பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, October 04, 2009

சண்டேனா இரண்டு (04-10-09) செய்திவிமர்சனம், இன்பா

இந்த வார இரண்டு செய்திகள்...

செய்தி # 1

'கிராமங்களே இந்தியாவின் முதுகெலும்பு' என்றார் காந்தியடிகள். ஆனால், குஜராத் மாநிலத்தில் கிராமங்களே இல்லை என்று முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இத்தகவல் முதல்வர்கள் மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநாட்டின் குறிப்புப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாநாடு கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. எனினும், இதுகுறித்த தகவல்கள் உச்சநீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தற்போது தான் பதிவு செய்யப்பட்டுள்ளன. கிராம நீதிமன்றங்களின் செயல்பாடுகள் என்னும் தலைப்பில் மோடியின் தகவல் பதிவாகியுள்ளது.

இந்தியாவில் தங்கள் மாநிலத்தில் கிராமங்களே இல்லை என்று தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் மற்றும் குஜராத் முதல்வர் மோடி ஆகியோர் மட்டுமே தெரிவித்துள்ளனர்.

குஜராத்தில் கிராம நீதிமன்றங்களுக்குப் பதிலாக வாகன நீதிமன்றங்கள் முறையே தேவை என்றும் மோடி வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு விஷயம் குஜராத் சுற்றுலா துறை குறித்து.

"இந்துத்துவத்தை' மேம்படுத்தும் முதலமைச்சர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் குஜராத் மாநில அரசாங்கம் மத வழிபாட்டுத் தலங்களுக்கான சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் திட்டங்களைத் தயாரித்து வருகிறது.

மாநிலத்திற்கான பயண வரைபடத்தில் இராமபிரானுடன் தொடர்புபட்ட சகல ஆலயங்கள் மற்றும் இடங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. அத்துடன், குஜராத் மாநிலத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவரான இந்திய தேசபிதா மகாத்மா காந்தியையும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளைக் கவர்வதற்காக முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது.

"உல்லாசப் பயணத்துறையை மேம்படுத்த இராமாயணத்தைப் பயன்படுத்தி இலங்கை பணம் சம்பாதிக்கலாமென்றால் குஜராத்தால் ஏன் முடியாது? ஐதீகங்களுடன் கூடிய பழைய ஆலயங்கள், இடங்கள் எம்மிடம் உள்ளன. இவை உள்நாட்டு, சர்வதேச சுற்றுலாப்பயணிகளை கவரத்தக்கவை' என்று கூறியிருக்கிறார் குஜராத் மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ஜே.நாராயணன் வியாஸ்.

அதேசமயம், சர்வதேச பௌத்த மாநாடு குஜராத் மாநிலத்தில் இவ்வருடம் இடம்பெறவுள்ளதால் பௌத்த யாத்திரைத் தலங்களுடன் தொடர்புபட்டதாக சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் திட்டங்களையும் மாநில அரசு தயாரித்து வருகிறது.

சுற்றுலா மட்டுமல்ல, தொழில் வளர்ச்சியிலும் குஜராத் இந்தியாவின் முதன்மை மாநிலம் என்கிறார்கள். நரேந்திர மோடியை இன்று உள்ள முதல்வர்களில் சிறந்த நிர்வாகி என்கிறது மீடியா.

என்ன 'மோடி' மஸ்தான் வேலை செய்கிறார் மோடி???

செய்தி # 2

கிராமத்து படம் என்றாலே அதன் களம் மதுரை பக்கம் இருக்கும் கிராமமாகத்தான் இருக்கவேண்டும் என்று இயங்கி கொண்டிருந்த தமிழ் சினிமாவில், வட மாவட்ட மக்களின் வாழ்வியலை, கிராமங்களை மண்வாசனையோடு சொன்னவர்/சொல்லிவருபவர் இயக்குனர் தங்கர்பச்சான்.

