இந்த வாரம்,ஒரு சின்ன இடைவேளைக்கு பிறகு 'சண்டேனா இரண்டு' வரலாற்றில்(?) அரசியல், சினிமா இல்லாத செய்திகள்...
செய்தி # 1
விடுமுறையில் ஊருக்கு வந்தபோது இரண்டு கோவில்களுக்கு சென்ற அனுபவம்..
முதலில் சென்றது என் நெருங்கிய நண்பன் ஒருவனை காண கும்பகோணம் அருகே இருக்கும் பாபநாசம் சென்றுஇருந்த போது, தீவிர பெருமாள் பக்தரான அவன் என்னை அழைத்து சென்ற கோவில்...புள்ளபூதங்குடி ராமர் கோவில். பாபநாசத்தில் இருந்து ஆதனூர்(இங்கும் பெருமாள் கோவில் உள்ளது) செல்லும் மினி பஸ்ஸில், காலையில் கிராமங்கள் வழியே பயணம் செய்த அனுபவமே அலாதியானது.
நாங்கள் அந்த கோவிலை சென்று அடைந்தபோது, ஆள் நடமாட்டமே இல்லை. நண்பனுக்கு பரிச்சியம் என்பதால், கோவிலுக்கு அருகாமையில் இருக்கும் அர்ச்சகரின் வீட்டிற்க்கு சென்று அழைத்தோம்.
மிக பழமையான் கோவில். சுமார் 1000 வருட பழமை என்றார் அர்ச்சகர். புள்ளபூதங்குடி - 108 திவ்விய தேசங்களில் ஒன்று.
திருமங்கை ஆழ்வாரால் பாடல் பெற்ற தலம். இங்கு பள்ளி கொண்டு இருக்கும் ராமர் ஸ்ரீ வல்வில் ராமர்.
தாயார் பொற்றாமரையாள் என்கிற ஹேமாம்புஜவல்லி. மற்ற ராமர் கோவில்களுக்கும் இங்கு உள்ள ராமருக்கும் உள்ள சிறப்பு அம்சம்...இங்கு ராமர் சயன நிலையில் காட்சி தருகிறார். புள்ளினம் என்றால் பறவையை குறிக்கும். சீதையை கவர்ந்த ராவணனை எதிர்த்து போர் செய்த ஜடாயு, அடிபட்டு விழ, அங்கு வந்த ராமர் மற்றும் லட்சுமணரும் ஜடாயுவுக்கு ஈம கிரியைகள் செய்ததாக தல வரலாறு கூறுகிறது.
இந்த கோவிலில் உள்ள மற்றுமொரு அம்சம்...உத்தியோக நரசிம்மர் என்னும் சந்நிதி. வேலை கிடைக்க, அல்லது பணி உயர்வுக்கு வேண்டிக்கொண்டு, இவர்க்கு வடமாலையும்,பட்டுத்துணியும் சாத்தினால், அந்த வேண்டுகோள் நிறைவேறும் என்று சொன்னார் அர்ச்சகர். Economical crisis சூழலை கருத்தில் கொண்டு, அசம்பாவிதம் ஏதும் நடக்ககூடாது என்று வேண்டிக்கொண்டு கிளம்பினோம்.
"உலகத்தில் எனக்கு மிகவும் பிடித்த இடம் கும்பகோணமும், அதை சுற்றி உள்ள கோவில்களும்தான். அங்கு கிடைக்கும் நிம்மதி வேறு எங்கும் கிடைப்பது இல்லை " என்று எழுதி இருந்தார் திரு. பாலகுமாரன். அது எவ்வளவு உண்மை என்பது என்னால் உணர முடிந்தது.
கும்பகோணத்திலும், அதை சுற்றி உள்ள கிராமங்களிலும் பல புராதன கோவில்கள், கலைசின்னங்கள் சின்னா பின்னமாகி கிடக்கின்றன. கேட்பார் அற்று, ஜன நடமாட்டமே இல்லாமல் இருக்கின்றன. இவற்றின் அருமை பற்றி, இத்தைகைய கோவில்களை பாதுக்காப்பது குறித்து எந்த அரசும் அக்கறை காட்டுவதாக தெரியவில்லை.
இதே சமயத்தில், நான் சென்னையில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்று இருந்தேன். ஒரு புகழ் பெற்ற கோவிலின் ஜூனியர் கோவில் என்றார்கள். ஏ.சி வழியும் கோவில். வழுவழு மொசைக் தரை. அலங்கார பல்புகள். எதோ ஒரு ஆடம்பர அறை போல இருந்தது. அர்ச்சனை தட்டில் 20 ருபாய் போட்ட ஒருவரை அற்ப ஜந்துவை போல பார்த்தார் அங்கு ஒரு அர்ச்சகர்.
ஏழை கோவில், பணக்கார கோவில் என்று கோவில்களுக்கு இடையே வர்க்க பேதமே இருக்கிறது போலும்
கும்பகோணம் கிராமத்து கோவிலில் கிடைத்த மனநிறைவு ஏனோ இங்கு கிடைக்கவில்லை
.
. கோவில் என்பது கல்வியை போலவே, வியாபாரமாய், ஆடம்பர பொருளாய் ஆகிவிட்டது என்று உணர்த்துவதாய் அங்கு காதுகளில் நராசரமாய் ஒலித்தது எலெக்ட்ரானிக் மணியோசை...
செய்தி # 2"ஏலே..மாட்டுக்கு புண்ணாக்கு கூட, ஒரு பாட்டில் சாராயமும் கலந்து கொடுத்து இருக்கேன். தொட்டவன் குடலை உருவிடும்" என்று பாரதிராஜா படத்தில் ஒரு காட்சி வரும். இதுபோல நடப்பது உண்மைதான் என்கிறார் மதுரை பக்கத்தை சேர்ந்த என் நண்பர்.
பொங்கல் வரப்போகிறது. கூடவே ஒவ்வொரு தை மாதமும் வரும் ஜல்லிக்கட்டு சர்ச்சையும் இந்த முறையும் வரப்போவதாக ஒரு செய்தி தெரிவிக்கிறது.
ஜல்லிக்கட்டு போன்ற கிராம விளையாட்டுகளுக்கு தடை போடுவதை தடுக்க, லோக்சபாவில் தனி நபர் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தனி நபர் தீர்மானம் கடந்த வெள்ளியன்று விவாதிப்பதற்கு எடுக்கப்பட இருந்தது. ஆனால், கரும்பு விவசாயிகள் பிரச்னையால், சபை திங்கட்கிழமை வரை ஒத்தி வைக்கப் பட்டதால், இந்த மசோதா இந்த வாரத்தில் எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.
இந்த மசோதாவை தமிழகத்தை சேர்ந்த எம்.பி.,க்கள் கொண்டு வரவில்லை. கோவாவைச் சேர்ந்த பிரான் சிஸ்கோ சர்தினா, ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்ய முயற்சிப்பது, தனது மாநிலத்தில் மிகப்பெரிய அரசியல் பிரச்னையாக தலையெடுத்து இருந்ததால், இந்த தனி நபர் மசோதாவை, சபை ஜூன் மாதம் தொடங்கியவுடன் முன்மொழிந்து, அதை அலுவல்களில் இடம் பெறச் செய்தார்.அவர் முன்மொழிந்த மசோதாவில், மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட விலங்கினங்கள் கொடுமைகளை தடுக் கும் சட்டத்தில், சில திருத்தங்களை கொண்டு வந்துள்ளார். "ஜல்லிக்கட்டு விளையாட்டு நடப்பதற்கு முன் காளையின் கொம்புகளிலும், அதன் உடலுக்கும் உறைகளை அணிந்து, அதற்கு காயங்கள் ஏற்படாமல் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
இந்த முன்னேற்பாடுகள் சரியான முறையில் எடுக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் சான்றிதழ் வழங்கிய பிறகு தான், ஜல்லிக்கட்டு விளையாட்டை தொடங்க வேண்டும்' என்று அவர் மசோதாவில் கூறியுள் ளார். தெற்கு கோவாவில் ஜல்லிக் கட்டு விளையாட்டு காலங்காலமாக நடந்து வருகிறது. இதற்கு பெயர் "திரையோ விளையாட்டு' என்று அம்மாநில மக்கள் கூறுகின்றனர்.நெல் அறுவடை ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் நடைபெற்றவுடன், இந்த திரையோ விளையாட்டு கிராமங்கள் தோறும் நடந்து வருகிறது. விலங்கின பாதுகாவலர்கள் இந்த விளையாட்டு காளைகளுக்கு காயங்களை ஏற்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி, கடந்த சில ஆண்டுகளாக இதற்கு தடை செய்து வருவது, அந்த மாநில மக்களிடையே கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது கடந்த லோக்சபா தேர்தல்களில், பெரிய அரசியல் பிரச்னையாக உருவெடுத்ததால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரான்சிஸ்கோ சர்தினா, லோக்சபாவில் இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார். தமிழகத்தின் தென்மாவட்டங்கள் குறிப்பாக மதுரையில் இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு மிகவும் பிரபலமானது.கடந்த ஆண்டு, இந்த விளையாட்டை தடை செய்ய விலங்கின ஆர்லர்கள் மறியல் செய்தனர். பிரச்னை சுப்ரீம் கோர்ட் வரை சென்றது. மாநில அரசு காளைகளுக்கும், விளையாட்டுகளில் ஈடுபடும் மக்களுக்கும் தகுந்த பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று உறுதிமொழி வழங்கியதால், இந்த விளையாட்டுக்கு கோர்ட் அனுமதி அளித்தது.
தமிழக எம்.பி.,க்கள் இந்த விளையாட்டுக்கு ஆதவராக நடவடிக்கை எதுவும் எடுக்காவிட்டாலும், இந்த மசோதா சபையில் விவாதத்திற்கு வரும் போது, இதற்கு எப்படி ஆதரவு தெரிவிக்கப்போகிறார்கள் என்று தெரியவில்லை என்கிறது அந்த செய்தி.
4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிந்து சமவெளி நாகரீக காலத்திலேயே புழக்கத்தில் இருந்த பொருட்கள், தற்போதைய பாகிஸ்தானில் உள்ள மொகஞ்சதாரோவில் கடந்த 1930-களில் கண்டெடுக்கப்பட்டன. அந்த பொருட்களில் கல்லால் ஆன ஒரு முத்திரையும் அடங்கும். அந்த முத்திரையில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை சித்தரிக்கும் ஒரு சிற்பம் செதுக்கப்பட்டு உள்ளது. ஒரு காளை மாடு தன்னை அடக்க முயலும் வாலிபர்களை முட்டி தூக்கி வீசுவது போலவும், வாலிபர்கள் அந்தரத்தில் பறப்பது போலவும் அந்த முத்திரை செதுக்கப்பட்டு உள்ளது. இந்த முத்திரை 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அதாவது கி.மு. 2000ஆம் ஆண்டைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது என்கிறது ஒரு குறிப்பு
.
நமது கலித்தொகை போன்ற பழந்தமிழ், சங்க இலக்கியங்களிலும் ஜல்லிக்கட்டு "ஏறு தழுவுதல்' என்று
குறிப்பிட படுகின்றன. முல்லை நிலத்தில் வாழ்ந்த இடையர்களின் வாழ்வு கால்நடைகளை மையமாக வைத்தே பின்னப்பட்டிருந்தது. மாட்டை அடக்கிப் பெண்ணை மணப்பது என்ற இனக் குழு நிலையில் இருந்த ஏறு தழுவுதல், நாயக்கர் ஆட்சிக் காலத்தில் அரங்க விளையாட்டாக, ஜல்லிக்கட்டாக உருப்பெற்றது. பிரிட்டிஷ் ஆட்சியில் கூட இதைத் தடை செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்றன. ஆனாலும் மக்களின் உணர்வே அப்போதும் வென்றது.
""உண்மையில் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் பாமர மக்கள் அளவுக்கு மாட்டின் மீதும், விலங்குகள் மீதும் அக்கறை செலுத்துபவர்கள் வேறு எவரும் இருக்க மாட்டார்கள். தினசரி வாழ்க்கையும் அவர்களுக்கு மாடுகளுடன்தான் பின்னிப் பிணைந்திருக்கிறது. மாட்டுக்கு நன்றி செலுத்தி மாட்டுப் பொங்கல் நடத்தும் எளிய மனிதர்கள், கவனித்துப் பார்த்தால், ஜல்லிக்கட்டில் மாடு பிடிப்பவர்கள் பெரும்பாலும் இறப்பதில்லை. பார்வையாளர்கள்தான் இறந்து போகின்றனர். இவற்றை முறைப்படுத்தி, பார்வையாளர்களையும் மாடுபிடி வீரர்களையும் தனித்தனியாகப் பிரித்த பிறகு கடந்த மூன்று ஆண்டுகளாக அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டுகளில் எந்த உயிரிழப்பும் இல்லை!
மது அருந்திட்டு மாடு பிடிக்கிறதும், மாட்டுக்கு மது கொடுக்குறதும் தப்பு'ன்னு சொல்றது நியாயம். ஆனா, ஜல்லிக்கட்டே வேண்டாம்னு சொல்றது, கலாசாரத்தையே காலால உதைக்குற மாதிரி.கோயிலுக்குப் போறதையும், மொட்டை அடிக்கிறதையும், நல்ல நேரம் பார்க்குறதையும் விட்டுடலையே! அது போலத்தான் இதுவும். 400, 500 வருஷப் பழக்கத்தை எல்லாம் பொசுக்குனு மூட்டை கட்டிட முடியாது"
- இது ஒரு தரப்பு வாதம்.
"ஒரு மாட்டை ஒருத்தன் அடக்குறதுதான் வீரம். அஞ்சறிவுள்ள மாட்டை 20,30 பேர் சேர்ந்து அமுக்குறதுல என்னங்க வீரம் இருக்கு? நாட்டுல வெட்டுக்குத்தும் வன்முறையும் ஏற்கெனவே அதிகமாகிட்டு இருக்கு. இந்த நிலையில் மாடுகிட்ட குத்துப்பட்டு இளைஞர்கள் ரத்தம் சிந்துறதையும், சாகுறதையும் கைதட்டி, விசிலடிச்சு ரசிக்கிறது, வன்முறை மன நிலையை ஊக்குவிக்காதா? "இது வீரம், பண்பாடு, பாரம்பரியம்'னு சொல்லி, வேடிக்கை பார்த்துட்டு நீங்க போயிடுவீங்க. மகனை. கணவனை, தகப்பனை இழந்து வாழ்க்கை முழுக்க நிராதரவா இருக்கிற அந்த குடும்பங்களை யாரு காப்பாத்துவா? அரசியல் கட்சிகள் எல்லாத்துக்கும் ஒரு அணி வெச்சிருக்கிறது மாதிரி, "மாடு பிடி அணி'ன்னு வெச்சு அதுல உள்ளவங்களை மாடு பிடிக்க அனுப்பட்டும். அப்ப தெரியும், அதோட வலி என்னன்னு. பழைய காலம் மாதிரி திறந்தவெளி அரங்கத்துல ஒரு மாட்டை ஒரு நேரத்துல ஒரு மனிதன் அடக்கினா, அதை ஆதரிக்கலாம். இப்போ நடக்குறது இளைஞர்களின் உயிர் குடிக்கிற விளையாட்டு. இதை ஏத்துக்க முடியாது!"
-இது ஒரு இன்னொரு தரப்பு வாதம்
இரு தரப்பு வாதங்களையும் உங்கள் முன் வைத்து இருக்கிறேன்.இப்போது நீங்கள் சொல்லுங்கள் நண்பர்களே - ஜல்லிக்கட்டு வீர விளையாட்டா? இல்லை மிருக வதையா?
(நன்றி..இனி அடுத்த வாரம்)
-இன்பா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
Sunday, November 29, 2009
சன்டேனா இரண்டு (29-11-09) செய்திவிமர்சனம்
Posted by IdlyVadai at 11/29/2009 07:36:00 AM 40 comments
Labels: இன்பா
Saturday, November 28, 2009
*#06#
அடையாள எண் இல்லாத செல்போன் இணைப்பு வரும் திங்கட்கிழமை துண்டிக்கப்படுகிறது. சென்னை பர்மா பஜாரில்( அல்லது ஏதாவது ஒரு பஜாரில் ) கொரியா, சீனா மொபைல் போன் வாங்கினீர்களா ? அப்படி என்றால் கீழே படியுங்கள்....
இந்த மாதிரி சீப்பான மொபைல் போனின் இந்த அடையாள எண் இருக்காது. இது என்ன என்று கேட்பவர்களுக்கு சின்ன விளக்கம்
செல்போன்களில் ஐ.எம்.இ.ஐ. (சர்வதேச செல்போன் குறியீட்டு எண்) என்ற ரகசிய குறியீட்டு எண் உள்ளது. இந்த எண் 15 இலக்கங்களை கொண்டது ஆகும். ஒவ்வொரு செல்போனுக்கும் ஒவ்வொரு ஐ.எம்.இ.ஐ. குறியீட்டு எண் இருக்கும்.
ஒரு செல்போன் எந்த இடத்தில் இருந்து பேசப்படுகிறது என்பதை இந்த எண்ணின் மூலம்தான் கண்டுபிடிக்க முடியும். செல்போன் தொலைந்து விட்டால், உரிமையாளர் அதன் செயல்பாட்டை நிறுத்தி வைக்கவும் இந்த எண் தான் உதவுகிறது. நாம் அதை செய்வதில்லை, உடனே சிம் கார்டை மாற்றிவிடுவோம்.
கொரியா, சீனாவில் இருந்து கொண்டு வந்து விற்கப்படும் ஏராளமான செல்போன்களில் ஐ.எம்.இ.ஐ. என்ற சர்வதேச ரகசிய குறியீட்டு எண் இருப்பது இல்லை. இந்தியா முழுவதும், ரகசிய குறியீட்டு எண் இல்லாத சுமார் 2 1/2 கோடி செல்போன்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த குறியீட்டு எண் இல்லாத செல்போன்களை பயன்படுத்துவதில் பாதுகாப்பு தொடர்பான பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இந்த வகை செல்போன்களில் இருந்து பேசும் போது எங்கிருந்து பேசுகிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியாது. இது தீவிரவாதிகளுக்கு மிகவும் வசதியாக போய் விடுகிறது.
அத்தகைய செல்போன் வைத்திருப்பவர்கள் அதை மாற்றிக் கொள்வதற்கு வசதியாக வருகிற 30-ந் தேதி (திங்கட்கிழமை) வரை `கெடு' விதித்து மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த `கெடு' முடிய இன்னும் 2 நாட்களே உள்ளன. எனவே, திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணி முதல், சர்வதேச ரகசிய குறியீட்டு எண் இல்லாத செல்போன்களின் இணைப்புகள் துண்டிக்கப்படும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு துறை ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளது.
