பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, December 31, 2009

2009 இட்லிவடை விருதுகள்

இவ்வாண்டின் ”சிறந்த” விருதுகள் அறிவிக்க சொல்லி ஒரு கமெண்ட் வந்தது. நமது பங்குக்கு நாமும் கொஞ்சம் கொளுத்திப் போடலாம் இந்த ஆண்டுன் ”சிறந்த” இட்லிவடை விருதுகள்.....

டிஸ்கி : இவ்விருதுகளில் பல, இவ்வாண்டுதான் அறிமுகப்படுத்தப்படுகிறது. அடுத்த ஆண்டு இதே விருதுகள் அல்லாமல், ஸிமிலரான வேறு விருதுகள் வழங்கப்படலாம்.



இவ்வாண்டின் சிறந்த அந்தர் பல்டி:

இவ்விருது சந்தேகமற காங்கிரஸ் கட்சிக்குப் போகிறது. அர்த்த ஜாமத்தில் அறிவித்த தெலங்கானா இன்று அந்தரத்தில் தொங்குகிறது. இதற்காக சிறந்த ”அந்தர் பல்டி” விருது காங்கிரஸிற்கு வழங்கப்படுகிறது.

குறிப்பு: இவ்வாண்டிற்கான அந்தர் பல்டி விருதுக்கு பரிசீலிக்கப்பட்டோரில், திருமாவளவனுக்கும் காங்கிரஸிற்குமிடையே பலத்த போட்டி இருந்த்து. பாபர் மசூதி கட்டுதற்கு புறப்படுதல், பிறகு அடுத்த ஆண்டு புறப்படுவதாகச் சொல்லி, அதற்கடுத்த ஆண்டும் போய் இன்னும் ஏதும் செய்யாமலிருத்தல், காங்கிரஸ் கட்சியுடன் விரோதம், பிறகு கூட்டணி, ராஜபக்‌ஷேவை கண்டமேனிக்கு வசவியது, பிறகு கைகுலுக்கி புன்னகை பூத்த்து வரை பல அந்தர் பல்டிகளை இவர் அடித்திருந்தாலும், கடைசி சுற்றில் 0.1 புள்ளி வித்யாசத்தில் காங்கிரஸ் இவ்விருதினைத் தட்டிப் பறித்து விட்ட்து. ஆனாலும் திருமா கவலையுற வேண்டாம். அடுத்த தேர்தலுக்குள் அடிப்பதற்கு இன்னும் பல்டிகள் பல இருக்கின்றன.

உட்கட்சிப் பூசல்:

இவ்வாண்டின் சிறந்த உட்கட்சிப் பூசலுக்கான விருது பா.ஜ.க விற்கு. கடந்த சில ஆண்டுகளாக இவ்விருதினைத் தொடர்ந்து பெற்று வந்த காங்கிரஸிடமிருந்து இவ்வாண்டு பா.ஜ.க இதனைத் தட்டிப் பறித்து விட்டது.

அம்பேல்:

இவ்வாண்டில் நடைபெற்ற அனைத்து இடைத்தேர்தல்களிலுமே, டெபாஸிட்டை, தேர்தல் கமிஷனுக்கு தானமாக்க் கொடுத்த கேப்டனுக்கு சிறந்த அம்பேல் விருது.

“U” Turn:

இவ்வாண்டின் சிறந்த “U Turn” விருதினை முறையே, இளைஞர் காங்கிரஸ் போஸ்டரில் காட்சியளித்து விட்டு பிறகு காணாமல் போன, இளைய தலைவலி, ச்சே, தளபதி விஜய்யும், தமிழகம் வந்துவிட்டு, டெல்லியின் தலைநகரான(??) கோபாலபுரத்திற்கு தண்ணி காட்டிவிட்டுச் சென்ற ராகுலும் பகிர்ந்து கொள்கின்றனர்.



