பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, December 20, 2009

சன்டேனா இரண்டு (20-12-09) செய்திவிமர்சனம்

இந்த வார இரண்டு செய்திகள்....வழக்கு ஸ்பெஷல்


செய்தி # 1

கத்திபாரா பாலத்தில் எந்திரன் படப்பிடிப்பால் ஆறு மணி நேரம் டிராபிக்ஜாம் ஆனபோது, துணிசசலாக அரசுக்கு ஒரு புகார் கடிதம் எழுதினார் டிராபிக் ராமசாமி . இதை பற்றி சென்ற வாரம் பார்த்தோம்.

இந்த வாரம் ஒரு வழக்கு தொடர்ந்து இருக்கிறார் அவர்.

சென்னை ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

"இந்தியா முழுவதும் சாலை ஓரங்களில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் கோவில், மசூதி, சர்ச், ஆட்டோ ஸ்டாண்டு என அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற கோரி சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளது. இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு இன்னும் வரவில்லை. வழக்கு நிலுவையில் உள்ளது.

நடைபாதை ஆக்கிரமிப்பு என்பது மக்களுக்கு பெரும் தொல்லையாக உள்ளது. சென்னையை எடுத்துக்கொண்டால் தெருவுக்கு 2 கோவில் நடுரோட்டில் உள்ளது.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் எத்தனை கோவில்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன என்று மாநகராட்சியிடம் கேட்டிருந்தேன்.

அதற்கு அவர்கள் அளித்த பதிலில் மண்டலம் 2-ல் 96 கோவில்களும், மண்டலம் 4-ல் 97 கோவில்களும் இருப்பதாக கூறி உள்ளனர். இதில் மசூதி, கிறிஸ்தவ தேவாலயங்களும் அடங்கும். இதுதவிர 80 ஆட்டோ ஸ்டாண்டுக்கு போலீசார் அனுமதி கொடுத்ததாகவும் கூறி உள்ளனர்.

மற்ற 8 மண்டலங்களை கணக்கில் எடுத்தால் சுமார் 3 ஆயிரம் கோவில், மசூதி, தேவாலயங்கள் ஆக்கிரமிப்பில் வரும் என தெரிகிறது. ஐகோர்ட்டை ஒட்டி கூட பல கோவில்கள் உள்ளன.

இவை அனைத்தையும் அகற்ற கோர்ட்டு உத்தரவிட வேண்டும்."

இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நடந்தபோது ஆக்கிரமிப்பு விவரங்களை 21-ந் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று மாநகராட்சிக்கு கோர்ட்டு உத்தர விட்டது.


இப்படி ஒரு கேள்வி கேட்டார் இட்லி வடை..

யார் செக்யூலர் ? முஸ்லிம் விழா சென்று கஞ்சி குடிக்கும் ஜெயலலிதா கருணாநிதியா ? அல்லது வெளிநடப்பு செய்த ஜேசுதாஸா ? அல்லது அரசு விழாவில் குத்துவிளக்கு ஏற்ற மறுத்த அமைச்சரா ?
சரியான பதில் ...இவர்கள் எல்லாரையும் விட செக்யூலர் நம்ம டிராபிக் ராமசாமி.


செய்தி # 2

இரண்டு முக்கிய வழக்குகளில் நடந்த பல்டி சம்பவங்கள்...

முதல் பல்டி சம்பவம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை, புதுவை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் தற்போது சாட்சிகளிடம் விசாரணை நடக்கிறது. நேற்று முன்தினம் 3 சாட்சிகள் பல்டியடித்தனர்.

விசாரணையில் 9 பேர் ஆஜராகி சாட்சி அளித்தனர். அவர்களிடம் அரசு வக்கீல் தேவதாஸ் விசாரணை நடத்தினார். ஜெயேந்திரர் தரப்பு வக்கீல்கள் குறுக்கு விசாரணை நடத்தினர். அப்போது கோயில் அருகில் பெட்டிகடை வைத்துள்ள ஜெயலட்சுமி, சங்கரமட டிரைவராக பணியாற்றிய கண்ணன், பாஸ்கரன், வசீகரகுமார் ஆகிய 4 பேர் ஏற்கனவே கூறிய சாட்சியத்தை மாற்றிகூறி பல்டியடித்தனர்

இரண்டாவது பல்டி சம்பவம்.
"மும்பை தாக்குதல் சம்பவத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை.

அந்த தாக்குதல் சம்பவம் நடப்பத்துக்கு முன்னாலே அங்கீகரிக்கபட்ட விசா பெற்று இந்தியா வந்துவிட்டேன்..பாலிவுட் படங்களில் நடிக்க முயற்சி செய்து கொண்டு இருந்தேன்.