எந்த செல்போன்களில் ஐ.எம்.இ.ஐ. சர்வதேச ரகசிய குறியீட்டு எண் இல்லையோ அல்லது எல்லா குறியீட்டு எண்களும் பூஜ்ஜியமாக இருக்கிறதோ அந்த செல்போனில் இருந்து செய்யப்படும் அழைப்புகள் மற்றும் பெறப்படும் அழைப்புகளை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று அந்த உத்தரவில் கூறி இருக்கிறது.
எப்படி கண்டுபிடிப்பது ?
முதல் வழி :
செல்போனில் ஸ்டார் பட்டனை முதலில் அழுத்த வேண்டும் பின்னர் ஆஷ் பட்டனை அழுத்தி 06ஐ அழுத்தவும். அதைத் தொடர்ந்து ஆஷ் பட்டனை அழுத்தினால் உங்கள் போனில் 15 இலக்கு எண்கள் வரும். அதுதான் அடையாள குறியிட்டு எண்ணாகும்.
இரண்டாம் வழி:
57886 என்ற எண்ணுக்கு IMEI என்று எஸ்.எம்.எஸ். அனுப்பினால் தங்கள் செல்போனின் ரகசிய குறியீட்டு எண்ணை உறுதி செய்து கொள்ளலாம்.
அப்டேட்: ஏர்டெல் வாடிக்கையாளர்கள் IMEI
என்னுடைய செல்போனிலிருந்து
Posted by IdlyVadai at 11/28/2009 07:17:00 AM 17 comments
Friday, November 27, 2009
ஓ நியூஸ்
Posted by IdlyVadai at 11/27/2009 07:45:00 PM 22 comments
நச் பூமராங் போட்டி - முடிவுகள்
நச் பூமராங் போட்டி முடிவுகள்
ஜெயக்குமார்
1. "இப்போது தி.மு.க.வோடு ஆட்சியில் சேர்ந்தால் பாத்திரம் கழுவும் வேலை தான் மீதம் இருக்கும்'' - பீட்டர் அல்போன்ஸ்
அப்ப நீங்களும் சாப்பிட நெனச்சீங்கன்னு சொல்லுங்க...
3. ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடாவின் ஊழல்கள் தோண்ட தோண்ட பெருகுகின்றன. - செய்தி
ஒருவேளை ஊழல் சுரங்கமோ அவர்..
மர தமிழன்
2. "இடைத்தேர்தலே தேவை இல்லை என்பது தான் எங்கள் கருத்து. அதை ஒரு தமாஷாகத்தான் நாங்கள் கருதுகிறோம்'.
-பாமக நிறுவனர் ராமதாஸ்
சிரிப்பு டாக்டர்
பெயர் சொல்ல விருப்பமில்லை
4. முடிதிருத்தகம், சலவையகங்களில் விடுதலைஏடு - செய்தி
சமூகத்தை திருத்தறேன்னுட்டு இப்போ முடியத்தான் திருத்தப் போறாங்களா?
முதல் பரிசு: ஜெயக்குமார்
இரண்டாம் பரிசு: மர தமிழன், பெயர் சொல்ல விருப்பமில்லை
வாழ்த்துகள்.
பரிசுபெற்றவர்கள் தங்கள் முகவரியை எனக்கு idlyvadai2007@gmail என்ற ஐடிக்கு அனுப்பினால் ( வழக்கம் போல தாமதமாக ) பரிசு அனுப்பிவைக்கப்படும்.
கலந்துக்கொண்ட அனைவருக்கும் நன்றி.
அன்புடன்,
இட்லிவடை
Posted by IdlyVadai at 11/27/2009 04:19:00 PM 13 comments
Labels: நச் பூமராங், போட்டி
மூன்று
மூன்று சர்தார்ஜிக்கள் வண்டியில் ட்ரிபிள்ஸ் வந்து கொண்டிருந்தார்கள்.
போலீஸ்காரர் ஒருவர் கையைக் காட்டி வழிமறிக்க வண்டி ஓட்டி வந்த சர்தார்ஜி சொன்னார் "ஏற்கனவே நாங்க மூணு பேர் போய்ட்டு இருக்கோம், இப்ப வந்து லிப்ட் கேக்குறியே, அறிவில்லையா உனக்கு?"
இதைவிட நல்ல ஜோக் மூன்று கீழே இருக்கிறது...டெலிஃபோன் மணி போல் சிரித்தவன் அவனா ?
இந்த பதிவை மறந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். இப்பொழுது அந்த சாமாசாரம் தூசி தட்டப்பபடுகிறது.
சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி திரு.ரகுபதி, நீதிமன்றத்திலேயே பகிரங்கமாக ஒரு குற்றச்சாட்டைக் கூறினார். தமிழக கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவர் ஒரு வழக்கு தொடர்பாக தன்னைத் தொடர்பு கொண்டு பேசியதாகவும் ( மிரட்டினார் என்றும் சொல்லலாம் ), இது தொடர்பாக அவ்வமைச்சர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கூறினார். பிறகு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஒரு லெட்டர் எழுதினார்.
யார் அந்த அமைச்சர் என்று கேள்வி எழுந்த போது ஜெயலலிதா அந்த அமைச்சர் ராசாதான் என்று அடித்து கூறினார். ஆனால் ராசா இக்குற்றச்சாட்டை மறுத்தார். தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் என்றால், திமுக, காங்கிரஸ் தவிர வேறு எவரும் தமிழக அரசியல் கட்சியிலிருந்து மத்திய அமைச்சரவையில் இடம்பெறவில்லை. காங்கிரஸ் சார்பில் மத்திய அமைச்சராக இருக்கும் ஜி.கே. வாசன் நிச்சயம் செய்திருக்க மாட்டார் ஏன் என்றால் டெல்லியிலிருந்து பர்மிஷன் வாங்கி விட்டு தான் அவர் செய்ய முடியும். எஞ்சியவர்கள் பற்றி சொல்ல வேண்டாம்.
இந்த செய்தி கொஞ்ச நாள் பரபரப்பாக பேசப்பட்டது பிறகு காணாமல் போய்விட்டது. நீதிபதியும் அமைச்சர் தொடர்பு கொள்ளவில்லை, அவருடைய வழக்கறிஞர் மூலம் தொடர்பு கொண்டார் என கூறிவிட்டார். பிறகு நீதிபதிகளும் அதை பற்றி ஒன்றும் பேசவில்லை.
கத்தி போய் வால் வந்த கதையாக இப்பொழுது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக, S.C.அகர்வால் என்பவர், நீதிபதியை மிரட்டியது யார் என்பதனை தெரியப்படுத்த வேண்டுமென மனு செய்துள்ளார். இது தொடர்பாக மத்திய தகவல் வாரியம் உச்ச நீதிமன்றத்திடம் தகவல் கோரியுள்ளது. அதாவது அந்த மத்திய அமைச்சரின் பெயரும், அவருக்காக நீதிபதியைத் தொடர்பு கொண்ட அவரது வழக்கறிஞர் பெயரையும் 15 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டுமாம்.
அதில் அகர்வால் தனது மனுவில் முதலில் வந்த மீடியா தகவல்களின் படி, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணுக்கு நீதிபதி ரகுபதி அமைச்சரே தன்னிடம் நேரடியாக பேசியதாக குறிப்பிட்டுள்ளார். அகர்வாலின் இந்த மனுவை மத்திய தகவல் வாரியம் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொலைப்பேசிய மத்திய அமைச்சர் யாராக இருந்தாலும், சனி பகவானுக்கு சனிக்கிழமை பூஜையும், சனிபகவானின் வாகனமான காக்கைக்கு கொஞ்சம் சாதமும், ஒரு முறை திருநள்ளாறு சென்று வருவது நலம் பயக்கும்.
நிரந்திர நிவாரணம்நேற்று ஆங்கில மீடியாவிற்கு கையும் ஓடலை காலும் ஓடலை. 26/11 ஒர் ஆண்டு நினைவு தினத்தை எப்படி கொண்டாடலாம் என்று குழம்பிப் போனார்கள். தாஜ் ஹோட்டலில் நடந்த பிராத்தனை கூட்டததை காண்பிக்க வேண்டுமா ? அல்லது கேட்வே ஆப் இந்தியா முன்பு மெழுகுவத்தி ஏற்றுவதையா ? அல்லது ஸ்டுடியோவிற்கு வந்த சண்டைபோட்டவர்களைஆ ? என்று ஒரே குழப்பம். சரி எதற்கு வம்பு என்று எல்லாவற்றையும் சின்ன சின்ன பெட்டியில் காமித்தார்கள். வந்தர்வர்களிடம், பொது மக்களிடம் திரும்ப திரும்ப ஒரே கேள்வி - உங்களுக்கு பயமா இருக்கா ? ராத்திரி தூக்கம் வருகிறதா ? அரசியல்வாதிகள் ஒரே மாதிரி சல்ஜாப்பு பதில்கள் என்று 26/11னை அருமையாக கொண்டாடினார்கள்.
பாராளுமன்றத்திலும் ஒரு நிமிஷம் மௌனத்துக்கு பிறகு ரகளையை ஆரம்பித்தார்கள். மும்பை தாக்குதலில் பிடிபட்ட தீவிரவாதி இன்னமும் தண்டிக்கப்படாதது ஒருபுறம் இருக்க, தாக்குதலில் மரணமடைந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு நிவாரணமே இன்னும் முழுமையாக வழங்கப்படவில்லையாம். பாராளுமன்றத்தில் இது குறித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் திரு.எல்.கே.அத்வானி அவர்கள், மும்பை தாக்குதல்களில் ஏன் இன்னும் நிவாரணம் அளிக்கப்படவில்லை என கேள்வி எழுப்பினார். இதை தட்டிக்கேட்க ஏன் 26/11 வரை அவர்கள் காத்திருக்க வேண்டும் ? அதற்கு முன் இவர் என்ன செய்துக்கொண்டிருந்தார் ? நல்ல வேளை பிப் 29 அன்று நடக்கவில்லை, இல்லை என்றால் இவர்கள் நான்கு வருஷம் கழித்து தான் கேள்வி கேட்பார்களா ?
சம்பவம் நிகழ்ந்து ஓராண்டாகிவிட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களில் 403 பேர்கள் நிவாரணத்திற்கு தகுதி படைத்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டு, அதில் சுமார் 118 பேர்களுக்கு மட்டுமே நிவாரணம் அளிக்கப்பட்டிருக்கிறது. அதில் 64 பேர்களுக்கு நிவாரணமாக ரயில்வேயில் வேலை அளிக்கப்படுமென உறுதியளிக்கப்பட்டு, இதுவரை 32 பேர்களுக்கு மட்டுமே நியமனப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை வைத்துக்கொண்டு மீடியா கிழி கிழி என்று கிழித்து தள்ளிவிட்டார்கள் நேற்று இரவு. அஜ்மல் கஸாப் கோழி கறி கேட்டான் என்ற நியூஸ் வந்த போது ஏன் இப்படி கிழிக்கவில்லை இவர்கள் ?
சரி ஒரு வருஷம் கழித்து கேள்வி கேட்கிறார்கள், அதற்கு காங்கிரஸாருக்கு ஏன் கோபம் வரவேண்டுமென்று தெரியவில்லை. மூத்த காங்கிரஸ் தலைவரும், நிதியமைச்சருமான திரு.பிரணாப் முகர்ஜி சற்றே ஆவேசப்பட்டு பதிலளித்துள்ளார். பதிலளித்துள்ளார் என்பதை விட, தர்ம சங்கடமான கேள்வி கேட்டுவிட்டாரே என்று கோபபடாரா ? ஆத்திரப்பட்டாரா என்று தெரியவில்லை. ஏதோ பட்டார். குருவிற்கு விடை தெரியலை என்றால் கோபித்துவிட்டு விடை சொல்லாமல் தப்பிக்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்லுகிறது. ஆத்திரகாரனுக்கு புத்திமட்டு என்றும் ஒரு பழமொழி இருக்கு. நேற்று அவருக்கு கோபமா ஆத்திரமா என்று தெரியவில்லை. ஆனால் பார்க்கும் நமக்கு கோபமும், ஆத்திரமும் சேர்ந்து வந்தது.
மும்பை தாக்குதலை பாஜக ஏற்கனவே அரசியலாக்க முனைந்தது; அதற்கான பலனும் தேர்தலில் கிடைத்தது; திரும்பவும் அரசியலாக்க முனைகிறது; திரும்பவும் பலன் கிடைக்கும் என பாஜக அடைந்த தோல்வியை சுட்டிக் காட்டி ஆவேசப்பட்டுள்ளார். ஆனால் அத்வானி கேட்ட கேள்விக்கு இது எவ்வகையில் பதிலாகும் என்பது ப்ரணாப்பிற்கே வெளிச்சம்.
தொடர் தீவிரவாத தாக்குதல்கள், அப்ஸல் குரு, அஜ்மல் கஸாப், தீவிரவாதத்திற்கெதிரான நடவடிக்கைகள் இவைகளைப் பற்றி பாஜக தவிர எந்த எதிர்க்கட்சியுமே வாய் திறப்பதில்லை. சிறுபான்மை பக்தி இதற்கு ஒரு காரணம். தவிர பாஜக எப்பொழுது எழுப்பினாலும், முன்பு உங்கள் ஆட்சியில் அது நடந்ததே, இது நடந்ததே என சால்ஜாப்பு சொல்கிறதே தவிர ஆக்கப்பூர்வமான தீர்வு இதுவரை எட்டப்படவில்லை.
இந்நிலையில் அஜ்மல் கஸாப்பின் ஒரு நாளுக்கான பராமரிப்பு செலவு 8.5 லட்சமாம்!! காங்கிரஸ் சார்பில் தினமும் அவனுக்கு ஸ்வர்ணாபிஷேகம் எதுவும் நடக்கிறதா என்று தெரியவில்லை. இதுவரை கிட்டத்தட்ட நமது வரிப்பணத்தில் 35 கோடிகள் ஒரு கொலைகாரனைக் காபந்து செய்ய செலவழிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை செலவழிக்கப்பட்ட பணத்தில் நாலில் ஒரு பங்கு கூட பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணமாக அறிவிக்கப்படவில்லை.
பாதிக்கபட்ட மக்களுக்கு உண்மையான நிவாரணம் பெட்ரோல் பங்கோ, ரயில்வே வேலையோ இல்லை. Zero Tolerance for Terrorism என்ற கொள்கை. கிடைக்குமா ?
26/11 பழைய பதிவு
மீண்டும் இந்தியா ஒளிர்கிறதுகலைஞர் முன்பு அடிக்கடி கூறுவார்....தில்லியின் தலைநகர் கோபாலபுரத்தில் என்று. இப்பொழுது அவவாறு சொல்லக்கூடிய வாய்ப்பில்லை என்றாலும், காங்கிரஸ் கழகத்தை பல விதங்களில் தனக்கு முன்னோடியாகக் கொண்டுள்ளது. ஹிந்துக்களை அவமதிப்பது, ஊழல், இலவச அரிசி, இலவச கலர் டிவி, என்று தொடங்கி கட்-அவுட் வைப்பது வரை பட்டியல் மிக நீளம். ஆனால் காங்கிரஸ் கொஞ்சம் கழகத்தை விட காஸ்ட்லியான கட்சியாதலால் எல்லாமே காஸ்ட்லியாகத்தான் நடக்கும்.
இனி பாரத மக்களுக்கு காங்கிரஸ் தலைவி சோனியாவையும், பிரதமர் மன்மோகன் சிங்கையும் தெருவுக்குத் தெரு, முச்சந்திக்கு முச்சந்தி என திரும்பியவிடமெல்லாம் தரிசிக்கும் பாக்யம் கிட்டப் போகிறது. ஆம்!! எங்கெங்கு காணினும் சக்தியடா என்று பாரதி பாரதிதாசன் சொன்னது போல, எங்கெங்கு காணினும் சோனியாவடா என்று சொல்லும்படியாக தேசிய நெடுஞ்சாலைத் துறை ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியேற்ற பிறகு சாலைகளை மேம்படுத்துவதில் அதிக அக்கறை (??) காண்பித்துள்ளதாம். அதனை சிறப்பிக்கும் வண்ணம் ஒவ்வொரு 25 கிலோ மீட்டர் தொலைவிற்கும் ஒரு பதாகை, அதுவும் எவ்வாறு?? காங்கிரஸ் தலைவி அன்னை சோனியா மற்றும் மன்மோகன் ஆகியோர்களின் புகைப்படங்களைத் தாங்கிய பதாகை!! இவர்களுடைய (காங்கிரஸினுடைய) இத்திட்டம் புதிய சோடா பாட்டிலில் அடைக்கப்பட்ட பழைய சோடா!! இது ஏற்கனவே பாஜக அரசால் செயற்படுத்தப்பட்ட தங்க நாற்கர சாலைத் திட்டம். அதனை சற்றே பெயர் மாற்றி "National Highways Developement Programme (NHDP) என்று செயல்படுத்தி வருகிறது. அது போகட்டும், யார் ஆரம்பித்தாலும் பயன்பட்டால் சரிதான்.
இதில் விஷயம் என்னவெனில், இந்த ஒரு பதாகைக்கு ஆகக் கூடிய செலவு சுமார் 4 லட்சம் என கணக்கிடப்படுகிறது. சுமார் ஆயிரம் கிலோமீட்டர்களுள்ள நெடுஞ்சாலையில், 25 கி.மீக்கு ஒன்றாக வைத்துக் கொண்டாலும் சுமார் 40 பதாகைகள் சுமார் 1.6 கோடி ஆகிறது. இதனை தயாரிக்கும் செலவு அதனை தயாரிக்கப் போகும் தயாரிப்பாளர்களைச் (நெடுஞ்சாலைத் துறை) சேர்ந்தது. இதனை பராமரிக்கும் செலவு தனியாரிடம் விடப்படப் போகிறது. இந்த பதாகைகளில் இவ்விருவரின் புகைப்படம் தவிர, திட்ட இயக்குனர், மேற்பார்வையாளர், திட்ட மதிப்பீடு போன்றவை பற்றிய விவரங்களும் கொசுறாக இடம்பெறும். தவிர இந்த பதாகைகள் ஒரு குறிப்பிட்ட முறையில்தான் தயாரிக்க வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது. புகைப்படங்கள் தெளிவாக தெரிய வேண்டுமென்பதற்காக சிறப்பான முறையில் அதிக பொருட்செலவோடு தயாராகிறது. 1000 கிலோ மீட்டர்களுக்கே இவ்வளவென்றால், நாடு முழுவதுமுள்ள 70000 கி.மீ சாலைகளுக்கு எவ்வளவு செலவாகுமென்பதை தோராயமாக நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
சாலையோரங்களில் இருக்கும் இப்பதாகைகள் காற்றின் வேகத்தைக் குறைக்க உதவுமென கூறப்படுகிறது. ராமர் பாலத்தை இடிக்க முற்பட்டவர்கள் இப்பொழுது வாயு பகவானின் வேகத்தைக் குறைக்கப் போகிறார்களாம். தேசிய நெடுஞ்சாலைத் துறையின் விதிமுறைகளின் படி, சாலையோரங்களில் விளம்பரங்கள் வைக்கப்படக் கூடாது. இவ்விதமான பதாகைகள் உங்களது விதிமுறைகளையே மீறுவதாகாதா என கேட்டதற்கு, சாலையின் பயனாளர்கள் அரசின் இத்திட்டத்தைப் பற்றி அறிந்து கொள்ளும் பொருட்டே இவை அமைக்கப்படுகின்றனவே தவிர இது விதிமுறை மீறலாகாது என பதிலளிக்கப்பட்டுள்ளது. திட்டம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால் இவர்களின் புகைப்படம் எதற்கு?? ரோடு போட்ட பணியாளர்கள் புகைப்படத்தைப் போடலாமே?? எல்லாம் அவர்களுக்கே வெளிச்சம்.
