பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, December 12, 2009

சூப்பர் ஸ்டார் - 60 !

வெள்ளித்திரை நட்சத்திர மண்டலத்தில்
அபூர்வ ராகங்கள் முழங்க
சூப்பராய் உதித்த ஸ்டார் நீ !

காலப்போக்கில்
உச்ச நட்சத்திரமாய் நீ மின்ன
மற்றவை எல்லாம்
மிச்ச நட்சத்திரங்களாய் மாறிப் போயின !
ஏன் தெரியுமா?
நட்சத்திரங்களில் நீ ஒரு
சிவப்பு சூரியன் என்பதால்தான்!

சந்திரன் சூரியனை அறிமுகப்படுத்தி
எங்காவது பார்த்திருக்கிறார்களா? ...
இங்கு
நடந்தது...

ஆம்
இந்த
பளீர் சூரியனை அறிமுகப்படுத்தியது -
ஒரு
பால சந்திரன்...!


நீ
அசாதாரணமான ஒரு
உச்சரிப்பை
அறிமுகப்படுத்தினாய் ! - அது
அத்தனை பேர் செவிகளிலும்
பைரவியாய் !


உன்
வல்லின மெல்லினங்களில்
வள்ளிசாய் வசப்பட்டோம் நாங்கள் !


உனக்கு
சரியாகத்தான் பெயர் வைத்தார்கள் -
ரசினி என்று !
ஆம் !
பார்க்கும்போதே
ரசி - நீ, ரசி - நீ என்று எல்லோரையும்
தூண்டுவதால்தான்
நீ
'ரசினி' ஆனாய் போலும் !



யார்க்கும் நான் அடிமை இல்லை
இது
நான் போட்ட சவால்!
ஆனால்
என்றைக்கு நீ
என்னை வாழ வைத்த தெய்வம் என்று
உச்சிக்கு உயர்த்தினாயோ -
அன்று முதல்
உன் அன்புக்கு நான் அடிமை ஆனேன்..!





ஆயிரம் ஜென்மங்கள் காத்திருந்து
வணக்கத்துக்குரிய காதலிக்கு
அக்னி சாட்சியாய்
மூன்று முடிச்சு போட்டு
மாப்பிள்ளை ஆனாய் நீ !
அது உனக்கு
இறைவன் கொடுத்த வரம் !
அதனால்தானோ என்னவோ
இன்றைக்கும் உனக்கு
இளமை ஊஞ்சலாடுகிறது!


அவள் அப்படித்தான் என்று
நீ ஒதுக்கி விட்டுப்போன
நீலாம்பரிகளும் சண்டிரமுகிகளும் ஏராளம் !
அவர்கள் மாறினார்களா என்று தெரியாது !
அதே சமயம்
உன்னால்
அன்னை ஓர் ஆலயம் என்று
உணர்ந்தவர்கள் ஏராளம் ஏராளம் !


நான் மகான் அல்ல என்று நீ
அடிக்கடி சொன்னாலும்
உன்னால் ஆன்மீகப் பாதையில்
அடிஎடுத்தவர்கள் ஆயிரக்கணக்கில் !



நீ
உன்மீது அடிக்கடி விழும்
நன்றி மறந்த கற்களைத் தடுக்க
மௌனம் என்னும் கேடயத்தை
மட்டுமே கைக்கொள்ளும்
அஹிம்சைத் தளபதி !

ரகுபதி ராகவ ராஜாராம் இசைத்து
ராம் ராபர்ட் ரஹீமிடம் வேற்றுமை பார்க்காத
உனக்கு
சங்கர் சலீம் சைமனும் ஒன்றுதான்
ஜான் ஜானி ஜனார்த்தனும் ஒன்றுதான் !




ஊர்காவலனே,
எல்லாம் உன் கைராசி என்று
உன்னை நாடி வந்தோர்க்கு
நான் வாழ வைப்பேன் என
கைகொடுக்கும் கை ஆனாயே !
அதை என்றைக்கும்
நினைத்தாலே இனிக்கும் !


உன்
தலைமுடியில் வேண்டுமானால்
இடைவெளி சற்றே அதிகமாகி இருக்கலாம் !
ஆனால் உனக்கு
தலைமுறை இடைவெளி என்பது மட்டும்
கிடையவே கிடையாது !




