எந்தக் கழகம் ஆளும் கட்சியாக இருக்கிறதோ, அந்தக் கட்சியின் தலைமை மற்றும் அமைச்சர்களைப் புகழ்ந்து சிலர் பத்திரிகை நடத்துவதும், அதன் மூலம் விளம்பரங்கள் பெறுவதும், அமைச்சர்களிடம் காரியம் சாதித்துக் கொள்வதும் வழக்கமானதுதான். ஜெயலலிதா ஆட்சியில் சில பத்திரிகைகள் அப்படி முளைத்ததுண்டு. தற்போதும் கருணாநிதி மற்றும் ஸ்டாலினை புகழ்வதற்கென்றே சில பத்திரிகைகள் வருகின்றன.
இதில், மு.க. அழகிரியைத் துதி பாடுவதற்காக வரும் ‘கலைஞரின் மு.க. அழகிரி’ என்ற மாதமிருமுறை இதழ் வித்தியாசமாக இருக்கிறது. சமீபத்தில் அதன் இரு இதழ்களை வாசிக்க நேர்ந்தபோது, வேடிக்கையாகவும், அதிரடியாகவும் இருப்பதை உணர முடிந்தது. அந்த அழகிரி இதழிலிருந்து சில பக்கங்களைப் பார்ப்போம்:
இதழின் முதல் பக்கத்திலேயே,
“இந்த இதழில் எங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறோம். தி.மு.க. தலைமையே கூட கொஞ்சம் எரிச்சல் அடையலாம். அதற்காக நாங்கள் வருத்தப்படப் போவதில்லை. எங்களுக்கு கலைஞர் மற்றும் அழகிரிதான் முக்கியம். இவர்கள் இருவரைத் தவிர வேறு யாராக இருந்தாலும், அவர்களை நேர்சீர்களை தூக்கிப் பார்த்துத்தான் எழுதுவோம்”
– என்று ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார்.
அடுத்தப் பக்கத்தில் அமைச்சர் கே.என். நேருவைப் பாராட்டி விட்டு,
“அரசியலில் தன்னைத் தக்க வைத்து கொள்வதற்காக அவர் சில விதிகளை மீறலாம், கலைஞரைப் போல! அதனால் அதை நாங்கள் கண்டுகொள்வதில்லை. அதுதான் நியாயமும் கூட; தர்மமும் கூட”
– என்று குறிப்பிடுகிறது அழகிரி பத்திரிகை.
‘மு.க. அழகிரியின் தியரி’ என்ற கட்டுரையில்,
“ஓட்டர்களையே விலைக்கு வாங்கும் பணம் தியரி யாருக்கு வரும்? தாதா, ரௌடியிஸம் எதுவும் இல்லாமல், அவரால் எப்படி ஒரு புது தியரியை உருவாக்க முடிந்தது என்று எதிரிகளே அசந்து போய்விட்டார்கள். பெயருக்குக் கூட காசு அவிழ்க்காத கலைஞரின் வாரிசில் இப்படியொரு பிள்ளையா? பணம் பாதாளம் வரை பாயும் என்ற பழமொழி எல்லோருக்கும் தெரியும். ஆனால், பணம் மக்களின் மனம் வரை பாயும் என்பதை, அழகிரி ஒருவரால்தான் புரிந்து கொள்ள முடிந்தது. அதனால்தான் சொல்கிறோம், கலைஞரின் மைந்தா வா! தலைமை ஏற்க வா!”
– என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
திருச்சி போலீஸ் கமிஷனர், திருச்சியில் பல கெடுபிடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஆளும் கட்சி என்ற பாகுபாட்டைப் பெரிதாக அவர் கண்டுகொள்வதில்லை. அவரைக் கண்டித்து ஒரு கட்டுரை அழகிரி பத்திரிகையில் உள்ளது. ‘போலீஸைக் கட்டவிழ்த்து விட்டது கலைஞரா, துணை முதல்வரா?’ என்கிற தலைப்பில் வெளியாகியுள்ள கட்டுரையில்,
“தலைமை மட்டும் சூட்கேஸ் மாற்றிக் கொண்டால் போதாது. தொண்டன் ஒரு சுருக்குப் பையையாவது மாற்றிக் கொள்ள வேண்டாமா? ஒரு தொண்டனைப் போஸ்டர் ஒட்டுவதற்கும், நோட்டீஸ் ஒட்டுவதற்கும் பயன்படுத்திக் கொண்டு, அவனைப் பசை தின்னவா சொல்ல முடியும்? தலைவன் பிரியாணி தின்றால், தொண்டன் பழைய சோறாவது தின்ன வேண்டாமா?”
