பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, October 15, 2009

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 15-10-2009

இந்த வாரம் இட்லிவடை முனிக்கு எழுதும் கடிதம்

ஹாய் முனி,

முதல்ல அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துகள். ஆனா இந்த முறை தீபாவளி புரட்டாசி மாசத்துல, அதுவும் கடைசி சனிக்கிழமையில வருது. உன்னால சிக்கன், மட்டன் என்றெல்லாம் ஒரு பிடி பிடிக்க முடியாது. என்ன செய்வதாக உத்தேசம்? பேசாம பார்க்கடலில் இருக்கும் விஷ்ணு வீட்டுக்கு போய் சக்கரை பொங்கல் சாப்பிடு. நான் நாத்திகவாதி, சாரி பகுத்தறிவாதி என்று நீ சிக்கனும் மட்டனும் வெட்டினா அப்பறம் வெங்கி கோச்சிப்பார். ஏற்கனவே ஈ-மெயில் அதிகம் வந்து ஒரு வெங்கி கடுப்புல இருக்காரு. வான் கோழி பிரியாணி இல்லாம தீபாவளியா ? என்ன கொடுமை! எல்லாம் நம்ம ராசி!

"இட்லிவடையில ராசிபலன் எல்லாம் போடறீங்க? நீங்க அவ்வளவு நல்லவரா?" என்று போன வாரம் சாட்டில் ஒரு நண்பர் கேட்டார் இதில என்ன இருக்கு? சிலருக்கு நம்பிக்கை இருக்கு. சிலருக்கு இல்ல. ஆனா நிறைய பேர் அவங்க மனைவி ராசி எப்ப வரும் என்று கேட்டது தான் ஏன்னு புரியலை. அவங்க ராசியும் மனைவி ராசியும் கம்பேர் செய்து பார்த்துப்பாங்க போல. கம்பேர் செய்து பார்ப்பது நம் கூட பிறந்த குணம்.

மனுஷனுக்கு 'இது நல்லா இருக்கு'ன்னு உறுதியா சொல்றத விட, 'இத விட இது நல்லா இருக்கு'ன்னு சொல்லிடறது சுலபம். ஏன்னா மூளை எல்லாத்தையுமே ஒப்பிட்டு பார்த்து தான் முடிவு எடுக்கிறது. உதாரணத்துக்கு ஒரு ஸ்வீட் சாப்பிட்டுட்டு காபி குடிச்சு பாருங்க. கசக்கும். கசப்பு காபியில் இல்லை. மொதல்ல சாப்பிட்ட இனிப்பின் சுவையை காபியால் மிஞ்சிவிட முடியாதது தான் காரணம். அதுக்கு தான் இனிப்புக்கும் காப்பிக்கும் நடுவுல ஒரு காரம் சாப்பிடறோம். ரஜினி பேச்சுக்கு பின் கமல் பேச்சு அப்படி தானே இருந்தது?

எது எப்படியோ இரண்டு நாளைக்கு நம்மளை பிரேக்கில் சீரியல் பார்க்க வைத்த விஜய் டிவி வாழ்க. ஏன் இதை தீவாவளி அன்று ஒளிபரப்பவில்லை என்று யாராவது கணித்துச் சொன்னால் நல்லா இருக்கும். இது பரவாயில்ல. மராட்டிய தேர்தல் முடிவை சரியாக கணித்து சொல்லும் ஜோதிடருக்கு 21 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று மூட நம்பிக்கை ஒழிப்பு கமிட்டி அறிவித்துள்ளது. 80 சதவீதம் சரியாக சொன்னால் கூட போதும், பரிசு தரத் தயாராக உள்ளோம் என்று சொல்லியிருக்காங்க. இனிமே ஜோதிடர்கள் எல்லாம் ரெஸ்ட் எடுக்காம வேலை செய்வாங்க.

