23.12.2059 என்ற தேதியிட்டு, ‘துக்ளக்’ இதழ் ஒன்று வெளியாகாது என்று எப்படிச் சொல்வது? ஒருவேளை, அப்படி ஐம்பதாண்டுகளுக்குப் பிறகு, ‘துக்ளக்’ வெளியானால், அதன் ஆசிரியர் (ஐயோ, பாவம்), அந்த இதழில், இப்படி ஒரு தலையங்கம் எழுதுவாரோ, என்னவோ!
சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னால், ஒரு விவகாரம் நடந்திருக்கிறது. அதன் பின்னணி, தோற்றம், வளர்ச்சி, முடிவு – ஆகியவற்றைப் பற்றிய செய்திகளை, இப்போது படித்துப் பார்க்க நேர்ந்தது. வியப்பு என்றால் அப்படிப்பட்ட ஒரு வியப்பு! ‘இப்படியும் நடந்திருக்குமா!’ என்று நம்மைத் திகைக்க வைக்கிறது, அந்த விவகாரம்.
சுமார் ஐம்பத்திரண்டு வருடங்களுக்கு முன்பு, மதுரையில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அன்றைய தமிழக முதல்வர், கலைஞர் என்று அழைக்கப்பட்ட திரு.கருணாநிதி. ஸ்டாலின், அழகிரி என்ற அவருடைய மகன்கள் அரசியலில் ஈடுபட்டிருந்தார்கள். அவருடைய மருமகனின் மகன் தயாநிதி மாறனும் அரசியலில் சேர்க்கப்பட்டு, மத்திய மந்திரியாக்கப் பட்டிருந்தார். அவருடைய அண்ணன் கலாநிதி மாறன் என்பவர், சன் டி.வி. என்ற டெலிவிஷன் சானலையும், ‘தினகரன்’ என்ற தமிழ் தினசரிப் பத்திரிகையையும் நடத்தி வந்தார். கலைஞரின் குடும்பத்தில், இப்படி பலர் அரசியலில் ஈடுபட்டதால், அவர்களுக்குள் பலவிதப் போட்டா போட்டிகள் நடந்து வந்தன.
அந்தப் போட்டா போட்டியின் ஒரு அம்சமாகவோ என்னவோ – ‘தினகரன்’ பத்திரிகை ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டது. ‘கலைஞரின் வாரிசு யார் – என்ற கேள்விக்கு, ‘அழகிரி’ என்று பதில் அளித்தவர்கள் 2 சதவிகிதம் பேர்தான் என்று அந்தக் கருத்துக் கணிப்புக் கூறியது.
இதற்கு முன்பே ஒரு கருத்துக் கணிப்பில் – பா.ம.க. என்ற கட்சியின் தலைவர் ராமதாஸின் மகன் அன்புமணி (மத்திய அமைச்சர்) திறமைசாலி என்று வாக்களித்தவர்கள் 1 சதவிகிதம்தான் – என்று ‘தினகரன்’ கூறியிருந்தது. அதாவது, முதல் கணிப்பில் அன்புமணிக்கு இடி; இரண்டாவது கணிப்பில் அழகிரிக்கு அடி. முதல் கணிப்பு, ராமதாஸிற்குக் கோபத்தை உண்டாக்க, அவரைத் தனது கூட்டணியில் அப்போது வைத்திருந்த கலைஞர், அந்தக் கணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘அந்த மாதிரி கணிப்புகள் நம்பத் தக்கவையல்ல’ என்று தெரிவித்தார். அத்துடன் ‘இம்மாதிரி கருத்துக் கணிப்புகளை வெளியிட வேண்டாம்’ என்று தன் மருமகனின் மகனைக் கேட்டுக் கொண்டதாகவும் அவர் பின்னர் கூறினார். முதல்வரின் வாரிசு யார் என்ற கணிப்பும் வெளியிட வேண்டாம் – என்று தான், மருமகனின் மகனிடம் கேட்டுக் கொண்டதாக கலைஞர் கூறினார். ஆனால், கணிப்பு வெளியாகியது. அந்த இரண்டாவது கணிப்பில்தான், அழகிரிக்கு அடி.
