இந்த படத்தில் இந்த கோயில் ஏன் பூட்டப்பட்டுள்ளது ?
இன்றும் தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு மூலையில் ( இந்தியாவில் என்று படியுங்க ) தாழ்த்தப்பட்டவர்கள் பொது இடங்களில் நடத்தப்படும் அவலம் இன்றும் இருக்கிறது. இந்த அவலத்தை முற்றிலும் ஒழிப்பவர்களுக்கு சாமாதானத்திற்கான நோபல் பரிசை 'sur'prize'க கொடுக்கலாம்.
சரி, பக்கத்தில் உள்ள படம் விருதுநகர், பாவை கிராமத்தில் இருக்கும் கண்ணிமர் கோயில், தலித் மக்கள் உள்ளே போகாமல் இருக்க இந்த பூட்டு. இது வெறும் சாம்பிள் தான் தமிழ்நாட்டில் இது போல பல இடங்களில் இது தொடர்கிறது.
தமிழகத்தில், தாழ்த்தப்பட்டவர்களை இரட்சிப்பதற்காகவே அவதரித்திருக்கும் பல அவதார புருஷர்களுள் மிக முக்கியமானவர் திருமாவளவன். தீண்டாமை ஒழிப்பு (??) , மதச்சார்பின்மை (??) மற்றும் சமூக வேற்றுமைகளைக் களையக் கூடிய அனைத்து தளங்களிலும் தான் பாடுபடுவதாக தன்னை முன்னிறுத்திக் கொள்பவர். ஆனால் சமீப காலங்களில் தமிழகத்தில் நிகழ்ந்து வரும் சாதீயக் கொடுமைகளை எதிர்ப்பதில், களைவதில் இவருடைய பங்கு என்ன என்பது சரிவரத் தெரியவில்லை; பெரும் புதிராகவே இருக்கிறது. உயர்சாதி ஹிந்துக்களால் (இவர்களுடைய பாஷையில் பார்ப்பனர்கள்) தலித் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை வெளிக்கொணர்ந்து, உயர்சாதி ஹிந்துக்களின் சாதீய வெறியைத் தோலுரிப்பதே இவர்களது கொள்கை என கூறப்படுகிறது. அதையொட்டி பல கூட்டங்களில் இவர்களே முழங்கியுள்ளனர். ஆனால் இதன் பலனென்னவோ தெரியவில்லை.
இன்னமும் தென் மாவட்டங்கள் பலவற்றில் தீண்டாமைக் கொடுமை என்னவோ இருந்து கொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில் உத்தபுரத்தில் கூட ஒரு பிரச்சனை கிளம்பியது; உயர்சாதி ஹிந்துக்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்குமிடையே தீண்டாமைச் சுவர் எழுப்பப்பட்டிருப்பதாக ஒரு பிரச்சனை இடதுசாரிகளால் கிளப்பப்பட்டு, பல தலைவர்கள் விஜயம் செய்து தினமும் பத்திரிக்கைகளில் இடம்பெற்றனர். ஊர் மக்கள் மலையடிவாரத்திற்குச் சென்று போராட்டம் நடத்தினர். சுவரும் இடிக்கப்பட்டது. ஆனால் அங்கு தீண்டாமை களையப்பட்டு விட்டதா?? தாழ்த்தப்பட்டவர்களுக்கு சமவுரிமை கிட்டியதா??இந்த பிரச்சனை இந்துக்களிடம் மட்டும் தான் இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. இந்த படத்தை பாருங்க.
தேனி மாவட்டத்தில் உள்ள அனுமந்தான்பட்டி என்ற இடத்தில் தலித் கிறுத்துவர்கள் கோயிலுக்கு வெளியே தொழுகிறார்கள் என்று.