அவரது 'அழகி' ஒரு சர்வதேச தரம் வாய்ந்த, தமிழ் சினிமாவில் மறக்க முடியாத கலை படைப்பு. சொல்ல மறந்த கதை, ஒன்பது ருபாய் நோட்டு போன்ற படங்கள் வாழ்க்கையை பேசுபவை.

களவாடிய பொழுதுகள் - தங்கரின் அடுத்த படம்.

லண்டன் அய்ங்கரன் தயாரிப்பில், பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கிறார். பூமிகா, இன்பநிலா இவர்களுடன் முக்கியமான வேடத்தில் பிரகாஷ்ரா‌ஜ்.

இதில் இன்பநிலா, கேரளா இறக்குமதி நடிகைகளுக்கு இடையே நம்ம தமிழ் நாட்டை சேர்ந்தவர். ஒன்பது ருபாய் நோட்டு மூலம் கவனம் பெற்றவர்.

தங்கர்பச்சான் முன்பு எழுதிய கதைதான் அதே பெய‌ரில் சினிமாவாகிறது. இதுவொரு கம்யூனிஸ்டின் கதை. பிரபுதேவா கம்யூனிஸ்டாக வருகிறார்.
மே தினம் அன்று பெ‌ரியார் கொடியேற்றும் நிகழ்ச்சி படத்தில் இடம் பெறுகிறது. பெ‌ரியாராக சத்யரா‌ஜ் நடிக்கிறார். இந்த‌க் காட்சியில் பாடல் ஒன்றையும் வைத்திருக்கிறார் தங்கர்பச்சான். பரத்வா‌ஜ் இசையில் உருவாகியிருக்கும் அந்தப் பாடல் படத்தின் ஹைலைட்களில் ஒன்றாக இருக்கும் என்கிறார்கள் யூனிட்டில்.

'யதார்த்த சினிமாவின் இன்னொரு ப‌ரிமாணமாக களவாடிய பொழுதுகள் இருக்கும்' என்று கூறிஇருந்தார் தங்கர்.

ஆனால், இந்த படம் தற்காலிகமாக நிறுத்தபட்டிருக்கிறது என்கிறது ஒரு செய்தி. லண்டன் அய்ங்கரன் எந்த நேரத்தில் சினிமா விநியோகத்தைவிட்டு, தயாரிப்பில் இறங்கினார்களோ தெரியவில்லை.
அஜித், விஜய் உட்பட்ட நடிகர்களை வைத்து அவர்கள் தயாரித்த படங்கள் எதுவும் சரியாக போகவில்லை. தயாரித்து முடிந்த படங்கள் வெளிவருவதாய் இல்லை (இன்னொரு உதா மிஸ்கினின் நந்தலாலா).

பிரபுதேவா, நயன்தாராவே தனது மோஸ்ட் 'wanted' என்று போனதுதான் 'களவாடிய பொழுதுகள்' தற்காலிகமாக நிறுத்தபட்டு இருப்பதற்கு ஒரு முக்கிய காரணமாக கூறுகிறார்கள். பிரகாஷ்ராஜ் கொடுத்த தேதிகள் வேறு முடிந்துவிட்டதாம்.

யதார்த்த சினிமா மீது நம்பிக்கை கொண்ட, நல்ல படங்களை மட்டுமே கொடுப்பதை தனது கொள்கையாக வைத்து இருக்கும் தங்கர்பச்சான் போன்ற இயக்குனர்கள் நிலைத்து இருப்பது தமிழ் சினிமாவுக்கு மிக அவசியம். 'களவாடிய பொழுதுகள்' விரைவில் முடிந்து வெளிவரும் என்று நம்புவோம்.


இந்த வார உலக செய்தி :

'உலக நாடுகளின் உள்விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் தலையிடக்கூடாது' என்று
வேண்டுகோள் விடுத்தது இருக்கறார் இலங்கை பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் கூட்டத் தொடரில் உரையாற்றுகையில் இலங்கை பிரதமர் இதனைத் தெரிவித்தார். விடுதலைப் புலிகளின் சர்வதேச பிரதிநிதிகள் மற்றும் அந்த அமைப்பின் முன்னணி அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படியும் பிரதமர் தமது உரையில் வேண்டுகோள் விடுத்தார்.

பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதில் இலங்கை வெற்றி கண்டுள்ளது.விடுதலைப் புலிகள் பிறநாட்டு மண்ணில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து உலக நாடுகள் விழிப்புடனிருந்து, நடவக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் பிரதமர் கோரியுள்ளனர்.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர்,பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் அடங்கிய இலங்கைப் பிரதிநிதிகள் குழுவுக்குத் தலைமை வகித்து ஐ.நா.கூட்டத்தொடரில் சென்ற அங்கு மேலும் குறிப்பிட்டவை வருமாறு:


ஐக்கிய நாடுகள் சாசனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி நாடொன்றின் உள்விவகாரங்களில் ஐ.நா. தலையிடக்கூடாது என்பதை மதிக்க வேண்டியது அவசியமாகும். ஐ.நாவின் சாசனமே எங்கள் அனைவரையும் ஒன்றிணைத்துள்ளதால் பிணைத்துள்ளதால் அதுவே எமக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது. நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடக்கூடாது என்பது எப்போதும் மதிக்கப்பட வேண்டும்.பாதுகாப்புச் சபை சீர் செய்ய வேண்டும். ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் சீர்த்திருத்தத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா குறிப்பிட்டுள்ளபடி, எதிர்காலத்திற்கு அடிப்படையான நான்கு தூண்களைப் பின்பற்றுவதற்கான நடவடிக்கைகள் அவசியம். மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த நிலையில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை இலங்கை அரசு விரைவில் மீள்குடியேற்றும். விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து மீட்கப்பட்ட மக்களின் உடனடி மனிதாபிமானத் தேவைகளைப் பூர்த்தி செய்வதே அரசின் முக்கிய முன்னுரிமையாகவுள்ளது. இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றம் எமது சர்வதேச சகாக்களின் ஒத்துழைப்புடனேயே முன்னெடுக்கப்படும்.

பல முன்னாள் விடுதலைப் புலிப் பேராளிகள் இடம்பெயர்ந்தவர்களுடன் கலந்துள்ளனர் என்பதால் இதுகுறித்து நாம் அவதானமாக இருக்கவேண்டும்.மனித உரிமைகள், மனிதாபிமானத் தராதரங்கள் விடயத்தில் சர்வதேச கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் கொழும்பு அர்ப்பணிப்புடன் உள்ளது.மேலும் தேசிய நல்லிணக்கத்தை அடைவதற்கான உள்நாட்டுச் செயற்பாடுகளையும் கொழும்பு முன்னெடுக்கும்.

பயங்கரவாத அமைப்புகளின் செயல்களைத் தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை சர்வதேச சமூகம் பயங்கரவாத அமைப்புகளின் பலதரப்பட்ட குற்றச் செயல்களைத் தடுபதற்கு உறுதியான நன்கு ஒருங்கிணைக்கப்பட்டநடவடிக்கைகளை எடுக்கவேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிரான பிரகடனத்திற்கு இறுதிவடிவம் கொடுக்கவேண்டும். நடுக்கடலில் கப்பல்களை நிறுத்தி,சோதனையிடுவதற்கான தற்போதைய சர்வதேச சட்டங்களை மீளாய்வு செய்யவேண்டும். விடுதலைப் புலிகளுக்கான பெருமளவு நிதி, வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் பலவகைக் குற்றச்செயல்கள் மூலமே பெறப்பட்டுள்ளது. இலங்கையில் இவ்வருடம் மிக முக்கியத்துவம் வாய்ந்த மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. இது நாட்டிற்கு புதிய நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் அளித்துள்ளது.

