பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, December 06, 2009

அடுத்த வருடம் ஓய்வு - கலைஞர்

நேற்றைய தினம் அருந்ததியர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்ட தமிழக முதல்வர் கலைஞர் வெளியிட்ட ஒரு அறிவிப்பு பலருக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியிருக்கலாம். அடுத்த ஆண்டு மத்தியிலிருந்து, தோராயமாக ஜூன் மாத இறுதியிலிருந்து அரசியலிலிருந்து ஓய்வு பெறப் போவதாக கலைஞர் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது, " நான் என்னுடைய பெரும்பாலான இலக்குகளை எட்டிவிட்டேன். புதிய சட்டப்பேரவை கட்டுவது, அண்ணா பெயரில் ஒரு பொது நூலகம் அமைப்பது, உலகத் தமிழ் மாநாடு நடத்துவது போன்ற கனவுகளும் கைகூடி வருகின்ற நிலையில், உலகத் தமிழ் மாநாட்டிற்குப் பிறகு நானும் உங்களில் ஒருவனாக அரசியலிலிருந்து விலகி, அமைச்சர் பதவிகள் ஏதுமில்லாமல் இருப்பேன் என்று கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில், தன்னுடைய அரசியல் வாழ்வின் தொடக்கத்திலிருந்தே ஏழைகளின் நலனுக்காகப் பாடுபட்டு வருவதாகவும், எஞ்சிய வாழ்நாளிலும் ஏழைகளுக்காகப் பாடுபடுவேன் என்று கூறினார். தவிர, சமூகத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்காகப் பாடுபட அமைச்சர் பதவி ஏதும் தேவையில்லை எனவும் கூறினார்.அப்போ அடுத்த வருஷம் ஜூன் முதல் எம்.ஜி.ஆர் ஆட்சி என்று சொல்லுங்க. எம்.ஜி.ஆர் ஆட்சியில் தான் அவருக்கு முன்பு ஓய்வு கிடைத்தது.


21 Comments:

Anonymous said...

மஞ்சள் கமெண்ட் படிச்சுட்டு ஆட்டோ அனுப்பி உங்க கழுத்துல மஞ்ச துண்டு போட்டு இழுத்துண்டு போகமா இருக்க மஞ்சள் வஸ்த்ரம் உடுத்தும் அந்த குருவைப் பிரார்த்திக்கிறேன்.

சைவகொத்துப்பரோட்டா said...

"தவிர, சமூகத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்காகப் பாடுபட அமைச்சர் பதவி ஏதும் தேவையில்லை எனவும் கூறினார்"

ஐ, இப்பதான் இது தெரிஞ்சதாக்கும்
இந்த வார டாப் தமாசு?

Anonymous said...

All the Best to Stalin:
We hope that Stalin will lead DMK with the support of Alagiri after Karunanithi and will lead Tamil Nadu to Prosperity

Anonymous said...

Idlyvadai,

pls check this.

http://charuonline.com/Dec2009/Nandalala.html

Asir said...

Appo

Idly Vadiku Auto Sure from which side !??!!!


ha ha ha

Deepak Kumar Vasudevan said...

I have shared this too:

http://thamizhththendral.blog.co.in/2009/12/06/%e0%ae%93%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%89%e0%ae%a4%e0%ae%af-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d/

Anonymous said...

"தவிர, சமூகத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்காகப் பாடுபட அமைச்சர் பதவி ஏதும் தேவையில்லை எனவும் கூறினார்"

சைவகொத்துப்பரோட்டா
ஐ, இப்பதான் இது தெரிஞ்சதாக்கும்
இந்த வார டாப் தமாசு?

-----
அது அப்படி இல்லை நண்பரே!
சமூகத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்காக
அமைச்சர் பதவி (திறமையற்றவராக இருந்தாலும்) வாங்கித் தருவது, அதை தக்கவைத்துக்கொள்ள தள்ளாத வயதிலும் (டில்லி வரை கூட சென்று) பாடுபடுவது,
இதற்கெல்லாம் முதலமைச்சர் பதவி தேவையில்லை. முதலில் ஒரு சில எம்.பி க்கள்(லின் ஆதரவு) இருந்தால் போதும்..

ஆட்டாவெல்லாம் வேண்டாம் said...

