பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, December 16, 2009

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 16-12-2009 (முதல் பகுதி )

அன்புள்ள இட்லிவடை வாசகர்களுக்கு,

இந்த வாரம் நான் இரண்டு கடிதம் எழுதப்போகிறேன். ஆந்திராவையே அசால்டாக பிரிக்கிறார்கள், கடிதத்தை பிரிப்பது என்ன பெரிய விஷயம்.
அதனால் முதல் கடிதம் இட்லிக்கும், அடுத்த கடிதம் வடைக்கும். முதல் கடிதத்தில் பாதி பாதியாக (முழுக்க முழுக்க என்று சொல்ல முடியாது) தெங்கானா பற்றியது. அடுத்த கடிதத்தில் வழக்கமான அவியல். இட்லிக்கும் வடைக்கும் தனி தனியாக கடிதம் எழுதினாலும், காமனாக இருப்பது உளுந்து அதனால் இரண்டும் சுமாராக இருக்கும் என்று நம்புகிறேன்.

பிகு: தற்போது பெரிதாக இருக்கும் பதிவுகளை பிரித்து இரண்டு மூன்று போஸ்டாக போடுவது இன்னொரு டெக்னிக் :-)

அன்புடன்,
முனி

வணக்கம் இட்லி,

என்ன தனி தனியா கடிதம் என்று யோசிக்காதே. இப்ப எல்லாம் பிரித்து பேசுவது தான் ஃபேஷன். தெலுங்கானா பிரச்சனையை எடுத்துக்கோ இது நேரு காலத்திலிருந்து இருக்கு, ஆனால் ஒருவர் உண்ணா விரதம் இருந்த உடன் எல்லோரும் அதை பற்றி பேச ஆரம்பித்துவிட்டார்கள். இந்த பிரச்சனையை புரிந்துக்கொள்ள கொஞ்சம் ஹிஸ்டரி எல்லாம் படிக்கணும். போராட்டமும், பஸ்ஸையும் கொளுத்தும் இந்த இளைஞர்களுக்கு இந்த ஹொஸ்டரி எல்லாம் தெரியுமா என்று எனக்கு டவுட். இப்போதைய ஆந்திரம் முன்பு தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அப்போது தமிழகம் மதறாஸ் ஸ்டேட் என்று அழைக்கப்பட்டது. இது எல்லாம் நாம பிறப்பதற்கு முன்பு. ஹைதராபாத் தனி பகுதியாக நிஜாமின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1952 இல் பொட்டி ஸ்ரீராமுலு என்ற சுதந்திரப் போராட்ட வீரர், தெலுங்கு பேசும் மக்களைப் பெருவாரியாகக் கொண்ட பகுதியை ஆந்திர மாநிலமாக மதறாஸ் ஸ்டேட்டிலிருந்து பிரிக்க வேண்டும் என சாகும் வரை உண்ணா விரதப் போராட்டம் மேற்கொண்டார். அப்போ நேரு பிரதமாராக இருந்த சமயம். தாமதமாக செயல்பட்டார், அதனால பொட்டி ஸ்ரீராமுலு மரணம் அடைந்தார். அப்பறம் என்ன நடக்கும், கலவரம் தான். உடனே நேரு விழித்துக்கொண்டு 1953ல் ஆந்திரம் தனி மாநிலமாக ஆனது.

1990ல் பி.ஜே.பி. தன் பங்கிற்கு குழப்பம் செய்தது. பாஜக ஆட்சிக்கு வந்தால் தனி தெலுங்கானா மற்றும் இன்ன பிற மாநிலங்களை உருவாக்குவோம் என பிரச்சாரம் மேற்கொண்டது. அதே போல் ஆட்சிக்கு வந்த பிறகு ஜார்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் உத்ராஞ்சல் ஆகிய மாநிலங்களையும் உருவாக்கியது. ஆனால் கூட்டணிக் கட்சியான தெலுகு தேசத்தின் முட்டுக் கட்டையால் பாஜக-வால் தனி தெலுங்கானாவை உருவாக்க முடியாமலேயே போய்விட்டது. அதற்குள் சந்திரசேகர ராவ் தலைமையிலான “தெலுங்கானா ராஷ்டிர சமிதி” என்ற ஒரு புதுக் கட்சி ஆரம்பித்தார். காங்கிரஸுக்கு தான் கூட்டணி கொள்கை என்று ஒன்று கிடையாதே அதனால் 2004 தேர்தலில் காங்கிரஸ் தனி தெலுங்கானாவை உருவாக்குவோம் என்ற வாக்குறுதியுடன் சந்திர சேகர ராவின் கட்சியுடன் கூட்டணி வைத்தது. இது என்ன பிரமாதம் ? ராஜிவ் காந்தி கொலையில் திமுகவிற்கு சம்பந்தம் என்று பேசியவர்கள், பிறகு கூட்டணி வைக்க வில்லையா ? அதுக்கு இது பரவாயில்லை. காங்கிரஸ் 2004 இல் ஆட்சியமைத்தவுடன் சந்திரசேகர ராவ் அமைச்சரவையிலும் பொறுப்பேற்றார்.

