முக்கியமில்லாத குறிப்பு: 'தேங்க்ஸ் கிவிங்' வெக்கேஷனில் இருந்தோம். அதனால் சில நாட்கள் கடையை மூடிவிட்டோம். சந்தோஷமாக இருந்த பலருக்கும், வருத்தப்பட்ட சிலருக்கும் எங்கள் நன்றி.. திரும்ப வந்துட்டோம். இனி உங்க பாடு...
முனி கடிதம் வழக்கம் போல...
அன்பின் இவ,
என்ன நடக்குது நாட்டுல ஏன் ஆளையே காணோம் ? நிறைய விஷயம் நடதுக்கிட்டு இருக்கு நீ கம்முனு இருந்தா எப்படி ? குமுதம் படிக்கும் பழக்கம் இருக்கா ? இல்ல சாரு மாதிரி நண்பர்கள் சொன்னா தான் படிப்பையா ? சரி மேட்டருக்கு வரேன் சாரு பற்றி அரசு கேள்வி பதில இப்படி வந்திருக்குஇளையராஜாவுக்கு இசையமைக்கத் தெரியாது என்கிற ரீதியில் தொடர்ந்து எழுதி வருகிறாரே சிற்றிதழ் எழுத்தாளர் சாரு நிவேதிதா?
ஒரு நிஜமான இலக்கியவாதியிடம் இது குறித்துக் கேட்ட போது, அவர் தந்த பதில் இது. ‘எங்க இலக்கிய உலகில் அவரை ஜோக்கராதான் பார்ப்போம். நீங்க ஏன் அதை சீரியஸா எடுத்துக்கிட்டு... ’ அதனால் சிரித்து விட்டுப் போங்கள்.
நாம என்ன செய்வோம், அட, குமுதத்தில தீட்டியிருக்காங்க என்று ஜாலியா இருப்போம் ஆனா சாருக்கு BP ஏறி போச்சு. உடனே பத்திரிக்கையை திட்டும் தலைவர் மாதிரி அது 'பிரா'மின் பத்திரிக்கை என்று போட்டு சாத்திட்டார். சேறு, சகதியில் வளர்வது தான் குமுதம் அது ஏன் சாருவிற்கு தெரியாமல் போனது ? குமுதம் ஜோக்கர் என்று சொன்னவுடன் இவர் ஜோக்கடிக்காமல் இருந்தால் எப்படி ? அடித்திருக்கிறார்.டேய் நிருபர் தம்பி, உனக்கு சாரு நிவேதிதா என்றால் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கேரளாவில் உனக்குத் தெரிந்த யாருக்காவது போன் போட்டு சாரு நிவேதிதா என்றால் யார் என்று கேள். அப்போது தெரியும்.
என்ன மனசுல ஆயி !( இது மலையாளத்து ஆயி :)மலையாளத்து மக்கள் தற்போது எஸ்.எம்.எஸ் வந்தாலே ரொம்ப டென்ஷனாக இருக்காங்களாம். எல்லாம் துபாயில் திடீர் பொருளாதார நெருக்கடி தான் காரணம். இப்ப இந்த துபாய் நெருக்கடினால தங்கம் விலை ரியல் எஸ்டேட் எல்லாம் எக்கசக்கமா ஏறப்போகுதாம். விஜயகாந்த் மாதிரி சொல்லணுனா மொத்தம் லட்சம் பேர் வேலை இல்லாமல் திண்டாட போறாங்களாம். அதில 40 லட்சம் பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்களாம். 20 லட்சம் பேர் இந்தியாவை சேர்ந்தவங்களாம். இதில எவ்வளவு பேர் கேரளானு தெரியாது.
