பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, December 21, 2009

ஸ்டார்ட் மியூஸிக் - பாகம் 2

கச்சேரிகளில் என்ன பாடுகிறார்கள்? Rehersal இல்லாமல் பண்ணப்படும் ஒரு இசை CM தான் . மேடை ஏறும்போது பாடகர் வயலின் கலைஞரிடம் பூர்விகல்யாணி, பைரவி, ஜனரஞ்சனி என்று 3 ராகங்கள் பெயரை சொல்வார் அல்லது முன்தினம் செல் போனில் சொல்லுவார்.

கச்சேரி Rehersal பண்ணி விட்டால் கற்பனைக்கு இடம் குறைந்து விடும். கச்சேரியில் 7-10 பாடல்கள் பாடுவார்கள் .3 உருப்படிகளில் தான் creativityக்கு மிக முக்கியம் . அந்த 3 ராகங்களிலும் நம்மை முக்கி எடுத்து விடுவார்கள் . தனி ஆவர்த்தனம் என்று தாள வாத்திய கலைஞர்கள் குமுக்கி எடுத்து விடுவார்கள் .
Carnatic Music எனபது திறமை(skill), கற்பனை வளம்(innovation), அறிவு
(ராகம், தாளம் knowledge) கலந்த கலவை. உதாரணமாக, பாடகர் SPB எடுத்துக் கொள்வோம். இவர் பாடும் திறமையை அடிக்க ஆள் இல்லை. ஆனால் இவரை ஒரு பைரவி ராகம் பாடச் சொன்னால், பைரவிக்கு பக்கத்தில் உள்ள மாஞ்சி, முகாரி போன்ற பைரவியின் சாயலை ஒத்துள்ள ராகங்களில் தெரியாமல் போய்விடுவார். அந்த பைரவியை உன்னி கிருஷ்ணனை கொண்டு பாடச் சொன்னால், ஒரு அரை மணி நேரம் சுத்தமான
பைரவியை காட்டுவார். அதை சஞ்சய் சுப்ரமணியத்திடம் கேட்டால், அந்த அரை மணி நேரத்தில் உன்னி பாடாத ஒரு சில இடங்களை பைரவி ஆலாபனையில் காட்டுவார். இன்னமும் செம்மங்குடியிடம் கேட்டால் நாள் முழுவதுமே பைரவியை ஆலாபனை மட்டுமே செய்வார். ஆக ஒரு கற்பனை வளம் குறைந்த வித்வானும், ராகங்களையன்றி கீர்த்தனைகளை மட்டுமே ரசிக்கும் சராசரி சங்கீத ரசிகர்களாலும் இங்கே தாக்கு பிடிக்க முடியாது. ஆனாலும் சமீப காலங்களில், கச்சேரிகளுக்கான நேரம் இரண்டு மணி அல்லது அதிகபட்சமாக மூன்று மணிநேரம் என்று வரையறுக்கப்பட்டுவிட்டதால், வித்வான்களின் கற்பனாசக்தியும் ஒரு எல்லைக்குள் வரையறுக்கப்பட்டுவிட்டது. இன்னமும் சொல்லப் போனால், ஸ்வரம் என்பது வெறும் ”ஸ்பெல்லிங்” தானே? அவற்றில் என்ன இருக்கிறது என்று கேட்கக்கூடிய கலைஞர்களும் இருக்கிறார்கள். ஒரு வித்வானாகப்பட்டவர், ரசிகர்களின் கலா ரசனையை மேம்படுத்துபவராக இருக்க வேண்டுமேயன்றி. குறைப்பவராக இருக்கக் கூடாது. அது அவரின் கடமையும் கூட.