ஒருபுறம் இந்தியா முழுவதிலும் விவசாயிகள் பட்டினிச் சாவால் இறந்து கொண்டும், தற்கொலை செய்து கொண்டும் இருக்கின்றனர். மறுபுறம் நக்ஸல்கள் மற்றும் ஜிஹாதி தீவிரவாதிகளின் அட்டூழியங்கள் ஜகஜ்ஜோதியாக நடைபெறுகின்றன. மறுபுறம் சீனா நம்மிடத்தை ஆக்கிரமிக்கிறது. இவற்றிற்கெல்லாம் தீர்வு காண அரசிற்கு துப்பில்லை. இந்நிலையில் இது போன்ற ஆடம்பர விளம்பரங்கள் தேவையா?? இந்தியா ஒளிர்கிறது என்று பாஜக தேர்தல் பிரச்சாரம் செய்த போது மக்களின் வரிப்பணம் தண்ணீராய் செலவிடப்படுகிறது என்று கவலைப்பட்ட காங்கிரஸ் இப்போது இதுபோன்ற உதவாத வேலைகளில் முனைந்துள்ளது. உத்திரப்பிரதேசத்தில் மாயாவதி தனக்குத்தானே சிலை நிறுவிக் கொண்டதற்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ், தற்போது அதே போன்ற வேலையில் ஈடுபட முனைகிறது.
தவிர, சாலைகள் என்பது ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அத்யாவசியமானது. அதனை மேம்படுத்துவது ஒரு அரசின் கடமைகளுள் ஒன்று. இதில் விளம்பரப் படுத்திக் கொள்வதற்கு ஏதுமில்லை. நாங்கள் சாலை போட்டோம், நாங்கள் குளம் வெட்டினோம் என்று பீற்றிக் கொள்ள இதில் எதுவுமே இல்லை. இவைகளை செய்வதர்க்குத்தான் இவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஒரு அரசாங்க ஊழியன் இன்று இவ்வளவு பைல்களைப் பார்த்து கையெழுத்திட்டேன் என்று அதைப் பெரிய் சாதனையாக தன்னுடைய அலுவலக வாயிலில் பெரிதாக விளம்பரப் படுத்திக் கொண்டால் அது எவ்வளவு அபத்தமாக இருக்குமோ இதுவும் அவ்வளவு அபத்தம்.
( யதிராஜ் + இட்லிவடை )
Posted by IdlyVadai at 11/27/2009 02:04:00 PM 13 comments
Labels: செய்திவிமர்சனம், யதிராஜ சம்பத் குமார்
Thursday, November 26, 2009
26/11
ஐம்பது நிமிஷத்துக்கு குறைவாக ஓடும் இந்த வீடியோவை எல்லோரும் ஒரு முறை பார்க்க வேண்டும்.
26/11 - ஓராண்டு நிறைவு - யதிராஜ சம்பத் குமார்
முன்னுரை:
2008, நவம்பர் 26 துவங்கி மூன்று நாட்கள், நவம்பர் 28 வரை, பாரத வரலாற்றின் மறக்க முடியாத கருப்பு தினங்கள். இன்றோடு ஒரு வருடம் பூர்த்தியாகிறது. சென்ற வருடத்தின் இதே தினத்தில் மும்பை நகரம் பற்றி எரிந்து கொண்டிருந்த்து. சத்ரபதி சிவாஜி ரயில்நிலையம், தாஜ் ஓபராய், ட்ரைடெண்ட் ஹோட்டல்கள் மற்றும் நாரிமன் இல்லம் ஆகியவை பிணக்காடகவும், புகை மண்டலமாகவும் காட்சியளித்தன. அநேகமாக பத்திரிக்கைகள் முதலாமாண்டு நினைவஞ்சலி கொண்டாடும். அரசியல் தலைவர்கள் துவங்கி அனைவரும் துக்கம் அனுஷ்டிப்பார்கள். ஏதோ அவர்களால் முடிந்தது அவ்வளவுதான்!!
தீவிரவாதிகள் ஊடுருவல்:
பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற “லஷ்கர்-ஈ-தொய்பா” அமைப்பைச் சார்ந்த சுமார் எட்டு தீவிரவாதிகள், பாகிஸ்தானிலிருந்து அரபிக் கடல் மார்க்கமாக மும்பைக்குள் ஊடுருவினர். இதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே குஜராத் கடலோரக் காவல்படையினருக்கு இவ்வாறு ஊடுருவக்கூடும் என உளவுத் துறைத் தகவல் கிடைத்து, அதனை குஜராத் அரசாங்கம் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகும், மத்திய அரசின் மெத்தனத்திற்கும், அலட்சியத்திற்கும் கிடைத்த சாட்டையடி இந்த தாக்குதல்கள். சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் (விக்டோரியா டெர்மினஸ், V.T), தாஜ் மற்றும் ட்ரெடெண்ட் ஹோட்டல்கள், நாரிமன் இல்லம் ஆகியவற்றில் புகுந்த நவீன ரக ஆயுதங்கள் தரித்த தீவிரவாதிகளின் சரமாரியான துப்பாக்கிச் சூட்டில் 179 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்; 400க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 179 பேரில் சுமார் 8 பேர் அயல்நாட்டு சுற்றுலாப்பயணிகள். தவிர, ஹேமந்த் கர்கரே, விஜய் சாலஸ்கர், அஷோக் காம்தே போன்ற காவல்துறை உயர் அதிகாரிகள் தீவிரவாதிகளின் வெறியாட்ட்த்திற்கு பலியாயினர்.
உள்நாட்டுப் பாதுகாப்பில் மெத்தனம்:
கடந்த ஆறு ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் தொடர்ந்து, தில்லி(இருமுறை), ஜெய்ப்பூர், ஹைதராபாத், மும்பை (மின்சார ரயிலில்), மாலேகான், உத்திரப் பிரதேசம் (நீதிமன்ற வளாகங்கள்), அஹமதாபாத், பெங்களூர் என வட தேச யாத்திரை மேற்கொள்வது போல் தீவிரவாதிகள் அனைத்து இடங்களிலும் குண்டு வைத்து அப்பாவி மக்களைக் கொன்றனர். இவையத்தனைக்கும் அரசின் நடவடிக்கை வெறும் அறிக்கைகளின் வாயிலான கண்டனங்கள் மற்றும் வாய்ச் சவடால்கள் மட்டுமே. 2008-இல் அனைத்திற்கும் சிகரம் வைத்தாற் போன்றதான மிகப்பெரிய தாக்குதல். இந்த ஆறு ஆண்டுகளில் இந்தியாவின் உள்துறையமைச்சர் பொறுப்பிலிருந்தவர் திரு.சிவராஜ் பாட்டீல். ஒவ்வொரு குண்டு வெடிப்பிற்குப் பிறகும் இவரிடமிருந்து தவறாமல் ஒரு கண்டனமும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென்ற சம்பிரதாயப் பேச்சையும் எதிர்பார்க்கலாம். பிரதமரும் தன் பங்கிற்கு தான் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களில், குறிப்பாக சுதந்திர தின மற்றும் குடியரசு தின உரைகளில், தீவிரவாத்திற்கெதிராக இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுப்போம் என சூளுரைப்பார். ஆனால் இதுவரை ப்ளாஸ்டிக் கரம் கொண்டு கூட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவ்வளவு மதச்சார்பின்மை மயக்கம் மற்றும் சிறுபான்மை ஓட்டு பயம். இவ்வளவு குண்டு வெடிப்பு நடந்த பிறகும் உள்நாட்டுப் பாதுகாப்பில் எவ்வித அக்கறையும் காண்பிக்கவில்லை இந்த மெத்தன அரசு. இருக்கவே இருக்கிறது கண்டனம்...அது தெரிவிக்கப்பட்டால் அடுத்த குண்டு வெடிப்பு நிகழும் வரை ஆபத்தில்லை. தீவிரவாத்திற்கெதிரான நடவடிக்கை அதோடு சரி.
இத்தீவிரவாதிகளுக்கெதிரான தாக்குதல்களில், தீவிரவாதிகளின் ஆயுதங்களோடு, நமது பாதுகாப்புப் படையினரின் ஆயுத பலத்தை ஒப்பிட்டால், தீபாவளித் துப்பாக்கி கூட சற்றே பலம் வாய்ந்ததுதான். (விஜய் டிவியில், கமலஹாசனுடன் நேயர்களும் பங்குபெற்ற
உன்னைப் போல் ஒருவன் படத்தைப் பற்றிய ஒரு நேர்காணலில், மும்பை தாக்குதலை நேரில் கண்ட ஒருவர் கூறியது, “As a citizen of india, நான் என்னோட tax-a ஒழுங்கா கட்டலாம். ஆனா பாதுகாப்புப் படையினருக்கு ஆயுதம் வாங்கித் தர முடியுமா?? எவ்வளவு நிதர்சனம்?)
சமீபத்தில், இத்தாக்குதலில் கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரியான ஹேமந்த் கர்கரேவின் மனைவி, அஜ்மல் கஸாப் இன்னமும் தூக்கிலிடப்படாத்து குறித்து தனது கடும் கண்டனத்தையும், அதிருப்தியையும் தெரிவித்தார். அதெல்லாம் நமது அரசிடம் எடுபடாது. செவிடன் காதில் ஊதிய சங்கு போலாகும் என்பது தெரிந்ததே. அப்ஸல் குரு தூக்கிலிடப்படாத்து தொடர்பாக, பாராளுமன்றத் தாக்குதலில் உயிர்நீத்த ராணுவ வீரர்களை கெளரவிக்கும் பொருட்டு அளிக்கப்பட்ட மெடல்களை, உயிர்நீத்தவர்களின் உறவினர்கள் ஜனாதிபதியிடம் திருப்பியளித்தனர். இது அரசிற்கு மாபெரும் வெட்க்க்கேடு மற்றும் தலைகுனிவு. இதற்கே அசைந்து கொடுக்காத அரசு, ஹேமந்த் கர்கரேவின் மனைவியின் கண்டனத்திற்கு அஞ்சும் என்று எண்ணினால் நாமல்லவோ மூடர்கள்?? சிறுபான்மை ஓட்டுவங்கியை விட ஹேமந்த் கர்கரேவின் உயிரென்ன அவ்வளவு பெரிதா?? மேலும் ஹேமந்த் கர்கரே அணிந்திருந்த குண்டு துளைக்காத உடையை பார்க்கவேண்டுமெனவும், அதன் தரம் குறித்து அறிக்கை தரவேண்டுமெனவும், தகவல் அறியும் உரிமைச் சட்ட்த்தினடிப்படையில் வினவியதற்கு, மஹராஷ்டிர அரசு மிகவும் மெத்தனமாக, அவ்வுடை தொலைந்து விட்டது என பதிலளித்துள்ளது. இவர்களை நம்பிதான் இந்திய ஜனநாயகம் இயங்கி வருகிறது என்பதை நினைத்தால் வேதனைதான் மிஞ்சுகிறது.
மீடியாக்களின் பரோபகாரம்:
இந்த தீவிரவாத தாக்குதல்களில் மீடியாக்களின், குறிப்பாக வட இந்தியா ஆங்கில செய்திச் சானல்களின் பங்கு அதி முக்கியத்துவம் வாய்ந்த்து. பொதுவாகவே இந்த செய்தி ஸ்தாபனங்களுக்கு நல்ல விஷயங்கள் எங்கு நடைபெற்றாலும், எதுவுமே தெரிய வராது. ஆனால் இது போன்ற அசம்பாவிதங்கள் எங்கு நடந்தாலும்/நடக்கப் போகிறதென்றாலும் முன்கூட்டியே ஆஜராகிவிடுவர். அதே போன்று இந்த தாக்குதல்களை கிரிக்கெட் போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்வது போன்று, லைவாக கமெண்டரிகளுடன் ஒளிபரப்பு செய்தனர். ஹோட்டல்களின் உள்ளே இயங்கும் தீவிரவாதிகளின் நடவடிக்கைகள், அவர்களை முறியடிக்க வெளியே காவல்துறையினரும், துணை ராணுவமும் என்னென்ன வியூகங்கள் வகுக்கின்றனர், மேலும் காவல்துறையினர் எது மாதிரியான ஆயுதங்கள் வைத்திருக்கின்றனர் என்பது உட்பட அனைத்து விஷயங்களையும் நேரடியாக ஒளிபரப்பினர். இவ்வகையில் தீவிரவாதிகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பேருதவி புரிந்தனர். சில மணி நேரங்களிலேயே நடந்து முடிந்திருக்க வேண்டிய விஷயம், இவர்களின் பரோபகாரத்தால் மூன்று நாட்களுக்கு நீடித்த்து. தீவிரவாதிகள் வசமிருந்த அதிநவீன மொபைல்கள் மற்றும் சாட்டிலைட் உபகரணங்கள் மற்றும் ஹோட்டல்களுள் பொருத்தப்பட்டிருந்த தொலைக்காட்சிகளின் வாயிலாக வெளியே நடைபெறும் சம்பவங்கள் மற்றும் ராணுவத்தின் வியூகங்கள் உடனுக்குடன் தெரியப்படுத்தப்பட்ட்து. மீடியாக்களின் இந்த பேருபகாரம் இஸ்ரேல் உட்பட பல உலக நாடுகளால் காறி உமிழப்பட்ட்து.
சில சம்பிரதாயங்கள் மற்றும் பரிகாரங்கள்:
இது போன்ற அசம்பாவிதங்கள் நடந்தால், அதையொட்டிய சம்பிரதாயங்களும், பரிகாரங்களும் நடப்பது நமது தேசத்தில் தொன்று தொட்ட ஒரு வழக்கம். எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சிகளுக்கு கண்டனம் தெரிவிப்பதும், ஆளுங்கட்சி இதை சும்மா விடமாட்டோம் என்று வசனம் பேசுவதும் வழக்கமே! அதையொட்டி பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆளுங்கட்சியினரை பலமாக விமர்சனம் செய்தன. இவ்வாறான சம்பிரதாயங்கள் ஒருபுறம் நடக்க, இதற்குண்டான பரிகாரங்களில் காங்கிரஸ் முனைந்தது. உள்துறையமைச்சர் ஷிவராஜ் பாட்டீல், மஹராஷ்டிர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் மற்றும் அவரது செயலர் R.R.பாட்டீல் போன்றோர் பதவி விலகினர்/விலக்கப்பட்டனர். ஏதோ அவர்களால் முடிந்த நடவடிக்கை இவ்வளவுதான். இதற்கு மேல் எதிர்பார்த்தால் அது நமது பிசகு.
நடவடிக்கைகள்:
இத்தாக்குதல்களின் போது உயிருடன் பிடிபட்ட ஒரே தீவிரவாதி அஜ்மல் கஸாப். நவம்பர் 28 முதல் 30 வரையிலான தாக்குதல்களுக்கான இவன் மீதான குற்றப்பத்திரிக்கை ஆற அமர 2009, மே 9 ஆம் இதற்காக மும்பையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த இவன் ஜூன் மாத இறுதியில் தனது குற்றங்களை ஒப்புக் கொண்டு மன்னிப்பும் கோரினான். இதற்கிடையில் பாகிஸ்தான் அரசாங்கம், அஜ்மல் கஸாப் தங்கள் தேசத்தவன் அல்ல என்று சாதித்தது. இந்திய அரசாங்கம் கிட்ட்த்தட்ட கெஞ்சி மன்றாடியது என்றே சொல்லலாம். பிறகு ஒருவாறாக, பாகிஸ்தான் உள்துறையமைச்சர் ஷெரியர் ரஹ்மான், ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் அஜ்மல் பாகிஸ்தானைச் சேர்ந்தவந்தான் என்றும், இச்சதிக்கான திட்டங்கள் அனைத்தும் பாகிஸ்தானிலேயே தீட்டப்பட்டன என்றும் பகிரங்கமாகத் தெரிவித்தார். இதற்கு மறுதினமே இவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். உண்மை எப்போதுமே சுடுமென்பதற்கு இது ஓர் உதாரணம். இதற்குப் பிறகு பாகிஸ்தான் அரசாங்கம் தனது பிடிவாத்ததை இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. சிவராஜ் பாட்டீல் பதவி விலகிய பிறகு, உள்துறையமைச்சராக பதவியேற்ற ப.சிதம்பரம் அவர்களும், மன்மோகன் சிங் அவர்களும் இவ்விஷயம் தொடர்பாக அமெரிக்கா சென்று வந்ததுதான் மிச்சம். நம் நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான விஷயத்திற்கு அமெரிக்காவிடமிருந்து எவ்வகையான தீர்வு எதிர்பார்க்கிறார்கள் என்பது இந்திய அரசிற்கே வெளிச்சம். ஆனால் அமெரிக்க அரசோ ஒருபுறம் பாகிஸ்தானை “டெரர் ஸ்டேட்” என வர்ணித்துக் கொண்டே, மற்றொரு புறம் பாகிஸ்தானுக்கு ஆயுத உதவியும், நிதியுதவியும் மிக தாராளமாக வழங்கி வருகிறது. அதுவும் ஒபாமா பதவியேற்ற பிறகு இந்நிதியுதவிகள் மிகவும் தாராளமாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிதியுதவிகள் பாகிஸ்தானின் உளவு மற்றும் இந்தியாவிற்கு வேட்டு வைக்கும் அமைப்பான ISI மூலம் தீவிரவாதிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது என்றும் பரவலாக குற்றச்சாட்டு இருக்கிறது. இதற்கு அமெரிக்கா இன்றுவரை மெளனம் ஒன்றையே பதிலாக அளித்து வருகிறது.
