'உன்னை போல் ஒருவன்'
படம் பார்க்க போய்க்கிட்டு இருக்கேன். படத்தின் இடைவேளையில் படம் இப்படி இருக்கு என்று 'டெக்னிகல்' பிரச்சனை இல்லை என்றால் அப்டேட் செய்ய பார்க்கிறேன். அதுவரைக்கும் என்ன செய்வது ? (கமல் மாதிரி) கைகடிகாரத்தை பார்த்துக்கிட்டே இருங்க ....
[ இடைவேளை வரை மட்டும் முதல் விமர்சனம் ]
நேற்று இரவுதான் 'a wednesday' ( இன்னொரு முறை )படம் பார்த்தேன். நசுருதீன் ஷா என்ற நடிகர் தெரியாமல் ஒரு சாதரண மனிதன் படம் முழுவதும் தெரிந்தான். இன்று படம் முழுவதும்(சரி, பாதிப்படம் வரை), கமல் என்ற ஹீரோப் படம் என்ற எண்ணம் நினைவில் ஓடிக்கொண்டே இருந்தது. இது கமலின் தவறு இல்லை. நசுருதீன் ஷாவால் எப்படி தசாவதாரம் செய்ய முடியாதோ அதே மாதிரி கமலுக்கு இது சாத்தியமில்லை; இது அவர்களது இமேஜ் பிரச்சினை அன்றி அவர்களின் திறமைப் பிரச்சினை இல்லை என்ற திஸ்கியுடன் தொடங்குகிறேன்...
எதிர்பார்த்தமாதிரியே.....
* ஆரம்பத்தில் அல்லா ஜானே இரண்டுவரியும் கோயிலும், மசூதியும் காண்பிக்கிறார்கள்.
* ஹிந்தியில் இல்லாத காட்சியாக, பாம் செய்வது எப்படி என்று ஒரு தேர்ந்த விஞ்ஞானி அல்லது தொழில்நுட்பத் திறமைசாலி மாதிரி மாதிரி கமல் விஸ்தாரமாகச் செய்து காண்பிக்கிறார்.
* படத்தில் கமல் பெயர் ஸ்ரீநிவாச இராமானுஜம். அதாவது போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க வரும் போது சொல்லும் பெயர். ஹிந்தியில் பையில் J & K என்றிருக்கும். கமல் பையில் ஸ்ரீநிவாசர் படம் ஒட்டியிருக்கிறது.
* தீவிரவாதிகள் நான்கு பேருமே இஸ்லாமியர் என்ற ஹிந்தி அராஜகம் இல்லாமல் மூவர் இஸ்லாமியராகவும் ஒரு இந்துவாகவும்(அதை அழுத்தமாக வேறு சொல்கிறார்.) காண்பித்து கமலின் செக்யூலரிசம் காப்பாற்றப்பட்டு விட்டது.
* கமல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப் போகும்போது அவருக்குமுன் ஒருவர், மனைவி குக்கரால் அடித்துவிட்டதாகப் புகார் செய்துகொண்டிருப்பார். ஹிந்தியில் இடதுபக்கம் காயம் இருக்கும். சின்ன மாறுதலாக தமிழில் வலதுபக்கம். இடதும் வலதுமில்லாத ஜனநாயகத்தில் கமலுக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லை போலிருக்கிறது. (ஒரு 'வார்த்தை' பார்சேஏஏல்!!)
* ஹிந்தியில் முன்னேற்பாடுகளுடன் சின்ன பையை எடுத்துக்கொண்டு செல்ல, கமல் ஒரு இராணுவ ஹோல்டால் ரேஞ்சுக்கு எடுத்துக்கொண்டு பல படிகள் ஏறிப்போகிறார்.
* கமிஷனர் மோகன்லாலுடன் பேசும்போது ஹிந்தி மாதிரி வெறும்கையாகப் போகாமல் ஒரு துப்பாக்கி எடுத்துக்கொண்டுபோய் அதன் குண்டுகள் பகுதியை உருட்டிக்கொண்டே வேறு இருக்கிறார். சுஜாதாவிடம் பழகியவர் என்பதால் எப்படியும் முடிவதற்குள் அந்தத் துப்பாக்கி வெடிக்கும் என்று நினைக்கிறேன். முடிந்ததும் சொல்கிறேன்.
* டிவி ரிப்போர்ட்டர், "முதலில் நான் ஒரு பெண், அப்புறம் இந்தியன் அப்புறம்தான் டிவி ரிப்போர்ட்டர்" என்று சொல்ல(இது மாதிரி வசனங்கள் இணையத்தில் எத்தனை பார்த்திருப்போம்!) மோகன்லால் "இந்த ஆர்டர் எனக்கு பிடிச்சிருக்கு" என்று சொல்ல .... தியேட்டரில் ஒரே கைத்தட்டு. அந்த அம்மணி புகைபிடிக்கிறார். ஒருவேளை அதற்குக் கைதட்டினார்களா என்றும் தெரியவில்லை. ( தமிழ் படத்தில் ஹிந்தி வந்துவிட்டது )
* கேமிரா அட்டகாசம். 'அல்லா ஜானே' பாடல் மட்டுமே இரண்டு வரி வந்திருக்கிறது. மற்ற பாடல்கள் எதுவும் இடைவேளை வரை வரவில்லை. ( கடைசி வரை வரவில்லை )
படத்தில் உள்ள ஸ்டில் மாதிரி, இப்பொழுதுதான் பாதிப் படம் பார்த்திருக்கிறேன். முழுவதும் பார்த்துவிட்டு திரும்ப வருகிறேன். அதுவரை பாதியில் விட்டுவிட்டு வந்த உங்கள் வேறு வேலையைப் போய்ப் பாருங்கள்.