இதையடுத்து, மதுரையில் ‘தினகரன்’ அலுவலகம் தாக்கப்பட்டது; பெட்ரோல் குண்டு வீச்சு நடந்தது; உடைப்பு, சூறையாடல் எல்லாம் நடந்தேறின; மூன்று அப்பாவிகள் (தினகரன் பத்திரிகை ஊழியர்கள்) உயிரிழந்தனர்.
இது நடந்தது மதுரையில். அங்குதான் அழகிரியும் வசித்து வந்தார். (அவருடைய அதிகாரம், மதுரையிலும் அதைச் சுற்றியுள்ள சில மாவட்டங்களிலும் கொடி கட்டிப் பறந்ததாகவும், அந்தக் காலச் செய்திகளிலிருந்து தெரிய வருகிறது.) இந்தக் கொடூரச் சம்பவம் நடந்த பின்னர், சன் டி.வி. மற்றும் தினகரன் அதிபர் கலாநிதி மாறன், ‘தினகரன் மீதான தாக்குதலை அழகிரிதான் தூண்டிவிட்டு நடத்தியிருக்கிறார்’ – என்று குற்றம்சாட்டினார். அழகிரி அடியாட்கள்தான் தாக்குதலை நடத்தியதாக, அந்தக் காலத்துப் பத்திரிகைகள் எல்லாம் செய்திகளை வெளியிட்டன. தன் அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் கொலை செய்யப்பட்டதை, சும்மா விடப் போவதில்லை என்றும், குற்றவாளிகள் தண்டனை பெறும் வரை ஓயப் போவதில்லை என்றும் தினகரன் அதிபர் கலாநிதி மாறன் கூறினார்.
இதெல்லாம் நடந்ததால் – கலைஞர் குடும்ப அரசியல்வாதிகள் இடையே பிரச்சனைகள் எழுந்தன. மத்திய மந்திரியாக இருந்த தயாநிதி மாறன் பதவி இழக்க நேரிட்டது. சன் டி.வி.க்குப் போட்டியாக, கலைஞர் டி.வி. என்று ஒன்று வந்தது. சன் டி.வி.யின் ‘கேபிள் டி.வி.’ சாம்ராஜ்யத்தை ஒடுக்குவதற்காக, ‘தமிழக அரசே ஒரு கேபிள் டி.வி. நெட்வொர்க் நடத்தும்’ என்று அறிவிக்கப்பட்டது; ஆரம்பமும் நடந்தது. விவகாரம் முற்றியது.
தினகரன் அலுவலகத்தைத் தாக்கியதற்காகப் பலர் மீது புகார் பதிவாகியது. ஸி.பி.ஐ. என்ற (மத்திய அரசின் சொல்லைக் கேட்கிற) அமைப்பு விவகாரத்தை விசாரித்து, வழக்கைப் பதிவு செய்தது. வழக்கு நடந்தது.
இதற்கிடையில், குடும்ப அரசியல்வாதிகளிடையே சமாதானம் ஏற்பட்டு விட்டது. தயாநிதி மாறன், உடனே மீண்டும் மத்திய மந்திரி ஆகவில்லை என்றாலும், அடுத்தத் தேர்தலில் மீண்டும் எம்.பி.யாகி மந்திரியாக்கப்பட்டார். முன்போல மசாலா இலாகா இல்லையென்றாலும், சாதா இலாகாதான் அவருக்குக் கிடைத்தது என்றாலும், மந்திரி, மந்திரிதானே! அழகிரியும் மந்திரியானார்; அது மசாலா இலாகா.