திருமதி. எம்.எஸ் அவர்கள் 1966ல் ஐக்கிய நாடுகள் சபையில் பாடிய கச்சேரிதான் சர்வதேச அளவில் கர்நாடக இசைக்கு ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது என்றால் அது மிகையல்ல. அதற்குப் பிறகு இப்பொழுது அயல்நாடுகளில் கச்சேரிகள் என்பது தவிர்க்க இயலாத ஒரு விஷயமாகிவிட்டது. அமெரிக்காவில் க்ளீவ்லாண்ட் ஆராதனை உத்ஸவம், ஆஸ்திரேலியாவின் சிட்னியில் வருடா வருடம் சங்கீத ரசிகர்களால் நடத்தப்படும் உத்சவம் போன்றவையும் பிரபலமாகி வருகின்றன. ஆனால் சென்னையின் டிசம்பர் சீசன்தான் ஒவ்வொரு பாடகருக்கும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்த சரியான பாதையை அமைத்துத் தருகிறது. இதற்குக் காரணம், சென்னையில் கலா ரசிகர்கள் அதிக அளவில் இருப்பதே. தவிர, மியூசிக் அகாதமி, நாரத கான சபா போன்ற பிரபல சபாக்களில் இப்பொழுது காலையில் நடைபெறும் அமெச்சூர் கலைஞர்களின் கச்சேரிகளுக்கு அதிக அளவில் கூட்டம் வருகிறது ஒரு நல்ல முன்னேற்றம். தவிர, சென்னை நகர் தவிர, நகரையொட்டிய பிரதேசங்களிலும் இப்பொழுது சபாக்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது.

டிசம்பர் சீசன்தான் மீடியா, சங்கீத விமர்சகர்களை நாடும் ஒரு முக்கியமான நேரம். விகடன், குமுதம்,
கல்கி, அவள் விகடன் போன்ற வார, மாதாந்திரிகள் தொடர் விமர்சனங்கள் எழுதும் நேரம்.தவிர, ஹிந்து பத்திரிக்கை இந்த டிசம்பர் சீசனுக்கு கொடுக்கும் முக்கியத்துவமே அலாதி.

90 % கச்சேரிகளில் பாடப்படும் முக்கியமான பாடல்கள், கிழே கொடுக்க பட்டுள்ள 7 ராகங்களில் தான் உள்ளது. எனவே அந்த ராகங்களை அடையாளம் காணத் தெரிந்தால், that is a big step as a beginner .
அவை பைரவி, தோடி, காம்போஜி, கல்யாணி, மோகனம், சங்கராபரணம், கரஹரப்ரியா.

First steps in carnatic music (பொறுமையாக கேட்பது தான்) :
1. MSSubbulaxmi UN concert album
2. Madurai mani Iyer any album
3. Margazhiraagam Concert movie , Actors Bombat Jayasree and T M Krishna.
4. Margazhi maha utsavam in Jaya TV (Dec 15-Dec30) 6-7pm

கடைசியாக ஒரு போட்டி , ஆண் பெயர் கொண்ட ஒரு ராகத்தின் பெயரை சொல்லுங்கள்.
அந்த பெயரில் ஒரு சினிமா படம் கூட வந்து சக்கை போடு போட்டது.

- வேதநாராயணன்.

27 Comments:

சின்னப் பையன் said...

raaga 'shankara'.
movie 'shankarabharanam'

யதிராஜ சம்பத் குமார் said...

இப்பொழுதெல்லாம் சில இசைக் கலைஞர்கள் ரிகர்ஸல் செய்கிறார்கள். பாலமுரளி எல்லாவற்றிற்கும் விதிவிலக்கு. இவர் சாதாரணமாக சாதகமே செய்வதில்லை/செய்ததும் கிடையாது. பல சமயங்களில் பாட வேண்டிய கீர்த்தனைகளை மேடையில்தான் முடிவு செய்வார். அதே போல் இவர் ஒருமுறை பாடும் ராகமோ கீர்த்தனையோ மறுமுறை கேட்கும்பொழுது வித்யாசப் படும்.

Baski said...

"Shankarabharanam"

Anu said...

is shankaraabaranam right?

there are a handful of "male" raagaas:Charukesi, vachaspathi..

Baski said...

மனதுக்கு இதமான எந்த ஒரு ஓசையும் இசை தான். அது கல்யாணியாக இருந்தாலும் சரி. பானுப்ரியவானாலும் சரி.

இன்னொருபுறம் கர்நாடக சங்கீதம் சில ஜாதிகளுக்கு மட்டும் சொந்தம் கொண்டாடபட்டாகவும் என்னக்கு தோன்றும். மக்களின் அன்பான வரவேற்பை பெற்ற பல இசை கலைஞர்கள் கர்நாடக சங்கீதம் தெரியாதவர்கள். (எஸ்.பி.பி உட்பட).