இப்பப் பாரு, அம்மையார் கொட நாட்டில் ரெஸ்ட் எடுக்கிறார் என்று கிண்டல் அடித்தார் கலைஞர். ஆனால் அவர் திரும்பி வந்த பிறகு பஸ்டாண்டுக்கு "பேருந்து நிலையம்" என்று பெயர் வைக்க வேண்டிய நிலைமை. நம்ம தளபதி துணை முதல்வர் "தலைவர்" சொன்ன பேச்ச சமத்தாக் கேட்டுண்டு தாத்தா, பாட்டி சிலைகளைத் திறக்காம விட்டுடாராம். அதனால தன்னோட சொந்தக்காசு 4.8 லட்சத்தைப் போட்டு 90 ஏக்கர் அரசு நெலம் வாங்கி அதுக்கு "பெரியவரோட" "பெரியவங்க" பேரவெச்சு சந்தோஷப்பட முயற்சி செஞ்ச ராதாபுரம் கழக முக்கியப் பிரமுகர் வருத்தமாயிட்டாரம். கலைஞரும் அம்மையாரோட அறிக்கைக்கு சூடா பதில் அறிக்கை விட்டுருக்கார். அது கூட பரவாயில்லை. ஜெயலலிதாவின் ஒட்டியாணத்தை எல்லாம் புரட்ட வேண்டிய நிலைமைக்கு கலைஞர் தள்ளப்பட்டிருக்கிறார். ஜக்குபாய் பாடல் வெளியிட்டு விழாவில் "இது வரையிலே என் மீது விழுந்த கணைகளுக்கு பதில் கணைகள் நான் அவர்கள் விடுத்த அதே கணைகளைப் போல் இதுவரையில் நான் விட்டிருந்தால் அதை நீங்கள் எல்லாம் மறந்து விடுங்கள்" என்று சொன்னார். அவர் சொன்ன போது ஜெயலலிதா ரெஸ்ட் எடுத்துக்கொண்டு இருந்தார். இப்ப சென்னைக்கு வந்த பிறகு கலைஞர் ஓவர் டைம் பார்க்க வேண்டியுள்ளது.


இப்படி ஏதாவது பேச வேண்டியது அதற்கு பிறகு நான் சொன்னதை திரித்து சொல்லிவிட்டார்கள் என்று சொல்லவது அரசியலில் மட்டும் இல்ல. இப்ப சினிமாவிலும் இருக்கு. சூர்யா நிலமை பாவம். " கண்ட கண்ட ஈனப்பசங்க எழுதிட்டு இருப்பாங்க. அவங்க பின்னாடி ஓடிட்டு இருக்கிறது நம்ம தொழில் கிடையாது. அத வன்மையா கண்டிக்கணும். நமக்கு என்னென்ன உரிமை இருக்கோ.. என்னென்ன சக்தி இருக்கோ... அத எல்லாத்தையுமே பயன்படுத்தி இவங்களை நசுக்கணும். திரும்ப இது மாதிரி ஒருத்தங்க யோசிக்கவே கூடாது" அப்படி இப்படி என்று பேசிவிட்டு, அனைத்து பத்திரிக்கைகளும் இவர்களை சுத்தமாக பாய்காட் செய்ய போகிறோம் என்று சொன்னவுடன், நான் அப்படி சொல்லவில்லை "என் கருத்துக்கள் திரித்துக் கூறப்படுகிறது" என்று சொல்லி ஜகாவாங்கிவிட்டார். இதில கூத்து என்ன என்றால் இவர்கள் பேசியது எல்லாம் Youtubeல இருக்கு. எல்லாம் அந்த ஆதவனுக்கே வெளிச்சம்!

இது பரவாயில்ல, பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கும் விவேக் பத்திரிக்கையாளர் அம்மா, மனைவி பெண்ணு என்று ஒருவரை கூட விடாமல் அசிங்கமாக பேசிவிட்டார். இவருடைய பத்மஸ்ரீ விருதை திரும்ப பெற எவ்வளவு செலவானாலும் அதற்கு நாம் உதவ வேண்டும். இது தொடர்பாக வில்லவன் எழுதிய பதிவு ரொம்ப சூப்பர்.

