பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, October 08, 2009

இயற்பியல், உயிரியல், வேதியியல் - No அரசியல்.


ஓபாமா வீட்டில் வேலை செய்பவர் அல்லது அவர் வீட்டு நாயை கக்கா போக கூட்டிகிட்டு போவது தமிழர், இந்தியர் என்றாலே உடனே அதை பெரிய நியூஸாக போட ஆரம்பித்துவிடுவார்கள். அப்படி இருக்க நம்ம ஊர்க்காரர் நோபல் பரிசு வாங்கினால் சும்மா இருப்பார்களா ?

தமிழ்ச் சமுதாயமே மிகவும் பெருமையடைகிறது என்று கலைஞர் தொடங்கி அவர் வீட்டுக்கு பக்கத்தில் வசிப்பவர் முதல் இன்று பேசிவிட்டார்கள். பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

நம்ம ஊர் மக்களுக்கு ஒரு நல்ல குணம், வெளிநாட்டு வாழ் இந்தியர் யாராவது பரிசு வாங்கினால் உடனே அவருடைய குலம்,கோத்திரம் எல்லாம் பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். அது மாதிரி "எங்க தெரு பெட்டிக்கடையில் இவர் கடலைமிட்டாய் வாங்கி சாப்பிட்டார்" போன்ற செய்திகளை மாங்கு மாங்கு என்று முதல் பக்கத்தில் அடித்து தள்ளிவிடுவார்கள்.

எதுக்கு அவர் விருது வாங்கினார் என்று கேட்டால் அந்தத் "திரு"க்கள் "திருதிரு" என்று முழிப்பார்கள். அல்லது அந்த தகவல்கள் எல்லாம் எதற்கு நமக்கு எதற்கு என்று கேட்டவரை கேவலமாக பார்ப்பார்கள். அவர் தமிழர், தமிழக விஞ்ஞானி அது போறும் நமக்கு.

அடுத்த வார பத்திரிக்கை அட்டை படத்தில் அவர் ஸ்கூல் வாத்தியார், அவர் பக்கத்து வீட்டுக்காரர்கள், அவருடன் ரயில் பயணம் செய்தவர்கள் என்று கவர் ஸ்டோரி இந்நேரம் ரெடியாகிகொண்டு இருக்கும். இவர் தினமும் 'கந்த சஷ்டி கவசம் ' சொல்லுபவர் என்றால் மேலும் சில 'பக்தி' பத்திரிகைகள் மற்றும் சில 'பக்தி' வலைத்தலங்கள் இவர் புகழ்பாடி தங்கள் பக்தியை காண்பித்து கொள்வார்கள். ( தற்போது வரும் 'புதிய தலைமுறை' மட்டும் நல்ல கட்டுரை எழுதும் என்று நம்பிக்கொண்டு இருக்கிறேன், மாலன் இதை படிப்பாரா ? )

ரொம்ப ஓவராக சொல்லாதீங்க. தமிழர் அவ்வளவு மோசம் இல்லை என்று சொல்லுபவர்களுக்கு ஒரு சின்ன டெஸ்ட் சி.எஸ்.சேஷாத்ரி என்பவர் யார் என்று கூகிள் தேடாமல் உங்க மண்டைக்கு தெரிந்தால் தொடர்ந்து படிக்கவும். தெரியாதவர்கள் தெரிந்துக்கொண்டு படிக்கவும்

ஆறு மாதங்களுக்கு முன் சி.எஸ்.சேஷாத்ரி என்பவருக்கு பத்ம விருது வழங்கினர். கணித மேதை ராமானுஜத்துக்குப் பிறகு ராயல் சொசைட்டியில் இவர் பெயர் தான் இருக்கிறது என்று எவ்வளவு பேருக்கு தெரியும் ? இவர் பிரபலமாக வேண்டும் என்றால் ஏதாவது ஆங்கில சேனல் முன் அழ வேண்டும் அல்லது விவேக் மாதிரி காமெடி செய்ய வேண்டும். அது தானே பெருமை !

