`உன்னைப் போல் ஒருவன்' என்று படத்தின் தலைப்பு சொல்கிறது.
பார்வையாளனான என்னைப் பார்த்து உன்னைப் போல் ஒருவன் என்று சொல்வதாகத்தான் பெரும்பாலும் அர்த்தப்படுத்திக் கொள்கிறோம். அது சரியான அர்த்தம்தானா ?!
படத்தில் பெயர் இல்லாத நாயகனே, என்னைப் போல் ஒருவனா நீ?
நான் மனசாட்சியின் குரலுக்கு எப்போதும் செவி கொடுக்கிற ஒரு நடுத்தர வகுப்பு மனிதன். என்னால் பிறருக்கு வலியும், பிறரால் எனக்கு வலியும் ஏற்படக்கூடாது என்று விரும்பும் சாதாரண மனிதன். ஜாதி, மதம், மொழி, இனம் அடிப்படையில் மனிதரை மனிதர் உயர்வு தாழ்வு பார்க்கக்கூடாது என்று விரும்பும் ஒருவன்.
குற்றம் சாட்டப்பட்ட எவரும் முறையாக விசாரிக்கப்பட்டு சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படவேண்டும் என்றே விரும்புகிறவன். கொலைக் குற்றவாளிக்குக் கூட அதிகபட்சமாக ஆயுள் தண்டனையே தரப்படலாமே தவிர, மரண தண்டனை கூடாது என்று நினைக்கிறவன். சட்டத்தை என் கையில் எடுத்துக் கொள்ள ஆசைப்படாதவன்.
நீ என்னைப் போல் ஒருவனா? நிச்சயம் இல்லை.
எனக்கு எல்லா தீவிரவாதமும் அருவருப்பானது. உனக்கு அப்படியில்லை. நீ இஸ்லாமிய தீவிரவாதத்தை மட்டுமே தேர்ந்தெடுத்து எதிர்க்கிறாய்.
மேலவளவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் தலைவர் முருகேசனைக் கொன்றவர்களும் , தருமபுரியில் அப்பாவியான கல்லூரி மாணவிகளை பேருந்திலேயே வைத்து எரித்தவர்களும், மதுரையில் பத்திரிகை அலுவலகத்தைத்தாக்கி அப்பாவி ஊழியர்களைக் கொன்றவர்களும் இது போன்ற எண்ணற்ற தீவிரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள் பலரும் தமிழகச் சிறைகளில்தான் இருக்கிறார்கள். அவர்களை விசாரணையில்லாமல் கொல்ல வேண்டும் என்ற கோபம் உனக்கு வரவில்லை.
இஸ்லாமிய தீவிரவாதிகளையும் அவர்களுக்கு உதவி செய்ததால் ஹிந்து வெடி மருந்து வியாபாரியையும் கொல்லப் புறப்படுகிறாய்.
உனக்கு ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்து விற்றவன் மட்டும் மகாத்மா காந்தியா ? அவனை ஏன் கொல்லாமல் விட்டிருக்கிறாய்? அவனிடம் ஆர்.டி.எக்ஸ் தொடர்ந்து வாங்கியவர்கள்/வாங்குகிறவர்கள் எல்லாரும் உன்னைப் போல தீவிரவாத எதிர்ப்பாளர்களா என்ன?
இஸ்லாமிய தீவிரவாதிகளை போலீஸ் பிடித்தால் உடனே சுட்டுக் கொன்றுவிடவேண்டும் என்று சொல்லுகிற இந்து தீவிரவாதத்தின் குரலாகவே நீ பேசுகிறாய். அப்படிச் செய்யாமல் போலீஸ் இருப்பதில் எரிச்சலடைந்து மிரட்டல் வேலையில் ஈடுபடுகிறாய்.
எந்த மதத்து தீவிரவாதியாக இருந்தாலும் சரி, அவர்களை விசாரிக்காமல் சுட்டுக் கொன்றுவிடவேண்டும் என்று நினைக்கிறவர்கள் சார்பாக புறப்பட்டு வந்தவனும் அல்ல நீ.
அப்படி நினைக்கிறவர்கள் கருத்தை ஏற்பதாக இருந்தால், மசூதியை இடித்து மதக் கலவரங்களை உற்பத்தி செய்த அத்வானியையும், அரசு இயந்திரத்தின் உதவியோடு முஸ்லிம்களை கும்பல் கும்பலாகக் கொல்ல ஏற்பாடு செய்த மோடியையும் சுட்டுக் கொல்ல நீ புறப்பட்டிருப்பாய்.
ஆனால் உனக்கு செலக்டிவ் அம்னீஷியா இருக்கிறது.
நீ என்னைப் போல் ஒருவன் அல்லவே அல்ல. நான், குற்றம் சாட்டப்படுபவர் மோடியானாலும் சரி, முகமது ஆனாலும் சரி முறையான நீதி விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்றே வலியுறுத்தும் சாமான்யன்.
உன்னைப் போல் ஒருவன் என்று நீ சொல்வது என்னையல்ல என்றால், யாரைப் பார்த்து அப்படிச் சொல்லியிருக்கிறாய்?
படத்தில் இன்னொரு நாயகனாக வருகிற காவல் அதிகாரியைப் பார்த்துத்தான். அதுதான் அசல் அர்த்தம். நாங்கள்தான் எங்களைச் சொன்னதாக தப்பாக எடுத்துக் கொண்டிருக்கிறோம்.
அந்தக் காவல் அதிகாரி யார்? முதலமைச்சர், தலைமைச் செயலாளர் எல்லாரும் முழு அதிகாரத்தைத் தன்னிடம் கொடுத்தால்தான் பிரச்னையைத் தீர்க்க முடியும் என்று மிரட்டுபவர் அவர். முழு அதிகாரமும் போலீஸிடம் இருந்தால்தான் விசாரணையில்லாமல் சுட்டுக் கொல்லமுடியும் அல்லவா? அவர் கருத்தும் உன் கருத்தேதான்.
கடைசியில் நீ கேட்டபடி அந்தத் தீவிரவாதிகளை ஒப்படைக்கிறார். மூன்று பேர் ஜீப் குண்டில் செத்ததும் நீ அவர் ஆள்தான் என்பது அவருக்குத் தெரிந்துவிடுகிறது.
