பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, October 16, 2009

அறிவியல் + ஆன்மிகம் = நகைச்சுவை



இது என்ன ?

மேலே உள்ள படம் தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர் மாவட்டங்களில் கற்கால மனிதர்கள் பயன்படுத்திய ஆயுத கற்கள் என்று சொல்லுகிறார்கள். இந்த செய்தி நக்கீரன் சைட்டில் நேற்று வந்தது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சோழகம்பட்டி, ரகுநாதபுரம், ஓட்டப்பாலம், புனல்குளம் மற்றும் பெருங்களூரிலும், மணப்பாறை வட்டத்தில் ஊனையூரிலும், கரூர் மாவட்டத்தில் ஜெகதாபியிலும் நுண் கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நாடோடியாக போகிற போக்கில் குறிப்பிட்ட நாட்களே இந்த இடங்களில் கற்கால மனிதர்கள் தங்கியுள்ளனர். எப்படி இப்படி துள்ளியமா சொல்ல முடியும் என்று தெரியவில்லை. இந்த கற்கள் (கி.மு.8000 - 2000) மற்றும் (கி.மு.50,000 - 10,000) என்கிறார்கள். அம்பு முனையில் வைத்தும் பறவைகளை தாக்கி வீழ்த்த பயன்படுத்தப்பட்டுள்ளன என்று சொல்லுகிறார்கள்.

இந்த மாதிரி கற்கள் பற்றிய செய்திகளை நம்பலாமா ?



போன செய்தி கூட பரவாயில்லை, ஆனால் நாசா விண்வெளியில் அனுப்பிய படத்தில் சனிஸ்வர தோற்றம் இருக்கு என்று சொல்லுவதை நம்பாமல் இருக்க முடியவில்லை. விஷ்வ ஹிந்துவின் இந்த ஆராய்ச்சி நம்மை சிந்திக்க வைக்கிறது. மேலே வாழை இலையில் உள்ள கற்கள் சிவலிங்கம் என்று சொல்லாமல் விட்டார்களே :-)


6 Comments:

(-!-) said...

சரக்கு மாஸ்டர் பேர மஞ்சள்ள போட்டா ஏன் மக்கள் ட்விட்டர்ல ஒக்காந்துண்டு எடுக்கச் சொல்றாங்க? என்ன உள்குத்து இது, இட்லி?

அடப்பாவி, தூக்கிடீரே! :-((

Anonymous said...

அட கமல் பெயர் இல்லாத பதிவா இருக்குதே!!! ஆச்சரியம் தான் போங்க!!

பெசொவி said...

என்ன செய்ய? திருவள்ளுவரை பற்றி கூட வெளி நாட்டு காரன் சொல்லித்தான் நாம பெருமை பட வேண்டியிருக்கிறது.

seethag said...

கற்க்கள் ஆயுதங்ககளஅக பயன்படுத்த்அப்பட்டது ஆஸ்திரேலியாவில் கண்டறியப்ப்அதுள்ளது.இத்தகய கற்களை தான் காண்பிப்பார்கள்

R.Gopi said...

இந்த‌ க‌ல்லுல‌ யாரோட‌ பேராவ‌து இருக்கா??

Erode Nagaraj... said...

//R.Gopi said...

இந்த‌ க‌ல்லுல‌ யாரோட‌ பேராவ‌து இருக்கா??//

இருக்கு, ஆனா தெரியாது...

பெயரை செதுக்கும்போது, கல் உடைந்துவிடக்கூடாது என்று அதிக அழுத்தம் கொடுக்கவில்லை. எனவே, உளி கொண்டு செதுக்கினாலும் லேசாகப் போய்விட்டது.

இது தான் கல்லுளிமங்கன் என்பது...