சரி ராமகிருஷ்ணன் என்ன செய்தார் ஏன் வேதியியல் துறைக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கிறது ?

ராமகிருஷ்ணனுக்கு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது. நோய் எதிர்ப்பு மருந்து தயாரிப்பதற்கு தேவையான வேதியியல் கண்டுபிடிப்புக்காக விஞ்ஞானி ராமகிருஷ்ணன், அமெரிக்காவைச் சேர்ந்த தாமஸ் ஸ்டெயிட்ஸ், இஸ்ரேலைச் சேர்ந்த அடாமுயானாத் ஆகியோர் நோபல் பரிசை பகிர்ந்து கொண்டு உள்ளனர்.

மரபணுக்களில் உள்ள தகவல்கள் மூலம் புரதங்களை(protiens) எவ்வாறு உருவாக்குவது என்பதை கண்டறிந்துள்ளார். இந்த கண்டுபிடிப்பு பல நோய் எதிர்ப்பு மருந்துகளை தயாரிக்க உதவும்.

கீழே உள்ளது தமிழ் தான் இருந்தாலும் நீங்க தமிழர் என்று தலை நிமிர்ந்து இருக்க வேண்டும் என்றால் இதை கொஞ்சம் புரிந்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.

ரைபோசோம்கள் என்பன நிலைக்கருவுள்ள எல்லா உயிரணுக்களின் உள்ளும் காணப்படும் ஆர்.என்.ஏ இழை, புரதம் முதலிவற்றுள் ஒரு நுணுக்கம்மிக்க பகுதி. டி.என்.ஏ இழைத்தொடரின் குறியீடுகளைக்கொண்டு குறிப்பிட்ட புரதங்களை உருவாக்கப் பயன்படும் அமைப்பாகும் இந்த ரைபோசோம்கள். புரதம் உருவாக்கும் ரைபோசோம்களில் 50 க்கும் மேலான வெவ்வேறு வகைப் புரதங்களும் ரைபோச்சோமிய ஆர்.என்.ஏ-க்களும் இருக்கும். ரைபோசோமில் உள்ள புரதங்களை ரைபோசோமியப் புரதங்கள் (ribosomal proteins) என்பர். Dr. ராமகிருஷ்ணனும் அவரது சக ஆராய்ச்சியாளர்களும் ஒன்பது வருடங்களுக்கு முன்பு மிகவும் மதிப்பு வாய்ந்த "Nature" என்றஆராய்ச்சி பத்திரிகையில் மூன்று கட்டுரைகளை பிரசுரித்தனர். இவை ரைபோசோம்கள் (செல்களுக்குள் புரதம் உற்பத்தியாவதைப்) பற்றி X-Ray crystallography என்ற technique மூலமாக விரிவாக ஆராய்ச்சி செய்து வெளியிடப்பட்டவை ஆகும். இந்த ஆராய்ச்சியின் மூலம் கிடைத்த நல்ல அனுபவங்களின் மூலம் புதியவகை நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் (antibiotics) உருவாக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அப்பா! படித்து முடித்துவிட்டீர்களா? புரியவில்லை என்றால் இன்னொரு முறை படித்து பாருங்க, தப்பில்ல. எவ்வளவு நாளைக்கு தான் இட்லிவடையில் தண்ட நீயூஸ் மட்டுமே படிப்பீங்க?

ராமகிருஷ்ணனுக்கு இரண்டு வயதாக இருந்த போது இவர் குடும்பம் குஜராத்துக்கு குடிபெயர்ந்துள்ளது.. அங்கே 'Jesus and Mary' என்ற பள்ளியில் மட்டும் தான் ஆங்கில மீடியம் இருந்திருக்கிறது. ஆனால் அது பெண்கள் படிக்கும் பள்ளி. இவர் அதில் சேர்ந்து படித்து என்று இந்த நிலைமைக்கு வந்திருக்கிறார். இதை ஏன் சொல்லுகிறேன் என்றால் எது முக்கியம் என்று தமிழர்களுக்கு தெரிவதில்லை. சினிமா, மதம், மொழி எல்லாம் நமக்கு வெறியாகிவிட்டது தான் காரணம். சும்மா தமிழ் தமிழ்நாடு என்று கூவாமல் எது செய்தால் தமிழருக்கு பெருமை என்று எண்ணி பார்க்க வேண்டும்.

