவலரும் இல்லை. தொடர்ந்து எழுப்பிய அவரது ஹார்ன் ஒலிக்கு நான் செவி சாய்க்கவில்லை. பொறுமையிழந்த அவர் சற்றே "ரிவர்ஸ்" எடுத்து வேறு பாதைக்கு மாறி என்னருகில் வண்டியை நிறுத்தி மிகவும் கோபமாக, "உனக்கு என்ன பிரச்சனை?" என்று வினவினார். நானும் பொறுமையுடன், எதிரே இருக்கும் சிக்னல்தான்! என்று கூறினேன். அது பற்றி இங்கு யாரும் கவலைப் படவில்லை என்று சீற்றத்துடன் பதிலளித்தார்.

இவ்வாறு பொறுப்பற்ற பெற்றோர்கள் நிர்ணயிக்கும் வழியில், எதிர்காலத்தில் அவர்களது சிறார்களும் பயணிக்கும் ஆபத்து இருக்கிறது. இது ஒரு தவறான முன்னுதாரணம்.

" நான் அவ்வப்பொழுது சில பள்ளிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவர்களது பள்ளி வாகனத்தின் கண்மூடித்தனமான வேகத்தினைப் பற்றிப் புகார் செய்வதுண்டு. இவ்வாறான அவர்களின் பொறுப்பற்ற சாலை ஒழுக்கத்தால் பள்ளிக் குழந்தைகள் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், தவறான உதாரணத்தை போதிக்கிறார்கள். வேகமாகச் செல்வது, முந்துவது, சிக்னலை மதிக்காமல் செல்வது போன்றவை அந்த நேரத்திற்கு ஒரு மகிழ்ச்சியையும், "த்ரில்-லையும்" அளிக்கலாம். ஆனால் எதிர்காலத்தில்?? அக்குழந்தைகளே எதிர்காலத்தில் அவர்களது பெற்றோர்களின் வாகனத்தைக் கையாளும்போது அதே போன்று செய்யத் தூண்டும். அவர்களை பாதிப்பிற்குள்ளாக்கிக் கொள்வதோடு மட்டுமல்லாமல், மற்றவர்களுக்கும் அதே பாதிப்பை ஏற்படுத்துவார்கள்.

பேருந்து ஓட்டுனர்களைப் பற்றிப் பேசும்போது, அவர்கள் உங்களையும் என்னையும் விட கட்டுப்படுத்துவதற்குக் கடினமானவர்கள். மும்பையின் அனைத்து இடங்களிலும் காணப்படும், சிவப்பு நிற பேருந்தை எடுத்துக் கொள்ளுங்கள். அசப்பில் லண்டன் நகரில் ஓடும் சிவப்பு பேருந்துகளை ஒத்திருக்கும். ஆனால் அவற்றின் ஒற்றுமை நிறத்தோடு சரி. அப்பேருந்துகளின் ஓட்டுனர்கள், சிக்னலில் நிற்காமல் செல்வதற்கும், வேகமாக ஓட்டி சாலை மரணங்களை விளைவிப்பதற்கும் புகழ் பெற்றவர்கள். கடந்த ஏழுமாத காலத்தில் மும்பை நகரில் பதிவான 32,000 சாலை விதிமுறை மீறல்களில் சுமார் 7200 இப்பேருந்துகளின் ஓட்டுனர்கள் ஏற்படுத்தியது. தில்லியில் இயக்கப்படும் "ப்ளூலைன் பஸ்" இவற்றை விட மோசம். சென்னையில் இயக்கப்படும் பல்லவன் போக்குவரத்துக் கழகம் கொலை செய்வதில் புகழ் பெற்றது. ஆதலால் பல்லவன் கொல்லவன் என்று அழைக்கப்படுகிறது.

இவ்வாறான பேருந்து ஓட்டுனர்கள் ஒரு பொறுப்புள்ள ஆணையத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட இவர்களைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. இவர்கள் சாலை விதிகளைக் கடைபிடிக்கத் துவங்கினால் அனைத்து சாலைகளுமே பாதுகாப்பானதாக அமையும்.