பாரம்பரியம் மிக்கதொரு விழா என்பதில் சந்தோசம் தான். அதை எல்லோரும் கொண்டாட வேண்டும் எனில் அனைவருக்கும் சமமானதாக அந்த கொண்டாட்டம் இருத்தல்அவசியம்.

பூணுல் போடாத பரம்பரையில் வந்த ஒருவர், இந்த கச்சேரியில் (சபாக்களில்) பாடினதாக நான் கேள்விப்பட்டதில்லை. எவெரேனும் சொன்னால் அவருக்கு பரிசு உண்டு (இட்லிவடை கொடுப்பார்).

- I hate blaming caste for any subject. But in this case I had to tell this.

Anonymous said...

http://www.youtube.com/watch?v=x-F2not2gZg&feature=sub

thirukkural :))

Thanks
Bala

வழிப்போக்கன் said...

இசை வேளாளர் என்ற ஒரு ஜாதி இருக்கிறது. ஆனால் இசை பிராம்மணர் என்ற ஜாதி இருப்பதாக நான் கேள்விப் பட்டதில்லை.
இசை ஒரு குறிப்பிட்ட ஜாதிக்குச் சொந்தம் என்று யாரும் சொந்தம் கொண்ட்டாடமுடியாது. குரல் வளமும், இசை ஆர்வமும் யாரிடம் குடிகொண்டுள்ளதோ அவர் - எந்த ஜாதியைச் சேர்ந்தாலும் பாடகராகவோ பாடகியாகவோ முடியும். சலியாத உழைப்பும், அபாரமான பக்தியும் சேர்ந்தால் மட்டுமே பிரகாசிக்க முடியும்.
இதில் ஜாதியை நுழைப்பானேன்?
கேரளாவில் எல்லா ஜாதியனரும் இசை ஆர்வலர்களாக இருக்கிறார்கள்.
ஏன், ஜேசுதாசுடன் ஒரு கிறிஸ்தவப் பாதிரியார் உடன்வந்து தம்பூரா வாசிக்கிறார். அவருடைய கச்சேரி ம்யூசிக் அகாதமியில் அரங்கேறியபோது நான் கேட்டிருக்கிறேன். வாதாபி கணபதியையும் பாடினார், மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பாடலையும் பாடினார்.
பார்வையில் கோளாறு உள்ளவர்கள் கண்களுக்கு பூணூல் தென்படும் போல இருக்கிறது.
கிருஷ்ணமூர்த்தி

யதிராஜ சம்பத் குமார் said...

பூணுல் போடாத பரம்பரையில் வந்த ஒருவர்::


K.J.யேசுதாஸ்

யதிராஜ சம்பத் குமார் said...

பாஸ்கி

தவிர, நாதஸ்வர, தவில் கலைஞர்களில் தொண்ணூற்றொன்பது சதவிகிதம் பேர் பிராமணர்கள் அல்லர். தவிர எந்தவொரு குருவும், பூணூல் போட்டவர்களுக்குதான் கற்றுக் கொடுப்பேன் என்றும் சொல்வதில்லை. ஆர்வம்தான் காரணம். நீங்கள் சொல்லும் சாரார் அதிக அளவில் கற்றுக் கொள்ள முன்வருவதில்லை. காரணம், கர்நாடக இசை கஷ்டம் என்று நினைப்பதாலோ என்னவோ.

Simulation said...

ஆண் பெயரில் உள்ள ராகங்கள்:-

1. சாரங்கா
2. ப்ருந்தாவன சாரங்கா
3. சாமா
4. சிந்தாமணி

- சிமுலேஷன்

மர தமிழன் said...

கேரளாவில் எல்லா ஜாதியனரும் இசை ஆர்வலர்களாக இருக்கிறார்கள்.
ஏன், ஜேசுதாசுடன் ஒரு கிறிஸ்தவப் பாதிரியார் உடன்வந்து தம்பூரா வாசிக்கிறார். அவருடைய கச்சேரி ம்யூசிக் அகாதமியில் அரங்கேறியபோது நான் கேட்டிருக்கிறேன்.//

AGREED..

