பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, October 20, 2009

சில கேள்விகள் சில பதில்கள்

இந்த வார பத்திரிகையில் வந்த சில கேள்வி சில பதில்கள்

துக்ளக் கேள்வி பதில்

கே: பெண்களால் ரகசியத்தை காப்பாற்றவே முடியாது என்று இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில் நிருபிக்கப்பட்டுள்ளதே ?

பதில்: பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகவே, மஹா பாரதத்தில் இது மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டிருகிறது. அது ஆண் ஆதிக்கத் தீர்ப்பு; இன்று சொல்லப்பட்டிருப்பது ஆரய்ச்சியின் முடிவு. இதை ஏற்காதவன் மூட நம்பிக்கையில் உழல்பவன்.
அப்படியா ? பெண்கள் இதற்கு என்ன பதில் சொல்லுவார்கள் ?

ஜூவி - திருமாவளவன் பேட்டியிலிருந்து...
கே: நான்காம் நாள் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை சந்தித்தீர்களே... அப்போது எப்படி இருந்தது உங்களின் மனநிலை?

பதில்: அதிபர் ராஜபக்ஷேவை சந்திக்கும் முன்னரே, முகாம்களின் நிலை குறித்துப் பேசுவதற்காக பாதுகாப்புத் துறை ஆலோசகரான கோத்தபய ராஜ பக்ஷேவைச் சந்தித்தோம். 'எனக்கு பாதுகாப்பு பணி மட்டும்தான் தெரியும். முகாம் நிலை குறித்து அறிய நீங்கள் அதிபரின் அரசியல் ஆலோசகரான பசில் ராஜபக்ஷேயை பாருங்கள்' எனச் சொன்னார். பசில் ராஜபக்ஷேயிடம் பேசியபோது, 'முகாம்களில் தற்போது 3,000-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் இருக்கிறார்கள். அவர்களில் பலரையும் சொந்த இடங்களுக்கு அனுப்ப முடிவெடுத் தோம். ஆனால், 268 கர்ப்பிணிகளைத்தான் அனுப்ப முடிந்தது' என்றார். இதற்கெல்லாம் பிறகே அதிபருடனான சந்திப்புக்கு ஏற்பாடானது.

அனைத்து எம்.பி-க்களையும் மரியாதையோடு வரவேற்ற ராஜபக்ஷே, என்னைச் சுட்டிக்காட்டி, 'நீங்கள் எனக்கு எதிராகத் தமிழகத்தில் கடுமையாக முழங்கி வருகிறீர்கள்' எனச் சிரித்தார். உலகத்தையே ஜெயித்துவிட்டது போல இருந்தது அவருடைய அந்தச் சிரிப்பு. அமைதிக் காலத்தில் நான் ஒரு முறை ராஜபக்ஷேயை சந்தித்துப் பேசி இருக்கிறேன். அதை நினைவுகூர்ந்து பேசிய அதிபர், 'நீங்கள் என்னை சந்தித்தபோது, பிரபாகரனை நீங்கள் அழைத்து வந்தால், மீடியாக்களுக்குத் தெரியாமல் நமக்குள்ளேயே சமரசம் பேசி தக்க தீர்வுக்கு வழி வகுக்கலாம்' என நான் சொன்னேனே, நினைவிருக்கிறதா? இப்போது நீங்கள் வந்திருக்கிறீர்கள்... பிரபாகரனை காணவில்லையே..? அவரை உங்களுடன் அழைத்து வரவில்லையா?' எனக் கேட்டு மீண்டும் சிரித்தார்.

சபைக்கு நடுவே சாட்டையடிபட்ட வேதனையில் துடித்துப் போனேன். சூழல் என்னை அமைதி காக்கச் செய்தது. கனிமொழி, டி.ஆர்.பாலுவிடம் என்னை சுட்டிக்காட்டி பேசிய ராஜபக்ஷே, 'இவர் பிரபாகரனின் மிக நெருங்கிய கூட்டாளி. இக்கட்டான நேரங்களில் பிரபாகரனின் பக்கத்தில் நின்றவர். நல்லவேளை... கடைசி நேர இக்கட்டில் இவர் பிரபாகரனுடன் இல்லை. அப்படி இருந்திருந்தால் இந்நேரம்...' என்று வார்த்தையை முடிக்காமல் நிறுத்தினார். ஆணவமும் அகம்பாவமும் மதியை மறைக்க, சிறு எறும்புக்கும் தீங்கு விளைவிக்காத பாவனையில் அவர் பேசிக் கொண்டிருந்தார். அவருடைய நக்கலான பேச்சு என்னை மட்டுமல்லாது, இதர எம்.பி-க்களையும் முகம் சுளிக்கவே வைத்தது. அப்போதும், 'நீங்கள் ஒரு பௌத்தர். உங்களிடமிருந்து கருணையையும் இரக்கத்தையும்தான் எம்மக்கள் எதிர்பார்க்கிறார்கள்' என ராஜபக்ஷேயிடம் சொன்னேன். 'ரெண்டு வருடங்களுக்கு முன்பு அனைத்துக் கட்சி நிர்ணயக் குழு அமைச்சர் திசவிதாரன தலைமையில் தயாரித்த அறிக்கையின்படி, தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கலாமே' என நான் சொன்னபோது, முகத்தில் அடித்தாற் போல, 'அது என்னோட பார்ட்... நான் பார்த்துக்கிறேன்' எனச் சொல்லிச் சிரித் தார் ராஜபக்ஷே. அதற்கு மேலும் என்னால் அங்கே நிற்க முடியவில்லை.''

