பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, October 06, 2009

கமல் கலைஞர் சந்திப்பு - போட்டி முடிவுகள்

கமல் கலைஞர் சந்திப்பு என்ற பதிவில் தமிழக முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் நடிகர் கமல் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். என்ன பேசியிருப்பார்கள் ? என்ற போட்டி முடிவு.


நாரத முனி அனுப்பியதுதான் வந்த கமெண்ட்களிலேயே (எடிட் செய்த பிறகு) கொஞ்சம் ரசிக்கும்படியாக இருந்தது. நாரத முனிக்கு என் வாழ்த்துகள்.

கலைஞர்: " தம்பி வா... திரை படம் எடுக்க வா.. காயிதே மில்லத் என் கனவிலே வந்து கூறியது போல காவியம் படைக்க வா, அண்ணாவின் நூற்றாண்டு விழா தருவாயில் இந்த அண்ணனுக்கு நூறாவது நாள் விழா அழைப்பு கொடுக்க வா.. [edited]

கமல்: இப்போ நான் என்று ஒரு குன்றிற்கும் நீ என்ற ஒரு குன்றிற்கும் இடைப்பட்ட சமுதாய கோபத்தின் பிரதிபலிப்பு தான் இந்த உன்னை போல் ஒருவன்.. கதைக்கான கரு நான் களத்தூர் கண்ணம்மா பண்ணும்போதே எனக்குள் தோன்றினாலும் வாத்தியார் போட்ட வேகதடையினால் சற்று தாமதம்.. எனக்கு நசுருதீன் ஷாவும் வேணும் பெர்னாட்ஷாவும் வேணும்.. இந்த பிரபஞ்ச கூட்டின் நிலயான்மை உணரவே, கோணங்கி எழுதின "உப்பு கத்தியில் மறையும் சிறுத்தைகள்" நாவல தழுவி "தப்பு புத்தியில் மறையும் சிறுகதைகள்" னு ஒரு படம் எடுக்க போறேன்...

கலைஞர் : யோவ் வீரபாண்டியாரே, அப்பல்லோவுக்கு போன் போடுயா.. இந்த ஆள் என்ன விட பயங்கரமா கொழப்பறான்.

இந்த (God)அனானியின் கமெண்டும் பராவாயில்லை.

தம்பி, உன் வாரிசு சுருதி இசை எல்லாம் அமைச்சிருக்கலாமே?
உங்க வழிய தான்யா நான் பின்பற்றி வரேன்...
சரி சரி சந்தோசம் ஆனா ஜாக்கிரதையா இருந்துகோப்பா... சுருதிக்கும் ஸுப்புலஷ்மிக்கும் பிரச்சனை ஏதாவது வந்திட போகுது அப்புறம் "உன் இதயம் இனித்திட கண்கள் பனித்திட" நீ ரொம்ப கஷ்டப்பட வேண்டி இருக்கும்...
சரிங்க அய்யா.

நாரத முனி உங்க விலாசம் அனுப்பினால் புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கிறேன். கலந்துக்கொண்ட அனைவருக்கும் நன்றி.

13 Comments:

Anonymous said...

அவமானம்: பி.டி.உஷா கண்ணீ்ர் பேட்டி


இந்தியாவின் தங்கமங்கை பி.டி.உஷா, அவருக்கு நேர்ந்த அவமானத்தை தனியார் தொலைக்காட்சி ஒன்றில் உள்ளக் குமுறலாக தெரிவித்துள்ளார்.


போபாலில் தேசிய தடகள போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கலந்து கொள்வதற்காக தனது பயிற்சி அகெடமியை சேர்ந்த போட்டியாளர்களுடன் போபால் சென்றுள்ளார் பி.டி.உஷா. அவரை அங்கு யாரும் கண்டு கொள்ளவில்லை.


தனக்கும் தன்னுடன் வந்தவர்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தங்குமிடம் குறித்து விசாரிக்க அங்கும் இங்கும் அலைந்து திரிந்துள்ளார் உஷா.

தனக்கு நேர்ந்த அவமானத்தை தாங்க முடியவில்‌லை என்று கண்ணீர் சிந்தினார் உஷா. மூத்த தடகள வீராங்கனைக்கு நேர்ந்துள்ள இந்த அவமானம் விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது

நாரத முனி said...