செக்ஸ் ஸ்காண்டல்:

இவ்வாண்டு பல பாலியல் முறைகேடுகளைச் சந்தித்திருந்தாலும், கவர்னர் மாளிகையையே கலகலக்கச் செய்த, 80 வயது ராஸ லீலா நாயகன், என்.டி.திவாரிக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. N D என்பதற்கு Night Duty என்றும் சொல்லுகிறார்கள். உண்மையா ?

(குறிப்பு: இவ்விருதுப் பட்டியல் தயார் செய்யும் நேரத்தில் வந்த் முக்கியச் செய்தி, 1980’லேயே இவரது முழு நீள இரவு லீலை உளவுத் துறையின் மூலம் படமாக்கப்பட்டு, வீடியோ கேஸட் உளவுத்துறை வசம் உள்ளதாம். எனவே இவ்விருதிற்கு இவர் தகுதி படைத்தவர் என்று கூறுவதை விட, இவ்விருதிற்கு இவரையடையும் தகுதி இருக்கிறது என்று கொள்ளலாம்.)



பெண்ணுரிமைவாதி :
இவ்வாண்டின் சிறந்த ”பெண்ணுரிமைவாதி” விருது, பகுத்தறிவாளர்களே கண்டு பொறாமைப்படும் வகையில் பல பெண்களுக்கு உரிமை கொண்டாடிய டைகர் உட்ஸிற்கு வழங்கப்படுகிறது.



சமத்துவவாதி:

தமது படங்களிலெல்லாம் சாதி ஒழிப்பு பற்றிப் பேசிவிட்டு, பிரச்சனை வந்த்தும், அய்யகோ என்னைக் காப்பாற்றுவோர் இல்லையா என ஜாதிக் கட்சி மாநாட்டில் புலம்பிய விவேக்கிற்கு, சிறந்த சமத்துவ்வியாதி, ச்சேச்சே, சமத்துவவாதி விருது வழங்கப்படுகிறது. இன்று குமுதத்தில் மன்னிப்பு கேட்டதற்கு வேறு ஏதாவது விருது கொடுக்கலாமா என்று தீவிரமாக யோசிக்கிறோம்.

குலத்தொழில்:

குலத்தொழில் சட்ட்த்தை எதிர்த்து விட்டு, கட்சி நட்த்துவதையே குலத்தொழிலாக்கிவிட்ட வீரமணிக்கு இவ்வருட்த்திற்கான சிறந்த குலத்தொழில் முனைவோர் விருது வழங்கப்படுகிறது.



க்ரேட் எஸ்கேப்:



இவ்விருது ஸ்பெக்ட்ரம் புகழ் ராசாவிற்கு!! பல எதிர்ப்புகள், சிபிஐ ரெய்டுகள் எல்லாவற்றையும் மீறி தற்காலிகமாக எஸ்கேப் ஆகியுள்ள ராசாவிற்கு.



மாடலிங் :



மாடலிங்கிற்கான சிறப்பு விருது கேரள அரசியல்வாதியும், கேரள இலக்கியவாதியுமான சாரு நிவேதிதாவிற்கு. ஜாக்கி ஜட்டிகள், கெவின் கெலின் ஜட்டிகளின் விற்பனை விண்ணை முட்டுமளவிற்கு இவரால் அதிகரித்துள்ளதாக அந்நிறுவனத்தாரே இவ்விருதிற்கு சாருவை பரிந்துரைத்தனர்.

பாரபட்சம் பாராமல் அனைத்து விதமான லுங்கிகளுக்கும் விளம்பரம் தேடித் தந்த்தால், ஞானிக்கு மேலாடைப் பிரிவில் மாடலிங் விருது வழங்கப்படுகிறது.



விழா நாயகன் ::



இவ்வாண்டிற்கான சிறந்த விழா நாயகன் விருது கலைஞருக்கு. அயராத அரசு பணிகளுக்கிடையே, முள்கிரீடமான முதல்வர் பதவியையும் சுமந்த வண்ணம் வரலாறு காணாத விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை வாங்கியமைக்காக.