இத்தக்குதல்களுக்கு மூளையாகச் செயல்பட்ட்து லஷ்கர்-ஈ-தொய்பாவின் தலைவன் “ஹஃபீஸ் மொஹமது சயீத்” என்பது தெரிய வந்த பிறகு அவனைக் கைது செய்யுமாறு பாகிஸ்தானிடம் "கெஞ்சும் படலம்" துவங்கியது. ஆனால் பாகிஸ்தான் இதற்கெல்லாம் அசைந்து கொடுப்பதாக இல்லை. ஹபீஸ் சயீத் பாகிஸ்தானிலேயே இல்லை என ஒரேடியாக மறுத்தது பாகிஸ்தானிய அரசாங்கம். பிறகு அமெரிக்கா மூலமாக பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்கப்படவே, ஹபீஸ் மீது ஒரு சிறு வழக்கைப் பதிவு செய்து பெயருக்காக வீட்டுக் காவலில் வைத்தது. அதுவரை பாகிஸ்தானிலேயே இல்லை என்று பாகிஸ்தானால் மறுக்கப்பட்டு வந்த ஹபீஸ் எவ்வாறு திடீர் பிரவேசமாக வந்தான் என்பது பாகிஸ்தானுக்கே வெளிச்சம். இதிலிருந்தே பாகிஸ்தானின் பித்தலாட்டமும், அவர்களின் இந்தியாவிற்கெதிரான “ஜிஹாத்” தும் மிகத் தெளிவாக விளங்கும். இந்த நாடகத்தின் ஒருசில நாட்களுக்குப் பிறகு ஹபீஸ் வீட்டுக்காவலிலிருந்து விடுதலை செய்யப்பட்டான்
இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்த பிறகு, ஹபீஸ் வீட்டுக்காவலிலிருந்து தப்பித்து விட்டதாக பாகிஸ்தான் புளுகியது. ஆனால் பாகிஸ்தானில் ஹபீஸ் மிகவும் சுதந்திரப் பறவையாகத் திரிவது பத்திரிக்கைகளில் அடிபட்ட வண்ணம் இருக்கிறது. நேற்றைய முந்தினம் ஒரு மசூதி ஒன்றில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய ஹபீஸ் சயீத், பாகிஸ்தான் அமெரிக்காவின் அடிமையாகச் செயல்படுவதாகவும், நாம் சரியான வழியில் பயணித்தால் இறைவன் நம்மை (இஸ்லாமியர்களை) உயர்ந்த ஸ்தானத்திற்கு உயர்த்த உறுதியளித்துள்ளார் என மூளைச் சலவை பேச்சுக்களை நிகழ்த்தி வருகிறான். இவையத்தனையையும் அமெரிக்கா உட்பட அனைத்து உலக நாடுகளும் கவனித்துக் கொண்டுதான் வருகின்றன. ஆனால் பாகிஸ்தான் அவனுக்கெதிரான நடவடிக்கைகள் எதையுமே எடுக்க முனையவில்லை. இன்னமும் பாகிஸ்தான் ஒரு அப்பாவி என்று கூறினால் அவர்களை விட மூடர்கள் எவருமே இருக்க முடியாது.
முடிவுரை மற்றும் இனி நடக்கப் போகிறவை:
அஜ்மல் கஸாப் துப்பாக்கியால் சரமாரியாக சுடுவதும், மக்கள் மரங்களைப் போலச் சாய்வதும் வீடியோவில் தெள்ளத் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இன்னமும் அவனிடம் என்ன விசாரணை வேண்டிக்கிடக்கிறது என்று தெரியவில்லை. எப்படியும் அவனுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்கப்படும். இதற்கு அவனுடைய தாயார் கதறியழுவார். இருக்கவே இருக்கின்றன வட இந்திய செய்தித் தொலைக்காட்சிகள் மற்றும் மனித உரிமை அமைப்பு. அவர் கதறுவதை நேரடியாக ஒளிபரப்பு செய்து அவருடைய துக்கத்தில் பங்கு கொள்வார்கள். இதனைப் பார்த்த நமது பிரதமர் மனமுடைந்து ஊண், உறக்கம் இன்றித் தவிப்பார். அவர் பாவம்...மனிதாபிமானி, நேர்மையாளர், ஜீவகாருண்ய சீலர்., அதெல்லாம் விட முக்கியமாக மதச்சார்பற்றவர். கருணை மனுவும் தாக்கல் செய்யப்படும்; எப்படி அப்ஸல் குருவுக்கு முன்னர் 21 பேர் இருக்கிறார்களோ, அதே போல் இவன் 23 ஆவது நபராக கருணைக்காக காத்திருப்பான். ஆளும் காங்கிரஸோ கருணா விலாஸம். அன்னை அனைவரையும் இரட்சிப்பார். ராஜீவ் கொலையாளிகள் முதல் அஜ்மல் கஸாப் வரை!! பாவம், அப்ஸல் குருவும் எவ்வளவு நாட்கள்தான் தனியாக இருப்பார்?? பிறகு ஏதாவது விமானம் கடத்தப்பட்டால், சிறையிலிருக்கும் இருவரையும் மாலை மரியாதையுடன் அரசு பிரதிநிதிகள் புடைசூழ வழியனுப்பி விடலாம்.
காங்கிரஸ் மற்றும் அதனைச் சார்ந்த மதச்சார்பற்ற ஜீவகாருண்ய சீலர்களும் திருந்தாதவரை, பாரதம் இனி மெல்லச் சாகும் என மிகவும் துக்கத்தோடு சொல்லத்தான் தோன்றுகிறது. ஆஸ்திகர்கள் ஆண்டவனையும், நாஸ்திகர்கள் இயற்கையையும், பாரதமே இல்லையென்று சொல்பவர்கள் லெமூரியாவின் காவல் தெய்வத்தையும் வேண்டுங்கள்.
--யதிராஜ சம்பத் குமார்
ஓராண்டு நிறைவு தினத்தில் பார்லிமெண்ட் கதவுகளை மூடிவிட்டு, ப.சிதம்பரம், மன்மோகன் சிங் மற்றும் முக்கியமானவர்கள் முதல் சீட்டில் உட்கார்ந்து இந்த வீடியோவை பார்க்க சிபாரிசு செய்கிறேன்.
Posted by IdlyVadai at 11/26/2009 12:01:00 AM 25 comments
Labels: யதிராஜ சம்பத் குமார், விருந்தினர், வீடியோ
Wednesday, November 25, 2009
சாதிகள் இல்லை ஆனா இருக்கு.
படங்களில் ஜாதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் விவேக், தனக்குப் பிரச்னை என்று வந்தவுடன் தனது ஜாதி முகமூடியை எடுத்து அணிந்துகொண்டிருக்கிறார். பத்திரிகையாளர்கள் என் மீது வழக்குத் தொடருகிறார்கள். எனக்குக் கொடுக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதைக்கூடத் திரும்ப பெற சூழ்ச்சி நடக்கிறது. எனக்கு ஆதரவராக நீங்களும் களம் இறங்க வேண்டும் என்று பேசியிருக்கிறார். எங்கே தெரியுமா? அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழக ஆலோசனைக் கூட்டத்தில். சாதி இல்லே, சாமி இல்லே எல்லாம் சினிமா வசனம்தானா?
இன்னும் காமெடி கீழே...
வட சென்னை ஜாதி ஒழிப்பு மாநாடு தமிழர் தலைவர் எழுச்சியுரை ஐயா வீரமணி அருமையா பேசியிருக்கார். வீடியோக்களை பார்க்க இங்கே செல்லுங்கள்.
ஜாதி என்பதை சாதி என்று மாற்றலாம் ஆனால் அதை ஒழிக்க முடியுமா ? தமிழ் நாட்டில் எவ்வளவு சாதிகள் இருக்கு என்று அறிந்துக்கொள்ள
தமி்ழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பணி வெட்பாளர்களுக்கான விதிமுறைகள். அதாங்க TNPSC விதிமுறைகள் லிங்க் இங்கே . நேரா 21ஆம் பக்கம் போங்க தமிழ் நாட்டில் எவ்வளவு சாதிகள் இருக்கு என்று தெரியும். அரசியல் தலைவர்கள் வேட்பாளர்களுக்கான தேர்வு எவ்வளவு கஷ்டம் என்று உங்களுக்கு புரியும்.
எனக்கு ஒரு டவுட். இதுல இருக்கும் சாதிகளை தவிர வேற எதாவது இருக்கா ? இருந்தா பின்னூட்டத்தில் சொல்லுங்க. பரிசுக்கு இட ஒதுக்கீடு எல்லாம் கிடையாது.
Posted by IdlyVadai at 11/25/2009 06:26:00 PM 23 comments
Labels: செய்திவிமர்சனம்
நச் பூமராங் போட்டி
நான்கு செய்திகள் கீழே கொடுத்திருக்கிறேன். அதற்கு ஏற்றார் போல ஒரு நச் பூமராங்கை பின்னூட்டமாக கொடுக்கலாம். பரிசு உண்டு. நான் என்ன எழுதியிருக்கேன் என்று நாளை சொல்லுகிறேன். ரெடி ஜூட்
1. "இப்போது தி.மு.க.வோடு ஆட்சியில் சேர்ந்தால் பாத்திரம் கழுவும் வேலை தான் மீதம் இருக்கும்'' - பீட்டர் அல்போன்ஸ்
2. "இடைத்தேர்தலே தேவை இல்லை என்பது தான் எங்கள் கருத்து. அதை ஒரு தமாஷாகத்தான் நாங்கள் கருதுகிறோம்'.
-பாமக நிறுவனர் ராமதாஸ்
3. ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடாவின் ஊழல்கள் தோண்ட தோண்ட பெருகுகின்றன. - செய்தி
4. முடிதிருத்தகம், சலவையகங்களில் விடுதலைஏடு - செய்தி
பரிசு அனுப்பியவுடன் அது பூமராங் மாதிரி என்னிடமே வராது கவலைப்படாதீங்க :-)
Posted by IdlyVadai at 11/25/2009 02:53:00 PM 30 comments
Labels: நச் பூமராங், போட்டி
உலக கழிப்பறை நாள்!
சுத்தம் சோறு போடும்' என்று தமிழில் ஒரு முதுமொழி உண்டு. அதன் பொருள், மனிதர்களுக்கு அகசுத்தம், புறசுத்தம் இரண்டுமே அவசியம். அப்போதுதான் ஆரோக்கியமான வாழ்வு சாத்தியமாகும். 'நாம் சுத்தமாக இருக்க நினைத்தாலும், நம்முடைய சூழ்நிலை அதற்கு இடம் கொடுப்பதில்லையே...' என்று நம்மில் பலரும் வருந்தியிருப்போம். ஏனென்றால், மிகவும் அடிப்படையான சுகாதார வசதிகளைப் பொறுத்த வரை நாம் இன்னமும் மிக மிகப் பின்தங்கிய நிலையில்தான் இருக்கிறோம்.
நகரங்களுக்குப் போனால் திரும்பிய பக்கமெல்லாம் ஹோட்டல்கள். ஆனால், அவசர ஆத்திரத்துக்கு ஒரு கழிப்பறை வேண்டுமென்றால், நீங்கள் தெருத்தெருவாகத் தேடி அலைய வேண்டும் அல்லது சாப்பிடுவது போல் பாவனை செய்து ஏதாவது ஒரு ஹோட்டலுக்குள் நுழைய வேண்டும். அதிலும், பெரிய ஹோட்டல்களாக இருந்தால் தப்பித்தோம். இல்லாவிட்டால், கழிப்பறையைப் பார்த்துவிட்டு, வாந்தி எடுக்காமல் திரும்புவது கஷ்டம். இதுதான் நம்முடைய நகரங்களின் நிலவரம். நம்முடைய நகரங்களைத் திட்டமிடுகிறவர்கள் கழிப்பறைகளுக்கென்று இடம் ஒதுக்குவது வீண் வேலை என நினைக்கிறார்கள் போலும்!
சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வி.சேகர் ஒரு முறை சட்டப்பேரவையில் பேசும்போது, 'ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுக்கிறீர்கள். அதை வாங்கிச் சாப்பிட்டு விட்டு காலையில் இயற்கைக் கடனை கழிப்பதற்கு இரண்டு ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கிறது!' என்று குறிப்பிட்டார். அது சிரித்து மறக்கக்கூடிய நகைச் சுவை மட்டுமல்ல... யோசிக்க வேண்டிய யதார்த்தமும்கூட! இரண்டு ரூபாய் கொடுப்பதுகூட பரவாயில்லை. ஆனால், அப்படிக் கொடுத்தாலும் பயன்படுத்தக்
கூடியவையாக கழிப்பறைகள் இருக்கின்றனவா என்பதுதான் பிரச்னை. தமிழ் நாட்டில் மட்டுமல்ல... இந்தியா முழுமைக்குமே இதுதான் நிலவரம்.
'கழிப்பறை என்பது அவ்வளவு முக்கியமா?' என்று உங்களுக்குக் கேள்வி எழலாம். சரியான கழிப்பறை வசதி இல்லாததால், வெட்டவெளியில் மனிதர்கள் மல, ஜலம் கழிக்கிறார்கள். அதனால், பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. 'உலகெங்கும் வயிற்றுப்போக்கால் உயிரிழக்கும் குழந்தைகளில் சுமார் 15 லட்சம் குழந்தைகள் இப்படி சுகாதாரமற்ற கழிப்பிடங்களால் ஏற்படும் தொற்று நோய் காரணமாகவே உயிரிழக்கிறார்கள்!' என்று யூனிசெப் ஓர் அறிக்கையில் கூறியுள்ளது. பெண்களுடைய கண்ணியத்தைக் காப்பதில் கழிப் பறைகள் முக்கியப் பங்காற்றுகின்றன. வெட்டவெளியை கழிப்பறையாகப் பயன் படுத்துவது பெண்களைப் பொறுத்த வரை எவ்வளவு கொடூரமானதாக இருக்கும்! கல்வியிலும்கூட இதனுடைய தாக்கம் இருக்கிறது. பெண்கள் பள்ளிகளிலிருந்து இடைநிறுத்தம் செய்வதற்கு போதிய கழிப்பறை வசதி இல்லாததும் ஒரு காரணமாகத் தெரியவந்துள்ளது.
அண்மையில், உலக வங்கியின் முன்முயற்சியால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், 'தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் படிப்பை நிறுத்துவதற்கு பள்ளிகளில் போதுமான கழிப்பறைகள் இல்லாதது ஒரு காரணம்' என்று கூறப்பட்டுள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் பல்வேறு நாட்களை உலக தினங்களாக நாம் அனுசரித்து வருகிறோம். கழிப்பறைக்காக சர்வதேச தினம் ஒன்று இருக்கும் என நாம் சிந்தித்துப் பார்த்திருக்க மாட்டோம். நவம்பர் 19-ம் தேதியை உலக கழிப்பறை நாளாக அனுசரிக்கிறார்கள். சுகாதாரம் பற்றிய விழிப்பு உணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கூட அது பெரிய அளவில் உலகமெங்கும் அனுசரிக்கப்பட்டது. பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மக்களிடையே சுகாதாரம் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதற்கு இந்த நாளில் நிகழ்ச்சிகள் பலவற்றை ஏற்பாடு செய்திருந்தார்கள். உலக சுகாதார நிறுவனமும், யுனிசெப் நிறுவனமும் இணைந்து, உலக அளவில் சுகாதாரம் மற்றும் குடிநீர் வசதி எவ்வாறு உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கையன்றை வெளியிட்டுள்ளன. உலகமெங்கும் 250 கோடி மக்கள் நல்ல கழிப்பறை வசதிகள் இல்லாதவர்களாக உள்ளனர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் 120 கோடி பேர் கழிப்பறை வசதியே இல்லாதவர்களாக உள்ளனர் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
நல்ல கழிப்பறை வசதி இல்லாது போனால் தனிமனித ஆரோக்கியம் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. அதனால் மிகப்பெரும் சேதம் நாட்டுக்கும் உண்டாகிறது. ஆரோக்கிய மற்ற குடிமக்கள், பொருளாதார இழப்புக்கு வழி வகுக்கி றார்கள். அரசாங்கத்தின் மருத்துவச் செலவு இதனால் அதிகரிக்கிறது. கழிப்பறை வசதியை நான்கு விதமாக இந்த அறிக்கை பிரித்திருக்கிறது. வெட்டவெளியைக் கழிப்பறையாகப் பயன்படுத்துகிறவர்கள், சுகாதாரக் குறைவான கழிப்பிடங்களைப் பயன்படுத்துகிறவர்கள், பொது கழிப்பிட வசதி களைப் பயன்படுத்து கிறவர்கள், சுத்த மான தண்ணீர் வசதி கொண்ட கழிப்பறைகளைப் பயன்படுத்துகிறவர்கள் என்று அந்த அறிக்கையில் வகைப்படுத்தியிருக்கிறார்கள். உலக அளவில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரத்தின் அடிப் படையில் பார்க்கும்போது, தென்னாசிய நாடுகளில்தான் கழிப்பறை வசதிகள் மிக மோசமாக இருப்பது தெரிய வந்துள்ளது.
2006-ம் ஆண்டு நிலவரப்படி ஆப்பிரிக்க நாடுகளில் 28 சதவிகித மக்கள் வெட்டவெளியை கழிப்பிடமாகப் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் அது ஏழு சதவிகிதமாக இருக்கிறது. மேற்காசிய நாடுகளில் அது ஐந்து சதவிகிதம் மட்டுமே. ஆனால், தென்னாசிய நாடுகளில் உள்ள மக்களில் 48 சதவிகிதம் பேர் திறந்தவெளியையே கழிப் பிடமாகப் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. உலகில் மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிகளுக்காக இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதை குறிப்பிட்ட ஆண்டுக்குள் எட்டவேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ளது. அந்த இலக்கை எட்டிக்கூடப் பார்க்காத ஒரு நாடு நம்முடைய இந்தியாதான்.
உலக அளவில் சுகாதாரமான கழிப்பறை வசதி இல்லாத 250 கோடி மக்களில் 180 கோடி பேர் தென்னாசிய நாடுகளில் மட்டும் வசிக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது. இந்தியாவைப் பொறுத்த வரை 28 சதவிகித மக்கள் மட்டுமே நல்ல கழிப்பறை வசதியோடு வாழ்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் காங்கோ, உகாண்டா, தான்சானியா போன்றவை இந்தியாவைவிட மேம்பட்ட சுகாதார வசதியோடு இருப்பது நமக்கு பெரும் அவமானமல்லாமல் வேறென்ன?
திறந்தவெளியைக் கழிப்பிட மாகப் பயன்படுத்துகிற மக்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் இந்தியாதான் முதலிடம் வகிக் கிறது. உலகில் 120 கோடி பேர் இப்படி திறந்தவெளியை கழிப்பிடமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். 13 நாடுகளில் இந்தப் பழக்கம் அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது. சீனா, நைஜீரியா, பிரேசில், பங்களாதேஷ், நேப்பாள், சூடான், வியட்நாம் உள்ளிட்ட அந்த 13 நாடுகளில் முன்னிலை வகிப்பது இந்தியாதான். இங்கு 66 கோடி பேர் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன் படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று யுனிசெப் அறிக்கை குறிப்பிடுகிறது. அதாவது, உலகில் திறந்தவெளியை கழிப்பிடமாகப் பயன்படுத்தும் மக்கள் தொகையில் பாதிக்கும் அதிக மானவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்தான்.