விழுப்புரம் அருகே அமைந்துள்ள எறையூரில் நெடுங்காலமாக, தலித் கிறித்தவர்கள் மற்றும் வன்னிய கிறித்தவர்களுக்கிடையே பிரச்சனை இருந்து கொண்டு வருகிறது. சென்ற வருடம் பிரச்சனை வலுக்கவே அரசியல்வாதிகள் தலைமையில் சமரச முயற்சிகள் நடந்து தற்காலிகமாக பிரச்சனை முடக்கி வைக்கப்பட்டது. எறையூரில் இருக்கும் கத்தோலிக்க தேவாலயத்தில் வன்னிய கிறித்தவர்கள் மற்றும் தலித் கிறித்தவர்கள் ஆகியோர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். மக்கள்தொகையில் வன்னியர்களை அதிகம் கொண்டுள்ள எறையூரில், தேவாலயத்தில், தலித் கிறித்தவர்களுக்கு சமவுரிமை வழங்கப்படுவதில்லை என்றும், சவ ஊர்வலத்தில் வன்னியர்கள் பயன்படுத்தும் சவ ஊர்தியை, தலித்துகள் பயன்படுத்தக் கூடாது என்றும் பல கட்டுப்பாடுகள். சாதீய வேறுபாடுகளே இல்லாத மதம் என்று மதச்சார்பின்மையாளர்களால் சான்றளிக்கப்பட்ட கிறித்தவத்தில் எங்கிருந்து தலித்துகளும், வன்னியர்களும் முளைத்தனர்?? இது தவிர கிறித்தவ நாடார், வேளாளர், இப்பொழுது பெசன்ட் நகரில் புதிதாக கிறித்தவ பிராமணர்கள் கூட அவதரித்துள்ளனர். ஹிந்து மதத்தில் இருக்கும் சாதீயக் கொடுமைகளைக் களைந்து, தாழ்த்தப்பட்டோருக்கு புனர்வாழ்வு அளிப்போம் என்று கூறிக் கொண்டுதான் மதச்சார்பற்றோரின் முழு ஆதரவுடன் தமிழகத்தில் மதமாற்றம் பன்னெடுங்காலமாக நடைபெற்று வருகிறது.
இவ்வாறாக, சென்ற ஆண்டு தற்காலிகமாக சமரசம் செய்து வைக்கப்பட்ட எறையூர் பிரச்சனை, திரும்பவும் பூதாகாரமாகக் கிளம்பியுள்ளது. அதாவது, உயர்சாதிக் கிறித்தவர்களான வன்னியர்கள், தாழ்த்தப்பட்டவர்களான தலித் கிறித்தவர்களை மிகவும் மரியாதை குறைவாக நடத்துவதாகவும், வயது வேற்றுமையின்றி அனைத்து தலித் கிறித்தவர்களையும், வன்னிய சிறுவர்கள் கூட ஒருமையிலேயே அழைப்பதாகவும், மற்றும் டீக்கடைகளில் இரட்டை டம்ளர் முறை இங்கு அமலில் உள்ளதாகவும், மேலும் பல குற்றச்சாட்டுகளையும் அடுக்கி, எறையூரில் உள்ள தலித் கிறித்தவர்கள் நேற்றைய தினம் ஊர் சர்ச் திருவிழாவைப் புறக்கணித்து, ஊரை விட்டே வெளிநடப்பு செய்துள்ளனர்.
அரசியலில் மருத்துவர் இராமதாசு அய்யாவும், தமிழ்க்குடிதாங்கி திருமாவளவனும் மிகுந்த இணக்கமானவர்கள். தேர்தலில் வெவ்வேறு கூட்டணியிலிருப்பினும், பொதுவாழ்க்கையில் இணைபிரியாதவர்கள் என்று தங்களைக் கூறிக் கொள்பவர்கள். இப்பொழுது பூதாகாரமாகக் கிளம்பியுள்ள எறையூர் பிரச்சனையில் இவ்விருவரின் அணுகுமுறை எவ்வாறு இருக்கப் போகிறது?? குஜராத் முதல்வர் மோதி, மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடுபவர்கள் கடவுளுக்குச் சமானமாக பூஜிக்கத் தகுந்தவர்கள் என்று கூறியதை அரை வேக்காட்டுதனமாகப் புரிந்து கொண்டு, அவருக்கெதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் கோஷ்டியினர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஈடுபட்டனர். ஆனால் இப்பொழுது தமிழகத்திலுள்ள ஒரு ஜாதி கட்சியின் தலைவருடைய ஜாதியினர், தாழ்த்தப்பட்டவர்களைக் கேவலமான முறையில் நடத்துவதைக் கண்டு திருமா கொதித்தெழுவாரா? என்ன செய்யப் போகிறார்??"சதிக்கு கால் முளைத்து சாதியாகி விட்டது " என்று மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். அதே போல "நான் சாதி, மதம் பார்ப்பவன் இல்லை. ஏழைகளின் கஷ்டத்தை பார்க்கிறேன்." இது கேப்டன். கலைஞர் பொங்கல் வாழ்த்து இது "பொங்கல் திருநாளன்று, வீடுகள், அரசு அலுவலகங்கள் அனைத்திலும் உற்சாகமாகவும், சாதி, மத, இன வேறுபாடுகள் இன்றி சமத்துவ பொங்கல்".