ரொனால்ட் ராஸ் இந்தியாவில், அல்மொராவில் பிறந்து, இங்கிலாந்தில் படித்து ஊட்டியில் சில காலம் டாக்டராக இருந்த போது இவருக்கு ஊட்டி கொசு கடித்து மலேரியா வந்துவிட்டது. பிறகு இவர் சில குறிப்பிட்ட கொசுக்களால் மலேரியா வந்தது என்று கண்டுப்பிடித்தார். அதற்க்காக அவருக்கு 1902 ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபெல் பரிசு வழங்கப்பட்டது. உடனே நம்ம மக்கள் பாருங்க தமிழ்நாட்டு கொசு கடித்ததால் தான் இவருக்கு நோபல் பரிசு என்று குதிப்பார்கள். ஊட்டி கொசுக்கே நோபல் என்றால் கூவம் கொசுவிற்கு எவ்வளவு நோபல் வரும் என்று யாராவது சிந்திப்பார்களா ? சிந்தித்தால் எல்லா விஞ்ஞானிகளும் கூவத்துக்கு படை எடுத்துவந்து தங்குவார்கள். அப்பறம் அடுத்த ஒரு நூற்றாண்டுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசை குத்தகைக்கு எடுத்துவிடலாம்.


"இந்திய அரசு அடிப்படை அறிவியல் துறைகளில் ஆராய்ச்சிகளுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும். அதன் மூலம் சுகாதாரம், தொழில் நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புகள் சாத்தியமாகும்." என்று நேற்று நோபல் பரிசு பெற்ற ராமகிருஷ்ணன் சொல்லியுள்ளார். அதாவது அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் சிறந்த ஆய்வுக்கூடங்களின் உதவியுடன் நான் இந்த உயிரணு ஆராச்சியை செய்ய முடிந்தது. இந்தியாவில் ஆய்வுக்கூடங்கள் இன்னும் நிறைய வளரவேண்டும் என்பது தான். உடனே இந்தியாவிற்கே பெருமை என்று பிரதமர், ஜனாதிபதி போன்றவர்கள் நாளை பாராளுமன்றத்தில் பேசுவார்கள். அட, இதில் பெருமை பட என்ன இருக்கிறது? நம் ஆராய்ச்சி நிலையங்கள் இன்னும் அதிக வசதியுடன் இருக்க வேண்டும் என்பதை பேசும் முன் புரிந்துக்கொள்வார்களா ? கொள்ளை அடிக்கும் பணத்தில் எல்லா கட்சிகளும் 10% ஆராய்ச்சிக்கு செலவு செய்தால் கூட இன்னும் எவ்வளவோ நோபல் பரிசு கிடைத்திருக்கும்.

இன்றைய ஒரே ஆறுதல் "ரஜினி கலைஞருக்கு நன்றி தெரிவித்தார்" என்ற செய்தியை ஹெட்லைன்ஸ் நியூஸ் ஆக்காமல் தமிழருக்கு விருது என்ற நியூஸ் போட்டார்கள். ரொம்ப சந்தோஷம்.

பிகு: தமிழக முதல்வர் கருணாநிதியின் எழுத்துக்களை ஆங்கிலப்படுத்தி, அவற்றை நோபல் கமிட்டியின் பரிந்துரைக்காக அனுப்ப 12-பேர் அடங்கிய ஒரு குழு உருவாக்கப்பட்டுள்ளது. பயப்படாதீங்க, இது போன வருட செய்தி. ஆனா திரும்ப படிக்கும் போது வயித்த கலக்குது, ராமகிருஷ்ணனிடம் சொல்லி சீக்கிரம் எதாவது மருந்து கண்டுபிடிக்க சொல்ல வேண்டும். நம்ம கவலை நமக்கு!


திரு ராமகிருஷ்ணன் மெயில் முகவரி [ deleted ] முடிந்தால் இரண்டு வரி எழுதி அனுப்புங்க.
நன்றி.

