1. காங்கிரஸ் கட்சியின் மாநில மற்றும் அகில இந்திய தலைவர்களுடன் நீண்டகாலமாக நெருங்கி பழகி வருபவன் என்பதால், அக்கட்சி எனக்கு பழக்கப்பட்ட கட்சி தான். இன்னும் சொல்லப் போனால், நான் குலதெய்வமாக வணங்கி வரும் எம்.ஜி.ஆர்., இருந்த கட்சி என்பதால், காங்கிரசில் இணைந்துள்ளதை பெருமையாக கருதுகிறேன்.
நீங்க நிஜமாகவே 'நாவுக்கு'அரசர் தான்
2. விலை உயர்வுக்கு காரணம் பற்றாக் குறைதான். சாதாரண மனிதனை பாதிக்கும் இந்த விலை உயர்வு கவலை அளிக்கிறது - பிரணாப் முகர்ஜி
ஏன் உங்களை தேர்ந்தெடுத்தோம் என்று நாங்க தான் இப்ப கவலைப்படுகிறோம்.
3. "ஜெயலலிதாவை மக்கள் என்றோ புறக்கணித்து விட்டார்கள். அப்படி புறக்கணிக்க என்ன காரணம்? கலைஞர் ஆட்சி பற்றி தவறான முறையில் பிரச்சாரம் செய்ததே காரணம்" - கனிமொழி
ஜெ. மீதான லண்டன் ஹோட்டல் வழக்கை தமிழக அரசு திரும்பப் பெற்றதறதும் ஒரு வகை புறக்கணிப்பு தானே ?
4. சுப்ரமணிய சுவாமி, நமீதா இவர்களில் நல்ல தமிழ் பேசுவது யார்? ( அரசு பதில்களில் கேள்வி )
அதுக்கு தானே உலகத் தமிழ் செம்மொழி மாநாடு
5. நடிகர் ரஜினிகாந்த் மகள் தயாரிக்கும் "கோவா' படத்திற்கு விதிக்கப் பட்ட தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
அப்பா, வயத்துல பால்(கோவா) வார்த்தீங்க!.
6. ஓய்வுக்கே ஓய்வு கொடுப்பவர் அவர். அரசியலில் இருந்து அவர் ஓய்வு பெறக்கூடாது என்பதுதான் எங்கள் விருப்பம். - ஸ்டாலின்
இரண்டு வாரம் முன் வந்த செய்தி: முதலமைச்சர் கருணாநிதி மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்று ஓய்வெடுத்தார்.
7. பாவாடை தாவணி அணிந்து நடிக்க எனக்கும் ரொம்ப ரொம்ப ஆசையிருக்கிறது. அப்படி நடிக்க வாய்ப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன் - நமீதா
'Half Saree'யை தான் அப்படி சொல்லியிருக்காங்க. தமிழக மக்கள் கவலை பட வேண்டாம்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, December 08, 2009
நச் பூமராங் 8-12-2009
Posted by IdlyVadai at 12/08/2009 12:25:00 PM
Labels: நச் பூமராங்
Subscribe to:
Post Comments (Atom)
10 Comments:
"சுப்ரமணிய சுவாமி, நமீதா இவர்களில் நல்ல தமிழ் பேசுவது யார்? ( அரசு பதில்களில் கேள்வி )
அதுக்கு தானே உலகத் தமிழ் செம்மொழி மாநாடு"
தமிழ் படித்தால் வேலை உண்டோ இல்லையோ, தமிழ் என்ற மூன்று எழுத்தை வைத்து
இன்னொரு "மூன்று" எழுத்தை சேர்க்கும் வித்தை ஒரு சிலருக்கு கை வந்த கலை.
(நேற்றய எனது கமெண்ட் கேள்விக்கு விளக்கம் கொடுத்ததற்கு நன்றி " திரு.யதிராஜ சம்பத் குமார்")
நல்ல சுத்திட்டு திரும்பி வந்துருக்கு...,
முதலில் பாஜக மதவாதக் கட்சி என்பதால் விலகினேன் என்றார். இப்பொழுது எம்ஜிஆர் இருந்த கட்சி என்பதால் காங்கிரஸில் சேர்ந்தேன் என்கிறார். கலைஞர் தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு வெளியேறியதற்கு கற்பித்த காரணங்கள் போலிருக்கிறது இவரது விளக்கங்கள். இன்னமும் எதிர்பார்க்கிறோம்.
//பாவாடை தாவணி அணிந்து நடிக்க எனக்கும் ரொம்ப ரொம்ப ஆசையிருக்கிறது. அப்படி நடிக்க வாய்ப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன்..//
சொன்னது யாருன்னு சொல்லலீங்கோ.....
/// விலை உயர்வுக்கு காரணம் பற்றாக் குறைதான். சாதாரண மனிதனை பாதிக்கும் இந்த விலை உயர்வு கவலை அளிக்கிறது - பிரணாப் முகர்ஜி
ஏன் உங்களை தேர்ந்தெடுத்தோம் என்று நாங்க தான் இப்ப கவலைப்படுகிறோம்///
ஏன் உங்களை தேர்ந்தெடுத்தோம் என்று நாங்க தான் இப்ப கவலைப்படுகிறோம்
இதன் காரணமும் பற்றாக்குறைதான் (நல்ல தலைவர்களக்கு)
//"சுப்ரமணிய சுவாமி, நமீதா இவர்களில் நல்ல தமிழ் பேசுவது யார்? ( அரசு பதில்களில் கேள்வி )
அதுக்கு தானே உலகத் தமிழ் செம்மொழி மாநாடு"//
அப்ப நல்லா தமிழ் பேசறது நமீதா தான்னு தீர்ப்பு வரும்.. (உபயம் மானாட மயிலாட)
சு.சா.. ???!!!
ஒய் இட்லி வடையாரே.. அவாளுக்கெல்லாம் அவார்டு கிடைக்காதுங்கானும்...
IV,
Atlast Semmozhi maanadu ... its a koothu let us enjoy...
Namithaa thamizh mazhalai... (yaarum enna thittantheengappu)
kamesh
ஆறாவது சும்மா நச் பூமராங் :))
மதுரை தினகரன் பத்திரிகை அலுவலகம் தீ வைப்பு சம்பவம்: அட்டாக் பாண்டி உள்பட 17 பேர் விடுதலை
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=22402
கடந்த 9.5.2007ஆம் ஆண்டு தினகரன் பத்திரிக்கை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக திமுக ஆதரவாளர் அட்டாக் பாண்டி, பாதுகாப்புக்கு நின்றிருந்த டி.எஸ்.பி.ராஜாராம் உள்பட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு மதுரை செசன்ஸ் கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.
இந்த வழக்கு விசாரணையை கடந்த 19.5.2007ஆம் ஆண்டு சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மதுரை செசன்ஸ் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரத்ன ராஜூ வழக்கை ஒத்திவைத்தார். பின்னர் சரியான இன்று மதியம் 1.05 மணிக்கு இந்த வழக்கில் நீதிபதி ரத்ன ராஜூ பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.
தீர்ப்பில் திமுக ஆதரவாளர் அட்டாக் பாண்டி, பாதுகாப்புக்கு நின்றிருந்த டி.எஸ்.பி.ராஜாராம் உள்பட 17 பேரும் விடுதலை செய்யப்படுகிறார்கள் என தனது தீர்ப்பை வாசித்தார்.
vaazhka Jananayagam..
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=22401
adutha kalaignarin vaarisu! Raamanai idithuraippathil.. (hindukkalai punpaduthuvathil)
Post a Comment