படத்தில் இருப்பது சங்கரன் கோயிலில் கீழே உட்கார்ந்து டீ குடிக்கும் தலித்துக்கள். அவர்கள் நாற்காலியில் உட்கார கூடாது. இவர்களுக்கு தேவை பொங்கலா ? தேர்தல் தொகுதி பங்கீடு எப்படி நடக்கிறது என்று நமக்கு நன்றாகவே தெரியும். சாதிக் குறியீடு பற்றி கேலி பேசும் இவர்கள், தங்கள் மனதில் ஆழமாக இருக்கும் இவர்களின் சாதிக் குறியீடுகளை எப்போது அழிக்க போகிறார்கள்.
கடைசி படம்: பிப்4, 1946, காந்தியடிகள் மதுரை மீனாட்சி கோயிலில் தலித்துக்களை அழைத்துக்கொண்டு சென்ற படம்.
( கட்டுரை யதிராஜ சம்பத் குமார் + இட்லிவடை )
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Saturday, October 10, 2009
ஏன் இந்த பூட்டு ?
Posted by IdlyVadai at 10/10/2009 08:18:00 AM
Labels: சமுதாயம், யதிராஜ சம்பத் குமார்
Subscribe to:
Post Comments (Atom)
28 Comments:
எல்லாம் சரி சம்பத். எப்போ கபாலீஸ்வரர் கோயிலில் பூஜை செய்யும் உரிமை தலீத்துக்கு வழங்குவீர்கள். சொல்லமுடியுமா
திருப்பாணாழ்வாரை லோகசாரங்கர் ஏன் கல்லால் அடிச்சார்
நந்தனார் ஏன் கோயிலுக்கு உள்ளே நுழையமுடியவில்லை
இப்பவும் கேரளாவில் தலித் கோயில் கர்ப்பகிரகத்துக்கு உள்ளே வந்தால் ஏன் கோயிலின் சாந்தி ஹோமம் செய்கிரார்கள்
தந்தை பெரியார் கோயிலுக்கு உள்ளே தலித் வர போரடினார் . ஆனால் ராமானுஜரால் வருஷத்துக்கு ஒரு நாள் அதுவும் கோயில் கொடிமரம் வரைக்கும் தான் அனுப்ப முடிந்தது.
யார் உண்மையான் சீர்திருத்த வாதி
மற்றவர்கள் மேல் உள்ள சில தவறுகளை சுட்டிக்காட்டுவதன் மூலம் உங்கள் பெரிய தவறுகளை ஏன் மறைக்கிறீர்கள்
ஸ்ரீரங்கம் கோயிலின் தலித் பூஜை பண்ணமுடியுமா
எல்லாம் சரி சம்பத். எப்போ கபாலீஸ்வரர் கோயிலில் பூஜை செய்யும் உரிமை தலீத்துக்கு வழங்குவீர்கள். சொல்லமுடியுமா
திருப்பாணாழ்வாரை லோகசாரங்கர் ஏன் கல்லால் அடிச்சார்
நந்தனார் ஏன் கோயிலுக்கு உள்ளே நுழையமுடியவில்லை
இப்பவும் கேரளாவில் தலித் கோயில் கர்ப்பகிரகத்துக்கு உள்ளே வந்தால் ஏன் கோயிலின் சாந்தி ஹோமம் செய்கிரார்கள்
தந்தை பெரியார் கோயிலுக்கு உள்ளே தலித் வர போரடினார் . ஆனால் ராமானுஜரால் வருஷத்துக்கு ஒரு நாள் அதுவும் கோயில் கொடிமரம் வரைக்கும் தான் அனுப்ப முடிந்தது.
யார் உண்மையான் சீர்திருத்த வாதி
மற்றவர்கள் மேல் உள்ள சில தவறுகளை சுட்டிக்காட்டுவதன் மூலம் உங்கள் பெரிய தவறுகளை ஏன் மறைக்கிறீர்கள்
ஸ்ரீரங்கம் கோயிலின் தலித் பூஜை பண்ணமுடியுமா
அட பொருங்க.....கிருஷ்ணரும் அர்ஜுனரும் தேரை ஓட்டிமுடிக்கட்டும்!
