பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, December 27, 2009

சன்டேனா ரெண்டு (27-12-09) செய்திவிமர்சனம்

இந்த வார செய்திகள்.....கல்வி ஸ்பெஷல் .



செய்தி # 1

கள்ள ஓட்டுக்கள் மற்றும் முறைக்கெடுகள் அற்ற தேர்தலை நடத்தும் நோக்கொடு தேர்தல் ஆணையம் கொண்டுவந்து, வெற்றிகரமாக நடைமுறை படுத்தி உள்ள திட்டம் வெப்-கேமரா மூலம் ஓட்டுப் பதிவு செய்யும் திட்டம்.

கம்ப்யூட்டர் மானிட்டரில் மேல் பகுதியில் சிறிய அளவில் இரண்டு வெப்கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. ஒரு கேமரா எதிரே நடப்பவற்றை அப்படியே ஆன்-லைனில் தேர்தல் கமிஷன் அலுவலகத்திற்கு பிரதிபலித்தது. ஓட்டுப்போடவருபவரின் பெயர் அறிவிக்கப்பட்டதும், அவரது எண்ணை கம்ப்யூட்டரில் தட்டியதும், வாக்காளர் பட்டியலில் உள்ள அவரது படம் திரையில் தெரிந்தது. அதை சரிபார்த்துவிட்டு அவரை கேமரா முன் நிற்க வைத்து மீண்டும் ஒரு படம் எடுத்துக்கொண்டு ஓட்டுப்போட அனுமதிக்கப்பட்டார்.


இதன் மூலம் ஓட்டுப்பதிவு சதவீதம், யாரெல்லாம் ஓட்டுப் போடாதவர்கள் என்ற பட்டியல் முழுவதுமாக தெரிந்துவிடுகிறது. ஓட்டுப்போட்ட நபரின் படம் அவரது தற்போதைய படமும் பதிவாகிவிடுவதால் 100 சதவீதம் கள்ளஓட்டை தடுக்க வாய்ப்புள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழக தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா அவ்வப்போது படங்களுடன் வாக்காளர் பட்டியல் என்ற அறிவிப்பை வெளியிட்டுக்கொண்டிருப்பார். அதன்படி இந்த தேர்தல் எந்த குழப்பமும் இன்றி முடிந்திருப்பதன் மூலம் தேர்தல் கமிஷன் மற்றும் தொழில்நுட்பம் வெற்றிபெற்றிருப்பதாக கருதலாம்.

இதை சாதித்து காட்டி இருப்பவர்கள் நம் மாணவர்கள்.

வெப்-கேமரா மூலம் ஓட்டுப் பதிவு செய்யும் பணியை முதல் முறையாக கல்லூரி மாணவர்களை நியமித்தது தேர்தல் கமிஷன்.இதுவரை அரசு ஊழியர்கள் மட்டுமே செய்த வேலையை மாணவர்கள் செய்தனர்.

வெப்-கேமரா' பணியில் ஈடுபட்ட திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர்கள் கூறியதாவது:

"இதுவரை அரசு ஊழியர்கள் மட்டுமே தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முதல் முறையாக மாணவர்களை பயன்படுத்தி, எங்கள் மாணவ சமுதாயத்தை பெருமைப்படுத்தியுள்ளது தேர்தல் கமிஷன். தேர்தல் பணியில் "வெப்-கேமரா' பயன்படுத்துவது குறித்து எங்களுக்கு கமிஷன் பயிற்சி அளித்தது. பின், ஆளுக்கு ஒரு லேப்-டாப், இரண்டு "வெப்-கேமரா'க்கள் கொடுத்து ஓட்டுச் சாவடிக்கு அனுப்பி வைத்தனர். ஒரு கேமரா மூலம் பூத்தில் உள்ள வளாகம் முழுவதும் உள்ள சூழ்நிலையை படம் பிடிக்கும். இதன் மூலம் ஒவ்வொரு பூத்திலும் என்ன நடக்கிறது என்பதை தேர்தல் கமிஷன் நேரடியாக தெரிந்து கொள்ளும். இரண்டாவது கேமரா, வாக்காளர்களை படம் பிடிக்கவும், ஏற்கனவே கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ள அவரது படத்தை சரிபார்த்துக் கொள்ளவும் பயன்படுத்தப்பட்டது. ஓட்டு பதிவு முடிந்தவுடன் தகவல்கள் அனைத்தும் "சிடி'க்களில் பதிவு செய்தோம். இவற்றை தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டோம்.

