பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, December 16, 2009

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 16-12-2009 (இரண்டாம் பகுதி )

அன்புள்ள வடை,
கல்கி இண்டர்நெட் சிறப்பிதழ் பற்றி முதலில் என்னுடைய சில கருத்துக்களை சொல்லிடறேன். முதலில் நேசமுடன் வெங்கடஷ்க்கு வாழ்த்துகள்.
முன்னுரையில் "இந்த இண்டர்நெட் ஸ்பெஷலில் இணையத்தின் ஒரு சொட்டு தேனை எடுத்துத் தடவ முயற்சித்திருக்கிறேன். பெருங்கடலை 96 பக்கத்துக்குள் அடக்க முடியுமா என்ன ?" என்று சொல்லிவிட்டு அடுத்த இரண்டு பக்கம் நயந்தாராவை பற்றி இணையத்தில் என்ன வந்திருக்கு என்ற 'நச் நயன்' கவர் ஸ்டோரி. நயன் மேக்கப்புடன் எப்படி இருப்பார், இல்லாமல் எப்படி இருப்பார் என்று ஒரு பக்கம் போட்டோ அப்பறம் எப்படி 96 பக்கத்தில் இணையத்தை பற்றி சொல்ல முடியும் ?

இப்படி தன் படத்தை ப்ளோ-அப் செய்து போடுவதாலோ என்னவோ நயன் இப்ப டயட் கண்ட்ரோலில் இருக்கிறார். அதற்காக அவர் தினமும் நிறைய சுவிங்கம் போட்டு மென்று துப்புகிறார் என்பது கொசுறு தகவலை. இந்த தகவல் அதில் இல்லை, ஆனால் இந்த தகவலை எனக்கு சொன்னவர் ஒரு நயன் ரசிகர். சுவிங்கம் மென்றால் முகம் ஸ்லிமாகுமாம். அவ்வளவு தான் எனக்கு தெரியும். மற்ற குசும்பு தகவல் எல்லாம் அடுத்த இண்டர்நெட் சிறப்பிதழில் வரும் என்று ஆவலுடன் எதிர்ப்பாக்கிறேன்.

இணைய இதழ்கள் பற்றி சில தகவல்கள், போலி டோண்டுவை திரும்பவும் பாப்புலர் ஆக்கும் டோண்டு கட்டுரை, கூகிள் குரோம் பற்றிய கட்டுரை கொஞ்சம் பராவயில்லை. டாரெண்ட் பற்றிய கட்டுரை ஒரு பக்கத்துக்கு இருக்கிறது. நெட் ஜோசியம் சொல்லும் வேதா கோபாலனிடம் ( பரவாயில்லை பெண்கள் இதுல கூட வந்துட்டாங்க ) ஒரு பேட்டி. அதில அவர் மக்கள் என்ன மாதிரி கேள்விகள் கேட்பார்கள் என்று சொல்லுகிறார் - "எனக்கு ஜாப் விசா கிடைக்குமா, கீரீன் கார்டு கிடைக்குமா". "ஆண்கள் நான் இண்டர்வியூ போகிறேன் என்ன கலர் சட்டை போடுக்கணும்" என்ற கேள்விகள் தானாம். முடியலடா சாமி.

நெட் குண்டர்கள் என்ற கட்டுரையில் நெட்டுல் நடக்கும் சில ஃபிராடு விஷயங்களை சொல்லியுள்ளார். இதில் 'த்ரிஷாவின் குளியலறைக் காட்சி, நயன் - சிம்பு முத்தக் காட்சி என்று உதாரணம் தருகிறார் கட்டுரை ஆசிரியர். ( இது வெங்கடேஷே எழுதிய கட்டுரை என்று நம்புகிறேன் ). இப்படி உதாரணம் தந்தால் இதை பற்றி கேள்விபடாதவங்க கூட இனிமே இதை கூகிளில் தேட ஆரம்பித்துவிடுவார்கள். சில வாரங்களுக்கு முன் எடிட்டிங் பற்றி நேசமுடனில் பேசிய வெங்கடேஷ் இந்த மாதிரி பெயர் சொல்லி உதாரணம் சொல்லுவதை எடிட் செய்திருக்கலாம். கல்கியில் நான் இதை நிச்சயமாக எதிர்பாக்கவில்லை.

இனியவை 140 என்ற டிவிட்டர் சிறுகதை என்.சொக்கன் எழுதியிருக்கார்.
"சொல்லப்போனால், அவளைச் 'சகோதரி' என்று அழைத்ததன் மூலம் என்னை நானே நல்லவனாக எண்ணிக்கொண்டேன். இப்போது அந்த அபத்தத்தை நினைத்தால் சிரிப்பு வருகிறது." ஒரு புள்ளி அதிகமாக வைத்திருந்தால் இந்த வாக்கியம் சொதப்பலாக இருந்திருக்கும். புரிந்திருக்குமே இது காதல் கதை!. அந்த சிறுகதையில் பின் குறுப்பு கொஞ்சம் சொதப்பல். மற்றபடி ஓ.கே.