இன்றைய உலகில், ஒரு தேசத்தின் ஓட்டுனர்கள் எந்த அளவிற்கு சாலை விதிகளைக் கடைபிடிக்கிறார்கள் என்பதுதான் அத்தேசம் எந்த அளவிற்கு நாகரீக வளர்ச்சி அடைந்துள்ளது என்பதனை அளவிடும் அளவுகோலாக இருக்கிறது. இதில் அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் வளைகுடா நாடுகளில் வாகன ஓட்டிகள் மிகுந்த சாலை ஒழுக்கமுடையவர்களாக இருக்கிறார்கள். லண்டன் மாநகர பேருந்து ஓட்டுனர்கள் அனைவருக்கும் முன்னுதாரணமாகவே செயல்படுகின்றனர். மும்பை சிவப்பு பேருந்து ஓட்டுனர்களையோ அல்லது பல்லவன் பேருந்து ஓட்டுனர்களையோ ஏன் இவர்களிடம் பயிற்சி பெற அனுப்பக் கூடாது. அவர்களைப் பார்த்து இவர்களும் ஏன் கற்றுக் கொள்ளக் கூடாது??

இன்னொரு காலைப் பொழுதில், L போர்டு அணிந்த ஒரு டிரைவிங் ஸ்கூல் வாகனம் சிவப்பு விளக்கை மீறிச் சென்றது. அந்த வாகனத்தின் பின்னாலிருந்த டிரைவிங் ஸ்கூல் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு இது பற்றிப் புகார் செய்தேன். தொடர்புடைய ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்கள். எடுத்தார்களா இல்லையா என்பது பற்றித் தகவல் இல்லை. ஆனால் இது மாதிரியான புகார்கள் மூலம் அவர்களை சிறிதே ஒழுங்குபடுத்தலாம்.

இது போன்ற டிரைவிங் ஸ்கூல் நடத்துபவர்களும் தங்களது பயிற்றுவிப்பாளார்களையும், பயில்வோரையும் ஒழுங்குமுறைப் படுத்துவதற்கு இது நல்ல தருணம். வளைகுடா நாடுகளில் நீங்கள் அனைத்து விதிமுறைகளையும் கற்று, தேர்வை பாஸ் செய்யும் வரை உங்களுக்கு உரிமம் வழங்கமாட்டார்கள். ஆனால் இங்கோ நிலையே வேறு!! பாட்ச் பாட்சாக ஓட்டுனர் உரிமத் தேர்வுக்கு அனுப்பி பணம் சேர்ப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். தங்களிடம் பயில்வோர் சாலை விதிகளை எவ்வாறு கடைபிடிக்கிறார்கள், எவ்வாறு வாகனத்தை சட்டத்திற்குட்பட்டு ஓட்டுகிறார்கள் என்பதைப் பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை.

இது போன்ற சீர்கேடுகள் மாறாத வரை, மொஹமது அன்வர் மெஹ்தி ஹுசைன் போன்ற சமுதாயக் களைகள் அதிகரித்துக் கொண்டுதான் இருப்பர். செப்டம்பர் 12' ஆம் தேதிம் கொலாபா அருகே சிவப்பு விளக்கெரியும் ஒரு சிக்னலை மதிக்காது மிக வேகமாக தனது இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த ஹுசேன், பாதசாரிகள் கடந்து செல்லும் "Zebra Crossing" -ஐக் கடக்கும்போது, அர்மின் வந்த்ரேவாலா எனும் பாதசாரியை மயிரிழையில் தவிர்த்திருக்கிறார். எழுத்தாளரும், மும்பை உயர்நீதி மன்ற வழக்கறிஞருமான அர்மின் வந்த்ரேவாலா, ஹுசேனிடம் வாகனத்தைப் பாதுகாப்பாகச் செலுத்தும்படியும், "Zebra Crossing"-ற்கு முன்னதாகவே வாகனத்தை நிறுத்த வேண்டுமெனவும் அறிவுறுத்தியிருக்கிறார். இதனால் எரிச்சலுற்ற ஹுசேன், வாகனத்திலிருந்து இறங்கி வந்த்ரேவாலாவை முகத்தில் அறைந்ததோடு மட்டுமல்லாமல், அவரை ஒரு பெண்ணென்றும் பாராமல் பொதுமக்கள் முன்னிலையில் தனது தோல் செறுப்பால் பலமாக முகத்திலேயே அறைந்திருக்கிறார். இதைப் பார்த்த சக பாதசாரிகள் ஹுசேனைக் காவல்துறையிடம் ஒப்புவித்தனர்.