நீ எந்த இடத்திலும் குண்டு வைக்கவில்லை அது வெற்று மிரட்டல்தான் என்று பின்னர் போனில் சொல்லும்போது அது தனக்கு முன்பே தெரியும் என்கிறார். அப்படி தெரியுமென்றால், நான்காவது தீவிரவாதியை சுட்டுக் கொல்லும்படி அவர் சொல்லியிருக்கத் தேவையே இல்லையே. உன் மிரட்டலை சாக்காக வைத்து அவர் அந்தத் தீவிரவாதிகளை விசாரணை இல்லாமல் கொல்லும் தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்கிறார் என்பதுதான் உண்மை.
கடைசியில் நீ இருக்கும் இடத்தையும் உன்னையும் கண்டுபிடித்த பிறகு உன்னை சுட்டுக் கொல்லாமல் கை குலுக்கி வழியனுப்பி வைக்கிறார். ஏன்? நீ அவரைப் போல் ஒருவன் என்பதனால்தான்.
காவல் துறை என்கவுன்ட்டர் என்ற பெயரில் விசாரணை இல்லாமல் தான் கொல்ல விரும்புபவர்களைக் கொல்லும் வசதிக்காக, உன்னைப் போன்றவர்களை மறைமுகமாக ஆதரிக்கும் என்பதுதான் உன் படத்திலிருந்து எனக்குக் கிடைக்கும் முக்கியச் செய்தி.
நீ நிச்சயம் என்னைப் போல் ஒருவன் அல்ல. நான் நிச்சயம் உன்னைப் போல் ஒருவனாக இருக்க விரும்பவே மாட்டேன்.
* * * * * * * *
சென்ற வருடம் மும்பையில் என் பிரிய நடிகர் நசிருதீன் ஷா நடித்த `எ வெட்னெஸ்டே', `ஷூட் ஆன் சைட்' என்ற படங்களைப் பார்த்ததும் இரண்டுமே தீவிரவாதம் தொடர்பானவை என்பதால், ஒப்பிட்டு எழுத நினைத்தேன். தமிழ் வாசகர்கள் இவற்றை டி.வி.டி.களாகக் கூட பார்க்கும் வாய்ப்பில்லாத நிலையில் எழுதுவதற்கான உந்துதல் குறைந்துபோய் விட்டது.
கமல்ஹாசன் `வெட்னெஸ்டே'வை தமிழில் தயாரிக்கிறார் என்ற செய்தி வந்ததும், நிச்சயம் கமல் என்ற ஸ்டாரால் நசீரின் யதார்த்தமான நடிப்பைத் தரமுடியாது என்பதால், தமிழ்ப் படம் ஹிந்தியின் தரத்தில் இருக்காது என்று கருதினேன். டெல்லி கணேஷ் மாதிரி ஒருத்தர் நடிக்க வேண்டிய ரோலில் கமல் நடித்தால் என்ன ஆகுமோ அதுதான் தமிழ் வெட்னெஸ்டேவுக்கு ஆகியிருக்கிறது.
என்னைப் பார், என் நடிப்பைப் பார் என்று ஒவ்வொரு ஃபிரேமிலும் சொல்லிக் கொண்டே நடிக்கும் பாணியில் கமல் என்ற நல்ல நடிகர் சிக்கிக்கொண்டு பல காலம் ஆகிறது. கமல் என்ற நல்ல திரைக்கதையாசிரியர், இயக்குநரையும் அந்த நடிகர் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்துவிடுவது இன்னொரு சோகம்.
அதனால்தான் படம் முழுவதும் காமன் மேன் சூப்பர் மேனாகவே இருக்கிறான். ஒருவேளை கமல் நடிக்காமல் இயக்கத்தை மட்டும் செய்கிற எதிர்காலத்தில் இது மாறக்கூடும். காமன் மேனை காமன் மேனாகவே காட்டக் கூடும்.
இந்தப் படம் வெற்றிகரமாக ஓடுகிறது என்று சொல்கிறார்கள். மகிழ்ச்சியாகவும் கவலையாகவும் இருக்கிறது. குத்துப்பாட்டு, ஆக்ஷன், ஆபாசம், சென்டிமெண்ட் மசாலாக்கள் இல்லாமல் ஒரு படம் ஆதரிக்கப்படுவது மகிழ்ச்சிதான். ஆனால், இந்தப் படமும் வணிக ஃபார்முலாவுக்குள்ளேதான் இருக்கிறது என்பதும் வித்தியாசமான படம் என்ற முகமூடிக்குள் இருந்துகொண்டு ஆபத்தான கருத்துகளைப் பரப்புகிறது என்பதும் பெரும் கவலையை ஏற்படுத்துகிறது.
சென்சார் விதிகளுக்கு விரோதமான முறையில் டி.வி. பப்பெட் ஷோ வழியே பகிரங்கமான பாகிஸ்தான் எதிர்ப்பு, முஸ்லிம்களை கீழ்த்தரமாகக் கிண்டல் செய்யும் வசனங்கள், வேலைக்குச் செல்லும் திறமையும் உறுதியும் உடைய நவீனப் பெண்ணை வேண்டுமென்றே சிகரெட் பிடிப்பவளாகக் காட்டும் வக்கிரம், கம்ப்யூட்டர் மேதை என்றால் அவன் பார்ப்பனனாகத்தான் இருப்பான் என்று குறிப்பாக உணர்த்தும் அபிவாதயே வசனங்களின் ஜாதியம் போன்றவை ஒரிஜினல் ஹிந்தியில் இல்லாதவை. கமல் தமிழுக்கு அளித்திருக்கும் `கொடைகள்' இவை.
பத்துப் பேரை ஒரே ஆள் தனியாக அடித்து வீழ்த்தும் ஹீரோவும் உன்னைப் போல் ஒருவன் ஹீரோவும் ஒருவன்தான். ஆர்.டி.எக்ஸ் குண்டுகள் வைப்பது முதல் க்ைளமேக்ஸில் குண்டு வைத்த ஜீப்பை ஒரு பொட்டல் காட்டில் நிறுத்தி வைப்பதுவரை மொட்டைமாடியில் தனியாக இருந்துகொண்டே சாதிப்பது எல்லாம் விஜய் பட ஃபேண்ட்டசியின் இன்னொரு வடிவம்தான்.
