பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, September 17, 2009

(நகைச்சுவை)செய்திகள் வாசிப்பது ...யதிராஜ்

நம்ம நாட்டில் நகைச்சுவை செய்திகளுக்கு பஞ்சமே இல்லை...

க்ஷணம்
"க்ஷணம்" எனும் ஸம்ஸ்க்ருத ப்ரயோகத்திற்கு, பிறக்கும் பொழுதே இறத்தல் என்று அர்த்தம். அதாவது அரை வினாடி கூட ஜீவிக்க முடியாதது. காங்கிரஸின் "எகானமி க்ளாஸ்" கேலிக்கூத்தும் கிட்டத்தட்ட அவ்வாறான ஒரு நிலையை எய்தி விட்டது. வரிப்பணம் மிச்சப்படுத்தப்பட வேண்டுமென்று ப்ரணாப் முகர்ஜி அவர்கள் "எகானமி க்ளாஸ்" பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று சொல்லப் போக, ராஜமாதா துவங்கி அழகிரி, நெப்போலியன் வரை "எகானமி க்ளாஸ்" பயணம் செய்து அதனைப் பத்திரிக்கைச் செய்திகளாக்கி விட்டனர். அது போதும், இனிமேல் எதில் சென்றாலும் யாருக்கும் தெரியப்போவதில்லை.


தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயுமாம். அன்னை "எகானமி க்ளாஸில்" பயணித்தார். பார்த்தார் ராகுல்....ஏற்கனவே தாபா கடையில் சாயா குடிப்பது, குடிசையில் ரொட்டி சாப்பிடுவது, வயலில் மண்ணள்ளுவது போன்ற கிம்மிக்ஸில் ஈடுபட்டவருக்கு அன்னையை மிஞ்சுவது ஒன்றும் ப்ரமாதமான காரியமாக இரவில்லை. லூதியான பயணம் மேற்கொண்ட ராகுல், ஷதாப்தி எக்ஸ்ப்ரஸ் ரயிலில் பயணித்தார்....ஒருவருட பட்ஜெட்டிற்குண்டான பணம் மிச்சப்பட்டது போல் பத்திரிக்கைகளும் மீடியாக்களும் ராகுலின் ரயில் பயணத்தை ஏதோ பெரிய உத்ஸவம் போல் கொண்டாடினர். ராகுல் ப்ளாஸ்டிக் கப்பில் தண்ணீர் குடித்தார், ரயிலில் சாதாரண காய் கறி உணவையே உண்டார் என வரிந்து வரிந்து எழுதித் தள்ளின. ஆயிற்று.....ரயில் போகும்போது யாரோ சமூக விரோதிகள் ரயிலில் கல்லெறிந்து கண்ணாடிகளை உடைத்து விட்டனராம். ஆதலால் அன்னை சோனியா மற்றும் எதிர்கால விடிவெள்ளி ராகுல் ஆகியோரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அவர்கள் இருவரின் "எகானமி க்ளாஸ்" பயணம் மட்டும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப் படப் போகிறதாம். அதாவது முன்பே முடிவு செய்யப்பட்ட ஒன்றை, பலரின் பரிசீலனைக்குப் பின் ஆழ்ந்து முடிவு செய்யப்பட்டது போல் அறிவிப்பது. சுருங்கக் கூறின் கழக செயற்குழு கூட்ட முடிவு போல. ராகுலின் ரயில் மீது கல்லெறியப்பட்ட சம்பவம், ஸ்டாலினை யாரோ கத்தியால் குத்த முயற்சித்த சம்பவத்தை ஏனோ நினைவுறுத்துகிறது. தமிழகத்தில் காங்கிரஸ் சீக்கிரமே வளர்ந்துவிடும் போல்தான் தோன்றுகிறது.