33 Comments:

Sethu Raman said...

நோபல் பரிசு "உளியின் ஓசை"க்கா
அல்லது தமிழ் நாட்டிலும், இந்தியாவிலும் ஏன் உலகெங்குமே அமைதியை நிலை நாட்ட ஆயிரக்கணக்கில் கடிதங்கள்
எழுதியதற்கா? அது பார்த்தீங்களா, நோபல் பரிசு பெற்ற தமிழ் நாட்டவர் இருவர் பெயரிலும் ஒரு
'வெங்கட ராமன்' இருக்கிறதை!!

VENG said...

I felt like as it it is Sujatha's article. Keep doing....!

Balu said...

ஆஸ்கர் விருதும் நீங்கள் சொல்வதற்கு விதிவிலக்கு அல்ல.

யதிராஜ சம்பத் குமார் said...

நோபல் பரிசு பெற்ற ராமகிருஷ்ணன் வெங்கட்ராமன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!


ஒரு வெளிநாட்டு வாழ் இந்தியர் நோபல் பரிசு பெற்றது இந்தியாவிற்கு பெருமையளிக்கக் கூடிய விஷயம்தான். கட்டுரையில் குறிப்பிட்டுள்ளபடி அநேகமாக அனைத்து தொலைக்காட்சி சானல்களுமே ராமகிருஷ்ணன் வெங்கட்ராமனது பூர்வோத்திரத்தை குடைய ஆரம்பித்துவிட்டன. நான் பார்த்தவரையில் அநேகமாக கலைஞர் டிவிக்குதான் முதலிடம். ஏதோ ஒரு அக்ரஹாரம் என்று குறிப்பிட்டார்கள், சரியாக நினைவில்லை. ஏதோவொரு அக்ரஹாரத்தில் பிறந்த, தமிழினத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் வெங்கட்ராமன் என குறிப்பிட்டனர். அக்ரஹாரத்தில் பிறந்தவர்கள் என்று முதல் தமிழினத்தில் சேர்க்கப்பட்டனர் என்று தெரியவில்லை. பகுத்தறிவாளர்களின் பரிபாஷையில் வழக்கமாக இவர்களை ஆரிய கைக்கூலிகள் என்றுதான் அழைப்பது வழக்கம். நோபல் பரிசு பெற்றதால் ராமகிருஷ்ணன் தமிழினத்தில் ஒருவராகி விட்டார். எனினும் ராமகிருஷ்ணனுக்கு எமது நன்றிகள் உரித்தாகட்டும்.


ஆதிகாலத்தில் இவருக்கு அரிச்சுவடி கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் சிலர் பேட்டியளித்தனர். ராமகிருஷ்ணன் இளவயதிலேயே மிகுந்த ஆர்வமுடைய மாணவராகத் திகழ்ந்தார் என ஒருவர்போல் அனைவருமே கூறினர்.

(-!-) said...

usually நோ-பல் என்ற நிலை வந்த பிறகுதான் போற காலத்துக்குப் புண்ணியம் என்று நம்மில் பலரும் ராமா-கிருஷ்ணா-வெங்கடரமணா என்று சொல்லுவோம்.

ஆனால், இன்று நோபலின் மூலம் எல்லா வயதினரும், மு.க. உள்பட,அந்த "நாமத்தைச்" சொல்லும்படியாக வாய்த்ததே!!!

எனக்கு மிக்க சந்தோஷம்.

(-!-) said...

///Sethu Raman said...
நோபல் பரிசு "உளியின் ஓசை"க்கா
அல்லது தமிழ் நாட்டிலும், இந்தியாவிலும் ஏன் உலகெங்குமே அமைதியை நிலை நாட்ட ஆயிரக்கணக்கில் கடிதங்கள்
எழுதியதற்கா? அது பார்த்தீங்களா, நோபல் பரிசு பெற்ற தமிழ் நாட்டவர் இருவர் பெயரிலும் ஒரு
'வெங்கட ராமன்' இருக்கிறதை!!//

உங்கள் பெயர் திரு சேதுராமன் வெங்கடராமன். உங்கள் வயது 82. எல்லாம் புரிந்துவிட்டது.