முன்பு என்.எஸ்.கிருஷ்ணன் தங்கவேலு பலவிதமான சிரிப்பு பற்றி ஒரு பாடல் பாடுவார். அதுல ஆனந்த சிரிப்பு என்று ஒரு சிரிப்பை சிரித்து காண்பிப்பார். ரொம்ப நாளா அந்த சிரிப்பு எப்படி என்று தெரியாது. நேற்று இந்த படத்தை பார்த்த பின் தான் ஓ இது தான் அந்த சிரிப்பா என்று தெரிந்துக்கொண்டேன். செவ்வாய்கிழமை மாலை ராஜபக்சேவை நம்ம எம்.பிக்கள் குழு சந்தித்து பேசியது அப்போது "இவர் (திருமாவளவன்) பிரபாகரனின் நெருங்கிய நண்பர். ஆதரவாளர். நல்லநேரம் பிரபாகரனின் கடைசிக் காலத்தில் இவர் தமது நண்பருடன் இருக்கவில்லை. அதனால் தப்பி விட்டார்...பிரபாகரனுடன் இருந்திருப்பாரேயானால் இவரும் தொலைந்திருப்பார்…” என்று பலத்த சிரிப்புடன் ராஜபக்சே கூற, அதைச் சிரித்தபடி கேட்டுக் கொண்டிருந்தாராம் திருமாவளவன். இப்ப சொல்லுங்க இது ஆனந்த சிரிப்பு தானே ?

சிரிப்பு என்று சொன்னவுடன் கலைஞர் கேள்வி பதில் அறிக்கையில் ஜோக் எல்லாம் எழுத ஆரம்பித்துவிட்டார். ( அவர் கேள்வி பதில் அறிக்கை எல்லாமே ஜோக் என்று நீங்க முணுமுணுப்பது கேட்கிறது )

கேள்வி : - அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிற்கு 2009ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளாரே?

கலைஞர் :- அப்படியா? எழுது உடனே அறிக்கையை! அமெரிக்க அதிபராக இருந்துகொண்டு, அவரே எப்படி நோபல் பரிசினைப் பெற்றுக் கொள்ளலாம் என்று காரசாரமாக எழுது! ஓ! அவர் தமிழ்நாட்டில் இல்லையோ? அப்படியானால் விட்டு விடு!


சின்னதாக ஊசி பட்டாசு போல சிரித்துவிடுங்கள், கஷ்டபட்டு வயசான காலத்தில் ஏதோ எழுதியிருக்கிறார்.


தீபாவளி நெருங்க நெருங்க, ரங்கநாதன் தெருவில் நெரிசல் அதிகமாகிவிட்டது. மக்கள் அப்படி என்ன தான் வாங்குவாங்களோ. சரி அந்த தெருவிற்கு எப்படி ரங்கநாதன் தெரு என்று பெயர் வந்தது தெரியுமா ?

1920ல் அந்த தெருவிற்கு ரங்கநாதன் தெரு என்று பெயர் வைக்கப்பட்டது. அந்த காலத்தில் எல்லாம் தெரு பெயர் வைப்பது ரொம்ப சுலபம். சென்னையில் யார் ஒருவர் அந்த தெருவில் முதலில் வீடு கட்டி குடியேறுகிறாரோ அவர் பெயரையே அந்தத் தெருவுக்கு வைத்துவிடுவார்களாம். அந்த காலத்தில் உயர் அரசு அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்று ரங்கசாமி அய்யங்கார் தான் அங்கே முதலில் வீடு கட்டியுள்ளார். சரி அவர் பெயரையே வைக்கலாம் என்று அவர் ஒப்புதல் பெற சென்னை நகர நிர்வாக அதிகாரிகள் அவரை கேட்டதற்கு "என் பெயரை வைக்காதீங்க, ஸ்ரீரங்கத்தில் குடியிருக்கிறாரே ரங்கநாதன் அவர் பெயரையே வையுங்க, அந்த வீதி செல்வம் கொழிக்கும் வீதியாக மாறிவிடும்" என்று சொல்லியுள்ளார். இன்னும் நாத்திக அரசு அந்த பெயரை அப்படியே வைத்துள்ளது ஆச்சரியம் தான். எல்லாம் அந்த ரங்கநாதன் மகிமை.

