பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, September 15, 2009

Brand Name : அண்ணா

இன்று செப்.15, அவரது நூற்றாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும் நாள். அண்ணா யார் என்றால் நம் மக்களூக்கு 'நாமம்' தான் நினைவு வரும் எவ்வளவு பொது கூட்டத்தில் "அண்ணா நாமம் வாழ்க!" என்று கேட்டிருக்கிறோம் ? சரி இது அதிமுக மக்களுக்கு, திமுக மக்களுக்கு அண்ணா தினமும் கனவில் வந்த காட்சி தருகிறார். அப்பறம் என்ன எல்லோரும் அண்ணா நூற்றாண்டை கொண்டாட வேண்டியது தான்!..


சமீப காலங்களில் விழாக்களில் கலந்து கொண்டு விருதுகள் வாங்கமுடியவில்லையே என்ற நமது முதல்வர் கலைஞரின் தீராத ஏக்கம் தீர்க்கப்படப் போகிறது. ஆம்!! அரசு சார்பில் அண்ணா நூற்றாண்டு விழா காஞ்சிபுரத்தில் நடைபெறவுள்ளது. திமு கழக விழாவாக நடைபெறவுள்ள இவ்விழாவில் கலைஞருக்கு "அண்ணா விருது" வழங்கப்படவுள்ளது. அவர்களே ஒரு விழா எடுத்து அவர்களுக்கே விருது வழங்கிக் கொள்கிறார்கள். இவ்விழாவிற்கு பேராசிரியர் அன்பழகன் தலைமை வகிக்கிறாராம். காலம் முழுவதும் இரண்டாமிடத்திலேயே இருந்த இவருக்கு இவ்விழாவிலாவது முதலிடம் அளிக்கப்பட்டமை மகிழ்ச்சியே!! பெரியார் விருது கீ.வீரமணிக்கு வழங்கப்படவுள்ளதாம். எதற்கோ தெரியவில்லை. பெரியார் மூடநம்பிக்கைகளைச் சாடினார். நமது சாரங்கபாணி இதுவரை என்ன செய்துள்ளார் என்பது பெரியாரின் ஆத்மாவிற்கே வெளிச்சம். அது போகட்டும்!!

வழக்கமாகவே கழக மாநாடுகளில் கவியரங்கம் என்னும் கடை விரிக்கப்படும். இவ்விழாவிலும் அதில் மாற்றமேதும் இல்லை. வழக்கம்போல கலைஞருக்கு லாலி பாடுவதற்காக வாலி வரவுள்ளார். அடுத்தமுறை ஏதாவது சிறந்த கவிஞர் பட்டமோ அல்லது ஏதாவது ஒரு விருதோ வாலிக்கு உறுதி என இப்பொழுதே அறுதியிட்டுக் கூறலாம். "சிவாஜி கண்ட ஹிந்து ராஜ்யம்" என்ற தலைப்பில் வாலி கவிதை பாடவுள்ளாராம். பகுத்தறிவாளர்கள் மத்தியில் ஹிந்து ராஜ்யத்தைப் பற்றி வாலி என்ன சொல்லப் போகிறாரோ என்று இப்போதே கலக்கமாக உள்ளது. கலைஞரை காக்காய் பிடிக்கும் சாக்கில் சிவாஜியை சந்திக்கிழுக்காமல் இருந்தால் வாலிக்கு மிக்க வந்தனம். அடுத்ததாக "சாமானியர் சகாப்தம்" என்ற தலைப்பில் விவேகா கவிதை படிக்கப் போகிறாராம். விலை வாசி விஷம் போல ஏறிவிட்டது, துவரம் பருப்பின் விலை 100 ஐத் தாண்டி விட்டது. மற்ற மளிகைப் பொருட்களைக் கண்ணால் கண்டு பசியாறும் அளவில் விலைவாசி உள்ளது. சாமானியர்கள் சஹாப்தமாக இவர் எதைக் கூறப் போகிறாரென்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒருவேளை சாமானியர்கள் கூட கலர் டிவி பார்க்கிறார்கள், தேர்தல் காலங்களில் சாமானியர்களிடம் கூட ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழங்குகின்றன என்று ஏதாவது சொல்வாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அடுத்ததாக "ஆரிய மாயை" என்ற தலைப்பில் கவிதைப் பித்தன் என்றொருவர் கடை விரிக்கப் போகிறாராம். இன்னும் எவ்வளவு நாளைக்கு ஆரிய மாயை என்று கூறி இவர்கள் வர்த்தகம் செய்யப் போகிறார்களோ?? பகுத்தறிவிற்கே வெளிச்சம்!! "நீதி தேவன் மயக்கம்" என வைரமுத்து கவிதை வடிக்கிறாராம். ஆம், தா.கிருட்டிணன் வழக்கும், தினகரன் அலுவலகத்தில் கொல்லப்பட்டவர்களது வழக்கையும் நினைத்தால் நீதி தேவன் மயங்கித்தான் கிடக்கிறார் என்றே தெரிகிறது. சற்றொப்ப இன்னும் மூன்றாண்டுகளுக்கு தெளியாத மயக்கம்.