இடைவேளைக்குப் பின்:
* துப்பாக்கி வெடிக்கவில்லை. கமல் கதை சொல்லி கண்ணீர்விட்டு அதால் துடைத்துக்கொள்கிறார். காஸ்ட்லியான கர்ச்சீப். அப்பாடா!.
* முதல்வராகக் குரல் கலைஞர். மோகன்லாம் தொலைபேசியில் பேசும்போது இடையில் 'எண்ட குருவாயூரப்பா!' என்று சொல்ல, 'இங்கயே ஏகப்பட்ட கடவுள் இருக்க, ஏன் அங்கேயிருந்து கூப்பிடறீங்க?' என்பது அசல் கலைஞர் பாணி. அதே போல் Chief Seceratary முதல்வர் வீட்டிலிருந்து போகும் போது முதல்வர் வீட்டில் திமுக கொடி.
* தீவிரவாதிகளை விடுவித்தால் பாம்களை எடுத்துவிடுவாய் என்பதற்கு என்ன கியாரண்டி என்று மோகன்லால் கேட்க, கியாரண்டி வாரண்டி எல்லாம் தர நான் என்ன பிரஷர் குக்கரா என்று கேட்கிறார். இரா.முருகன் வசனம்!
தீவிரவாதிகள் எல்லோருமே கோவை, பெங்களூர், மும்பை என்று கலவரம் செய்தவர்கள்
* கோவைக் கலவரத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய தீவிரவாதி உணர்ச்சிவசப்பட்டு தன் கதையைச் சொல்லும்போது தன் செயல்களுக்குக் காரணம் தன் மூன்றாவது மனைவி குஜராத் பெஸ்ட் பேக்கரி கலவரத்தில் இறந்ததால் என்று சொல்கிறான். அடடா, கோவையில் நடந்தது எப்போ பெஸ்ட் பேக்கரி நடந்தது இப்போது. இஸ்லாமிய தீவிரவாதிகள் கலவரம் வரும்முன்பே பழிவாங்கிவிடுவார்கள் என்று எடுத்துக்கொள்ள வேண்டுமா? கமல் இதில் ஒரு முக்கிய வசனம் சொல்கிறார்- "மறதிதான் இந்தியாவின் தேசிய வியாதி". கவலைப்படாதீர்கள் நாங்களும் இந்த மாதிரி சறுக்கல்களை மறந்துவிடுகிறோம்.
* ஒரு தீவிரவாதி, "குஜராத்தோட மோதிப் பாரு, தீர்ந்துடுவ" என்கிறார். மோடியை நக்கல் அடிக்கிறாரா அல்லது மோடியின் பெருமையை சொல்கிறாரா ?
* ஒரு இஸ்லாமிய தீவிரவாதி, "300 ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்தியாவில் நவாபாக இருந்தோம். இப்போது நாய் மாதிரி இருக்கிறோம்" என்கிறார். அப்படியா? 300 வருடங்களுக்கு முன் ? * மோகன்லால் டீமில் அவருக்குக் கீழ் இருக்கும் அதிகாரிகள் இருவரும் இருவரும் நல்ல தெரிவு. மும்பை தாக்குதலில் புல்லட் ப்ரூஃப் அணியாமல்சென்ற கார்கரேக்கு நன்றி சொல்லிவிட்டு எப்போதும் புல்லட் ஃப்ரூஃபுடனேயே வருகிறார்கள்.
* கமல் மோகலாலிடம் , "நீங்க என்ன சூப்பர்மேன் என்று நினைத்துகொண்டிருக்கிறீகளா ? . நான் என்னை இனிவிசிபிள் மேனாகத்தான் நினைக்கிறேன். என் பெயர்கூட வோட்டர் லிஸ்டில் இல்லை" என்று சொல்கிறார். சீரியஸ் காட்சியிலும் நல்ல காமெடி!. வோட்டர் லிஸ்ட் சரியாக வைக்கவிட்டால் என்ன ஆகும் என்று நரேஷ் குப்தா யோசிக்கவேண்டிய விஷயம்.
* இரா.முருகன் வசனம் இயல்பாக இருக்கிறது. ஆங்காங்கே கொஞ்சம் மேதாவித் தனமாய் தெரியும் வசனங்கள் கமல் அவருக்கு சொல்லித்தந்ததாக இருக்கலாம். ( எனக்கு இடது வலது பேதம் கிடையாது )
* கமல் படமாக இருந்தாலும் மோகன்லால் படம் என்ற உணர்வை இறுதியில் தருகிறது. அனுபம் கெர்-ஐ விட மோகன்லால் சிறப்பாகச் செய்திருக்கிறார்.