ஆனால் போலிசாரிடம் போலி முகவரி கொடுத்துவிட்டு சுதந்திரப் பறவையாக ஹுசேன் வெளியேறிவிட்டான். அப்படியே காவல்துறையிடம் போலி முகவரி கொடுத்தாலும், அவனுடைய உரிமத்தில் உண்மை முகவரி இருந்திருக்குமே?? ஏன் காவல்துறையினர் அவனை விட்டனர் என்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டாலும், காவல் துறையிடமிருந்து இவற்றிற்கெல்லாம் பதிலில்லை.

அவனை சிறையிலடைத்திருக்க வேண்டும், என்று கூறும் வந்த்ரேவாலாவின் முகம் பலநாள் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு சீர்படுத்தப்பட்டிருக்கிறது. சக வழக்கறிஞர்களின் அழுத்தத்தால், காவல்துறை ஒருவழியாக அந்த வாகன உரிமையாளரின் முகவரியைக் கண்டுபிடித்தது. ஆனால் உரிமையாளரோ அந்த குறிப்பிட்ட தேதியில் எனது வாகனத்தை யார் ஓட்டியது என்று தெரியவில்லை என்று ஒரேடியாக மறுக்கிறார். இதைவிட கசப்பான உண்மை அந்த ஹுசேன் பிடிபடவில்லை.

நமது வாகன ஓட்டிகளையும், குறிப்பாக காவல்துறையினறையும் சீர்ப்படுத்த வேண்டிய மிக முக்கியமான தருணம் இது. அவசியமும் கூட!!

( நன்றி: ரீடர்ஸ் டைஜஸ்ட், தமிழில் யதிராஜ் )

ஆகவே மக்களே - அதிமுகவை பார்த்தால் ஓடுங்கள்; திமுகவை பார்த்தால் வேகத்தை கம்மி செய்யுங்கள்; கம்யூனிஸ்டை பார்த்தால் நின்றுவிடுங்கள்.

27 Comments:

Anonymous said...

Very good message. Thanks to the author. I need it's English translation, so that I post it in non-tamil sites.

I do see p'ple cross after Orange/Amber/Yellow light here on NH5 which goes through Vizag city for about 10-15 km. I can see if i can post it (english version) through some NGO in vizat or Traffic control or Municipal office.., so that People get awareness on what they shoud do & not.

btw Though I laughted at highlighter(manjal) comment, I couldn't understand.. can u plz explain ?

Thanks to Author & IV

ரிஷபன்Meena said...

இட்லி வடையின் மஞ்சள் கமெண்டை பார்த்ததும் வாய்விட்டு சிரியுங்கள் என்றும் சேர்த்திருக்கலாம்.

மஞ்சள் கமென்ட் - மிக அருமை .

ராஜசுப்ரமணியன் said...

சென்னையிலும், மற்றும் பல இந்திய மாநகரங்களிலும், கௌண்ட்-டவுன் நேரம்காட்டி பொறுத்தப்பட்டுள்ள எல்லா சிக்னல்களிலும், பச்சையிலிருந்து சிவப்பிற்கு மாறும்போதும், சிவப்பிலிருந்து பச்சைக்கு மாறும்போதும், 5...4...3 என வரும்போதே வாகன ஓட்டிகள் F1ரேஸ் டிரைவர்கள் மாதிரி ஆக்சிலேட்டரை அழுத்தி சாலையைக் கடக்கிறார்கள்.

சைவகொத்துப்பரோட்டா said...

டிராபிக் சிக்னலில் கண்காணிப்பு காமிரா பொருத்தலாம், விதி முறை மீறுபவர்களுக்கு சம்மன் அனுப்ப வசதியாக இருக்கும். அதேபோல் "அன்பளிப்பு" வாங்குவதையும் தடுக்க இயலும். "ஆமா, ஹெல்மெட் கண்டிப்பாக அணிய வேண்டும்" சட்டம் இப்ப இருக்கா, இல்லையா. யாரவது சொல்லுங்கப்பா.

யதிராஜ சம்பத் குமார் said...

அனானி::


ரீடர்ஸ் டைஜஸ்டின் நவம்பர் 09 இதழில் இதன் மூலக் கட்டுரை கிடைக்கும்.


இட்லி::

மஞ்சள் பஞ்ச் அருமை!!

SATHEESH said...

நானும் இரு சக்கர வாகனத்தை வேகமாக செலுத்தும் ஒரு சராசரி சென்னை இளைஞன் தான்.வேகமாக செல்வது தவறு என்று தினமும் நான் எனது வண்டியை ஸ்டார்ட் செய்யும் போது எனக்குள் சொல்வதுண்டு . சில சமயம் கொஞ்சம் வேகத்தை குறைத்து போவதும் உண்டு . ஆனால் இந்த ஆட்டோ காரர்களும் MTC பஸ்சும் என்னை வதம் செய்வது போல துரத்தும் போது , இவர்கள் பக்கத்தில் இருந்தால் ஆபத்து என எனது கை தானாக வேகத்தை கூட்டி விடுகிறது . ஆனால் சிக்னலை மதிக்காமல் நான் என்றும் சென்றதில்லை.