இதில் வேடிக்கை என்னவெனில், இந்த சிக்கன நடவடிக்கை கூத்திற்கு இரு நாட்களுக்கு முன்னர் தமிழகத்திற்கு ராகுல் மூன்று நாள் விஜயம் செய்தார். அதற்குண்டான செலவு மட்டும் ரூபாய் ஒரு கோடிக்கும் மேலாம். கோவையிலிருந்து தில்லிக்கு "பால்கன்" எனும் 8 சீட்டுகள் கொண்ட சிறிய ரக விமானத்தில் பயணித்துள்ளார். இதற்கான வாடகை மாத்திரம் 20 லட்சத்தைத் தாண்டுகிறது. அதைத்தவிர தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட வகையில் ஹெலிகாப்டருக்கு ஒரு மணிக்கு 1.5 லட்ச ரூபாய் வாடகை மற்றும் 10% சேவை வரி. இது தவிர விமானப் பணியாளர்களுக்குண்டான சம்பளம் தனி. இவையத்தனையும் நமது வரிப்பணம். ஆக தமிழகத்தில் 1967-ல் சமாதிகட்டப்பட்ட காங்கிரஸுக்கு புனர் வாழ்வு கொடுப்பதற்கான செலவு இந்தியப் ப்ரஜைகளின் தலையில் சுமத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, வெளியுறவுத் துறை இணையமைச்சரான "சஷி தரூர்" தனது ட்விட்டர் பேஜில், காங்கிரஸின் "எகானமி க்ளாஸ்" பயணங்களை "Cattle Class" பயணமென்றும், அதில் பயணிப்போரை "Holy Cows" என்றும், "Holy Cows" களோடு சேர்ந்து தானும் பொது நன்மைக்காக "Cattle Class" இல் பயணிப்பேன் என்றும் கூறியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது குறித்து பேட்டியளித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் திரு.ஜெயந்தி நடராஜன், சஷ் தரூரின் இப்பேச்சு மரியாதையற்ற பேச்சு எனவும், மேலிடம் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு மேல் இன்னமும் பல நகைச்சுவைகளை இந்த எகானமி க்ளாஸ் பயணம் தர வாய்ப்புகளிருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.கேண்டிட் காமிரா

மக்கள் கவலையை மறக்கச் செய்து அவர்களை வயிறு நோகச் சிரிக்கச் செய்கிறோம் பேர்வழி என்று 24 மணிநேர நகைச்சுவைச் சேனல்கள் புறப்பட்டிருக்கின்றன. இவர்கள் நகைச்சுவை என்ற பெயரில் வடிவேலுவும், விவேக்கும் அடிபடுவதை சளைக்காமல் காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் இந்நகைச்சுவைக் காட்சிகளுக்கு இடையில் "கேண்டிட் காமிரா" பேர்வழிகள் செய்யும் அட்டகாசங்கள் சொல்லி மாளாது. இவை சிரிப்பு மூட்டுவதற்கு பதிலாக எரிச்சலையே ஏற்படுத்துகின்றன. தொலைக்காட்சி சேனலைச் சேர்ந்த குழுவினர் அவர்களுடைய வாகனத்தில் காமிராவை மறைத்துக் கொண்டு, அவர்களைச் சார்ந்த இன்னொரு குழுவினர் தெருவில் போவோர் வருவோரை வம்புக்கிழுத்து அதனை சேனல் நேயர்களுக்கு விருந்தாக்குவதே இந்த "கேண்டிட் காமிரா" இம்சைகளின் சிறப்பம்சம். இதுபோன்று பொதுமக்களை இம்சிப்பதற்கு இவர்கள் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கும் இடம் மெரீனா கடற்கரை அல்லது ஏதாவது ஒரு பேருந்து நிறுத்தம்.


உதாரணமாக, மெரீனா கடற்கரையில் கரும்புச் சாறு விற்பது போன்று தோற்றத்தை ஏற்படுத்தி, வாங்கிக் குடிப்போர் குடித்ததும் அவர்களிடம் கரும்புச் சாற்றின் விலை ரூபாய் 60 என்று கூறி அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குவது. பிறகு அவர்களிடம் ஒரு பத்து நிமிடம் வாக்குவாதம் செய்வது, பின்பு அவர்கள் ஓரளவுக்கு ஆத்திரத்திற்குள்ளானாலோ அல்லது சளைத்தாலோ, தமது சானல்காரர்களின் காமிராக் குழுவினரைக் காண்பித்து அறிமுகப்படுத்தி இது வெறும் விளையாட்டுதான் என்று கூறுவது. இதற்குப் பெயர் நகைச்சுவையாம்!!!