இதற்குள் காங்கிரஸ் வேறு ஒரு கணக்கு போட்டது. ஹைதரபாத்தில் அதிக அளவில் வசிக்கும் சிறுபான்மையினர், குறிப்பாக இஸ்லாமிய சமுதாயம் தனி தெலுங்கானாவை வரவேற்கவில்லை என்ற ஒரு காரணத்தைக் கூறி தனி தெலுங்கானா பிரச்சனைக்கு தற்காலிகமாக முற்றுப் புள்ளி வைத்தது. எப்படி என்று கேட்க கூடாது. இருக்கவே இருக்கு ஏதோ ஒரு கமிட்டி பாலிட்டிக்ஸ். பிரணாப் முக்கரிஜி தலைமையில் ஒரு குழு உருவாக்கி ஆராய தொடங்கியது. இதில கொஞ்சம் கடுப்பான சந்திரசேகர ராவ் , 2006-இல் காங்கிரஸ் ஆட்சிக்கான ஆதரவை வாபஸ் மற்றும் ராஜிநாமா என்று கூத்து எல்லாம் நடந்தது. பிறகு கரீம்நகர் தொகுதியில் போட்டியிட்ட சந்திர சேகர ராவ் மிகப்பெரிய அளவில் வெற்றியை ஈட்டினார்.

இது தான் முன்கதை சுருக்கம். ஆனால் ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம். என்ற பழமொழி இருக்கு. இந்த மாதிரி செய்திகளுக்கு கூத்தாடிகள் நம்ம மீடியாதான். அதனால சந்திரசேகர ராவ் உண்ணாவிரதம் இருக்கும் போது "இன்று 8வது நாளாக உயிருடன் இருக்கிறார்" , "இன்று ஒன்பதாவது நாள்" என்று மீடியா போட்டி போட்டுக்கொண்டு அவரையும் மக்களையும் உசுப்பி விட்டார்கள்.

உடனே காங்கிரஸ் கேக் வெட்டுவது போல தெலுங்கானாவை பிரித்து எடுத்துவிட்டது. கேக் வெட்டும் போது அதில ஒரு ப்ளம் இருந்தால் உடனே நம் குழந்தைகள் சண்டை வராது யாருக்கு ப்ளம் உள்ள கேக் பீஸ் என்று ? அது போல ஹைதராபாத் தெலுங்கானாவிற்கு போக உடனே அரசியல் குழந்தைகள் எல்லாம் உடனே ராஜினாமா செய்யத்தொடங்கி இப்ப ஜனாதிபதி ஆட்சி வரும் நிலைமை.

இந்த சந்தரசேகர ராவ் உண்ணாவிரதம் போராட்டம் எதற்கு என்று பார்த்தால் எல்லாம் சுயநலம். கடந்த சட்டமன்ற தேர்ததில் அவர் கட்சி படுதோல்வி அடைந்ததது. இப்ப நம்ம மக்கள் போன தேர்தல் போது இலங்கை தமிழர் பிரச்சனை என்று ஆரம்பிக்கலை ? அது போல தான் இவரும். இவர் தன் கௌரவத்தை தக்க வைத்துக்கொள்ள இந்த உண்ணாவிரத ஸ்டண்ட். சரி தெலுங்கானா எப்படிப்பட்ட இடம் என்று பார்த்தால் படிப்பறிவில்லாதவர் தான் இங்கே அதிகம். இங்கே தான் விவசாயிகள் தற்கொலை அதிகம். இங்கு தான் வறுமை அதிகம். இங்கே இருக்கும் மக்கள் உணவு கிடைக்காமல் தினமும் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். ஆனால் இவர் உண்ணாவிரதம் இருந்த உடன் எல்லோரும் கொத்தித்து எழுந்துவிட்டார்கள். உண்ணாவிரதம் இருந்து தனி மாநிலமாக தெலுங்கானா வந்தால் எப்படி இவர்கள் பிரச்சனை விடிவுக்கு வரும் ? தனி மாநில செலவை இங்கு ஏழை மக்களூக்கு கொடுத்தால் நன்றாக இருக்கும்.

