இந்த வாரமும் அனுபவம் பேசுகிறது...
செய்தி # 1
கடந்த வார பதிவின் , விடுமுறையில் கோவில்களுக்கு சென்ற என் அனுபவங்களின் தொடர்ச்சி இந்த வாரமும்.
'க்ஷத்திரம் சரீரப் பிரஸ்தாரம்' - என்கிறது கோவிலின் வடிவம் பற்றிய ஆகம விதி.நமது மனித உடலின் சூட்சும வடிவம்தான் கோவில் என்று படித்து இருக்கிறேன். இதையே, திருமூலர் தனது திருமந்திரத்தில் " உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்" என்கிறார்.
சென்னையில் உள்ள என் உறவினர் வீட்டிற்க்கு சென்றபோது, அவர்கள் ஒரு கோவிலுக்கு அழைத்து செல்வதாக சொன்னார்கள். மறுநாள் காலையில் கிளம்பினோம். முன்னதாகவே கார் புக் செய்து இருந்தனர். அது ஒரு விடுமுறை நாள் என்பதால் கோவிலில் கூட்டம் அலைமோதியது. 50 ரூபாய்க்கு அர்ச்சனை தட்டு வாங்கி, சுமார் ஒரு மணிநேரம் 'க்யூ' வில் நின்று, அர்ச்சனை முடிந்து, அர்ச்கருக்கு 100 ரூபாய் தட்சணை கொடுத்து (இதற்கு குறைவாக கொடுத்தால், கவுரவ குறைவு நேரும் சூழ்நிலை வந்துவிட்டது)...எல்லாம் முடிந்து ஒரு வழியாக வெளியில் வந்தோம்.
"அப்பாடா ..கரெக்ட் டயம். அந்த ......ஹோட்டல் இங்கதான் இருக்கு. கொஞ்சம் லேட் ஆகி இருந்தா டிபன் முடிஞ்சு இருக்கும். பொங்கல் ரொம்ப சூப்பரா இருக்கும்" என்று அந்த வீட்டு பெண்மணி சொன்னார்.
இறை தேடுவதோடு இரை தேடல்.
கோவிலுக்கு செல்வது கூட இங்கே அவசர கதி...எந்திர மயம். பக்தர்களை வெளிய அனுப்புவதில் அர்ச்கர்களுக்கு அதை விட அவசரம்.ஆன்மீக பயணமாகவும் இல்லாமல், இன்ப சுற்றுலாவாகவும் இல்லாத ஒரு அனுபவம் அது.
கோவிலுக்கு வருவோர் மூன்று முறை பிரகாரங்களை வலம் வருதல் வேண்டும். காலையில் வலம் வருதல் நோய்கள் நீக்கும், பகலில் வலம் வருதல் விருப்பங்களை நிறைவேற்றும்,மாலையில் வலம் வருதல் பாவங்களை போக்கும், அர்த்தசாம வலம் மோட்சம் தரும் என்கிறார்கள் பெரியோர்கள்.
எனது சொந்த ஊரான சிதம்பரத்தில்,நடராஜர் கோவிலுக்கு சேர்ந்து போனாலும் சரி. தனியாக போனாலும் சரி. சுவாமி தரிசனம் முடிந்து குறைந்தது ஒரு மணி நேரமாவது வெளிபிரகாரத்தில் அமைதியாய் அமர்ந்து இருப்பேன். அவ்வாறு அமரும் போது, கோவிலுக்கு வந்ததின் முழு பலனையும் அடைவதாக, மனம் மிகவும் லேசாவதாக உணருகிறேன்.
'கோபுர தரிசனம் பாப விமோசனம்' என்று அடிக்கடி கூறுவார் எங்கள் பாட்டி. எங்காவது வெளியூர் பயணம் போகும்போது, பேருந்தின் சன்னல் வழி தெரியும் கோபுரங்களை கண்டு, கன்னத்தில் போட்டுக்கொண்டே வரும் வாழக்கம் உடையவர் அவர். அவரது இந்த பழக்கத்தை அப்போது நான் கிண்டல் செய்தது உண்டு. இப்போது, கோவில்கள் இல்லாத வெளிநாட்டில் பணி நிமித்தமாக இருக்கும் போதுதான் நம் கோவில்களின் அருமை புரிகிறது. பாட்டியின் அருமையும்.