தமிழ் வலைப்பதிவுகளில் பெண்கள் ! இதில "!" எதற்கு ? அதுக்கு தான். நான்கு பெண்கள் வலைப்பதிவிலிருந்து சில மேற்கோள்கள். டிவிட்டரில் பிரபலங்கள் என்ற தலைப்பில் யார் டிவிட்டரில் பிரபலம் என்று ஜெனிலியாவின் ஸ்விட் டிவீட்கள் என்று சில மேட்டர் இருக்கிறது. நானும் தேடி தேடி பார்த்தேன். என்றென்றும் அன்புடன் பாலா பெயர் அதில இல்லவே இல்லை. இத்தனைக்கும் இவர் 10,000 அடித்திருக்கிறார். அதில "மக்களே நான் தூங்க போகிறேன்.நாளை பார்க்கலாம்" மட்டும் 9000 இருக்கும். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் பாலா.

ஆன்லைனில் பிராத்தனை பற்றி ஒரு கட்டுரை, 10 மைல் கற்கள் என்று தலைப்பில் மக்கள் வாழ்வில் பெரும் மாற்றங்கள் கொண்டு வந்த 10 இண்டர்நெட் சாதனைகள். சென்னை மாநகரக் காவல் துறையின் சைபர் ஆணையாளர் டாக்டர் சுதாகர் பேட்டி ஒன்று முக்கியமானது இவரிடம் போய் சைபர் க்ரைம் என்ற பெயர் எப்படி வந்தது என்று கேள்வி கேட்டு அவரும் அதற்கு பதில் சொல்லியிருக்கார். நயந்தாராவிடம் போய் உங்களுக்கு உளுந்து ஊற போட தெரியுமா என்று கேட்பது போல இருக்கிறது.

இணையத்தில் இலக்கிய பர்ச்சேஸ் என்று பத்ரி, சசிரேகா, ஸ்ரீநிவாசன் தங்களின் மார்கெட்டிங் கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்கள். இதழை படிக்கும் ஒருவருக்கு மொத்தத்தில் இண்டர்நெட் என்றாலே டிவிட்டர், சினிமா, போக்கிரி தனம் என்று ஒரு பிம்பம் வருகிறது. கல்கி இண்டர்நெட் சிறப்பிதழுக்கு நான் தரும் மார்க் பாஸ் மார்க்.

எப்போது தேர்வில் 100/100 வாங்கும் ஒருவன் திடீர் என்று 0/100 வாங்கினால் அதிர்ச்சியாக இருக்கும் அது போல தான் டைகர் உட்ஸ் கதையும்.

பிரபல கோல்ஃப் வீரர் டைகர் உட்ஸ் விவகாரம் பற்றி ஏன் யாரும் கண்டுகொள்ளவில்லை ஒரு அன்பர் கேட்டிருந்தார். அவர் கவலை அவருக்கு. விஷயம் இது தான். புளோரிடாவில் உள்ள தனது வீட்டிலிருந்து காரில் கிளம்பிய உட்ஸ் விபத்தில் சிக்கினார். இதில் அவரது முகத்தில் காயம் ஏற்பட்டது. ஆனால் இந்தக் காயம் விபத்தால் ஏற்பட்டதல்ல, மாறாக அவரது மனைவி தாக்கியதால் ஏற்பட்ட காயம் என்று பின்னர் விசாரனையில் தெரிய வந்தது. கூடவே இவர் எந்த பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளார் என்று பெரிய பட்டியல் வர. மீடியா ஓவர் டைமில் வேலை செய்தது. ஒரு பெண் என்றாலே இவர்களுக்கு தூக்கம் வராது, இங்கே 14 பேர்!! சும்மா இருப்பார்களா ? போட்டு தாக்கிவிட்டார்கள். மாரல் ஆப் த ஸ்டோரி : எல்லா இடத்திலையும் மனைவி கையால அடி வாங்கிறவன் இருக்கிறான். இந்த உண்மை தெரியும் போது நமக்கு மனசில கொஞ்சம் நிம்மதியா இருக்குது அவ்வளவு தான். லேட்டஸ்ட் நியூஸ், ஏகப்பட்ட பத்தினி விரதன் டைகர் உட்ஸ் தற்போது குடும்ப உறவை பலப்படுத்துவதற்காக இரண்டாவது ஹனிமூனுக்கு செல்கிறார், தனது மூன்றாவது குழந்தையை பெற வேண்டி. வாழ்த்துக்கள். இப்ப இந்த கவிதையை படியுங்க

'The woods are lovely, dark and deep.
But I have promises to keep,
And miles to go before I sleep
And miles to go before I sleep.'
-Robert Frost,

சரியா இல்ல ?