* கடைசியில் கமல் பேசும் வசனம், ஹிந்தி படம் போல் அவ்வளவு நறுக்கென்று இல்லை.
மெசேஜ் - தமிழில் தீவிரவாதத்தை தீவிரவாதத்தை கொண்டு தான் அழிக்க வேண்டும் ( 3:1 Ratioவில், மூன்று முஸ்லீம், ஒரு இந்து )
இட்லிவடை மார்க் - 6.75/10
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Friday, September 18, 2009
உன்னை போல் ஒருவன் - FIR
Posted by IdlyVadai at 9/18/2009 08:59:00 AM
Labels: இட்லிவடை ஸ்பெஷல், சினிமா, விமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)
63 Comments:
:))))))))) சீக்கிரம்
vilvarani said
கமல் ஹாசன் போல் ஒருவரை பார்ப்பது மிகவும் கடினம்
நாராயணா இந்த கொசுத்தொல்லை தாங்கமுடியலையே!!!!
interval varaikkum wait pannanumma?
nadulla dum adikka velila varuveenga illa - appo kooda update pannalam ;-)
பர்ஸ்ட் ஷோ-வா ?
IV - Officeku Poolayaaa
Rocking.
விட்டா படத்தை 'Live-Streaming" செஞ்சுடுவீங்க போல.
நீங்க செஞ்சாலும் செய்வீங்க, சொல்ல முடியாது.
லைவ் ரிப்போர்ட் கொடுக்குமளவு முக்கியப் படமா? படம் நன்றாக இருக்கிறது. ஆனால் ஓடாது என்பது கோடம்பாக்கத்து ரிப்போர்ட்.
dont worry, we have read other reviews.so come to the point and say it in 140 words.otherwise you will be made to read all blogs of Boston Balaji for one month daily, three times a day :).
அன்புள்ள இட்லி வடை,
உன்னைப்போல் ஒருவன் இல்லை.
உம்மைப்போல ஒரு இட்லி வடை, எங்கயும் இல்லை.
நன்றி.
இட்லி வடையின் சூடு தாங்க முடியல.
அன்புடன்,
ஸ்ரீனிவாசன்.
ரெண்டு பேரும் குண்டாக இருக்காங்க..........கன்னாடி மத்தும் இல்ல்லைன்னா கமல் யாரு ,மொஹன்லால் யாருன்னு தெரியாது
///* தீவிரவாதிகளை விடுவித்தால் பாம்களை எடுத்துவிடுவாய் என்பதற்கு என்ன கியாரண்டி என்று மோகன்லால் கேட்க, கியாரண்டி வாரண்டி எல்லாம் தர நான் என்ன பிரஷர் குக்கரா என்று கேட்கிறார். இரா.முருகன் வசனம்!///
அட என்னப்பா இது வசனம்.... இட்லிவடையில் மானஸ்தன் மாதிரி ஆட்கள் போடும் மொக்கை மாதிரி இருக்கு.
ஒருவேளை கோவையில் இனிமேல்தான் கலவரம் வரப்போகிறதோ என்னவோ??
http://thamizthoughts.blogspot.com/2009/09/blog-post_18.html
உங்க விமர்சனம் ஓகே, படம் பாக்கலாமா இல்ல வேண்டாமா? பதில் எதிர்பார்க்கிறேன் :))
//உங்க விமர்சனம் ஓகே, படம் பாக்கலாமா இல்ல வேண்டாமா? பதில் எதிர்பார்க்கிறேன் :))//
நிச்சயம் பார்க்கலாம் - படம் நன்றாக இருக்கும்.
இந்தி படம் பார்க்கவில்லை என்றால் படம் ரொம்ப நன்றாக இருக்கும் :-)
//நிச்சயம் பார்க்கலாம் - படம் நன்றாக இருக்கும்.
இந்தி படம் பார்க்கவில்லை என்றால் படம் ரொம்ப நன்றாக இருக்கும் :-)//
ரொம்ப நன்றி :))
May i request you pls post the review of Unnai Pol Oruvan.. Not your just like that comments...
//May i request you pls post the review of Unnai Pol Oruvan.. Not your just like that comments...//
இட்லிவடையில் விமர்சனம் எழுதும் பிரசன்னா இன்று ஆபீஸ் வரவில்லை. வந்ததும் எழுத சொல்லுகிறேன். நன்றி.
// "உன்னை போல் ஒருவன் - FIR" //
தலைப்பு அருமை.
அப்புறம் முதலில் உன்னை போல் ஒருவன் வந்து பிறகு Wednesday படம் வந்திருந்தால். நீங்கள் உன்னை போல் ஒருவனைத் தான் பாராட்டியிருப்பீங்க.
Kamal movies and terrible events!!
மகாநதி - finance company மூடல்
அன்பே சிவம் - tsunami
வேட்டையாடு விளையாடு - serial killers
உன்னை போல் ஒருவன் -??
ஆனால் மற்ற படங்களுக்கும் உன்னை போல் ஒருவனுக்கும் உள்ள வேற்றுமை இது remake
என்னப்பா .....ஸ்ரயா மார்க்கவிடக்கம்மியா ?.....நியாயமா ?