மாற்று சினிமா இது இல்லை.இதுவும் இன்னொரு ஏமாற்று சினிமாதான்..
நன்றி: குமுதம்
( படம்: ஹிஹி நம்ம வேலை, ஞாநி மன்னிப்பாராக )
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Sunday, October 11, 2009
என்னை போல ஒருவனா நீ - ஞாநி
Posted by IdlyVadai at 10/11/2009 07:18:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
56 Comments:
//மாற்று சினிமா இது இல்லை.இதுவும் இன்னொரு ஏமாற்று சினிமாதான்..///
மேலே சொன்னது உண்மையோ இல்லையோ, மாற்று-ஏமாற்று என்று ஞானி படத்தை வெட்டல்-ஒட்டல் செய்தது இட்லிவடைக்கே உரித்தான குசும்பு.
:-D
நான் இது குறித்து நான் ஏற்கனவே கமல்ஹாசனுக்கு மடல் போட்டிருக்கேன்
mowlee.blogspot.com
இவர் இப்படி எல்லாம் பொருமுவார்ன்னு தெரிஞ்சுருந்தா பேசாம இவருக்கே இந்தப்படத்துக்கு வசனம் எழுதற வாய்ப்பைக் குடுத்து இருக்கலாம்.
நல்லா களப்புறாய்ங்கய்யா அரசியல.
//அவன் பார்ப்பனனாகத்தான் இருப்பான் என்று குறிப்பாக உணர்த்தும்//
"குறிப்பால் உணர்த்தும்" என்பதிலிருந்தே நீங்கள் சொல்வது உங்களுடைய பெர்சப்ஷன் என்று ஆகிறது. அநுமானத்தில் ஜாதி வெறி, வன்முறையைக் கிளப்புவதும் தீவிரவாதம்தான். நீங்களும் நிச்சயம் என்னைப்போல ஒருவன் இல்லை சார்.
somebody must tell mr. nyani this is not a documentary but a feature film
Gnani is a good writer. I wonder, if he could tell people, What exactly is Good Cinema and How to make one?
ஒரு படத்தை வெச்சிகிட்டு எவ்வளவு பேருங்கையா விளம்பரம் தேடிப்பாங்க?
//
சிகரெட் பிடிப்பவளாகக் காட்டும் வக்கிரம்
//
அப்ப சினிமால சிகரெட் பிடிக்கிற கேரக்டர் எல்லாம் தப்பானவங்களா? என்ன கொடுமை சார் இது? இதுக்கு அன்புமணி ராமதேஸே எவ்வளவோ தேவலாம். :(
ஒரு படத்தை வெச்சிகிட்டு எவ்வளவு பேருங்கையா விளம்பரம் தேடிப்பாங்க?
//
வெற்றியால் விளம்பரமா? விளம்பரத்தால் வெற்றியா?
திருமலை நாயக்கர் மகாலில் இன்னும் ஒரு விவாதத்துக்கு விஜய் டிவி ஏற்பாடு செய்யும், விரைவில்.
அவ்வாறு நடக்கும் பட்சத்தில் (1) விஜய் டிவிக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து அந்த "அதிமேதாவி"-நீயா-நானா தொகுப்பாளர் மட்டும் வேண்டாம்.
(2) இட்லிவடை கண்டிப்பாக இதையும் கவர் செய்ய வேண்டும்.
//வெற்றியால் விளம்பரமா? விளம்பரத்தால் வெற்றியா?
//
இரண்டும் தான்
எனக்கும் இதே உருத்தல்தான் இருந்தது
மோடி பலமுறை முஸ்லீம்கள் ஆதரவுடன் பெரும்பான்மை ஆட்சி அமைத்து வருவதைக் கண்டும் சில 'ஞான' சூன்யங்கள் / அஞ்ஞானிகள் மோடியை முஸ்லீம் விரோதியாக மகிழ்வது ஏன்?
தமிழில் மூலத்தில் இல்லாத முஸ்லீம் அல்லாத ஒரு வியபாரியை தீவிரவாதிகளுக்கு துணை போகும் ஒரு பாத்திரத்தை படைத்ததற்கு கமலுக்கு இது தேவையா? இன்னும் 1000 ஆண்டுகள் கழித்தாவது இவர்களுக்கு பாராட்ட மனது இல்லையென்றாலும் வையாமல் புறங்கூறாத குணம் அமையுமா?
பலமுறை முஸ்லீம் ஆதரவுடன் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்தும் மோடியை முஸ்லீம் விரோதியாக சில 'ஞான' சூன்யங்கள் / அஞ்ஞானிகள் பாவிப்பது ஏன்?
தீவிரவாதிகளுக்கு துணை போகும் ஒரு ஆயுத கடத்தல் வியபாரியை மூலத்தில் இல்லாத மாதிரி ஒரு முஸ்லீம் இல்லாத கதாபாத்திரமாக தமிழில் படைத்ததற்கு, கமலுக்கு இது தேவையா?
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு கொண்ட குருதிப் புனலை மகானதியாக திகழ்பவரை பாராட்ட மனது இல்லையென்றாலும் ஹே ராம் வையாமல் இருப்பார்களா?
According to me Gnani is nuts, he will see everything in the negative aspect and thats the reason all his comments and view are all in the negative mode, people should ignore these kind of crappies from the society. He thinks that he is a re-innovator of th society, according to me he is a F!@#$ off
Veeraraghavan said ..
//பலமுறை முஸ்லீம் ஆதரவுடன் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்தும் மோடியை முஸ்லீம் விரோதியாக சில 'ஞான' சூன்யங்கள் / அஞ்ஞானிகள் பாவிப்பது ஏன்? //
Anyone who supports Hnduism/Hindus are considered as enemies of Abrahamic religions.
-Praveen
idlyvadai total damage!!! neenga assume panna ellaa vishayamum bussssssu! kamal broke your nose like never before. maanam irunthaa better stop posting against UPO / Kamal
http://idlyvadai.blogspot.com/2009/03/blog-post_23.html
இத்திரைப்படத்தை தமிழில் கமல் எடுக்கப்போகிறார் என்பது சோகமான செய்தி.