ஊரோட ஒத்து வாழு என்பார்கள். ஆனால் ஒரு விழாவில் மத்திய ரெயில்வே இணை மந்திரியும், கேரளா முஸ்லிம் லீக் தலைவருமான இ.அகமது கலந்து கொண்டார். பாரம்பரிய வழக்கப்படி குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைக்குமாறு அவரிடம் கேட்கப்பட்டது. ஆனால் மத்திய மந்திரி அகமது குத்துவிளக்கு ஏற்ற மறுத்து விட்டார். இதை பதிவாக போட்டு நிறைய பேர் தங்கள் கருத்துக்களையும் சொல்லிவிட்டார்கள். உங்க கருத்து என்ன என்று ஒருவர் என்னை சாட்டில் கேட்டார். என் கருத்து சொன்னால் என்ன செய்வார் அந்த அன்பர் ? இருந்தாலும் கேள்விக்கு பதில் சொல்லுவது தானே முறை. நான் ஒரு கேள்வியாக பதில் சொல்லுகிறேன்.. "இஸ்லாம் சமுகத்தினர் அல்லாவை தவிர யாரையும் வணங்க மாட்டர்கள். சரி, இந்த அமைச்சர் சோனியா காந்தி வந்தால் வணங்குவாரா மாட்டாரா ? இதுதான் என் கேள்வி.

விழானாலே ஏதாவது பிரச்சனை வரும் போல, அங்கே மந்திரி குத்து விளக்கு ஏற்ற மறுத்தார் இங்கே ஞாநி பொக்கே கொடுத்ததற்கு ஏன் வேஸ்ட் என்று கேட்டு ஒரு பெண் மணியிடம் கொடுத்திருக்கிறார். பெண்கள் நமக்கு தான் காதில் பூ வைப்பார்கள். ஆனால் ஞாநி For a Change பெண்ணுக்கு வைத்துள்ளார். பாராட்டுக்கள். சாரு For a change காமெடியாக எழுதாமல் நல்லா எழுதியிருக்கார் என்று டிவிட்டரில் நீ, நான் என்று போட்டி போட்டுக்கொண்டு இந்த கட்டுரையுடன் நான் ஒத்து போகிறேன் என்று வாக்குமூலம் தருகிறார்கள். இவர்கள் ஒத்து போனால் என்ன ஒத்து போகாட்டி என்ன ? For a change சாரு, ஞாநி இருவர்கள் இடமும் எனக்கு ஒரு கேள்வி இருக்கு

1. நான் குமுதம் படிக்க மாட்டேன் என்று சொல்லும் சாரு வாரா வாரம் குமுதம் படிக்கிறார் என்று தன் கட்டுரையில் தெரிகிறது எது உண்மை ?
2. ஞானி ஓ’பக்கங்கள்-ல மட்டும் வாரா வாரம் பூச்செண்டு (பொக்கே) கொடுக்கறார்....ஆனா தனக்கு கொடுத்த பூச்செண்ட மட்டும் உதாசீன படுத்திட்டார் ஏன் ?

மொபைல் போன் ரீசார்ஜ் மாதிரி எழுத்தாளர்களும் தங்கள் எழுத்தையும் கொஞ்சம் ரீசார்ஜ் செய்துக்கொள்ளுங்கள். பிளீஸ்!

ரீசார்ஜ் என்றவுடன் தான் நினைவுக்கு வருது இடைதேர்தலில் தி.மு.க.,வினர் இளம் வாக்காளர்களை கவரும் வகையில், ரீசார்ஜ் கார்டுகள் கொடுத்துள்ளனர். இப்ப தேர்தல் கமிஷன் என்ன செய்யும் ? பாவம் அவர்களுக்கு பால் போடுபவர்களையும், பேப்பர் போடுபவர்களையும் ஃபாலோ செய்வதே வேலையாகிவிட்டது. கழகத்தின் நூதன வழிகளை அவர்கள் கண்டுப்பிடிக்க சி.பி.ஐ, அல்லது FBIஉதவியை தான் நாட வேண்டும்.