பிறகு சாலையில் போவோர் வருவோரை வயது மற்றும் பாலின பேதமின்றி பின் தொடர்ந்து திடீரென்று அவர்கள் எதிர்பாராத விதமாக அவர்களது காதில் கண்டக்டர் விசிலை ஊதி அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குவது மற்றும் சாலையின் இரு மருங்கிலும் பக்கத்திற்கொருவராக நின்று கொண்டு இரு சக்கர வாகன ஓட்டிகளை சில சேஷ்டைகள் செய்து திசை திருப்புவது போன்ற திருப்பணிகளில் இந்த "கேண்டிட் காமிரா" குழாத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே ஒழுங்காகச் செல்லும்போதே விபத்துக்கள் ஏற்படுகின்ற நிலையில், சாலையில் வாகன ஓட்டிகளை திசை திருப்புவது எவ்வகையான நகைச்சுவையில் சேர்த்தி என்று புரியவில்லை. ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் யார் பொறுப்பேற்கப் போகிறார்கள்?? சில சமயங்களில் எல்லை மீறும்போது சில பெரியவர்கள் அவர்களை கன்னத்தில் அறைந்து வேறு விடுகின்றனர். இது போன்ற சிற்சில சம்பவங்கள் மட்டுமே இந்நிகழ்ச்சிகளில் திருப்தியளிக்கும் அம்சமாக உள்ளது. மற்றபடி இது நகைச்சுவை அல்ல, கீழ்த்தரமான பொழுதுபோக்கு!!

சிரிப்பதா அழுவதா நீங்களே சொல்லுங்க !

13 Comments:

ஆனந்த் சதீஷ் said...

இவர்களை எல்லாம் vote போட்டு தேர்ந்தெடுத்த நாம் தான் எங்காவது போய் சுவரில் முட்டி கொள்ள வேண்டும்

கௌதமன் said...

பரவாயில்லே - சிரிச்சி வச்சிடலாம். ஆனா - மத்தவங்கள வெறுப்பேத்தி - காமெடி பண்ணுவதைவிட - அவர்களை இன்ப அதிர்ச்சிக்கு ஆட்படுத்தி - அவர்கள் திகைப்பதை தொலைக் காட்சியில் காட்டி - எல்லோரையும் சந்தோஷப் படுத்தலாமே - எங்க வீட்டுக்கு திரிஷா வந்தா காட்டுறதுக்கு நான் ஆக்டிவ் சால்ட் பேஸ்ட் வாங்கி - உபயோகிக்காம - அப்பிடியே வெச்சிருக்கேன்!

ஆனந்த் சதீஷ் said...

இவனுகளுக்கு எல்லாம் vote போட்டு தேர்ந்தெடுத்ததுக்கு நாம சுவரில தான் முட்டிக்கணும்

Anonymous said...

// காங்கிரஸின் "எகானமி க்ளாஸ்" பயணங்களை "Cattle Class" பயணமென்றும், அதில் பயணிப்போரை "Holy Cows" என்றும், "Holy Cows" களோடு சேர்ந்து தானும் பொது நன்மைக்காக "Cattle Class" இல் பயணிப்பேன்//

DEFINITELY TRAVEL IN CATTLE CLASS OUT OF SOLIDARITY WITH ALL OUR HOLY COWS!

அந்த "Holy Cows" எகானமி க்ளாஸ் பயணிகளை குறிப்பிடுவது அல்ல. சஷி தரூர் Holy Cows என எகானமி க்ளாஸில் போகும் சோனியா காந்தியை சொல்கிறார் போலுள்ளது!!!