Now its the more sweetest news!!!
கமல் இத்திரைப்படத்தை தொழில்நுட்ப ரீதியாக சிறப்பாக எடுப்பார் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. கூடவே, மூன்று இஸ்லாமிய அடிப்படைத் தீவிரவாதிகளுக்கு பதிலாக மூன்று இந்து அடிப்படைத் தீவிரவாதிகளைக் காண்பிப்பார்.
You are again flawed!
இஸ்லாமிய மக்களின் மனத்தில் இருக்கும் அச்சத்தைப் பற்றிப் பேசுவார். இதில் தவறில்லை, ஆனால், இந்துத் தீவிரவாதம் பற்றி மட்டுமே பேசுவார். இந்து நம்பிக்கைகளைக் கிண்டல் செய்யும் வசனங்கள் இல்லாவிட்டால் கமலுக்குத் தூக்கம் வராது. அதேசமயம், இஸ்லாமிய கிறித்துவ நம்பிக்கைகளின் மீதான கிண்டல் சிறிதும் இராது. தேவைப்பட்டால் அதைப் பாராட்டவும் செய்வார்.
boss, moonu maangaa!!!
இத்தகைய ஆபத்துகளோடு தயாராகும் ‘தலைவன் இருக்கிறான்’ படத்தைப் பார்த்து[b] எந்தவொரு சாதாண குடிமகனும்[/b], நஸ்ருதீன் ஷா அளவு இல்லாவிட்டாலும்,[b] கொஞ்சம்கூட கொதித்தெழ மாட்டான் என்பதே கமல் போன்றவர்களின் பலம்.[/b]
boss, naalu maanga!!! proof - http://www.eramurukan.in/tamil/magazines.php
[quote]உ.போ.ஒ வெளியான பிறகு ஜிமெயில், என் சொந்த இணையத் தள் அஞ்சல் ரெண்டையும் திறந்தால் கொட்டுகிற் கடிதங்களில் பாராட்டு தவிர கண்ணை ஈர்ப்பது - 'டே பா.பன்னாடை' ரக அன்பான அழைப்புகள். கருவறுக்கப் போவதாக மிரட்டல்கள். சகல பக்கங்களில் இருந்தும் மத வேறுபாடு இல்லாமல் வசவு மழை பொழிகிறவர்கள் கமல்ஹாசனையும் விட்டு வைக்கவில்லை. ஒருவர் சிரத்தையாக திட்டி வந்த விமர்சனங்கள், பாராட்டி வந்த விமர்சனங்கள், மொக்கை வகையறா என்று நிறைய் மெனக்கெட்டு யு.ஆர்.எல்களைத் தொகுத்து அனுப்பி இருந்தார். இன்னொருவர் கடிதம்-1, 2, 3 என்று சீரியல் நம்பர் போட்டு கவனமாக விமர்சிக்கிறார். எல்லாருக்கும் நன்றி.
[/quote]
Idlyvadai blog is depending on UPO for blog hits. From the time of announcement, till now, not even a sumaal movement have been missed.
wherever U(PO) goes I(dlyvadai) follows Total Coverage!! Daanks for the eshtra publikutty (eventho the success is overflowing!!!)
a sumaal kalleksaan of idly-vadai's UPO posts!!
Monday, March 23, 2009 ஒரு புதன்கிழமை – இயலாமையும் இந்திய அரசியலும்
http://idlyvadai.blogspot.com/2009/03/blog-post_23.html
Thursday, September 03, 2009 உன்னை போல் ஒருவன் டிரெய்லர்
http://idlyvadai.blogspot.com/2009/09/blog-post_2322.html
Wednesday, September 09, 2009 உன்னை போல் ஒருவன் பாடல்கள்
http://idlyvadai.blogspot.com/2009/09/blog-post_09.html
Thursday, September 17, 2009 கமல தளம் - இரா.முருகன்
http://idlyvadai.blogspot.com/2009/09/blog-post_17.html
Friday, September 18, 2009 உன்னை போல் ஒருவன் - FIR
http://idlyvadai.blogspot.com/2009/09/fir.html
Wednesday, September 23, 2009 கமல் கலைஞர் சந்திப்பு
http://idlyvadai.blogspot.com/2009/09/blog-post_23.html
Tuesday, September 29, 2009 உன்னை போல் ஒருவன் உலகில் இல்லை - கலைஞர் டிவி வீடியோ
http://idlyvadai.blogspot.com/2009/09/blog-post_6102.html
Wednesday, September 30, 2009 தமிழா தமிலா - மாமிகள் விளக்கவும்
http://idlyvadai.blogspot.com/2009/09/blog-post_4340.html
Tuesday, October 06, 2009 கமல் கலைஞர் சந்திப்பு - போட்டி முடிவுகள்
http://idlyvadai.blogspot.com/2009/10/blog-post_06.html
Friday, October 09, 2009 உன்னை போல் ஒருவன் - கடிதங்கள் (Baashaa letter)
http://idlyvadai.blogspot.com/2009/10/blog-post_7466.html
Sunday, October 11, 2009 என்னை போல ஒருவனா நீ - ஞாநி
http://idlyvadai.blogspot.com/2009/10/blog-post_11.html
we are a crazy bundle(bunch is small)of people. How can we get excited over a movie and that too a remake?I read endrendrum anbudan bala's blog about the andra flood. it is heart breaking to read about such human distress cox of few individuals and politics. We have no time to address these issues but sit and yap all the time about movies. No wonder we are the the way we are.
இருந்தால் என்ன தல. அடிக்கு அடி குடுத்தால் மட்டுமே(எல்லா தீவிரவாதத்துக்கும்) உலகம் உருப்புடும்
(1) விஜய் டிவிக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து அந்த "அதிமேதாவி"-நீயா-நானா தொகுப்பாளர் மட்டும் வேண்டாம்.
Gopinath is Getting Over Exposed....Alavukku Mirinal Amirthamum Nanju......
I guess gnani is criticising the movie with out seeing the film as he does for all times. No womder in this article, this is expected.
மாற்று, ஏமாற்று... இந்த ஒட்டு வேலை செய்ததில் இட்லியின் பங்கு பிரமிக்க தக்கது...