இன்றைக்கும்
உன்னோடு சேர்ந்து ஆட
ப்ரியாக்களும் காயத்ரிக்களும்
தயாராக இருக்கிறார்கள் -
பதினாறு வயதினிலே !

உங்களுக்கெல்லாம் ஒரு விஷயம் தெரியுமா?

தமிழ்நாட்டில்
நான் சிகப்புமனிதன் என்று
கர்வப்பட்டு சுற்றிக்கொண்டிருந்த
போக்கிரி ராஜாக்களும், மாங்குடி மைனர்களும்
கடும் வெயிலில் நின்று
கறுத்துக் கொண்டிருக்கிறார்களாம் -
ஏனெனில்
இங்குள்ள பெண்களுக்கு
உன்னுடைய கறுப்புத்தான்
மிகவும் பிடித்த கலராம்...!


'ஜானி ஜானி' என்று கூப்பிட்டால்
இங்குள்ள குழந்தைகள்
'எஸ் பப்பா' என்பதில்லை -
படையப்பா என்கின்றனவாம் !


ஜஸ்டிஸ் கோபிநாத்தின்
தீர்ப்புக்கள் மட்டுமல்ல
எப்பொழுதும் இந்த
பெத்த ராயுடுவின் தீர்ப்பும்
சுத்தமாகத்தான் இருக்கும்..!
அதனால்தான் நீ
ஆந்திராவில்
மொத்த பேரையும்
உன் பின்னால்
சுத்த வைத்த
பெத்த ராயுடுவோ?

உனக்கு
சக கலைஞர்கள் வேண்டுமானால்
ஆயிரம் பேர் இருக்கலாம் !
ஆனால் எங்காவது
சம கலைஞர்கள் இருக்கிறார்களா?
எங்களுக்குத் தெரியவில்லை!
ஏனெனில் நீ
இலட்சத்தில் ஒருவன் !
இலட்சியத்தில் அரசன் !

மிஸ்டர் பாரத்தான உன்னைப் பார்த்து
தம்பிக்கு எந்த ஊரு என்று கேட்டவர்களிடம்
நாங்கள் தர்மயுத்தம்
செய்து வந்தோம் !


ஆனால்
இன்றைக்குத்தான்
பலபேருக்குத் தெரிந்தது
இந்த தங்கமகனின்
தாய் வீடு
நாச்சிக்குப்பம் என்று!



ஓஹோ !
அதனால் தான்
நீ
அன்றைக்கே
குப்பத்து ராஜா ஆனாயோ?

அன்றைய குப்பத்து ராஜா
இன்றைய ராஜாதி ராஜாவாகி
தென்னாப்பிரிக்காவில் கூட
அவன் கொடி பறக்குது !
இருந்தாலும் எங்கும்
எளியோர் இதயத்தில்
அந்த ராஜா சின்ன ரோஜாதான் !

சூப்பர் ஸ்டாரே,
நீ
குன்றுகளுக்கு மத்தியில்
ஒரு மலை !
அண்ணாமலை !

நீ
அருணாச்சலம் மட்டுமல்ல
கருணாச்சலமும்தான் !

நீ
குணத்திலும் பணக்காரனாகி பல
குசேலர்களை காத்த
தர்மதுரை !

நீ
எங்கோ உயரத்தில் இருந்தாலும்
அடியாழத்தில் இருந்து கொள்ளும்
சிதறாத முத்து !

நீ
ஏற்றி இறக்கும்
திரையுலக ஆடுபுலி ஆட்டத்தில்
என்றைக்கும்
பாயும் புலி !



நீ
அரசியல் சதுரங்கத்தில்
யாரும் செக் வைக்க முடியாத
தனிக்காட்டு ராஜா !

அதனால்தான்
இருபது ஆண்டுகளுக்கு முன்
நீ
வெறும் சிவா!
இன்றைக்கோ சிவாஜி !



மதுரையை ஆண்டவன் பாண்டியன் !
மக்கள் மனங்களை ஆளும்
நீயோ
அலெக்ஸ் பாண்டியன் !

நீ
புரட்டு தெரியாத முரட்டுக் காளை !
உன் கண்ணில் நீர் வழிந்தால்
பொறுக்காத காளியிடம்
நீ சக்தி கொடு
என்று கேட்டாய்!
அதனால்தான் அவள்
கோடிக்கணக்கில் உனக்காகத்
துடிக்கும் கரங்கள் தந்தாள்!