– என்று கேட்கும் கட்டுரை மேலும் விரிகிறது.
“துணை முதல்வர் பதவி வந்ததற்குப் பின்தான், இப்படி தி.மு.க.வின் பலத்தைக் குறைக்கிறார்கள். வட இந்தியப் போலீஸ் அதிகாரி வரும்போது ஆளும் கட்சிக்கே சவால் விடுகிறான். கேட்டால், நேரடியாக துணை முதல்வர் கண்காணிப்பில் வந்தவன் என்கிறார்கள். வடஇந்தியர்களின் கையில் தமிழகம் போய்விட்டதா? தயாநிதி மாறன் வீட்டில் தி.மு.க. கரைவேட்டிக் கட்சியினரை விட, வடநாட்டு மார்வாடிப் பயல்கள் கூட்டம்தான் அதிகமாக இருக்கிறது. இது எப்படி?
“ஜெயலலிதா ஆட்சிதான் போலீஸ் ஆட்சியாக இருந்தது. ஜெயலலிதா போல துணை முதல்வர் செயல்படுவதாக அறிகிறோம். மக்களுக்கு நலத் திட்டங்கள் அறிவித்தால் மட்டும் போதாது. தி.மு.க.வினரின் நலன்களையும் பார்க்க வேண்டும். மேல்மட்டத் தலைவர்கள் தேனை நக்கும்போது, தொண்டன் விரல் சூப்பிக் கொண்டா இருக்க முடியும்? ஸ்ரீரங்கம் 4-ஆவது வட்டச் செயலாளர் ராம்குமார், அமைச்சர் நேருவுக்காகப் பாடுபடும் தொண்டன். இவரை ஆன்லைன் லாட்டரி நடத்தினார் என்று போலீஸ் வழக்குப் போட்டுள்ளது. ‘காவல்துறை தன் கடமையைச் செய்யட்டும்’ என்று துணை முதல்வர் விட்டுவிட்டாராம். இது எதைக் காட்டுகிறது? துணை முதல்வரின் கையாலாகாத்தனத்தையே காட்டுகிறது. நேருவின் கையை யார் கட்டிப் போட்டது? அஞ்சா நெஞ்சனிடம் இது நடக்குமா?”
– என்று போகிறது அந்தக் கட்டுரை.
அழகிரி பத்திரிகை, பக்கத்துக்கு பக்கம் அழகிரியின் படத்தோடு, அழகிரி பற்றிய செய்திகளையும் வெளியிட்டுள்ளது. இந்த அழகிரி பத்திரிகையின் பதிவு அலுவலகம் திருச்சியில் இருந்தாலும், மதுரையில் அழகிரியின் கல்யாண மண்டபம் அருகே ஒரு அலுவலகமும், டெல்லியில் ஒரு அலுவலகமும் இருப்பதாக இம்ப்ரின்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘அஞ்சா நெஞ்சன்தான் கட்சிக்குத் தலைமையேற்க வேண்டும்’ என்று பல இடங்களில் குறிப்பிடும் இப்பத்திரிகையில், அழகிரியின் பேட்டி ஒன்றும் வெளியாகி இருப்பதால், அழகிரியின் ஆசியுடன் இந்தப் பத்திரிகை வெளிவருவதாகவே கருத வேண்டியுள்ளது.
(நன்றி: துக்ளக்)
அழகிரி நேர்மையானவர் என்று இப்பவாவது புரிஞ்சிக்கோங்க! இது செய்தியா இல்லை ஒப்புதல் வாக்குமூலமா ?
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Sunday, October 25, 2009
அதிரடியான அழகிரி பத்திரிக்கை !
Posted by IdlyVadai at 10/25/2009 08:26:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
18 Comments:
:-)
விளக்க முடியாத விளங்கிக் கொள்ள முடியாத மர்மம் ஏதோ இருக்கு... ஏதாச்சும் ராஜதந்திரமோ...
'குண்டர்' என செயல் பட்ட ஒருவர், காலத்தின் மாற்றத்தால் நல்லவராக மாறலாம். மாறவில்லையானாலும் , 'நல்லவராக மாறிவிட்டேன்' என மக்களுக்கு காண்பிக்க முயலலாம் (மனதளவில் மற்றும் செயலளவில் மாறாமலே).