ராஜகோபுரம் என்பது ஒரு லிங்க ரூபம், ஸ்தூல லிங்கம் என்று படித்தேன்.
வெளிப்பிரகாரத்தில் அமர்ந்து காலையும் , மாலையும் புறாக்கள் பறக்கும் கோபுரங்களின் அழகை ரசித்தது உண்டா நீங்கள்?
கோயிலுக்குள் இருந்து வெளியேறும் போது, கொடிமரத்தின் முன்னால் மட்டும் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். பஞ்சஅங்க நமஸ்காரம் என்பது பெண்களுக்கு. தலை, கைகள், முழந்தாள் ஆகிய அங்கங்கள் மட்டும் தரையில் படும் விதத்தில் வழிபாடு செய்வது.அஷ்டாங்க நமஸ்காரம் என்பது ஆண்களுக்கு. தலை, காதுகள், கைகள், தோள்கள், முகவாய்க்கட்டை ஆகிய எட்டு உறுப்புக்களும் பூமியில் படும்படி வணங்குதல்.
கல்லூரி படிக்கும் நாட்களில், கோவிலுக்கு போனால், குனிந்து, விரல்களால் தரை தொட்டு, முத்தம் இடுவேன். அதுதான் நான் செய்யும் நமஸ்காரம். சட்டை அழுக்காகிவிடும் என்ற பயம் அல்லது ஸ்டைல் என்று கூட வைத்து கொள்ளலாம்.
நமஸ்காரம் என்பது "உன் பாதங்களே சரணம் '' என்னும் ஒரு சரணாகதி தத்துவம் என்று பின்னால்தான் புரிந்து கொண்டேன். இப்போதும், பலபேர் கோவில்களில் இந்த மாதரியான 'ஸ்டைல்' நமஸ்காரம் செய்வதை பார்க்க நேரிட்டது.
கோவில்களுக்கு செல்லும் முன்பு, சிறிது நேரம் நமது வீட்டு பூஜை அறையில் பிராத்தனை செய்து, நமது மனத்தை தயார் படுத்துதல் நலம் என்று தோன்றுகிறது. மீண்டும், கும்பகோணம் பக்கம் வருவோம்.
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே இருக்கும் 108 திவ்ய தேசங்களில் ஒன்று திரு கவித்தலம் என்னும் கபிஸ்தலம். கஜேந்திர மோட்ச தலம். திருமங்கை ஆழ்வரால் பாடல் பெற்ற தலம்.
காவேரி கரையில் இருப்பதால் ஆற்றங்கரை கண்ணன் என்று அழைக்கப்படும் மூலவர் கஜேந்திர வரதர். தாயார் ரமாமணிவல்லி. இங்கு இருக்கும் இந்த கோவிலின் அருமைகள் குறித்து உள்ளூர்க்காரர்களுக்கே தெரியவில்லை என்பது பெரிய சோகம்.
ஒரு நண்பர் குறிப்பிட்டதை போல, பிஸினஸ்சென்டர் ஹைடெக் கோவில்களுக்கும், பிசியான கோவில்களுக்கும் செல்வது வெறும் கால,பண விரயம்தான்.
அதற்கு பதிலாக, கும்பகோணம் என்று இல்லை. உங்கள் பகுதிக்கு அருகாமையில் இருக்கும் ஒரு புராதன கோவிலுக்கு செல்லுங்கள். அங்கு நந்தவனத்தில் பூத்து இருக்கும் மலர்களை உங்கள் கரங்களால் பறித்து அர்ச்சனைக்கு தாருங்கள்.
தரிசனம் முடிந்த பின், பிரகாரத்தில் மௌனமாய் அமருங்கள். கோவிலின் வரலாற்றை, பழமையை நினைவு கூறுங்கள்.
