பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, September 30, 2009

செல் உபயோகிப்பாளர்களே!! உஷார்!!அங்கீகரிக்கப்பட்ட IMEI (International Mobile Equipment Identity) எண்கள் இல்லாத செல்பேசிகளின் நெட்வொர்க் சிக்னல்கள் வரும் நவம்பர் 30 ஆம் தேதி முதல் தடை செய்யப்பட போகிறதாம். இவ்வாறு தெரிவித்துள்ளவர், "MOBILE STANDARD ALLIANCE INDIA" வின் இயக்குனரான திருமதி. அஸ்வினி புதிராஜா அவர்கள். பொதுவாக, இப்போது சந்தையில் சீன மற்றும் கொரிய தயாரிப்பு செல்பேசிகள் மிகக் குறைந்த விலையில் பல்வேறு வசதிகளுடன் கிடைக்கின்றன. ஆனால் இவற்றின் தரம் இன்னதென்று நிர்ணயிக்கப்படவில்லை. தவிர, இவையனைத்தும் போலியான IMEI எண்களோடு வருகின்றன. ஆக இவ்வகையான செல்பேசிகளை சமூக விரோத செயல்களுக்கு உபயோகிக்கும் போது, செல்பேசி எண் மற்றும் சம்பாஷணைகளை "Trace" செய்வது கடினம். மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதல் தீவிரவாதிகள் இவ்வகையான செல்பேசிகளையே உபயோகித்ததாகக் கூறப்படுவதால் இதன் மீதான கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படப் போவதாக தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. ஜூன் மாதம் 30 ஆம் தேதி முதலிலிருந்தே அமலுக்கு வருவதாக இருந்த இத்தடை இப்பொழுது நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


உங்களுடைய செல்பேசியின் IMEI எண், உங்களுடைய செல்பேசியின் "Battery Compartment"- இல் குறிக்கப்பட்டிருக்கும் (படம்). அவ்வாறு இல்லையெனில், உங்கள் செல்பேசியில் *#06# என்று டயல் செய்வதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும், உங்கள் செல்பேசியின் இக்குறியீட்டு எண் அங்கீகரிக்கப்பட்டதுதானா என்பதை அறிந்து கொள்ள உங்களுடைய 15 இலக்க IMEI எண்ணை, 53232 என்ற எண்ணுக்கு SMS செய்து தெரிந்து கொள்ளலாம். மேலும் அங்கீகரிக்கப்படாத குறியீட்டு எண் கொண்ட உபயோகிப்பாளர்கள், ரூபாய் 199 செலுத்துவதன் மூலம் அங்கீகரிக்கப்பட்ட எண் பெறலாம். இவ்வாறு வேண்டுவோர், அவரவர்களுடைய நெட்வொர்க் ஸர்வீஸ் ப்ரொவைடர்களைத் தொடர்பு கொள்ள வேண்டுமென அஸ்வினி புதிராஜா தெரிவித்துள்ளார்.

Source : Indian Express, dated 30th Sep, Page 4.


கமல் என்று ஒரு வார்த்தை கூட இல்லாத பதிவு!. Issued in public interest, by யதிராஜ சம்பத் குமார்.

12 Comments:

(-!-) said...

நல்ல பதிவு. மக்கள் சேவையில். வாழ்க நீர்.

//
கமல் என்று ஒரு வார்த்தை கூட இல்லாத பதிவு!. Issued in public interest, by யதிராஜ சம்பத் குமார். //

//ஜூன் மாதம் 30 ஆம் தேதி முதலிலிருந்தே அமலுக்கு வருவதாக இருந்த இத்தடை இப்பொழுது நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.//

கமல் என்று இல்லாவிட்டால் என்ன? அவர் அடிக்கடி சொல்லும் "தீவிரவாதம்" பற்றி இருக்கு. உள்ளே ஒரு இடத்தில் "அமலுக்கு", "தடை" என்றெல்லாம் வருகிறது.

அதை நாங்கள் கமல் என்று படித்து சந்தோஷப் பட்டுக் கொள்கிறோம். ஏன் என்றால் கமலுக்கும் கொஞ்ச நாள் முன்பு "தடை" வந்தது.

:-D

Rahul said...

இல்லை, அதான் மஞ்சள் கமெண்ட்டில் கமல் பெயரை போட்டு விட்டீர்களே!!!

Rahul said...

/***அவர் அடிக்கடி சொல்லும் "தீவிரவாதம்" பற்றி இருக்கு. உள்ளே ஒரு இடத்தில் "அமலுக்கு", "தடை" என்றெல்லாம் வருகிறது.

அதை நாங்கள் கமல் என்று படித்து சந்தோஷப் பட்டுக் கொள்கிறோம். ஏன் என்றால் கமலுக்கும் கொஞ்ச நாள் முன்பு "தடை" வந்தது.***/

மானஸ்தன் உங்களுக்கு schizophreniaவா???
ஏன் இப்படி எல்லாம் நினைக்கிறீர்கள்?? இது நான் சொல்லும் வியாதியின் துக்குநூண்டாக இருக்கலாம்!! பார்த்து உஷராக இருங்கள்!!! இட்லிவடையின் சகவாசத்தை குறைத்து கொள்ளுதல் நல்லது.
:-D

M Arunachalam said...

//மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதல் தீவிரவாதிகள் இவ்வகையான செல்பேசிகளையே உபயோகித்ததாகக் கூறப்படுவதால் இதன் மீதான கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படப் போவதாக தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. ஜூன் மாதம் 30 ஆம் தேதி முதலிலிருந்தே அமலுக்கு வருவதாக இருந்த இத்தடை இப்பொழுது நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.//

அப்பப்பா!!!! என்ன வேகம்! என்ன வேகம்!! இந்திய அரசாங்கத்தின் F1 வேக சொரணையை பார்த்து புல்லரிக்கிறது. மும்பை தீவிரவாதம் நடந்தது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதி. அதன் விசாரணையில் தெரிந்துகொள்ளப்பட்ட "செல்பேசி சம்பந்தப்பட்ட ஓட்டையை" அடைக்க ஒரு வருடம் அதற்க்கு தேவை படுகிறது. செல்பேசி கம்பனிகளின் லாபி மிகவும் பலம வாய்ந்தது என்பது இதனால் தெளிவாகிறது. நாட்டின் பாதுகாப்பை விட, செல்பேசி கம்பெனிகளின் வாடிக்கயாளர்களே முக்கியம் போல. என்ன இருந்தாலும், செல்பேசி ஏலத்தின்போது கொடுக்கப்பட்ட மற்றும் வாங்கப்பட்ட ரூபாய் 22,000 கோடி சும்மாவா கொடுக்கப்பட்டது? அவர்கள் சொல்லும் சொல்லுக்கு ஆடாவிட்டால் எப்படி? நாடு எக்கேடு கேட்டால், இவர்களுக்கு என்ன?

ஸ்ரீராம். said...

நவம்பர் 30 க்குப் பிறகும் கூட தேதி நீட்டிக்கப் படும் என்று நம்பலாம்.

R.Gopi said...

நான் இவ்வளவு விரிவாக செல்ஃபோன் உபயோகத்தை பற்றி உ.போ.ஒ.வில் சொல்லியும், அது சம்பந்தப்பட்ட பதிவில், என்னைப்பற்றி யதிராஜ சம்பத் குமார் குறிப்பிடவில்லை என்றால், எனக்கே சிறிது கலக்கமாக உள்ளது...

இனி அவர் குடியிருக்கும் தெருவிற்கும் என் பெயரே வைக்கப்படும் என்றும், அப்போது அவர் என் பெயரின்றி வாழமுடியாத ஒரு நிலைக்கு வருவார் என்றும் அடக்கத்துடன் கூறிக்கொள்கிறேன்...

இந்த நவம்பர் 30 என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை... முன்கூட்டலாம்.. அல்லது பின்கூட்டலாம்...

தெளிவான முடிவிற்கு நான் வருவதற்கு மானஸ்தன் அவர்களின் உதவியும், இட்லிவடையின் உதவியும் தேவைப்படலாம்...

இதை விட தெளிவாக‌ சமீப காலத்தில் நான் பேசியதில்லை...

(-!-) said...

//தெளிவான முடிவிற்கு நான் வருவதற்கு மானஸ்தன் அவர்களின் உதவியும், இட்லிவடையின் உதவியும் தேவைப்படலாம்...//

கடந்த ஒரு வாரமா உ.நா. நிகழ்ச்சிகளையும், உ.நா.பத்தி இட்லிவடை பதிவுகளைம் பாத்தும் படிச்சும் இந்த மானஸ்தன் ரொம்ப கொழம்பிப் போயி இருக்கேன் அண்ணாச்சி. முனியோ, இட்லி வடையோ ஒரு நல்ல லெட்டர் போட்டாத்தான் எனக்கே திரும்பத் தெளிவு வரும்.

Unknown said...

//இதை விட தெளிவாக‌ சமீப காலத்தில் நான் பேசியதில்லை...//

ரஜினி ரசிகன் தெளிவா பேசுரதா . தாங்க முடியலை

CS. Mohan Kumar said...

Thanks; this is really an useful post.

Mohan Kumar

Tomorrow being Gandhi Jayanthi, I have written an article on Gandhi; please go to the link below:

காந்தி..... சில கருத்துகள்

Link to the blog: http://veeduthirumbal.blogspot.com/

R.Gopi said...

//jaisankar jaganathan said...
//இதை விட தெளிவாக‌ சமீப காலத்தில் நான் பேசியதில்லை...//

ரஜினி ரசிகன் தெளிவா பேசுரதா . தாங்க முடியலை//

காமேஷ் சொன்ன‌து போல்... பேசணும் இல்லேன்னா கமெண்ட் போடணும்னு போடக்கூடாது ஜெய்ஷ‌ங்க‌ர்.... நீங்க‌ என்னோட‌ முந்தைய‌ க‌மெண்டை ப‌டித்தால் அது யார் சொன்ன‌து என்று தெரியும்....(க‌ண்டிப்பாக‌ ர‌ஜினி ர‌சிக‌ன் இல்லை...)

Unknown said...

//(க‌ண்டிப்பாக‌ ர‌ஜினி ர‌சிக‌ன் இல்லை...)
//
பதிலுக்கு நன்றி

Erode Nagaraj... said...

அஸ்வினி 'புதிரா' ஜா கூறியதை தெளிவாக விளக்கிய யதிராஜாவிற்கு, "நன்றி நன்றி..." (எப்படி, ஹே ராமை உள்ளே இழுத்தோம்ல...)