திராவிடன் said...

நோபெல் பரிசு கொடுக்கறாங்களாமே, அதுல ரிசெர்வேஷன் கிடையாதா? இருந்தா நாங்களும் ஒரு 69 நோபெல் பரிசு அள்ளி கொனாந்திருப்போமே?

ச்சே.... வட போச்சே?

R.Subramanian@R.S.Mani said...

+Thiravidan, Well said; hats off to you

suppamani

Ramadoss Magesh said...

Is not MK a contender for nobel peace prize for his role in mediating the family dispute between his children and nephews!!

மாயவரத்தான் said...

//ஆனால் அது பெண்கள் படிக்கும் பள்ளி. இவர் அதில் சேர்ந்து படித்து என்று இந்த நிலைமைக்கு வந்திருக்கிறார்//

???

SathyaRam said...

On one hand, our people who have settled in dravidian land are busy watching all the issues on our film actresses and actors . The guys outside have improved and are going places.

Long live Tamil culture (Sorry
Cinema culture)

Anonymous said...

Congrats for our ramakrishnan.
But this article is good, make me think a lot. Thanks. This kind of article can make your blog more interesting.

Anonymous said...

”எனக்குத் தரப்படவில்லை என்பது முக்கியமில்ல. தம்பி வைரமுத்துவுக்கு தந்திட ஏன் அந்த சின்ன புத்திக்காரர்களுக்கு மனம் இல்லை என்று கேட்டிடாதே? அப்புறம் அவாள், இவாள் என்று நான் சொன்னால், பாய்வதற்காக ஒரு கூட்டமே காத்திருக்கிறது.”

Loganathan - Web developer said...

திரு ராமகிருஷ்ணன் அவர்களுக்கு பாராட்டுக்கள்!!

மணிகண்டன் said...

***
அப்பா! படித்து முடித்துவிட்டீர்களா? புரியவில்லை என்றால் இன்னொரு முறை படித்து பாருங்க, தப்பில்ல. எவ்வளவு நாளைக்கு தான் இட்லிவடையில் தண்ட நீயூஸ் மட்டுமே படிப்பீங்க?
***

இட்லிவடை, பக்கத்துலயே ஆங்கிலத்துலயும் எழுதினா தமிழ்ல புரிய வசதியா இருக்கும்.

Anonymous said...

Sathyaram,

What you said is correct. You just have to be outside TN to be good. Need not be in USA only. M Annadurai , Chandrayaan-1 project director is also outside TN.

Manjal_Thundu said...

udanpirappe, aaru kodi thamizhanukku akilathil angegaram vendum endru 3.3.2002le nobel committee oru kaditham ezhuthinen. puthayiram aandil paththayiram thanthi adithen. andru naan ezhuthiyathu indru balithathu kandu enakku perumai serndu vidumo endru ammaiyar aarparikkirar. thamizha, ondrai nandrai therindukol. ini thanthiyum kadithamum udhavathu. aduthamurai naan genevavukke sendru 4 naal thagi, wheel chairil round adithavathu illai visithu visithu azhuthavthu kanmani kanimozhikkum kavithayini kayalvizhikkum parisu vangi vandhiduven endru sabatham erkiraen. iruppathu or uyir. povathu oru murai. athu thamizhanukka pogattum

Anonymous said...

Please read the achievements of another Tamil, also living in UK

http://www.dailymail.co.uk/news/article-1219112/Hunger-strikers-7m-Big-Mac-Tamil-cost-London-fortune-policing-sneaking-fast-food.html

:)

Anonymous said...

எங்கள் இனமானத்தலைவர் வீரமணிப் பெரியார் இன்னும் வாய் திறக்கவில்லை.
அவர் ஒப்புதல் அளிக்காதவரை ராமகிருஷ்ணன் தமிழன் அல்லன்.
அக்கிரகாரத்து ஆரியப் பார்ப்பனப் பாம்பு!
அநாமதேயன்

Anonymous said...

sabash manjal thundu

Anonymous said...