திரு இட்லிவடை,
உன்னை போல் ஒருவன் உடனடி/நேரடி விமர்சனம்
கடந்த கால கமல் மஞ்ச கமண்டுகளுக்கு பரிகாரமா?
இல்லை இதில் உங்கள் secularism உள்ளதா?
//
ஹிந்தியில் இல்லாத காட்சியாக, பாம் செய்வது எப்படி என்று ஒரு தேர்ந்த விஞ்ஞானி அல்லது தொழில்நுட்பத் திறமைசாலி மாதிரி மாதிரி கமல் விஸ்தாரமாகச் செய்து காண்பிக்கிறார்.
//
இது கமலின் (கெட்ட)நல்ல வழக்கம்
/*** seetha said...
ரெண்டு பேரும் குண்டாக இருக்காங்க..........கன்னாடி மத்தும் இல்ல்லைன்னா கமல் யாரு ,மொஹன்லால் யாருன்னு தெரியாது***/
Please consult an eye doctor.
இட்லிவடை அவர்களே,
>>>>>ஒரு தீவிரவாதி, "குஜராத்தோட மோதிப் பாரு, தீர்ந்துடுவ" என்கிறார். மோடியை நக்கல் அடிக்கிறாரா அல்லது மோடியின் பெருமையை சொல்கிறாரா ?<<<<<
நாமதான் நரேந்திர மோடி என்று உச்சரிக்கிறோம். வட இந்தியர்கள் (குஜராத்திகள் உட்பட) நரேந்திர மோதி என்றுதான் உச்சரிக்கிறார்கள். எனவே இரா. முருகனின் இந்த வசனத்தில் ஏதேனும் சிலேடை இருக்குமோ?!
நன்றி!
சினிமா விரும்பி
Era.Murugan has extended his incompetency in a new genre!
//முதல்வராகக் குரல் கலைஞர். // கமல் கருணாநிதிக்கு வாய்ப்பு அமையும்போதெல்லாம் கூஜா தூக்குவார் ( ஆட்சியில் இருப்பதால் ) என்பது தான் தெரிந்ததாச்சே..
//கடைசியில் கமல் பேசும் வசனம், ஹிந்தி படம் போல் அவ்வளவு நறுக்கென்று இல்லை//
இரா முருகனின் திறமை வெளிப்பட்டிருக்க வேண்டியது இங்குதான்.. தேவையான இடத்தில் கோட்டை விட்டு விட்டார் போலிருக்கிறது..
//இந்தி படம் பார்க்கவில்லை என்றால்// இந்த ஒரு வரியில் இரு படங்களின் ஒப்பீட்டை செய்துவிட்டீர், இவ..இதை பதிப்பிலேயே போட்டு இருக்கலாம்..
:))
ஒரு இஸ்லாமிய தீவிரவாதி, "300 ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்தியாவில் நவாபாக இருந்தோம். இப்போது நாய் மாதிரி இருக்கிறோம்" என்கிறார். அப்படியா? 300 வருடங்களுக்கு முன் ?
....
வெறும் தீவிரவாதி என்றால் பத்தாதா ? தீவிரவாதிக்கு மதம் உண்டா என்ன ?
* மோகன்லால் டீமில் அவருக்குக் கீழ் இருக்கும் அதிகாரிகள் இருவரும் இருவரும் நல்ல தெரிவு. மும்பை தாக்குதலில் புல்லட் ப்ரூஃப் அணியாமல்சென்ற கார்கரேக்கு நன்றி சொல்லிவிட்டு எப்போதும் புல்லட் ஃப்ரூஃபுடனேயே வருகிறார்கள்.
..........
ரெண்டு இருவரும் உண்டு இங்கு.
மற்றபடி இந்தியை ரொம்ப கம்பேர் செய்துட்டீங்க. இந்தி படம் பாக்காம இத பாக்ககூடாதோ ?
Is it true Idly-Vadai is being 'swallowed' by Google? How many millions?
அதிகம் திட்டுபவர்கள்.. widjet not showing for me..
செந்தழல் ரவி said...
ஒரு இஸ்லாமிய தீவிரவாதி, "300 ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்தியாவில் நவாபாக இருந்தோம். இப்போது நாய் மாதிரி இருக்கிறோம்" என்கிறார். அப்படியா? 300 வருடங்களுக்கு முன் ?
....
வெறும் தீவிரவாதி என்றால் பத்தாதா ? தீவிரவாதிக்கு மதம் உண்டா என்ன ?
//
இஸ்லாமிய ஆட்சியை உலகெங்கும் கொண்டுவர நினைத்து குண்டு வைப்பவனை எப்படி வெறும் தீவிரவாதி என்று சொல்வது.நோக்கத்தோடு சேர்த்து சொல்வதே சரி என நினைக்கிறேன்.
Hmm.. From the review I get a feeling that it's not going to match Hindi, something usually unlikely for a remade version. Firstly the story is already known and there is no element of surprise in this remake. I was kind of expecting Kamal would spoil the climax. Hindi version had awesome dialogues in the climax with phenomenal Naseerudin Shah. With Kamal and all his big ego to highlight himself to satisfy his fans, and his goal to push his personal agenda on screen, I thought he will fail to match Shah..
