படத்தின் ஸ்டில்களை பார்க்கும் போது "தி கியூரியஸ் கேஸ் ஆப் பெஞ்சமின் பட்டன்" என்ற படத்தை நினைவு படுத்தினாலும், இது அருமையான படமாக இருக்கும் என்று நினைக்கிறேன். வழுக்கை தலையுடன் இருப்பவர் யார் என்று நீங்களே கண்டு பிடியுங்கள். படத்தின் டைரக்டர் பால்கி. இவருடைய போன படம் 'சீனி கம்' . தீவிர இளையராஜா ரசிகர். இந்த படத்துக்கும் இவர் தான் இசை. சிலருடைய மியூசிக்(சில சமயம்) கேட்க கேட்க அதான் நல்ல இருக்கும். இந்த படத்தின் தீம் மியூசிக் முதல் முறையே கேட்கும் போதே அருமையாக இருக்கிறது.
படத்தின் டிரைலர், படங்கள் கீழே...
படத்தின் ஸ்டில்ஸ்
படம் பற்றி அமிதாபச்சன்
படத்தின் Official Site
நேற்று புதன்கிழமை, இன்று வியாழக்கிழமை :-)
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Thursday, November 05, 2009
paa
Posted by IdlyVadai at 11/05/2009 10:28:00 AM
Labels: சினிமா
Subscribe to:
Post Comments (Atom)
15 Comments:
வழுக்கைத் தலையுடன் அபிஷேக் முதுகில் சவாரி செய்பவர்...அமிதாப் பச்சன்!!
நஸ்ருதின் ஷா !!
பெஞ்சமின் பட்டன் ஒரு அற்புதமான படம் ஒன்னும் பன்னாதவங்கல்லாம் உலக நாயகன் என்றால் இந்த மாதிரி ஒரு படம் அதில் பிராட் பிட் நடிப்பு பார்த்து என்ன பட்டம் கொடுப்பாங்களோ? ஹும்ம் at least இது போன்ற படங்கள் remake ஆவது ரசிகர்களின் ஆத்மாவிற்கு நல்லது.
நமது கமலின் ‘மேக்கப்’ வியாதி அமிதாபையும் தொற்றிக்கொண்டுவிட்டது. தினமும் மேக்கப் போடுவதற்கு மூன்றுமணி நேரமும் அகற்றுவதற்கு மூன்றுமணி நேரமும் செலவழித்தாராம். வித்யா பாலன் அமிதாபின் தாயாக நடிக்கிறார். மகனே தந்தைக்கு தந்தையாக வருகிறார்.
பரேஷ் ராவல் தானே ?
அது.. அமிதாப். (முதல் நபரான யதி ராஜ சம்பத் குமார் சரியாய் எழுதின பிறகும் நம்ம மக்கள் வேறு ஏதேதோ எழுதுறாங்க).
நம்ம தமிழில் ஏன் இப்படி நல்ல பரிட்சார்த்த முயற்சிகள் (இந்தி அளவு கூட) வருவதில்லை?
மோகன் குமார்
http://veeduthirumbal.blogspot.com/
/நேற்று புதன்கிழமை, இன்று வியாழக்கிழமை/
அட ஆமா இல்லே!
அப்படியானால் நாளை வெள்ளிக்கிழமையாகவும் நாளை மறுநாள் சனிக்கிழமையாகவும் தான் இருக்கவேண்டும்!
சரியா:-))
ப்பாஆஆஆ
உலகநாயகனுக்கு அடுத்த ப்ராஜெக்ட் ரெடி
படத்தின் பெயர்:களத்தூர் கண்ணப்பன் (50 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு)
70 வயது அப்பாவாக :கலைஞானி
மேக்கப்: அர்ஜென்டினா நாட்டு நிபுணர்
கதை/வசனம் : சாரு(நிவேதிதா)
இசை: சுருதி ஹாசன்
டைரகஷன்:பால்கி
மகனாக:
என்ன விளையாடறீங்களா ?
வேறு யாராம்?
/*** மர தமிழன் said...
பெஞ்சமின் பட்டன் ஒரு அற்புதமான படம் ஒன்னும் பன்னாதவங்கல்லாம் உலக நாயகன் என்றால்****/
ஒன்னும் பன்னாதவங்கல்லாம் மர தமிழன் என்று பெயர் வைத்து கொள்ளும் போது எதுவுமே சாத்தியம் தான்....