இந்தியா-ஸ்ரீலங்கா முதல் ஒருநாள் போட்டி ராஜ்கோட்ல நடந்துது. மாட்ச் முடியறப்ப பெருசுகளுக்கெல்லாம் BP எகிறியிருக்கும். முதல்ல பாட்டிங் பண்ணின இந்தியா, ஷேவாக், டெண்டுல்கர், தோனி மற்றும் இதரர்கள் உபயத்தால 50 ஓவர்ல 414 ரன் எடுத்தது. இதுதான் ஒருநாள் போட்டிகள்ல இந்தியாவோட அதிகபட்ச ரன். முன்னூத்தம்பது ரன் எடுத்தாலே சேஸ் பண்றது கஷ்டம். இதுல நானூத்தி பதினைஞ்சு எல்லாம் முடியவே முடியாதுன்னுதான் எல்லாம் நினைச்சாங்க....கடைசில நடந்தது அப்படியே தலைகீழ். தில்ஷானும், சங்கக்காராவும் அடிச்ச அடில இந்தியா ஆட்டம் கண்டுடுச்சு ராஜ்கோட்ல. விதி கொஞ்சம் சதி பண்ணினதால அநியாயமா மூணே மூணு ரன் வித்தியாசத்துல இலங்கை தோத்துடுச்சு. ஆனாலும் மாட்ச்-ல உண்மையான வின்னர் என்னவோ இலங்கைதான். அந்த அளவுக்கு அருமையா ஆடினாங்க. கடைசில பேட்டி குடுத்த ஷேவாக்கே இலங்கையதான் சப்போர்ட் பண்ணினாராம். சிரிச்சுகிட்டே சொன்னார். ஆனா அதுக்கு அவர் சொன்ன காரணம் வேற!! நான் எந்த டீம சப்போர்ட் பண்றேனோ அது தோத்துடும். அதனாலதான் இலங்கைய சப்போர்ட் பண்ணினேன்னு சொன்னார். மேன் ஆஃப் த மாட்ச் விருது தில்ஷானுக்குதான் கொடுத்திருக்கணும். ஆனா இந்தியா ஜெயிச்சதால ஷேவாக் வாங்கிட்டார். இந்த மாதிரி அருமையான விளையாட்டு வீரர்களுக்கு டிவீட்டரில் சப்போர்ட் வேற. எங்கே போய் முட்டிக்கொள்வது ?

இப்ப Headலியால இந்தியா முட்டிக்கொள்கிறது. என்ன விஷயம் தெரியுமா ? அமெரிக்கா பல விஷயங்கள்ல டபுள் கேம் ஆடிக்கிட்டிருக்கறது புதுசு இல்ல. என்ன இப்ப கொஞ்சம் வெளிப்படையா தெரியுது. ஒபாமா சார்ந்துள்ள டெமாக்ரடிக் கட்சி எப்பவுமே இந்தியாவ ரெண்டாம்பட்சமாதான் பாவிக்கும். இவர்கள் வர வேண்டும் என்று சில அசடுகள் தமிழ் பிளாகின் சைடு பாரில் ஓபாமா வர வேண்டும் என்று போஸ்டர் கூட ஒட்டினார்கள். ஒருபக்கம் பாகிஸ்தான் டெர்ரட் ஸ்டேட்னு சொல்லிகிட்டே மறுபக்கம் பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி மற்றும் நிதியுதவி தாராளமா செய்யுது. அது அப்படியே ISI கைக்கு மாறி லஷ்கருக்கு விநியோகம் ஆகுது. அமெரிக்கா இதுல நேரடியா சம்பத்தப்படலைன்னாலும், இப்படி செய்யறவங்கள கண்டிக்காம வேடிக்கை பாக்குது. தவிர அமெரிக்கா இப்ப கைது பண்ணிருக்கற டேவிட் கோல்மேன் ஹெட்லி alias தாவூத் கிலானி ஒரு டபுள் கேமர். இவன் ஏற்கனவே போதை மருந்து கடத்தல் விவகாரத்துல 1988-ல கைது ஆனப்ப அப்ரூவரா மாறி தன்னோட முதலாளிங்களுக்கே பெரிய ஆப்பு வச்சுட்டான். அதனால FBI, அமெரிக்கால ட்ரக் ட்ராபிக்கிங்க கண்டுபிடிக்கறதுக்காக இவன தன்னோட சீக்ரெட் ஏஜெண்டா பயன்படுத்திகிட்டாங்க. இப்ப கிட்டத்தட்ட FBI அதே மாதிரி இவன பயன்படுத்திக்க போறதா செய்திகள் வெளியாகிருக்கு. அதாவது மும்பை தாக்குதல் விவகாரத்துல இவனோட பங்கு நிரூபிக்கப்பட்டதனால அல்மோஸ்ட் இவனுக்கு மரண தண்டனை உறுதி (அமெரிக்காலதான்!! நல்லவேளை இந்தியால மரண தண்டனைன்னா கருணை மனு, அவனோட அம்மா அழுகை, பிரதமருக்கு தூக்கம், பசியின்மை இவ்வளவு பிரச்சனைகள் இருக்கு, அங்க அதெல்லாம் கிடையாது). அதனால தண்டனைய குறைக்கறதுக்கு உபாயமா திரும்பவும் அப்ரூவரா மாறி FBI-க்கு உதவ போறானாம். இதுல மேற்கொண்டு இன்னும் என்ன ஆகப்போகுதுன்னு பொருத்திருந்துதான் பாக்கணும். அப்படியே மரண தண்டனை விதிச்சா இந்தியாகிட்ட அவன ஒப்படைக்காம அங்கேயே தண்டனைய நிறைவேத்தறதுதான் நல்லது. ஏற்கனவே முஸ்லிமா இருந்தவன் இப்ப கிறிஸ்தவனா மாறிட்டதால, இப்ப இவன இங்க தூக்குல போட்டா முஸ்லிம், கிறித்துவ ஓட்டெல்லாம் பறி போய்டுமோன்னு காங்கிரஸுக்கு அஸ்தில ஜன்னி வந்துடும்.