நாட்டுல இம்புட்டுப் பேரு வேலைவெட்டி இல்லாம இருக்கமா?? இந்தப் போஸ்ட்டு போட்டு எம்புட்டு நேரம் இருக்கும்?? அதுக்குள்ள நிலையக் கலைஞர்கள் எல்லாம் வரிசைய வந்து கருத்திட்டுப் போய்ட்டாங்க...
:-)
சரி..சரி..முழுசா சொல்லுங்க...
//
தீவிரவாதிகளை விடுவித்தால் பாம்களை எடுத்துவிடுவாய் என்பதற்கு என்ன கியாரண்டி என்று மோகன்லால் கேட்க, கியாரண்டி வாரண்டி எல்லாம் தர நான் என்ன பிரஷர் குக்கரா என்று கேட்கிறார். இரா.முருகன் வசனம்!
//
இந்தியிலும் இது இருக்கிறது. கியாரண்டி கொடுக்க நான் என்ன உங்களுக்கு ஃபேன் விக்கிறேனா என்று நசீருத்தீன் ஷா கேட்பார்.
படம் நிச்சயம் இந்தி படத்திற்கு நிகர் கிடையாது.
கமல் தன் செக்குலர் சங்கை ஊதினாலே படம் ஊத்திக்கும் என்று பொருள்.
நானும் இப்போதான் படம் பார்த்துட்டு வரேன்.
ஹிந்தி படம் பாக்காதவங்களுக்கு ,இது ஒரு விருந்து.
கமல் நன்கு underplay செய்துள்ளார்.நல்ல வேலையாக பாடல் எதுவும் இல்லை.Flashback இல் சிநேகாவும் இல்லை .லக்ஷ்மி அடக்கி வாசித்துள்ளார்.
கமலின் அடக்கமுடியாத நகைச்சுவை உணர்வு படம் முழுக்க இழை ஓடுகிறது.அதில் மிக சிறந்தது கமல் bomb செய்யும் முதல் காட்சிதான் . ஆமா இன்டர்நெட் இல் எனக்கு இட்லிவடை தன தெரியும்.bomb செய்யக்குட சொல்லி தராங்களாமே !
எங்கே சாமி?
அனுஜா சிகரெட் எதற்கு?
மொத்தத்தில்
வரும் தமிழ் புத்தாண்டில்,
"இந்திய தொலை காட்சிகளில் முதல முறையாக திரைக்கு வந்து சில மாதங்களே ஆன..."
One Hindu Terrorist unlike the Hindi version is un-called for. Why do we self-annihilate ourselves in the name of Secularism.
"Kamal movies and terrible events!!
மகாநதி - finance company மூடல்
அன்பே சிவம் - tsunami
வேட்டையாடு விளையாடு - serial killers
உன்னை போல் ஒருவன் -??"
-----------
ISLAMIC terrorism is almost a frequent activity in India. It doesn't need a genius to predict this.
//இஸ்மாயில் said...
லைவ் ரிப்போர்ட் கொடுக்குமளவு முக்கியப் படமா? படம் நன்றாக இருக்கிறது. ஆனால் ஓடாது என்பது கோடம்பாக்கத்து ரிப்போர்ட்
இஸ்மாயில், உன் மூஞ்சில ஆஃப் பாயில்.
படம் தமிழ்நாடு மட்டுமில்லாம ஆந்திரா கேரளா, பெங்களூரு மற்றும் வெளினாடுகளிலும் சூப்பர்ஹிட்.
ஒரு பெரிய நடிகர் எப்படி சின்ன பட்ஜெட்டில் சூப்பர்ஹிட் கொடுப்பது என்பதர்க்கு சிறந்த உதாரணம் - உன்னைப்போல் ஒருவன். தவறான உதாரணம் - குசேலன்
// Anony8 said...
One Hindu Terrorist unlike the Hindi version is un-called for. Why do we self-annihilate ourselves in the name of Secularism.
September 18, 2009 10:22 PM
(சில) ஹிந்துக்களும் மும்பை 26/11 சம்பவத்தில் ஈடுபட்டிருந்ததாக தகவல் வந்ததே!! பல ஹிந்துக்கள்(ஜந்துக்கள்) மும்பையிலும் இங்கே தமிழகத்திலும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டுப்போடாமல் தவிர்த்தனர். அவர்களையும் அந்த ஜீப்பில் ஏற்றியிருக்கவேண்டும். எனவே அவர்கள் சார்பாக ஒரு ஹிந்து. எப்பூடி!!!