பயங்கரவாதம் என்பது எல்லை கடந்தது என்பதுடன், சர்வதேசப் பிரச்சினை என்பதால்,எமது வெற்றி இலங்கைக்கு மாத்திரம் சமாதானத்தையும், பாதுகாப்பையும் கொண்டுவரப் போவதில்லை. உலகில் அனைத்து நாடுகளுக்கும் இது சாதகமாக அமையும் என்றார் இலங்கை பிரதமர் ரட்ணசிறி ரட்ணசிறி விக்கிரமநாயக்க.

அதாவது, தீவிரவாத ஒழிப்பு என்ற பெயரில் எவ்வளவு வேண்டுமானாலும் அத்து மீறுவோம், அதை உலக நாடுகள் கண்டு கொள்ளக்கூடாது என்பதன் சாராம்சம்தான் இந்த உரை.

'உலக நாடுகளின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடக்கூடாது' என்று எந்த நாடாவது குரல் எழுப்பினால் நன்றாக இருக்கும். ஏனெனில், ஐக்கிய நாடுகள் சபை என்ற பொம்மையின் ரிமோட் கன்ட்ரோலை வைத்து இருப்பது அமெரிக்காதானே??

-இன்பா
http://kadaitheru.blogspot.com/ :-)

19 Comments:

யதிராஜ சம்பத் குமார் said...

சுற்றுலா மட்டுமல்ல, தொழில் வளர்ச்சியிலும் குஜராத் இந்தியாவின் முதன்மை மாநிலம் என்கிறார்கள். நரேந்திர மோடியை இன்று உள்ள முதல்வர்களில் சிறந்த நிர்வாகி என்கிறது மீடியா.////



அதென்ன என்கிறார்கள், என்கிறது?? அன்னை ராஜமாதாவை தலைவராகக் கொண்ட ராஜீவ் காந்தி பெளண்டேஷன், குஜராத்தை நிர்வாகத்திலும், வளர்ச்சியிலும் முதன்மையான மாநிலமாக அறிவித்து விருது கொடுத்திருக்கிறது.

(Economic Times, May 20th, 2005)

தவிர நமது கலாச்சாரத்தை தூக்கி நிறுத்தும் விதம் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வரவேற்கத்தக்கதே!!

யதிராஜ சம்பத் குமார் said...

கிராமங்களே இல்லை என்பது அவ்வாறு அர்த்தமாகாது. குஜராத்தில் உள்ள அனைத்து கிராமங்களும், எல்லா விதங்களிலும் தன்னிறைவு பெற்ற மாநிலமாக விளங்குவதாக அர்த்தம் கொள்ளலாம். அடிப்படை வசதிகளான நீர் மற்றும் மின்சாரம் முதல், மேம்பட்டவைகளான இணைய வசதி வரை குஜராத்தின் அனைத்து கிராமங்களுமே தன்னிறைவு பெற்றவை. எனவே மோதி அவ்வாறு கூறியிருக்கலாம். இதனை லிட்ரலாக அர்த்தம் கொள்ளத் தேவையில்லை.

Unknown said...

//தவிர நமது கலாச்சாரத்தை தூக்கி நிறுத்தும் விதம் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வரவேற்கத்தக்கதே!!
//

இதெல்லாம் உண்மையா தல. அப்படி இருந்தா பூகம்பத்துல ஏன் அவ்வளவு மக்கள் இறந்தாங்க. சரியான கட்டமைப்பு இல்லாததால் தானே

பெசொவி said...

//என்ன 'மோடி' மஸ்தான் வேலை செய்கிறார் மோடி???//

அவர் (ஒருவர்தான்) ஆட்சி நடத்துகிறார், அவ்வளவுதான். மற்றவர்கள் ஆட்சி நடத்துவதாக பெயர் பண்ணுகிறார்கள். இதில் மோடி மஸ்தான் வேலை எதுவும் இல்லை.

Unknown said...

/கிராமங்களே இல்லை என்பது அவ்வாறு அர்த்தமாகாது. குஜராத்தில் உள்ள அனைத்து கிராமங்களும், எல்லா விதங்களிலும் தன்னிறைவு பெற்ற மாநிலமாக விளங்குவதாக அர்த்தம் கொள்ளலாம். //
இது உண்மையா . அல்லது மோடியை தூக்கி நிறுத்தும் முயற்சியா

Unknown said...