கழிப்பிட வசதி என்பது வீட்டு வசதியோடு தொடர்பு கொண்டது என்பதை நாம் அறிவோம். குடியிருக்க வீடே இல்லாதவர்கள், எப்படி மேம் படுத்தப்பட்ட கழிப்பறை வசதியோடு இருக்க முடியும்? உலகிலேயே குடிசைகள் அதிகமாக இருக்கும் நம்முடைய நாட்டில் கழிப்பறை இல்லாதவர்கள் அதிகமாக இருப்பதில்... ஆச்சர்யம் ஒன்றுமில்லை. ஒண்டுவதற்கே சிரமமாக இருக்கும் குடிசை வீடுகளில் கழிப்பறை கட்டுவது என்பது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு விஷயம்!
2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டிலுள்ள வீடுகளில் 20 சதவிகித வீடுகளுக்கு மின்சாரமும், கழிப்பறை வசதியும் இல்லை என்று கண்டறியப்பட்டது. கிராமப் பகுதிகளில் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. 27 சதவிகித வீடுகளில் மின் வசதியும், கழிப்பறை வசதியும் இல்லை. மின்சாரமும், கழிப்பறை வசதியும் உள்ள வீடுகள் வெறும் 33 சதவிகிதம் மட்டுமே. சுமார் 65 சதவிகித வீடுகளில் கழிப்பறை வசதி இல்லையென்று சென்செஸ் அறிக்கை கூறுகிறது. மொத்தமுள்ள ஒரு கோடியே 41 லட்சத்து 73 ஆயிரம் வீடுகளில் கழிப்பறை வசதி இல்லாத வீடுகள் சுமார் ஒரு கோடியாகும். தற்போது, மக்களுடைய அடிப்படைத் தேவைகள் என்னவென்று ஆராய்ந்து, அவற்றையெல்லாம் தீர்த்து வைப்பதில் அக்கறை காட்டுவதில் தமிழக அரசு முனைப்பாக இருக்கிறது. முதல்வர் கலைஞர் தலைமையிலான இந்த அரசு நிறைவேற்ற வேண்டிய முக்கியமான கடமைகளில் ஒன்று இந்தக் கழிப்பறை வசதியை ஏற்படுத்தித் தருவதாகும். தமிழகத்தை முழுமையான கழிப்பறை வசதி கொண்ட மாநிலமாக மாற்றுவது அவசியம். இது தொழில் வளர்ச்சியில் முதலிடம் வகிக்கும் மாநிலம், கல்வி அறிவில் முதலிடம் வகிக்கும் மாநிலம் என்று சொல்வது எவ்வளவு பெருமையோ... அதைவிடவும் பெருமையானது, தமிழ்நாடு முழுமையான கழிப்பறை வசதி கொண்ட மாநிலம் என்பதாகும்.
தற்போது, இந்திரா ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்படும் தொகுப்பு வீடுகளோடு கழிப்பறையையும் சேர்த்துக் கட்டுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டிலுள்ள கிராமப் பஞ்சாயத்துகள் அனைத்திலும் சுகாதார வளாகங்களை ஏற்படுத்துவதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. முழு சுகாதாரத் திட்டத் தின் கீழும் இதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கென்று பணியாளர்கள் நியமிக்கப்பட்டு மக்களிடையே சுகா தாரம் பற்றிய விழிப்பு உணர்வும் உருவாக் கப்பட்டு வருகிறது. ஆனால், இவை போதாது.
அரசு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தந்தாலும் அதை பயன்படுத் துகிற, பராமரிக்கிற பொறுப்பு பொது மக்களைச் சார்ந்ததுதான். தற்போது அரசாங்கம் ஏற்படுத்தித் தருகிற பொது சுகாதார வளாகங்களை பொதுமக்கள் எவ்வளவு மோசமாகப் பராமரிக்கிறார்கள் என்பதை கிராமங் களுக்குச் சென்று பார்ப்பவர்கள் அறிந்திருக்கக் கூடும். ஒரு கிராமத்தில் சுகாதார வளாகம் கட்டப்பட்டால், ஒரு சில வாரங்களிலேயே யாரும் அணுக முடியாத ஒரு பகுதியாக அந்த இடம் மாறிவிடுகிறது. அந்த அளவுக்கு மோசமாக அவற்றை பொதுமக்கள் வைத்திருப்பது வேதனையளிக்கும் உண்மையாகும். தண்ணீர் வசதி இல்லாமல் சுகாதார வளாகங்களை உருவாக்குவதால்தான் இப்படியான சிக்கல் எழுகிறது என சொல்லப்படுகிறது. ஆனால், அது மட்டுமே காரணமல்ல. மக்களிடையே விழிப்பு உணர்வும், பொறுப்பு உணர்வும் இல்லாததுதான் இதற்கு மிகவும் அடிப்படையான காரணம்.
தமது வீடுகளில் கழிப்பறை வசதி இல்லாததால் இப்படியான வசதிகளை எப்படி பயன்படுத்துவது என்பதை பொதுமக்கள் சரியாக உணராது உள்ளனர். அவர்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டியது நமது கடமை.கடந்த ஆண்டு ஆஸ்கார் பரிசுகளை அள்ளிக் குவித்த 'ஸ்லம் டாக் மில்லியனர்' திரைப்படத்தில் ஒரு காட்சிவரும். அந்தப் படத்தின் நாயகனான சிறுவன் திறந்தவெளி கழிப்பறையில் மலம் கழித்து கொண்டிருப்பான். அப்போது அமிதாப்பச்சன் அங்கு வந்திருப்பதாக யாரோ சொல்லிக்கொண்டு போவார் கள். அவன் அந்த மலக்குழியில் குதித்துக் கரையேறி அப்படியே அமிதாப்பைப் பார்க்க ஓடுவான். படம் பார்ப்பவர்களை குமட்டச் செய்த காட்சி அது. இந்தியாவின் தரத்தைத் தாழ்த்தும் காட்சி என்ற விமர்சனங்களும் கிளம்பின. ஆனால், நம்முடைய நகரங் களில் பல குப்பங்களைப் போய் பார்த்தால்... அத்தகைய காட்சிகள் அன்றாட நிகழ்வுகளாக இருப்பதை உணரலாம். இந்த நிலையை மாற்ற வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்குமே உள்ளது
- ரவிக்குமார் எம்.எல்.ஏ.
( நன்றி: ஜூவி )
Posted by IdlyVadai at 11/25/2009 12:45:00 PM 10 comments
Tuesday, November 24, 2009
நச் பூமராங் 24-11-2009
1. எந்திரன் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம். இப்ப ரஜினி பிஸியாக டப்பிங் பேசிக்கொண்டு இருக்கார். படம் அடுத்த வருடம் சித்திரை திருநாளில் ரிலீஸாம். - செய்தி
தமிழ் பெயருக்கு சலுகை மாதிரி புதிய தமிழ் வருட பிறப்புக்கு தான் சலுகை என்று ஏதாவது சொல்லிவைக்க போகிறார் நம்ம முதலமைச்சர்.
2. 2010 சென்னை புத்தகக் கண்காட்சி இந்த வருடம் டிசம்பர் 30லிருந்து ஜனவரி 10 வரை - காதில் விழுந்தது
ஏன் என்று கேட்டதற்கு எல்லாம் பரமபிதாவிடம் கேளுங்கள் என்று சொல்லிவிட்டார் அந்த நபர்.
3. நடராஜர் கோவிலில் தீவிரவாதிகள் நடவடிக்கையை கண்டுபிடிக்க காமிரா பொருத்த முடிவு செய்திருக்கிறார்கள் போலீஸ். - செய்தி
தீவிரவாதிகள் உஷாரா இருக்க இந்த நியூஸ். மற்றபடி பப்ளிக் இதை பற்றி கவலை பட வேண்டாம்.
4. சிதம்பரம் நடராஜர் கோவிலில், முதல்வர் கருணாநிதியின் துணைவி ராஜாத்தி, தனது பேரனுடன் சாமி தரிசனம் செய்தார்கள். தி.மு.க., நகரச் செயலர் செந்தில்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அவரை வரவேற்று கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர். கோவிலில் சிற்றம்பல மேடையில் ஏறி சாமி தரிசனம் செய்தார்களாம்.- செய்தி
தில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழை முழங்குவோம் என்பதற்கு இது தான் அர்த்தம்.
5. வந்தவாசி, திருச்செந்தூரில் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு செய்துட்டாங்க அம்மா. - செய்தி
வந்தவாசி, திருச்செந்தூர் கிராமங்களிலும் அதே வழக்கம் தானாம். காது குத்து(மக்களுக்கு) அப்பறம் கிடா வெட்டு(அதிமுக வேட்பாளருக்கு) அதுக்கு அப்பறம் கறிச்சோறு( திமுக ஸ்பான்சர் செய்யும் ).
6. பகவான் ஸ்ரீ சத்ய சாய் 84ஆம் பிறந்த நாளில் பக்தர்கள் அளித்த கேக்கை வெட்டினார். - செய்தி
இந்தியா இந்துக்களின் நாடு. இங்கு வாழும் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் கூட இந்து கலாச்சாரத்தையே பின்பற்றுகிறார்கள். அவர்கள் இந்து பரம்பரையை சேர்ந்தவர்கள். எனவே அவர்களையும் இந்துக்களாகவே கருதுகிறோம். இந்துத்துவம் என்ற கொள்கையை அனைவரும் பின்பற்றுவதால் நாடு நன்றாக இருக்கிறது. இந்துத்துவம்தான் நாட்டுக்கு வலிமை கொடுக்கிறது என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பெங்களூரில் பேசியுள்ளார். - செய்தி
கேக் வெட்டுவது இந்தியர்களின் கலாச்சாரமா இல்லையா ?
7. மூத்த தமிழறிஞர்கள் பற்றிய விழா ஒன்றைப் பற்றிய செய்தியில் மறைந்த தமிழறிஞர்களுக்கு முதல்வர் அஞ்சலி செலுத்தினார் என்ற செய்தியை மறைந்த முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அஞ்சலி”னு தப்பா பிரிண்ட் பண்ணிட்டாங்களாம். தலைவர் என்ன ரியாக்ட் பண்ணுவாரோனு பயந்துகிட்டே அவர்கிட்டே தகவலைக் கொண்டு போனப்ப, ‘பரவாயில்லை... என் பேரன்கள் தயவில் என்னுடைய மறைவுக்கான அஞ்சலிக் கட்டுரையை நானே படிக்கும் வாய்ப்பு கிடைச்சிருக்கு” என்று சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டாராம். - செய்தி
இதே இடத்தில் அம்மாவை நினைச்சா கதி கலங்குது. அப்படி பிரிண்ட் அடித்தவருக்கு இன்னேரம் பால் ஊற்றியிருப்பார்கள்.
8. கேள்வி: ``தமன்னா இடுப்பில் கிள்ளினால் என்னவாகும்?''
பதில்: ``அந்த இடம் சிவப்பாகி விடும்''
- தினத்தந்தி குருவியார் கேள்வி பதில்
எது சிகப்பாகும் ? தமன்னாவின் இடுப்பா அல்லது கிள்ளியவரின் கன்னமா? இயக்குனர் பார்த்திபனின் டவுட்
போன ஜென்மத்தில் பார்த்திபன் கிள்ளிவளவனாக இருந்திருப்பார்.
9. மகாத்மா காந்தியை தேசத் தந்தை என்கிறோம், அதை “தேசத்தின் (நேஷன்) தந்தை மகாத்மா காந்தி, `ரேஷனின்’ தந்தை டாக்டர் கலைஞர்” - மு.க.ஸ்டாலின்
ஆந்திராவில் புழக்கத்தில் உள்ள போலி ரேஷன் கார்டுகளை கண்டுபிடிக்க வீடு, வீடாக சோதனை நடத்தப்பட்டது. அப்போது மகாத்மா காந்தி பெயரில் ரேஷன் கார்டு வழங்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில், எம்.கே.காந்தி தாத்தா (வயது 65) என்ற பெயரில் காந்தியின் புகைப்படம் ஒட்டப்பட்டிருந்தது. அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவின் பெயர், காந்தியின் தந்தை பெயராக குறிப்பிடப்பட்டு இருந்தது.
இப்ப சொல்லுங்க யார் ரேஷனின் தந்தை ?
10. `விருதகிரி' என்ற படத்தின் மூலம் விஜயகாந்த், `டைரக்டர்' ஆகியிருக்கிறார்.
அட்லீஸ்ட் இந்த கனவாவது 'கை'கூடட்டும்!
Posted by IdlyVadai at 11/24/2009 02:56:00 PM 12 comments
Labels: நச் பூமராங்
மவுன வலி - கொத்து பரோட்டா
திடீர் என்று முதல்வர் ஏன் விடுதலை புலிகளை பற்றி 'மவுன வலி' என்று பேசுகிறார் என்று தெரியவில்லை. இன்று ஃபிரஷாக கேள்வி பதில் அறிக்கையில்...
முதல்வர் கேள்வி பதில் அறிக்கை
"மவுன வலி' என்ற தலைப்பில் நீங்கள் எழுதிய கடிதத்தை ஒரு சிலர் ஏற்காமல், விமர்சனம் செய்கின்றனரே?
ஈழ விடுதலைப் போரில் வீழ்த்தப்பட்ட வேங்கை பிரபாகரனுக்காக என் விழிகள், நீரைப் பொழிகின்றன. அதே நேரத்தில், இளந்தலைவர் ராஜிவும், நாவலர் அமிர்தலிங்கமும், யோகேஸ்வரன், முகுந்தன், சிறீ சபாரத்தினம், பத்மநாபா, யோதீஸ்வரன் கொல்லப்பட்ட போது, அவர்களை இழந்த மனைவி மக்களும், உற்றார் உறவினர்களும், நண்பர்களும் கண்ணீர் பெருக்கியபோது, அவர்களோடு சேர்ந்து கண்ணீர் சிந்த எனக்கு உரிமை இல்லையா?புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் மறைந்த போது, ஓர் இரங்கல் கவிதை எழுதினேன். மடிந்த ஒருவருக்கு அனுதாபம் தெரிவித்ததைக் கூட, ஜெயலலிதாவால் பொறுத்துக்கொள்ள முடியாமல், "புலிகளுடன் கருணாநிதிக்கு ரகசியத் தொடர்பிருக்கிறது' என்றவர் தான் அவர்.அப்படி அறிக்கை விட்டவர்களைப் பற்றி எதுவும் சொல்லாமல், சொல்ல துணிவு இல்லாமல் என் மீது பாய்கின்றனரே; தமிழ் இனம் தாழ்வதற்கும், வீழ்வதற்கும் இதை விட காரணங்கள் இருக்க முடியுமா?
ஜெயலலிதா உட்பட சிலர், நீங்கள் பிரபாகரனை கடுமையாகத் தாக்கி எழுதிவிட்டதைப் போல அறிக்கை விட்டுள்ளனரே?
பிரபாகரனைப் பற்றி அறிக்கை அல்ல; கடிதம் அல்ல; அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில், "இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்பி பிரபாகரனை கைது செய்ய வேண்டும்' என, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அப்படியொரு தீர்மானத்தை முன்மொழிந்தவர் தான், நான் நல்லதை எண்ணி, நடுநிலையுடன் எழுதியதற்கு நம் மீது பாய்கிறார். "பிரபாகரனை என்றைக்கும் ஆதரிப்பேன்' என சொல்லிக் கொண்டிருப்பவர்களும், அம்மையாருக்குத் துணை போய், நம்மைத் தாக்கி அறிக்கை விடுகின்றனர்.
துரோகிகளுக்கு நீங்கள் பாராட்டுப் பத்திரம் வழங்குவதாக ஒருவர் அறிக்கை வெளியிட்டிருக்கிறாரே?
உண்மை தான். துரோகிகள் யார் எனத் தெரியாமல், அவர்களுக்கு சில காலம் பாராட்டுப் பத்திரம் வழங்கிக் கொண்டிருந்து விட்டேன்.
இலங்கைத் தமிழர் முகாம்களுக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு விட்டதா?
இலங்கைத் தமிழர்கள் தங்கியுள்ள முகாம்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கும், முன்னுரிமைப்படுத்தப்பட்டுள்ள நலத் திட்டங்களை உடனடியாகச் செயல்படுத்துவதற்கும், முதற்கட்டமாக 45 கோடி ரூபாய் ஒப்பளிக்கப்பட்டு, 20ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டு விட்டது. 37 கோடியே 33 லட்சம் ரூபாய்க்கான திட்டங்களுக்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டது.இதுதவிர, நலத் திட்டங்களான - உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான காப்பீட்டுத் திட்டத்தில் சேர்த்தல், இலவச கலர் "டிவி' வழங்குதல், திருமண நிதி உதவி, விளையாட்டு உபகரணங்கள், ஊனமுற்றோருக்கு உபகரணங்கள் வழங்குதல், ஈமக்கிரியைக்கான தொகையை உயர்த்துதல், மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் போன்றவை, சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் உடனடியாக நிறைவேற்றவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டு விட்டது.ஒதுக்கீடு செய்யப்பட்ட 100 கோடி ரூபாயில், இதற்கான செலவுகள் போக எஞ்சியுள்ள தொகையில் தக்கதொரு கட்டட வடிவமைப்பை ஏற்படுத்தி, தகுதியான நிலத்தைத் தேர்ந்தெடுத்து, புதிய கான்கிரீட் வீடுகள், ஊரக வளர்ச்சித் துறை மூலம் கட்டுவதற்கு, தனியாக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
கல்கி தலையங்கம்
தமிழக முதல்வர் திடீரென்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தாம் மௌனமாக அழுவதாகத் தெரிவித்திருக்கிறார்! அந்த அழுகையின் ஒலி யாருக்கும் கேட்காது என்றும், அதன் வலி யாருக்கும் புரியாது என்றும் கூடுதலாக அதே அறிக்கையில் அவர் சொல்லியிருப்பது எதன்பொருட்டு என்பது புதிராகவே இருக்கிறது!