கோவிலுக்கு உங்களால் இயன்ற உதவிகளை செய்யுங்கள். குறைந்த பட்சம் இருண்டு கிடக்கும் கோவிலுக்கு ஒரு மின் விளக்காவது பொறுத்துங்கள். .
உங்களின் ஆன்மீக பயணம் கலை உணர்வை தூண்டுவதாய், மன நிறைவையும் அமைதியையும் தருவதாக இருக்கட்டும்.
"ஆலயம் தொழுதல் சாலவும் நன்று"
செய்தி # 2
அரசியல்,சினிமா செய்திகள் கடந்து ஆன்மீக பதிவுகள் உருவான விதமும், நன்றி அறிவித்தலுமே இன்றைய இரண்டாவது செய்தி.
புள்ளப்பூதங்குடி கோவிலின் தொடர்பு எண் வேண்டும் என்று வெளிநாட்டில் இருக்கும் வாசகர் ஒருவர் கேட்டதாக சொன்னார் இட்லி. அந்த நண்பர் அங்கு இருந்தபடியே பணம் அனுப்பி ,பூஜை நடத்த் விரும்புவதாகவும் சொன்னார்.
நான் எதுவும் குறித்து கொள்ளவில்லை.பாபநாசத்தில் இருக்கும் எனக்கு நன்கு தெரிந்த ஒரு அர்ச்சகர் ஒருவரை தொடர்பு கொண்டு கேட்டதற்கு அவர் தந்த பதில் இதோ...
"கேட்கிறததுக்கு ரொம்ப சந்தோஷமா, பெருமையா இருக்கு இன்பா. இப்போ அவர் உத்தியோக நரஸிம்மரை மனசார நினைத்து வேண்டி கொள்ளட்டும். எப்போ முடியுதோ அப்போ நேரில் வந்து பூஜை செய்தால் போதும். அல்லது இந்த பக்கம் இருக்கிற அவரோட நண்பரையோ இல்ல உறவினரையோ கோவிலுக்கு நேரா வந்து பூஜை பண்ண சொல்லுங்க. பகவான் சேவை வியாபாரம் ஆகி விட கூடாது". என்றார்.
என்ன நண்பர்களே..அவர் சொல்வது சரிதானே?
இது போன்ற கோவில்கள் பற்றி எல்லாரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதுதான் என் பதிவுகளின் நோக்கமும். மறைந்து கிடக்கும் கிராமத்து கோவில்கள் பற்றி சிறப்பு பதிவுகள் எழுத விரும்புகிறேன். ஆண்டவன் அருள் புரிவாராக.
சொந்த அனுபவங்களை எழுதுமாறு சொல்லி, முழு சுதந்திரம் தந்து இருக்கும் இட்லி வடை அவர்களுக்கு முதல் நன்றி.எனது குடும்பத்துக்கும், எனது தனிப்பட்ட ஆன்மீக சிந்தனைகளுக்கும் வழி காட்டியாய் விளங்கி வரும் என் பாட்டியார் சந்தான லட்சுமி அவர்களுக்கு என் வணக்கங்கள்.
பொறுமையாய் படிக்கின்ற வாசக நண்பர்களுக்கும் நன்றிகள் பல.
(இனி ..அடுத்த வாரம்)
அன்புடன்,
இன்பா
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Sunday, December 06, 2009
சன்டேனா இரண்டு (6-12-09) செய்திவிமர்சனம்
Posted by IdlyVadai at 12/06/2009 09:17:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
25 Comments:
பதிவு மிகவும் அருமை; படிக்க மனசுக்கு நிம்மதியாக இருக்கிறது.
ஆலயம் தொழுதல் சாலவும் நன்று - உண்மையான வாக்கு.
தொடரட்டும் உங்கள் பதிவுகள்.