அண்ணா காட்டிய வழி, அண்ணா சொன்னது என்று மூச்சுக்கு முன்னூறு முறை ஜெபிக்கும் கலைஞர், அண்ணா தனது குடும்பத்தினர் எவரையுமே பதவிக்கிழுத்து பலனடைய வைக்கவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இன்னும் சொல்லப் போனால் அண்ணாவின் குடும்பத்தினர் எங்கிருக்கின்றனர் என்று கூட தகவலில்லை. அண்ணா செய்த அனைத்தையும் செய்வதாக மார்தட்டும் இவர்கள் இதை மட்டும் செய்யத் தவறியது ஏனோ??



அன்று குலக்கல்வித் திட்டம் கொண்டு வந்த ராஜாஜியை திமு கழகம் எதிர்த்தது. இன்று அரசியலையே குலத்தொழிலாக்கிவிட்ட கலைஞரை எதிர்ப்பது யாரோ??




படம் சொல்லும் செய்தி: அண்ணாவின் நூற்றாண்டு நிறைவு விழாவை பிரமாண்ட ஏற்பாடுகளுடன் தமிழக அரசு கொண்டாடி வருகிறது. இந்தத் தருணத்தில், அவர் படித்த ஆரம்பப் பள்ளி அவல நிலையில் இருக்கிறது. அது சரி இது என்ன பெரிய விஷயமா ? நாளைக்கே பள்ளிக்கு இலவச டிவி பெட்டியை அனுப்ப வேண்டியது தான்.

தமிழகத்தில் மீண்டும் எம்.ஜி.ஆர் ஆட்சி மலர அண்ணா பிறந்தநாளில் உறுதி ஏற்குமாறு அதிமுக தொண்டர்களிடம் கட்சியின் பொதுச் செயலர் கொடா நாட்டில் 106வது நாளாக ரெஸ்ட் எடுத்துக்கொண்டு ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். ( இன்னும் இரண்டு நாளில் 108 நாட்கள் ஆகி, 108 திவ்விய தேசமாக இதை அறிவித்தாலும் அறிவிப்பார்கள் )

அட கடைசியாக சொல்ல மறந்துவிட்டேன்: ""மக்களைப் பார்த்து ஆட்சியாளர்கள் அஞ்ச வேண்டும், ஆட்சியாளர்களைப் பார்த்து மக்கள் அஞ்சக்கூடாது. அதுதான் ஜனநாயகம்" இது அண்ணா சொன்னது !

- யதிராஜ சம்பத் குமார் + இட்லிவடை

24 Comments:

Anonymous said...

///அண்ணா காட்டிய வழி, அண்ணா சொன்னது என்று மூச்சுக்கு முன்னூறு முறை ஜெபிக்கும் கலைஞர், அண்ணா தனது குடும்பத்தினர் எவரையுமே பதவிக்கிழுத்து பலனடைய வைக்கவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இன்னும் சொல்லப் போனால் அண்ணாவின் குடும்பத்தினர் எங்கிருக்கின்றனர் என்று கூட தகவலில்லை. அண்ணா செய்த அனைத்தையும் செய்வதாக மார்தட்டும் இவர்கள் இதை மட்டும் செய்யத் தவறியது ஏனோ??///


சபாஷ். சரியான சாட்டையடி போஸ்ட். பாராட்டுகள் யுதி & இட்லி.