அரசியல் வேண்டாம் என்று சொன்னாலும் ஒரு சில உண்மைகளை நாம் இந்த தருணத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் உண்மையான கடுமையான விஞ்ஞானிகளுக்கு மதிப்பு கிடையாது. இங்கு ஜாதி அரசியலும் ரிசர்வேஷன் அரசியலும் மட்டுமே உள்ளது. வெங்கட்ராமன் அவர்களைப் போன்ற ஒரு விஞ்ஞானி தமிழ் நாட்டில் ஒரு பல்கலைக் கழகத்தில் வேலைக்குக் கூடச் சேர முடியாது என்பதே உண்மை. கடுமையான பிராமண காழ்ப்பு உள்ள தமிழ் நாட்டு பல்கலைக் கழகங்களில் இவரைப் போன்றவர்களை உள்ளே கூட விடமாட்டார்கள்

உதாரணத்திற்கு மதுரை காமராஜர் பல்கலையில் கிருஷ்ணஸ்வாமி என்றொரு விஞ்ஞானி இருந்தார். அவர்தான் அந்தப் பல்கலைக் கழகத்தில் இன்று பிரபலமாக இருக்கும் பயாலஜி துறையை மேம்படுத்தியது. அமெரிக்காவில் ஆராய்ச்சிகள் செய்து விட்டு அமெரிக்காவில் தனது ஆராய்ச்சிகளைத் தொடராமல் இந்தியாவில் பணிபுரிய வேண்டும் என்ற நோக்கத்துடன் திரும்பி வந்தவர். மிகவும் புகழ்பெற்ற ஒரு விஞ்ஞானி. திறமையான நிர்வாகியும் கூட. அவரது உழைப்பால்தான் கோடிக்கணக்கான ரூபாய்கள் அந்தத் துறைக்கு நிதியாகக் கிட்டி அது இன்றைய நிலையில் உள்ளது. யு ஜி சி யிலும் பிற உலக ஆராய்ச்சி நிலையங்களிலும் செல்வாக்கும் நல்ல பெயரும் இருந்தபடியால் அந்தத் துறையை ஒரு உலக அளவில் ஒரு முக்கியமான ஆராய்ச்சிசாலையாக அவரால் மாற்ற முடிந்தது.

அப்படிப் பட்ட ஒரு திறமைசாலி, விஞ்ஞானி தான் அந்தப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக இருந்தாலும் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்தலாமே இதே போலவே பிற துறைகளையும் முன்னேற்றலாமே என்று எண்ணி அந்தப் பதவிக்கு அப்ளை செய்தார். அதற்கான முழுத் தகுதியும் உள்ள பேராசிரியர். அவரது துறையில் உலக அளவில் முக்கியமாகக் கவனிக்கப் பட்ட ஒரு ஆராய்ச்சியாளர். அவரது பெயரை ஒரு மீன் வகைக்கு வைத்திருக்கிறார்கள். அவர் செய்த ஒரே பாவம் பார்ப்பனராகப் பிறந்தது மட்டுமே. பிராமணராக இருந்தாலும் கூட அவர் கடவுள் நம்பிக்கையில்லாத அறிவியலை மட்டுமே நம்பும் ஒரு நாத்திகர், ஒரு முற்போக்காளர்.