முகமூடி::

இவ்வாண்டிற்கான முகமூடி விருது, திரைப்பட இயக்குனர் சீமான், திருமா, வைகோ போன்றோர்களுக்கு வழங்கப்படுகிறது. பிரபாகரன் இருக்கும் வரை, கிரிக்கெட் பார்ப்பவர்கள் நல்ல அப்பனுக்குப் பிறந்தவர்கள் அல்ல என்று சொல்லும் அளவிற்கு வாய்கிழிய பேசிய சீமான், இப்போது இருக்குமிடம் தெரியவில்லை. ஆதலால் அவருக்கு இம்மூவருள் சிறந்த முகமூடி விருது அளிக்கப்படுகிறது. இவர்களுடன் போட்டி போட்ட இட்லிவடை தோல்வி அடைந்தார் என்பது கொசுறு தகவல்.

போஸ்ட்மார்ட்டம்



இவ்வாண்டின் சிறந்த போஸ்ட்மார்ட்டம், மைக்கேல் ஜாக்ஸன் மரணம். இன்னும் முடிந்த பாடில்லை.

ஊழல்வாதிகள்


சிறந்த ஊழல்வாதிகளுக்கான சிறப்பு விருதுகளைத் தட்டிச் செல்வோர் முறையே மது கோடா மற்றும் சத்யம் ராமலிங்க ராஜூ. விஞ்ஞான முறையில் ஊழல் செய்யத் தெரியாத்தால் மாட்டிக் கொண்டனர். ஆயினும் விருதுக்குத் தகுதி படைத்தவர்களாயினர்.



குணச்சித்திரம்:



பல்வேறு பரிமாணங்களில் சிறப்பான முறையில் தமது குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த குணச்சித்திர நடிப்பிற்கான விருது கர்நாடக முதல்வர் எதியூரப்பாவிற்கு வழங்கப்படுகிறது.

திரைக்கதை:

சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விருது, மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கஸாப்பிற்கு வழங்கப்படுகிறது. பிடிபட்ட நாள்முதல், நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக புதிய புதிய கதைகளை ஸ்ருஷ்டிப்பதால், இவ்விருது அஜ்மலுக்கே. "அந்த பணம் என்னுடையது ஆனால் அந்த பேண்ட் என்னுடையது இல்லை" போன்ற வசனத்துக்கு சிறப்பு விருது என்ன வழங்கலாம் என்று விருது கமிட்டி யோசிக்கிறது.



திகில் திலகம்::



எந்த வேளையில், எங்கே, எப்படி வருவார் என்று தெரியாமல் அனைவரையும் திகிலில் ஆழ்த்திய பன்றிக் காய்ச்சலுக்கும் ஒரு விருது, திகில் திலகம்.





சீரியஸாக சிந்திக்கும் வேளையில்::


இவ்வாண்டில் பலர் உண்மையிலேயே பல நல்ல விருதுகளுக்குத் தகுதி படைத்தவர்களாகின்றனர். அவர்களுள் சிலர்

சந்திரனில் தண்ணீர் இருப்பதாக்க் கண்டறிந்த சந்திராயனை வடிவமைத்த நமது விஞ்ஞானிகள்.

மாருதிக்கு அடுத்து சிறிய ரக கார் அறிமுகத்தில் புரட்சி செய்த டாடா நிறுவனத்தார்.


இவை தவிர,

பத்திரிக்கையுலகம் என்ற பறந்த வான்வெளியில் புதிதாகத் தோன்றியுள்ள நட்சத்திரங்களான, இளைய தலைமுறை மற்றும் சூரியக்கதிர் ஆகிய இரண்டும் துருவ நட்சத்திரங்கள் போல் பிரகாசமாக ஒளிர இட்லிவடையின் வாழ்த்துக்கள்.


உண்மையான உழைப்பின் காரணமாக ஆஸ்கர் விருது வாங்கிய ஏ.ஆர்.ரஹ்மான், மற்றும் நோபல் பரிசு வாங்கிய இந்திய வம்சாவளி பிரிட்டிஷ் பிரஜை ராமகிருஷ்ணன் வெங்கட்ராமனுக்கு ஷொட்டுக்களும், ஒன்றுமே செய்யாமல் நோபல் பரிசு பெற்ற ஒபாமாவிற்கு சில குட்டுகளும்.