விடு முறையில் ஊருக்கு வந்து இருப்பவர்களுக்கு நீங்கள் துபாய்க்கு திரும்பி வரவேண்டாம். உங்களுக்கு இனி வேலை கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறோம் என செல்போன் எஸ்.எம்.எஸ். அல்லது இ-மெயில் மூலம் அனுப்பி விடுகின்றனர். இந்த மாதிரி அனுப்புவதால் செலவும் கம்மி. இப்ப விடுமுறையில் இருப்பவர்கள் எல்லாம் எஸ்.எம்.எஸ் வந்தாலே அதிர்ந்து போய் இருக்காங்க. முன்பு 'மயிலாடுதுறையை துபாய் ஆக்குவேன்' என்று சொல்லிய காங்கிரஸின் மணி சங்கர் ஐயர் மயிலாடுதுறையை துபாய் ஆகினாரா என்று மாயவரத்தானை தான் கேட்கணும். செய்யவில்லை என்றால் அவருக்கு "Do Boy" என்று எஸ்.எம்.எஸ் அனுப்ப சொல்லணும். என்ன கொஞ்சம் தர்மசங்கடமா இருக்கும் அவருக்கு.எஸ்.எம்.எஸில் வந்த இந்த ஜோக்கை கேளு. உங்களுக்கு நடந்த தர்மசங்கடமான நிகழ்வு ஏதாவது இருந்தா அதை எங்க நியூஸ் பேப்பருக்கு அனுப்புங்க, உங்களுக்கு 100 ரூபாய் அனுப்பப்படும் என்று அறிவிப்பு வந்தது. உடனே ஒருவர் "நான் நைட் ஷிப்ட் முடிந்து வீட்டுக்கு வந்த போது, என் மனைவி வேறு ஒருவருடன் இருந்தார். அது தான் என் நான் சந்தித்த தர்மசங்கடமான நிகழ்வு என்று எழுதியிருந்தார். கூடவே எனக்கு 200 ரூபாய் அனுப்புங்க. ஏன் என்றால் என் மனைவிக்கும் அது தர்மசங்கடமான நிகழ்ச்சி என்று பி.கு போட்டிருந்தார். பத்திரிக்கை ஆபிஸிலிருந்து அவருக்கு 300 ரூபாய் வந்தது. : அந்த ஆளுக்கும் சேர்த்து 100 ரூபாய் அனுப்பியிருக்கோம் என்று பி.குறிப்புடன்.
இந்தியாவில் முதலமைச்சர்களுமே ஊழல் புரிகின்றனர் என்று நினைக்கிறேன். சுரங்கத் தொழிலாளியாக இருந்து, எடுபிடி வேலைகள் செய்து, ஜன்னலுக்குச் சட்டம் அடிக்கும் சித்தாளாக இருந்து, அரசியலில் நுழைந்து, நாலே நாலு சுயேச்சைகளுடன் ஆட்சி அமைத்த அதிசயத்தைப் புரிந்த மதுகோடா, தான் ஆட்சியிலிருந்த சில மாதங்களிலேயே 4,000 கோடி ரூபாய்க்கு ஊழல் செய்து, ஒரு கின்னஸ் சாதனையே படைத்துள்ளார். அநேகமாக எல்லா மாநிலங்களிலுமே முதலமைச்சர்களுக்கு, ஒரு நாளைக்கு இவ்வளவு என்ற கணக்கில் பணம் வசூலிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்தக் கணக்கை எல்லாம் தூக்கியடிக்கும் விதமாக கோடா, தன் பதவிக் காலத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 3.6 கோடி ரூபாய் வசூலித்துள்ளார் என்று கணக்கு சொல்லுகிறார்கள். 3.6 கோடிக்கு அவருக்கு தினமும் என்ன செலவு ? கறை படாத அரசியல் வாதிகளே கிடையாது போல. நம்ம நேசமுடன் வெங்கடேஷ் சொல்லுவது போல அவர் மஞ்சள் கறைய கூட எடுத்துடலாம் ஆனா இந்த கறை நோ சான்ஸ்!. இதை எல்லாம் படிக்க என்ன திகிலா இருக்கா ? ( படம் மதுகோடாவின் எக்ஸ்ரே அவர் ஆஸ்பத்திரியில் படுத்துக்கொண்டு இருந்த போது எடுத்தது :-)
அதைவிட திகிலான விஷயம் சொல்றேன். அதற்கான விஷயமும் அதனை விட திகிலாக இருக்கும். டென்மார்க் தலைநகர் கோபென்ஹாகனில், உலக சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு இன்னும் சில நாட்களில் கூடவிருக்கும் நிலையில், உலகின் அனைத்து நாடுகளையும் சேர்ந்த சுமார் 100 விஞ்ஞானிகள் குழு ஒரு ஆராய்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது. யார் அந்த அறிக்கையை எல்லாம் படிக்கிறாங்க. ஃபிரண்ட் லன் வாங்கும் ஆசாமிகள் அதை படித்திவிட்டு பவர் பாயிண்டில் படம் காட்டிவிட்டு ஃபை ஸ்டார் ஹோட்டலில் சிக்கனை சாப்பிட்டுவிட்டு ஓசி ஃபிளைட்டுல போய்விடுவாங்க. சரி விஷயம் இது தான்.உலகில் பரவலாக சுற்றுப் புறச்சூழல் மாசு மற்றும் அதனால் ஏற்படும் காலநிலை மாற்றத்தால் கடல் மட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறாதாம். இதனால் இந்நூற்றாண்டு முடிவில் கடல் மட்டம் 1.4 மீட்டர் அளவு (சுமார் 4 அடிகள்) உயரும் என அவர்களது ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இது 2007-இல் கணிக்கப்பட்டதை விட இரண்டு மடங்கு அதிகம். இவர்களது இந்த ஆய்வு பலிக்குமானால், 2100-இல் மாலத்தீவு போன்ற தீவு நாடுகளும், இந்தியாவின் கடற்கரை நகரங்களான மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா ஆகியவை கடலுக்கு அடியில் சென்று விடுமென அதிர்ச்சித் தகவலை அவ்வறிக்கை வெளியிட்டுள்ளது. உனக்கு இருக்கும் அதே கேள்விகள் எனக்கும் இருக்கு - படத்தில் அம்மணியை காப்பாத்துவது போல நம்மை யாராவது காப்பாத்துவார்களா ? சென்னை உள்ளே போனால் நாம் கூவம் என்ன ஆகும் ? சென்னையில் தண்ணீர் கஷ்டம் அப்ப தீர்ந்துவிடுமா ? அப்ப சேது சமுதிர திட்டம் என்ன ஆகும் ?