பெண்கள் போடும் கண்டிஷனை கேட்டால் ஆண்களுக்கு ஜன்னி வந்துடும் போல. போன வாரம் எனக்கு வீட்டில் பெண் பார்க்க ஆரம்பித்தார்கள். தமிழ் மேட்ரிமோனில பொண்ணு தேடின போது எனக்கு வந்த முதல் அதிர்ச்சி. அமெரிக்க மாப்பிளையாக இருக்கணுமாம்(அது கூட பரவாயில்லை), அப்பறம் ஸீ ஷோர் ல வீடு இருக்கணுமாம், இங்க இருக்கற பெஸண்ட் நகர்ல ஸீ ஷோர் ப்ளாட் வாங்கினாலே கோடிக்கணக்குல போகும். இதுல அமெரிக்கால ஸீ ஷோர்னா எங்க போறது?? மியாமி மாதிரி எடத்துல வீடு வேணும்னா டைகர் உட்ஸ் மாதிரியான ஆளுங்கள புடிச்சாதான் கட்டுப்படி ஆகும் இவங்க கண்டிஷனுக்கெல்லாம். பெண்கள் எல்லாம் ரொம்ப உஷார் பார்ட்டிகள் தான்.

திருமணம் என்று சொன்னவுடன் அடுத்த நியூஸ் ஒண்ணு ஞாபகம் வருது. அப்பன்காரன் நேர்மையா சேர்த்த சொத்தை உட்கார்ந்து சாப்பிடுறவனையே நம்ம சமூகம் கௌரவமா பார்க்காது. இந்த லட்சணத்துல அவதாரப் புருஷன் ஒருத்தனுக்கு வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்க சுயம்வரம் நடத்தப்போகுது NDTV Imagine. கலி முத்திடுச்சு வேற என்ன சொல்ல. ராகுல் மாகாஜனுக்கு சுயம் வரமாம்.

ராகுல் மகாஜன் யார் தெரியுமா ? மறைந்த பா.ஜ.க தலைவரும், வாத்தியாராக இருந்து அரசியல் முதலீட்டில் கோடிகளைப் பார்த்த பிரமோத் மகாஜனின் மகன். போதை மருந்து உட்கொண்டதால் உள்ளே சென்று வெளியே வந்தவர். ஏற்கனவே ஒரே ஒரு தடவை மட்டும் திருமணம் ஆனவர். தனது மனைவியை கொடூரமாக அடித்ததன் விளைவாக அந்த விவாகமும் ரத்தானது. பி.ஜே.பி பிரமோத் மகாஜனின் மகன் என்ற ஒரே காரணத்துக்கு பி.ஜே.பியில் சேர்த்தது. இப்படிப்பட்டவருக்கு பொண்ணு பார்த்து இன்னொரு திருமணம் செய்து வைக்கப் போகிறது NDTV Imagine. NDTVக்கு ஏன் இந்த வேலை ? ஏதோ பரபரப்பு கொண்டு வந்து ரேட்டிங்கை உயர்த்தணும்.

ராகுல் மாகாஜனும் பல கோடிகளுக்கு அதிபதி ஆனவர் ஆகையால், பல பெண்களும் க்யூவில் நிற்கத் தயாராம்! எந்த பெண் இவரை செலக்ட் செய்வார் என்று பார்க்க இந்தியாவே ஆவலா இருக்கு. இது ஒரு வகை செலக்ஷன். பெயர் சுயம்வரம்.