லிபரன் அறிக்கை கின்னஸ் உலக சாதனைக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

ஜெயலலிதா ரெஸ்ட் எடுப்பதால் அவர் விருது வாங்க வரமாட்டார், அதனால் அவருக்கு இந்த ஆண்டு எந்த விருதும் இல்லை. மன்னிக்கவும்

இந்திய கிரிக்கெட் அணிக்கு "அப்டியே "ஷாக்காயிட்டேன்" ( வடிவேலு ஸ்டைலுல் படிக்கவும் ) கொடுக்கப்படுகிறது.


மற்ற விருதுகள் வாசகர்கள் பின்னூட்டத்தில் கொடுக்கலாம்.

30 Comments:

Boston Bala said...

சூப்பர்!

கானகம் said...

செம நக்கலான விருதுகள். சரி, என்னைக்கு பரிசு குடுக்கப் போறீங்க?

அண்ணல் ராமதாசை நட்டாற்றில் விட்ட 49ஓவுக்கும் ஒரு பரிசு குடுத்திருக்கலாம்.

இட்லிவடை ராக்ஸ்..

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஜெயக்குமார்

IdlyVadai said...

முதல் கமெண்ட் போட்ட பாபாவிற்கு சிறந்த கமெண்ட் விருது !

Rohajet said...

அண்ணா விருது, பெரியார் விருது, கலைஞர் விருது யாருக்கு????

மிளகாய் பொடி said...

தனியாக வெப்சைட் ஆரம்பித்து மக்களுக்காக அயராமல் பணியாற்றும் தளபதி, வருங்கால முதல்வர் சுடாலின் அவர்களுக்கு ஏதாவது விருது போட்டு கொடுக்கும்படி கேட்டுகொள்கிறேன்!!

வேட்டைக்காரன் என்கிற காலத்தால் அழிக்க முடியாத காவியத்தை தந்த இளைய தளபதிக்கு பாரத் ரத்னா தரலாமா?

அதிமுகவிலிருந்து விலகி இப்போது எங்கு போவது என்று தெரியாமல் இருக்கும் எஸ். வீ. சேகருக்கு திரிசங்கு விருது பரிந்துரைக்கபடுகிறது

மைக் முனுசாமி said...

கலைஞர் பாணியில் உங்களுக்கு நீங்களே விருதுகள் கொடுத்துக் கொள்வதில்லையா...??

இட்லிவடைக்கு என்ன விருது என்பதை எதிர்பாக்கிறோம்..

கௌதமன் said...

இட்லிவடைக்கு கி அ கி விருது.
கிண்டல் அலங்காரக் கிறுக்கர்.

Unknown said...

"இளைய தலைமுறை" --புதிய தலைமுறை!!!!!!!!!!

பிரபாகர் said...

சிறந்த விருது வழங்கியதற்கான விருது சந்தேகத்துக்கிடமில்லாமல் இட்லி வடைக்கே!

பிரபாகர்.

Guru said...

சிறந்த சர்க்கஸ் மாஸ்டர் - ராமதாஸ்

இலவச கலர் டி.வி வழங்கி சமத்துவத்தை ஏற்படுத்தியுள்ளவர் கருணாநிதி-திருமாவளவன்http://tinyurl.com/ye6j3al 2009 இன் சிறந்த காமெடியன் விருதுக்கும் பரிந்துரைக்கிறேன்.

சிறந்த குடும்பத்தலைவர் - கலைஞர் (சன் குடும்ப பூசலுக்கு முடிவு கட்டியது, உண்ணாவிரதம்,மௌனமாய் அழுதது,டெல்லிக்கு அமைச்சர் பதவிக்கு பறந்தது)

குட் பாய் விருது - அழகிரி

Baski said...

Politics Special

சிறந்த நடிகர் -> மு.கருணாநிதி
சிறந்த ஓய்வாளர்(?) -> செல்வி. ஜெ. ஜெயலலிதா.
சிறந்த கதாசிரியர் -> திருமாவளவன்.
சிறந்த நகைச்சுவை பேச்சாளர் -> மருத்துவர் ராமதாஸ்.

