பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, October 03, 2009

தமிழ்நாடு எப்போது அமெரிக்கா, ஜப்பான் போல வளரும் ?


இன்னும் சில ஆண்டுகளில் தமிழ் நாடு அமெரிக்கா, ஜப்பான் போல வளந்துவிடும் என்று சொல்லுகிறார் யார் ? நீங்களே படியுங்க

பதில் : கழகத் தலைவரோ அல்லது வேறு எவருமோ, மூத்தவர்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று யாரையும் வற்புறுத்தவில்லை. கடிதமும் கேட்கவில்லை. அப்படி சொல்லவும் மாட்டார்கள். பத்திரிகைகளில் இது தொடர்பாக வந்த செய்திகள், அடிப்படையற்ற வதந்திகள். நான் மட்டும்தான், 3 மாதங்களுக்கு முன் எனது தொகுதியில் நடந்த ஒரு கூட்டத்தில், ‘எனக்கு வயதாகி விட்டது; எதிர்காலத்தில் இந்த கட்சியைச் சேர்ந்த ஒரு இளைஞர் இங்கு எம்.எல்.ஏ.வாக வரட்டும்’ என்று சொன்னேன். இது நானாகப் பேசியது. யாரும் என்னை இப்படிப் பேசச் சொல்லவில்லை.

எனக்கு இப்போது வயது 73. 2011 - தேர்தலின் போது 75 வயதாகி விடும். 1967-ல் அண்ணா அவர்கள், எனக்கு எம்.எல்.ஏ. ஆகும் வாய்ப்பளித்தார். அப்போது தொடங்கி அரசியலில் இருக்கிறேன். ஒருவரே நீண்டகாலம் பதவியில் இருப்பது நல்லதல்ல என்பது என் தனிப்பட்ட கருத்து. கட்சியும், நாடும் முன்னேற இளைஞர்களுக்கு வாய்ப்புத் தர வேண்டும். பொதுவான இக்கருத்துக்கு கலைஞர் விதிவிலக்கு. ஏனென்றால் அவரது உழைப்பு, ஆற்றல், சிந்தனை ஆகிய இவைதான் இந்த கட்சிக்கே அடிப்படை. அவரது பணி கட்சிக்கும் தேவை, நாட்டுக்கும் தேவை.

( நன்றி: துக்ளக், இந்த வரம் ஆற்காடு வீராசாமி பேட்டியிலிருந்து சாம்பிளுக்கு ஒரு கேள்வி பதில் )

15 Comments:

(-!-) said...

//இன்னும் சில ஆண்டுகளில் தமிழ் நாடு அமெரிக்கா, ஜப்பான் போல வளந்துவிடும் என்று சொல்லுகிறார் யார் ?//


தமிழ்நாடு, தனி நாடாக வ(ளர்)ந்துவிடும் என்கிறாரா? இல்லை, இவரைப் போல பழம் தின்று கொட்டை போட்ட அரசியல் வியாதிகள் ஓய்வு பெற்றால் அமெரிக்கா ஜப்பான் நாட்டிலுள்ள மாநிலங்கள் போன்று தமிழ்நாடு வளர்ந்துவிடும் என்கிறாரா?

தெரிந்தவர்கள் உள்குத்தை விளக்கவும்.

Anonymous said...

முதல்வருக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு?

சக்கர நாற்காலியிலிருந்து பெயர்ந்து, சக்கரப்படுக்கையில் படுத்தபடியே இன்னும் எத்தனை வருடம் ஆட்சியில் இருப்பதாக உத்தேசம்?

பேராசைக்கோர் அளவேயில்லையா?

Unknown said...

//"தமிழ்நாடு எப்போது அமெரிக்கா, ஜப்பான் போல வளரும் ?"//

அப்படியே போட்டோ ஷாப்ல மாத்தி zoom
பண்ணினா வரும்

Anonymous said...

கருணாநிதி குடும்பமே அரசியலை விட்டு ஓட வேண்டும்.

Krish said...

//அப்படியே போட்டோ ஷாப்ல மாத்தி zoom
பண்ணினா வரும்///

சரியான மொக்கை

Anony8 said...