ராஜ சுப்ரமணியன்
6-12-2009
ayya
ulagam irutu irutunu pulampurata vittutu, ippathan irutana ulagathuku siru vilakku etrukireerkal
keep it up
by
Yayathi Raja
Very good blog for various known &unknown temples across Tamilnadu.Here they give links to several temples websites.Must see blog for temple & devotionl lovers
http://shanthiraju.wordpress.com/
கோவில் வாசலில் அதுவும் அவசர கதியில்,டூ வீலர் போன்ற வாகனத்தில் வந்து வாயில், கன்னத்தில் வண்க்கம் சொல்வதை பாத்தால் உதைக்கவேண்டும்.வரம் வேண்டும், வர மாட்டேன்.பக்தியின் வேஷம்
தரிசனம் காலில் ஆரம்பிக்க வேண்டும்
கொடிமரம், அடுத்து பலிபீடம் அதில் நம் ஆசைகளை பலி கொடுக்க தரிசனம் புனிதப்படும்
Nice post Inba.Hope to hear from you more.
//ஆலயம் தொழுதல் சாலவும் நன்று - உண்மையான வாக்கு.
//
repeataiiiiiiii
"கோவிலுக்கு செல்வது கூட இங்கே அவசர கதி...எந்திர மயம். பக்தர்களை வெளிய அனுப்புவதில் அர்ச்கர்களுக்கு அதை விட அவசரம்.ஆன்மீக பயணமாகவும் இல்லாமல், இன்ப சுற்றுலாவாகவும் இல்லாத ஒரு அனுபவம் அது."
இதுக்கு நாமளே முழு காரணம் கோவிலுக்கு போறத எதோ டுரிஸ்ட் ஸ்பாட் போற மாதிரி நினச்சுகிட்டு அவசர அவசரமாக போக வேண்டியது, இதுல "ஸ்பெஷல் தரிசனம்" வேற.
கடவுளுக்கே காசு, பெரும்பாலான கோவில்களில் இதுதான் நடக்குது.
Nice...keep writing more like this peaceful subjects!
entha aalayam, Devaalayamaa?
Bharathiyar Churchi thane sonnaar.
Vambai thodangukiren
மேலும் மேலும் தொடருங்கள். படிக்க ஆவலாக உள்ளேன்.
ரொம்ப மொக்கை! எங்கே போகிறது இந்த இட்லி வடை?
Inba
Very nice write up. Keep writing such articles. They really "lighten" the heart and soul.
anbudan.
raju-dubai
அப்படியே அடுத்த பதிவில் கோவில் சொத்துக்களை ஸ்வஹா செய்த புண்ணிய ஆத்மாக்களை பற்றியும் எழுதுங்க பல புராதன கோவில்களின் பரிதாப நிலைக்கு ஆண்டவனுக்கே (ஆள்பவருக்கல்ல) அல்வா குடுத்த அடியார்கள் அல்லவா காரணம்..!!
'தல' வரலாறு தெரிஞ்ச அளவுக்கு எத்தனை பேருக்கு கோவில்களின் தல வரலாறு தெரியும்???
இந்த வாரம் 'சண்டேன்னா ரெண்டு' படித்ததில் மனதுக்கு திருப்தியாக இருந்தது.. ரெண்டுமே படிக்க இதமாக இருந்தது
மர தமிழன் said...
அப்படியே அடுத்த பதிவில் கோவில் சொத்துக்களை ஸ்வஹா செய்த புண்ணிய ஆத்மாக்களை பற்றியும் எழுதுங்க பல புராதன கோவில்களின் பரிதாப நிலைக்கு ஆண்டவனுக்கே (ஆள்பவருக்கல்ல) அல்வா குடுத்த அடியார்கள் அல்லவா காரணம்..!!//
நூறு சதவிகிதம் அப்பட்டமான உண்மை!! திருநெல்வேலியைச் சுற்றியுள்ள நவதிருப்பதி என்றழைக்கப்படும் ஒன்பது திவ்ய தேசங்களையும் புனர் நிர்மாணம் செய்யும் பொறுப்பை டிவிஎஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டு செய்தது. இதில் தமிழக அறநிலையத் துறையின் பங்களிப்பு சிறிதளவும் கிடையாது. அறநிலையத்துறை என்ற ஒரு அமைப்பு எதற்கு இருக்கிறது என்பதே கேள்விக்குறி!!