மும்பை தாக்குதல் நடந்த அன்று இரவு என்னை கைத்து செய்து விட்டனர். போலீஸ் சித்திரவதை காரணமாக நீதிபதியிடம் வழங்கிய வாக்குமூலத்தில் மும்பை தாக்குதல் சம்பவத்தில் தான் பங்குபெற்றதாக கூறினேன்.

பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் எனக்கு தொடர்பு இல்லை.

AK 47 போன்ற துப்பாக்கிகளை மற்றும் தீவிரவாதிகள் ஊரூடுவ பயன்படுத்தியதாக சொல்லப்படும் RUBBER BOAT போன்றவற்றை நான் என் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை."

இவ்வாறு கடந்த வெள்ளி அன்று நீதிபதி எம்.எல். தஹிலியானி முன் ஆஜர்படுத்தபட்டபோது கூறியுள்ளார். பிடிபட்ட பாகிஸ்தானிய தீவிரவாதி அஜ்மல் கசாப்.

அஜ்மல் கசாப் கைது முதல் இன்று வரை அவனுக்கு மட்டும் ஆன மெயின்டையின் செலவுகள் சுமார் 30 கோடி ரூபாய் என்கிறது ஒரு செய்தி

விதி? நீதி? இதில் எதை நொந்து கொள்வது என்று தெரியவில்லை.(நன்றி...இனி அடுத்த வாரம்)

-இன்பா
1. முதல் படத்தை பாருங்க. இவர் என்ன தப்பு செய்தார் ? உண்மையை பேசினார். அவ்வளவு தான். !
2. இரண்டாம் படம் கொலை செய்யப்பட்ட சங்கரராமன். இவர் எப்படி இருப்பார் என்று பலர் மறந்து போயிருப்பர்கள் அதனால் இந்த படம்.
3. மூன்றாவது படம் - நல்லா பாருங்க, அவன் கையில் இருப்பது துப்பாக்கி இல்லை, வாகிங் ஸ்டிக்!

15 Comments:

சைவகொத்துப்பரோட்டா said...

முதல் படத்தில் இருப்பவர்க்கு பூச்செண்டு.

மூன்றாவது படத்தில் இருப்பவர் அப்"பாவி."

Anonymous said...

அது சரி அண்ணே, அனுராதா ரமணன் மட்டும் பல்டி அடிக்க மாட்லார். ஜயா டி வி யிலே சில்லறை கிடைக்குதே!!

யதிராஜ சம்பத் குமார் said...

டிராபிக் ராமசாமி அவர்களின் முனைப்பு பாராட்டத்தக்கது.


எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போன்றதான பல்டி தினகரன் எரிப்பு வழக்கில், காவலர்கள் உட்பட சாட்சிகள் அனைவரும் அடித்த அந்தர் பல்டி.


இன்பா கூறியது போல் அவன் பாலிவுட் படங்களில் நடிக்க வந்ததாகக் கூறவில்லை. இவ்வாறு டிவி சானல்களில் கூறப்பட்டது. பெரும்பாலான ஆங்கில பத்திரிக்கை செய்திகளின்படி, சினிமா பார்ப்பதற்காக சென்று கொண்டிருந்த போது, பாகிஸ்தான் பாஸ்போர்ட் வைத்திருந்ததால் சந்தேகப்பட்டு கைது செய்ததாகக் கூறியுள்ளான்.

அவனை ஆழ்நிலை மயக்கத்திற்காட்படுத்தி நடத்தப்பட்ட விசாரணையில் தாம் செய்த குற்றங்கள் அனைத்தையுமே ஒப்புக் கொண்டுள்ளான். அந்த வீடியோ பதிவு கூட நமது வலைத்தளத்திலேயே உள்ளது.

Asir said...

Congrats for Traffic Ramasamy News


But give me address to ஆட்டோ அனுப்ப for your third point

Anonymous said...

கார்த்திகை மாசம் போய் மார்கழி பிறந்து 5 நாள் ஆகிவிட்டதே -- ஏன் இன்னும் “கார்த்திகை மாத ஆன்மீகக் குறிப்பு”?

Unknown said...

indha government irunthal kasab nirabarathi enru viduthalai senchalum aachariyam illai.

ஸ்ரீராம். said...

1) அவர் Traffic ராமசாமி இல்லை Terrific ராமசாமி...!

2) தாமதிக்கப் படுகிற ஒவ்வொரு நீதியுமே தடுத்து திசை மாற்றி விடப் படுகிற நீதிதான்...

3) கசாபுக்கு செலக்டிவ் அம்நீசியாவோ என்னவோ...

Anonymous said...

http://static.toondoo.com/public/s/s/e/ssenthil//toons/cool-cartoon-1210224.png

வேதநாராயணன் said...

