பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, September 22, 2009

படித்துறை - இளையராஜா இசையில் இலக்கியவாதிகள்

இளையராஜா இசையில் இலக்கியவாதிகள்.

சுகா வேணுவனம் என்னும் பெயரில் வலைப்பதிவுகள் எழுதி வருபவர். ஜெயமோகன் இவரைப் பற்றி சில பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார். வார்த்தை இதழிலும், சொல்வனம் மின்னிதழிலும் இவர் எழுதிவருகிறார். எளிமையான நகைச்சுவையும், வட்டார மொழியும் இவரது பலம் என்று சொல்லலாம். இவரது தந்தை நெல்லை கண்ணன். நெல்லையைச் சேர்ந்த சுகா, படித்துறை என்னும் படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்துக்கு இசை இளையராஜா. இப்படத்தில் பெரும்பாலும் புதுமுகங்களே நடிக்கிறார்கள். முக்கியமான விஷயம், இலக்கியவாதிகளான நாஞ்சில் நாடனும், எஸ்.ராமகிருஷ்ணனும் இப்படத்தில், இளையராஜாவின் இசையில் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள் என்பது முக்கியமானது.

சன் நியூஸில் வெளியான வண்ணத்திரை நிகழ்ச்சியில் இப்படத்தைப் பற்றி ஒளிபரப்பினார்கள். சுகாவும் பேசினார்.
பழைய மதன் ஜோக் ஒன்று நினைவுக்கு வருது - அரசியல்வாதி : மாணவர்களே நாங்கள் என்றாவது படிப்பில் ஈடுப்பட்டிருக்கிறோமா ? அதே போல் நீங்கள் அரசியலில் ஈடுபடாதீர்கள்.

7 Comments:

Rahul said...

பாட்டு எப்போ release????
படம் எப்போ?

SUBBU said...

மஞ்சள் கமெண்ட் தூக்குது :)))))

Anonymous said...

//அரசியல்வாதி : மாணவர்களே நாங்கள் என்றாவது படிப்பில் ஈடுப்பட்டிருக்கிறோமா ? அதே போல் நீங்கள் அரசியலில் ஈடுபடாதீர்கள்.

இலங்கை-மத்திய அரசின் நடவடிக்கை திருப்தி அளிக்கிறது-கருணாநிதி

இலங்கை மக்களின் மகிழ்ச்சியான வாழ்த்து முதல்வருக்கே !!!

############################
Hearing the news of Y. S. Rajasekhara Reddy's death, at least 462 people allegedly died either due to heart attack or by committing suicide in grief.
#############################

Will the same thing(People die either due to heart attack or by committing suicide in grief) happen in TN if our CM dies ?

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தமிழர்கள் அனைவரும் மகிழ்ச்சியான தீபாவளி கொண்டாடும் நாள் எப்போது
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Anonymous said...

ராஜராஜ சோழன், மாட்டுக்கார வேலன், நீதிக்கு தலைவணங்கு, பணமா? பாசமா? உள்பட பல படங்களில் நடித்தவர் எஸ்.வரலட்சுமி. இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கீழே விழுந்ததில் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.


அங்கு அவருக்கு ஆபரேஷன் நடந்தது. அதில் இருந்து அவர் படுத்தபடுக்கையாக இருந்தார். இன்று இரவு 8 மணிக்கு அவருக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்தார். இவருக்கு வயது 84.


இவர் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். அவருடைய கணவர் பட அதிபர் ஏ.எல்.சீனிவாசன் ஆவார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். எஸ்.வரலட்சுமியின் இறுதி சடங்கு நாளை மாலை நடக்கிறது.

ESMN said...

'படித்துறை' வெற்றி படமாக அமைய வாழ்த்துக்கள்....
அவருடைய எழுத்துக்களில் நெல்லை சீமையின்
வட்டார வழக்கை அப்படியே படம் பிடித்து மனதிரைக்கு முன் காட்டுவார்

Venkatramanan said...

'எருமை மாடு' சார் (இதுக்காகவாச்சும் நீங்க வேற பேரு வெச்சுக்கறது நல்லதுன்னு நெனைக்கறேன்!) சுகாவின் இந்த படைப்புகள் செலக்ஷன் உங்களுக்கு உவப்பானதாயிருக்கும்னு நம்பலாம்!

அன்புடன்
வெங்கட்ரமணன்!

Anonymous said...

சொல்வனத்தில் சுகா எழுதிய கட்டுரைகள்:

http://solvanam.com/?author=3