விடுதலைப் புலி தளபதிகள் சிலருக்கு ஆதரவு அளித்ததுடன் விவேகத்தைக் கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்தியதாகவும் ஒப்புக் கொண்டிருக்கிறார் கருணாநிதி. அந்த அறிவுரையை அவர்கள் கேட்டிருந்தால், இன்று நிலைமையே வேறாக இருந்திருக்கும். ஆனால், அவர்கள் தேர்தலைப் புறக்கணிக்குமாறு இலங்கைத் தமிழர்களை வற்புறுத்தினார்கள்; அதன் பின்விளைவுகள் சோகமயமாகிவிட்டன என்பதாகவும் கனத்த இதயத்துடன் முதல்வர் தமது அறிக்கையில் கூறுகிறார். இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்கும் வகையில் தமிழர்கள் தேர்தலில் வாக்களித்திருந்தால், சமீப சரித்திரம் வேறு விதமாக எழுதப்பட்டிருக்கும் என்பது அவர் கருத்து.
விடுதலைப் புலிகளோ அவர்களுடைய தலைவரோ யாருடைய அறிவுரையைத்தான் கேட்டார்கள்?! தமிழர் நலன் என்பதைக் காட்டிலும் அதிகார வேட்கையே அவர்களது முடிவுகளுக்கும் செயல்பாடுகளுக்கும் ஆதாரமாக இருந்தது; பொதுநலன் என்பதைக் காட்டிலும் பழிவாங்கும் வெறிதான் அவர்களைக் கண்மூடித்தனமாக இயங்கச் செய்தது. இதனால் விளைந்த உயிர்ச்சேதம், பொருள் சேதம் இரண்டுமே சொல்லி மாளாதவைதான்.
கருணாநிதி கூறுவதுபோல், புலிகள் அவருடைய அறிவுரையைக் கேட்டு நடந்து, தேர்தலில் இலங்கைத் தமிழர்கள் வோட்டுப் போட்டு, ரணில் விக்ரமசிங்கே அதிபராகியிருந்தாலும், பேச்சு வார்த்தைக்கு அவர் அழைப்பு விடுத்து அது நடந்திருந்தாலும், விடுதலைப்புலிகள் அந்த இடைவெளியைப் பயன்படுத்தி தங்களை மேலும் பலப்படுத்திக் கொண்டு திரும்பவும் இலங்கை அரசையும் ராணுவத்தையும் தாக்கத்தான் முற்பட்டிருப்பார்கள். ஆயுதம் துறந்து ஜனநாயக ரீதியான தீர்வுக்கு அவர்கள் ஒத்துழைத்திருப்பார்கள் என்று நம்புவதற்கு எந்த முகாந்திரமோ முன் நிகழ்வு ஆதாரமோ இல்லை.
இலங்கைத் தமிழர்களின் மறுக்கப்பட்ட உரிமைகளைப் பெற்றுத் தருவதற்கு, இந்தியாவில் வேறு யாரைக் காட்டிலும் அதிகமாகச் செய்யக்கூடிய நிலையில் இருப்பவர் கருணாநிதி தான். அவர் மட்டும் மத்திய அரசுடன் அமர்ந்து பேசி, இலங்கை அரசுக்கு எவ்வாறு அழுத்தம் கொடுக்கலாம் என்று எடுத்துச் சொல்லி செயல்திட்டம் வகுப்பாரேயானால், மத்திய அரசு அதை ஏற்காமலிருக்க முடியாது. அப்படியே மத்திய அரசு சுணக்கம் காட்டினாலும், கூட்டணிக் கட்சித் தலைவர் என்கிற முறையில் கருணாநிதி பிரதமரை நிர்ப்பந்திக்க முடியும். தமது கட்சி எம்.பி.க்களுக்கான அமைச்சக இலாகாக்களைப் பெறுவதில் தி.மு.க. தலைவர் வெற்றி கண்டது சமீபத்திய சரித்திரம். இலங்கைத் தமிழர்கள் உரிமைகளுக்காக அழுத்தம் கொடுத்து அவர் புதிய வரலாறு படைக்கலாமே!
பிறகு ஏன் ஈழத்தமிழர்களுக்கான உரிமைகள் குறித்து சிந்தித்துச் செயல்படாமல், நடந்து முடிந்த கதைகளை நினைவுகூர்ந்து `சென்டிமெண்ட்' பேச வேண்டும்? மத்திய அரசைப் பகைத்துக் கொள்ள மனமில்லாமல், மக்களை உணர்ச்சிகரமான வார்த்தைகள் மூலம் கவர்ந்து அனுதாபம் பெறும் முயற்சியாகவே இது தோன்றுகிறது!
கலைஞர் 50 என்ற நிகழ்ச்சி ஒன்றை ரெடி செய்யுங்கப்பா
Posted by IdlyVadai at 11/24/2009 07:58:00 AM 13 comments
Monday, November 23, 2009
வெடிக்கும் லிபரன் கமிஷன் ரிப்போர்ட்
டிசம்பர் 6ம் தேதி அயோத்தியில் நடந்த இறை தலம் இடிப்புக்குப் பின் பத்தே நாட்களில் அமைக்கப்பட்ட கமிஷன் தான் லிபரன் கமிஷன். பஞ்சாப், ஹரியானாவில் உட்கார்ந்திருந்த (சிட்டிங்) நீதிபதி லிபரனை வாங்கண்ணே. நல்லா இருந்த எடத்த இடிச்சு போட்டுட்டாங்க, யார் இடிச்சான்னு எல்லாருக்கும் தெரியுது, ஏன் இடிச்சாங்கன்னும் தெரியுது ஆனா யாராரு இதுல சம்பந்தக்காரரு, அந்த மாநில சர்க்காரு வீகம் என்னன்னு கொஞ்சம் சொல்லுங்கன்னு கேட்டுச்சு நம்ம இந்திய சர்க்கார். ”மாதவ் காட்போலே”ன்னு அப்போதைய ஹோம் செக்ரட்டரி, சொல்றது தான் சொல்றீங்க கொஞ்சம் சீக்கிரமா சொல்லுங்க, மிஞ்சி போனா ஒரு மூணு மாசம் அதுக்குள்ள சொல்லிடுங்க.
சரின்னு வேலையை ஒப்புத்துக்கிட்டவர் நம்ம லிபரன். அவர் முழுப் பேரு ”மன்மோகன் லிபரன்” (இவர் பேரும் மன்மோகன்). இந்திய வரலாற்றிலே சாதனை படைக்க வைச்சுட்டார். எப்படி? ஒண்ணு இல்ல ரெண்டு இல்ல 48 எக்ஸ்டென்ஷன். இன்னும் வேலை முடியல, கொஞ்சம் நாளாகும் என சொல்லி சொல்லி. இந்த மிக நீளமான விசாரணை, 339 பேரிடம், செத்துப் போன ”நரசிம்மராவ்” முதல் எல்லார் கிட்டயும் விசாரணை. அது மட்டுமா, இந்திய வரலாற்றிலே மிக அதிக பொருட்செலவில் உருவான காவியம் (இங்கு “பொன்னர் சங்கர்” நினைவு யாருக்கும் வராமலிருக்கட்டும்). செலவு தொகை 8 கோடி. இது மட்டுமா, காலத்திலும் மிக அதிகம் என சாதனை படைத்து. பதினாறு வருசத்துக்கு பொறவு 900 பக்கத்துல ரிப்போர்ட் ரெடி பண்ணி மன்மோகன், மன்மோகனிடம் கொடுத்தார்.
இந்த ரிப்போர்ட் கசிந்து நாளிதழின் வாய் வழியாக இன்று தேச மக்களை தொட்டது. வெல்லங் காய்ச்சினவன் ஒருத்தன் விரல் சூப்பினவன் மத்தவன்ங்கிற கதையா, செய்தி போட்டு காச பார்த்த பத்திரிக்கையாளர் ஒரு புறம், எப்படி லீக் ஆச்சு, காச்சு மூச்சு-ங்கிற எதிர் கட்சி ஒரு புறம், எங்க தப்பில்ல தெரியாது என இரு தலை கொள்ளியாய் ஆளும் கட்சி மறுபுறம். இன்னும் கொஞ்சம் நாளைக்கு அரசியல் சட்டியில் நெருப்பு பொறி பறக்கும்.
நன்றி: லாரன்ஸ் - படுக்காளி.ப்ளாக்ஸ்பாட்.காம்
லிபரன் கமிஷன் ரிப்போர்ட் டிசம்பர் 6 வரை லிபரலாக வெடிக்கும். அதன் புகை வானத்தில் தோன்றும் ஸ்பெக்டரத்தை மறைக்கும்
Posted by IdlyVadai at 11/23/2009 03:43:00 PM 19 comments
Labels: செய்திவிமர்சனம், விருந்தினர்
Sunday, November 22, 2009
சன்டேனா இரண்டு (22-11-09) செய்திவிமர்சனம்
இந்த படத்துக்கான செய்தி கடைசியில்...
செய்தி # 1
காவல்துறை உங்கள் நண்பன் என்று அடிக்கடி நினைவு படுத்திக்கொள்ளும் நிலையில் இருக்கிறது நம்
தமிழக காவல் துறை.
போலீஸ் என்றாலே பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் ஒரு தவறான இமேஜ் உள்ளது. அதற்கு சினிமாவும் ஒரு காரணம் என்கின்றனர் போலீசார்.
காக்க...காக்க, அஞ்சாதே போன்ற ஒரு சில சினிமாக்களில் போலீஸ் அதிகாரிகளை உயர்வாக காட்டினாலும், பல சினிமாகளில் போலீசை காமெடி கதாபாத்திரமாகவே காட்டுகிறார்கள்.மாணவர்கள் மத்தியில் போலீஸ் என்றாலே ஒருவித பயம் நிலவுகிறது. அதே நேரத்தில் அவர்களை வடிவேல் போல சிரிப்பு போலீசாகவே பொதுமக்கள் பார்க்கிறார்கள்.
மாணவர்களின் இந்த மனநிலையை போக்க சென்னை போலீசார் முடிவு செய்தனர். இதற்காக போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் இன்று பள்ளி மாணவர்கள் போலீஸ் நிலையத்தை சுற்றிப்பார்க்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சென்னையில் உள்ள 80போலீஸ் நிலையங்களும் இதற்கு தயாராயின. முதல் நிலை காவலர் முதல், காவல் துறை இயக்குனர் (டி.ஜி.பி.) வரை அவர்கள் அணியும் சின்னங்கள், விதவிதமான துப்பாக்கிகள், குற்றவாளிகளின் போட்டோக்கள், போக்குவரத்து விதிமுறை சின்னங்கள், வயர்லெஸ் கருவிகள் அனைத்தும் ஒரிடத்தில் அணிவகுத்திருந்தன.
இதனால் அத்தனை போலீஸ் நிலையங்களும் கண்காட்சி அரங்குகளாக காட்சி அளித்தன. காலை 10மணிக்கு மாணவர்கள் போலீஸ் நிலையங்களுக்கு வரத் தொடங்கினர். போலீஸ் நிலையங்கள் அனைத்தும் ஒருநாள் பள்ளிக்கூடங்களாக மாறின. பூக்கடை போலீஸ் நிலையத்தில் மாணவர்கள் அனைவரையும் ஓரிடத்தில் நிற்க வைத்து உதவி கமிஷனர் ராதாகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் பாடம் நடத்தினர்.
போலீஸ் நிலையத்தை இதற்கு முன்பு பார்த்திருக்கிறீர்களா? என்று உதவி கமிஷனர் ராதாகிருஷ்ணன் கேட்டதும்... சினிமாவில் பார்த்திருக்கிறோம் என்று ஓட்டு மொத்த மாணவர்களும் கூறினர்.
சினிமாவில் நீங்கள் பார்த்த போலீஸ் மாதிரி நாங்கள் இல்லை... உங்களுக்கு உதவுவதற்காகவே நாங்கள் இருக்கிறோம். சினிமா போலீசை நம்பாதீர்கள் என்று கூறிய உதவிகமிஷனர் ராதாகிருஷ்ணன், பிஸ்டல் ரிவால்வர் போன்ற துப்பாக்கிகளை இயக்குவது எப்படி என்பது குறித்தும் மாணவர்களுக்கு விளக்கி கூறினார்.
கைதிகளை அடைக்கும் அறைக்குள் சென்ற மாணவர்களிடம் பேசிய இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், இது தப்பு செய்பவர்களை அடைத்து வைக்கும் இடம். யாரும் தவறு செய்யக்கூடாது என்றார். இதைகேட்டதும் ஒட்டு மொத்த மாணவர்களும் சரி சார் என்று ஒரே குரலில் கூறினர்.
மாணவர்கள் சிலரிடம் பேசியபோது, போலீஸ் என்றால் சினிமாக்களில் வருவது போல... சிரிப்பு போலீசாக இருப்பார்கள் என்று நினைத்திருந்தோம். இன்றிலிருந்து அவர்கள் மீது மரியாதை ஏற்பட்டுள்ளது என்றனர்.
மாணவர் ஒருவர் நானும் ஒரு நாள் இந்த ஏ.சி.யை போல பாடம் நடத்தாமல் விடமாட்டேன் என்று கூறிவிட்டு சென்றார்.
தேர்தல் நேரத்தில் இரண்டு மாதங்கள் வீட்டுக்கு போகாமல் பணி செய்ததாக காவல்துறையில் இருக்கும் ஒரு நண்பர் தெரிவித்து இருந்தார். நேர்மையான,தூய்மையான அரசியல் அமைப்பு உருவானால், காவல்துறை மட்டும் அல்ல எல்லா துறைகளின் சீர்கெடுகளும் தாமாகவே நீங்கிவிடும் என்பது என் தாழ்மையான கருத்து.
செய்தி # 2
இரண்டு துணிச்சல்(!) வாய்ந்த அறிக்கைகளின் சாரம் மட்டும் தருகிறேன் இட்லிவடை நலன்(?) கருதி.
முதலாவது, உலக தமிழர்களிடையே பெரும் விவாதத்திற்கு உள்ளாகி இருக்கிறது
முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:ஈழத் தந்தை செல்வாவின் குரலோடு இணைந்து 1956 முதல் இலங்கை பிரச்னைக்காக திமுக குரல் எழுப்பியதோடு நில்லாமல், இலங்கையில் ஜனநாயகம் மலர வேண்டும் என்பதற்காக எடுத்து வைத்த வாதங்களும் நடத்திய அறப்போராட்டங்களும் சிறைகளை நிரப்பிய தியாகச் செயல்களும் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை தூக்கி எறிந்த நிகழ்வுகளும் இரு முறை ஆட்சியையே இழந்த சம்பவங்களும் நடந்தன. . முதலமைச்சராக இருந்து கொண்டே, இந்தியாவிற்கு திரும்பி வந்த அமைதிப் படையை வரவேற்கச் செல்லாமல் புறக்கணித்து, தமிழ்நாட்டின் உணர்வை நான் வெளிப்படுத்திய நிகழ்வு இலங்கையில் நடந்த விடுதலைப் போராட்டத்திற்கு நமது தாய் மண்ணிலிருந்து நீட்டப்பட்ட ஆதரவுக் கரம் என்பதை யாரும் மறந்துவிட முடியாது.
ஆனால் அங்கிருந்த ஒரு சிலருக்கு நாமே வலுவில் சென்று வழங்கிய ஆதரவு மிக லேசாகவே தெரிந்தது. வீரத்தை பயன்படுத்திய அளவுக்கு போர் முனையில் விவேகத்தையும் பயன்படுத்தவேண்டும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தியதை அலட்சியப்படுத்தி விட்டார்கள். ஜனநாயக ரீதியான ஒரு வாய்ப்பு வாசற்படி வரையில் வந்தபோது, அதை எட்டி உதைத்து விட்டனர். அண்மையில் சென்னை வந்த இலங்கை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கே நக்கீரன் இதழுக்கு அளித்த பேட்டியில், ‘‘இந்தப் போரின் விளைவுகளுக்கு ஒரு வகையில் பிரபாகரனும் காரணம். தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வுகாண முயற்சி நடந்த போதெல்லாம் அதனை தவிர்த்தார். 2003ல் நடந்த அமைதிப் பேச்சு வார்த்தையிலிருந்து தானாக வெளியேறினார். 2005 டோக்கியோ பேச்சுவார்த்தையிலும் தமிழர் கோரிக்கைகள் என்னவென்பதை தெரிவிக்காமலே இழுத்தடித்தார். அதில் கலந்து கொள்வதை தவிர்த்தார். 2005 அதிபர் தேர்தலில் தமிழர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கச் செய்தார். தேர்தலில் பங்கேற்று இருந்தால் தமிழர் மனநிலை என்ன என்பதை நாடு அறிந்து கொள்ள முடிந்திருக்கும். அந்த ஜனநாயக வாய்ப்பை தமிழ் மக்களுக்கு தர பிரபாகரன் தவறி விட்டார்’’ என்று கூறியிருக்கிறார். அதை கூர்ந்து கவனித்தால் விடுதலைப் புலிகள் போர் தந்திரத்தை எதிர்கால கணிப்போடு கையாளவில்லை என்பதை புரிந்து கொள்ள முடியும்.
. முறையாக திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொள்ள தவறிய காரணத்தால் நம் பலத்தையும், மாற்றார் பலத்தையும் துல்லியமாக கணிக்காத காரணத்தால் நம் தமிழ் மக்கள் எத்தனை பேர் மாற்றாரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரை இழக்க நேரிட்டது? இளம் சிறார்கள் எத்தனை பேர் பிஞ்சு வயதிலேயே வெந்து மாண்டனர்? அவர்களுடைய பெற்றோர் எத்தனை வேதனைப்பட்டிருப்பார்கள்? எத்தனை பேர் தங்கள் சொத்து சுகங்களை இழந்து நாடு விட்டு நாடு பஞ்சைகளாக, பராரிகளாக செல்ல நேரிட்டது? தங்கள் வாழ்க்கையை தொடர அவர்கள் எங்கெங்கு அலைந்து திரிய வேண்டியதாயிற்று? எத்தனை பேர் அகதிகள் முகாம்களில் ஆண்டுக்கணக்கில் வாட நேர்ந்தது? இதற்கெல்லாம் காரணம் என்ன? பிரபாகரன் மனைவி மக்கள் கதிதான் என்ன? இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து தமிழர் உயர்வுக்காக பாடுபட வேண்டியவர்கள் அற்ப ஆயுளில் போய் விட்டார்களே என்ற ஆதங்கத்தில்தான் இதனை எழுத நேரிட்டது. என்னையும், தம்பி மாறனையும் 9&2&1989ல் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி டெல்லிக்கு அழைத்து ஈழப் பிரச்னை குறித்து இரண்டு நாள் உரையாடி, ‘நீங்களும், மாறனும், வைகோவும் இலங்கை சென்று கொழும்பிலோ அல்லது உங்களுக்கு விருப்பமான இடத்திலோ முகாமிட்டு பிரபாகரனுடன் பேசுங்கள். எத்தனை நாள் வேண்டுமானாலும் செலவிடுங்கள். தேவையான ஏற்பாடுகளை செய்து தருகிறேன். அவர் கோரிக்கை என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இலங்கை தமிழ் மக்களின் உரிமைகளை நிறைவேற்ற நான் தயாராக இருக்கிறேன்’ என்றெல்லாம் எங்களுக்கு சொல்லி உறுதியளித்தார். அந்த இளந்தலைவர் இந்திய மண்ணில் அதுவும் தமிழ் மண்ணிலேயே கொலையுண்டார் என்பது ஒரு மாபெரும் சோகச் சம்பவம். அது ஈழ விடுதலைப் போராட்ட தீயில் தண்ணீர் விட்டு அணைத்தது போல் ஆயிற்று.
