பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, December 04, 2009

கூகிள் கிராமம்

கூகிளில், நீங்கள் கூகிளைக் கொண்டு தேட முடியாது. என்ன குழப்பமாக இருக்கிறதா?? கூகிள் என்பது நம்மைப் பொருத்தவரை இணையத்திலுள்ள ஒரு தேடு தளம். ஆனால் கூகிள் என்ற பெயரில் கர்நாடகாவில் ஒரு கிராமம் இருக்கிறது. அங்கு இணைய வசதி ஏதும் கிடையாது. பெங்களூரிலிருந்து வட கிழக்கில் சுமார் 510 கி.மீ தொலைவில் இக்கிராமம் அமைந்துள்ளது.



கர்நாடக மாநிலம், ரெய்ச்சூர் மாவட்டத்தில், கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ள சிறிய கிராமம்தான் இந்த கூகிள். இக்கிராமத்தில் வெறும் ஆயிரம் குடியிருப்புகளே இருக்கின்றன. இந்த கிராமத்தின் பெயரை ஆங்கிலத்தில் எப்படி எழுதுவது என்பது உங்கள் விருப்பம். அரசாங்கமும் அவ்வாறு விருப்பப்பட்டு ஆங்கில பெயர் பலகைகளை அவ்வூரில் நிறுவ முனைந்தது. ஆனால் அங்குள்ள சில கன்னட இன, மொழிமானக் காவலர்கள் ஆங்கிலப் பெயர் பலகை எதுவும் கூடாது என்று தடுத்து விட்டனர். தவிர அங்குள்ள எல்லா அரசு சார்ந்த அலுவலகங்களிலும் கன்னட பெயர் பலகைகளே உள்ளன. ஆங்கிலத்திற்கும் அக்கிராமத்திற்கும், கலிபோர்னியாவுக்கும் ரெய்ச்சூருக்கும் உள்ள தூரம். ஊரின் பெயரை ஆங்கிலத்தில் எழுத முயன்ற போது அங்குள்ள கன்னட அமைப்பினர், " என்ன இந்த ஊருக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலிருந்து" யாராவது பெயர் பலகையைப் படிக்கப்போகிறார்களா?? என்று கேட்டு தடுத்து விட்டனராம்.

அதனால் இணைய உலகில் பிரபலமாக அறியப்பட்ட பெயரை இவர்கள் அறியாமலிருப்பதில் அதிசயம் ஏதும் இல்லை. அங்குள்ள பசவராஜாப்பா எனும் ஜமீன்தார் கூறும் போது, " நமது ஊரின் பெயரை இரண்டு இளைஞர்கள் அவர்கள் நடத்தும் ஒரு இணைய நிறுவனத்திற்கு வைத்திருக்கிறார்கள் என்று கேட்டதும் மிகவும் பெருமையடைந்தேன். எங்களது ஊரின் பெயர் ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு வைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று சொல்லி புளகாங்கிதம் அடைகிறார். ஆனால் அமெரிக்கர்கள் தங்கள் இணைய தேடுதளத்திற்கு கூகிள் என்று பெயர் சூட்டியதற்கும், இந்த கிராமத்தின் பெயருக்கும் ஸ்நானப்ராப்தி கூட கிடையாது. அவர்கள் வேறு காரணம் வைத்திருக்கிறார்கள்.

இக்கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்டு, பெல்லாரியில் வேளாண் விஞ்ஞானியாகப் பணியாற்றும் திரு. ஷரண கெளடா, தங்கள் கிராமத்தின் பெயர்க்காரணத்தைக் கூறும் போது, அது நம்மை 12-ஆம் நூற்றாண்டிற்கு இட்டுச் செல்கிறது.

12-ஆம் நூற்றாண்டின் தெய்வப் புலவரான அல்லமா பிரபு கர்நாடகாவின் பசவ கல்யாண் எனும் இடத்திலிருந்து, ஆந்திராவின் ஸ்ரீஸைலத்திற்கு செல்லும் வழியில், இக்கிராமத்திற்கு வந்திருக்கிறார். அவர் இக்கிராமத்தில் தங்கியிருந்த குகைக்கு "கவி கல்லு" (Gavi Gallu) என்ற பெயராம். அது காலப்போக்கில் மருவி கூகல்லு என்றாகி தற்போது கூகிள் என்று நிலைபெற்றிருப்பதாக கெளடா கூறுகிறார்.

இதன் அர்த்தம் "கூகுவ கல்லு" (ஆற்று நீர் கல்லின் மீது மோதும்போது எழுப்பப்படும் இனிய ஒலி) என்று கூறுகின்றனர்.