நாயை அடிப்பானேன்?, ----சுமப்பானேன்?

உதயநிதி ஸ்டாலின் பேட்டியிலிருந்து

கேள்வி: நீங்க சினிமாவுக்கு வர்றீங்க... உங்க ஃப்ரெண்ட் விஜய் கட்சி ஆரம்பிச்சுடுவார் போலிருக்கே?''


''ஆமாங்க. அவருக்கு பாலிடிக்ஸ்னா அவ்வளவு இஷ்டம். காங்கிரஸ்ல அவர் சேரப் போறதா பரபரப்புகள் இருந்த சமயம், நான் தென்னாப்பிரிக் காவில் இருந்தேன். அவர் பிறந்த நாள் அன்னிக்குத் தான் திரும்பி வந்தேன். அன்னிக்கு பிரஸ் மீட்ல சார் பிஸி.

போன்ல வாழ்த்து சொல்லிட்டு, 'அண்ணா, பார்ட்டிலாம் இல்லையாங்ணா?'ன்னு கேட்டேன். 'வைப்போம்ண்ணா'ன்னார். 'ஆமாம்... இப்ப நீங்க வேற பார்ட்டியில இன்ட்ரெஸ்ட் ஆயிட்டீங்க போல இருக்கே'ன்னதும், 'கிண்டல் பண்ணாதீங்ணா'ன்னு ஜாலியாப் பேசிட்டு இருந்தார். அவரோட 51-வது படத்தை எனக்கு பண்ணித் தர்றேன்னு சொல்லியிருக்கார். பார்ப்போம்!''

அண்ணா நூற்றாண்டு விழா அதற்காக இவ்வளவு அண்ணா சொல்லணுமாங்கணா ?

அரசு பதில்கள்...
கேள்வி: பெண்கள் எப்படி உட்கார்ந்தால் அழகு?

நம் முதுகில் ஏறி உட்காராத வரை எப்படி உட்கார்ந்தாலும் அழகுதான்.

பழமொழியை பதில்களை அனுபவிக்கணும்! ஆராய்ச்சி பண்ணக்கூடாது!.

23 Comments:

Anonymous said...

raja bakshey adanga maruthar, athu meerinar, thirumbi adithar. asiriyar thirumavin gosham

Anonymous said...

/***அவருடைய நக்கலான பேச்சு என்னை மட்டுமல்லாது, இதர எம்.பி-க்களையும் முகம் சுளிக்கவே வைத்தது. ****/

ஆனாலும் ஒரு ஜோக்காகாவே எடுத்துக்கொண்டார் எங்கள் தன்மானதமிழர் வெருமா சாரி குருமா இச்சீ சாரி திருமா!!!

CS. Mohan Kumar said...

கேள்வி பதில்களை விட ஒவ்வொன்றுக்கும் தங்கள் மஞ்சள் கமெண்ட் நிரம்ப பிடித்தது.

************

"யாரை பிடிக்கும்?" மாறும் விதம்

சிறு வயது முதல் நமது விருப்பங்கள் எப்படி எல்லாம் மாறுகிறது.. இது பற்றி ஒரு சிறு article. படிக்க எனது blog-க்கு வரவும்.

Link:

http://veeduthirumbal.blogspot.com/

Mohan Kumar

Anonymous said...

இந்த வார இரண்டு செய்திகள்...

செய்தி # 1 ற்க்கு பின்லேடனுக்கு ஆதரவு தெரிவித்த (mydeen(indian)) மைதீன் ஏன் இதற்கு ஆதரவு கரம் நீட்டவில்லை???

https://www.blogger.com/comment.g?blogID=5996041&postID=3422841078909111573

R.Gopi said...

//அண்ணா நூற்றாண்டு விழா அதற்காக இவ்வளவு அண்ணா சொல்லணுமாங்கணா ? //

எல்லாம் ந‌ம‌க்கு நாமே திட்ட‌ம் மாதிரி தான்... இதெல்லாம் அர‌சிய‌ல்ல‌ ச‌க‌ஜ‌ம‌ப்பா..