சரி தெலுங்கானா பற்றி நிறைய பேசியாச்சு, அடுத்து இதே மாதிரி கோரிக்கையை நாடு முழுவதும் எல்லோரும் சொல்லுவது தான் இப்போது ஃபேஷன்.தலைவலி போய் திருகுவலி வந்த கதையா பிரிவினை பிரியர்கள் எல்லாம் பார்த்தாங்க., கர்நாடகால கூர்க் தனியா பிரிக்கணும்னு ஒரு கூட்டம், மேற்கு வங்கத்த ரெண்டா பிரிச்சு கூர்க்காலாந்துன்னு ஒரு கூட்டம், மஹாராஷ்டிரத்த பிரிச்சு விதர்பா வேணும்னு ஒரு கூட்டம்!! இத்தனைக்கு அப்பறமும் மாயாவதி சும்மா இருந்தா சரியா வருமா? பார்த்தாங்க என்ன பண்ணலாம்னு?? உத்திரப் பிரதேசத்த நாலா பிரிக்கணும்னு போட்டாங்க ஒரு போடு. விளைவு?? மன்மோகன் சிங் இப்ப மண்டய பிச்சுகிட்டு இருக்கார்.

நம்ம ராமதாஸ் கூட தமிழகம் இரண்டாக பிரிக்க வேண்டும் என்று சொல்லுகிறார். என்னையும் யாராவது கண்டுகொள்ளுங்கள் என்று இவர் கெஞ்சுவது பரிதாபமாக இருக்கிறது. நேற்று நாங்கள் எந்த கூட்டணியிலும் இல்லை. 2011ல் தான் கூட்டணி குறித்து பேசுவோம் சொல்றார். 2012ல உலகம் அழிய போகிறது என்பது உண்மை தானா ? தமிழக அரசியல் தலைவர்கள், வலைப்பதிவாளர்கள், மீடியாக்களுக்கு ஒரு கோரிக்கை. ராமதாஸையும் கொஞ்சம் கண்டுகோங்கப்பா.

இன்னும் கொஞ்ச நாளில் தமிழக காங்கிரஸ் கட்சிகாரர்கள், எங்க கோஷ்டி எல்லம் தனி தனி கட்சியாக பிரித்து கொடுங்க என்று கேட்கப்போறாங்க.

இன்னொரு கடிதம், முடிந்தவரையில் இன்னும் சில மணி நேரத்தில் வரும்,
என்று சொல்லி இத்துடன் இந்த கடிதத்தை முடிக்கிறேன்.
இப்படிக்கு,
முனி

இந்த மாதிரி பிரிப்பதில் சில நன்மைகள் இருக்கு. முன்பு ஆந்திரம் தனி மாநிலமாக பிரித்ததால் என்ன நன்மை என்று பார்த்தால், விஜய்க்கு, அவரின் பல படங்கள் ஆந்திராவிலிருந்து வருகிறது.அடுத்த கடிதம் 1:00 மணிக்கு

16 Comments:

சீனு said...

http://thatstamil.oneindia.in/news/2009/12/16/so-called-prabhakaran-daughter.html

சீனு said...

//2011ல் தான் கூட்டணி குறித்து பேசுவோம் சொல்றார். 2012ல உலகம் அழிய போகிறது என்பது உண்மை தானா ?//

:))

SATHEESH said...

வணக்கம் இட்லி , கொஞ்சநாள் முன்னாடி "வேட்டைக்காரன் டோய் வேட்டைக்காரன் டோய்" நு ஒரு பாட்டு வந்ததே அது என்ன படம் ?

ரிஷபன்Meena said...

மதறாஸ் ஸ்டேட் பிரிக்கப்படாமல் இருந்திருந்தால் வேட்டைகாரனுக்கு ரீமேக் படங்கள் கிடைத்திருக்குமா ???

Anonymous said...

விஜய்யின் 'சுறா'வையும் வாங்கிய சன்!
from - thatsTamil

விஜய் நடிக்கும் 50 வது படமான சுறாவையும் வாங்கி விட்டது சன் பிக்சர்ஸ் நிறுவனம். ஏற்கெனவே விஜய் நடித்த 49வது படமான வேட்டைக்காரனை வாங்கியது சன் பிக்ஸர்ஸ். இந்தப் படம் சன் பிக்ஸர்ஸ் வசம் வந்த பிறகு விஜய்க்கும் சன்னுக்கும் ஏக லடாய் என்றெல்லாம் செய்திகள் வந்த நிலையில், இப்போது சுறாவும் சன் பிக்ஸர்ஸ் வசம்

சைவகொத்துப்பரோட்டா said...

பிரிவினை பேசுவோர் சோவியத் யூனியன் பற்றி கொஞ்சம் நினைவில் வைத்து கொண்டால் சரி.

vedanarayanan said...

Irreversible என்று சொல்லுவார்கள். அதற்கு கரெக்ட் example இந்த announcement , by our மாஜி finance மினிஸ்டர் (I donot plan to call him as home minister).

Cong ஒரு announcement பண்ணியது , எல்லா பார்ட்டியும் (காங், TDP ) ரெண்டாக உடைந்தது.