தல பின்லேடனுக்கு 50 பொண்டாட்டியாமே. அங்க எல்லாம் எப்படி கட்டுபடி ஆகிறது. என்னால நம்ப முடியல. அதனால தான் அவர பாத்து எல்லோரும் பயப்படராங்க

Unknown said...

அது வேற ப்லோகின் கமெண்ட் சாரி.
ஆனாலும் நல்லா இருக்கு இல்ல

யதிராஜ சம்பத் குமார் said...

இதெல்லாம் உண்மையா தல. அப்படி இருந்தா பூகம்பத்துல ஏன் அவ்வளவு மக்கள் இறந்தாங்க. சரியான கட்டமைப்பு இல்லாததால் தானே///



இயற்கையின் சீற்றத்தை வெல்ல எந்த சக்தியாலும் முடியாது. நம்மைத் தற்காத்துக் கொள்ள வழிவகைகள் செய்து கொள்ளலாமேயொழிய அதனை எதிர்க்கவல்லதொரு விஞ்ஞானத் தொழில்நுட்பம் இன்றளவும் கண்டுபிடிக்கப்படவுமில்லை, கண்டுபிடிக்கவும் முடியாது. தவிர, இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பகுதி என்று பூஜ் என்று இன்று யாராலும் அதனைக் கூற முடியாது. அந்த அளவிற்கு துரிதமாக மீட்புப் பணிகள் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை குஜராத் அரசாங்கம் மேற்கொண்டது. இதனை ஐ.நா.வின் இயற்கைப் பேரிடர்களுக்கான அமைப்பு பாராட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


மோதியைத் தூக்கிப் பிடிக்க வேண்டிய அவசியம் யாருக்குமில்லை ஜெய்சங்கர்....அவர் குஜராத்தின் பூர்வோத்திரத்தையே மாற்றியுள்ளதே அதற்கு சான்று.


ஒருமுறை குஜராத்திற்கு சென்று வாருங்கள்....பிறகு அதனை தமிழகத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள். தர்க்கவாதத்திற்காகவோ, விதண்டாவாதத்திற்காகவோ நான் பேசவில்லை. இதெல்லாம் நிதர்ஸனம்.

Anonymous said...

rasipalan enna achi

அமைதி அப்பா said...

தங்கர்பச்சான் போன்ற இயக்குனர்கள் நிலைத்து இருப்பது தமிழ் சினிமாவுக்கு மிக அவசியம். 'களவாடிய பொழுதுகள்' விரைவில் முடிந்து வெளிவரும் என்று நம்புவோம்.
நூற்றுக்கு நூறு உண்மையான வார்த்தை. தங்கர்பச்சனுக்காக மட்டுமல்லாமல் தமிழனின் நாகரீகம் மற்றும் கலாச்சாரம்
தொடர்ந்து தமிழ் சினிமாவில் இடம்பெற வேண்டுமானால், தங்கர்பச்சன் தொடர்ந்து வெற்றி பெறவேண்டுமென்கிற
என்னுடைய ஆசையை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஸ்ரீராம். said...

நிர்வாகத்தில் சிறந்தவர் என்று ஒத்துக் கொள்ளப் பட்டவர் திரு மோடி. நிதிஷ் குமார் மற்றும் ஷீலா தீக்ஷித் கூட இந்தப் பட்டியலில் வருவார்கள். இவர்களை எல்லாம் சுழற்சி முறையில் மற்ற மாநிலங்களில் சில காலம் முதல்வராகப் பயன் படுத்த வேண்டும்!

ஸ்ரீராம். said...

தங்கர் சற்றே கோபக் காரர் என்றாலும் அருமையான படங்கள் தந்தவர். சீக்கிரம் அவர் படம் தடைகளைக் கடந்து வெளி வரட்டும்.

Gokul said...