அய்யா நன்றி ஹை!! தனி மினஞ்சல் மூலமாக உங்களை விரைவில் தொடர்பு கொள்கிறேன்...

CS. Mohan Kumar said...

வாழ்த்துக்கள் நாரத முனி...

கமல் எப்போதும் சிறு இலக்கிய பத்திரிக்கைகளில் வரும் சிறு கதைகள்/ கவிதைகள் பாணியில் சாமானியர்களுக்கு புரியாத விதத்தில் மிக intellectual-ஆக பேசுவார். இதனை சரியாக சித்தரிதிருந்தீர்கள்..

Readers-க்கு இப்படி போட்டி எல்லாம் வைத்து அசத்தும் இட்லி வடைக்கும் பாராட்டுக்கள்.

மோகன் குமார்
http://veeduthirumbal.blogspot.com

Gokul said...

சூப்பரப்பூ............

Unknown said...

priyamad saimeera கேஸ் ல இருந்து நீங்க தான் என்னை காப்பாத்தனும் !

சரி தம்பி மானாட மயிலாட ல வந்து ஒரு ஆட்டம் போட்டுவிட்டு போ !

ppage said...

இட்லி வடை !!! எச்சரிக்கை ! இது நல்லா இல்ல‌,

///நாரத முனி அனுப்பியதுதான் வந்த கமெண்ட்களிலேயே (எடிட் செய்த பிறகு) கொஞ்சம் ரசிக்கும்படியாக இருந்தது////

இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

பரிசு வாங்கிய நாரத மினி தான் கொஞ்சம் ரசிக்கும் படியா... ஆ... ??? !!!! அப்படின்னா..... வேர வகை தொகை இல்லாததால இதுக்கு முதல் பரிசு என்பது கொச்சையான வார்த்தை.

இரண்டு பேரின் கமெண்ட் பரவாயில்லை. இது வேரயா....
முதல் பரிசு வாங்கிய இது தான் கொஞ்சம் என்ற வரியில், விடுபட்ட மற்ற எழுத்தாளர்களின் படைப்பு குறித்த தங்களின் ரிமார்க் ரிமார்க்கபிள்.

இது பங்கு கொண்ட எல்லோருக்கும் அவமானம். ( நன்றி என இறுதியில் சம்பிரதாயமாய் சொன்னாலும்)

செய்வது கோணங்கி வேலை,போட்டா போட்டு எழுது என்று. இதில் என்ன கொஞ்சம் நிறைய என்ற அளவுகோல்.

நீங்கள் என்ன இலக்கிய சேவை செய்யவா போட்டி நடத்தினீர்.

ரொம்ப தப்பு இட்லி வடை.

ppage said...

இட்லி வடை !!! எச்சரிக்கை ! இது நல்லா இல்ல‌,

///நாரத முனி அனுப்பியதுதான் வந்த கமெண்ட்களிலேயே (எடிட் செய்த பிறகு) கொஞ்சம் ரசிக்கும்படியாக இருந்தது////

இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

பரிசு வாங்கிய நாரத மினி தான் கொஞ்சம் ரசிக்கும் படியா... ஆ... ??? !!!! அப்படின்னா..... வேர வகை தொகை இல்லாததால இதுக்கு முதல் பரிசு என்பது கொச்சையான வார்த்தை.

இரண்டு பேரின் கமெண்ட் பரவாயில்லை. இது வேரயா....
முதல் பரிசு வாங்கிய இது தான் கொஞ்சம் என்ற வரியில், விடுபட்ட மற்ற எழுத்தாளர்களின் படைப்பு குறித்த தங்களின் ரிமார்க் ரிமார்க்கபிள்.

இது பங்கு கொண்ட எல்லோருக்கும் அவமானம். ( நன்றி என இறுதியில் சம்பிரதாயமாய் சொன்னாலும்)

செய்வது கோணங்கி வேலை,போட்டா போட்டு எழுது என்று. இதில் என்ன கொஞ்சம் நிறைய என்ற அளவுகோல்.

நீங்கள் என்ன இலக்கிய சேவை செய்யவா போட்டி நடத்தினீர்.