அடுத்து 2005ல் இலங்கை அதிபர் தேர்தல் நடைபெற்றது. பிரதமராக இருந்த மகிந்த ராஜபட்சேவும் அவரை எதிர்த்து முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் போட்டியிட்டார்கள். தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் புலிகளுடன் அமைதிப் பேச்சை தொடருவேன் என்றார் ரணில். அந்த தேர்தலை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டுமென்று விடுதலைப் புலிகள் அறிவுறுத்தினர். அப்போது ரணில் சொன்னதைதான் இப்போது பேட்டியிலும் குறிப்பிட்டுள்ளார். அந்த தேர்தலில் ராஜபக்சே வெற்றி பெற்றார். அவருக்கு 48,87,152 (50.29 சதவிகிதம்) வாக்குகளும், ரணிலுக்கு 47,06,366 (48.43 சதவிகிதம்) வாக்குகளும் கிடைத்தன. 1 லட்சத்து 81 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ரணில் தோல்வி அடைந்தார். ஏழு இலட்சம் தமிழ் வாக்காளர்கள் தேர்தலை புறக்கணித்த காரணத்தால் ஏற்பட்ட முடிவை பார்த்தால், விடுதலைப் புலிகள் அவசரப்பட்டு அன்று எடுத்த அரசியல் முடிவின் விளைவுகள் எங்கே போய் முடிந்தன என்பது புரியும். அதை எண்ணிப் பார்த்து நாம் மௌனமாக அழுவது யார் காதில் விழப் போகிறது? நம் மௌன வலிதான் யாருக்கு தெரியப் போகிறது? இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.
இந்த அறிக்கையின் தலைப்பு என்ன தெரியுமா? " விளைவுகளை எண்ணி மவுனமாக அழுகிறோம".
இரண்டாவது அறிக்கை , காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர்களை சேர்க்க விண்ணப்பம் வழங்கும் விழா, ஈரோடு காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்தது. விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் விண்ணப்பங்களை வழங்கி பேசியதாவது:
"இங்கு வழங்கப்படும் விண்ணப்பங்களில் உறுப்பினர்களுக்கான எண்கள் குறிப்பிடப்படும். இந்த எண்கள் மாநில அளவில் குறிப்பிடப்படுகிறதா அல்லது தேசிய அளவில் குறிப்பிடப்படுகிறதா என்பது தெரியவில்லை. இப்போது காங்கிரஸ் தலைமை என்ன செய்கிறது என்று தெரியாத நிலை உள்ளது. காலை எழுந்தது முதல், வீணாக பொழுது கழிகிறது. ஏதாவது உருப்படியாக செய்ய வேண்டும் என உறுப்பினர்களை சேர்க்கிறோம்.ஒன்றுமில்லாத காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியால் பிரயோஜனம் இல்லை".
இந்த வார உலக செய்தி :
அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து வெளியாகும் போர்ப்ஸ் பத்திரிகை இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டது.
இதில் ரூ.1.60 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
லண்டனில் வசித்து வந்தாலும் இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ள தொழிலதிபர் லட்சுமி மித்தல் ரூ.1.50 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் 2-ம் இடத்தில் உள்ளார்.
முகேஷ் அம்பானியின் இளைய சகோதரரும், அனில் திருபாய் அம்பானி குழுமத் தலைவருமான அனில் அம்பானி ரூ.87,500 கோடி சொத்து மதிப்புடன் 3-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
குமார் பிர்லா (ரூ.39 ஆயிரம் கோடி) 9-வது இடத்திலும், ஹெச்சிஎல் உரிமையாளர் சிவ நாடார் (ரூ.18,500 கோடி) 15-வது இடத்திலும், சன் டிவி உரிமையாளர் கலாநிதி மாறன் (ரூ.11,500 கோடி) 20-வது இடத்திலும் உள்ளனர்.
கலாநிதி மாறனின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட 2 மடங்கு அதிகரித்துள்ளது.
ரூ.5000 கோடிக்கும் அதிகமாக சொத்து மதிப்பு உள்ளவர்கள் தற்போது இந்தியாவில் 52 பேர் உள்ளனர். கடந்த ஆண்டு 27 பேர்தான் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பட்டியலில் இடம் பிடித்துள்ள 100 பேரின் சொத்து மதிப்பு ரூ.13 லட்சம் கோடியாகும். இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) நான்கில் ஒரு பங்காகும்.
இந்த பட்டியலில் "'எந்திரன்" படம் வெளியான பின்னர் சன் டிவி கலாநிதி மாறன் முதல் இடம் பெறுவார் என்று என்னிடம் சொன்னார் கோபி என்ற ஒரு பகீர்(?) சித்தர்.
-இன்பா
Posted by IdlyVadai at 11/22/2009 01:42:00 PM 26 comments
Labels: இன்பா, செய்திவிமர்சனம்
Friday, November 20, 2009
தண்டனைக்கு 12 ஆண்டுகள், நஷ்ட ஈடுக்கு 25 ஆண்டுகள்
1984, ஜூன் 7. மாலை 6 மணி. 28 வயதான அந்த கிராமத்து பெண் தன் கணவருடன் போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க சென்றார். போலீஸ் இன்ஸ்பெக்டராக அப்போது பணியாற்றியவர் மங்கள தனராஜ்.
சினிமாவில் வருவதை போல் "நீங்கள் போகலாம்; உங்கள் மனைவியை விசாரித்து விட்டு அனுப்புகிறேன்" என்று கணவரை அனுப்பிவிட்டு, இப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் அந்த இன்ஸ்பெக்டர்.
சட்டம் தன் கடமையை செய்யும் என்று நம்பி, அந்த பெண் தனராஜ் மீது புகார் கொடுத்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க புறப்பட்டார். இன்ஸ்பெக்டராக இருந்த தனராஜ், DSP யாக பதவி உயர்வு பெற்று, அந்த பெண்ணின் சட்டரீதியான ஒவ்வொரு நடவடிக்கைக்கும் தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து முட்டுக்கட்டை போட்டுள்ளார்.
மேலும் அந்த இன்ஸ்பெக்டர் அப்பெண்ணுக்கு எதிராக நீதிமன்றத்தில் ஒரு மனுவையும் தாக்கல் செய்தார். ஆனால் அவை நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு, இவரது குற்றமும் நிரூபணம் செய்யப்பட்டு (1996 இல்) 11 ஆண்டுகால சிறைவாசம் விதிக்கப்பட்டது.(திருச்சி மத்திய சிறையில் இப்பொழுது இவர் கம்பி எண்ணி வருகிறார்) அந்தபெணுக்கு ஒரு லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க தமிழக அரசும் உத்தரவிட்டது.
இந்த கிரிமினல் வழக்கு விசாரணை முடிய 12 ஆண்டுகளாகி உள்ளது.
செய்தி முடியவில்லை.
தனக்கு ஒன்பது லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் அந்தபெண் மனு தாக்கல் செய்தார். இது தொடர்பாக இந்த பெண் அரசுக்கு அனுப்பிய பல்வேறு மனுக்களுக்கு எவ்வித நடவடிக்கையும் இல்லை.
25 ஆண்டு போராட்டத்துக்கு பிறகு இந்த புதன் கிழமை தமிழக அரசாங்கம் வழங்க மறுத்த நஷ்ட ஈட்டை வட்டியுடன் வழங்க தமிழக அரசிற்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்திரவிட்டது.
இந்த கிராமத்துப் பெண் சாதாரணமாக வெற்றி பெறவில்லை. போலீஸ் அதிகாரிக்கு தண்டனை விதிக்கப்படும் வரை, 12 ஆண்டு காலம் வழக்கை இவர் நடத்தியுள்ளார். இவர் சந்திக்க நேர்ந்த சட்டச் சிக்கல்களுக்காக தனது அனைத்து உடமைகளையும் விற்றுள்ளார், இவருடைய வீட்டை உட்பட. இப்பெண் தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொள்ளாமல், சட்டத்தை தன்னுடைய கடமையைச் செய்யும்படி செய்துள்ளார் என நீதிபதி தன்னுடைய தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு தண்டனைக்கு 12 ஆண்டுகள், நஷ்ட ஈடு வாங்க 25 ஆண்டுகள்.
28 வயதில் புகார் கொடுத்து 53 வயதில் வெற்றி பெற்ற இந்த பெண்ணுக்கு ஆண்கள் தினத்தில் சலியூட் அடிப்போம்.
நவம்பர் 2 ஆம் தேதி செய்தி: காவல்துறையை பாராட்டி முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை நகலை சென்னை நகரில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பொதுமக்கள் பார்வைக்காக போலீசார் ஒட்டி வைத்து மகிழ்ந்தனர்.
Posted by IdlyVadai at 11/20/2009 01:37:00 PM 18 comments
Labels: சமுதாயம், செய்திவிமர்சனம்
தேசிய ஒருமைப்பாட்டு தின செய்திகள்
இரண்டு செய்திகள், இரண்டுக்கும் தொடர்பு இல்லை.
நேற்று தேசிய ஒருமைப்பாட்டு தினம். கோட்டையில் கருணாநிதி முன்னிலையில் உறுதிமொழி ஏற்பு "நாட்டின் சுதந்திரம், ஒருமைப்பாடு ஆகியவற்றை காக்கவும், வலுப்படுத்தவும் என்னை அர்ப்பணித்துச் செயல்படுவேன் என்று மனமார உறுதி கூறுகிறேன். நான் ஒருபோதும் வன்முறையில் ஈடுபடமாட்டேன் என்றும் மதம், மொழி, வட்டாரம் மற்றும் அரசியல் அல்லது பொருளாதார பேதங்களுக்கு அமைதியான முறையிலும், அரசியல் சட்டத்துக்கு உட்பட்டும் தீர்வு காணத் தொடர்ந்து பாடுபடுவேன் என்றும் நான் மேலும் உறுதி கூறுகிறேன்"
- என்ற உறுதிமொழியை முதல்-அமைச்சர்கள் கருணாநிதி படிக்க, மற்றவர்கள் அதை திரும்பக் கூறி உறுதிமொழி ஏற்றனர்.
( நன்றி: தினத்தந்தி )
நேற்று முரசொலியில் வந்த கட்டுரையிலிருந்து சில பகுதிகள்
இன்னொரு பக்தர் இவரை இவர் வெறும் பக்தர் மட்டுமல்ல; சாமியையும் அம்பாளை யும் அபிஷேகம் என்ற பெயரால் குளிப்பாட்டி - அலங்காரம் என்ற பேரால் துணிகளை உடுத்தி - சாமிக்கும் அம்மனுக்கும் அர்ச்சனை செய்து தீபாரா தனையும் செய்யும் குருக்களய்யா!
அம்மனைக் குளிப்பாட்டும் போது அவர் கண்ட நிர்வாணத்தினால் ஏற்பட்ட ‘பக்தி பரவசம்’ காரணமாகவோ என்னவோ - சாமி கும்பிடவரும் பக்தைகளை - பெண்களை ஆசை வார்த்தை காட்டி சாமியின் சந்நிதானத்திலேயே மன்மதலீலை கள் நடத்தி - அதையெல்லாம் தனது செல்போனில்
( நன்றி: முரசொலி )
செய்தியே மஞ்சளாக இருக்கு அதனால் நோ மஞ்சள் கமெண்ட்!
Posted by IdlyVadai at 11/20/2009 06:43:00 AM 26 comments
Labels: செய்திவிமர்சனம்
Wednesday, November 18, 2009
மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 18-11-2009
முனி இட்லிவடைக்கு எழுதும் கடிதம்...
அன்புள்ள இட்லிவடை,
சமீபத்தில் மதுரைப் பக்கம் சென்றிருந்தேன். வந்தே மாதரம் பாடலை வைத்து இந்து-முஸ்லிம் அமைப்புகளுக்கு இடையே போஸ்டர் யுத்தம் தொடங்கியுள்ளது. நம் நாட்டில் தைரியமாக இது தான் நாட்டின் கொள்கை என்று சொல்லாதவரை இது மாதிரி மத சண்டைகள் நடந்துக்கொண்டு தான் இருக்கும். இதனால் பெரிய அசம்பாவிதம் நடக்கக் கூடாது என்று காவல்துறை பாவம் கலங்கி போயிருக்கிறது. ஆனால் காவல்துறையை தன் கீழ் வைத்துள்ளவர் முரசொலியில் "வந்தே மாதரத்தை கட்டாயமாகத் திணிக்கக்கூடாது; அதை மக்களே மனமுவந்து ஏற்க அனுமதிக்க வேண்டும்" என்று அத்வானி 1998ல் அறிவித்தார்" என்று இந்த பிரச்சனையை அணையாமல் பார்த்துக்கொள்கிறார். இன்னொரு கோவை குண்டு வெடிப்பு மாதிரி ஒரு சம்பவம் தமிழ் நாட்டுக்குத் தேவையா? எல்லோருக்கும் தெய்வ பக்தியும் இருக்கணும், தேச பக்தியும் இருக்கணும். அதை உணர்த்துவது மாதிரி பெரியவர்கள் பேச வேண்டும். அரசியல் தலைவர்களிடம் அதை எதிர்பார்க்க முடியாது. "நான் ஒரு மராட்டியன் என்பதில் பெருமை அடைகிறேன். ஆனால், முதலில் நான் ஒரு இந்தியன்" என்று சச்சின் மாதிரி தைரியமா எப்போது நம் தலைவர்கள் கற்றுக்கொள்ள போகிறார்கள்? சச்சின் 100 அடித்து இந்தியா வெற்றி பெறுகிறதோ இல்லையோ, நிச்சயமாக இந்தப் பேச்சில் வெற்றி பெற்றுவிட்டார்.மராத்தியோ ஹிந்தியோ எல்லாம் நல்ல மொழி தான் என்ற உணர்வு நமக்கு வேண்டும். தமிழக அரசியல்வாதிகள் ஹிந்திக்கு தார் அடித்த பலனை நாம் இன்றும் அனுபவித்துக்கொண்டு தான் இருக்கோம். ஹிந்தியோ தமிழோ இசைக்கு மொழி கிடையாது என்பதை மீண்டும் நிருபித்துள்ளார் இளையராஜா. கும் சும் கும் என்ற காப்பி சாயலில் ( காப்பி அடித்த அல்ல) இருக்கும் பாடலை மீண்டும் பா(paa) படத்தில் உபயோகித்துள்ளார். பவதாரினி மற்றும் அருமையான கோரஸ் கொண்டு பாடப்பட்ட பாடலுக்கு மொழி கிடையாது என்பதை உணர்த்துகிறது. அதே போல பக்திக்கு மதம் கிடையாது. தெய்வ பக்திக்கும் தேச பக்திக்கும் சின்ன வித்தியாசம் இருக்கு. தெய்வ பக்தி தாயின் படத்தைத் தரிசிப்பது மாதிரி, தாயையே தரிசிப்பது போன்றது தேச பக்தி. (இங்கே "அம்மா" வாசனை வருதே என்று நினைப்பவர்கள் "தந்தை" என்று மாற்றிப் படித்துக்கொள்ளுங்கள்). இதை எல்லோரும் உணர்ந்தால் நாட்டுக்கு நல்லது. இல்லை என்றால் ஓபாமா மாதிரி ஆட்கள் நாட்டாமை செய்வதை நாம் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும்.
நேற்றுவரை இந்தியா பாகிஸ்தான் இடையேயுள்ள காஷ்மீர் பிரச்சனை, உள்நாட்டுப் பிரச்சனை, இதில் அமெரிக்கா தலையிடாது என்று கூறி வந்த அமெரிக்கா திடீர் என்று நேற்று இந்தியா பாகிஸ்தான் இடையேயுள்ள உறவைக் கண்காணிப்பதற்கு சீனாவை நியமிக்கிறது. மன்மோகன் சிங் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். ஒபாமாவிற்கு யார் அதிகாரம் அளித்தது? தவிர இந்தியாவின் வெளியுறவு விவகாரங்களில் கட்டபஞ்சாயத்து வேலை செய்வதற்கு சீனாவிற்கு என்ன அதிகாரம் இருக்கிறது?? அநேகமாக இந்தியாவில் உள்ள அறிவு ஜீவிகளான கம்யூனிஸ்டுகள் அமெரிக்காவின் இம்முடிவை வரவேற்று இன்றோ அல்லது நாளையோ அறிக்கை வெளியிடுவர். அமெரிக்காவுடன் அவர்கள் ஒத்துப் போகும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக இது அமையலாம். இந்த கூட்டறிக்கைக்கு வழக்கம் போல் நம் முதுகெலும்பற்ற இந்திய அரசு மெளனம் காக்கிறது. எதிர்க்கட்சிகள் (கம்யூனிஸ்டுகள் தவிர) யாரேனும் இப்பிரச்சனையைக் கிளப்பினால் அதிகபட்சமாக கண்டனம் தெரிவிக்கப்படும். நீ என்ன நினைக்கிற இதப் பத்தி?
அட, முதலில் அருணாச்சலத்தின் பிரச்சனையை தீர்க்க முடியுமா என்று பார்க்கட்டும் அமெரிக்கா. சென்ற ஆண்டு அருணாச்சலைச் சேர்ந்த IAS அதிகாரிகள் சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள விசா தேவையில்லை என சீனா அறிவித்தது. அருணாச்சலத்தை சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அறிவித்து சீனா அறிக்கை விடுகிறது. அருணாச்சலத்திற்கு இந்திய அரசாங்கப் பிரதிநிதிகள் மற்றும் மன்மோகன் சிங் வருவதற்கு கண்டனம் தெரிவித்தது. காஷ்மீரத்தை தனிநாடாக பாவித்து, காஷ்மீரைச் சேர்ந்தவர்களுக்கு, இந்திய பாஸ்போர்ட்டில் அல்லாமல் தனியாக விசா வழங்க வேண்டும் என்று ஐடியா கொடுக்கிறது. அதை விடுங்க. காஷ்மீரிலிருந்து சீனாவிற்கு வியாபார நிமித்தமாக வருவோருக்கு சீனா இந்திய பாஸ்போர்ட்டிலல்லாமல், தனியானதோரு தாளில் விசா முத்திரையிட்டு வழங்கிவருகிறது.