Vaandu said...

Thanks to the author for the escellent report. But the problem is, we common man dont remember all this once we are on road. All our vows regarding traffic signal is pushed back once we see the yellow signal. I think appropriate punishments alone would help out in sorting traffic issues.
BTW - Yellow comment is superb.
தனியா ரூம் போட்டு யோசிப்பீங்களோ.. :-)

Anonymous said...

Yellow comment is superb.!
-vibin

யதிராஜ சம்பத் குமார் said...

சைவகொத்துபரோட்டா::


சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையிலுள்ள அனு ஈகா தியேட்டர் அருகேயுள்ள சிக்னலில் (சூளைமேடு செல்லும் வழி) நீங்கள் குறிப்பிட்ட கண்காணிப்பு கேமரா சோதனை முயற்சியாக பொருத்தப்பட்டு, சிக்னலை மீறுவோருக்கு அபராதமாக ரூபாய் 50 கட்டுமாறு சம்மனும் வீட்டிற்கு நேரடியாகவே தபால் மூலம் அனுப்பப்பட்டது. ஆனால் அந்த சோதனை முயற்சி அற்ப ஆயுளிலேயே மாண்டுவிட்டது. காரணம் தெரியவில்லை.

ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டு பின்பு வாபஸ் பெறப்பட்டது. இப்பொழுது கட்டாயம் இல்லை என்ற போதிலும், உங்கள் விதி மற்றும் விரயகாலத்தைப் பொறுத்து, நீங்கள் ஹெல்மெட் அணியவில்லையென்றால் மாதக் கடைசியில் பிடிபடலாம். அதிலும் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருப்பின் குறைந்தபட்சம் 150 ரூபாய் தண்டம் அழுதாலே போதும். இல்லையென்றால் போக்குவரத்துக் காவலரின் குடும்ப சுமையைப் பொறுத்து ரூபாய் 500 வரை செல்லும்.

VEDANARAYANAN said...

WHATEVER IS MENTIONED IN THE ARTICLE HAPPENS IN EVERYONES LIFE , NOT JUST IN AUTHORS LIFE . tHERE ARE THREE REMEDIES .
1. TOUGH wrITTEN TEST FOR LL LIKE usa
2. CORRUPTION FREE ISSUE OF LICENSE .
3. CORRUPTION SHOULD BE ERADICATED IN AVOIDING FINE .

சீனு said...

மஞ்சள் கமென்ட் - மிக அருமை

ஸ்ரீராம். said...

"ஆனால் இது குறித்து எதுவும் செய்ய இயலாத அதிகாரிகளைக் கொண்ட அரசு இயந்திரத்தை நாம் பெற்றிருக்கிறோம்"//

அட்சர லட்சம் பெறும்.

மஞ்சள் கமெண்ட் சிரிப்பை வரவழைத்தது.

கௌதமன் said...
This comment has been removed by the author.
Guru said...

Nalla vilippunarvai erpadathum pathivu. yathirajukku paaraattukkal.

aanal,

ஆகவே மக்களே - அதிமுகவை பார்த்தால் ஓடுங்கள்; திமுகவை பார்த்தால் வேகத்தை கம்மி செய்யுங்கள்; கம்யூனிஸ்டை பார்த்தால் நின்றுவிடுங்கள்.

ahaa ithu enna idai therthalukku maraimuka pracharamaa?

மர தமிழன் said...

இரு சக்கர வாகனங்களுக்கு ஹெல்மட் கட்டாயமாக்கப்பட்டது போல காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவதும் செல்பேசியில் பேசுவதும் தவறு என்றும் சட்டம் சொல்லியது ஆனால் எங்குமே காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணியாதவர்களுக்கு நம் போக்குவரத்து காவலர்கள் கப்பம் வசூலித்ததை காணோம்.. இரு சக்கர வாகனத்தில் கௌன்சிலர் பையன் கூட வரமாட்டான் என்று நிம்மதியாய் அவர்கள் அப்புராநிகலான இரு சக்கர ஓட்டிகளை கர்ம ஸ்ரத்தையாய் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

நான் வண்டி ஓட்டும்போது சிக்னல் விழுவது போலிருந்தால் கையை நீட்டி என்பங்குக்கு நானும் ஒரு சிக்னலை பின்னால் வரும் வாகன ஒட்டிக்கு தெரியபடுத்தி வண்டியையும் ஓரம் கட்டி விடுவேன் அப்படியும் மோதிவிட்டு சாரி கூட கேட்காத நபர்கள் அதிகம்.