" நான் என்னுடைய பெரும்பாலான இலக்குகளை எட்டிவிட்டேன்” - கலைஞர் அவர்களே! தங்களது இலக்குகள் என்ன என்று கொஞ்சம் சொல்ல முடியுமா? இல்லை, இதுவும் வெளியே சொல்ல முடியாத மேட்டரா?

ஆனா ஒரு இலக்கு உலகப் பணக்காரர்களில் முதல் 10ல் இருப்பது - அது என்னமோ நடந்து விட்டது.

சக பின்னூட்டக்காரர்களுக்கு - கலைஞரின் top 3 இலக்கு என்ன என்று யூகியுங்கள் பார்க்கலாம்!!

கௌதமன் said...

திருச்செந்தூர், வந்தவாசி - இடைத்தேர்தலுக்குப் பிறகு - இந்த நிலைப்பாட்டில் மாற்றம் வருமோ?

vedanarayanan said...

கருணாநிதி இன் இலக்குகள் :

1. Social justice
2. reservation 60 %
3. self respect
Though all are related i guess.

Side effects are
corruption , family upliftment , irresponsible administration ,
degradation of burecrats self esteem, migration of brahmins out of state.

What an expensive price .

மர தமிழன் said...

தன்னுடைய அரசியல் வாழ்வின் தொடக்கத்திலிருந்தே ஏழைகளின் நலனுக்காகப் பாடுபட்டு வருவதாகவும், எஞ்சிய வாழ்நாளிலும் ஏழைகளுக்காகப் பாடுபடுவேன் என்று கூறினார்.

அப்ப ஏழைகள் இருந்தார்கள்..
இன்றும் இருக்கிறார்கள்..
இன்னும் இருப்பார்கள்...

சேவை என்றும் தொடரும்... எல்லா நாமமும் வாழ்க..!!!!!!!!!!

வலைஞன் said...

தலைவர் அறிவித்தார் விருப்ப ஒய்வு
விக்கி விக்கி அழுதனர் அமைச்சர்கள்
அதைக்கண்டு விலக்கி கொண்டார் அறிவிப்பை!
அழாத அமைச்சர்கள் பட்டியல் இடப்பட்டு,
அளிக்கப்பட்டது அவர்களுக்கு
விருப்பமில்லா விருப்ப ஒய்வு!

வீரராகவன் said...

சமீப காலமாக தேர்தல் வரும் போதெல்லாம், திருவாரூர்.மு.கருணா நிதிக்கு தேர்தல் ஜூரத்தால் இதுதான் கடைசி தேர்தல். ஐயேங்... நான் வர மாட்டேன் போ... என்று அழுவதூம், மற்றவர்கள் சமதானப் படுத்துவதும் வெற்றி மிட்டாய் தர நான் + நீ என்று உதடு ஒட்டாமல் வாக்குறுதி கொடுக்க ஓடி வருவதும், புளித்து போய் விட்டது.
இந்த இலக்குகள் போதாது. இன்னும் நிறைய இலக்குகள் அடைய வேண்டும் என்று மற்ற்வர்கள் வற்புறுத்த வேண்டும் என உள்ளூற விரும்பும் வரை இந்த நாடகம் தொடரும்.
முக்கிய குறிப்பு: ஸ்டாலினுக்கு இன்னும் ஒரு வருடம் அவகாசம் தரப் பட்டிருக்கிறது.
முக்கிய குறிப்பு 2: நான் தமிழ் மாநாடுதான் இலக்கு என்று சொன்னேன். செந்தமிழ் மாநாடு என்று சொல்லவில்லை என்று வழக்கம்போல் பல்டியடிக்காமல் இருக்கவேண்டும். மஞ்சள் மாதாவே!

வீரராகவன் said...

நேற்று நான் திருக்குவளை.மு.கருணாநிதி என்றுதான் எழுத நினைத்தேன். ஆனால் திருவாரூர் தேர் ஓட்டுர்வதுதான் தனது முக்கிய இலக்காக ஒருவர் கூறியது நினைவுக்கு வந்தது. அன்றும் சரி, இன்றும் சரி, கழக அரசியலில் எந்த மாற்றமும் இல்லை. இந்த தடவை என்னமோ இவங்க ஆட்சிதான் வரும். அடுத்த தடவை ஜெ இதே போல தினமும் கத்தறது.. சே.. அறிக்கை அரசியலும் போராட்டம் என்று கழுத்தறுக்காமல் ஆக்கப் பூர்வமாக ஏதாவது செய்தால் ஒழிய ஆட்சிக்கு வருவது கடினமே.