இப்பணிக்காக 750 ரூபாய் சன்மானம் வழங்கப்பட்டது. பணம் எங்களுக்கு முக்கியமில்லை. நியாயமான, தேர்தல் நடைபெற எங்களுக்கும் சிறு வாய்ப்பு வழங்கியதைத் தான் நாங்கள் பெரும்பாக்கியமாக கருதுகிறோம். தேர்தல் கமிஷன் எங்கள் மீது நம்பிக்கை வைத்து அளிக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்து முடித்தோம் என்ற திருப்தி ஏற்பட்டுள்ளது "கூறினார்கள்.

மேலும்,

"தேர்தல் பணியில் மாணவர்களாகிய எங்களை ஈடுபடுத்தியது மகிழ்ச்சியளிக்கிறது. கள்ள ஓட்டுக்களை தடுப்பதில் முக்கிய பங்கு வகித்தோம் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்'" என்று தெரிவிததனர் நம் மாணவர்கள்.

தேர்தல் பணியில் மட்டும் இல்லை. படித்த, சமூக பொறுப்பு உள்ள மாணவர்கள் அரசியலிலும் ஈடுபட வேண்டும். ஒரு நல்ல மாற்றத்தை கொண்டுவர அவர்களால் மட்டுமே முடியும் (சட்டகல்லூரி மாணவர்கள்
விதி விலக்கு).


செய்தி # 2


நோபல் பரிசு பெற்ற இரண்டு இந்திய அறிஞர்கள் தெரிவித்து இருக்கும் கருத்துக்கள் உங்கள் பார்வைக்கு...

முதலில், நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்யா சென் :

"வகுப்பறையில் எழுத வைப்பது போதாதென்று, வீட்டுப் பாடமும் கொடுத்து குழந்தைகளை துன்புறுத்தும் பழக்கத்துக்கு முடிவு கட்ட வேண்டும் " என்கிறார் அமர்த்யா சென் தனது ஆய்வறிக்கையில்.

அது ஆரம்பக் கல்வியில் பாடத் திட்டத்தை மறு பரிசீலனைக்கு உட்படுத்தி, ஒட்டு மொத்தமாக மாற்றியமைக்க அவர் ஆலோசனை கூறுகிறார்.
இருபது ஆண்டுக்கு முன்பிருந்த நிலையோடு ஒப்பிடும்போது, இன்றைய குழந்தைகளுக்கு எல்லா வகையிலும் சுமை அதிகம். முன்பெல்லாம் படிப்பதும் எழுதுவதும் குறைவு. பாட்டு, ஆட்டம், விளையாட்டு அதிகம். அதனால் குழந்தைகளின் உடலுக்கு ஆரோக்கியம், மனதுக்கு உற்சாகம் கிடைத்தது. சிறந்த வாழ்க்கைக்கான அடித்தளம் அமையும் இடமாக பள்ளிகள் விளங்கின.


கல்வியின் நோக்கமே கை நிறைய சம்பாதிக்க வழி அறிவதுதான் என்ற நுகர்வு கலாசார சித்தாந்தத்தின் தாக்கம் அந்த சூழ்நிலையை அடியோடு மாற்றியது. மதிப்பெண் வேட்டையால் விளையாட்டுப் பருவத்தை தொலைத்தனர் குழந்தைகள். வீட்டிலும் புத்தகம் நோட்டுடன் காலத்தை கரைக்கும் எந்திரங்களாக மாறிப் போனார்கள். போட்டி நிறைந்த உலகில் மதிப்பெண்களின் இன்றியமையாமை குறித்த நிபுணர்களின் பிரசங்கத்தில் பெற்றோரும் கிறங்கி, வீட்டுப் பாடம் செய்து முடிக்க டியூஷன் சென்டருக்கு குழந்தைகளை துரத்துகின்றனர். அதிகாரி, ஆசிரியர்,பெற்றோர் முக்கோணத்தின் வேகச்சுழற்சிக்கு ஈடு கொடுக்க முடியாமல் குழந்தைகள் திணறுகின்றன. இதன் விளைவாக வாசிப்பது, எழுதுவது, எண்ணுவது ஆகிய ஆதார திறமைகளை அவர்களால் அடைய முடியாமல் போகிறது.