1870 முதல் இவ்வாண்டு வரை சுமார் 20 சென்டி மீட்டர்கள் கடலின் மட்டம் உயர்ந்துள்ளது. அதாவது வருடத்திற்கு 1.7 மில்லி மீட்டர்கள். ஆனால் இது கடந்த சில பத்தாண்டுகளில் மட்டும் வருடத்திற்கு 2.0 மில்லி மீட்டர்களாக அதிகரித்திருக்கிறது. இதற்கான காரணங்களாக, உலக வெப்ப மயமாதலும், அதனால் பனி மலையிலிருந்து உருகும் நீர் கடலில் கலப்பதாலும் ஆகும் என்று அறிக்கை கூறுகிறது. இந்நிலையில் நமது முன்னாள் ஜனாதிபதி திரு.அப்துல் கலாம் அவர்கள், இளைஞர்கள் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 10 மரக்கன்றுகளையாவது நட்டு பராமரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையும் மும்பையும், வங்காளமும் வேண்டுமென்றால் இதனை செய்தே ஆக வேண்டிய கட்டாயம்/கடமை நமக்குள்ளது. செய்வோமாக!! சென்னையில் TEDx கூட்டம் லைவாக வெப் காஸ்ட் பார்த்தேன் அதில கூட இந்த மரக்கன்று பற்றி பேசினார்கள். சின்மையீ கூட அதில கடைசியில காம்பெயரிங் பண்ணாங்க. பாவம் அம்மனிக்கு அன்னிக்கு ஒத்தை தலைவலி.எனக்கு தலைவலி எல்லாம் செண்ட் போட்டவங்க பக்கதுல வந்தா தான் வரும். எதுக்கு செண்ட் போட்டவங்க பக்கதுல நீ போற என்று கேட்பது தெரியுது ஆனா அவங்க தான் என் பக்கம் வராங்க நான் என்ன செய்ய ? இப்ப மார்கெட்டுல மைக்கேல் ஜாக்ஸனின் மரபணுக்களைக் கொண்டு பர்ப்யூம் கொண்டு வந்திருக்காங்க. டெக்னாலஜி எப்படி முன்னோறி விட்டது இது ஜோக் இல்ல நிசம். ஆம்!! லாஸ் ஏஞ்ஜல்ஸ் நகரைச் சார்ந்த ஒரு பர்ப்யூம் தயாரிக்கும் நிறுவனம், மைக்கேல் ஜாக்ஸனின் தலைமுடியிலுள்ள மரபணுக்களைக் கொண்டு அவரின் உடல் மணத்தைப் பிரதிபலிக்கும் பர்ப்யூமைத் தயாரித்துள்ளது. மைக்கேல் ஜாக்ஸன் மட்டுமல்லாது, எல்விஸ் ப்ரெஸ்லே, மர்லின் மன்றோ, நெப்போலியன் போனபார்ட், நான்காம் எட்வர்ட் மன்னர் ஆகியோரது மரபணுக்களைக் கொண்டும் இந்நிறுவனம் பர்ப்யூம் தயாரித்து சந்தைப்படுத்தியுள்ளது. ஒருவருடைய மரபணுக் குறியீட்டைக் கொண்டு அவரது உடல் மணம் கொண்ட பர்ப்யூமைத் தயாரிப்பதாக இந்நிறுவனத்தின் தலைவர் பெருமையாக கூறியுள்ளார்.