ரொம்ப நாளைக்கு முன் நம்பியார் ஆத்திகம், நாத்திகம் பற்றி ஒரு பேட்டியில் சொன்ன பதில் இது..

"நாத்திகம் என்பது ஓர் இயக்கம், ஆத்திகம் என்பது இயற்கை"

என் நண்பர் ஒருவர் நாத்திகம் பழகுபவர். அவரிடம் "எவ்வளவு நாளா இப்படி ?" என்று விசாரித்தேன். "இப்ப தான் இப்படி இரண்டு தலைமுறைக்கு முன் நாங்க ஆத்திகம் தான்" என்று கூறி அதற்கான காரணத்தையும் சொன்னார். "எங்க தாத்தா பெயர் மணி, எங்க அப்பா பெயர் ரமணி, என் பெயர் வீரமணி" இப்படி சொன்ன அவர் வாய்க்கு தங்கப்பூட்டு தான் போடணும்.

அண்ணா நூற்றாண்டு விழாவில் கலைஞருக்கு 100 சவரன் தங்க நாணயம், அழகிரிக்கு 51 சவரன் தங்க சங்கலி என்று தூள் கிளப்பினார்கள். இதை எல்லாம் அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் கருவூலத்தில் வைக்க போகிறார்களாம். ரஜினி போல பக்த்தர்கள் அங்கே போய் தரிசிக்கலாம். இன்னும் கொஞ்ச நாளில் திருப்பதிக்கு போட்டியா வந்துடும் என்று நினைக்கிறேன். கடவுளோ கலைஞரோ யார் எவ்வளவு சம்பாத்தித்தால் நமக்கு என்ன?

முன்பு குமுதத்தில் நடிகர், நடிகைகள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்று போட்டார்கள். நம்ம தமிழ் எழுத்தாளர்களுக்கு அப்படி ஒரு லிஸ்ட் போட்டால் என்ன என்று தோன்றி சில தகவல்களை சேகரித்தேன். அதே குமுதம் பாணியில் எழுதுகிறேன், புரிகிறதா என்று பார்.

தற்போது காந்தியை பற்றி எழுதும் எழுத்தாளருக்கு ஒரு லட்சம் கிடைத்தால் பெரிசு. அதே போல துணையெழுத்தை எழுத்தாளர், கருவாடு சாப்பிடும் எழுத்தாளருக்கு வருடத்துக்கு ஐம்பது ஆயிரம் வந்தால் அதிகம். சரி அப்ப யாருக்கு தான் அதிகம் என்று கேட்க்கிறீர்களா ? அள்ள அள்ள பணம் எழுதும் எழுத்தாளர் மற்றும் தற்போது குங்குமத்தில் ஜோலியாக ( ஜொல்லு அல்ல ) ஏஞ்சலினா ஜோலியை பற்றி எழுதும் எழுத்தாளர்கள்தான் டாப் என்கிறார்கள். இரண்டிலிருந்து மூன்று லட்சம் என்று சொல்லுகிறார்கள்.ஆனால் தன்னைத் தவிர உலகில் உள்ள மற்ற அத்தனை பேருக்கும் வாழ்க்கை வரலாறு எழுதிவிட்ட என்றென்றும் அன்புடன் ஜூனியர் நாலைத் தொட்டுவிட்டார் என்று கேள்வி.
இவர் தான் இப்ப நம்பர்-1!