SUBBU said...

இவைங்க திருந்தவே மாட்டானுங்க யச+ இட்லிவடை...

வரதராஜலு .பூ said...

//அட கடைசியாக சொல்ல மறந்துவிட்டேன்: ""மக்களைப் பார்த்து ஆட்சியாளர்கள் அஞ்ச வேண்டும், ஆட்சியாளர்களைப் பார்த்து மக்கள் அஞ்சக்கூடாது. அதுதான் ஜனநாயகம்" இது அண்ணா சொன்னது !//

அது அப்ப. இப்போக் கிடையாது. முக்கியமாக இவர்கள் ஆட்சியிலிருக்கும் போது இப்பில்லாம் பேசக்கூடாது

வால்பையன் said...

அண்ணாவ வருசத்துக்கு ஒரு தடவையாவது ஞாபகம் பண்ணிகிறாங்களே!

Anonymous said...

Dinamalar

வாலி மனைவி மரணம்

சென்னை :பழம்பெரும் சினிமா பாடலாசிரியர் வாலியின் மனைவி ரமணதிலகம், நேற்று மாரடைப்பால் சென்னையில் இறந்தார். இவருக்கு வயது 65.முதல்வரின் துணைவி ராஜாத்தி, மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், கனிமொழி எம்.பி., திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராம.நாராயணன், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத் தலைவர் குகநாதன், திரைப்படத் தயாரிப் பாளர்கள் முக்தா சீனிவாசன், அபிராமி ராமநாதன், சத்யஜோதி தியாகராஜன், எடிட்டர் மோகன் மற்றும் திரையுலகினர் ஏராளமானோர் அவரது உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர். வாலி - ரமணதிலகம் தம்பதிக்கு பாலாஜி(45) என்ற மகன் உள்ளார்.ரமண திலகத்தின் இறுதிச் சடங்கு, இன்று காலை 10 மணிக்கு பெசன்ட் நகர் மயானத்தில் நடக்கிறது.

snkm said...

அண்ணாவுக்கும் நாமம், அவர் பெயரைச்சொல்லி எல்லோருக்குமே நாமம்!

Anonymous said...

சுப்பு, நீங்க யாரச்சொல்லிறீங்கன்னே..!!

தெரியலையே. :)

Sethu Raman said...

அண்ணா அதிகாரத்திலிருந்தது மிக மிகச் சிறிய காலமே! இந்தச் சிறு காலத்துக்குள்ளேயே, அவரது உடல் நலமும் கெட்டு விட்டது! 1967க்கு முன்னிருந்த அண்ணாவும் ன்னிருந்த அண்ணாவும் வேறு வேறு
மாதிரி என்பது என் கணிப்பு.. அவரது பார்ப்பனத் துவேஷமும், புராணங்களைப் பற்றிய அவரது கடும் கருத்துக்களும், அவர் முதல்வரான பின் மாறியிருந்தன -- அதாவது
வெளிப்படையாகத் தெரியவில்லை!!
ஒரு வேளை அவர் நீண்ட காலம் பதவி வகித்திருந்தால், மாறியிருப்பாரோ என்னவோ
தெரியாது.. இருந்தவரை கண்ணியமாகவும் கட்டுப்பாட்டுடனும் தான் தன் கடமைகளை
ஆற்றிக் கொண்டிருந்தார். கண்ணியம் அண்ணாவோடு போயிற்று என்று தான்
நான் எண்ணுகிறேன்.

Anonymous said...

IV,
Azhagiri ku Parliament la tamil la pesurathukku permission kudukanumnu support(kindal) panni Jayalalitha vittirukura arikai pathi oru post podalam illa...irunthalum Jaya vukku sema lollu... :-)

IdlyVadai said...