தேசப்பிதாவே,
நீ
உன்னைப் பற்றிய
உண்மைகளை
ஒளிவு மறைவின்றி
உலகிற்குச் சொன்னவன் !
என்றைக்கும்
ஒடுக்கப்பட்ட
மக்களின்
ஒரே ஒரு மன்னவன் !
நீ
எளியோருக்காகவே
அனைத்தையும்
துறந்தவன்!
ஏழைகள் வாழ்ந்திட
இங்கு வந்து
பிறந்தவன் !
நீ
அன்பை மதமாக்கி
அருளின்
வழி நின்றாய் !
அடித்தட்டு சனங்களை
அரியின் சனம் என்றாய் !
நீ
அரியாசனம் தன்னை
அடுத்தவர்க்கு தந்தாய் !
அறியா சனத்திற்கும் நீ
அன்பான தந்தாய் !
நீ
கறுப்பர் இனத்துக்கு
கடவுள் தந்த
பிரதிநிதி !
கருணை குணத்திலோ
கடவுளின்
பிரதி நீ !
உன்னைத் தலைவன் என்று
எண்ணி விட்ட
மாந்தர்
இன்னொருவரை
ஏற்றிட இயலுமா
சொல்வீர் ?
Excellent and thought provoking post IV!
Thank you!
Are there parpanarkal (brahmins) still in Tamilnadu. I thought they are wiped out of TN by anti_brahmin propaganda by personalities like our CM and Veeramani etc and their politics. Probably you meant the uppercaste hindus(minus brahmin).
I guess in cities this problems are not there. Main reason is better economics. Many of the political backward class argue better economics doesnot mean social acceptance (mentally). But if a roadside coffeshop doesnot want to give you a coffee, we can go to a 5 star and drink it. Then Who cares about the roadside uppercaste hotel.
ஹிந்துக்கள் என்றால் த்வேஷத்தைக் கக்கும் இனமான சாரங்கபாணி மற்றும் மதச்சார்பற்ற, ஜாதீய ஏற்றத்தாழ்வுகளை களைவதற்காகவே அவதரித்துள்ள ஜாதிக் கட்சித் தலைவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்??
தக்க படங்களுடன், கட்டுரையை மேலும் மெருகூட்டிய இட்லிவடைக்கு எனது நன்றிகள்!!
வினா: தாங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர் ?
மகரிஷியின் விடை:
நான் எந்த மதத்தையும் சேர்ந்தவன் அல்ல, உலகப் பொது அருள்நெறி சமயத்தைச் சேர்ந்தவன். கர்மயோக நெறியே அதன் வேதமாகும். மனிதன் உடல் நலம், மனநலம் காத்து செயல் விளைவை மதித்து எவ்வுயிர்க்கும் துன்பம் இழைக்காமல் வாழ்வதே கர்மயோக நெறியாகும். இந்து மதத்திலுள்ள நம்பிக்கை, இஸ்லாமிய மதத்தில் உள்ள தொழுகை முறை, கிறிஸ்துவ மதத்தில் உள்ள தொண்டு, புத்த மதத்தில் உள்ள ஆராய்ச்சி, ஜைன மதத்தில் உள்ள ஜீவகாருண்யம் இவை எல்லாம் எனக்குப் பிடிக்கும்.
வருத்தமான செய்தி. மனிதனை மனிதனாக எப்பொழுதான் மதிக்க பொகிறார்களோ? சாதியாவது, மதமாவது?
இட்லிவடை கைமாறிட்ட மாதிரி இருக்கே ;-). பழைய இட்லிவடைகள் பிஸியா!!