இதில் அதிகமாக விற்பனையாவது எல்விஸ் ப்ரெஸ்லேயினுடைய மணத்தைப் பிரதிபலிக்கும் பர்ப்யூம்தானாம். மைக்கேல் ஜாக்ஸனுடையதும் நன்கு போகிறதாம். எனினும் இவர்களது பர்ப்யூமில் ஆல்கஹால் கலப்பில்லையாம். அதிலேயே இருக்கு என்று விட்டுவிட்டார்கள் போல. அதற்கு பதிலாக கற்றாழையை உபயோகிப்பதால் சீக்கிரம் காற்றில் கலக்காமல், நாள் முழுவதும் நறுமணத்தைப் பரப்புகிறதாம். கடவுளே பிரபலங்களின் உடல் வியர்வை நாற்றத்தைக் கூட காசாக்கி விடுகிறார்கள். எனக்கு உள்ள ஒரே பயம் அடுத்து விஜய், அஜித், நமிதா என்று ஆரம்பித்துவிட போகிறார்கள்.
எனக்கு அமெரிக்கா FBIலிருந்து இரு கடிதம் வந்திருக்கு. அதில மைக்கல் ஜாக்ஸன் ஏன் மரணம் அடைந்தார் என்று சொல்லியுள்ளார். அவர் இறந்ததற்கு காரணம் சைடுல இருக்கும் இந்த வீடியோ தானாம். லிபரலை ஷேஸன் என்றால் இது தான் போல அர்த்தம் போல.
லிபரான் கமிஷன் அறிக்கையில் "கூர்மையான கற்கள் அகற்றப்பட்டு, நிலம் சமன்படுத்தப்பட வேண்டும்." என்று சொன்னவர் முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய். இந்த வார்த்தைகளை உதிர்த்த தினம் டிசம்பர் 5, 1992 அதாவது பாபர் மசூதி இடிப்பிற்கு முந்தைய தினம். இதற்கு ஆதாரமாக வாஜ்பாய் அவர்கள் பேசிய பேச்சின் வீடியோ ஆதாரங்களும் இணைக்கப்பட்டுள்ளன. இதன் பிறகு நடந்தவை அனைத்துமே தெரிந்தவைதான். பாபர் மசூதி இடிப்பிற்கு முந்தைய தினம் லக்னோவில் கரசேவகர்கள் மாநாட்டில் இவர் பேசியவை பாபர் மசூதி இடிப்பிற்கு அடிகோலியது என்பது லிபரான் கமிஷனின் வாதம். மற்றவை வீடியோவில் பார்த்து தெரிந்துக்கொள்ள வேண்டும். இந்த மாதிரி பேச்சு நிச்சயம் இந்து தர்மம் இல்லை. பாரத கலாச்சாரத்துக்கு நேர் எதிர்.
பாரத கலாசாரம் மிகத் தொன்மையானது, வலிமையானது, அறிவார்ந்தது. எல்லாமே மாற்றத்திற்குட்பட்டது என்ற விதி இதற்கும் பொருந்தும் என்பது இந்நவீன யுகத்தில் தெளிவாகிறது. விளைவு, கலாசார மாற்றம், அந்நிய மோகம் மற்றும் சீர்கேடுகள். இந்நிலையில் கலாசாரத்தைப் பற்றிய ஒரு கண்திறப்பு முயற்சியாக, விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், தேவ்தத் பட்டாச்சார்யா என்பவர் பாரத மற்றும் மேற்கத்திய கலாசாரங்களின் அடிப்படை நம்பிக்கைகள் மற்றும் வேறுபாடுகள் போன்றவற்றைப் பற்றி விளக்கும் காணொளிக் காட்சி வீடியோவையும் கொடுத்திருக்கிறேன். பார்த்து ரசிக்கவும்.
சில பதிவுகளுக்கு முன்னாடி ஜாதி பற்றி பதிவை பார்த்தேன். போன வார துக்ளகில் ஜாதி பற்றி ஒரு கட்டுரை படித்தேன் அதில இப்படி எழுதியிருக்கு.டெல்லிக்குப் போனால், தலைநகர்வாசி நம்முடைய ஜாதி குறித்துக் கவலை கொள்வதில்லை. நாம் ஒவ்வொருவருமே அவனுக்கு ‘மதராசி’தான்! ஆந்திராக்காரனுக்கு நாம் ஒவ்வொருவருமே ‘அரவாக் கொடுக்குத்தான்’! கேரளாக்காரனுக்கு நாம் ஒவ்வொருவருமே ‘பாண்டிக்காரன்’தான்! நம்மைப் பொதுமைப்படுத்தி வேற்று மாநிலத்தார் பார்ப்பதால், ஜாதிகள் அறுந்து விட்டதாகப் பொருளா? அமெரிக்கனுக்கோ நாம் இந்தியன்தான்; அதனால் மாநில உணர்வுகள் ஒழிந்து விட்டதாகப் பொருளா?