ரொம்ப தப்பு இட்லி வடை.

நாரத முனி said...

// வாழ்த்துக்கள் நாரத முனி...

கமல் எப்போதும் சிறு இலக்கிய பத்திரிக்கைகளில் வரும் சிறு கதைகள்/ கவிதைகள் பாணியில் சாமானியர்களுக்கு புரியாத விதத்தில் மிக intellectual-ஆக பேசுவார். இதனை சரியாக சித்தரிதிருந்தீர்கள்.. //

நன்றி மோகன் குமார் அண்ணா.. அடிப்படையில் நானும் ஒரு கமல் ரசிகன் தான்..

வலைஞன் said...

முதலில் இந்த பதிவுக்கு சம்பந்தம் இல்லாத பின்னூட்டம் போடுவதற்கு மன்னிக்கவும்.

கிருஷ்ணா நதியில் கடந்த 100 ஆண்டுகள் காணாத வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.விஜயவாடா வே நீரில் முழுகும் அபாயமும்!
தெலுங்கு கங்கா திட்டம் ஸ்ரீசைலம் அணையிலிருந்து கிருஷ்ணா நதி தண்ணீர் பெற்று சென்னை பூண்டி க்கு கொண்டு சேர்க்கிறது.
என்னுடைய சந்தேகம் என்னவென்றால் இப்பொழுது பூண்டி,புழல்,செம்பரம்பாக்கம்,சோழவரம்
ஆகிய ஏரிகளும் நிரம்பி விட்டனவா?
யாராவது சீரியஸ் ஆக இதற்கு பதில் அளித்தால் நன்றியுடையவனாக இருப்பேன்!

RBGR said...

நாரதர் என்று என்ற கதாப்பாத்திரம் உண்மையில் உண்டா ?? இல்லை இது

நமக்கு நாமே திட்டமா ?

அவர் ஒரு பதிவரா? இல்லை...பதிவர்களின் துணைவரா? அந்த பாடிகாட்டாருக்குத் தான் வெளிச்சம்??


யாராக இருந்தாலும் மிக நல்ல கற்பனை!!
.. சிரிக்கத் தூண்டினாலும் ஒரு நல்ல கலைஞனின் தனிப்பட்ட வாழ்கையை விமர்சித்து வேடிக்கைப் பார்ப்பது ஒரு மூத்த பதிவர்க்கு (இட்லிவடை உங்களை தான்) சரியாகப் பட்டால் சரிதான் ...இட்லிவடை என்ற பதிவர்கள் குழுமம் இதனை பரிசிலீனை செய்யுமா ??

IdlyVadai said...

//. சிரிக்கத் தூண்டினாலும் ஒரு நல்ல கலைஞனின் தனிப்பட்ட வாழ்கையை விமர்சித்து வேடிக்கைப் பார்ப்பது ஒரு மூத்த பதிவர்க்கு (இட்லிவடை உங்களை தான்) சரியாகப் பட்டால் சரிதான் ...இட்லிவடை என்ற பதிவர்கள் குழுமம் இதனை பரிசிலீனை செய்யுமா ??//

நீங்க சொல்லுவது மிகவும் சரி. அடுத்த முறை கவனமாக இருக்கிறோம். சுட்டிக்காட்டியதற்கு நன்றி.
- இட்லிவடை

நாரத முனி said...

// நாரதர் என்று என்ற கதாப்பாத்திரம் உண்மையில் உண்டா ?? இல்லை இது
நமக்கு நாமே திட்டமா ? அவர் ஒரு பதிவரா? இல்லை...பதிவர்களின் துணைவரா? அந்த பாடிகாட்டாருக்குத் தான் வெளிச்சம்??//

ஐயா, நான் துணைவரும் இல்லை இனைவரும் இல்லை, நான் பதிவரும் இல்லை. ஒரு வாசகன் அஷ்டே..

////. சிரிக்கத் தூண்டினாலும் ஒரு நல்ல கலைஞனின் தனிப்பட்ட வாழ்கையை விமர்சித்து//

மன்னிக்கவும், இனி இது போல் செய்ய மாட்டேன்..

Erode Nagaraj... said...

சரியா வேகலே...