காலம்தான் பதில் சொல்ல வேணும்.
நன்றி.
கடவுள் பாதி..மிருகம் பாதி ...........கலந்துசெய்த மனிதன்
இவ,
என்ன ஒரு அருமையான சித்தாந்தம் பணம் கொடுத்தால் வோட்டு வாங்கலாம் கடை நடத்தி இருக்கிறார்கள்... பகிரங்கமாக வெளியில் சொல்கிறார்கள் பத்ரிகையில் செய்தி டில்லிக்கும் ஒரு காபி அப்பா அப்பா இவர்கள் எதையும் செய்ய துணிந்தவர்கள் ... வழக்கம் போல பெருமிவிட்டு... சூடாகி, மண்டை காய்ச்சல் தான் மிச்சம்.. தமிழ்நாடு .. எதிர்காலம் கஷ்டம் தான்
காமேஷ்
இந்த புத்தகம் ஒரு பிரதி சோனியாவிற்கு அனுப்பப்படுமா??
The Dravida Munnetra Kazhagam on Sunday expelled Erode MLA and former minister N.K.K.P.Raja from its primary membership for violating party discipline.
http://www.hindu.com/2009/10/26/stories/2009102654311000.htm
MADURAI: A.S. Mani, editor of Naveena Netrikan, a Tamil magazine, was arrested by the Madurai City Police and produced before a judicial magistrate here on Sunday.
Following a complaint from Suresh of Doraisamy Road, TVS Nagar, that the magazine had allegedly published a defamatory article against him and Union Minister for Chemicals and Fertilizers M.K. Azhagiri, a case was registered.
Indian Penal Code Sections 153 A (promoting enmity), 502 (sale of printed substance containing defamatory matter), 505 (intent to cause alarm to public) among others were registered by the Tallakulam police. Further investigations are on.
A senior police officer said the article allegedly said Mr. Suresh (a close friend of Mr. Azhagiri) was the key person behind awarding major road contracts. Successful bidders had to hand over a percentage as commission before receiving the contracts. Similarly, the postings of police and revenue officers in most of Government departments in the southern districts of Tamil Nadu were made only after they were cleared by Mr. Suresh, the article stated.
As Mr. Mani is understood to have told the magistrate that he apprehended trouble in the Madurai central prison, he was being taken to Chennai with escort police for detention at Puzhal prison, another officer said.
We have heard that there are infights between CM's sons. Now we are seeing it with some solid proof.
God.. Please save Tamil Nadu!!
Mohan Kumar
http://veeduthirumbal.blogspot.com/
காமேஷ்வர் சொன்னது ரொம்ப சரியே. மண்டை காய்ச்சல் தான் மிச்சம் . And comment அடிக்கவும் பயமா இருக்கு . மணி ரத்னம் பேசாம இவங்க family story ஒரு megaserial பண்ணி டிவி production நுழைந்து விடலாம்.
// ஓட்டர்களையே விலைக்கு வாங்கும் பணம் தியரி யாருக்கு வரும்? //
ஆஹா அடுத்த தேர்தலுக்குள் - எனக்கு அழகிரி தொகுதியில் - ஒரு வாக்காளர் அடையாள அட்டை வேண்டும். என்னுடைய இப்பொழுதைய அட்டையை கள்ள வோட்டுப் போடுவோர் சங்கத்தில் சமர்ப்பித்துவிட நான் தயார்.