ஆனால், மு.க. ஸ்டாலின் சொல்லி விட்டாரே என்று வேட்பாளர் தேர்வின்போது, ‘என்ன ஜாதி’ என்று தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி கேட்க, நான் ‘தமிழன்’ என்று சொல்லித் தொலைத்து விட்டால், அவன் கதி அதோகதிதான். ‘என்ன நக்கலா’ என்று திருப்பி அடிப்பார் கருணாநிதி.
ஒரு சட்டமன்றத் தேர்தலில் உங்கள் தகப்பனார் கருணாநிதி ஜாதிக் கட்சிகளோடு கூட்டுச் சேரும் நிலை வந்தபோது, ‘ஜாதிகள் ஒரு தவிர்க்க இயலா நடப்பு உண்மை’ என்று அடித்தாரே ஒரு பல்டி, அதைக் கேட்டு ஜாதிக் கட்சிக்காரர்களே திக்குமுக்காடிப் போய்விட்டார்களே! அந்தத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் பட்டியலை வெளியிட்டபோது, அதை ஜாதி வாரியாக வெளியிட்டுச் சரித்திரம் படைத்தவராயிற்றே உங்கள் தந்தை! அதில் இசைவேளாளர் இருவர் என்று தன்னையும், உங்களையும் குறிப்பிட்டுக் கொள்ள அவர் கொஞ்சமாவது கூச்சப்பட்டதுண்டா? இவ்வளவையும் கூச்சநாச்சமில்லாமல் செய்து கொண்டே, ‘ஜாதிகளை ஒழிக்கத்தான் சமத்துவபுரம் கட்டுகிறேன்’ என்று சொல்ல எவ்வளவு ‘தடித்த’ நாக்கு வேண்டும்?கடைசியில ஜோக்கோட முடிக்கணும் என்பது தான் முனி கடிதத்தோட மரபு. ஜோக் அடிப்பவர்களை தான் நாம ஜோக்கர் என்று சொல்லுவோம். அதனால நம்மளை யாராவது ஜோக்கர் என்று சொல்லி விட்டால் உடனே அவர்கள் சொல்லுவதை நீரூபிக்காமல் ஓயமாட்டேன் என்று ஒருவர் கிளம்பியிருக்கார். இ.பா தெரியும், தொ ப தெரியும் அதென்ன கூபா? க்யூபாவை கூபா என்று சொல்லி தன்னை அறிவு ஜீவீயாகக் காண்பித்துக் கொள்வது இப்பொழுதெல்லாம் சிறுபத்திரிகையாளர்களிடம் ஒரு ஃபேஷன்.
நமக்கு ஏன் வம்பு அப்பறம் நமக்கும் ஏதாவது எச்சரிக்கை மணி அடிக்க போகிறார்.
இப்படிக்கு,
முனி.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Thursday, December 03, 2009
மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 3-12-2009
Posted by IdlyVadai at 12/03/2009 12:27:00 PM
Labels: பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம்
Subscribe to:
Post Comments (Atom)
28 Comments:
Koda X-Ray - Tenna, yellamae foreign currecy-yaa irukku? Indian Rupeesla kanakku illayaa? - Jagannathan
i am first..,
/***டேய் நிருபர் தம்பி, உனக்கு சாரு நிவேதிதா என்றால் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கேரளாவில் உனக்குத் தெரிந்த யாருக்காவது போன் போட்டு சாரு நிவேதிதா என்றால் யார் என்று கேள். அப்போது தெரியும். ****/
Super Comment!!! I really enjoyed your nakkal...
//'தேங்க்ஸ் கிவிங்' வெக்கேஷனில் இருந்தோம். அதனால் சில நாட்கள் கடையை மூடிவிட்டோம்.
நீங்கள் கடையை மூடிவிட்டு படிதுறை பாண்டிக்கு அடிமையாகிவிட்டதா நினைச்சேன் :)
நிஜம் சூடும் என்பதை தலைவர் ( தலைவர் என்பது சும்மா நக்கலு!!!!) சாரு நிரூபனம் செய்து உள்ளார்...