இந்த ஒட்டு ஃபோட்டோவை பார்த்து ஞானி அவர்கள் கோபம் கொண்டு அஞ்ஞானியாகவோ, மெய் ஞானியாகவோ ஆகட்டும்... ஆனால், நம் கலைஞானி மேல் இவ்வளவு கோபம் கொள்ள வேண்டாம் என்று யாராவது சொல்லுங்களேன்...
சும்மா ஒரு ஏஸீ ரூமில் உட்கார்ந்து கொண்டு, இந்த மாதிரி வெட்டி பஞ்சாயத்து யார் வேண்டுமானாலும் பேசலாம், விசாரணை கமிசன் வேண்டும், மரண தண்டனை கூடாது ஏனெனில் ஆயிரம் கொலைகள் செய்துள்ளாறல்லவா அதனால்!! என்று போலி விளம்பரம் தேடும் இந்த மாதிரி ஆட்களை எவனாவது குண்டு வைத்து கொலை செய்யாமல் குற்றுயீரு குலைஉயிருமாய் விட்டாள் தான் இந்த மாதிரி பேச மாட்டார்.
/****kggouthaman said...
ஒரு படத்தை வெச்சிகிட்டு எவ்வளவு பேருங்கையா விளம்பரம் தேடிப்பாங்க?
***/
Good question!!
I guess it is a nice movie and talks of what an indian feels internally whether it is right or wrong. It even includes the fact that those who want to go by the rulebook (mohanlal character) wants to kill the last terrorist. So even if Gnani feels like what he has written above (or for that matter anyone) , it is only for public consumption.
I am sure even the highest authority in govt feels so. But why the parliment attacker is not hanged is an obvious political compulsion. Once maharashtra elections are over , they might do it as it is a long way for next election. And muslims will forget the hanging by that time.
ஞானி கமலை போல் ஒருவன்(ர்) தான்.. இருவரும் வித்தியாசமாய் செய்ய வேண்டுமென எதாவது செய்வர்; எழுதுவர்.. பேசுவர்.. ஞானியின் இந்த விமர்சனத்தையும் அந்த வகையில் மட்டும் தான் பார்க்க முடியும்.. எந்த ஒரு படைப்புக்கும் எவ்வலவோ வகை பார்வைகள்.. விமர்சனங்கள்.. அதில் இதுவும் ஒன்று.
எந்த படைப்பும் (சினிமா உட்பட) நாம் பார்க்கும் போது என்ன மூடில் இருக்கிறோம் என்பதை பொருத்தும் நம் கருத்து மாறும்.
இது தவிர சிலருக்கு சிலர் மீது "காண்டு" என்றால் அவர்களை எழுத்தில் போட்டு காய்ச்சி எடுத்து விடுவார்கள்.. ஞானிக்கு கமல் மேல் என்ன கோபமோ? "காண்டோ"?
சமீபத்தில் சுசி கணேசன் மீது உள்ள எதோ ஒரு பழைய பகையால் அவரது படத்தை ஞானி கிழி கிழி என கிழித்திருந்தார். கந்த சாமி கொஞ்சம் சொதப்பல் தான்.. ஆனால் அந்த படம் மூலம் ஒரு கிராமத்தை தத்து எடுத்து அவர்களுக்கு சில நல்ல விஷயங்கள் (விளம்பரத்துக்கே என்றாலும் ) செய்து தந்தது பற்றி ஞானி அந்த கட்டுரையில் மூச்சு விட வில்லை. இது அவர் ஒன்றும் நடு நிலை வாதி அல்ல தனக்கு பிடிக்காதவர்கள் என்றால் எழுத்து சாட்டையை நன்றாக சுழட்டுபவர் என்றே காட்டுகிறது.
மோகன் குமார்
http://veeduthirumbal.blogspot.com/
/***kamal fan said...
idlyvadai total damage!!! neenga assume panna ellaa vishayamum bussssssu! kamal broke your nose like never before. maanam irunthaa better stop posting against UPO / Kamal***/
You broke idlyvadai's nose like never before. Super!!!
கமலை வைத்து தான் இப்போது இட்லி வேகிறது (பிழைப்பு நடத்துகிறார்!!! ).
கடை நடத்த வேறு வழி இல்லை போலும், திராவிட கட்சிகளின் பிராமண எதிர்ப்பு கொள்கை போல!!!
"காண்டு" என்பது மிக மோசமான கெட்ட வார்த்தை மராத்திய மொழியில், அது தமிழ் வார்த்தை அல்ல என நினைக்கிறேன், தமிழ் ஆர்வலர்கள் விளக்கவும்.
தமிழில் "காண்டு" என்பது "ஒருவர் மீது கோபம்/ வெறுப்பு" என்ற வகையிலே தான் use செய்ய படுகிறது. மராத்தியில் வேறு அர்த்தம் என்றால் நான் அறியேன் பராபரமே..
Mohan Kumar
http://veeduthirumbal.blogspot.com/
Isn't the same Gnani who wrote an article praising "Wednesday" in one of the o-pakkangal pages(published in Kumudam)- for the "boldness" of the movie makers in choosing the names of the terrorists?
Does someone have a link for it?
/****தமிழில் "காண்டு" என்பது "ஒருவர் மீது கோபம்/ வெறுப்பு" என்ற வகையிலே தான் use செய்ய படுகிறது***/
use செய்ய படுகிறது என்பதால் தமிழ் வார்த்தை ஆகி விடாது, ஊர்புறங்களில் ஒரு வாரத்தை மிக பிரபபல்யம் அது ("ச்சூ மாதரசோறு" மருவி உள்ளது!!!) எவ்வளவு மோசமான கெட்ட வார்த்தை தெரியுமா அது??
நான் உங்களை ஏதும் குற்றம் சொல்லவில்லை, காண்டு என்பது தமிழ் வார்த்தை அல்ல என நினைக்கிறேன், நம்மையும் அறியாமல் வேற்று மொழி நமதாகி விட்டது, இதை தமிழ் மொழி காவலர்கள் என சொல்லிக் கொள்ளும் திருமா, மருத்துவர் ஆகியோரிடம் கேட்டால் தமிழ் என்று தான் என்று சொல்வார்கள்.
