பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, September 09, 2009

திருப்பாச்சி நினைச்சா, காங்கிரஸ் ஆட்சி

ராகுல் காந்தியை சந்தித்த பிறகு ராகுல் காந்தியைவிட விஜய் அதிகம் பிரபலம் ஆகிவிட்டார். அவரை பிரபல படுத்தியவர்கள் யார் .....?



1. கல்கி, ஜூவி, துக்ளக், விகடன், குமுதம் என்று எல்லா பத்திரிக்கையிலும் அட்டை படம் அல்லது இரண்டு பக்க விஜய் செய்திகள் போன வாரம் பிரசுரம் ஆனது.



2. ஈழ நலனுக்காக நடிகர் விஜய் தனது ரசிகர்களை திரட்டி உண்ணாவிரதம் இருந்த போது அதனை ஆத‌ரித்த பெ‌ரியார் திராவிட‌ர் கழகம், அதே விஜய்யை எதிர்த்து இன்று மாநிலம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டி எதிர்ப்பை தெ‌ரிவிக்கிறோம் பேர்வழி என்று விஜய்யை பிரபலப்படுத்தினார்கள்.

3. திமுக தரப்பிலிருந்து விஜய்க்கு ராகுலை சந்திக்க வேண்டாம் என சிக்னல்(அறிவுரை) போனதாக கூறப்படுகிறது. இதனால் திமுகவை பகைத்துக் கொண்டு ராகுல் காந்தியை சந்திக்க விஜய் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. இரண்டு வாரம் முன்பு விஜய் கல்யாண மண்டபத்தின் பந்தல் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக போலீஸ் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. கழுகார், ஆந்தையார் இனிமே இதை பற்றி எழுதி தள்ளிவிடுவார்கள். வேட்டைக்காரன் படத்தில் விஜய் போலீஸாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!


4. சமீபத்தில் ரொம்ப எடக்காக பேசும் EvKs "நடிகர் விஜய், காங்கிரசின் அடிமட்டத் தொண்டராகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை; தொண்டராக இருக்கலாம்" என்று கூறியுள்ளார். இதற்கு என்ன அர்த்தம் என்று விளக்கமாக விஜய்யிடம் சொல்லலாம். ஆக விஜய் காங்கிரஸில் சேருவதற்கு முன்பே கோஷ்டி ரெடியாகிவிட்டது.

5. விஜய் ரசிகர்கள் தங்களின் தலைவர் புகழ் பாடும் பேனர்கள் வைத்து தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் திமுகவை எரிச்சல் படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு பேனரில், திருப்பாச்சி நினைச்சா, காங்கிரஸ் ஆட்சி' என்ற வாசகமும், மற்ற பேனர்களில் "விஜய்னா வில்லு, காங்கிரஸ் [XXXXX]' காங்கிரஸ் என்பதற்குக் கீழே இருந்த வார்த்தை, வெள்ளை ஸ்டிக்கரால் மறைக்கப்பட்டிருந்தது. விஜய் நினைத்தால் மட்டுமே தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி வரும் என்பதைப்போல, வாசகங்கள் இருந்ததைப் பார்த்து, காங்கிரஸ் தொண்டர்கள் கொதிப் படைந்துள்ளனர் என்கிறது செய்தி.


6. இந்த மாதிரி விஜய் பதிவுகள் எழுதும் நானும் படிக்கும் நீங்களும்! :-)


16 Comments:

sreeja said...

சும்மா கிடந்த சங்க ஊதி கெடுத்தான்.

R.Gopi said...

//வேட்டைக்காரன் படத்தில் விஜய் போலீஸாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!//

ம‌றுப‌டியுமா??/ சிரிப்பு போலீஸா?? இதுவ‌ரை ப‌ட்ட‌து எல்லாம் போதாதா நானு??

// இந்த மாதிரி விஜய் பதிவுகள் எழுதும் நானும் படிக்கும் நீங்களும்! :-)//

த‌மிழ‌க‌த்தின் சாப‌க்கேடு...

//"விஜய்னா வில்லு, காங்கிரஸ் [XXXXX]' காங்கிரஸ் என்பதற்குக் கீழே இருந்த வார்த்தை, வெள்ளை ஸ்டிக்கரால் மறைக்கப்பட்டிருந்தது. விஜய் நினைத்தால் மட்டுமே தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி //

நான் சொல்லி அடிச்சா குச்சி
சொல்லாம‌ அடிச்சு சொக்கா கிழிஞ்சு போச்சி

sreeja said...

//"விஜய்னா வில்லு, காங்கிரஸ் [XXXXX]'//

விஜய்னா வில்லு - காங்கிரஸ்-னா காலி

அப்படியா இருக்குமோ ?

Rahul said...

/**வேட்டைக்காரன் படத்தில் விஜய் போலீஸாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!**/

படித்தவுடன் மனதில் தோன்றிய காமெடி

நிருபர் : ஸார் போக்கிரி படத்தில் உங்க காமெடி சூப்பர்.
விஜய் : எது? நானும் ஆசினும் லிஃப்ட்ல செய்த காமெடி தானே?
நிருபர் : இல்ல ஸார், Climax ல வாட்ச்மேன் கெட்டப்பில் வந்தீங்களே அதை சொன்னேன்...

யதிராஜ சம்பத் குமார் said...