//IV,
Azhagiri ku Parliament la tamil la pesurathukku permission kudukanumnu support(kindal) panni Jayalalitha vittirukura arikai pathi oru post podalam illa...irunthalum Jaya vukku sema lollu... :-)//

இந்த இரண்டு போஸ்டையும் பார்க்கவும்.

http://idlyvadai.blogspot.com/2009/09/11-09-2009.html

http://idlyvadai.blogspot.com/2009/09/14-09-2009.html

Baski said...

//அண்ணா யார் என்றால் நம் மக்களூக்கு 'நாமம்' தான் நினைவு வரும்//

நாமம் போட எல்லாரும் 'அண்ணா' வை உபயோகபடுத்தி கொள்கிறார்கள். எனக்கு தெரிந்து திராவிட கட்சியில் லஞ்சம்/குடும்ப அரசியல் இல்லாத தலைவர்.

//பெரியார் விருது கீ.வீரமணிக்கு வழங்கப்படவுள்ளதாம். எதற்கோ தெரியவில்லை.//
ரெண்டு பேரும் கருப்பு சட்டை போட்டு கொள்கிறார்கள். ரெண்டு பேரும் கட்சியை மட்டமாக வழிநடத்துகிறார்கள்.

கலைஞருக்கு அடித்த ஜால்ராவிற்கு இது தான் இவருக்கு மிச்சம்.

//வழக்கம்போல கலைஞருக்கு லாலி பாடுவதற்காக வாலி வரவுள்ளார்.//
மன்னரை புகழ்ந்து பாடி பொற்கிழி பரிசு பெறுவது தமிழக மரபே ! :-)
வாழ்க ஜால்ரா!!!

கௌதமன் said...

I agree with Shri Sethuraman. Dr CNA - before coming to power was different - and from the day of taking oath as CM of TN, he set a very good example of a decent politician and a kind gentleman. He was liked by all the people - when he is visited by anyone - he would ask "What can I do for you?" - and NOT "What can I get from you!"

அமர் said...

இப்போதெல்லாம் இட்லிவடை படிப்பது போலவே இல்லை. துக்ளக் படிப்பது போலத்தான் உள்ளது. துக்ளக்கில் எழுதத்தான் சோ இருக்கிறாரே. நீங்கள் ஏன் அவர் எழுதுவதை போல் எழுதுகிறீர்கள். கொஞ்சம் தரமாக எழுதுங்களேன்.

Prabhu said...

செமயா எழுதிருக்கீங்க! இவனுங்க சொல்லி சொல்லி அண்ணா னாலே பிடிக்காம பண்ணிருவானுங்க போல்!

Unknown said...

iv,
"நமது சாரங்கபாணி இதுவரை என்ன செய்துள்ளார் என்பது பெரியாரின் ஆத்மாவிற்கே வெளிச்சம்" - சாரங்கபாணி செய்தது என்ன இதுவே ஒரு பட்டிமன்றமாக கூட நடத்தலாம்.

"நீதி தேவன் மயங்கித்தான் கிடக்கிறார் என்றே தெரிகிறது." - நீதிதேவன் மட்டும் தானா..

"அண்ணாவின் குடும்பத்தினர் எங்கிருக்கின்றனர் என்று கூட தகவலில்லை" - இருப்பவரை பற்றி பேசினால் அவர் உண்டு இல்லை என்றாவது பதில் அளிக்கமாட்டற ஆகையால் தான் அதை யாரும் கிண்டுவதில்லை

மஞ்சள் கம்மென்ட் ச்ச்சுப்பர்

காமேஷ்

R.Gopi said...

அண்ணா நாமம், அண்ணா நாமம்னு சொன்னப்போ எல்லாம், எனக்கு சரியா புரியல... ஆனால், இப்போ புரிந்து விட்டது..

அதாவது, கழகங்கள் அண்ணாவுக்கு ரெகுலரா போடறதுதான் இந்த அண்ணா நாமம்..

பித்தனின் வாக்கு said...

Good but yarukkum vekkam illai athanal yarukum uraikkathu

Vilvarani said...

vilvarani said

அண்ணா நாமம் வாழ்க! அண்ணா விருது பெரும் கலைஞர் அவர்களை வாழ்த்த வயதில்லை வனங்குகிறேன்.