பிரைவேட் டியூஷன் என்பது வகுப்பறைக்கு நிகரான அத்தியாவசியமாக மாற்றப்பட்டுள்ளது. பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க முடியாத பெற்றோர் வசதியற்றவர்களாகவும் இருந்து விட்டால் திண்டாட்டம்தான். ஆரம்பக் கல்வியில் ஏழை, பணக்காரர் வித்தியாசம் இருக்கக்கூடாது என்ற குறிக்கோளுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் வீணாகின்றன. எனவே, பாடத் திட்டத்தை மாற்றி அமைத்து, வீட்டுப் பாடத்துக்கு விடை கொடுத்தால் டியூஷன் தானாக மறையும் என்கிறார் பொருளாதார மேதை அமர்த்யா சென்.

இரண்டாவதாக,

வேதியியல் துறையில் இந்தாண்டுக்கான நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் :

" இந்தியாவில் ஏராளமான விஞ்ஞானிகள் உள்ளனர். இந்திய அரசு கேட்டுக் கொண்டால், ஒரு பயோடெக்னாலஜி தொடர்பான விஷயத்தில் மேற்கொள்ளப்படும் தீவிரமான ஆராய்ச்சிக்காக அவர்களுக்கு உதவ தயாராக உள்ளேன். பயோடெக்னாலஜி என்பது மிகவும் கடினமான ஒரு பாடம் தான்.இங்குள்ள டாடா இன்ஸ்டிடியூட், இந்திய அறிவியல் பயிற்சி மையம், அடிப்படை அறிவியலுக் கான தேசிய மையம் ஆகியவற்றில் ஏராளமான இந்திய விஞ்ஞானிகள் பணிபுரிகின்றனர்.


ஒரு குறிப்பிட்ட ஆராய்ச்சிக்காக என்னிடம் அவர்கள் உதவி கேட்டால், அதை பரிசீலிக்க தயாராக உள்ளேன். என்னிடம் உதவி கேட்காதபட்சத்தில், நானாக முன்வந்து அவர்களுக்கு உதவ முடியாது.அதே நேரத்தில் சம்பிரதாயமான விஷயங்களில், அது சம்பந்தமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

ஒருவரை வேலைக்கு தேர்வு செய்யும்போது, அவரது பின்னணியை பார்க்க கூடாது.பிரபலமான பள்ளியில் படித்தவரா, சாதாரணமான பள்ளியில் படித்தவரா என்பதை பார்க்கக் கூடாது. அந்த வேலைக்கான தகுதி அவருக்கு உள்ளதா என்பதை மட்டுமே பார்க்க வேண்டும்.இந்தியாவில் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்களுக்கு, கவுரவ பேராசிரியராக கடந்த நான்கு ஆண்டுகளாக
வந்து கொண்டிருக்கிறேன். தொடர்ந்து இதுபோன்ற விஷயங்களுக்காக வருவேன். இந்த கொள்கையில் மாற்றம் எதுவும் இருக்காது "

நோபல் பரிசு பெற்ற பின், முதல் முறையாக கடந்த வாரம் இந்தியா வந்தபோது மும்பையில் இவ்வாறு பேட்டியில் தெரிவித்தார் ராமகிருஷ்ணன்.


(நன்றி..இனி அடுத்த வாரம்).

-இன்பா

8 Comments:

Anonymous said...

ஒருவரை வேலைக்கு தேர்வு செய்யும்போது, அவரது பின்னணியை பார்க்க கூடாது.
--இது தமிழகத்தில் சொப்பனத்தில்கூட நடக்கமுடியாத காரியம். வீண்பேச்சு.
அ. நாமதேயன்

பெசொவி said...

நாட்டு எதிர்காலத் தூண்களைப் பற்றிய ஒரு நல்ல பதிவு.