அரசியல் இருக்கும்வரை சாதியும் இருக்கும் :(((((((
//தமிழகத்தில், தாழ்த்தப்பட்டவர்களை இரட்சிப்பதற்காகவே அவதரித்திருக்கும் பல அவதார புருஷர்களுள் மிக முக்கியமானவர் திருமாவளவன். தீண்டாமை ஒழிப்பு (??) , மதச்சார்பின்மை (??) மற்றும் சமூக வேற்றுமைகளைக் களையக் கூடிய அனைத்து தளங்களிலும் தான் பாடுபடுவதாக தன்னை முன்னிறுத்திக் கொள்பவர். ஆனால் சமீப காலங்களில் தமிழகத்தில் நிகழ்ந்து வரும் சாதீயக் கொடுமைகளை எதிர்ப்பதில், களைவதில் இவருடைய பங்கு என்ன என்பது சரிவரத் தெரியவில்லை; பெரும் புதிராகவே இருக்கிறது. உயர்சாதி ஹிந்துக்களால் (இவர்களுடைய பாஷையில் பார்ப்பனர்கள்) தலித் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை வெளிக்கொணர்ந்து, உயர்சாதி ஹிந்துக்களின் சாதீய வெறியைத் தோலுரிப்பதே இவர்களது கொள்கை என கூறப்படுகிறது. அதையொட்டி பல கூட்டங்களில் இவர்களே முழங்கியுள்ளனர். ஆனால் இதன் பலனென்னவோ தெரியவில்லை.//
இது தான் சரி. சாதீய கொடுமைகளை எதிர்த்து தாழ்த்தப்பட்டவர்கள் தான் போராட வேண்டும். மேல் சாதிக்காரர்களாகிய நாங்கள் மாற மாட்டோம். இந்த டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!
In islam also these problems are there.
What is RSS or VHP doing in such issues.How do sites like Tamil Hindu respond to these practices.
What are the heads of mutts and
rama gopalans doing. If they are really concerned about ALL SECTIONS of Hindus they should start a mass movement against
such discriminations.
when they are getting reservation benefits at all stages i.e. education, job, promotion and all, why not discriminate them.. no mistake
when they are getting reservation benefits at all stages i.e. education, job, promotion and all, why not discriminate them.. no mistake...
if u want to stop the discrimination and stop the reservation also..
ALL ARE EQUAL in ALL...
now are equal in temple, but not equal in education and job
en munthiya comment unkalukku pidikkavittal athai delete pannungal
சதிக்கு கால் முளைத்து சாதியாகி விட்டது " என்று மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். ///
சரி....இவர்களாவது சதியை முறியடித்து சமூகநீதியை நிலைநாட்டியிருக்கலாமே?? உயர்ஜாதி ஹிந்துக்கள்தாம் வர்ணாஸ்ரமத்தைக் கடைபிடித்து, தாழ்த்தப்பட்டோரை மேலும் முடக்கினர் என்று வைத்துக் கொண்டாலும், திராவிடப் பகுத்தறிவாளர்களாவது ஜாதீய வேற்றுமைகளைக் களைந்து அனைவரும் சமம் என்று ஒன்றுபட்ட சமுதாயத்தை உருவாக்கியிருக்கலாமே?? எதற்காக, BC, MBC, OBC, SC, ST, OC என்று புதிது புதிதாக வேறுபாடுகளை உருவாக்கிக் கொண்டே போகிறார்கள்??
இவர்களது பகுத்தறிவின்படி அனைவரும் சமம்தானே?? எதற்காக இவர்களும் BC, SC என்று பகுத்து பல பல புதிய வர்ணங்களை ஏற்படுத்துகின்றனர்?? முற்காலத்தில் பிராமணன், க்ஷத்ரியன், வைஸ்யன், சூத்ரன் என்று அவரவர் தொழில்முறைகளை வைத்து வர்ணங்களைப் பகுத்தனர்....அதைக் கடுமையாகச் சாடிய இக்காலத்திய திராவிட ஆட்சியாளர்கள் அதையே சற்று நவீனப்படுத்தி BC, MBC, SC, ST என்று பகுத்து அதே வர்ணாஸ்ரமத்தைத் தொடர்கிறார்கள்!! சமூகநீதி பேசும் பகுத்தறிவாளர்கள் ஏன் இவ்வேறுபாடுகளை இன்னும் களையாமலிருக்கின்றனர்??