இதுல ரொம்ப வேடிக்கை என்னன்னா இதுமாதிரி சீனா ரெண்டு வருஷமா பண்ணுதாம். நமக்கு போன மாசம்தான் தெரியும். ஐ மீன் இந்திய அரசுக்கு. அந்த அளவுக்கு இருக்கு நம்மை ஆளும் அரசு. நம்ம அலட்சியமா இருக்கோம். சீனாவின் திபெத் ஆக்கிரமிப்பு அதற்கு அவர்கள் வெளியிட்ட வரைபடம், இப்படி பல விஷய்ங்கள் இருக்கு. ஆனால் இது எல்லாம் ஓபாமா காதில் விழாமல் நோபல் பரிசு என்ற செய்தி மட்டும் தான் அவர் காதில் விழும் போலிருக்கு. நம்ம அரசாங்கத்துக்கு மூளை சைஸ் Zero!
பேசாம சோனி அறிமுகப்படுத்தியுள்ள சோனி எக்ஸ் (Sony X) லேப்டாப்புக்கு ஹிந்தி நடிகை கரீனா கபூரை தேர்ந்தெடுத்தற்கு பதிலா இந்திய அரசைத் தேர்தெடுத்திருக்கலாம். தன்னுடைய கச்சிதமான உருவத்திற்கு தகுந்த படி கரீனா கபூரை தேர்தெடுத்திருக்கிறது சோனி. எனக்கு ஒரு டவுட் இந்த மடி கணிணியை ஆண்கள் விரும்பி வாங்குவார்களா அல்லது பெண்கள் விரும்பி வாங்குவார்களா ? அடுத்த டவுட். Zero Sizeக்கு பிராண்ட் அம்பாசிடராக இருக்கும் கரீனா கபூர், Zero Degree புத்தகத்துக்கும் இருப்பாரா ?குர்பான் படத்தில் நான் முதுகு தெரிய நடித்திருப்பது சிவசேனா தொண்டர்களை டென்ஷன் (?) படுத்தியுள்ளது. உடனே படத்தின் சுவரொட்டிகளை கிழித்து போராட்டம் நடத்தியுள்ளார்கள். ஆனால் கரீனா இதற்கு எல்லாம் அசரவில்லை இதில என்ன ஆபாசம் இருக்கிறது? இது டாப்லெஸ் இல்லை. மாறாக பேக்லெஸ் என்கிறார். கரீனாவின் வீட்டுக்கு நேரில் சென்று அவருக்கு ஒரு புடவையை அன்பளிப்பாக தரப்போவதாக சிவசேனா நிர்வாகி அறிவித்து இருக்கிறார். அவங்க கிட்ட கூடவே மறக்காமல் மேட்சிங் ஜாக்கெட் எடுத்துட்டுப் போகச்சொல்லி யாராவது சொன்னாத் தேவலை.
பெண்களுக்கு இந்திய அரசும் எதிர்கட்சிகளும் எவ்வளவு செய்கிறது. ஆனால் குமுதம் அரசு பதில்களில் போன வாரம் இதை படித்தேன்.
ஒரு ஊர்வலம். இரண்டு சவப்பெட்டிகள். அதன் பின்னால் ஒரு நாய். அதன் பின்னால் ஒரு மனிதன். அவர்களுக்குப் பின்னால் வரிசையாக நூற்றுக்கணக்கான ஆண்கள்.
இந்த ஊர்வலத்தைப் பார்க்க விசித்திரமாய் இருக்க, முதலாவது போய்க் கொண்டிருந்த மனிதனிடம் என்னவென்று விசாரித்தான் ஒருவன். அதற்கு அவன், `முதல் சவப்பெட்டியில் இருப்பது என் மனைவி. இரண்டாவதில் என் மாமியார்.அவர்களுக்கான ஊர்வலம் இது' என்றான்.`ஐய்யய்யோ!அப்படியா! இந்த நாய்?' என்று நாயை சுட்டிக்காட்டினான் வந்தவன்.
`ஓ, அதுவா? இந்த நாய்தான் என் மனைவியையும் அவளுடைய அம்மாவையும் ஒரே கடியில் கொன்றது'
வந்தவன் சற்று யோசித்தான். `அந்த நாய் எனக்குக் கிடைக்குமா?'
`உனக்கும் வேணுமா, அப்போ பின்னாடி வர க்யூவுல போய் நில்லு' என்றான் மனைவியை பறிகொடுத்தவன்.
கூடிய சீக்கிரம் இந்த மாதிரி நாய் ஜோக்குக்கு மேனகா காந்தி கண்டனம் தெரிவிப்பார் என்று நினைக்கிறேன். ஒரிசா கால்நடை கல்லூரி விழாவில் நாய் முன்னங்கால்களை தூக்க செய்து நடக்க வைத்துள்ளனர். உடனே "இது மிருகவதைக்கு ஒப்பாகும்' என கூறி இதற்கு அனுமதியளித்த பல்கலைகழகத்துக்கு மேனகா கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே முதல்முறையாக, தமிழக தீயணைப்புத் துறையில் மோப்ப நாய்கள் அடங்கிய மீட்புப் படைப் பிரிவு துவக்கப்பட்டுள்ளது. இந்த நாய்களும், போலீஸ் நாய்களும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், இல்லை மேனகா காந்தி இதற்கு கண்டனம் தெரிவிப்பார். இந்த மோப்ப நாய்கள் வைத்து ஸ்பெக்ட்ரம் ஊழல் கண்டுபிடிக்க முடியுமா என்பது என் அடுத்த டவுட். இந்த கடிதம் பூரா எனக்கு ஒரே டவுட்டு டவுட்டா வருது.
முல்லைப் பெரியாறு அணை பற்றி தினமும் ஜெயலலிதா அல்லது விஜயகாந்த் ஏதாவது அறிக்கை விட்டுக் கொண்டு இருக்க, முரசொலியும் சளைக்காமல் எந்த பத்திரிக்கை "சளைக்காமல்" திமுக பற்றி நல்ல விதமாக எழுதியிருக்கிறார்கள் என்று எடுத்து போடுகிறது. தமிழ் நாட்டுக்கு எல்லா அண்டை மாநிலத்திலும் தண்ணீரால் பிரச்சனை தான். கேரளா பகை, ஆந்திராவும் அணை கட்டுவதில் தகராறு. கர்நாடகாவில் கேட்கவே வேண்டாம், காவிரி பிரச்சனை. பிரச்சனை இல்லாத ஒரே மாநிலம் புதுச்சேரி அங்கே நமக்கு கிடைப்பது வேற மாதிரி 'தண்ணீ'".
தமிழகத்துக்கு தண்ணீர் என்றாலே தலைவலி என்று ஆகிவிட்டது. பாஜக விற்கு எப்போதும் புதுத் தலைவலி வந்துக்கொண்டே இருக்கிறது. உமா பாரதி மற்றும் கல்யாண் சிங் ஆகிய இருவரும் தாய் கழகம் திரும்புகின்றனர். கல்யாண் சிங் இதற்கு முன் எவ்வளவு கட்சி மாறியிருக்கார் என்று அவருக்கே தெரியாதாம். உமா பாரதி பற்றி கேட்கவே வேண்டாம். ஒருவேளை இவர்கள் வருகிறார்கள் என்று தெரிந்து தான் திருநாவுக்கரசர் காங்கிரஸுக்கு ஓடி போய்ட்டாரா?
இந்தியா எங்கள் நாடு அப்படி இப்படி என்று உதார் விடும் பி.ஜே.பி ரெட்டி சகோதரர்கள் தங்கள் தொழில் வசதிக்காக கர்நாடகாவை பணயம் வைத்து பி.ஜே.பியை தோற்கடித்துள்ளார்கள். இவர்கள் இந்திய நாடு தேசிய ஒருமைபாடு என்ற ஜல்லி எல்லாம் இனிமே அடிக்க கூடாது. என்ன நான் சொல்லுவது?
உலகிலேயே அதிவேக, மற்றும் அதி நவீனமாக சுகோய் விமானத்தில் பயணம் செய்யப் போகும் முதல் பெண் ஜனாதிபதியாகப் போகிறார் இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல். இது கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெறப் போகிறதாம். இதை சீஃப் ஏர் மார்ஷல் பெருமையாக சொல்லியுள்ளார். இப்பயணம் முப்பது நிமிடங்கள் நீடிக்குமெனவும், அதற்கான முழு உடல்தகுதியுடன் ஜனாதிபதி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். நல்ல தில் உள்ள ஜனாதிபதி தான்!ஆனால் பாரு, இந்த விஜய் டிவிக்கு என்ன தில் இருக்க வேண்டும் தாலி பற்றி விவாதம் நடத்த? பலர் டிவியில் அந்த நிகழ்ச்சியைப் பார்க்கவில்லையாம். தமிழ் ஹிந்து சைட்டில் வந்த பிறகு தான் அதை பலர் தேடிப் பார்த்துள்ளார்கள். அந்த விதத்தில் தமிழ் ஹிந்து சைட்டுக்கு விஜய் டிவி கடமை பட்டிருக்கிறது. விஜய் டிவி மீது ஆர்.சுப்ரமணியம் வழக்கு தொடர்ந்துள்ளார். கல்கியில் ஒரு பெண்மணி லாஜிக்கா ஒரு கேள்வி கேட்டிருக்கார் - சட்டசபையில் அமைச்சர் உறுதி மொழி எடுத்துக்கிறதை கிண்டலடிக்கிற மாதிரி ஒரு மத அடையாளத்தை எப்படி கிண்டலடிக்கலாம் என்று. இதற்கு கோபிநாத் என்ன பதில் சொல்லுவார்? அவருக்கு இதெல்லாம் கவலையே இல்லை. இதே மாதிரி இன்னும் ஒரு நிகழ்ச்சி நடத்தி ஒரு செட் மக்களை வைத்து அடுத்த பக்க மக்களக்கு லட்சோபலட்சம் விஜய் டிவி வாசகர்கள் பார்க்க சாபம் குடுக்க சொல்லி ரசித்தார். டீவில மூஞ்சி வந்தா என்ன எழவப் பேசறோம் என்ற நினைப்பே இல்லாமல் ஆட்டு மந்தை மாதிரி பேசும் ஆட்கள் இருக்கும் வரை கோபிநாத் மாதிரி "அதி புத்திசாலிகள்" காட்டில் நல்ல மழை அடித்துப் பெய்யும். என்ன சரிதானே?
சென்னையில் திரும்ப மழை ஆரம்பித்திருக்கிறது. பேப்பரில் சென்னையில் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு என்று போட்டிருக்கிறார்கள். எனக்கு என்னவோ பாதிப்பே இயல்பாகிவிட்ட பிறகு பாதிப்பே இல்லாமல் இருந்தால் தான் இயல்பு வாழ்க்கை பாதிப்பு என்று நீயூஸ் போடணும்
இப்படிக்கு,
எப்பவும் போல இயல்பாய் இருக்கும் முனி
கடைசியாக இந்த லெட்டர் எழுதும் போது கிடைத்த தகவல்.
அடுத்த படத்தின் ஸ்கிரிப்டுடன் ரெடியாக வருகிறாராம் அச்சமுண்டு அச்சமுண்டு அருண். ஆனால், அது தமிழில் இருக்காது என்று சொல்கிறது ஒரு பட்சி ;). அருணிடம் உங்களுக்கு நிஜமாகவே பயமா இல்லையா என்று கேட்டதற்கு, எனக்கு தமிழ் படம் என்றால் தான் பயம் என்றார். ஏன் என்றதற்கு படம் வந்து இரண்டு வாரங்களில் அவர் அலுவலக வாசலிலேயே 30 ரூபாய்க்கு அச்சமுண்டு அச்சமுண்டு டிவிடியை அச்சமில்லை அச்சமில்லை என்று விற்றார்களாம்.
Posted by IdlyVadai at 11/18/2009 07:30:00 PM 36 comments
Labels: பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம்
கனகவேலை காக்க வந்த குங்கும பொட்டு காரன்
கனகவேல் காக்க திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று (கிழக்கு மொட்டை மாடியில் இடம் கிடைக்காததால்), சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் அலுவலகத்தில் எளிமையாக நடைபெற்றது. ( காராபூந்தி, காபி தான் )
கமல், ஆடியோவை வெளியிட்டார். டிரெய்லர் பார்த்துவிட்டு படத்தைப் பார்க்கத் தூண்டுவதாகச் சொன்னார் (துண்டு துண்டாக பார்த்தால் அப்படி தான் இருக்கும் )இயக்குநரை மிகவும் பாராட்டினார். (காபி நன்றாக இருந்திருக்கும்)
படம் டிசம்பரில் வெளியாகிறது. மக்களே ஜாக்கிரதை. பாடல்களை வெளியிட்ட கமலுக்கு 50 பொருட்கள் அடங்கிய பரிசை அளித்தாராம் கரண். அந்த 50 பொருட்களில் ஒன்று ‘கனகவேல் காக்க’ பாடல் கேசட்டாம்.
படத்தில் பொட்டு வைத்துக்கொண்டு இருப்பவர் இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று டிவிட்டரில் சொல்லுவார். ஏன் நிக்கில் முருகன் கமல் நிற்கும் போது பக்கத்தில் இல்லை ?
Posted by IdlyVadai at 11/18/2009 02:15:00 AM 9 comments
Monday, November 16, 2009
பகீர் சித்தர்
நண்பர் அமுதப்ரியன் சில வாரங்களுக்கு முன் திருவண்ணா மலை சென்ற போது ஒரு மனிதரை அவர் சந்தித்திருக்கிறார். அவரை பற்றி இட்லிவடைக்கு எழுதியும் அனுப்பினார். அந்த மனிதரின் போட்டோ கிடைத்தால் நல்லா இருக்கும் என்றேன். உடனே அவர் போன வாரம் திரும்பவும் திருவண்ணாமலைக்கு சென்று அந்த மனிதரை தேடியிருக்கிறார். கிடைக்கவில்லை. இந்த மாதிரி சித்தர்களை கண்டுபிடிக்கும் திறமை உள்ளவர்களான 'விஜய் டிவி நடந்தது என்ன' குழுவிடம் சொல்லியிருக்கோம். நிச்சயம் படம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
2012 என்ன என்ன நடக்கும் என்பதை விரிவாக விளக்கியுள்ள பதிவு...
அனைவருக்கும் வணக்கம்.
கடந்த மாதக் கடைசியில் திருவண்ணாமலை சென்றிருந்தேன். அது ஒரு பௌர்ணமி இல்லாத, பிரதோஷம் இல்லாத நாள். கிரிவலம் செல்லும் வழியில் மலையின் நேர் பின்னால் மேற்கு திசையில் வாயு லிங்கம் அருகில் ஒரு மனிதரை (அவருடன் சில சீடர்கள்) சந்திக்க நேர்ந்தது. அவருக்கு வயது கூடிப்போனால் 32 முதல் 35 வயது வரை இருக்கும். ஆனால் அவருடைய சீடர்கள்(அவருடன் இருந்தவர்கள்) அவருக்கு வயது 5000 என்றனர். அவருக்கு அஷ்டமாசித்திகளும் தெரியும் என்றனர். அவருடன் நடந்த ஒரு கலந்துரையாடலை இட்லிவடை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள கொடுக்கிறேன். “பாரடா வான்மதியிலே பார்தான் பாதியாகிடுமே” என்று ஒரு பாடலை எடுத்து விட்டு அதற்கு அர்த்தம் சொல்ல ஆரம்பித்தார். எனது இதயம் பகீர் என்றது.
அவர் சொன்ன பகீர் தகவல்களில் சில:
[1] 2012 உலகம் அழிவு ஆரம்பம்.
[2] கழுகு தற்போது 40 முட்டைகள் இடுகின்றனவாம், கழுகுகள் அதிகரித்தால் மனிதனைக் கொல்லுமாம்.(இதை ஆராய்ச்சியாளர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்றார்)
[3] கிலோ அரிசி 1000ரூபாயைத் தொடுமாம்.
[4] 1பவுன் தங்கம் 50000ரூபாயைத் தொடுமாம்.
[5] ஐரோப்பிய கண்டத்தில் இந்தியாவிற்கு கண்டம் கொடுக்க ஒருவன் உதித்து விட்டானாம். அவனுடைய ஆட்கள் இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்கள், நகரங்கள் அனைத்திலும் ஊடுருவி உள்ளார்களாம். அனைத்து மக்களுடைய அங்க அடையாளங்கள் ஆவனங்கள் அவனிடத்தில் உள்ளதாம்.
[6] 2012ல் இந்தியாவை வெற்றி கொள்வானாம்.
[7] இந்தியாவில் இருக்கும் அனைத்து CALLCENTER களையும் அந்த ஐரோப்பிய மனிதன் வாங்கிவிட்டான்.
[8] உலகத்தின் மொத்த மக்கள் தொகை 100கோடியாகி விடும்.
[9] மின்சார உற்பத்தி முழுமையாக பாதிக்கப்படும். பின் மின்சாரமே இல்லாமல் போகும்.
[10] சூரியனிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படும். சூரியன் ஒளி பாதியாக குறையும்.
[11] 30கோடி பேர்தான் இந்தியாவில் இருப்பார்களாம்.
[12] ஒரே நேரத்தில் சூரியனும் சந்திரனும் தெரியும்.
[13] மக்கள் சாப்பாட்டிற்காக ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வார்கள்.
[14] இந்தியாவில் இப்போதிருக்கும் அரசியல் அமைப்பு மாறும்.
[15] இந்தியாவில் அதிபர் தேர்தல் நடக்கும்.
[16] இப்போதிருக்கும் பல நகரங்கள் இந்தியாவில் மூழ்கிப் போகும்.
[17] கடலுக்குள் இருக்கும் நகரங்கள் பல வெளிவரும்.
[18] புதிய புதிய விலங்குகள் உருவாகும்.
[19] புதிது புதிதாக நோய்கள் பிறக்கும்.
[20] உலகமெங்கும் வறட்சியின் பிடியில் இருக்கும்.
என்று நீண்டு கொண்டே செல்கிறது அவரது வாக்கு.
சரி எப்போது இதுவெல்லாம் சரியாகும் என்றேன். 2016ல் முழு உலகம் அழிந்து பின் 2019ல் புது உலகம் பிறக்கும் என்றார் புன்முறுவல் பூத்தபடி. மேலும் உண்மையான ஜோதிடர்களுக்கு இந்த விஷயம் கொஞ்சம் கொஞ்சம் தெரியும் என்றார். (ஐயா ஜோதிடர் ராமகிருஷ்ணன் அவர்களே பதில் தெரியுமா)
இட்லிவடையும் அதன் வாசகர்களும் என்ன நினைக்கிறீர்கள்...
- அமுதப்ரியன்
அடுத்த முறை பார்க்கும் போது இட்லிவடை என்ன ஆகும் என்று கேட்டு சொல்லுங்க :-)
Posted by IdlyVadai at 11/16/2009 02:30:00 PM 49 comments
Labels: அனுபவம், நகைச்சுவை, விருந்தினர்