ஒரு சிறு கோவிலை புனர் நிர்மாணித்து ஸம்ப்ரோக்ஷணம் செய்வதென்றாலும், இன்றைய நிலையில் குறைந்தது 10 லட்சம் செலவாகும்போது, அறநிலையத்துறை ஒதுக்குவது சில ஆயிரங்கள் மட்டுமே!! அந்த சில ஆயிரங்களைப் பெறுவதற்கும் நாய் படாத பாடு படவேண்டும். தவிர அங்கிருக்கும் லஞ்சப் பிசாசுகளுக்கு அழுதது போக ஆண்டவனுக்கு மிஞ்சுவது ஒன்றுமில்லை. அறநிலையத்துறையைக் கலைத்து விட்டு, கோவில்களையும், புராதன சின்னங்களையும் பராமரிக்கும் பொறுப்பை தன்னார்வம் மிக்க தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப்பது மிகவும் பொறுத்தம்.
One side the man went inside the moon.Sientists are going deep in chloning.But fools like you are blaberring kadavul,sammy perumal etc in 2009?you guys spoiled this country in the name of god .pl stop this nonsense and post some sientific (if you guys know!! Sure you may not be knowing more than this !)articles which can be useful for the youngsters rather than this rubbish which keep the peopole still in dark (expect you guys!not in the sense that you are clever! you are survaiving by keeping the others in dark)
மிக அழகான கட்டுரை - மேலும் மேலும் எழுதுங்கள்
inba,
Good write up on temples...you can get in touch with mr.sree venugopalan ...
Pushpa91@dataone.in..he can give you more info on temples....
Also ...http://athmadarisanam.com/...for more updates
Please continue this good work.
Ignore the comments by diehard
people like the "Anonymous" person
who makes his comments in the style
of "sun who temple" (he says "one side the man went into moon" (manithan nilavukkul chenraan);
who cannot even spell correctly;
who cannot even abuse in correct
words. And he prattles in the same way as his mentors and preceptors.
It's so nice. It has helped us to know more about ancient temples and about how to give respect to God. Congratulate to Inbha for defining about Chidambaram and other famous temples in TamilNadu.
very nice documents. You are doing a great job. Thanks a lot
Rgds,
SRI
நல்ல விஷயம்....நக்கல் ஏதாவது இருக்கும்னா ......எது எங்க இருக்கனுமோ அது அங்க இருந்தா நல்லா இருக்கும்
மிகவும் நன்றாக இருக்கிறது. இந்த கோவிலுக்கு சென்றால் இந்த தோஷம் போகும் என்றெல்லாம் இல்லாமல் அந்த பெருமாளின் பெருமையை அனுபவிக்க மட்டுமே கோவிலுக்கு செல்ல வேண்டும். கூடுமான வரை கூட்டமில்லாத விடியற்காலை வேளையோ அல்லது பின்னிரவு வேளையோ செய்யும் ஏகாந்த தரிசனம் சுவையானது.
அன்புள்ள லதா
ஆன்மிகம் ஒழுக்கம் கற்ப்பிப்பது என்பது என் கருத்து, பகுத்தறிவோடு ஆன்மிகத்தை புரிதல் வேண்டும். அவ்வகையில் உங்கள் கட்டுரை நல்ல பல தகவல்களை தரும் என்றே நம்புகிறேன். நல்ல கட்டுரை, தொடருங்கள் - வாழ்த்துக்கள்!
என்ன அருமையான கட்டுரை, போன மாசம் சிதம்பரம் கோவில் போய் வந்தேன். ஒரு மணிநேரம் காத்து வாங்கி, என் பையனுடன் விளையாடிய தருணம்
இன்றும் நான் நினைத்தால் மிக சுகமாய் இருக்கும். கோவில்ல வர காத்து எவ்ளோ நல்ல இருந்தது,
Post a Comment