டிராபிக் ராமஸ்வாமி : நம்ம ராகுல் காந்தி, காங்கிரஸ் தமிழ்நாட்டில் வளர்ச்சி பெற, இந்த மாதிரி ஆட்களை காங்கிரஸில் பிடித்து போட வேண்டும். அவரை காங்கிரஸ் லீடர் ஆக்கி விட்டால் , தமிழ் நாட்டில் கழகங்கள் தரை மட்டமாக்க படும். அப்துல் கலாம் சொன்ன மாதிரி கனவு காண்கிறேன், அதற்கு என்ன வரையறை.

Anonymous said...

/// அஜ்மல் கசாப் கைது முதல் இன்று வரை அவனுக்கு மட்டும் ஆன மெயின்டையின் செலவுகள் சுமார் 30 கோடி ரூபாய் என்கிறது ஒரு செய்தி ///

விசாரணை எதற்கு?
உடனே மக்கள் முன்னிலையில் சித்திரவதை செய்து ( பேராளி படத்தில் வருவது போல ஒவ்வொரு விரலாக துண்டிக்க வேண்டும் ) கொன்றிருக்க வேண்டும். அப்போது தான் மற்ற தீவிரவாதிகளுக்கும் பயம் வரும்.
அவனுக்கு உடந்தையாக இருந்த ( மும்பையில் ) அனைவரையும் அவனை சித்திரவதை செய்து கண்டு பிடித்திருக்க வேண்டும்.
வெறுமே அவனை தூக்கில் போட Rs.30 கோடி செலவு செய்தது சந்தேகம் வருகிறது. மும்பையில் அவனுக்கு உதவி செய்தவர்களை மறைக்க நடக்கும் சதியை கண்டு பிடிக்கவேண்டும். அப்போது தான் அடுத்த தீவிரவாதி வரும் பொது உதவி செய்ய ஆள் இருக்காது.காஷ்மீர் தீவிரவாதியும் பயப்படுவான்.

வேதநாராயணன் said...

/விசாரணை எதற்கு?
உடனே மக்கள் முன்னிலையில் சித்திரவதை செய்து ( பேராளி படத்தில் வருவது போல ஒவ்வொரு விரலாக துண்டிக்க வேண்டும் ) கொன்றிருக்க வேண்டும். /

///
ரொம்ப அவசர படாதீர்கள். உலகத்தில் உள்ள சுகத்தையெல்லாம் காட்டிவிட்டு கொன்றால், அவனுக்கு இன்னும் வலிக்கும்.

இவர்கள் 100 ரூபாய் நோட்டை கூட பார்த்து இருக்க மாட்டார்கள். அதனால் தான் இந்த மாதிரி வேலைக்கு வருகிறார்கள். இன்னும் கொஞ்ச நாளில், சொர்கத்திற்கு போயி கடவுளை பார்க்கலாம் என்று நினைக்கும் இவர்களின் நம்பிக்கையும் போய் விட்டால் ரொம்ப நல்லது.

தமிழ். சரவணன் said...

//யார் செக்யூலர் ? முஸ்லிம் விழா சென்று கஞ்சி குடிக்கும் ஜெயலலிதா கருணாநிதியா ? அல்லது வெளிநடப்பு செய்த ஜேசுதாஸா ? அல்லது அரசு விழாவில் குத்துவிளக்கு ஏற்ற மறுத்த அமைச்சரா ?
சரியான பதில் ...இவர்கள் எல்லாரையும் விட செக்யூலர் நம்ம டிராபிக் ராமசாமி.//

இவர் வாழும் மனித தெய்வம்... பல முன்னால் பொறுக்கி ரொடிநாய்கள் இன்று அரசியல் வாதியாய் அல்லக்கைகளை வைத்து அலப்பறைசெய்து கட்டப்பஞ்சாயத்து பிழைப்பு நடத்தும் நம் நாட்டில்... தனி மனிதனாக சட்டத்தை மட்டும் நம்பி போராடும் தனிமனித போராளி... இவரைப்பற்றி விவரிக்க வார்த்தையில்லை..

R.Gopi said...

டிராஃபிக் அலையஸ் டெரிஃபிக் ராமசாமி அவர்களுக்கு என் பாராட்டுக்கள்.....

ரோஸ்விக் said...

ராமசாமி அய்யாவின் ஆயுள் நீள வேண்டும். அவர் வாழவும், வாழ்த்தப் பாடவும் வேண்டியவர்.

Anonymous said...

I think he(Mr.Ramaswamy) is one of the most responsible guy in TN. He is one of the good human who is following what Mahathma Gandhi Ji sadi “Be the change! you want to see in the world.”. Naama kaellvi kaekkaadha varaikkum thappu nadandhukittu'dhaan irukkuk. Everyone says "Future India is in the hands of Youth!". But i would say it is equally in the hands of the current generation to show them a right path and give them a right platform to deliver. Vaazgha Tamizh!!. Jai Hind.