நாலு நாள் கழிச்சு வந்திருக்கீங்க, லீவ் லெட்டர் குடுப்பீங்கன்னு பார்த்த முனி கடிதத்த நீட்டறீங்களா? செல்லாது, செல்லாது!
//மயிலாடுதுறையை துபாய் ஆக்குவேன்' என்று சொல்லிய காங்கிரஸின் மணி சங்கர் ஐயர் மயிலாடுதுறையை துபாய் ஆகினாரா என்று மாயவரத்தானை தான் கேட்கணும். //
அவர ரொம்ப நாளா இந்த ஊரில காணுமே......ஒரு வேளை, அவர் துபாய் பக்கம் போய் துபாயை மயிலாடுதுறை ஆக்க பாடுபட்டாரோ?
/***உனக்கு சாரு நிவேதிதா என்றால் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கேரளாவில் உனக்குத் தெரிந்த யாருக்காவது போன் போட்டு சாரு நிவேதிதா என்றால் யார் என்று கேள். அப்போது தெரியும். ***/
அப்படினா சாரு தலையிட்டு இருந்தால்முல்லை பெரியாத்து விசயம் ரொம்ப ஈசியா முடிந்து இருக்கும் என்பதை தான் இப்படி வேறு மாதிரி சொல்கிறாரோ!!! ரொம்ப பெரிய ஆளுதான்யா சாரு, ரூம் போட்டு யோசிப்பவர் சங்கத்தில் இருப்பாரோ??
Pen is mighter than sword but Charu is blunter than any blunt weapon.
SMS JOKE SUPER.
அப்ப்பாடி ! நாலஞ்சு நாளா வந்து கதவைத் தட்டித் தட்டிப் பார்த்து ஏமாந்து நடந்து சென்றேன். இன்னைக்கி, இப்போ - கதவு திறந்துருக்கு! எட்டு விருந்தாளிங்க உள்ளே ! வாழ்க இ வ!
சரி, சும்மா முயற்சி செய்வோமே என்று, கேரளாவுக்கு போன் போட்டு, அதை ஆன்சர் செய்த குயிலிடம், சாரு நிவேதிதா என்றால் யாரு? என்று கேட்டேன். அந்த இடையினம், 'பட்டி மோனே' என்று மேல்லினமாகச் சொல்லி, போனை வைத்துவிட்டது.
1. கேரளாவிற்கு போன் செய்தால், நிஜ ஜோக்கர் யார் என்று தெரிந்து விடுமா??
2. சாரு புத்தகம் எழுதுவது ஒருபுறம் இருக்கட்டும், அதையெல்லாம் யார் படிக்கிறார்கள்?
3. அப்படியே ஒரு சிலர் படித்தாலும், அவர்கள் அனைவரும் நலம் தானா??
I am from Kerala.
Who is saaru ?
//வருத்தப்பட்ட சிலருக்கும் எங்கள் நன்றி//
அது யாரு???
என்னாது தேங்க்ஸ் கிவிங்கா.. அப்ப அமெரிக்கா காரனா நீயி இட்லிவடை?
அண்ணன்சாருவுக்கு யாரைத் தாக்கி எழுதினால் ஹிட்ஸ் அதிகமாகும் எனத் தெரியும். அதையே செய்தார், செய்வார்..
கேரளா அனைக்கட்டுப் பிரச்சினையை எல்லாம் சாருவிடம் கொடுத்தால் சீக்கிரம் தீர்த்துத்தருவார் என்பது தெரிந்தபிறகும் கருனாநிதி அமைதி காப்பது இந்தப் பிரச்சினைகளை அவர் தீர்க்க விரும்பவில்லையோ என சந்தேகம் ஏற்படுகிறது :-)
துபாய் ஒரு மிகப்பெரிய நீர்க்குமிழி. தற்போதுதான் உடைந்திருக்கிறது. 10 பைசாகூட அரசு செலவு செய்யாமல் கதவை மட்டும் அகலத்திறந்து வைத்திருந்தது. முடிஞ்சவன் சம்பாதிச்சுக்கோனு.... இன்னிக்கு எல்லோரோட வேலைக்கும் சங்கு.மீண்டும் சரியாகும். ஆனால் அதிக நாள் பிடிக்கும் போலத்தெரிகிறது.