கமல் தானே பாம் தயாரிப்பது, தனிமனிதனாக இத்தனை இடத்தில் பாம் வைப்பது, ஜீப் நிருத்துவது
ஆரம்பத்திலிருந்தே கமிஷனரிடம் சர்று மிரட்டல், அதிகாரத்தொனியிலேயே பேசுவது,
டிவி ரிப்போர்ட்டர் சொல்லிவைத்தாற்போல் மிக சரியாக கவரேஜ் செய்து கமலுக்கு மறைமுகமாக உதவுவது
கமல் சொல்வதையெல்லாம் மோகன்லால் தப்பாமல் செய்வது
அந்த ஹேக்கர் பையன், அண்ணாசாலை போலிஸ், மோகன்லால் என அனைவரும் கமலின் நியாயத்தை (மறைமுகமாக) ஆதரிப்பது
இப்படி சிலபல லாஜிக் ஓட்டைகள் படத்தில் உண்டு. ஆனால் ஓட்டை இல்லாமல் எந்த படம் வருகிறது என்று, வரும் நாட்களில் படத்தை விமரிசிக்கப்போகும் பன்__டைகளுக்கு தெரியாது
அவன்களுக்கு தெரிந்ததெல்லாம் எப்படியாவது கமலை குறை சொல்வது மட்டும்தான்
இந்த விமர்சனம் எழுதிய அறிவு ஜீவிக்கு! உங்கள் மதவெறிக்கு ஒரு அளவு இல்லையா?? அதென்ன "இஸ்லாமிய தீவிரவாதிகள்"??? எதற்காக மதத்தை சேர்த்தெழுதி உங்கள் "மதவெறியை" காண்பிக்கிறீர்கள். உங்கள் "அறிவுஜீவி" விமர்சனத்தில் மற்ற தீவிரவாதியை பற்றி குறிப்பிடும்போது "ஒரு தீவிரவாதி". என்ன பாகுபாடய்யா இது??
குறிப்பு: உங்கள் வலைபதிவைபற்றி கேள்வி பட்டு ஆவலுடன் படிக்க வந்தேன். முதல் பார்வையிலேயே உங்களின் "சாயம்" எனக்கு தெரிந்துவிட்டது. தயவுசெய்து இஸ்லாம் வெறுக்கும் தீவிரவாதத்துடன், வார்த்தையில் கூட சேர்க்காதீர்கள்.
http://www.1000dictionaries.com/
திரை விமர்சனம் செய்ய தெரியவில்லை என்றால் தயவு செய்து நீங்கள் அதை முயற்சி செய்ய வேண்டாம். உமக்கு என்ன தெரியுமோ அதை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். உதாரணத்திற்கு எந்த நடிகர் எந்த நடிகை கூட எங்கே சுற்றிக்கொண்டு இருக்கிறார். எந்த அரசியல்வாதி யாருக்கு குழி பறிக்கிறார் என்பது போல. இதுவும் தெரியவில்லையா இரண்டு இட்லி ஒரு வடை கொஞ்சம் சட்னி போட்டுகொண்டு சாப்பிட்டு தூங்கவும்.
"கமல் இதில் ஒரு முக்கிய வசனம் சொல்கிறார்- "மறதிதான் இந்தியாவின் தேசிய வியாதி". கவலைப்படாதீர்கள் நாங்களும் இந்த மாதிரி சறுக்கல்களை மறந்துவிடுகிறோம்."
அதேபோல் தான் நாங்களும் நீங்கள் எழுதும் கொடுமைகளை எல்லாம் படித்துவிட்டு உடனே மறப்பது போலதானே.
* ஒரு தீவிரவாதி, "குஜராத்தோட மோதிப் பாரு, தீர்ந்துடுவ" என்கிறார். மோடியை நக்கல் அடிக்கிறாரா அல்லது மோடியின் பெருமையை சொல்கிறாரா ?
மோடியின் பெருமை சொல்லவேண்டும் என்று சொல்கிறீர் இல்லையா. அது சொல்லவில்லை அதுதான் உமக்கு கோவம்...சரி தானே.
Anony8, that's what I meant by Kamal's personal agenda. In the name of political correctness and secularism, he would twist anything..
//Blogger செந்தழல் ரவி said...
ஒரு இஸ்லாமிய தீவிரவாதி, "300 ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்தியாவில் நவாபாக இருந்தோம். இப்போது நாய் மாதிரி இருக்கிறோம்" என்கிறார். அப்படியா? 300 வருடங்களுக்கு முன் ?
....
வெறும் தீவிரவாதி என்றால் பத்தாதா ? தீவிரவாதிக்கு மதம் உண்டா என்ன ?
//
திரைக்கதையில் அந்த தீவிரவாதியே தங்களை முந்நூறு வருடத்திற்கு முந்திய நவாப் என்று அடையாளம் காட்டிகொள்ளும் பொழுது, வசனத்தில் அதை இஸ்லாமிய தீவிரவாதம் என்று சொல்லுவது என்ன தவறு?
தங்களின் pseudo-secularism நன்றாகவே வெளியில் தலையை தொங்கவிட்டுள்ளது
//Anonymous Anonymous said...
இந்த விமர்சனம் எழுதிய அறிவு ஜீவிக்கு! உங்கள் மதவெறிக்கு ஒரு அளவு இல்லையா?? அதென்ன "இஸ்லாமிய தீவிரவாதிகள்"??? எதற்காக மதத்தை சேர்த்தெழுதி உங்கள் "மதவெறியை" காண்பிக்கிறீர்கள். உங்கள் "அறிவுஜீவி" விமர்சனத்தில் மற்ற தீவிரவாதியை பற்றி குறிப்பிடும்போது "ஒரு தீவிரவாதி". என்ன பாகுபாடய்யா இது??