Even if Youths takeover, 90% of them would be the Gen next of todays politicos. So no real change is gonna happen with Youths.

யதிராஜ சம்பத் குமார் said...

இட்லிவடை...


இந்த பேட்டி முழுவதுமே ஒரு அபத்தக் களஞ்சியம். 2013 -இல் மின்சார உற்பத்தியில் தன்னிறைவு பெற்று, மிகுதியாகவும் இருக்கும் என்று ஆற்காட்டார் கூறுகிறார். ஆக இவர்கள் ஆட்சியில் இருக்கும்போது எதுவும் உருப்படியாகாது போலிருக்கிறது.


5 முறை முதல்வராக இருந்து இதுவரை தமிழகத்தை அமெரிக்காவாகவும், ஜப்பானாகவும் மாற்றாத கலைஞர்/கழக அரசு, இனிமேல்தான் அதனை சாதிக்கப் போகிறதாம். கதை நன்றகவே இருக்கிறது. இதுவும் கூவம் மணக்கும் கதைதான். கலைஞர் கூறியது போல், தமிழன் நிஜமாகவே சொரணையற்ற வாழை மட்டையாகவும், சோற்றாலடித்த பிண்டமாகவும்தான் இருக்கிறான். அதனால்தான் இவர்கள் இன்னமும் இவ்வாறு பேட்டியளித்துக் கொண்டிருக்கின்றனர்.

கௌதமன் said...

தமிழ்நாடு எப்போது ஜப்பான் போல .....
ஆமாமுங்க - அந்த நாளத்தாங்க நாங்களும் ஆவலுடன் எதிர் பார்க்கிறோம் - அங்கே அரை நூற்றாண்டு போல ஆட்டம் காட்டிக் கொண்டிருந்த கட்சியின் ஆட்சி சென்ற மாதம் தூக்கி எறியப் பட்டது -- அது போல தமிழகத்திலும் இலவசங்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கும் கழகங்கள் தூக்கி எறியப்பட்டால் - உழைப்பின் மேன்மை மக்களுக்குத் தெரிய வரும்.

ஸ்ரீராம். said...

1967 தொடங்கி 2009 வரை பதவியில் இருந்து இவர் நாட்டுக்கு என்னென்ன சாதித்தார், தனக்கு என்னென்ன சாதித்துக் கொண்டார் என்று பட்டியல் இடுவாரா? இளைஞர் ஒருவர் அடுத்து வரவேண்டும் என்றால் தன் வீட்டிலுருந்தா, தலைவர் வீட்டிலுருந்தா?

SUBBU said...

மொதல்ல இவன மின்சாரத்த ஒழுங்கா கொடுக்க சொல்லுங்க.

Baski said...

ஆற்காட்டார் அழுதுடுவார் போல இருக்கு.

பாவம், கலைஞரை திட்டவும் முடியல, சும்மா இருக்கவும் முடியல... எனென்னமோ பேசுகிறார்.

அண்ணா செய்த பெரிய தவறு, தி.மு.க.
முக்கியமாக தம்பி கருணாநிதி.

Erode Nagaraj... said...

புரிஞ்சுக்கோங்க எல்லாரும்... தமிழ்நாடு, ஜப்பான் மாதிரி வளருமாம்... ஜப்பான் என்ன ஜமைக்காவா? அங்க யாருய்யா வளந்தாங்க... அவன் கேட்டான்னா, கோவம் வந்து, இவன் நம்மள வெச்சு காமடி பண்ராண்டான்னு கூட்டிகிட்டு போய், குழம்பு வெச்சு அதுலநண்டு, தேள், பல்லியெல்லாம் போட்டுருவான்...

Anonymous said...

There is no way TN will be "grow"-valarum-like Japan or Usa.
It is geographically impossible.
Japan is smaller than TN so TN
has already overtaken Japan.
Regarding USA, if the Asia-Pacific plate buckles under the Eurasian plate, USA will become smaller than TN and that way tN will become become bigger than USA.

Anonymous said...

Definitely tamil nadu will become a japan. If only two atom bombs and carpet bombings erase the existing tamil politics and culture, then definitely tamil nadu will become a japan.

Anonymous said...

chema comedy paa.....

first current a olunga vida sollunga...