குழந்தைகளின் மனோ நிலையைக் கெடுக்கிற ஒரு விஷயம்.....இந்த "வீட்டுப் பாடம்". இந்த சிறு வயதிலேயே, அவர்கள் சிந்தனை ஓட்டத்தைத் தடுத்து, சதா பரீட்சை, மார்க்கு என்று குறுகிய வட்டத்தில் அடைத்து விடுகிறார்கள். உலகமே பொருளாதார சித்தாந்தத்தை (மட்டுமே) குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதால் வரும் மோசமான பின்விளைவுதான் இது. மக்களின் மனோ பாவம் மாற வேண்டும், பாவம் சிறுவர்கள்!

Anonymous said...

வெங்கடராமன். ஆர் என்று எழுதுங்கள்.
ராமகிருஷ்ண்ன் என்பது அவருடைய அப்பா பெயர். இந்த SURNAME நமக்குக் கிடையாது. இப்படித்தான் ஒருத்தர் தன் முழுபெயரை ஒரு அப்ளிகேஷனில் காட்டுப்பாக்கம் வெங்கடேச நாராயணன் என்று எழுதினார். அவரை வேலைக்கு அமர்த்திய கம்பனி அவர் பெயரை வி. என். காட்டுப்பாக்கம் என்று ஆக்கிவிட்டது!-- ராஜா

வேதநாராயணன் said...

வெப் கேமரா : ஒரு நல்ல முயற்சி. என்னகென்னவோ , கைரேகை compare பண்ணினால் போதும் என தோன்றுகிறது. அதற்கு வெப் கேமரா இல்லாமல் , வேறு எதாவது more accurate and more solid scientific instrument வேண்டும். ஆனால் பணம் வாங்கிய பிறகு, நம்மவர் AIADMKக்கு vote போடுவார்கள் என தோன்றவில்லை. நாமெல்லாம் நல்லவர்கள்.

அமர்தியா சென் : நாம s/wல் அசைக்க முடியாத force ஆகா ஆகி இருப்பதற்கு காரணம் நம்ம parents உடைய academic committment தான் காரணம். When japaneese can work hard, why not indian. If Sen is a poor man then he will understand the problem.
ராமகிருஷ்ணன் : He continues to be politically incorrect in public forums.

R. Jagannathan said...

//ஒருவரை வேலைக்கு தேர்வு செய்யும்போது, அவரது பின்னணியை பார்க்க கூடாது.
--இது தமிழகத்தில் சொப்பனத்தில்கூட நடக்கமுடியாத காரியம். வீண்பேச்சு.// This seems to be true as we know even for LKG admission of children, the schools look for the children's background by interviewing them and their parents. Incidentally, there is another article on Venkatraman in todate's Dinamalar which shows how simple and straight forward he is.- R. Jagannathan

ரிஷபன்Meena said...

அமர்த்தியா சென் சொல்வது கூட சரிதான் என்றே தோன்றுகிறது. பள்ளி இறுதி வரை பிள்ளைகள் படிப்பை பற்றி அலட்டி கொள்ளவே கூடாது. நானும் எனது நண்பர்கள் பலரும் பள்ளி நாட்களில் பெரிதாக ஹோம் வொர்க் என்று செய்ததாக நினைவில்லை. ஆசிரியர்கள் அத்தனை நல்லவர்கள். நாங்க படித்தது தான் படிப்பு. உயர் கல்வியில் தான் கொஞ்சம் மெனகெட்டோம். இடைவிடாது ஒழுக்கமாக படித்தவர்களுக்கு நிகராகத்தான் இருக்கிறோம்.

வடிவேலு பணியில் சொன்னா, இதுவரைக்கும் எங்கயும் திருதிருன்னு முழிச்சதில்லை, ஒருதடவை கூட அழுததில்லை.


அதனால் சின்ன வயதில் படிக்க சொல்லி குழந்தைகளை படுத்தாதிர்கள்.

சைவகொத்துப்பரோட்டா said...

அமர்த்யா சென் கூறுவது முற்றிலும் சரியே.

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

எந்த குழந்தையும் வீட்டு பாடத்தை சுய விருப்போடு செய்வதில்லை ஆசிரியர் தரும் தண்டணைக்கு பயந்தே செய்கிறார்கள்...