Anonymous said...

Hello Idli Vadai

A small correction. Nobel prize Winner Ramakrishnan is a US Citizen not British citizen.

KCDesi

Selvakumar said...

சிறந்த கணிப்பாளர் விருது - சோ ராமசாமிக்கு.. பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவின் வெற்றியைத் துல்லியமாக கணித்தமைக்கு..

Anonymous said...

அண்ணா விருது, பெரியார் விருது, கலைஞர் விருது யாருக்கு????
எல்லா விருதுகளும் கருணாநிதி சாஸ்திரிக்கே! (வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி = பரிதிமாற்கலைஞர்; கலைஞர் கருணாநிதி = கருணாநிதி சாஸ்திரி).
அ. நாமதேயம்

Anonymous said...

உலக இன்டர்நெட் வரலாற்றில் முதன் முறையாக (சன் டிவி பாணியில் படிக்கவும்) ஜக்குபாய் படம் இன்டர்நெட்-ல ரிலீஸ் ஆயிடுச்சு.

தியேட்டர்-ல பொங்கல் ரிலீசாம்.

இதுவும் இந்த ஆண்டு சாதனை தான்.

Anonymous said...

உலக இன்டர்நெட் வரலாற்றில் முதன் முறையாக (சன் டிவி பாணியில் படிக்கவும்) ஜக்குபாய் படம் இன்டர்நெட்-ல ரிலீஸ் ஆயிடுச்சு.

தியேட்டர்-ல பொங்கல் ரிலீசாம்.

இதுவும் இந்த ஆண்டு சாதனை தான்.

sreeja said...

இட்லிவடையை தொடர்ந்து படிக்கும் எங்களுக்கு ஒரு விருதும் இல்லையா ?


|| அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ||

ஆமாம், இப்போதெல்லாம் கலைஞர் டீவியில் கிருஸ்துமஸை - கிருஸ்துமஸ் என்றும் ஆங்கில புத்தாண்டை - புத்தாண்டு என்றும் குறிப்பிடுகிறார்களே - விடுமுறை தினம் என்பதை மறந்துவிட்டார்களா? இனிமேல் வினாயகர் சதுர்த்தியை வினாயகர் சதுர்த்தி என்றே குறிப்பிட போகிறார்களோ ?

Anonymous said...

<<(வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி = பரிதிமாற்கலைஞர்; கலைஞர் கருணாநிதி = கருணாநிதி சாஸ்திரி)...>>

மொழிபெயர்ப்பு சரி இல்லைன்கோ.
கலைஞர் கருணாநிதி =
சாஸ்திரி கருணாநிதி

இது தான் சரி.

பெசொவி said...

சிறந்த "பட்டம் பெற்றவர்" விருது - முதல்வர் கருணாநிதி. (இவருக்கு இந்த ஆண்டு போட்டியே இருக்கவில்லை என்பது சிறப்பு செய்தி)

சிறந்த "அனுகூல சத்துரு" விருது - பெங்களூரு ரெட்டி சகோதரர்கள்.

சிறந்த "முதல் பின்னூட்டம் போடுபவர்" விருது - மானஸ்தன் (இவர் பின்னூட்டம் போட்டபின்தான் இட்லிவடை பதிவே போடுகிறார் என்று தகவல்)

Madhavan Srinivasagopalan said...

சிறந்த புதுமுக பதிவர் ? -- நான்தான், ஏன்னா, 3 மாசத்தில, 3 பதிவுகள் மட்டுமே..!

R. Jagannathan said...

//சந்திரனில் தண்ணீர் இருப்பதாக்க் கண்டறிந்த சந்திராயனை வடிவமைத்த நமது விஞ்ஞானிகள்.// If I am correct, the instrument which discovered moisture on the Moon's surface was provided by NASA and it was one of the payloads of Chandrayan. Even in Chandrayan, I hear that many operational equipments were imported. We look forward to the day when our scientific missions include only indigenous equipments and instruments.