Muthu said...

எத்தனையோ கேட்டுட்டோம், இதையும் கேட்காமலா போவ போறோம்!!
இதெல்லாம் அப்பப்ப டைம் பாஸுக்கு சொல்றது, இதப்போய் சீரியஸா எடுத்துக்கிட்டு...எண்னாது சின்ன புள்ளதனமா!!

Ravi said...

This is nothing new for MK. I remember during 2001 elections, in one of the prachaaram meetings, he said something similar and it came as one of the headlines on Sun TV "naan pottiyidum kadaisi therdhal - Karunanidhi urkkamaana pechu".

Guru said...

கலைஞரின் கதை,வசனத்தில் பாலி ஸ்ரீரங்கம் இயக்கிவரும் படம் ’பெண்சிங்கம்’. நாயகனாக உதய்கிரணும் நாயகியாக மீராஜாஸ்மினும் நடித்துள்ளனர்.

இப்படத்தில் தேவா இசையில் கலைஞர் எழுதிய பாடலொன்று கம்போஸ் செய்யப்பட்டுள்ளது.

அப்பாடல் வரிகள் வருமாறு:-

பல்லவி
சூர்யா:- ஆகா! வீணையில் எழுவது வேணுகானமா?
திருவாடுதுறையில் தோடி ராகமா?
திருவெண்காட்டு மகுடி நாதமா?
இசைவதாலே இணையும் ஈருயிர்கள்,
இணைந்த பின்பு இரண்டும் ஓருயிர் தானே?

மேகலா:- இசைவதாலே இணையும் ஈருயிர்கள்,
இணைந்தபின்பு இரண்டும் ஓருயிர் தானே?

முதல் சரணம்
சூர்யா:- காலை அரும்பி!
மாலை மலரும்!
காதல் நோயால் நானும் உருகினேன்!

மேகலா:- காலை அரும்பி!
மாலை மலரும்!
காதல் நோயால் நானும் உருகினேன்!

சூர்யா:- கோகில வாணி நீயே,
கொடுமுடி கோகிலம் தானே?
கொள்ளை கொண்டாய் நெஞ்சத்தினை
கொடுத்து விடு எடுத்தபடியே!

மேகலா:- தேனும் பாலும் கலந்த பின்னே தனியே சுவையை பிரிக்கலாகுமா?

சூர்யா:- இனிக்கும் தேனாய் நீயும்
துடிக்கும் ஆண் பாலாய் நானும்
திருமணம் ஆன பின்னால்
தேனும் பாலும் ஆகலாம்!

மேகலா:-ஆயிரம் இரவுகள் உண்டு எப்போதும்!
பாயிரம் பாடினால் போதும் இப்போது!

இருவரும்:- செம்புலப்பெய் நீர் போல அன்புடை நெஞ்சால் நாம் கலந்தோமே!
ஆகா! வீணையில் எழுவது வேணு கானமா?
திருவாடுதுறையின் தோடி ராகமா?
திருவெண்காட்டு மகுடி நாதமா?
இசைவதாலே இணையும் ஈருயிர்கள்,
இணைந்த பின்பு இரண்டும் ஒருயிர் தானே?
---

இட்லிவடை விமர்சனம் தேவை

Baski said...

இனி தீபாவளி திருநாள் ஜூன் மாதம் முதல் திங்களன்று மக்களால் (தமிழர்களால்) கொண்டாடப்படும்.

Unknown said...

IV,

Thats going to be a good day for TN but I am not sure about that day there is always a slip between the cup and lip which he normally does.. who knows the jackal well..

Baski do get excited and start celebrateing diwali by 1st week of june ... its too early.

Kamesh

கருமம் said...

@ Guru
வயசான காலத்துல இதெல்லாம் தேவையா இந்த ஆளுக்கு? ஏன் இவ்வளவு அசிங்கமா எழுதறார்? அவரோட மனைவி, மகன், மருமகள், பேரன், பேத்தி, கொள்ளுப் பேரன்கள் இதைப் படிப்பார்கள் என்ற எண்ணமே இல்லையா?

Anonymous said...

innum andha kaala style -lil ezhudhurar.
After the "oyvu", we are worried he may write more poems.
Kadavule kappathu!