இங்கே ஒரு யேசுதாஸ் தானே காட்ட முடிகிறது என்று யாராவது இட ஒதுக்கீட்டு தத்துவத்துடன் வந்தால்... அவர்களுக்கு மேலும் சொல்ல ஆசைப்படுவது.. நீங்கள் நினைப்பது போல கர்னாடக சங்கீதம் இங்கேதான் பார்பன சாம்பிராணி போட்டு காட்டப்படிகிறது (அதனால் முக்கியத்துவம் தரப்படுவதில்லை) அனால் கேரளாவில் நிலை வேறு..அங்கே எல்லா மதத்தவரும் பயில்கிறார்கள் MUSIC ACADEMY க்கள் இருக்கிறது போட்டிகளில் பரிசும் பாராட்டும் மிக முக்கியமாய் பார்க்கப்படுகிறது.. பார்ப்பனரல்லாத நாலு தமிழ் நன்றாய் தெரிந்த மலையாள குழந்தைகள் SUPER சிங்கருக்கு வந்தால் தெரியும் அவர்களின் ஞானம். IDEA STAR SINGAR போன்ற மலையாள சானல்களில் சக்கை போடு போடும் குழந்தைகள் மிகுந்த வடிகட்டல்களுக்கு பிறகே மகுடம் சூடுகிறது அவர்களில் யார் யார் பார்பனர் என்பது சொன்னால் புண்ணியமாய் போகும்.. இங்கே எது சிறப்பானது என்று சொல்லப்படுகிறதோ அது சிறந்தது... பார்ப்பனரல்லாத வேறொன்றும் அறியேன் பகுத்தறிவே என்றால்... என்ன செய்ய???

பாலாஜி சங்கர் said...

சாருகேஸி

அருண் said...

Great MS is not a brahmin.

Anonymous said...

Raja....... Raja is not a brahmin by birth. But no one loves music as like him. He was called as "vidhwaan" by semmangudi srinivaasa iyer.
Raja found one special arokana and avarokana combination and it was named as "Rajaleela" by legend Balamurali krishna.

Anonymous said...

"அவை பைரவி, தோடி, காம்போஜி, கல்யாணி, மோகனம், சங்கராபரணம், கரஹரப்ரியா."

If you can give example from Film songs....More people will keep as reference for Raga's...

Thanks for your great Efforts....

Pradeep said...

/ If you can give example from Film songs....More people will keep as reference for Raga's...
/

yes i agree with this.. it will be easy for beginners to remeber raga's.

வேதநாராயணன் said...

பாஸ்கி சார்,

பூணல் போடாத CM vidwans list.

ஜேசுதாஸ், மாண்டலின் ஸ்ரீனிவாஸ், MS சுப்புலட்சுமி,
மதுரை சோமு, காருகுறிச்சி அருணாசலம், பழனி சுப்ரமணிய பிள்ளை......

Repaeting from previous post :

If we analyse this phenomenon , it is very simple to explain.
CM என்பதை ஒரு மாடர்ன் ஆர்ட் மாதிரி நினைத்து கொள்ளுங்கள். So அதை பாடுவதற்கு மட்டுமல்ல, அதை கேட்டு அனுபவிபதற்கும் knowledge தேவை படுகிறது. So not only the artist are inherited, even the rasikas are habituated. அந்த காலத்தில் CM ரசிகர்கள் முழுக்க brahmins ஆக இருந்ததால் அது தொடர்கிறது.
OKவா ! So it requires individuals effort to come out of just two castes brahmins and இசை வேளாளர் families ..

வேதநாராயணன் said...

ஆண் பெயர் கொண்ட ராகம் எழுதிய எல்லோருக்கும் congratulations .

சக்கை போடு போட்ட சினிமா படம் என்று limit செய்யும் போது, சங்கராபரணம்.

வேதநாராயணன் said...

சினிமா பாடல்களில் ராக reference :

http://www.cs.technion.ac.il/~raman/music1.html
http://groups.google.com/group/rec.music.indian.misc/browse_thread/thread/1e5bef4fe407dae2/d7720c12386a0a07

சென்னை பித்தன் said...