அப்படியாகப் பட்ட ஒரு உலகப் புகழ் விஞ்ஞானியை அப்பொழுது இருந்த கல்வி மந்திரி அரங்கநாயகம் நிராகரித்து விட்டார். ஒரு பிராமணரை உயர் பதவிக்கு அனுமதிப்பது எங்கள் திராவிடக் கொளகைக்கே எதிரானது என்று சொல்லி சென்னைப் பல்கலைக் கழகத்தில் வேலை பார்த்த தன் உறவினரும் நாடார் ஜாதியைச் சேர்ந்தவருமான பெருமாள் என்பவரை வி சி பதவிக்கு சிபாரிசு செய்து விட்டார். அந்தப் பெருமாள் பொலிட்டிகல் சயின்ஸ் (அதில் என்ன சயின்ஸ் இருக்கிறதோ) துறையில் எம் ஏ பட்டம் பெற்றவர். அவரது ஒரே தகுதி எம் ஜி ஆர் குறித்து ஆராய்ச்சி செய்ததுதான் மற்றொரு தகுதி அரங்கநாயகத்தின் உறவினர். போதாதா வி சி பதவிக்கு? ஆனால் அப்பொழுது கவர்னராக இருந்த குரானா என்பவர் இந்த அநியாயத்தை கடுமையாகக் கண்டித்து தனது எதிர்ப்பைத் தெரிவித்தார். கவர்னருடன் அரங்கநாயகம் மோதி தான் சொல்லும் ஆளுக்குத்தான் வி சி பதவி கொடுக்க வேண்டும் என்றும் ஒரு பிராமணர் அந்தப் பல்கலைக் கழகத்தில் ஒரு ப்யூனாகக் கூட வரக்கூடாது என்று போராடினார்

இறுதியாக கவர்னரை முறைத்துக் கொள்ள விரும்பாத எம் ஜி ஆர் தலையிட்டு கிருஷ்ணஸ்வாமி அவர்களையே வி சியாக நியமித்தார். எஸ் கே அவர்கள் வி சி ஆக இருந்த பொழுதே இரண்டாவது முறை தொடர்வதற்கு முன்பாகவே மரணமடைந்தும் விட்டார்.


அதே பல்கலைக் கழகத்தில் பின்னர் சந்திரசேகர் என்றொரு பிரபலமான விஞ்ஞானியையும் இதே போலவே ஜாதியைக் காரணம் காட்டி தலைமைப் பதவி தர மறுத்து விட்டார்கள்.

Anonymous said...

இது போல கும்பகோணத்தில் கணித மேதை ராமானுஜத்தின் இடுப்பளவு சிலையை கல்லூரியில் வைத்த பொழுது தி மு க தி க குண்டர்கள் ஒரு பாப்பானின் சிலையை அரசு கல்லூரியில் எப்படி வைக்கப் போயிற்று என்று ரவுடித்தனம் செய்து அந்தச் சிலையை சாக்கடையில் தூக்கிப் போட்டு விட்டார்கள்.

இன்று நாம் பல்கலைக் கழகங்களுக்கும், கோளரங்கங்களுக்கும், அறிவியல் நிலையத்திற்கும் ஒரு ராமானுஜன் பெயரையோ, ஒரு சர் சி வி ராமன் பெயரையையோவா வைக்கிறோம். செக்ஸ் கதைகள் எழுதிய அண்ணத்துரை பெயரைத்தானே வைக்கிறோம். இப்படி ஒரு காட்டுமிராண்டி சூழலில் எந்த விஞ்ஞானி ஐயா மன நிம்மதியுடன் வேலை பார்க்க முடியும்?

வெங்கட்ராமன்கள் அமெரிக்காவுக்கோ ஐரோப்பாவுக்கோ ஆஸ்தேரிலியாவுக்கோ போனால்தான் மன நிம்மதியுடன ஆராய்ச்சி செய்ய முடியும், நோபல் பரிசும் வாங்க முடியும். தமிழ் நாட்டில் வேலை பார்த்தால் ஜாதி அரசியல் செய்து கொண்டு கருணாநிதிகளுக்குக் கால் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும். ராமனுஜனின் சிலை சென்ற இடத்தில் தான் தமிழ் நாட்டின் உயர் கல்வி இன்று இருக்கிறது

வெங்கட்ராமன் அவர்களின் சாதனைக்குப் பெருமைப் படக்கூடிய அருகதை எந்தவொரு தமிழ்நாட்டுக்காரனுக்கும் இந்தியருக்கும் கிடையாது. நமக்கு விஞ்ஞானிகளை மதிக்கத் தெரியாது. நடிகர் ந்டிகைகள் பின்னாலும் கேடு கெட்ட அரசியல்வாதிகளின் பின்னால் செல்லவும் மட்டுமே நமக்குத் தெரியும். இப்படிப் பட்ட ஒரு கேவலமான சூழ்நிலை தமிழ் நாட்டில் நிலவும் வரை தமிழ் நாடு உருப்படப் போவதில்லை

Sethu Raman said...