நீ
பொல்லாதவன் என்று
பொய்யர்கள்
புறம் சொல்வர் !
ஆனால் உன்னை
புரிந்தவர்களுக்குத் தெரியும் -
நீ
நல்லவனுக்கு நல்லவன்
நாட்டுக்கொரு நல்லவன் என்று!

நீ
உன் அடுத்த வாரிசை
எஜமானாக மட்டும்
அடையாளம் காட்டவில்லை !
நல்ல உழைப்பாளியாய் காட்டினாய் !




வீரா - வருவீரா என்று
உன்னை மன்னனாக்க பலபேர்
துடித்த போது - ஒரு
எந்திரன் போல ஆசைக்கு
விடுதலை கொடுத்து
எங்கோ தூரம் சென்று
மனிதனாய் நிமிர்ந்தாய் !

வாழ்க்கைப் பாடத்தைப்
புரட்டிப் படித்த
நீயா படிக்காதவன்?

அலாவுதீனின் அற்புத விளக்கே !
உன் வெளிச்சத்தில்
வீட்டுப் பாடம் படித்த
கலைஞர்கள் எத்தனை பேர் ?

உன் பாஷாவைப் பார்த்து பாஸான
கதாநாயகர்கள்தான் எத்தனை பேர்?

உன் சத்திய நெற்றிக்கண் எரித்த
மன்னிப்புத் தீயால்
காணாமல் போன கழுகுகள்தான்
எத்தனை எத்தனை?

மாவீரனே !
உன்னிடம்
தில்லுமுல்லு செய்யவோ
தப்புத்தாளங்கள் போடவோ
யாராலும் முடியாது !
ஏனெனில்
நீ
தர்மத்தின் தலைவன் !

நீ
எங்களுக்கு குரு
சிஷ்யன் பல சித்தர்களுக்கு !

நீ ஒரு நல்ல வேலைக்காரன் அல்லவா ?
அதனால்தான் உனக்காகக்
காத்திருக்கிறது -
ஒரு நல்ல வேலையும் -
அதற்காக காத்திருக்கிறது
ஒரு நல்ல வேளையும்!



இனி சில விந்தைகளைப் பார்ப்போமா?

அன்புள்ள ரஜினிகாந்த்தே !
நீ
காந்தம் போல கடந்து செல்கையில்
உலகெங்குமிருந்து எண்ண அலைகள்
ஒரே இடத்தில் மையம் கொள்வதால்
ராடார்கள் ஸ்தம்பிப்பதாக
கையைப் பிசைகிறார்களாம் மீனம்பாக்கத்திலே..!

சிவாஜி ராவ் கெயிக்வாட்டே,
இன்னும் இருபதாண்டுகள் கழித்தாவது
உன்னை
இரண்டாம் இடத்துக்கு தான்
அனுப்பவேண்டும் என்று
உன் வீட்டில்
இரண்டு வயது யாத்ரா
முரண்டு பிடிக்கிறானாம் !




கடத்தல் மன்னன் பில்லாவே !
நீ
சற்றே உஷாராக இரு !
உன்னால்
ஜப்பான் முதல் அமெரிக்கா வரை
பல இதயங்கள் களவாடப்பட்டு
இந்தியாவிற்கு இறக்குமதியாகின்றனவென்று
உன் மீது
ஒரு கண் வைத்திருக்கிறார்களாம்
சுங்க அதிகாரிகள் !




அவசர அடி ரங்காவே !
கொஞ்சம் ஜாக்கிரதையாக இரு !
ஆறிலிருந்து அறுபது வரை
எட்டுக்கோடி இதயங்களிலும்
அத்துமீறி நுழைந்து
இண்டு இடுக்கின்றி நீயே
ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக
கணக்கெடுக்கிறார்களாம்
காவல்துறையினர் !

சொக்க வைக்கும் சுல்தானே,
உன் வீச்சைக்
கட்டுப்படுத்த வேண்டுமென்றால்
புதிதாய் மன உச்சவரம்புச் சட்டம்தான்
கொண்டுவரவேண்டும் போலும் !

முள்ளும் மலரும் எதிலும் உண்டு என
உணர்ந்த அதிசய பிறவியே!

உனக்கு
சினிமா ஆன்மிகம் அரசியல் என்று
மூன்று முகம் !