ஆனால் அவ்வொலி ஆற்று நீரால் ஏற்படுத்தப்படுவது அல்ல. கிராமத்தினர் தொலைவிலுள்ள மக்களுடன் தொடர்பு கொள்ளும் பொருட்டு ஏற்படுத்தப்படும் ஒலி என்று இந்திய வரலாற்று ஆராய்ச்சி இயக்குனரகத்தின் துணை இயக்குனர் திரு. S.K.Aruni கூறுகிறார்.

ஆதி காலத்தில், கிராமத்தினர், கிராமத்தை விட்டு தொலை தூரத்தில் உள்ள மக்களுடன் தொடர்பு கொள்ளவும், அவர்களின் கவனத்தை ஈர்க்கவும், பாறைகள் மீது சிறு சிறு கற்களை எறிந்து அதனால் ஏற்படும் சத்தங்களின் மூலம் தொடர்பு கொள்வர். அவ்வாறு செய்ததால் பாறைகளின் மீது குழி வடிவிலான அடையாளங்கள் தோன்றின. வரலாற்று முந்திய காலத்துப் பாறைகள் சிலவற்றில் அவ்வாறு குழி வடிவிலான அடையாளங்கள் இருந்தன. அப்பாறைகள் பெரும்பாலும் கிருஷ்ணா நதி தீரத்தில் அமைந்துள்ள வட்கல், ஹுனஸகி, ஹெப்பல் புர்ஜ் மற்றும் குல்பர்காவில் உள்ள சில கிராமங்களிலும் தென்படுகின்றன. எனவே அம்மாதிரியான பாறைகள் இருக்கக் கூடிய கிராமங்கள் "கூகுவ கல்லு" என்று அழைக்கப்படலாம் என்று கூறுகிறார்.

( source: TOI, தமிழில் யதிராஜ் )

11 Comments:

Bavan said...

தலைப்பை படித்துவிட்டு Google பற்றிய பதிவு என்று நினைத்தேன்..

ஆனால் உள்ளே இப்படி ஒரு வியப்பூட்டும் தகவல்...

பகிர்வுக்கு நன்றி..:)

sathishsangkavi.blogspot.com said...

கூகுள் எங்க ஊர் பேரு.......

யாரைக்கேட்டு நீ உன் இணையத்திற்கு இந்த பெயர் வெச்சினு கேஸ்
போடாம இருந்தா சரி................

நல்ல தகவல்.......... பகிர்ந்தமைக்கு நன்றி........

Pradeep said...

vetti post

சைவகொத்துப்பரோட்டா said...

"அங்குள்ள பசவராஜாப்பா எனும் ஜமீன்தார் கூறும் போது, " நமது ஊரின் பெயரை இரண்டு இளைஞர்கள் அவர்கள் நடத்தும் ஒரு இணைய நிறுவனத்திற்கு வைத்திருக்கிறார்கள் என்று கேட்டதும் மிகவும் பெருமையடைந்தேன்."

நல்ல காமெடி, அய்யோ, அய்யோ....( வடிவேலு ஸ்டைல்)

அய்யா பசவராஜப்பா இதற்காகவது நீங்களும், உங்க மக்களும் வேற்று மொழிகளை படிக்கவும்.

கௌதமன் said...

அப்படியே - யாஹூ என்ற பெயரில் ஏதாவது கிராமங்கள் உள்ளனவா என்று தேடி ஒரு பதிவு இட்டீர்களானால் நன்றாக இருக்கும்!

Anonymous said...

Tamilnadu too has such world famous names!

Stalin
Napolean

Karnataka Google village maathiriye, ivangalukkum antha name ku uriya pugazh(fame) theriyathu! :-)

btw IV, Vettaikaran Vs Sun patri neengal aen entha pathivum poduvathillai?

Loganathan - Web developer said...

I thought it is more related with actual Google .. but it is simple matter

SATHEESH said...

இ வ. இப்போ ஏன் சினிமா விமர்சனம் போடுறதில்ல ? கமல் ரஜினி மாதிரி பெரிய நடிகர் இல்ல பெரிய பட்ஜெட்டுனா தான் போடுவீங்களா ?

Baski said...

Sema Blade....

Madhavan Srinivasagopalan said...

kggouthaman said...

அப்படியே - யாஹூ என்ற பெயரில் ஏதாவது கிராமங்கள் உள்ளனவா என்று தேடி ஒரு பதிவு இட்டீர்களானால் நன்றாக இருக்கும்!

நீங்கள் யாஹூ விரும்பியோ?

-- நட்புடன், Madhavan

to IV
தெரியாத செய்தி, அனால் எந்த அளவிற்கு பயன் தரும், தெரியவில்லை!

vedanarayanan said...

அமெரிக்கர்கள் என்றல் இந்நேரம் ஒரு கேஸ் போட்டு , name ய் மாற்றி இருப்பார்கள். Legally , அந்த villageகு தான் இந்த name சொந்தம், because they had it first . இதை சொல்லுவதற்கும் googleஇன் popularity நோ connection . நேம் ownership எனபது always first come first serve .