குறிப்பு: உங்கள் வலைபதிவைபற்றி கேள்வி பட்டு ஆவலுடன் படிக்க வந்தேன். முதல் பார்வையிலேயே உங்களின் "சாயம்" எனக்கு தெரிந்துவிட்டது. தயவுசெய்து இஸ்லாம் வெறுக்கும் தீவிரவாதத்துடன், வார்த்தையில் கூட சேர்க்காதீர்கள்.//
இஸ்லாமிய ஆட்சி அமைய வன்முறையை கையாள்பவர்களை இஸ்லாமிய தீவிரவாதி என்று அழைப்பதில் தவறு என்ன? தீவிரவாதத்தை யார் செய்தாலும் எதற்க்காக செய்தாலும் அவர்களின் நோக்கம் தீவிரவாதத்துடன் சேர்த்தே சொல்லப்படும். இது இயற்கை.
இதனால் அந்த அடையாளம் கொண்ட அனைவரும் தவறானவர் என்று கூறுவதும், அந்த அடையாளத்தை தீவிரவாதத்தோடு சேர்க்காதீர்கள் என்று கூறுவதும் தவறானவை. இது இரண்டும் மிக பெரிய மோதல்களை உருவாக்கும். There is nothing to oppress or to get oppressed by using any term with terrorism. All kinds of terrorism exists. Similarly all kind of good things exists. நல்லதை மட்டும் பாருங்கள் நல்லதை மட்டும் கேளுங்கள் நல்லதை மட்டும் செய்யுங்கள். Dont get sccumbed to religious/lingustic/racial pressures. Just follow truth and good ness.
what idly vadai, No comment about music,re-recording...
கமல் 'தீவிர' மாக இந்தப் படத்தில் நம்பிய ஒரு விஷயம்: 'சென்னையில் நிச்சயம் மழையே பெய்யாது' என்பதுதான் போலிருக்கிறது. அதனால்தான் அவர் ஒரு மொட்டை மாடியில் 'லாப் டாப் மற்றும் உள்ள உபகரணங்கள்' எல்லாம் அமைத்து - தைரியமாக - மிரட்டல்கள் விட்டுக் கொண்டிருக்கிறார். சுனாமி, மற்றும் பலவகை முன் காணல் - சம்பந்தப் படுத்துபவர்கள் - இந்த சீசனில் சென்னையில் மழை இல்லை என்றால் - அதற்கும் கமலின் உன்னைப் போல் ஒருவன் படம்தான் காரணம் என்று சொல்லிக் கொள்ளலாம்!
IV,
Copy padathukku ivvalavu arbattama vidungappa. Wednesday paarthu rasitha evanum UPO vai parka yosippaan.
Kamesh
Gud comment for that film...It deserves a review lik this...
Here i can see many comments against u...for all those people i want to say In India only u can oppose the major religion (Hindu). u cant speak against Islam in Pak or in Arab countries... Surely terrorism dont hav any religion but in the name of Jihad Muslims r doin this for so many years..Wat is your stand on this ? Only Muslims and Christians r tryin to convert Hindus to that religion by takin Terrorism in their hand...
உடனே ஓடிப் போய் முதல்ல பார்த்துட்டு வர்றதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை...அப்புறம் விமர்சனத்துல குறைகள் வேற... பாராட்டறோமோ இல்லையோ குறை நல்ல சொல்லப் பழகி இருக்கோம்..
அய்யா, நாங்க படத்துக்கு போகலாமா, வேண்டாமா...?
I have seen the film yesterday, and i yet to see Hindi film.
This is my perception only might not be a truth.
In my opinion movie is very good, dialogues are good. i do not bother about the comments and criticisms about the direction, mannerisms, screenplay, cinematography etc.... because i dont know about them technically.
but i like the movie very much.
I like the dialogues very much.
இந்தி படத்தை இந்த அளவு என்னால் சத்தியமாக தமிழில் ரசித்துப்பார்த்தது போல் பார்க்க இயலாது, ஏனெனில் எனக்கு இந்தி சுத்தமாக தெரியாது, உணர்வுப்பூர்வமாக சில இடங்களை ரசிக்க மொழி நிச்சயம் தேவை(இந்த படத்தை பொருத்த வரை!!) என நான் கருதுகிறேன் , எத்தனை பேர் இந்தி தெரியாமல் அல்லது அரைகுறை இந்தியுடன் A Wednesday படத்தை பார்த்துவிட்டு இந்தி படம் போல் உன்னை போல் ஒருவன் இல்லை என்று கூறுகிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை.
வால்மிகியின் நடை கம்பரிடம் இல்லை ஆனால் வால்மீகி யார் என்று எனக்கு தெரியாது எனும் வாக்கியம் தான் ஞாபகம் வருகிறது பல பின்னூட்டங்களையும் இந்த விமர்சனத்தையும் படிக்கும் போது!!!
படம் நன்றாக உள்ளது. மிக சின்ன படம் .
இரண்டு மணி நேரம் ஓடுகிறது.
அந்த லைவ் டிவி பில்டப் ரொம்ப ஓவர்.
அப்படி ஒன்னும் நேரடி ஒளிபரப்புக்கு தேவைப்பட வில்லை.
நேரடி ஒளிபரப்பு மக்களிடம் எந்த பரபரப்பையும் செய்யவில்லை அல்லது செய்ததாக காட்டவில்லை.