இனி எந்த முகம் உனக்கு
என்று புவனமே கேள்விக்குறியோடு நிற்க
நீயோ
என் கேள்விக்கு என்ன பதில் என்று
ராகவேந்திரரையும் பாபாவையும் கேட்கிறாய் !

உனக்கு பதில் கிடைத்து
நீ சினிமா என்றால்
எங்களுக்கு நீ கவிக்குயில் !
நீ இசைக்கும் அபூர்வராகங்களின்
அடுத்த அவதாரத்தை நாங்கள் ரசிப்போம் !

மனதில் உறுதி வேண்டும் நீ
ஆன்மிகம் என்றால்
உன் காலடியில் ஆறு புஷ்பங்கள்
தூவிச் சொல்வோம்
நீயே எங்கள் மகாகுரு என்று !

நாடு காக்க அரசியல் காட்டில்
நீ
வேட்டையனாய் நுழைந்தால்
உன் கர்ஜனைக்குப் பின் அணி வகுக்கும்
ராணுவ வீரர்கள் நாங்கள் !

இது புதுக் கவிதையோ
எங்கேயோ கேட்ட குரலோ அல்ல
தாய் மீது சத்தியம்!

வாழ்க ரஜினி....
( நன்றி: ஈ.ரா , படிக்காதவன் )



31 Comments:

Anonymous said...

:(

Anonymous said...

"உனக்கு
சக கலைஞர்கள் வேண்டுமானால்
ஆயிரம் பேர் இருக்கலாம் !
ஆனால் எங்காவது
சம கலைஞர்கள் இருக்கிறார்களா?
எங்களுக்குத் தெரியவில்லை!"

ethu nejammave super. Thalavarukku pioranda naal vazthukkal.

Anonymous said...

அய்யோ... காலங்கார்த்தால தாங்க முடியலைடா சாமி... அடுத்த வாரம் சி.சு.செல்லப்பா நினைவு நாள் வருது இட்லி... அதுக்கும் இப்படி ஏதாவது பதிவு போடுவீங்களா?... இல்லை, பிறந்த நாள் மட்டும் தான் கொண்டாடுவீங்களா?

கேள்வியுடன்

இட்லி ப்ரியன்
இடியாப்பபுரம்

மர தமிழன் said...

அசல் தல :-) க்கு ஹாப்பி பர்த்டே ...

Unknown said...

gopikku jillunu erukkum

sreeja said...

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

அருமையான தொகுப்பு.

Anonymous said...

wish you happy birthday

விவேகானந்தன் said...

Where is yellow Comment...

விவேகானந்தன் said...

Where is yellow Comment...

Anu said...

...mmudiyalai...iththoda niruththikkuvom.

Anu said...

ஏன் நிறுத்திட்டீங்க?

நீ ஒரு காளி
ஒனக்கு பிடித்தது போளி

..ம்ம்ம்..!

Loganathan - Web developer said...

Best Wishes

Anonymous said...

ரொம்ப முக்கியம்.... Hero, senior citizen ஆயிட்டாரு...
இன்னிக்கு ரஜினி-கவிதை போட்டால் விமர்சனம் வரும்னு தான் நேத்து பாரதி பற்றின போட்டு balance
பண்ணுணீங்களா இட்லி வடை. பலே.. மு.க மாதிரி நன்னா அரசியல் பண்றேள் போங்கோ ..
பாரத மாதாக்கு முந்தா நாள் b'day.. அதுக்கும் ஒரு கவிதை போடுங்க.

பாரதி மணி said...
This comment has been removed by the author.
பாரதி மணி said...

ஈ.ரா.வின் கவிதை உயர்வுநவிற்சியின் உச்சம். அவர் பேனாவில் சரஸ்வதி புகுந்து விளையாடுகிறார். வாழ்த்துகள்!

ஒரு சக கலைஞன் ரஜினியிடம் விரும்புவதெல்லாம், இனியாவது கதாநாயகிகளுடன் மரத்தைச்சுற்றாமல்,பதினைந்து வில்லன்களை சுழட்டியடிக்காமல், தன் வயதுக்கேற்ற பாத்திரங்களையேற்று, தன் நடிப்பில் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்தவேண்டும் என்பது தான். அங்கே அமிதாப் பச்சன் அதை அழகாக செய்துகொண்டிருக்கிறார்.