உன்னை போல ஒருவனின் கதை. மகா விஷ்ணுவிடம் போய் எனக்கு ஒரு வரம் வேண்டும் என்று கேட்டிருக்கிறான். அவரும் என்ன என்று கேட்க, அதற்கு நம்ம ஆளு "நான் தொட்டது எல்லாம் தங்கம் ஆக வேண்டும்" என்று எல்லோரும் கேட்பது போல கேட்டிருக்கிறான். அவரும் "சரி" என்று சொல்லிவிட்டார்.

இரண்டு மணி நேரம் கழித்து அலறி அடித்துக்கொண்டு ஓடி வந்து விஷ்ணுவிடம் "அந்த வரம் எனக்கு வேண்டாம் நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள்" என்று பதறியிருக்கான்.
விஷ்ணு "ஏம்பா என்ன ஆச்சு?" என்று கேட்க அதற்கு அந்த அப்பாவி "நான் எதை தொட்டாலும் என் தங்கமா ஆகுது" என்று சொல்ல, விஷ்ணு "அது தானே நீ கேட்ட வரம்"? என்று கேட்க, "நாசமா போச்சு, என் மனைவி பெயர் தங்கம், நான் எதை தொட்டாலும் தங்கமா மாறிவிடுகிறார்கள்" என்றானாம்.
விஷ்ணு பதறிவிட்டார்.



மீண்டும் ஒருமுறை உனக்கும், உனக்கு நான் எழுதற இந்த லெட்டரைப் படிக்கற எல்லோருக்கும் என் தீவாவளி நல்வாழ்த்துகள்,
அன்புடன், இட்லிவடை


24 Comments:

(-!-) said...

இட்லிக்கு மட்டும் எங்கே இருந்துதான் டயமும், செய்தியும் கிடைக்குதோ, இந்த மாதிரி சூடாக் குடுத்துண்டே இருக்கு.

தொடரட்டும்.

இட்லிவடை வாசகர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள்.

நவீன் பாரதி said...

புரட்டாசி சனிக்கிழமை-ல தீபாவளி வரதே, பெருமாள் படத்தை போடப்படாதோ!! நான்வெஜ் படமாவது போட்டே ஆகணும்னு முனியோட ஆர்டரா என்ன?

இட்லி வடை வாசகர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

SUBBU said...

வீரமணி :)))

இட்லிவடை வாசகர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள்

kamal fan said...

//ஒரு ஸ்வீட் சாப்பிட்டுட்டு காபி குடிச்சு பாருங்க. கசக்கும். கசப்பு காபியில் இல்லை. மொதல்ல சாப்பிட்ட இனிப்பின் சுவையை காபியால் மிஞ்சிவிட முடியாதது தான் காரணம். அதுக்கு தான் இனிப்புக்கும் காப்பிக்கும் நடுவுல ஒரு காரம் சாப்பிடறோம். ரஜினி பேச்சுக்கு பின் கமல் பேச்சு அப்படி தானே இருந்தது?//

நூறு சதம் உண்மைதான் இட்லிவடை. ரஜினி பேச்சை விட கமல் பேச்சு சுமார் தான். ஏனென்றால் கமல் எவ்ளோ பெரிய நடிகர், மனிதர், கலைஞர் என்று ரஜினி சொன்னது அவ்வளவும் கொள்ளை இனிப்பு.

ரஜினி சினிமாவுக்கு வந்த புதிதில் தன்னை தூக்காமல் சிபாரிசு செய்தது, மற்றும் தனியே நடித்து ரஜினியை வளர்த்து கொள்ள சொன்னது மூலம் கமலை ஒரு நல்ல மனிதர் என்றும்,

தம்மடிக்காமல் கமலின் நடிப்பை பார்த்து நடிப்பு கற்றுகொண்டது, உண்மையான சகலகா வல்லவன் என்று சொன்னது மூலம் கமல் ஒரு நல்ல நடிகர் என்றும்,

நடிப்பு, இசை, இயக்கம், வசனம், நடனம், இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒரு ஜென்மம் எடுத்தார் என்று சொல்லி அவர் ஒரு மிகப்பெரிய கலைக்நேர் என்றும் சொல்லியுள்ளார் ரசினி.