/***Isn't the same Gnani who wrote an article praising "Wednesday" in one of the o-pakkangal pages(published in Kumudam)- for the "boldness" of the movie makers in choosing the names of the terrorists?
Does someone have a link for it?***/
இதை படித்ததே டைம் வேஸ்ட் இன்னும் அந்த குப்பைய வேற படிக்கணுமா??? வேண்டாம் உபயோகமான வேற வேலைய பாருங்க!!
இந்த கடையில ( இட்லிவடை ) மெனுவ எப்படா மாத்துவீங்க ?
/***"என்னை போல ஒருவனா நீ - ஞாநி"***/
ஞாநியைப் போல் எவனாலும் இருக்க முடியாது!! இருந்தாலும் இல்லை என்று தான் சொல்லுவார் ஞாநி.
/*** SATHEESH said...
இந்த கடையில ( இட்லிவடை ) மெனுவ எப்படா மாத்துவீங்க ?***/
அடுத்த கமல் படம் வரும் போது மெனு மாறும்!!!
/****நான், குற்றம் சாட்டப்படுபவர் மோடியானாலும் சரி, முகமது ஆனாலும் சரி முறையான நீதி விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்றே வலியுறுத்தும் சாமான்யன்.***/
அட ஆச்சரியமா இருக்கே!!! ஞானிக்கு இப்படியெல்லாம் பேசத்தெரியுமா??? ஞாநி தன்னை சாமானியன் என்றெல்லாம் வேற சொல்லுகிறாரே!! எனக்கு ஒண்ணுமே புரியவில்லை!!!
//
/***Isn't the same Gnani who wrote an article praising "Wednesday" in one of the o-pakkangal pages(published in Kumudam)- for the "boldness" of the movie makers in choosing the names of the terrorists?
Does someone have a link for it?***/
//
இதை படித்ததே டைம் வேஸ்ட் இன்னும் அந்த குப்பைய வேற படிக்கணுமா??? வேண்டாம் உபயோகமான வேற வேலைய பாருங்க!!
Anony,
Idlyvadai kadikku vandhu oru bloga padichi,adhukku oru commenta pottu,andha commentukku oru replya padichi,andha replykku oru badil-reply (adhan ippo type pannittu irrukene) podum podhe ungallukku theriya venam - ennakku "uboyogamma" panna onnum illannu ;-)
/****Anony,
Idlyvadai kadikku vandhu oru bloga padichi,adhukku oru commenta pottu,andha commentukku oru replya padichi,andha replykku oru badil-reply (adhan ippo type pannittu irrukene) podum podhe ungallukku theriya venam - ennakku "uboyogamma" panna onnum illannu ;-)***/
Yes, you are correct, கமலை வைத்து அற்ப விளம்பரம் தேட எழுதிய இந்த பதிவை பார்த்த பிறகு எதற்கு இதே போன்ற படத்திற்கு அவர் எழுதியதை படிக்க வேண்டும்? என்ன எழுதிருப்பார் என ஊகிக்க முடிந்ததால் அப்படி சொன்னேன்.
Dear Idly Vadai readers,
I don't understand your point of view. On one side you say that violence is natural when you are suppressed. But on the other hand, when Srilankan Tamils use it against suppression, then you term them as terrorist?!
Any form of violence should be considered as an act of terrorism.
தீவிரவாதம் என்பதற்கு புதிய பொருள் கற்பிக்க முயல்கிறார் போலும் இவர். தருமபுரி, மேலவளவு, மற்றும் மதுரையில் நடந்த கொலைகளெல்லாம் அரசியல் ஆதாயத்திற்காக ஒரு குறுகிய வட்டத்தினரால் செய்யப்பட்டது. மேற்படி சம்பவங்களை, சம்பவம் நடந்தபொழுது, இவர் எவ்வாறு நோக்கினார் என்பது எனக்கு தெரியவில்லை (நல்லவேளை, வாய்க்கால் தகராறில் நடந்த கொலைகளைஎல்லாம் இவர் பட்டியலில் சேர்க்கவில்லை). ஆனால் தீவிரவாதம் என்பதற்கு பொருள் வேறு. அது ஒரு குறிப்பிட்ட கருத்தை நிலைநாட்டுவதற்காக ஆயுதம் ஏந்துவது. லஸ்கர் -இ- தொய்பா செய்வது தீவிரவாதம் என்றால், ஆர் எஸ் எஸ் செய்வதும் தீவிரவாதம் தான். "உன்னை போல் ஒருவனில்" லஸ்கர் -இ- தொய்பா மற்றும் அதை சார்ந்த இயக்கங்களின் பங்கு மட்டும் அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கிறது. இது ஒன்றுமட்டும்தான் முரணாக தெரிந்த விஷயம்.ஆனால் இவர் புத்திசாலிதனமாக விமர்சிப்பதாக நினைத்துக்கொண்டு எதையோ சொல்ல முற்பட்டிருக்கிறார்.
மேலும்,
ஒரு நிருபர், புகை பிடிப்பதென்பது அவரது தனிப்பட்ட விஷயம் - படத்திற்கு தேவையில்லாதது - ஆனால், இவர் சொல்லும்படி, அது வக்கிரம் கிடையாது.
படத்தில் ஒரேயொரு கணினி பொறியாளர் காண்பிக்கபடுகிறார் - இவருக்குத்தான் அவரது குலம், கோத்திரம் எல்லாம் அறிய ஆவலாய் இருக்கிறது (என்னவொரு ஜாதீயம்!). என்ன செய்வது, ஒவ்வொரு ஜாதியிலும் ஒரு கணினி பொறியாளர் என்றா காண்பிக்கமுடியும்.
மொத்தத்தில் எந்தவொரு விஷயத்தையும், நான் இதெற்கெல்லாம் அப்பாற்பட்டவன், என்ற பாணியில் விமர்சிக்க முடியும். ஆனால் நடைமுறையில், சில விஷயங்கள் இப்படித்தான் என்பதை ஒப்புகொள்ளவும், மற்றவர்களுடன் அதை அவ்வாறே பகிர்ந்துகொள்ளவும் சற்று தைரியம் தேவை. கமல் அதைத்தான் செய்திருக்கிறார். இவருக்குதாங்கலை. ஏதும் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையோ என்னவோ?
mowlee.blogspot.com
இங்கே கமலுக்கு கேட்கப்பட்ட கேள்வி சூப்பரப்பு
என்ன எப்போ, எல்லா தீவிரவாதியையும் ஹிந்துவா காமிசிருக்னுமோ?