யோவ் மானஸ்தன்!
உமக்கு முந்தி காமெண்ட் அடிச்சு
உம்மோடே இடத்தைப் பிடித்து
விட்டேங்கிறதற்காக, என்னுடைய
சரித்திரத்தை அம்பலப்படுத்தலாமா?
ஆமாம், எண்பத்தியிரண்டு வயதுன்னா
நெட்டெல்லாம் வரக்கூடாதா?
அண்ணன் இந்த வயசிலேயும் எத்தனை
துறுதுறுன்னு இருக்கார்!!

Rangarajan S said...

inga athana perum reservationa ethirthu pesaringale.. idhula ethana per 70 varusham munnadi varaikum sila per thaltha pattavanganu makkala pirichu avangala schoolku ulla yen ooruku ullave vidama thaduthanga adha ethirthu avangala thitta mudiyuma?? andha mel jaathi makkal pala nooru varushama 100% reservationa anubavachukittu irundhadhu inga yarukum thappa therila.. aana oru 50 varushama some percentage reservation tharathukku ivlo kova padaringa.. If you feel bad when people are given reservations based on caste, think how people would have felt when they were not even allowed to enter schools because of their caste(even now in few places)

வால்பையன் said...

பார்பனர்களுக்கு மட்டுமே விருது வழங்குவது திராவிடர்களுக்கு செய்யும் துரோகம் என்று ஏன் ஒரு திராவிட குஞ்சும் குரல் கொடுக்கவில்லை!

Anonymous said...

/***அப்படியாகப் பட்ட ஒரு உலகப் புகழ் விஞ்ஞானியை அப்பொழுது இருந்த கல்வி மந்திரி அரங்கநாயகம் நிராகரித்து விட்டார். ***/

Bloddy b------s!!!
i mean beggers.

Anonymous said...

congrats shri ramakrishnan...

CS. Mohan Kumar said...

மஞ்சள் கமெண்ட் - நச்சுன்னு இருந்தது.

மோகன் குமார்
----
வேலூர் தங்க கோயில் பற்றிய article படிக்க:
http://veeduthirumbal.blogspot.com/

Anonymous said...

nalla padhivu.

pinnoottangalilul tharamaanavai.
but manjal thumdu takes the cake.

Jagadeesh Arunachalam said...

ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க. எல்லோரும் படிக்க வேண்டிய கட்டுரை ...
இந்தியர்களுக்கு எதற்கெல்லாம் பெருமை பட்டு கொள்ள வேண்டும் என்று ஒஉர் வரைமுறை இல்லாமல் பொய் விட்டது...

Anonymous said...

//அது பார்த்தீங்களா, நோபல் பரிசு பெற்ற தமிழ் நாட்டவர் இருவர் பெயரிலும் ஒரு
'வெங்கட ராமன்' இருக்கிறதை!!//

Only two people ?.What about Sri Subramaniam Chandrasekhar ?

-Mahesh

Unknown said...

உங்களுடைய பதிவு எனக்கு எழுத்தாளர் திரு:மாலன் அவர்களின் கட்டுரையை ஞாபகப்படுத்தியது. அவருடைய வலைத்தளத்தில் அந்தக் கட்டுரை வாசிக்கக் கிடைக்கிறது.

http://jannal.blogspot.com/2007/11/blog-post.html

(-!-) said...

an article on this matter by Mr InbA in தெனாலி!!

http://www.thenaali.com/thenaali.aspx?A=1139


புதிதாய்த் தனிக்கடை(த் தெரு) திறந்துள்ள அவருக்கு வாழ்த்துகள்.
http://kadaitheru.blogspot.com/2009/10/blog-post_06.html

Appreciations for his gesture towards இட்லி வடை.

தனியாக எழுதினாலும் இட்லி வடையிலும் தங்களின் contributions தொடரட்டும், திரு இன்பா!