இவர்களுக்கு கொடி பிடிக்கும் திருமாவளவன் போன்ற போலி முற்போக்காளர்களும் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல், உள்ளூர் பிரச்சனைகளைத் தீர்க்க முனையாமல், அடுத்த நாட்டுத் தீவிரவாதிகளுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு பேருந்துகளையும், ரயில்களையும் கொளுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அருமையான கட்டுரை யதி ராஜ். நீங்கள் காட்டியது சாம்பிள் தான். தமிழகன் முழுக்க இதே மாதிரி அவலங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்குக் காரணம் பார்பனர்கள் மட்டும் இன்றி அனைத்து உயர்சாதி இந்துக்களும் தான் என்பதை மறந்து விட்டு, மறைத்து விட்டு, அரசியல் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். தாழ்த்தப் பட்டோருக்காக முழுமையாக போராடக் கூடியவர்கள் யாரும் இல்லை என்பதே உண்மை. மாயாவதி இலிருந்து இந்த திருமா வரை ஒன்றும் பெரிதாக கிழிக்கவில்லை.
OBC,MBC,SC,ST are not castes. They are groupings for the purpose of reservation etc. ST means Schdule Tribe(s).
நல்ல கட்டுரை.
****
முற்காலத்தில் பிராமணன், க்ஷத்ரியன், வைஸ்யன், சூத்ரன் என்று அவரவர் தொழில்முறைகளை வைத்து வர்ணங்களைப் பகுத்தனர்....அதைக் கடுமையாகச் சாடிய இக்காலத்திய திராவிட ஆட்சியாளர்கள்
*****
முற்காலம் என்று எதை சொல்கிறீர்கள் ? திராவிடம் சாடியது பிறப்பால் தோற்றுவிக்கப்பட்ட ஜாதீய முறையை . ஜாதீயமுறை இதிகாசக்காலங்களிலயே பிறப்பால் தான் இருந்து இருக்கிறது.
ஆதலால் உங்களது முற்காலம் கற்காலத்துக்கும் முந்தையதாக இருக்கலாம்.
ராஜ பாளையம் அருகிலுள்ள ஸ்ரீவில்லிப்புத்தூரில் டாக்ஸி ஸ்டாண்ட் கூட இரண்டு உண்டு. ஒன்று தலித் ஸ்டாண்ட். மற்றொண்டு தேவர் ஸ்டாண்ட். நீங்கள் வெளியூர் ஆளாக இருந்து டாக்ஸி எடுக்க சென்றால், முதல் கேள்வியே நீங்க யாரு என்பதுதான். மாற்று ஜாதி பெயரை சொல்லிவிட்டால், நேராக எதிர் பக்கம் கையை காட்டி அங்கு போங்கள் என்று சைகையாலேயே கூறுவார்கள். இது நானே பெற்ற அனுபவம் (10 ஆண்டுகளுக்கு முன்பு). இப்பொழுது நிலைமை எப்படி என்று எனக்கு தெரியாது.
/****மாயாவதி இலிருந்து இந்த திருமா வரை ****/
அதென்ன மாயாவதி இலிருந்து இந்த திருமா வரை??
இரண்டும் ஒரே குட்டையில் ஊருபவை தான்!!
//தந்தை பெரியார் கோயிலுக்கு உள்ளே தலித் வர போரடினார் .//
Then how come there no dalit could become the head of his organization?
அப்போ 'நிதி'க்கு கால் முளைச்சா - 'நீதி' யாகிவிடுமுங்களா?
non-Brahmin Upper caste Hindus have a win-win situation in all this mess. They can enslave and kill lower castes, benefit reservation while blaming everything on the innocent Brahmins.
//தேனி மாவட்டத்தில் உள்ள அனுமந்தான்பட்டி என்ற இடத்தில் தலித் கிறுத்துவர்கள் கோயிலுக்கு வெளியே தொழுகிறார்கள் //
செய்தி உண்மையாயிருக்கலாம் ஆனால் படம் தவறு என்று நினைக்கிறேன். ஏனெனில் முழங்காலில் இருப்பவர்கள் altar-க்கு எதிர்புறம் நோக்கி இருக்கிறார்கள். church-களில் வெளிப்புறம் கெபி என்று ஒன்று இருக்கும். அங்கே அனைவரும் ஜெபிப்பது வழக்கம்.
இட்லி வடை ப்ளீஸ் சற்று உபயோகமானதை செய்யவும்.
எனது நண்பர்கள் புவனேஸ்வர், பூரி, கோனார்க்,வைத்யநாத் (பாட்னா அருகில்),அலகாபாத், காசி போகிறார்கள்.அவர்களுக்கு உபயோகமாக இட்லி வடை வாசகர்கள் - சாப்பாடு, தங்குமிடம், போக்குவரத்து. பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் எழுதவும்
Post a Comment