இல்லாட்டி எல்லா தீவிரவாத குற்றவாளிகளையும் இப்படி கொல்லற மாறி படம் பண்ணிருக்கனுமோ?
எப்படி எடுத்தாலும் குறை கண்டுபிடிக்க இந்த செகுலர் புத்திசாலிகளுக்கு சொல்லியா தரனும். எதையோ பார்த்து ஏதோ கத்துற மாறி இருக்கு. ஞானிக்கு இது அழகில்லை.
cinema vai just entertainment aha parunghal.. those days are over where movie & dramas are crafted to lift and emphazize social justice. today cinema is just for fun and we shd look at it that way.
//லஸ்கர் -இ- தொய்பா செய்வது தீவிரவாதம் என்றால், ஆர் எஸ் எஸ் செய்வதும் தீவிரவாதம் தான்//
என்ன ஒரு கண்டுபிடிப்பு. ஆர் எஸ் எஸ் செய்த தீவிரவாத செயல்களயும், வைத்த குண்டுகளையும் கொன்ற அப்பாவிகளையும் தயவு செய்து பட்டியலிடுங்கள்.
/////கடைசியில் நீ கேட்டபடி அந்தத் தீவிரவாதிகளை ஒப்படைக்கிறார். மூன்று பேர் ஜீப் குண்டில் செத்ததும் நீ அவர் ஆள்தான் என்பது அவருக்குத் தெரிந்துவிடுகிறது.
நீ எந்த இடத்திலும் குண்டு வைக்கவில்லை அது வெற்று மிரட்டல்தான் என்று பின்னர் போனில் சொல்லும்போது அது தனக்கு முன்பே தெரியும் என்கிறார். அப்படி தெரியுமென்றால், நான்காவது தீவிரவாதியை சுட்டுக் கொல்லும்படி அவர் சொல்லியிருக்கத் தேவையே இல்லையே. உன் மிரட்டலை சாக்காக வைத்து அவர் அந்தத் தீவிரவாதிகளை விசாரணை இல்லாமல் கொல்லும் தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்கிறார் என்பதுதான் உண்மை.
கடைசியில் நீ இருக்கும் இடத்தையும் உன்னையும் கண்டுபிடித்த பிறகு உன்னை சுட்டுக் கொல்லாமல் கை குலுக்கி வழியனுப்பி வைக்கிறார். ஏன்? நீ அவரைப் போல் ஒருவன் என்பதனால்தான்.///////
You are really great Gnani. Very deep analysis. But, too late to tear Kamal's face.
ஐயா கமல் ஃபேன்,
நான் சொன்னது போல் கமல் படம் எடுக்காதது நல்லதுதான். ஒன்றானவன், இரண்டானவன், உருவான செந்தமிழில் மூன்றானவன் என்றெல்லாம் நீங்கள் என்னை வரிசைப்படுத்தி எழுதியிருப்பதைப் பார்த்தால் நீங்கள் எனக்கும் தீவிர ரசிகர் போலிருக்கிறது. யாருக்கும் தீவிர ரசிகராக இருக்காதீர்கள் என்று ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.
ஐயன்மீர் சொன்னதில் ஒரு சின்ன திருத்தம்.
//இத்தகைய ஆபத்துகளோடு தயாராகும் ‘தலைவன் இருக்கிறான்’ படத்தைப் பார்த்து[b] எந்தவொரு சாதாண குடிமகனும்[/b], நஸ்ருதீன் ஷா அளவு இல்லாவிட்டாலும்,[b] கொஞ்சம்கூட கொதித்தெழ மாட்டான் என்பதே கமல் போன்றவர்களின் பலம்.[/b]//
இத்தகைய ஆபத்துகளோடு படம் தயாராகவில்லை என்பதால்தான் கொதித்தெழுந்திருக்கிறார்கள் - அதனையே இரா.முருகனுக்கு வந்த மடல்கள் காண்பிக்கின்றன என்று சொல்லலாம். நான் சொன்னபடி, கமல் எல்லாவற்றையும் மாற்றியிருந்தால், மக்கள் கொதித்தெழாமல் இருந்திருக்கலாம் என்னும் கருத்து இன்னும் அப்படியேதான் இருக்கிறது.
இன்னும் நான் எழுதிய கமல் படம் விமர்சனங்களையெல்லாம் நீங்கள் தேடிப்பிடித்து, எல்லாவற்றையும் வரிசைப்படுத்தவேண்டும். தீவிர கமல் ரசிகரல்லவா நீங்கள்.
ஹரண் உங்களுக்கு மக்கள் மனத்தில் உள்ளது அப்படியே புரிகிறது என்ற நினைப்பு அதிகம் இருக்கிறது என நினைக்கிறேன்.
ஐயா ஹரன்பிரசன்னா!
நீங்கள் சொன்ன எல்லாமே புஸ்ஸாகிவிட்டது என்று தான் சொன்னேன். அங்கேயே உங்கள் கணிப்புக்கள் தப்பாகி விட்டன, நீங்கள் தோற்று விட்டீர்கள் அதை நீங்கள் மறுத்தாலும் வசதியாய் மறைத்தாலும் உங்கள் முகத்தில் முட்டை தான்!! முதலில் அதை துடைத்துக்கொள்ளுங்கள்!!!மேற்கொண்டு பேச வசதியாயிருக்கும்
இப்போது மக்களில் மிகச்சிலர் கொதித்தெழுந்திருப்பது பல்வேறு விஷயங்களுக்கு. சிலர், படம் இந்துத்துவா பேசுகிரது என்கிறார்கள். சிலர், முஸ்லிம்களை ஆதரிக்கிறது என்கிறார்கள். யாருமே, நீங்கள் சொன்னதுபோல் இந்து அடிப்படை தீவிரவாதிகளை காண்பிக்கவில்லை என்று குறைகூரவில்லை. இல்லாத குதர்க்கத்தை சொல்லிவிட்டு அதை நியாயப்படுத்துகிறீர்கள். இரா.முருகனுக்கு மதவேறுபாடுகளின்றி எல்லாப்பக்கமும் வசவுக்கடிதஙள் வந்ததகத்தான் சொல்கிராரே ஒழிய, தனக்கு வந்த எந்த கடிதத்தையும் அவர் பிரசுரிக்கவில்லை.னீங்கள் எங்கேயிருந்து அவர் கடிதங்களை படித்தீர்?!?!? நீங்கள் கமல் பற்றி சொல்லி புஸ்ஸான கருத்து அப்படியே புஸ்ஸாகத்தான் இருக்கும், அது என்றுமே நிஜமாக முடியாத ஒரு முட்டாள்க்கருத்து!!