//அரசு பதில்கள்...
கேள்வி: பெண்கள் எப்படி உட்கார்ந்தால் அழகு?

நம் முதுகில் ஏறி உட்காராத வரை எப்படி உட்கார்ந்தாலும் அழகுதான்.

பழமொழியை பதில்களை அனுபவிக்கணும்! ஆராய்ச்சி பண்ணக்கூடாது!.//

இது ந‌ச்... நல்லா இருக்கு...

//துக்ளக் கேள்வி பதில்

கே: பெண்களால் ரகசியத்தை காப்பாற்றவே முடியாது என்று இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில் நிருபிக்கப்பட்டுள்ளதே ?

பதில்: பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகவே, மஹா பாரதத்தில் இது மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டிருகிறது. அது ஆண் ஆதிக்கத் தீர்ப்பு; இன்று சொல்லப்பட்டிருப்பது ஆரய்ச்சியின் முடிவு. இதை ஏற்காதவன் மூட நம்பிக்கையில் உழல்பவன்.
அப்படியா ? பெண்கள் இதற்கு என்ன பதில் சொல்லுவார்கள் ? //

பார்ப்போம்... நானும் அதுக்கு தான் வெயிட் ப‌ண்றேன்...

Anonymous said...

IV.

Can you post this ?

(check out all parts 1 - 6)
http://www.sivajitv.com/events/Film-Artistes-Protest-Rally-Part-2.htm

See the way Vivek has spoken. He has spoken ill more of Vikatan group than on Dinamalar.

I do not know why Sripriya brings Dinamalar Ramesh name - how is he connected for this news item ? except that he is owner's son

ஊடகன் said...

ரொம்ப நாலா படிக்கனும்னு நினைச்சது.........
நன்றீ நண்பா...........

Anonymous said...

//இந்த வர// ?

Indian said...

நாயை அடிப்பானேன்?, ----சுமப்பானேன்? என்று சொல்கிறீர்கள்.

யாரை நாய் என்கிறீர்கள்?

---- எதை சுமப்பதாக சொல்கிறீர்கள்?

நேரடி பதில் தேவை

Anonymous said...

கலைஞர் டிவியில் ஞாயிறன்று காண்பிக்கப்பட்ட அண்ணா நூற்றாண்டு கருத்தரங்கத்தில் ஜெகத்ரட்சகன் வைணவராக தன்னை இருத்திக்கொண்டு பல ஆழ்வார் பாடல்களை மேற்கோள்காட்டி கருணாநிதியை கடவுளாக நினைத்து பேசியதற்கு பயங்கர கைதட்டல். அந்த பேச்சுகளை எடுத்து போடவும்.

மேலும் இன்னொருவர் பேசும்போது (ஆ.ராசா ?) அண்ணா சௌமிய வருஷத்தில் பிறந்ததாகவும், கருணாநிதி சாதாரண வருஷத்தில் பிறந்ததாகவும் - அண்ணா மறைவின் / பதவியேற்பின் போது கருணாநிதி எழுதியது சௌமியன் போய் சாதாரணன் வந்துள்ளேன் என பொருள் படும்படி ஏதோ பேசினார். 60 வருடப்பெயர்களை ஒத்துக்கொள்ளாமல், தமிழ் வருடப் பிறப்பையே மாற்றி அமைத்த கருணாநிதி, இந்த சௌமிய, சாதாரண விஷயங்களை பற்றி (எப்போதோ) எழுதியதை தற்போது அமைச்சர் ஒருவர் ஒது மேடையில் பேசுவதை ரசித்து சிரிக்கிறார்.

(அண்ணாவுக்கு சௌமியன் என்றொரு புனை பெயர் உண்டு என நினைவு)

விடியோ க்ளிப்பிங் இருந்தால் போடவும் - ஜெகத்ரட்சகன், சுப.வீ, ஆ.ராசா, வாலி, வைரமுத்து.

நன்றி.

Kasu Sobhana said...

Anonymous said...
//இந்த வர// ?

யாரோ பெண்களைக் கிண்டல் பண்ணி எழுதியதை வெளியிட்டதால் - காலை ஓடிச்சுட்டாங்க போல!

Anonymous said...

http://timesofindia.indiatimes.com/world/us/US-robbers-targeting-Indian-homes-for-gold/articleshow/5140123.cms

avanaethaan said...

http://timesofindia.indiatimes.com/videoshow/5142222.cms

M.S.R. கோபிநாத் said...

கேள்வியும் பதிலும் அருமை.நன்றி.

ஸ்ரீராம். said...

'சோ'வின் "சுய" மரியாதை பதில் (கலைஞருக்கு அண்ணா விருது பற்றிய கேள்வி) கூட நன்றாக இருந்தது.