பூமி சூடாகுதல் ஒரு மிகைப்படுத்தப்பட்ட அரசியல் பொய் என அருணகிரி அவர்கள் சொல்வனத்தில் “ அரசியலாக்கப்பட்ட்ட அறிவியல் - குளோபல் வார்மிங்” என்ற தலைப்பில் கட்டுரைத்தொடர் எழுதியிருந்தார். (http://solvanam.com/?p=121)
அதைப்படித்தால் இவர்கள் சொல்வது எவ்வளவு பொய் என்பதும், ஏன் சொல்கிறார்கள் என்பதும் விளங்கும்.
தன்னை “ஜோக்கராக” எப்படியாவது நிரூபிக்கத்துடிக்கும் அண்ணனுக்கு வாழ்த்துக்கள். சீக்கிரம் இதுவிஷயமாய் பல கட்டுரைகள் எழுதி நிரூபிப்பார் என நம்புவோம்.
முன்பு 'மயிலாடுதுறையை துபாய் ஆக்குவேன்' என்று சொல்லிய காங்கிரஸின் மணி சங்கர் ஐயர் மயிலாடுதுறையை துபாய் ஆகினாரா என்று மாயவரத்தானை தான் கேட்கணும். செய்யவில்லை என்றால் அவருக்கு "Do Boy" என்று எஸ்.எம்.எஸ் அனுப்ப சொல்லணும். என்ன கொஞ்சம் தர்மசங்கடமா இருக்கும் அவருக்கு.
Good ..
COngrats
Hah ha h
//இவ்வளவையும் கூச்சநாச்சமில்லாமல் செய்து கொண்டே, ‘ஜாதிகளை ஒழிக்கத்தான் சமத்துவபுரம் கட்டுகிறேன்’ என்று சொல்ல எவ்வளவு ‘தடித்த’ நாக்கு வேண்டும்?//
nice said sir...
காகிதங்களை நீட்டிய போதெல்லாம் கையெழுத்திடுவது நடிக/நடிகைகளுக்கு அழகு. ஆனால் பிரதமருக்கு அது அழகல்ல. எகிப்த்தில் நடைப்பெற்ற அணிசேரா நாடுகளின் 15-ஆவது கூட்டமைப்பில்
Courtesy : newsx.com
நிகழ்ந்தது. பாகிஸ்தான் பிரதமருடன் இந்தியப் பிரதமர் வெளியிட்ட கூட்டறிக்கையின் காரணமாக உலக அரங்கில் இந்தியாவின் நிலை மீண்டும் பின்னடைவை சந்தித்தது. பாகிஸ்தானின் உள்நாட்டுப் பிரச்சினையான பலுசிஸ்தான் குறித்த பேச்சுவார்த்தைக்கு இந்தியா உடன்படுவதாக இக்கூட்டறிக்கையில் இடம் பெற்றது. இவ்வரிகள், இந்தியாவில் பெரும் சர்ச்சையை கிளப்பின. எதிர்க்கட்சிகள் இந்த உடன்படிக்கையைக் கடுமையாக எதிர்த்தன. பாகிஸ்தானின் தீவிரவாத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை மறந்துவிட்டு, பலுசிஸ்தான் பிரச்சினையைக் குறித்துப் பேச ஒப்புக்கொள்வது காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவிற்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியது வீணாகவில்லை. கூட்டறிக்கை வெளியிடப்பட்ட அடுத்த நாளே பலுசிஸ்தானில் நடைபெறும் பிரச்சினையில் இந்தியாவின் பங்கு குறித்த ஆதாரங்கள்(?!) அடங்கிய ஆவணத்தை பாகிஸ்தான் அரசு இந்தியாவிடம் அளித்ததாக செய்திகள் வெளியாயின. இந்தியப் பிரதமர் இத்தகவலை முற்றிலும் மறுத்தப்போதும், பாகிஸ்தானுடனான உடன்படிக்கையில் சில “ஷரத்து வடிவமைப்புப் பிழைகள்” நேர்ந்துவிட்டதாக ஒப்புக்கொண்டார்.
- http://solvanam.com/?p=1363
Where India is heading without a head?
அன்புள்ள இட்லிவடை,
கடைக்கு ரொம்ப நாளு விடுமுறை விட்டாலும், ரொம்ப நச் நச்னு அனல் பறக்கும் பதிவு.. முனிய அந்த முனி தான் காப்பாத்தனும்.
சாரு ஒரு ஜோக்கர அப்படின்னு எழுதினா உண்மையில் அவர் ஜோக்கரா இல்லன்னா எதுக்கு கவல படனும்.சாருவுக்கு தான் சப்ப மேட்டெர
பெருசாக்கி காசு பாக்கரது ஹிட்ஸ் வாஙகறது வழக்கமான செயல் தான். சோ, அது அப்படி தான் சில நாலைக்கு கடை நடத்தனும்ல. அதான்.