அழகிரியின் பெயரில் ஒரு பத்திரிக்கை இவ்வாறு இருக்கையில், அழகிரியைப் பற்றி அவதூறு வெளியிட்டதாகக் கூறி "நவீன நக்கீரன்" என்ற பத்திரிக்கையின் ஆசிரியர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இது துக்ளக்கின் சதி,பார்பனர் சூழ்ச்சி, உடன்பிறப்பே நம்பாதே :)
//இது துக்ளக்கின் சதி,பார்பனர் சூழ்ச்சி, உடன்பிறப்பே நம்பாதே :)
//
repeataii
//“ஓட்டர்களையே விலைக்கு வாங்கும் பணம் தியரி யாருக்கு வரும்? தாதா, ரௌடியிஸம் எதுவும் இல்லாமல், அவரால் எப்படி ஒரு புது தியரியை உருவாக்க முடிந்தது என்று எதிரிகளே அசந்து போய்விட்டார்கள். பெயருக்குக் கூட காசு அவிழ்க்காத கலைஞரின் வாரிசில் இப்படியொரு பிள்ளையா? பணம் பாதாளம் வரை பாயும் என்ற பழமொழி எல்லோருக்கும் தெரியும். ஆனால், பணம் மக்களின் மனம் வரை பாயும் என்பதை, அழகிரி ஒருவரால்தான் புரிந்து கொள்ள முடிந்தது. //
//தலைமை மட்டும் சூட்கேஸ் மாற்றிக் கொண்டால் போதாது. தொண்டன் ஒரு சுருக்குப் பையையாவது மாற்றிக் கொள்ள வேண்டாமா? ஒரு தொண்டனைப் போஸ்டர் ஒட்டுவதற்கும், நோட்டீஸ் ஒட்டுவதற்கும் பயன்படுத்திக் கொண்டு, அவனைப் பசை தின்னவா சொல்ல முடியும்? தலைவன் பிரியாணி தின்றால், தொண்டன் பழைய சோறாவது தின்ன வேண்டாமா?”//
//மக்களுக்கு நலத் திட்டங்கள் அறிவித்தால் மட்டும் போதாது. தி.மு.க.வினரின் நலன்களையும் பார்க்க வேண்டும். மேல்மட்டத் தலைவர்கள் தேனை நக்கும்போது, தொண்டன் விரல் சூப்பிக் கொண்டா இருக்க முடியும்? //
இப்படி தம் கொள்கையை தெளிவாக விளக்கிய பின்னும், தி.மு.க.விற்கு ஒரு வோட்டு விழுந்தாலும் அது தமிழ் நாட்டிற்கு அவமானம்.
இவ,
அனானி பின்னுட்டம் போடவே பயமாக இருக்கிறதா சபாஷ் பத்திரிகை தொண்டங்கியத்தின் குறிக்கோளுக்கு வெற்றி, அட இது என்னையா இட்லி பின்னுட்டமே அப்ப்ரூவ் பண்ணலே இது எப்படி இருக்கு.. இதெல்லாம் ஒரு சாம்பிள் தான் 2011 முடிவு எனக்கு இப்பவே தெரிஞ்சாச்சு. வழக்கம் போல இவ தன பங்கை செய்யும் ( சட்டம் தன கடமையை செய்யும் பொருளில் கொள்க) இது இவ இந்த பின்னுட்டத்தை அப்ப்ரோவ் செய்யும் என்பதற்காக
காமேஷ்
இவ,
நான் தமிழ்நாட்டிற்கு வந்து (தேர்தலில் வாக்களித்து) வருடம் 9 ஆகிறது இனி வந்தாலும் விமான நிலையத்தில் இருந்து "கலைஞர் வாழ்க" , "ஸ்டாலின் வாழ்க" அழகிரி வாழ்க என்று சொல்லிக்கொண்டு வீடுபோய் சேரவேண்டியதுதான் கண்ணுக்கு தெரிகின்ற நிதர்சனமான உண்மை இதுதான் நம்மவர் பிரியாணிக்கும் பணத்துக்கும் விலை போயி
ரொம்ப நாள் ஆகிறது. எதையும் மறந்துவிடும் பழக்கம் தொற்றுநோஇபோல் ஒட்டிக்கொண்டு அதிலேயே வாழ பழகியவர்கிளை திருத்தவே முடியாது
காமேஷ்
கசப்பான உண்மை.
கட்சிக்காக வேலை பார்பவர்களுக்கு என்ன ஆதாயம்.
பொதுவாக மக்கள் பணம் பண்ணலாம் என்ற ஆசையோடு தான் கட்சியில் சேர்கிறார்கள்.
முழு நேர கட்சி தொண்டு செய்யும் இவர்களுக்கு கட்சி சம்பளம் கொடுகிறதா?
இவர்களுக்கு என்ன வருங்காலம்?
( பார்ட் டைமில் ப்லோக் எழுதலாம். கட்சி வேலை எல்லாம் பண்ண முடியாது.)
//R.Gopi said...
இந்த புத்தகம் ஒரு பிரதி சோனியாவிற்கு அனுப்பப்படுமா??//
Since when did Sonia become the deciding authority!? And as if Congress is innocent of election malpractices!!
The larger point of the story is that India is not yet ready for democracy
Post a Comment