ஆயிற்று திராவிடர் கழகம் விஜயைக் கண்டித்து விட்டது. அடுத்து கலையுலக புலிப் போராளி அண்ணன் இனமானச் சிங்கம் சீமான் விஜயைக் கண்டிப்பது ஒன்றே பாக்கி. அவரும் செய்து விட்டால் இனமானம் ஜென்ம சாபல்யம் எய்தி விடும்.


திராவிடர் கழகம் ஏன் திருமாவளவனைக் கண்டிக்கவில்லை?? திருமாவளவன் ஆற்றாத வீரவுரையா அல்லது ஏற்காத சபதமா?? பாஞ்சாலி அவிழ்ந்த கூந்தலை முடியமாட்டேன் என்றுரைத்தது போல், காங்கிரஸை புல் பூண்டு இருந்த இடம் தெரியாமல் அழிக்காமல் ஓயமாட்டேன் என்று சொன்ன திருமாவளவனை எதிர்த்து திராவிடர் கழகம் எப்பொழுது போஸ்டர் ஒட்டப் போகிறது??

கௌதமன் said...

கமெண்ட் எழுதும் நாங்களும் - மஞ்சள் வண்ண மக்களே!

யதிராஜ சம்பத் குமார் said...

தமிழகத்திற்கு வரும் ராகுல் காந்தி எப்படியும் மரியாதை நிமித்தமாக கலைஞரை சந்திப்பார். அவ்வாறு ஒரு சந்திப்பு நிகழ்ந்தால் ராகுலுடன் உரையாடியதற்காக திராவிடர் கழகம் கலைஞரையும் எதிர்த்து போஸ்டர்கள் ஒட்டுவார்களா?? இனமான கி.வீரமணி அவர்கள் என்ன சொல்வார்??

கௌதமன் said...

விஜய் ன்னா வில்லு - காங்கிரஸ் ன்னா 'ஜொள்ளு' (பதவிக்கு)
இ வ ன்னா லொள்ளு.

Rahul said...

/***திராவிடர் கழகம் ஏன் திருமாவளவனைக் கண்டிக்கவில்லை?? திருமாவளவன் ஆற்றாத வீரவுரையா அல்லது ஏற்காத சபதமா?? பாஞ்சாலி அவிழ்ந்த கூந்தலை முடியமாட்டேன் என்றுரைத்தது போல், காங்கிரஸை புல் பூண்டு இருந்த இடம் தெரியாமல் அழிக்காமல் ஓயமாட்டேன் என்று சொன்ன திருமாவளவனை எதிர்த்து திராவிடர் கழகம் எப்பொழுது போஸ்டர் ஒட்டப் போகிறது??***/



நீங்கள் கலி காலத்தில் அதிலும் இந்தியாவில் இருக்கிறீர்கள், அதுவும் தீப்பந்த தடியர்கள் இருக்கும் தங்க தமிழ் நாட்டில் இருக்கிறீர்கள்..... பிறகு எப்படி நீங்கள் இதையெல்லாம் எதிர்பார்க்கிறீர்கள்?

மஞ்சள் ஜட்டி said...

குரங்கு தன் கு..டியில் தானே வெட்டு வைத்துக்கொண்டது போல்..இங்கே போனால் அங்கேயிருந்து மிரட்டல்...அப்படி "திரிசங்கு" சொர்க்கம் போலாகி விட்டது விஜய்யின் வாழ்க்கை... அப்பன்கள் தான் மகன் வாழ்க்கையை கெடுக்கிறார்கள்...பாரதிராஜா தன் மகன் மனோஜின் திரை உலக வாழ்க்கைக்கு ஒரே படத்தின் மூலம் ஆப்பு வைத்தது மாதிரி...

SUBBU said...

ம‌றுப‌டியுமா??/ சிரிப்பு போலீஸா??

Anonymous said...

Vijay-na Villu
Congress-na XXXXXX

ithukku (valakkalbola) oru veththu poAtti vachi (valakkalbola) parisu koduppaennnu solli irukkalamae iv. oru chance pochae....:)

pachhamilaka said...

காங்கிரஸ்காரங்களுக்கு..... வேட்டிஅவிழ்த்தல் அடி தடி தான் தெரியும் நினைத்தேன் காமெடியும் தெரியும் என்று நிரூபனம்.....இதெல்லாம் தமிழ்நாட்டின் தலைஎழுத்து

Rahul said...

/***pachhamilaka said...
காங்கிரஸ்காரங்களுக்கு..... வேட்டிஅவிழ்த்தல் அடி தடி தான் தெரியும் நினைத்தேன் காமெடியும் தெரியும் என்று நிரூபனம்.....இதெல்லாம் தமிழ்நாட்டின் தலைஎழுத்து***/

அரசியல்ல இது கூட இல்லைனா எப்படி??? வேறு என்ன பெருசா குளம், ஏறி என்று ஏதாவது வெட்டவா போகிறார்கள்?

சீனு said...

விஜய் ன்னா வில்லு - காங்கிரஸ் ன்னா ___________________ ???

Fill in the blanks.

போட்டி விதிமுறைகள் மற்றும் பரிசுக்கு இ.வ.குழுவினரிடம் கேளுங்கள்.

Baski said...

விஜய்ன்னா வில்லு -
காங்கிரஸ்ன்னா 'lollu'