இப்படி கமலை அக்கு அக்காக பிரித்து புகழ்ந்தால் அது இனிக்காமல் வேறென்ன செய்யும்? அதுவும், தான் தொட்டதை கமல் தொட்டார் ஆனால் அவர் தொட்டதை தன்னால் தொட முடியாது என்று உண்மையை தானீ சொன்னாரு? உண்மை எப்போதுமெ இனிக்கத்தான் செய்யும் இட்லிவடை...

ஆனால் கமல் தன்னை தானே புகழ முடியாதில்லையா எனவே அவரின் அடக்கமான பேச்சு கொஞ்சம் போர் தான்!!

சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம் said...

தேதி என்னமோ வாக்கியப் பஞ்சாங்கத்தின் படி புரட்டாசி மாதம் கடைசித் தேதி தான்.
ஆனால் அன்றே ஐப்பசி மாசம் பிறந்துவிடுகிறது. திருக்கணிதத்தையே எடுத்துக்குவாங்க
ஜோசியம் பார்க்கிறவங்க. அதனால் ஐப்பசி மாசம் அன்று பிறந்துவிடுவதாலும்,
தேய்பிறை சதுர்த்தசி வருவதாலும் அன்று தீபாவளிப்பண்டிகை என்று வந்துள்ளது. இது
வாக்கியப் பஞ்சாங்கத்துக்கும், திருக்கணிதப் பஞ்சாங்கத்திற்கும் உள்ள
வித்தியாசத்தால் தோன்றிய வேற்றுமை. சூரியனின் துலா பிரவேசம் அன்றே நடக்கிறது.
திருக்கணிதப்படி அன்று ஐப்பசி முதல் தேதியும், வாக்கியப் பஞ்சாங்கப் படி அன்று
புரட்டாசி கடைசித்தேதி எனவும் கூறுகின்றனர். மாறுபட்ட கணிதக் கணக்கினால் வரும்
குழப்பமே இது.

Venkatramanan said...

//விஷ்ணு "அது தானே நீ கேட்ட வரம்"? என்று கேட்க, "நாசமா போச்சு, என் மனைவி பெயர் தங்கம், நான் எதை தொட்டாலும் தங்கமா மாறிவிடுகிறார்கள்" என்றானாம்.// 'குமுத்'(!)னு இருக்கு! (குமுக் அல்ல!)

அன்புடன்
வெங்கட்ரமணன்

(-!-) said...

//திருக்கணிதப்படி அன்று ஐப்பசி முதல் தேதியும், வாக்கியப் பஞ்சாங்கப் படி அன்று
புரட்டாசி கடைசித்தேதி எனவும் கூறுகின்றனர். மாறுபட்ட கணிதக் கணக்கினால் வரும்
குழப்பமே இது.//


என்னதான் திருக்"கணித"ப் பஞ்சாங்கம் என்றாலும் கணித்து "வாக்கிய"மாப் போட்டாத்தான் படிக்க முடியும். அதே மாதிரி, "வாக்கிய"ப் பஞ்சாங்கத்தையும் எழுத "கணித"த்தின் துணை வேணும்!!!

இப்டி எல்லாம் அனாவசியமாக ஆராய்ச்சி பண்ணாம ஸ்வீட், காரம் சாப்டோமா, வெடி வெ(டி)ச்சோமா, மானாட மயிலாட சிறப்பு நிகழ்ச்சி பாத்தோமானு போங்கப்பு.

பெசொவி said...

அனைவருக்கும் என் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்.

எல்லோரும் எல்லா வளமும் பெற்று இனிதே வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

உலகத் தமிழர்கள் குறிப்பாக ஈழத் தமிழர்கள் நிம்மதியாக வாழ ஒரு நல்ல சூழ்நிலை நிலவ வேண்டும் என்றும் இறைவனை வேண்டுகிறேன்.