SUBBU said...

//சுப்பு, நீங்க யாரச்சொல்லிறீங்கன்னே..!!

தெரியலையே. :)//

எவனும் திருந்தமாட்டானுங்கன்னு இந்த பதிவு போட்ட ரெண்டு பேர் கிட்டயும் சொன்னேன் அனானி . (இப்படி வம்புல மாட்டி விடுரதுதான் அனானியோட வேலையோ) :((((((((

Erode Nagaraj... said...

யதி & இட்லி,

அருமையான கட்டுரை.

"மக்களைப் பார்த்து ஆட்சியாளர்கள் அஞ்ச வேண்டும், ஆட்சியாளர்களைப் பார்த்து மக்கள் அஞ்சக்கூடாது. அதுதான் ஜனநாயகம்"

அது தான் இப்போது நடக்கிறது. ஆட்சியாளர்கள் மக்களைப் பார்த்து அஞ்சுகின்றனர்... "இவனுக்கு எவ்ளோ கடுத்தாலும் போறாது போலிருக்கே" என்று..

மக்கள் ஆட்சியாளர்களைப் பார்த்து அஞ்சுவதில்லை, மாறாக மகிழ்ச்சி அடைகின்றனர் பணம் கொடுப்பான் என்று.

இவைகளின் உட்பொருளை தெரிந்து கொள்ள இவ்வளவு நாட்களாகிவிட்டதே என்று க.குடும்பத்தார் வருந்துவதாகக் கேள்வி...

இரும்புக்குதிரை said...

இட்லி வடை. நிங்கள் முதல்வர் கலைஞர் அல்ல. அதனால் நிங்க பட்டம் கொடுத்துகொள்ள முடியாது. ஆகவெ... 'இட்லி வடை' பட்டதை நாங்கள் வழங்குகிரொம்.

தில்லுமுல்லு படத்தில் ரஜினி 'நாம என்ன ..... பெயர சுருகரத்துக்கு' டயலொக் ஞாபகம் வந்தால் நான் பொருப்பு அல்ல.

அமுதப்ரியன் said...

வால்மீகி 5.75/10 - நக்கல்
ஸ்டுடண்ட்ஸ் (Tel) 5.80/10
கந்தசாமி 5.5/10 ( ஷ்ரேயா 8/10) - எதைச் சொல்கிறீர்?
வாமனன் 5/10 வாமணன் 5.5/10
- குழப்பம்

Anonymous said...

Amar, perfectly right.

enakkum adhe feeling.

IV open pannale - ellame negative comments - Just like thuklak or other magazines which bank on people enjoying mean comments on others.

I am not for politicians - completely agree that they are n't doing any good - but enough said about it - what's gonna change by whining in the blogs and comments.

As public what are we doing?

Its so easy to get the message from somewhere that Anna's first school is in a very bad state - but point is why do you expect politicians to do it ...

Well, many of you also respect Anna - what had IV and other publisher done about the school which they found in bad state?? have they given any small amount of money.

Naama nalla irukanum nu nenaicha ,, naama as IV readers will collect money and give that to school - intha mathiri 4 nalla kariam panna We don't know - May be Govt will take notice - people might start following us - people should set the example to politicians if you believe you know how should they rule.
Life banks on hopes - not on Pessimism and Sarcasm

Anonymous said...

///வாமனன் 5/10 வாமணன் 5.5/10
- குழப்பம்///

இன்னா வாத்யாரே கொயப்பம் கீது இதுல? மொத வாட்டி பாத்த சொல்ல 5/10. அப்பால சும்மா குஜால்ச்கு இன்னூரு தபா பாக்க சொல்ல ஒரு அரை மார்க் ஜாஸ்தி. அதுககோசரம் ரெண்டு சுழிய மூணா மாத்திப் போட்டாச்சு. இன்னா புரிஞ்சுதா? இல்லேன்னா சொல்லு, இந்த சுழி மேட்டேர்க்கு நம்ம "சுழியம்" அண்ணாத்தய வந்து வெளக்கம் சொல்ல சொல்லறேன்.