என் கேரளா நண்பன்கிட்ட கேட்ட யாரு டா நல்ல ஃபிகரானு கேட்டான்.அவர் புகைப்படதை அனுப்பி வைக்கவா என்று முனியிடம் கேட்டு சொல்லவும்.
மத படி சாதி மேட்டரு,சென்னை தண்ணில மூழ்க போகுதுனு சொன்ன மேட்டர் எனக்கு புரில.ஏற்கனவெ தன்னில (டாஸ்மாக்) மூழ்கி கிடக்கிறதே வாழ்க கழகம். !
மணிசங்கர் அய்யருக்கு தான் ஃப்யூஸ் புடுங்கி ரொம்ப நாளாச்சே!
கலக்கல் கடிதம். ஆட்டோ வருவதற்கு பல சாத்தியகூறுகள் தெரிகிறது.
Hello IV,
Thanks Giving Vacation pona Sunday yoda over. Its from last Thursday to Sunday.
:-)
/***சாருவுக்கு தான் சப்ப மேட்டெர
பெருசாக்கி காசு பாக்கரது ஹிட்ஸ் வாஙகறது வழக்கமான செயல் தான். சோ, அது அப்படி தான் சில நாலைக்கு கடை நடத்தனும்ல. அதான்.
என் கேரளா நண்பன்கிட்ட கேட்ட யாரு டா நல்ல ஃபிகரானு கேட்டான்.அவர் புகைப்படதை அனுப்பி வைக்கவா என்று முனியிடம் கேட்டு சொல்லவும்.***/
மிகவும் ரசித்தேன்.....
இவ,
முனியின் கடிதம் அருமை... நெறைய தகவல்கள்...கேள்விகள் பதில் சொல்வோரைத்தான் காணோம்.. நம் நாட்டில் oozhal அரசியல்வாதிகள் இருந்தால் அது செய்தியே அல்ல இல்லாதிருந்தால் தான் செய்தி... அது "saaru" இல்லம்மா (Sreeja) "chaaru". SMS ஜோக் மிகவும் அருமை. தமிழர் குடும்பம் (அட அதுதான் கலைஞ்ஞர் குடும்பம்) ஜாதி அரசியல் எப்போ பண்ணாம இருந்தாங்க..."ஆட்டோ வரும் சாத்தியகூறுகள் அதிகம்" என் எண்ணமும் அப்படியே... கடை திறந்தவுடனே இட்லிவடையோட மிளகாய் பஜ்ஜியும் menu ல செத்துட்டாங்க போல காரம் ஜாஸ்தி சாமியோவ் . முனி pinraar
இனிமே லீவு போட்ட மொதால்லையே லீவ் லெட்டர் குடுத்துட்டு போங்க சார்,
காமேஷ்
போட்ஸ்வானா
Baski said...
Hello IV,
Thanks Giving Vacation pona Sunday yoda over. Its from last Thursday to Sunday.
:-)
அதானே!!!????
//ரூம் போட்டு யோசிப்பவர் சங்கத்தில் இருப்பாரோ?? //
இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்!!:-))
/***யோசிப்பவர் said...
//ரூம் போட்டு யோசிப்பவர் சங்கத்தில் இருப்பாரோ?? //
இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்!!:-))***/
எழுத்தாளர் சங்கத்திலும் சேர்த்துக் கொள்ள மாட்டீர்கள், ஜோக்கர் சங்கத்திலும் சேர்த்துக் கொள்ள மாட்டீர்கள், ரூம் போட்டு யோசிப்பவர் சங்கத்திலும் சேர்த்துக் கொள்ள மாட்டீர்கள், வேறுஎங்கு தான் போவார் சாரு....
Lot of interesting information. I need to go through one by one. really superb...
//
sreeja said...
I am from Kerala.
Who is saaru ?
//
அது saaru illa , Chaarruu
iIalayaraja: Saaru சொல்வதில் என்ன தவறு. இளையராஜா இன் இன்றைய இசையில் ஜீவன் இல்லை எனபது உண்மை.
So when we accept that he was great in 80s and 90s , we should also accept that his music now is no great.
உண்மையை accept பண்ணுவதில் என்ன தப்பு, நம்ம என்ன ilaayaraja ரசிகர் மன்ற கூட்டமா ?. அவருடைய knowledge is out of fashion /trend.
Madhuகோடா : Sonia gandhi தெரிந்தே செய்யும் தவறுகளில் இதுவும் ஒன்று. Very stubborn lady , as usual going in the wrong way in politics .
Post a Comment