குடும்ப சமாதானத்தை அடுத்து, ‘அரசு கேபிள்’ சமாதி அடைந்தது. ‘அரசுக்கும், குடும்பத்திற்கும் என்ன சம்பந்தம்?’ என்று இன்றைய வாசகர்கள் கேட்கலாம். ஆனால், அன்று அந்த வித்தியாசம் எல்லாம் இருக்கவில்லை. அரசுதான் குடும்பம்; குடும்பம்தான் அரசு என்ற ஒரு விசாலமான மனப்பான்மையும், மரபும் அன்று இருந்தன.
ஆக, வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே, குடும்ப சமாதானம் ஏற்பட்டு விட்டது. வழக்கு நடந்தது. சாட்சிகள் பல்டி அடித்தனர். ஒரு போலீஸ் அதிகாரியே கூட, முதலில் கூறியதை மாற்றி, தான் எதையும் பார்க்கவில்லை என்று கூறிவிட்டார். ‘தினகரன்’ பத்திரிகைகளில் வேலை செய்தவரே கூட எதுவும் தெரியாது என்று சொல்லி விட்டார். குற்றம்சாட்டப்பட்டவர்கள் 17 பேர். அத்தனை பேரும் விடுதலை.
ஒரு பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டது; கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன; பெட்ரோலில் குண்டு, அது இது என்று ஒரே அமர்க்களம். மூன்று பேர் உயிரிழப்பு. சும்மா விடப் போவதில்லை – என்று பத்திரிகை அதிபர் கூறினார். அதன் பிறகு பார்த்தால் – நடந்ததற்கு சாட்சியமே இல்லை! எல்லாம் திடீரென மாறி விட்டன!
குடும்ப சமாதானத்தைத் தவிர, இடையில் நடந்த விஷயம் வேறு எதையும் காணோம். சமாதானத்திற்கும், சாட்சிகளுக்கும் என்ன சம்பந்தம்? பார்த்ததாகச் சொன்னவர்கள், பார்க்கவில்லை என்று ஏன் சொல்ல வேண்டும்? சம்பவம் நடந்த இடத்திலேயே இருந்த போலீஸ் அதிகாரி – குடும்ப சமாதானத்திற்குப் பிறகு – தனக்கு எதுவும் தெரியாது என்று சொல்வானேன்?
மூன்று பேர் கொலையுண்ட விவகாரத்தில், குற்றவாளிகளே இல்லையா? அந்த மூன்றுமே தற்கொலைகளா? சரி, சாட்சிகள் முதலில் பொய் சொன்னதற்காக என்ன தண்டனை பெற்றார்கள்? ஒன்றுமில்லை. ப்ராஸிக்யூஷன் வழக்கையே தகர்த்தெறிகிற வகையில், அரசு தரப்பிற்கு எதிராகத் திரும்பிய போலீஸ் அதிகாரிக்கு என்ன வெகுமதி – மன்னிக்கவும் – என்ன தண்டனை கிடைத்தது? தெரியாது.
அப்போதைய பத்திரிகை உலகம், மதுரை நிகழ்ச்சிகளைக் கண்டித்து தீர்மானம் போட்டது. ‘நியாயம் கண்டே தீர வேண்டும்; குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும்’ என்று பல பத்திரிகையாளர்கள் ஆக்ரோஷமாகப் பேசினார்கள். அவர்கள் எல்லோரும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலையான போது – ஒரு முணுமுணுப்பைக் கூடச் செய்யவில்லையே! ஏன்? மதுரை நிகழ்ச்சிகள் ஏற்கத்தக்கவை என்று பத்திரிகையாளர்கள் தீர்மானித்து விட்டனரா? அப்படியானால், எதற்காக முதலில் அப்படி வெகுண்டு எழுந்தார்கள்?
‘தினகரன்’ அலுவலகத்தில் நடந்த அராஜகங்களுக்கும், மூன்று கொலைகளுக்கும் சம்பந்தமே இல்லாத பதினேழு பேர் மீதா, ஸி.பி.ஐ. வழக்கு நடத்தியது? பதினேழு பேரில் ஓரிருவர் கூட தண்டனைக்குள்ளாகவில்லை எனும்போது – யாரோ அப்பாவிகளையா ஸி.பி.ஐ. கைது செய்து, சிறையில் வைத்து, வழக்கு நடத்தி ஹிம்ஸித்தது? அட, அநியாயமே!