போக்குவரத்து விதிமுறைகளோடு அதன் காவலர்களும் மாற வேண்டிய காலம் இது.

கனவு காணும் கோலப்பன் said...

மஞ்சள் கமெண்ட் பிரமாதம். சூப்பர்.

போக்குவரத்து துறையை தனியார் மயமாக்கினால் !!!!!!!!!!!

இதை எளிதாய் சாதித்து விடலாம்.

1. ஒவ்வொரு வருடமும் வாகனங்கள் புதுப்பிக்க பட வேண்டும்.
2. வண்டி நல்ல கண்டிஷன் இருந்தாலே பாஸ் ஆகும்.
3. கண்காணிப்பு காமெரா வழி அபராதம். ஐந்து முறைக்கு மேல் தவறு இழைத்தால் லைசன்ஸ் பறிமுதல்.
4. அடுத்த வருடம் ரீனிவல் செல்லும் போது அபராதம் எல்லாம் கட்டித் தீர்த்தாலே நீட்டிப்பு கிடைக்கும்.

இட்லி : நீங்க சொன்ன ஒடுறது, கம்மிங்கிறது, நிக்கிறது இதெல்லாம் இதுதானோ....

நட்டகுழியார் said...

இந்த மாதிரி கட்டுரைகள்தான் awareness உருவாக்க வேண்டும். இதற்கெல்லாம் மேலாக உயிரின் மீது இந்தியர்களுக்கு மதிப்பு வரவேண்டும். ஒரு உயிர் அனாவசியமாக இறந்தால்/கொல்லப்பட்டால் மேற்கத்திய நாடுகள் அதற்குரிய காரண காரியங்களை அறிய முற்பட்டு விடைதேட முயற்ச்சிக்கிறார்கள் ஆனால் நாம் அது “விதி” என்று சாதாரணமாக சொல்லிவிட்டு வேறு விஷயங்களுக்குத் தாவிவிடுகிறோம்.

//
இன்றைய உலகில், ஒரு தேசத்தின் ஓட்டுனர்கள் எந்த அளவிற்கு சாலை விதிகளைக் கடைபிடிக்கிறார்கள் என்பதுதான் அத்தேசம் எந்த அளவிற்கு நாகரீக வளர்ச்சி அடைந்துள்ளது என்பதனை அளவிடும் அளவுகோலாக இருக்கிறது
//
இந்தக் கருத்துடன் உடன்பாடு இல்லை. இங்கேயும் (அமெரிக்காவில்) குடித்துவிட்டு ஓட்டுபவர்களும், சாலை விதிகளை மதிக்காமல் இருப்பவர்களும் இருக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் மதிப்பதற்குக் காரணம், ”தண்டனை”. அது இங்கே அதிகம், லஞ்சம் கொடுத்துத் தப்பிக்க முடியாது. சவுதியில் சாலை விதிகளை மதிபபதற்குக் காரணம் உயிர்/கை/கால் பயம், நாகரீகமல்ல.

-மு.க

Anonymous said...

The info regarding Mideast driving licence is true as far as getting the licence is concerned.But you need to see for yourself the kind stupid and dangerous driving habits of the residents here. This behaviour is common for every nationality, male or female.

Ramji said...

ரீடர்ஸ் டைஜஸ்ட்டில் வந்த இக்கட்டுரையை நானும் படித்தேன். மிகவும் முக்கியமான மற்றும் அவசியமான கட்டுரை. தமிழில் மொழிப்பெயர்த்தமைக்கு பாராட்டுக்கள்.

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு சாலை விதிகளைப் பற்றி தெரியாமலிருப்பதற்கு முக்கிய காரணம் அவ்விதிகள் கற்பிக்கப்படுவதில்லை. முக்கியமாக பள்ளிகளில் இப்பாடம் கட்டாயமாக்கப்படவேண்டும். நான் கோவையில் வசித்தப்போது பள்ளிக்குழந்தைகளுக்கு சாலை விதிகளைக் கற்பிக்கும் விதத்தில் ஒரு சிறிய பூங்கா இருந்தது. இப்போதும் இருக்கிறதா என்று தெரியவில்லை.