Jaffar said...

ராகுல்-க்கு கல்லெறிந்ததும் காங்கிரஸின் கேண்டிட் கேமரா நிகழ்ச்'சீ' தானோ...

மானஸ்தன் said...

shri yathi you are bang on!
these stupid fellows must be taught a lesson. is there a way to move to police/court to book them under public nuisance? someone should bell the cat. seriously.

நம்ம ஊரு மக்கள் செய்வார்களா என்று தெரியாது. அவர்களின் மூஞ்சி டிவி-ல வருது என்றால் அவர்கள் "எதையும் தாங்கி கொள்வார்கள்" - இந்த ஆட்சியாளர்களின் "இதய தெய்வம்" சொல்வழியில்.

Anonymous said...

sun tv melayou
kalaignar tv melayou
jaya tv melayou
makkal tv melayou
vasant tv melayou

case poda namma POlice vuduma.

may be raj tv mela podalam.

enna puriyama pesareenga

Anonymous said...

முன்பே முடிவு செய்யப்பட்ட ஒன்றை, பலரின் பரிசீலனைக்குப் பின் ஆழ்ந்து முடிவு செய்யப்பட்டது போல் அறிவிப்பது. சுருங்கக் கூறின் கழக செயற்குழு கூட்ட முடிவு போல.
Good Line

யதிராஜ சம்பத் குமார் said...

someone should bell the cat. seriously.///


இது போன்ற வக்கிரங்களை அரங்கேற்றுவது பெரும்பாலும் ஆளுங்கட்சியினரின் குடும்ப தொலைக்காட்சி மற்றும் முதல்வரது பெயரில் இயங்கும் கலைஞர் சிரிப்பொலி தொலைக்காட்சி....வாரம் இருமுறை ஜெயா தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகிறது. நீதிபதிகளுக்கும், நீதிமன்றங்களுக்கும் மணி கட்ட வேண்டும் என்று மேடைகளில் முழங்கும் இவர்களுக்கு யார் மணி கட்டுவது?? ஓட்டின் மூலம் மணி கட்ட வேண்டிய மக்களும் பணத்திற்கு ஆலாய் பறக்கையில் ஆனந்த் சதீஷ் சொல்வது போல் சுவற்றில் முட்டிக் கொள்வதுதான் ஒரே வழி.

Rahul said...

அட போங்க யுதிராஜ், நீங்க பாட்டுக்கு அது நல்லா இல்லை, இது நல்லா இல்லைனு சொல்லி சரி கலைஞரின் கவிதை முழக்கம் நிகழ்ச்சியை எல்லா சேனல்களுக்கும் cumpolsary ஆக்கிவிடப்போகிறார்கள்.

/***ராகுல்-க்கு கல்லெறிந்ததும் காங்கிரஸின் கேண்டிட் கேமரா நிகழ்ச்'சீ' தானோ...**/

இல்லை, ராகுல் ரயிலில் சென்றதே காங்கிரஸின் கேண்டிட் கேமரா நிகழ்ச்'சீ' தான்.

வாழவந்தான் said...

//
இல்லை, ராகுல் ரயிலில் சென்றதே காங்கிரஸின் கேண்டிட் கேமரா நிகழ்ச்'சீ' தான்.
//
@ Rahul

I think its more like a REALITY show..

Rahul said...

/***வாழவந்தான் said...
//
இல்லை, ராகுல் ரயிலில் சென்றதே காங்கிரஸின் கேண்டிட் கேமரா நிகழ்ச்'சீ' தான்.
//
@ Rahul

I think its more like a REALITY show..***/


எருமைக்கு எவ முதுகு தேச்சா என்ன?
இட்லிவடையின் இந்த மொக்க காமெடி தான் ஞாபகம் வருகிறது.....

என்ன நிகழ்ச் சீ யா இருந்த என்ன? எல்லா கருமமும் ஒண்ணுதான்.

ஸ்ரீராம். said...

Traffic ராமசாமி இன்னுன் இதை கவனிக்கலையா?