ரோட்டில் விபசாரிகள் நிற்பார்கள் வரும் கஸ்டமர்கள் அவர்களை நோட்டம் விட்டு தங்களுக்கு பிடித்தவரை செலக்ட் செய்து கூட்டிகிட்டு போவார்கள். இந்த செலக்ஷனுக்கு பெயர் விபச்சாரம். கண்டேன் காதலில் கூட அப்படி ஒரு சீன் வரும். விபசாரத்தை தடுக்க முடியவில்லை என்றால் அதை ஏன் சட்டப்பூர்வமாக ஆக்கக் கூடாது என்று மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியது. நீதிபதிகள் கடைசியாக அரசை இந்த மாதிரி கேள்வி கேட்டுள்ளார்கள்
"நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தி பற்றி நாம் பெருமையுடன் பேசுகிறோம். ஆனால், நாட்டில் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் மக்களின் எண்ணிக்கை 30 சதவீதத்தில் இருந்து தற்போது 37 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது. 5, 6 குடும்பங்களின் வளர்ச்சியை வைத்து, ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியடைந்து இருப்பதாக கருதக் கூடாது. ஒழிக்கப்படவேண்டிய வறுமை நிலை காரணமாகத்தான் சிறுமிகள், பெண்கள் கடத்தப்படுவதும், விபசாரத் தொழில் செழிப்பாகவும் நடப்பதற்கு முக்கிய காரணம்" இந்த மாதிரி அரசை தான் நாம் ஐந்து வருடத்துக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கிறோம்.


இன்னிக்கு வந்த மெயிலை பார்த்தால் பெண்கள் உஷாரா இருக்க வேண்டும் போல. ....சென்னையில் உள்ள ஒரு பிரபல மாலில் “ட்ரயல் ரூம்”-ல பின்ஹோல் ரக சிறிய கேமரா வைத்து சில விஷமிகள் ட்ரெஸ் சேஞ்ச் பண்றவங்கள கவனிக்கறாங்களாம். மனுஷங்களோட வக்கிரம் எந்த அளவுக்கு போய்கிட்டிருக்கு?? இந்த மாதிரி செய்பவர்களை ட்ரயல் கோர்டில் முதலில் ஆஜர் படுத்த வேண்டும்.


தற்பொது செட் தோசை மாதிரி செட் செட்டாக புத்தகம் வெளியிடும் எழுத்தாளர்கள் எல்லாம் எனக்கு இவ்வளவு புத்தகம் இருக்கு ஆனால் எனக்கு கிடைக்கும் ராயல்டியில் சாதா தோசை கூட வாங்க முடிவதில்லை என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். தீவிரவாதிகளின் வண்ட வாளங்களையே அசால்டாக எழுதும் பா.ராகவன் பதிப்பாளர்களின் வண்டவாளங்களை நாசுக்காக நசுக்கியுள்ளார்.


இரண்டு சிரிப்பு(சிறப்பு?)செய்திகள் :

இரண்டு நாளுக்கு முன் துவங்கி திங்கள் முதல் வியாழன் வரை இரவு தோறும் எட்டு மணிக்கு, ஜெயா தொலைக்காட்சியில், “சோ” வின் எங்கே பிராமணன் பாகம் இரண்டு துவங்கிவிட்டது. வாருங்கள், நாமும் சோவுடன் சேர்ந்து பிராமணர்களைத் தேடலாம்!.

எழுத்தாளர் கடுகு வலைப்பதிவு ஆரம்பித்திருக்கார். விதி யாரை விட்டது ? இதை அறிவிப்பாகவோ அல்லது எச்சரிக்கையாகவோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்! உங்கபாடு. http://kadugu-agasthian.blogspot.com/

வீணையை தந்திக்கருவின்னு சொல்லலாம், கடத்தை தொந்திக்கருவின்னு சொல்ல முடியுமா ? இசை சீசன் ஆரம்பித்துவிட்டது. இசை சம்பந்தமா விமர்சனங்கள் இட்லிவடை வரவேற்கிறது!.

அன்புடன்,
முனி

17 Comments:

Heam said...

me the first ? எவ்ளோ பெரிய பதிவு ... சூப்பர் idly vadai

SUBBU said...

ம்ம் நடக்கட்டும் !!

Heam said...

//சரி, இந்த அமைச்சர் சோனியா காந்தி வந்தால் வணங்குவாரா மாட்டாரா ? இதுதான் என் கேள்வி.// அரசியல இதெல்லாம் சாதாரணம் இதெல்லம் கண்டுக்க படாது ..