வழக்கு இதுபோல் எப்படி முடிவடைந்தது? ஒருவேளை ‘தினகரன்’ பத்திரிகை அலுவலகம் தாக்கப்படவே இல்லையா? மூன்று பேர் உயிர் இழக்கவே இல்லையா? ஒருவேளை, ‘இது குடும்ப விவகாரம்; ஆகையால் மூன்று பேர் கொலை என்பது ஒரு கிரிமினல் கேஸ் அல்ல; அது குடும்பத்தினர் பேசித் தீர்க்க வேண்டிய விஷயம்’ என்று அந்தக் காலத்தில் நினைக்கப்பட்டு விட்டதா? அப்படி இருந்தால் இந்த விவகாரத்தை பேசாமல் அப்போது இருந்த ‘குடும்ப கோர்ட்’ (ஃபேமிலி கோர்ட்)டில் நடத்தியிருக்க வேண்டியதுதானே? எதற்காக கிரிமினல் சட்டப்படி வழக்கை நடத்த முனைந்தார்கள்? சும்மா, ஒரு விளையாட்டுக்கா?
ஔஒளாக்கட்டியா? கண்ணாமூச்சியா? அரை நூற்றாண்டிற்குப் பிறகு இந்த விவகாரத்தைப் பற்றிய செய்திகளைப் படிக்கிறபோது, அப்படித்தான் தோன்றுகிறது. ஐம்பது வருடங்களுக்குப் பிறகு அந்த நிகழ்ச்சிகளைப் பார்க்கிறபோது, நம் மனதில் கேள்விகள்தான் பல எழுகின்றனவே தவிர, ஒரு பதிலும் தெரியவில்லை.
வருடங்கள் ஐம்பது கழிந்து விட்டன. இனிமேல் இந்த விவகாரத்தைக் கிளறி என்ன கண்டோம்? மூன்று பேர் இறக்கக் காரணமானவர்களைப் பற்றி, இப்போது என்ன விசாரித்து என்ன பயன்? சரி; நமக்கு இப்போது – ஐம்பது வருடத்திற்குப் பிறகு – இப்படி எண்ணத் தோன்றுகிறது. ஆனால், அன்றே – அதாவது ஐம்பது வருடத்திற்கு முன்பே மக்களும், அரசியல் தலைவர்களும், பத்திரிகைகளும், பொதுநல அமைப்புகளும் ‘சரி, போகட்டும். என்ன செய்வது?’ என்று விட்டுவிட்டார்களே, அது தான் ஆச்சர்யம். அதுதான் பெரிய வியப்பு.
( நன்றி: துக்ளக் )
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Thursday, December 17, 2009
இது, 23.12.2059 இதழ் தலையங்கம்! - துக்ளக்
Posted by IdlyVadai at 12/17/2009 09:45:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
27 Comments:
அம்மா வருவார்.
அரசு கேபிள் வரும்.
அழகிரி போவார்.
எப்பொழுது , எப்படி, எங்கே ?
23.12.2059 இல் ஸ்டாலின் பேரன் முதல்வராகவும், அழகிரி பேரன் மத்திய அமைச்சராகவும் இல்லாமல் இருந்தால் சரி.
நம்ம நாட்டின் தலைஎழுத்து. மக்களுக்கும் சொரணை ரொம்ப கம்மி. (என்னையும் சேர்த்து.)
அவன் வீடு பற்றி எறிந்தால் தான் தண்ணியை தூக்குவான். இல்லாட்டி வேடிக்கை பார்பான்.
இன்போசிஸ் அதிபர் நாராயண முர்த்தி சொன்ன Learning from the west வார்த்தை நியாபகம் வருது.
But he don't want to enter politics.