//கிராமத்து படம் என்றாலே அதன் களம் மதுரை பக்கம் இருக்கும் கிராமமாகத்தான் இருக்கவேண்டும் என்று இயங்கி கொண்டிருந்த தமிழ் சினிமாவில், வட மாவட்ட மக்களின் வாழ்வியலை, கிராமங்களை மண்வாசனையோடு சொன்னவர்/சொல்லிவருபவர் இயக்குனர் தங்கர்பச்சான்.//

முற்றிலும் உண்மை. இது தொடர்பாக நான் எழுதிய ஒரு பதிவு..

http://kulambiyagam.blogspot.com/2008/03/4.html

Anony8 said...

Every State needs a Modi.
Nation needs a Modi as PM

gopinath said...

சும்மா குண்டு சட்டியில் உட்கார்ந்து கொண்டு, அவன் இதழ் சொன்னான், இவன் இதை சொன்னான் அப்படின்னு எழுதி கொண்டிராமல், குஜராத் சென்று நேரில் பார்த்து எழுத முயற்சி செய்யவும். முடியாவிட்டால், பாசிடிவ் ஆக சிந்திக்கவும். இன்னொரு புத்திசாலி கேட்கிறார், பூகம்பத்தில் இவ்வளவு சேதாரம் ஏன் என்று? உங்கள் வீடு எந்த கட்டிட திட்டத்தில் கட்டப்பட்டுள்ளது? அது பூகம்பம், வெள்ளம் இவற்றுக்கு தாங்குமா? கேள்வி கேப்பது சுலபம். அந்த மாநிலத்துக்கு போய் பாருங்கள், இப்போது எங்காவது, பூகம்பத்தின் சுவடு தெரிகிறதா என்று. அது தான், ஒரு நல்லாட்சியின் அடையாளம். திராவிட ஆட்சிகளை மட்டுமே பார்த்து குண்டு சட்டியில் குதிரை ஓட்டினால், இத்தகைய சிந்தனை தான் வரும்.

Guru Prasath said...

////கிராமத்து படம் என்றாலே அதன் களம் மதுரை பக்கம் இருக்கும் கிராமமாகத்தான் இருக்கவேண்டும் என்று இயங்கி கொண்டிருந்த தமிழ் சினிமாவில், வட மாவட்ட மக்களின் வாழ்வியலை, கிராமங்களை மண்வாசனையோடு சொன்னவர்/சொல்லிவருபவர் இயக்குனர் தங்கர்பச்சான்.//

//முற்றிலும் உண்மை. இது தொடர்பாக நான் எழுதிய ஒரு பதிவு..

//http://kulambiyagam.blogspot.com/2008/03/4.html

gokul, அட நானும் இத பத்தி ஒரு பதிவு போட்டிருக்கேங்க, இங்கிலிபீசுல. படிச்சு பாருங்க, ஆனா நான் தான் first

http://filmfare.blogspot.com/2005/06/filmi-village.html

R.Gopi said...

குஜராத்ல போயி "மோதி" பாரு, காணாம போயிடுவ...

கலக்கல் வசனம்.....

khaleel said...

Saudi arabia also gives best standards of living. can anybody live in saudi arabia? gujarat is akin to saudi.

Erode Nagaraj... said...

// jaisankar jaganathan said...

தல பின்லேடனுக்கு 50 பொண்டாட்டியாமே. அங்க எல்லாம் எப்படி கட்டுபடி ஆகிறது. என்னால நம்ப முடியல. அதனால தான் அவர பாத்து எல்லோரும் பயப்படராங்க//


ஜெய், ஒண்ணோ ரெண்டோ இருந்தாதான் கஷ்டம்... அம்பது மனைவிகள் இருந்தால் ஆனந்தமாக, தனியாக இருக்கலாம்... மீதி நாற்பத்தொன்பது பேரிடம் யாரிடமோ இருப்பதாக ஒவ்வொருவரும் எண்ணிக்கொள்வார்கள்... பிரம்மச்சாரியாக காலம்தள்ளலாம்...