VambeSivam said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

4 லட்சம் ராயல்டி என்றால் 40 லட்சத்திற்கு புத்தகம் விற்க வேண்டும்.சராசரியாக 40 ரூபாய் என்றால் 1 ல்ட்சம் பிரதிகள் மொத்தமாக விற்க வேண்டும்.அப்படி யாருக்கு மார்க்கெட் இருக்கிறது.
ஜெயமோகன் தனக்கு 1 ல்ட்சம்
கிடைத்தால் அதிகம் என்று சொல்லியிருக்கிறார்,அதுவும்
ஐம்பது புத்தகங்கள் அவர் பெயரில்
வெளியாகியிருக்கும் போது.

Unknown said...

en pondatti peru viram

Unknown said...

en pondatti peru viram

Baski said...

நல்ல கடிதம்.

கலைஞர் டிவி யில், "தீபாவளி திருநாள் நிகழ்ச்சிகள்" கேட்டீர்களா?

"விடுமுறை தின நிகழ்சிகள்"களில் இருந்து இப்படி மாற என்ன காரணம்?

ஒருவேளை ஒபாமா வெள்ளை மாளிகையில் மந்திரங்கள் முழங்க தீபாவளி கொண்டாடியது சுருக் என குத்தி இருக்குமோ?

Venkatramanan said...

Baski!
//கலைஞர் டிவி யில், "தீபாவளி திருநாள் நிகழ்ச்சிகள்" கேட்டீர்களா?//
அது தீபாவளித் திருநாள் அல்ல தீபஒளித் திருநாள் :-)

அன்புடன்
வெங்கட்ரமணன்!

kamal fan said...

நான் மதிக்கும் பிரபல பதிவர் ஜோ அவர்கள் தந்த தகவல் கிழ்வருமாறு:

//'உன்னைப்போல் ஒருவன்' முஸ்லீம் சமுதாயத்துக்கு எதிரான கருத்தை விதைப்பதாக எழும்பிய சிலரின் வாதங்களின் அடிப்படையில் சில முஸ்லீம் வலைப்பதிவர்கள் அமீர் மூலமாக கமல் ஹாசனை நேரில் சந்தித்து விவாதித்து விளக்கங்களை பெற்றுள்ளார்கள் ..அது பற்றிய பதிவு
http://muslimarasiyal.blogspot.com/2009/10/blog-post_5400.html
http://www.maraicoir.com/2009/10/blog-post_15.ஹ்த்ம்ல்//

இட்லிவடை, இது போல் கமலை சந்தித்து
உம்ம காபி ஸ்வீட் ஊசிப்போன உப்புமா பதிவுகளையும்,
நீர் கமலுக்கு எதிராக சொல்லும் உப்புசப்பில்லாத குறைக்களை
(அதுவும் பயந்தாங்கொல்லி போல் மறைமுகமாக )
தில்லாக சொல்ல ரெடியா ??

Anonymous said...

Sirippu song was sung by NSK not by Thangavelu, change that Thagaval Pizhai (Romba mukkiyam:))

Unknown said...

IV

Santhosha Sirippu it was done by NSK and not thangavelu if I remember right (in the sense I saw that movie recently)

athu yaruppa idlikku savaal vidrathu ... ithellam engalukkua alva sappidara (kudukkara) mathiri

Kamesh

Unknown said...

IV

Wish you and all our readers a Happy Diwali

Kameswara Rao from Botswana

(ingayum jaathi prachnai pannathengappa ..... villaki villaki mudiyala)

Kamesh

khaleel said...

hi

y you are so much in support of jayalalitha. after all its your blog and you can write whatever you want. but i just feel that you are not fair. that lady is sleeping in some hill station for years together without caring about the people who her put in the CM seat for 10 years. you do not seem to say a word about that!!!!

இரும்புக்குதிரை said...