// நான் குமுதம் படிக்க மாட்டேன் என்று சொல்லும் சாரு வாரா வாரம் குமுதம் படிக்கிறார் என்று தன் கட்டுரையில் தெரிகிறது எது உண்மை ?
2. ஞானி ஓ’பக்கங்கள்-ல மட்டும் வாரா வாரம் பூச்செண்டு (பொக்கே) கொடுக்கறார்....ஆனா தனக்கு கொடுத்த பூச்செண்ட மட்டும் உதாசீன படுத்திட்டார் ஏன் ? //
இவங்க எல்லாம் இந்த பதிவுக்கு வொர்த் இல்லைங்க எல்லாம் காமெடி பீசு ..

//ஏற்கனவே முஸ்லிமா இருந்தவன் இப்ப கிறிஸ்தவனா மாறிட்டதால, இப்ப இவன இங்க தூக்குல போட்டா முஸ்லிம், கிறித்துவ ஓட்டெல்லாம் பறி போய்டுமோன்னு காங்கிரஸுக்கு அஸ்தில ஜன்னி வந்துடு//
இது தன இட்லி வடை பஞ்ச்

//பெண்கள் போடும் கண்டிஷனை கேட்டால் ஆண்களுக்கு ஜன்னி வந்துடும் போல.// same blood

இப்போ இது போதும் நெக்ஸ்ட் மீட் பண்ணலாம்

Anonymous said...

Did Nayan object to sharing the cover with a writer. She would have had she seen that cover.What is the circulation of Kalki- 20-30 K?

butterfly Surya said...

”கல்கி” இண்டர்நெட் சிறப்பிதழ் என்றதும் ஆசையாய் வாங்கினேன்.

தமிழ் வலைப்பதிவுகளில் பெண்கள் பகுதியில் வெளியான பதிவர்களுக்கு கூட அந்த அவர்களின் வலை பற்றிய விபரங்கள் வெளியானது தெரியவில்லை. நான் வாழ்த்து சொன்னதும் அப்படியா என்றார்கள்..?

நயன் மேட்டரை தான் இணையமா என்றும் புரியவில்லை..??

எந்த சுவாரசியமும் இல்லை.ஒரு வேளை தினமும் இணையத்தில் உலவுவதால் நம்க்கு தான் அப்படியா என்று தெரியவில்லை.. ???

யதிராஜ சம்பத் குமார் said...

ரோட்டோர விபச்சாரம் பற்றி நேற்றைய முன்தின இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு ஒரு முழுப்பக்க அளவிலான கட்டுரையை இரண்டாவது பக்கத்தில் பிரசுரித்திருந்தது. கடந்த ஒருவார காலமாகவே இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு கோயம்பேடு மார்க்கெட் மற்றும் பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் நிகழும் சமூக விரோத செயல்களைப் பற்றி விரிவாக அலசி வருகிறது. இதில் விபச்சாரமும், குழந்தை வியாபாரமும் மிகவும் பிரதானமானது.

அங்கு நடக்கும் விபச்சாரம் உட்பட அனைத்து சமூக விரோத செயல்களையும் கண்டும் காணாமல் இருப்பதற்காக காக்கிகளும் கணிசமான அளவில் கவனிக்கப்படுகின்றனர். நமது நிர்வாகம் எந்த அளவிற்கு லஞ்ச லாவண்யங்களால் புரையோடி போயிருக்கிறது என்பதற்கு இதெல்லாம் கண்கூடான உதாரணம். அரசாங்கத்தைக் குற்றம் சொல்லி அலுத்து விட்டது.

வேஷ்டி சேலை, குவார்ட்டர் பிராந்தி, ஐநூறு ரூபாய் பணம் இவற்றிற்கெல்லாம் தமிழர்கள் என்று விலை போக ஆரம்பித்தனரோ அன்றே தமிழக்த்தின் விநாச காலம் துவங்கி விட்டது.


சட்டமும், நீதியும் இங்கு சவக்குழிக்குள் புதைக்கப்பட்டு வெகு காலமாகின்றது. அன்றே கொல்ல வேண்டிய அரசர்களும் பலவிதங்களில் குற்றவாளிகளாய் இருப்பதால், இன்னமும் இருப்பதாக நம்பப்படும் தெய்வம்தான் நின்று கொல்ல வேண்டும். என்ன செய்வது? நல்லது நடக்கும் என்று நம்புவதுதான் இன்றைய நடைமுறை வாழ்க்கையின் ஆதாரஸ்ருதி.

கௌதமன் said...

கல்கி இணைய சிறப்பிதழ் - பெங்களூரில் நான் இருக்கும் பகுதியில் கிடைக்கவில்லை. அண்ணன் எனக்காக வாங்கி வைத்திருக்கிறார்; அடுத்த வாரம் சென்னை சென்று படிக்கிறேன்.
இன்னும் கொஞ்ச நாளில், சென்னையில், 'நயன்தாரா மென்று துப்பிய சூயிங் கம் - நானூறு ரூபாய் ' என்று கவரில் போட்டு விற்றால் நிறைய சேல்ஸ் ஆகும்போலிருக்கு!
நன்றி இ வ!