ஒலக்க நாயகன் said...
பப்பர பர பப்பர பர
உலக்கைநாயகனுக்கு அடுத்த ப்ராஜெக்ட் ரெடி
படத்தின் பெயர் : ஆள்வார்பேட்டை ஆண்டவர் (50 ஆவது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு)
70 வயது அப்பாவாக :கலைஞானி
மேக்கப் : பைக்கேல் பஸ்மோர்
கதை/வசனம் : பீரு(புவேதிதா)
இசை: சுருதி ஹாசன் / சுப்பு லட்சுமி
டைரகஷன் : சந்தான பாரதி / கலைஞானி
மகனாக : என்ன தமாஷா கேட்கணும்னு கேக்கறீங்களா? வேற யாரு? கலக்க போவது யாரு.... நான்தான்...
(நீலாங்கரை நீலமேகம்....)
இப்படத்தின் தீம் ம்யூசிக் அது ஒரு கனாக்காலம் படத்தில் இளையராஜா உருவாக்கிய ‘காட்டுவழி கால் நடையா..’ பாடலின் மறுபிரதி. பால்கி இளையராஜாவின் பெரிய ரசிகராதலால் தொடர்ந்து இளையராஜாவின் பல சிறந்த பாடல்களைத் தனக்காக மறுபிரதி செய்யுமாறு கேட்டுக் கேட்டு அவற்றை உபயோகப்படுத்துகிறார். இவருடைய முதல் படமான ‘சீனி கம்’மிலும் பல பழைய இளையராஜா பாடல்களையே மீண்டும் தருமாறு கேட்டுப் பெற்றார். பால்கி விளம்பரப் படங்கள் எடுத்துக் கொண்டிருந்தபோது ‘நகுவா, நயனா’, ‘இளமை இதோ, இதோ’, புத்தம்புது காலை, ஆத்தாடி அம்மாடி தேன்மொட்டுதான் போன்ற பாடல்களைப் பின்னணியில் பயன்படுத்தினார்.
Ayya Barathi Mani,
nalla padama iruntha yaaru evlo mani neram make-up panna ennanga. urupadiya panna sarithaan.
appidi make-up podama (onnumey podama) kooda padam edukuraanga hindi-la..Blue-nu oru padam vanthurukku..atha parunga.
Balu said...
/*** மர தமிழன் said...
பெஞ்சமின் பட்டன் ஒரு அற்புதமான படம் ஒன்னும் பன்னாதவங்கல்லாம் உலக நாயகன் என்றால்****/
ஒன்னும் பன்னாதவங்கல்லாம் மர தமிழன் என்று பெயர் வைத்து கொள்ளும் போது எதுவுமே சாத்தியம் தான்...
பாருங்கையா அநியாயத்த கலைஞருக்குதான் சித்தி க்கும் siddhikkum (சித்தி சீரியல் க்காக ராதிகா வை புகழ்ந்தது) வித்தியாசம் தெரியாதுன்னா மர த்துக்கும் மற த்துக்கும் திரு balu க்குமா தெரியவில்லை ஐயா பாலு ஒன்னுமே தெரியாமதான் என் பேரு மர தமிழன் by the by ஒன்னுமே பண்ணாமலே மரம் வளரும் தெரியுமோ?
பாரதிமணி கட்டுரை எழுதினாலும் சரி, பின்னூட்டம் போட்டாலும் சரி, அதை ஒரு கை பார்த்துவிடுவது என்று ஒரு அனானி கிளம்பியிருக்கிறார் போல? யாரோ வடக்கிலிருக்கும் வாசல் ஒன்றைத் திறந்து வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
Once I remember Suhasini said that acting is acting. It is Not spending time in makeup or spending more time in the gym to get 10 pack (I think even 8 packs heros are getting ready now ) or thin down drastically.
Before marriage Abishiek survived because of his father's name and after marriage he is there because of Aishwarya Rai. At times I felt, he is there because of Manirathnam as he is acting in two of his movies. It is very diffcicult not to compare him with his fathers great image. Poor guy.
Post a Comment