[மானஸ்தன் said...
//திருக்கணிதப்படி அன்று ஐப்பசி முதல் தேதியும், வாக்கியப் பஞ்சாங்கப் படி அன்று புரட்டாசி கடைசித்தேதி எனவும் கூறுகின்றனர். மாறுபட்ட கணிதக் கணக்கினால் வரும் குழப்பமே இது.//

என்னதான் திருக்"கணித"ப் பஞ்சாங்கம் என்றாலும் கணித்து "வாக்கிய"மாப் போட்டாத்தான் படிக்க முடியும். அதே மாதிரி, "வாக்கிய"ப் பஞ்சாங்கத்தையும் எழுத "கணித"த்தின் துணை வேணும்!!!

இப்டி எல்லாம் அனாவசியமாக ஆராய்ச்சி பண்ணாம ஸ்வீட், காரம் சாப்டோமா, வெடி வெ(டி)ச்சோமா, மானாட மயிலாட சிறப்பு நிகழ்ச்சி பாத்தோமானு போங்கப்பு.]

அதெ நானும் சொல்லிகிரென்..

அனைவருக்கும் என் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்.

Anonymous said...

/****இட்லிவடை, இது போல் கமலை சந்தித்து
உம்ம காபி ஸ்வீட் ஊசிப்போன உப்புமா பதிவுகளையும்,
நீர் கமலுக்கு எதிராக சொல்லும் உப்புசப்பில்லாத குறைக்களை
(அதுவும் பயந்தாங்கொல்லி போல் மறைமுகமாக )
தில்லாக சொல்ல ரெடியா ??***/


இட்லி பிழைப்பு நடத்துவதில் மண் அள்ளி போட நினைக்கிறீர்கள், கமல் பற்றிய பதிவுகளில் தான் பின்னூட்டங்கள் எகிருகிறது, அப்புறம் எப்படி அவர் கமலிடம் போய் பேசுவார்??

Anonymous said...

//kamal fan said...
நான் மதிக்கும் பிரபல பதிவர் ஜோ அவர்கள் தந்த தகவல் கிழ்வருமாறு://

These people always keep telling that the world is against them and there is a conspiracy to defame them by portraying them as terrorists.

Have they ever protested against terrorist activities committed by their fellow religionists ?.

Didn't they celebrate when 911 happened and innocent people where killed ?.

Praveen

சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம் said...

//இப்டி எல்லாம் அனாவசியமாக ஆராய்ச்சி பண்ணாம ஸ்வீட், காரம் சாப்டோமா, வெடி வெ(டி)ச்சோமா, மானாட மயிலாட சிறப்பு நிகழ்ச்சி பாத்தோமானு போங்கப்பு//

என்ன செய்ய தெரியாம நானெல்லாம் astronomy படிச்சிட்டேன்.. அத்தோட astro physics ம் படிச்சிட்டேன்

மானாட மயிலாட பார்க்கும் வேலையெல்லாம் நான் செய்றதில்லீங்க மானஸ்தன்

sweet said...

நாத்திகம், ஆத்திகம் இரு வேறு பிரிவுகள் உண்டு என்பதை நாம் அறிவோம்.... இதில் சில ஆத்திகர்கள் நாத்திகர்களை எப்போதும் குறை கூறி கொண்டு இருப்பர்....சில நாத்திகர்கள் ஆத்திகர்களை எப்போதும் குறை கூறி கொண்டு இருப்பர்....
தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், உதாரணத்துக்கு, அடுத்தவரின் மத நம்பிக்கையை குறை சொல்லி மட்டம் தட்டி, வெளியே பார்ப்பதற்கு அருமையான கலாச்சார படம் என்று சொல்லி படம் எடுக்கும் கேடு கெட்ட ஜென்மங்களும் (இந்த வார்த்தையை உபயோகிப்பது மிக நெருடலாக இருந்தாலும், இவர்களுக்கு இது சரியான பெயர் தான்) இங்கு உண்டு....

ஆத்திகமோ, நாத்திகமோ உன் வரையில் நீ சரியாக உறுதியாக இரு.... அடுத்தவர் நம்பிக்கையை குறை சொல்ல யாருக்கும் உரிமை இல்லை....