பாரதி மணி

கௌதமன் said...

Ra vusaa oru kavidhai
Ji llunu konjam ice
Ni gar illai yaarum ivarkku
Ka davule kadavule!
N aanga solrom,
Th ool kilappureenga IV !

M Arunachalam said...

Splendid PAAMAALAI by Ee.Raa.

Happy 60th Birth Day Wishes to Thalaivar.

My own attempt at poetry on the occassion of "Rajini 60" is available at the following URL:

http://hereisarun.blogspot.com/2009/12/60.html

பெசொவி said...

ரஜினி படங்களை வைத்தே அவருக்கு புகழ் மாலை......மிக அருமை!

(யாருங்க அனானி.....முத கமெண்டே சோக ஸ்மைலியா?)

Asir said...

Thanks to Padikathavan & Idly Vadi Sir...

கிரி said...

தலைவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :-)

கானகம் said...

ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். யாரோ வேலையத்துப்போய் செய்திருக்கிறர்கள். நன்றாகவே இருக்கிறது.

VEDANARAYANAN said...

எங்கிரிந்தோ வந்த ஒருவரை கடவுள் பெரிய மனிதர் ஆக்கி விட்டார். என்ன பிரயோசனம். இன்னும் பெரிய பொசிஷன் OCCUPY பண்ணுவதற்கு உள்ள பயம் நீங்கவில்லை. எல்லாவத்றிற்கும் காரணம் ECONOMIC SECUIRTY . அது போய் விடுமோ என்று பயப்படும் நபர்களில், POLITICS வந்த நபர்கள் மோதிலால் அண்ட் ஜவஹர்லால் நேரு.

ஈ ரா said...

இட்லி வடைக்கும், ரஜினிசாருக்கு வாழ்த்து தெரிவித்த நண்பர்களுக்கும், என்னைப் பாராட்டிய நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

Rajan said...

முடியல !

ஸ்ரீராம். said...

ஏன் இப்படி?

Anonymous said...

எம் ஜி யார், வடிவேலு, கவுண்டமணி, பூர்ணம் மாதிரி ரஜினி எல்ல படங்களிலும் ரஜினியாகத்தான் இருக்கிறார். கதாபாத்திரமாக அவர் மாறமாட்டார். கதாபாத்திரத்தை ரஜனியாக மற்றி விடுவார். இருந்தும் ஒரு காந்த சக்தி அவர் நடிப்பில் இருப்பதால் அவரை மிஞ்ச ஆளில்லாமல் இருக்கிறார்!..அவருக்குப்
பிறந்த நாள் வாழ்த்துகள்.--டில்லி பல்லி

Swami said...

Happy Brithday to one of the finest human being

avisrini said...

அன்பு தலைவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

படுக்காளி said...

வீரா.... வருவீரா

(நன்றி: ஈ.ரா , படிக்காதவன்)


ரசி... நீ!!!! என ரஜினிக் கவிதை.
நிச்சயம் கவிதை உச்சம் - மிச்சம்...

ஜானி... ஜானி... யஸ் பப்பா இல்லையா... படையப்பாவா... பட்டய கிளப்புதேப்பா,,,,

ஈராக்கும் இட்லிவடைக்கும் நன்றி.

Anonymous said...

Wishes to some1 who made the entire Tamil movie industry to follow and admire him, despite being a big Zero in what he was supposed to have done all these years. Acting.

Anonymous said...

/***பாரதி மணி said...
ஈ.ரா.வின் கவிதை உயர்வுநவிற்சியின் உச்சம். அவர் பேனாவில் சரஸ்வதி புகுந்து விளையாடுகிறார். வாழ்த்துகள்!

ஒரு சக கலைஞன் ரஜினியிடம் விரும்புவதெல்லாம், இனியாவது கதாநாயகிகளுடன் மரத்தைச்சுற்றாமல்,பதினைந்து வில்லன்களை சுழட்டியடிக்காமல், தன் வயதுக்கேற்ற பாத்திரங்களையேற்று, தன் நடிப்பில் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்தவேண்டும் என்பது தான். அங்கே அமிதாப் பச்சன் அதை அழகாக செய்துகொண்டிருக்கிறார்.

பாரதி மணி****/

Ithu nadanthall rajini cinimaavil nadippathau nindru poi vidum.