Anonymous said...

Typical "Indian" blog post. You deserve the best 'fool' award for the post. Those who can't do any of those that they have did, makes fun of them and so many above appreciates him. I didn't particularly like making fun of Vijayakanth who still contests, even after knowing that people will vote only for money, and Seeman. It reminds me of the famous quote by Roosevelt - "It is not the critic who counts; not the man who points out how the strong man stumbles, or where the doer of deeds could have done them better. The credit belongs to the man who is actually in the arena, whose face is marred by dust and sweat and blood; who strives valiantly; who errs, who comes short again and again, because there is no effort without error and shortcoming; but who does actually strive to do the deeds; who knows great enthusiasms, the great devotions; who spends himself in a worthy cause; who at the best knows in the end the triumph of high achievement, and who at the worst, if he fails, at least fails while daring greatly, so that his place shall never be with those cold and timid souls who neither know victory nor defeat."

R. Jagannathan said...

The quote by Roosevelt by Anonymous makes excellent reading. It is definitely unfair to hit below the belt in the garb of satire. Yet, people in public domain cannot escape these situations and have to take them with a pinch of salt and let it go and just try to overcome any deficiency they may have. - R. Jagannathan

R.Gopi said...

இந்த விருதுகளை மிஞ்சும் விதமாக அறிவிக்கப்பட்ட “நமக்கு நாமே விருது” பற்றி ஏதாவது??

கிரி said...

//R.Gopi said...
இந்த விருதுகளை மிஞ்சும் விதமாக அறிவிக்கப்பட்ட “நமக்கு நாமே விருது” பற்றி ஏதாவது??
//

:-)))

Anonymous said...

//சந்திரனில் தண்ணீர் இருப்பதாக்க் கண்டறிந்த சந்திராயனை வடிவமைத்த நமது விஞ்ஞானிகள்.//

The instrument is not ours. NASA design that and ask our guys to fit it in our satilite to discover whether there is water in moon.

Subu

கன்னியர்தாசன் said...

January 01, 2010 8:42 AM
sreeja said...
இட்லிவடையை தொடர்ந்து படிக்கும் எங்களுக்கு ஒரு விருதும் இல்லையா ?


|| அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ||

ஆமாம், இப்போதெல்லாம் கலைஞர் டீவியில் கிருஸ்துமஸை - கிருஸ்துமஸ் என்றும் ஆங்கில புத்தாண்டை - புத்தாண்டு என்றும் குறிப்பிடுகிறார்களே - விடுமுறை தினம் என்பதை மறந்துவிட்டார்களா? இனிமேல் வினாயகர் சதுர்த்தியை வினாயகர் சதுர்த்தி என்றே குறிப்பிட போகிறார்களோ ?

Well Said Sreeja...

சீனு said...

குலத்தொழில், சமத்துவவாதி, க்ரேட் எஸ்கேப் அவார்ட்ஸ் சூப்பர்.

கலைஞருக்கு "நமக்கு நாமே" விருது தரலாம், தனக்கு தானே விருது கொடுத்து கொள்வதால்.

அழகிரிக்கு "டெல்லியோ ஃபோபியா அவார்ட்", ஜெ.வுக்கு "வாழ்நாள் சாதனையாளர் விருது" (ரிடையர் ஆனவங்களுக்கு கொசுக்கப்படுவது), ஸ்டாலினுக்கு "கலைஞர் விருது", கலைஞருக்கு "ஸ்டாலின் விருது", அழகிரிக்கு "டி.எம்.எஸ். விருது", டி.என்.எஸ்ஸுக்கு "அழகிரி விருது"...இப்படி கொடுத்துக் கொண்டே போகலாம்.

என் நடை பாதையில்(ராம்) said...

சரத் குமார், விஜய், சந்திர சேகர ராவ், சன் டி.வி, இவங்களையும் சேத்துக்கலாம்....

என் நடை பாதையில்(ராம்) said...

அப்படியே நம்ம மகளிர் அணி தலைவி புவனேஷ்வரிக்கு ஒண்ணு...