இன்னும் கொஞ்சம் அழுத்தமாக செய்திருக்கலாம்.
50 மார்க் தான் போடலாம்.
all of you are ignoring kamal has to speak on the mobile phone all the time in the movie. I dont think you can have anyone acting better than this... this movie does not require great acting but requires great concentration and no hero would have allowed this many close closeup shots
/*** SathyaRam said...
all of you are ignoring kamal has to speak on the mobile phone all the time in the movie. I dont think you can have anyone acting better than this... this movie does not require great acting but requires great concentration and no hero would have allowed this many close closeup shots***/
Leave it sathya, why are you comparing with other actors? you must not compare kamal with others.
ஹிந்தியில் வீரியம் தெரிந்தது!
தமிழில் வியாபாரம் தெரிகிறது!!
ஹிந்தியில் வலி தெரிந்தது!
தமிழில் பயம் தெரிகிறது!!
ஹிந்தியில் தைரியம் இருந்தது!
தமிழில் தந்திரம் இருக்கிறது!!
ஹிந்தியில் சாதாரண மனிதனாக, நசெருதின் ஷா நடித்திருந்தார்!
தமிழில் கமல்ஹாசனாக, சாதாரண மனிதன் நடித்துள்ளார்!!
ஹிந்தி படம் முடிந்ததும், படத்திற்கு வெளியே வந்தேன்!
தமிழ் படம் முடிந்ததும், தியேட்டருக்கு வெளியே வந்தேன்!!
அடுத்தவர்களின் நம்பிக்கைகளை காயப்படுத்துகிறவர்கள் & திருமண பந்தம் தேவை இல்லை என்று கூறுபவர்கள் அனைவரும் கமலை கண்டிப்பாக பாராட்டுவார்கள்...
நல்ல விமர்சனம் பாராட்டுக்கள்
- நல்ல மனிதனாக வாழ விரும்புவர்களில் ஒருவன்
அடுத்தவர்களின் நம்பிக்கைகளை காயப்படுத்துகிறவர்கள் & திருமண பந்தம் தேவை இல்லை என்று கூறுபவர்கள் அனைவரும் கமலை கண்டிப்பாக பாராட்டுவார்கள்...
நல்ல விமர்சனம் பாராட்டுக்கள்
- நல்ல மனிதனாக வாழ விரும்புவர்களில் ஒருவன்
// செந்தழல் ரவி said...
ஒரு இஸ்லாமிய தீவிரவாதி, "300 ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்தியாவில் நவாபாக இருந்தோம். இப்போது நாய் மாதிரி இருக்கிறோம்" என்கிறார். அப்படியா? 300 வருடங்களுக்கு முன் ?
....
வெறும் தீவிரவாதி என்றால் பத்தாதா ? தீவிரவாதிக்கு மதம் உண்டா என்ன ?//
இது இட்லி---ரொம்ப ஸாஃப்ட்
//Anonymous said...
இந்த விமர்சனம் எழுதிய அறிவு ஜீவிக்கு! உங்கள் மதவெறிக்கு ஒரு அளவு இல்லையா?? அதென்ன "இஸ்லாமிய தீவிரவாதிகள்"??? எதற்காக மதத்தை சேர்த்தெழுதி உங்கள் "மதவெறியை" காண்பிக்கிறீர்கள். உங்கள் "அறிவுஜீவி" விமர்சனத்தில் மற்ற தீவிரவாதியை பற்றி குறிப்பிடும்போது "ஒரு தீவிரவாதி". என்ன பாகுபாடய்யா இது??
குறிப்பு: உங்கள் வலைபதிவைபற்றி கேள்வி பட்டு ஆவலுடன் படிக்க வந்தேன். முதல் பார்வையிலேயே உங்களின் "சாயம்" எனக்கு தெரிந்துவிட்டது. தயவுசெய்து இஸ்லாம் வெறுக்கும் தீவிரவாதத்துடன், வார்த்தையில் கூட சேர்க்காதீர்கள்.//
இது வடை ----ரொம்ப காரம்.
வாழ்க மதசார்பின்மை. வாழ்க அல்லேலுயா.
அரிசி சோறுன்ன்னா என்னன்னே தெரியதவன் கிட்ட பிரியாணி கொடுத்த மாதிரி...உங்க விமர்சனத்த சொன்னேன்.
I think how can one say that this is not as good as hindi version. Just mohanlal's acting and voice mdulation in tamil (a typical kerala officer speaking in tamil) only can take it to that level. Your comment on kamal (too weighty) image doesnot match a common man role in this movie.
Motha review um padichen. Comments um padichen. Padamum parthen. Oru vishayam mattum enaku puriyala. Adhenna tamil makkalku rasanai korainju pocha? Hindila padam nalla irukaam Tamil la nalla illayaam. Ellarum appadiye DFT padichutu vandhu review ezhudharaanga pa. IV naan unga kitta irundhu ethirparkala. Futurela ovoru Tamil padatha review pannum pothum adha endha padathula irundhu copy adichaanganu parthutu compare panni ezhudunga. Ennai poruthavarai Unnai Pol Oruvan oru nalla padam.
Post a Comment