மதுரை சோமு,சீர்காழி கோவிந்தராஜன்,T.M.தியாகராஜன்,திருவாரூர் நமச்சிவாயம் ,சோமுவின் குரு,சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை,தண்டபாணி தேசிகர் இவர்களைப் பற்றியெல்லாம் baski கேள்விப்பட்டதில்லை என்று நினைக்கிறேன்.

Anonymous said...

//Great MS is not a brahmin//

//பூணல் போடாத CM vidwans list.

ஜேசுதாஸ், மாண்டலின் ஸ்ரீனிவாஸ், MS சுப்புலட்சுமி,
மதுரை சோமு, காருகுறிச்சி அருணாசலம், பழனி சுப்ரமணிய பிள்ளை......//

ஆனா MS பத்தி விக்கி வேற மாதிரி சொல்லுதே ..

http://en.wikipedia.org/wiki/M._S._Subbulakshmi

மஞ்சள் ஜட்டி said...

அட மோடுமுட்டிகளா... அறிவு ஜீவிகளா...
பிராம்மண ஜாதியில பொம்பளைங்க எங்கே பூணூல் போடுறாங்க? அப்படி பாக்கும் போது MS அய்யிரு அம்மாவானாலும், பொம்பள எங்கே பூணூல் போட்டிருக்காங்க??

Unknown said...

why should it always involve castes ???? its high time pepole stop it!
i suggest you appreciate and understand what is written...rather than arguing this nonsense

Heam said...

thanks a lot IV and the author for the informative article and special thanks for the Documentary video of Shri.Semmangudi

வேதநாராயணன் said...

//ஆனா MS பத்தி விக்கி வேற மாதிரி சொல்லுதே ..
//

MS பிறந்தது இசை வேளாளர் குலத்தில். Married a brahmin , sadasivam who had children from his first brahmin wife . இதற்கு மேல் caste analyse செய்வது நமக்கு தான் அழகல்ல .

cho visiri said...

//சக்கை போடு போட்ட சினிமா படம் என்று limit செய்யும் போது, சங்கராபரணம்.//


I beg to differ. The Raga actually refers to an Ornament (snake as) a ring worn by Shankara.The sex of the snake is not explicit. On the other hand how about the following Ragas which are my choice. Garudadhwani (Garuda is undoubtedly male and his dhwani (voice) is referred to here. Suryakaantham. Ravichandrikaa. Udhayaravichandrikaa. Nagavarali.

//MS பிறந்தது இசை வேளாளர் குலத்தில். Married a brahmin , sadasivam who had children from his first brahmin wife . இதற்கு மேல் caste analyse செய்வது நமக்கு தான் அழகல்ல//

I agree with the author. Those who are in the know are aware of the fact that none of the Aalwars (whose whose collective works caled Divyaprabhandam are sung invariably during CM Kachcheries)was born of a brahmin family. Jogn B Higgins was not even an Indian. As one of our friends put it right,in Tamilnadu generally friends from other Communities do not develop liking for learning the art or they do not take CM as their profession. Almost in and every home/Temple every Morning one would hear Suprabhatam (by MS) every evening, one would hear Vishnu Sahasranamam by M.S. //

Santhappanசாந்தப்பன் said...

குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு கர்நாடக சங்கீதத்தை கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். ஒவ்வொரு குழ்ந்தைக்கும், வீட்டிலோ அல்லது உறவினரோ சங்கீதத் துறையில் இருப்பதால், இலகுவாக படித்துவிடுகிறார்கள். அவர்கள் வீட்டு பெரும்பாலான வீசேடங்களில் கர்நாடக சங்கீதம் சம்மந்தமான நிகழ்ச்சிகள் கட்டாயம் இடம் பெறும்.

மற்ற குலத்தை சேர்ந்தவர்கள், சங்கீதம் கற்றுக் கொள்ள சென்று, அந்த குலத்தை சேராதவர் என்று நிராகரிக்க‌ப்பட்டிருந்தால் இவர்கள் சொல்லும் வறட்டு வாதங்களை ஏற்றுக் கொள்ளலாம்.

கலைகள் என்பது எல்லாருக்கும் பொதுவான ஒன்று. குலங்களின் பெயரால், இதிலும் பிரிவினைகளை ஏற்படுத்திவிடாதீர்கள்.