இதில் வேடிக்கை என்னவென்றால், as usual congress itself is a divided house in AP like Rosaiah & ஜகன்மோகன். தவிர இதில் ராஜகோபால் MPஉம் ஆதாயம் தேட பார்கிறார். And Telengana காங், ஜகன்மோகனை எதிர்க்கிறது
.. பயங்கர ஜோக் போங்கள்!.

Heam said...

ஆஹா .. காலைல இருந்து முதல் கமெண்ட் போடுறதுக்கு வெயிட் பண்ணிட்டு இருந்தால் .. மிஸ் ஆயிடுச்சே .. ( வடை போச்சே ! ) சரி படிச்சிட்டு வந்து மற்ற விஷயம் பேசலாம் ...

Heam said...

நானும் கோவையை தனி மாநிலமா கேட்கலமனு யோசிச்சிட்டு இருக்கேன் .. அப்டியே சென்னை கு இட்லிவடை காலைமுதல் காலை வரை உண்ணாவிரதம் இருப்பர் .. 2012 இல் உலகம் அழியுதோ இல்லையோ ..இந்தியாவ இவங்க ஒரு வழி பண்ணாம விடமாட்டாங்க போல இருக்கு .. ஹ்ம்ம் மக்களை அந்த பாடி காட் முனிஸ்வரன் தான் காப்பாத்தனும்

கௌதமன் said...

தெலங்கானா பிரிச்சிக் கொடுத்த அப்புறம், அஞ்சு பேருங்க வட தெலங்கானா, தென் தெலங்கானா, மேல் தெலங்கானா, கீழ் தெலங்கானா, மத்திய தெலங்கானா என்று பிரிவினை கோரி உண்ணாவிரதம் இருந்தால் என்னவாகும்?

Guru said...

idly correcta vandhuchu.. vadai oru manikku varumnu sonnanga.. vadaiya kanom.. mani 2.30 achu.. oru velai ulunthu pathalayo..

மர தமிழன் said...

இ.வ. இதுல காமடியே .. சரி பிரிச்சிடலாம்னு அன்னையும், சிங்கும், முடிவெடுத்தப்ப... வெளில தெலுங்கானாவின் தந்தை யார்ன்னு பட்டிமன்றம் நடத்த ஆரம்பிச்சிட்டாங்க... அன்னை சோனியாதான்னு ஒரு எம்பி இல்ல இல்ல சந்திர சேகர ராவ் தான்னு ஒரு எம்பி, யோவ் அதெல்லாம் 50 வருஷத்துக்கு முன்னாடியே நாங்க கேட்ட பங்கு ன்னு ஒரு எம்பி ன்னு செம எகிறு...

எனகென்னமோ தெலுங்கானாவின் தந்தை யாருன்கரதுதான் அடுத்த ஹாட் டாபிக் என்ன பெட்??

தமிழ்நாடு?? வேளை வரும்போது அதுவும் நடக்கும்தான் போல.... கூட்டி கழிச்சு பாருங்க... கணக்கு சரியா வரும்.

Anonymous said...

In situations like this, people have the chance to recognize politicians who have atleast some concern for people and those who are in politics purely for monetary purposes. People who support separation are traitors. But people who support unity have atleast some concern for the people. I applaud Karuna and Jaya for their stand. I find it difficult to respect Ramadoss after his call for separation.

Anonymous said...

kggwothaman said,
"தெலங்கானா பிரிச்சிக் கொடுத்த அப்புறம், அஞ்சு பேருங்க வட தெலங்கானா, தென் தெலங்கானா, மேல் தெலங்கானா, கீழ் தெலங்கானா, மத்திய தெலங்கானா என்று பிரிவினை கோரி உண்ணாவிரதம் இருந்தால் என்னவாகும்?"

--->எப்படி சார், இப்படிலாம் யோசிக்க்கறீங்க?
"இதுக்கு பேர் தான் ரூம் போட்டு யோசிக்கறாங்க" என்பதோ?

கானகம் said...

தெலுங்கானா பஞ்சாயத்தை முடித்து வைத்த காங்கிரஸுக்கு நன்றியும், அதன்மூலம் நாடு முழுவதும் பிரிவினையை உசுப்பி விட்ட காங்கிரசுக்கு கண்டனமும் ..
:-)

சரி ஸ்ரேயா படத்திற்கு வெறும் ஸ்மைலி மட்டும்.. என்ன அர்த்தம்?

மியாவ்,மியாவ் பாட்டுல வந்த ஸ்ரேயா படத்தை போடாம இதென்ன மோசமான படம்?

Anonymous said...

We seriously need to think about splitting TN in to 3.
All the development is concentrated only at Madras, which is geographically at the end for any one from west and south to reach.
we have around 1 cr people in madras.
may be madras and near by states should form madras patnam

kovai erode,salem karur,tiruchi,nilgiri

rest in to madurai state.