நல்லூரான் said...

நான் கேள்வி கேட்கிறேன். இட்லிவடை நீர் பதில் சொல்லும்.
சமீபத்தில் வெளியான மதுரை- தேனி (வழி:ஆண்டி பட்டி) திரைப்படத்திற்கு தமிழ் பெயருக்கான வரிவிலக்கு அளிக்கப்பட்டதா? எல்லோரும் இந்த பெயரை மதுரை to தேனி என்று தானே கூறுகிறார்கள்.
ஒருவேளை இது தமிழ் பெயர் என்றே கூறினாலும் இந்த பெயரை எவ்வாறு தமிழில் அழைப்பார்கள்?!!!!

vednarayanan said...

Hi ,

Running short of ideas to write...

But the questions chosen were pretty good selection. I am not sure when Cho will change his ideas. There are some ideas which are politically incorrect to talk about and the question on women is one example.

Regarding Rajabakshe...

Just imagine few MPs from POK coming and meeting our PM and telling him how to treat muslims in Kashmir...

I also feel it is a big punishment for innocent srilankan tamil people to have supported Prabhaharan.

And basically I feel , in the world strengthen and nonpoliticise UN charters, Human Rights organisation. And this checks srilankan govt genocide. And within India strengthen EC, Supreme court, Human Rights etc. Strong institutions are important for checking any political setup.

Anonymous said...

VERU ENDHA NATTU THOODUKULUVAGA IRUNDHAL ANAIVARUM VELINADAPPU SEIDHU IRUPPARGAL.NAMMAVARGAL INDHA COMMENTSKKU PINNUM RAJAPAKKSHEVIDAN GIFTS PETTRU ULLARGA TIRUMA INGUDHAN PULI ANGU ELI.SUZHAL MEEDHU INGU VANDHU PAZHI PODUGIRAR.VETTRI ANAVATHHIL RAJAPAKSHE APPADITHAN PESUVAR.INGU VEERAM PESUM IVARGAL ANGU VAYADHAITHU NINDRADHU AAN.VAICHOLLIL VEERARDI.

Unknown said...

IV,
Kumudam pathil thaan top...

Rajapakshe and all ... no comments

Kamesh
Botswana

Baski said...

IV,

no new postings... what happened?

Balu said...

உயிர் பிழைத்த இட்லி வடைக்கு,
உங்கள் நற்பணி மேன்மேலும் தொடர்ந்து சிறக்க என் வாழ்த்துக்கள்!!!!

யதிராஜ சம்பத் குமார் said...

நாயை அடிப்பானேன்?, ----சுமப்பானேன்?


இந்த மஞ்சள் கமெண்ட் ரசிக்கும்படியாக இல்லை என்பது எனது தாழ்மையான அபிப்ராயம். எனது சிற்றறிவிற்கு எட்டியவரை, திருமாவளவன் உட்பட அனைத்து ப்ராண்டட் இனமானத் தமிழர்களுமே பொதுக்கூட்டங்களில் ராஜபக்ஷேவை மிகவும் கீழ்த்தரமாகப் பேசியுள்ளனர். அவையனைத்தும் ராஜபக்ஷேவின் கவனத்திற்கு சென்றிருக்கும். ஆயினும் திருமாவளவனை அவர் மரியாதையோடே நடத்தியிருக்கிறார். ஆனால் புலிகளைப் பற்றிய ஒரு படமெடுத்த ஒரு சிங்களவ இயக்குனரை இங்குள்ள சில இனமானமானவர்கள் நைய புடைத்தனர். ஆக, வித்யாசத்தை சற்றே கூர்ந்து நோக்கினால் யார் நாய் என்பது தெரியும்.


சொந்த மக்களைக் கொன்று குவித்ததற்கு துணை போனவர்கள் என்று காங்கிரஸாரை பகிரங்கமாக மேடைக்கு மேடை குற்றம் சாட்டிவிட்டு, பிறகு தேர்தல் ஆதாயங்களுக்காக பேசியவற்றை மறந்து அவர்களுடனேயே கூட்டணி கண்டவர் திருமா!! பிறகு நாக்கூசாமல் காங்கிரஸ் தலைவர்தான் தமிழர்களின் விடிவெள்ளி என்று வேறு கூறினார்.


இதே திருமாவளவன், ராஜபக்ஷேவை மேடைகளில் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளால் சாடியுள்ளார். ஏன் நேரில் கண்டபோது மட்டும் பல்லை இளித்து கை குலுக்கினார்?? இங்கு மேடைகளில் முழங்கியவற்றை அங்கேயும் பேசியிருக்கலாமே??

கௌதமன் said...

// உயிர் பிழைத்த இட்லி வடைக்கு,//
What does this mean?
Any problem?
Virus?