ரொம்ப வருடம் அடிமைகளாக இருந்ததால் வந்த மனோ வியாதி போல.
I wonder when will we people will get that "Loyalty to Community".. Can that happen in 2059?
Satire at it's very best - though the incident provokes deepest sympathies for the victims ;-(
Vikram..
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு... நொள்ள மாட்டுக்கு?
- கோபால்சாமி
Let us hope atleast now there is public hue and cry and the case will be reopened and justice delivered. I also wish Sri Cho takes it up in the press council for discussion and report what happens there. - R. Jagannathan
neengal solvathu pola 50 aandugal ivargal nirga povathillai yenpathe en kootru
ஐயா,
2059 இல் துக்ளக் இதழ் இருக்கும், அனால், சன் டிவி இருக்காதா, தினகரன் இதழ் இருக்காதா? கலைஞர் டி.வி கூட இருக்காதா ?
கொஞ்சம் விட்டால், "ஐம்பது ஆண்டுகளுக்கு முன், இந்திய என்ற ஒரு நாட்டில் தமிழ் நாடு என்ற மாநிலம் இருந்தது, உங்களுடைய தத்தாகளும் பாட்டிகளும் அங்கே தன வசித்து வந்தார்கள் " னு சொல்வீங்க போல !
Postmortem
-Kamal
Postmortem
Nalla script.........
I can only feel for those 3....
-Kamal
அதே கால கட்டத்தில் விஜய், நடித்த வேட்டைக்காரன் படம் வெளியாகி சக்கை போடு போட்டதாமே .
// அம்மா வருவார்.
அரசு கேபிள் வரும்.
அழகிரி போவார். //
முதலமைச்சராக தான் போட்ட கையெழுத்தை ( பத்திர பதிவுக்கு ) , தான் போடவே இல்லை என்று பொய் சொன்ன, மற்றும் கல்லூரி மாணவிகள் வந்த பேருந்தை கொளுத்திய மகா கொடுரமான அரக்கர்களை கண்டிக்காத அம்மா வந்தாலும் இதே நிலைமை தான் தொடரும்.தமிழ் நாட்டில் உள்ள அப்பாவி மக்களின் நிலமும் அம்மா கைவசம் மாறும். அவ்வளவு தான்.
"Learning from the west " - It was worth reading.
-Thanks Baski
Why Shreya's photo in the side bar without any caption ?Any reason?
[Anonymous Anonymous said...
Why Shreya's photo in the side bar without any caption ?Any reason?]
idallam aaraya koodathu... anubavikannam. :)
இதையே கொஞ்சம் மாற்றி 6 டிசம்பர் 1992ல் நடந்தது பற்றியும் எழுதலாம்,லிபரான் கமிஷன் அறிக்கைதான் வெளியாகிவிட்டதே.அது போல்
2002ல் குஜராத்தில் நடந்த மதக்கலவரம் பற்றியும் எழுதலாம்.
துக்ளக் சோ அப்படி எழுதமாட்டார்.அப்படியே யாராவது எழுதினாலும் இ.வ அதை தன் பதிவில் போடமாட்டார்.ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை என்ற கதைதான்.
அழகிரிகளை தண்டிக்க வேண்டும் என்பவர்கள் மோடிகள்,அத்வானிகள் குறித்து வாயே திறக்க மாட்டார்கள்.
அதே கால கட்டத்தில் விஜய், நடித்த வேட்டைக்காரன் படம் வெளியாகி சக்கை போடு போட்டதாமே .
ITHU KUDA SUPER COMMEDY THAN.
அதே கால கட்டத்தில் விஜய், நடித்த வேட்டைக்காரன் படம் வெளியாகி சக்கை போடு போட்டதாமே .
December 18, 2009 5:21 AM
HI.,.,., HI.,.,.,., HI.,.,.,.,
The root cause for all such ills is reservation in Govt. job appointments and selection of Judicial officers on grounds other than merit. Those who have occupied such posts on reasons other than merit don't have self-esteem, lack moral courage and hence never ever question the powers that be - whether it is Karuna or Jaya. The end results will always be like this. No point in moaning about the judgment now.