கௌதமன் said...

// "மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 3-12-2009 //
இன்றைக்கு தேதி பதினாறு என்று ஞாபகம்!

vedanarayanan said...

நயன் : It dilutes the purpose of the internet edition. No excuse ராஜேந்திரன் சார்!

Tiger : சதி லீலாவதி scenerio . But end is different .

Headly : We have to understand that USA is selfish and everyone is selfish . They have no interest to solve our problem . Let us Learn from Israel .

Matrimony : Have fun and good luck . இப்ப எல்லா parents நிறைய பொய் சொல்லறாங்க. Expr.

ராகுல் : என்ன கொடுமை சார். இவனுக்கெல்லாம் importance and coverage . Atleast நீங்களாவது இவனை பற்றி இனிமேல் எழுதாமல் இருங்கள்.

மியூசிக் சீசன் : I will try to write something as I follow music season.

IdlyVadai said...

//மியூசிக் சீசன் : I will try to write something as I follow music season.//

மிக்க நன்றி. நாளைக்கே அனுப்புங்க. ஆங்கிலம், தமிழ கலந்து எழுதினாலும் பரவாயில்லை !

IdlyVadai said...

//இன்றைக்கு தேதி பதினாறு என்று ஞாபகம்!//

ஆமாம் எனக்கு அதே ஞாபகம் தான் :-)

Anonymous said...

கல்கி இணைய இதழ் பற்றி. இன்றையக் கல்கியின் ஜாதகக் கோளாறோ என்னவோ, சுவாரசியமான விஷயங்களைக் கூட உப்புச் சப்பில்லாமல் வெளியிடுவதுதான். சுவாரசியமாக எழுதும் வெங்கடேஷின் எழுத்தும் கல்கியில் வெளியானதும் கையறு நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. கல்கியின் ஃபாண்டுகளைக் குறைத்து, ஒரே பக்கத்தில் பல பெட்டிகள் வருவதை நிறுத்தி “லே அவுட்டை”ச் சீராக்கி “சுவாரசியம்” என்பதை முன்னிறுத்தி, கல்கி தன்னைத் தோலுரித்தால் அல்லாது எடுபடாது.
அ. நாமதேயன்

Anonymous said...

//போன வாரம் எனக்கு வீட்டில் பெண் பார்க்க ஆரம்பித்தார்கள். தமிழ் மேட்ரிமோனில பொண்ணு தேடின போது எனக்கு வந்த முதல் அதிர்ச்சி. //

"முன்று"கூடிய
சீக்கிரம்
"ஆறு" ஆக வாழ்த்துக்கள்

உண்மைத்தமிழன் said...

[[[போன வாரம் எனக்கு வீட்டில் பெண் பார்க்க ஆரம்பித்தார்கள். தமிழ் மேட்ரிமோனில பொண்ணு தேடினபோது எனக்கு வந்த முதல் அதிர்ச்சி.]]]

அப்பாடா.. முன்னாடியெல்லாம் பதிவர்கள்கிட்டதான் கலர், கலரா ரீல் சுத்திக்கிட்டிருந்தீங்க..

இப்ப முனியாண்டவர்கிட்டயே ரீலா..?

இன்னும் எத்தனை கல்யாணம் சாமி பண்ணுவீங்க..?

ப்ரியா கதிரவன் said...

உண்மைத்தமிழன்,

நல்லா படிங்க, லெட்டரை எழுதி இருக்குறதே முனி தான்.

முனிக்கே இன்னும் கல்யாணம் ஆகலை போல.

:-)

Anonymous said...

இரவு தோறும் எட்டு மணிக்கு, ஜெயா தொலைக்காட்சியில், “சோ” வின் எங்கே பிராமணன் பாகம் இரண்டு துவங்கிவிட்டது. வாருங்கள், நாமும் சோவுடன் சேர்ந்து பிராமணர்களைத் தேடலாம்!.
# i found two brahmins, one is you and another is me#....hohoho...

Anonymous said...

இட்லி தலிவா .. காலம் ரொம்ப மாறிதிச்சு .... இப்போ எல்லாம் பிஸ்சா, கே அப் சி நம்ம மக்க பாஸ்ட் ஆஹ பொய்யீனு இருக்க .... யார் பயாசெ படிக்கிறது ....சிரிபே வரலே... கடுகு தாத்தாவை . ....பூச்ச எழுது சொல்லு