உங்கள் புஸ்ஸு கணிப்பும், உங்கள் பின்னூட்டதில் இருக்கும் அசட்டுத்தனமுமே தாங்கல, இதுல உங்க மத்த விமர்சனம் வேற படிப்பேனா நான்?!?!?
கமல் என்றால் உங்களுக்கு கிள்ளுகீரையா???
கமலின் படங்கள் என்னதான் விமர்சீக்கப்பட்டாலும் இப்பொழுது தான் பல கோணங்களில் பலரால் விவாதிக்கப்படுகிறது, இதுவே படத்திற்கு கிடைத்த நல்ல அங்கீகாரம் தான்...
/***கணியன் பூங்குன்றனார் said...
ஹரன்பிரசன்னா,
//அவர் பாடுவதற்கும் பேசுவதற்கும் வாயைத் திறக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும்//
நீங்கள் எழுதுவதற்கும் பின்னூட்டமிடுவதற்கும் கீபோர்டையும் மவுசையும் கையில் எடுக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும்!
***/
Repeatu.....
கால்கரி சிவா அவர்களே,
தங்களின் புத்திசாலிதனம் மெச்சினோம்! ஒரு இயக்கம் தீவிரவாத இயக்கம் என்று நீங்கள் நம்புவதற்கு, பல பட்டியல் கேட்கிறீர். பாவம் மக்கள். விட்டுவிடுங்கள். அது தீவிரவாதம் இல்லாத இயக்கமகாவே இருந்துவிட்டு போகட்டும்.
நேரம் கிடைத்தால் இதை கொஞ்சம் பாரும்!
நாந்தான் சட்டத்தை மதிக்கறவன்... மத்தவன் எல்லாம் டுபாக்கூர்னு ஞானி ரெம்ப நாளா சொல்லினு கீறாரே...
அத்வானி மேலயும் மோடி மேலயும் விசாரணை நடந்துனு கீது... அதுக்குள்ளாற இவர் எப்படி அவுங்கோ குத்தம் செஞ்சாங்கனு சொல்லலாம்... முறைப்படி விசாரணை நடந்து ரெண்டு பேரும் மசூதியை இடிச்சாங்கோ.. கொலை செஞ்சாங்கோனு சொல்றவரை அவுங்களை குத்தவாளினு சொல்ல இவர் யாரு?
/*** Ratan said...
நாந்தான் சட்டத்தை மதிக்கறவன்... மத்தவன் எல்லாம் டுபாக்கூர்னு ஞானி ரெம்ப நாளா சொல்லினு கீறாரே...
அத்வானி மேலயும் மோடி மேலயும் விசாரணை நடந்துனு கீது... அதுக்குள்ளாற இவர் எப்படி அவுங்கோ குத்தம் செஞ்சாங்கனு சொல்லலாம்... முறைப்படி விசாரணை நடந்து ரெண்டு பேரும் மசூதியை இடிச்சாங்கோ.. கொலை செஞ்சாங்கோனு சொல்றவரை அவுங்களை குத்தவாளினு சொல்ல இவர் யாரு?***/
எனக்கு இது தோனாம போச்சே!! Good question.
இன்னைக்கு பெண்கள் பப்புக்கு போய் தண்ணியடிக்கலாம் .இது அவர்கள் உரிமை
என்று உங்களை போன்றோர்தான் எழுதினார்கள்.இன்று அதை (உரிமையை ) சினிமாவில் காட்டினால் வக்கிரம் என்கிறீர்கள்.
எகொச! :-(
இட்லிவடை ட்விட்டர்ல பேசினாக்கூட உ.நா.படத்தப் பத்திதான் பேசறாரு!!!!!!!!!!!!!!!!!
:-D
Negative People will Always Criticize ; SOURCE -YOU CAN WIN BOOK)
Some people criticize no matter what. It does not matter which side you are on, they are
always on the other side. They have made a career out of criticizing. They are "career
critics." They criticize as if they will win a prize at a contest. They will find fault with every
person and every situation. You will find people like this in every home, family, office.
They go around finding fault and telling everybody how bad things are and blaming the
whole world for their problems. We have a name for these people. They are called
energy suckers. They will go to the cafeteria and drown themselves in 20 cups of tea and
coffee and smoke to their hearts' content with one excuse: they are trying to relax. All
that they are doing is causing more tension for themselves and for others around them.
They spread negative messages like a plague and create an environment conducive to
negative results.
Robert Fulton invented the steamboat. On the banks of the Hudson River he was
displaying his new invention. The pessimists and the skeptics were gathered around to
observe. They commented that it would never start. Lo and behold, it did. As it made its
way down the river, the pessimists who said it would never go, started shouting that it
would never stop. What an attitude!
SOME PEOPLE ALWAYS LOOK FOR THE NEGATIVE
There was a hunter who bought a bird dog, the only one of its kind in the world. That
could walk on water . He couldn't believe his eyes when he saw this miracle. At the
same time, he was very pleased that he could show off his new acquisition to his friends.
He invited a friend to go duck hunting. After some time, they shot a few ducks and the
man ordered his dog to run and fetch the birds. All day-long, the dog ran on water and
kept fetching the birds. The owner was expecting a comment or a compliment about his
amazing dog, but never got one. As they were returning home, he asked his friend if he had noticed anything unusual about his dog. The friend replied, "Yes, in fact, I did notice
something unusual. Your dog can't swim."
Post a Comment