Slowly but surely, such kinds of blatant perversion of the law of the land, will drive ordinary people to shun democracy & will lead the nation towards anarchy.
மெழுகுவர்த்தி ஒன்றை ஏற்றி வைத்துக்கொண்டு, சமையல் செய்ய முயல்வது
ரத்த புற்றுநோயை ,விக்ஸ் வேபோரப் தடவி, குணப்படுத்த முயல்வது
டைனோசார் ஒன்றை ஈர்க்குச்சியால் அடித்து, துரத்த முயல்வது
இவற்றையெல்லாம் விட "புத்திசாலித்தனமான" செயல்,
தமிழகத்தின் சாபங்கள் "இரண்டையும்", தலையங்கம் எழுதி நீக்க முயல்வது!!
வேதநாராயணன் :
தமிழகம் என்னும் செழிப்பான வயலை இரண்டு பொதிக்காளைகள்,திட்டமிட்டு
40 ஆண்டுகளாக மேய்ந்துவருகின்றன.
ஒரு மாடு 5 வருடம் நன்கு மேய்ந்துவிட்டு அசைபோட போய் விடுகிறது உடனே அடுத்த மாடு வந்து மேய்கிறது 5 வருடம் கழித்து, இந்த மாடு அசை போட செல்ல,அசை போட்டு ஜீரணம் செய்து ஒய்வு எடுத்த மாடு, புது சக்தியுடன் மீண்டும் மேய வருகிறது.
இவை இரண்டும் ஒன்றுக்கொன்று விரோதி போல, மற்றவர்களை நம்பவைத்து, ஏமாற்றி, மூன்றாவது மாடு எதுவும், வராமல் பார்த்துக்கொள்கின்றன !
ஜெச்சிகா லால் மரணத்தையொட்டிய வழக்கில் சரியான் தீர்ப்பு வராதபோது டெல்லியில் பொதுமக்கள் கூடி எதிர்ப்பு தெரிவித்து வழக்கை திசை திருப்பினார்கள் .ஆனால் நம் பொதுஜனத்துக்கு டாஸ்மாக்கை குடிக்கவும் இலவச டீவி பார்க்க்கவுமே தாநே முடியும்?
>>அழகிரிகளை தண்டிக்க வேண்டும் என்பவர்கள் மோடிகள்,அத்வானிகள் குறித்து வாயே திறக்க மாட்டார்கள்.>>
மோடி, அத்வானியைத் தண்டிக்க வேண்டும் அவர்கள் திறக்கவில்லை என்று நீங்கள் சொல்வது சரி. அதே சமயம், அழகிரிகளைத் தண்டிக்க வேண்டும் என்று நீங்கள் ஏன் சொல்லவில்ல்லை? இப்போது நான் சொல்கிறேன்,மோடி, அத்வானியைத் தண்டிக்க வேண்டும் என்று. நீங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள்?
IF the present state of affairs is allowed to continue there wont be Thuklak 0n 2059..But kalignar tv,sun tv dinakaran ,murasoli all woul be there forever as the entire Tamilnadu would have gone to the present royal family and all the family members would have shared it.Nobody would have the guts to question the great grandsons of the royal family.Maybe Tamilnadu would be rechristened after the name of the mighty member of the family.
Perhaps in 50 years, DMK and ADMK would have come to an understanding and TN might have been split into two TN's - owned and ruled by each of these dynasties. Where will Thuglak be? - R. Jagannathan
2012 ல உலகம் அழியுதாமே?
2059 என்ன, உலகத்துல கழுதைகள் இருக்கும்வரை நிச்சயமா, துக்ளக் இருக்கும்.
Who knows? In 2059, the indian rupee notes might be having Kalaingar's photo instead of Gandhi's...Thalaiyezhuthu!!!!
Post a Comment