சாலை விதிகளைப் பற்றி பள்ளிப்பாடம் வைத்து அது தேர்வுக்கான கட்டாயப்பாடமாக இருக்க வேண்டும். இதன் மூலம் ஓரளவிற்கு கற்பிக்கலாம். மேலும் சிறுவர்கள் தங்கள் பெற்றோர்களிடமிருந்தே நிறைய கற்றுக்கொள்வதால் பெற்றோரும் மிகுந்த கவனத்துடன் நடந்துக்கொள்ள வேண்டும். மேலும் விதிகளும் தண்டனைகளும் கடுமையாக்கப்படவேண்டும்.

ஹூம்... நம் நாட்டில் இதெல்லாம் இந்த ஜென்மத்தில் நடக்குமென்று தோன்றவில்லை.

ராம்ஜி

Santhappanசாந்தப்பன் said...

சில சமயங்களில், "திக" மட்டும் இருக்கிறதே, அப்போது என்ன செய்ய வேண்டும் என்று சொல்லாமல் விட்டு விட்டீர்களே? :‍‍)

ஆங்கிலத்தில் இந்த கட்டுரையை படித்ததைக் காட்டிலும், தமிழில் அருமையாக உள்ளது. அழகான மொழிபெயர்ப்பு!

Unknown said...

மஞ்சள் மகிமை!!!!!

Baski, Chennai said...

Wonderful write-up.

We can take good things from developed countries in this regard.

1. Fines/charges SHOULD NOT be collected by police. They can issue only charges. It should be paid in Banks or in some office buildings.

2. Public transportation (Bus/Auto) and Lorry should follow the rules STRICTLY. When they fail they have to face severe charges.

3. Need to re-invent these licensing authorities and RTO, as they are totally controlled by driving schools now. Which simply tries to formalize the bribery. Everyone should appear in Learners Permit Test. Despite he is from Driving school or direct applicant.
Also all the corrupt offices need to be video monitored.

4. We need better mass transportation systems. Govt should plan for more trains/shuttles as in congested countries like japan/Singapore.

5. People who got involved in bloody accidents due to reckless driving should be denied license for 3+ years or lifetime.

But, we "The Adjusting Public" will never bother till we catch fire in our back. Which will be too late.

SUBBU said...

:)))))))))
அட கொடும மஞ்சள் கமெண்ட் :))

விவேகானந்தன் said...

Yellow lines are very super. first i cant understand, then only i recognize the green, yellow and red..! Its nice thinking..!

sreeja said...

பொதுவாக பல இடங்களில், மாதத்தில் பாதி நாட்கள் திரவிடர் கழகமே ஆட்சியிலிருக்கிறது.

மேலும், ஒரு முனையில் ஒழுங்கு படுத்த ஆளில்லாமல் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்க மறு புறத்தில் போக்குவரத்து காவலர்கள் இருசக்கர வாகனங்களில் வருவோரை பிடித்து பணம் வாங்கிக்கொண்டிருப்பது வருத்தமளிக்க கூடிய காட்சியாக இருக்கிறது.

பூனைக்கு யார் மணி கட்டுவது?

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

ரிஷபன்Meena said...

// Anonymous said...

The info regarding Mideast driving licence is true as far as getting the licence is concerned.But you need to see for yourself the kind stupid and dangerous driving habits of the residents here. This behaviour is common for every nationality, male or female.//

எந்த சமுதாயத்துக்கும் விதிவிலக்கு இருக்கத்தான் செய்யும். மொத்தமாக ரூல்ஸ் -ஐ மதிக்காமல் இருப்பது வேறு. தனிப்பட்டவர்கள் விதிகளை மீறுவது வேறு. என்னுடைய அனுபவத்தில் துபாய் டிரைவிங் ஒரு சுகானுபவமே.

blogpaandi said...

இன்றைய செய்தி - பெங்களூருவில் சாலை விபத்து ஏற்படுத்திய BMTC டிரைவர்

Impatient bus driver mows down motorist
1 Killed, 3 Injured When BMTC Bus Hit Their Vehicles While Trying To Jump Red Signal

http://epaper.timesofindia.com/Default/Scripting/ArticleWin.asp?From=Archive&Source=Page&Skin=TOINEW&BaseHref=TOIBG/2009/12/08&PageLabel=3&EntityId=Ar00300&ViewMode=HTML&GZ=T