பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, September 16, 2009

ஸிம்ஹ ராசி பலன்கள்உங்களைப் பற்றி:

"ஸிமஹத்தானோடு சிணுங்கேல்" என்பதற்கேற்ப உங்களிடம் யாராவது வம்பிழுத்தால் அவ்வளவுதான், உடனே சிங்கம் பிடரியை சிலுப்பி எழும்புவது போல எழுந்து விடுவீர்கள். முன் வைத்த காலை பின் வைக்க மாட்டீர்கள். நீங்கள் யாரையாவது நம்பி விட்டால் வாரி வழங்கி விடுவீர்கள். எடுத்த முடிவில் இருந்து சிறிதும் இறங்கி வர மாட்டீர்கள்.

எப்படி இருக்கப் போகிறது இந்த சனிப் பெயர்ச்சி:

இது வரை ஜென்ம சனியாகி உங்களைப் பாடாய்படுத்திய சனீஸ்வரன் இனி உங்களது தன, வாக்கு, குடும்பஸ்தானமான இரண்டாம் வீட்டில் அமர்ந்து வரும் 21/2 ஆண்டுகளுக்கு என்னென்னெ பலன்கள் தரப்போகிறார் என்பதைப் பார்ப்போம்.

நல்லவர் யார் கெட்டவர் யார், இவரை நம்பலாமா நம்பக்கூடாதா என்றிருந்த நிலை மாறும். ஜென்மச்சனி ஒரு உலுக்கி உலுக்கி விட்டதா? இனி இது மாறும். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். இருந்தாலும் எளியநிலை உடற்பயிற்சி, உணவுக்க் கட்டுப்பாடு தேவை. அலைபாய்ந்த மனது ஒருமுகமாகும். வாழ்க்கைத்துணை இனி மகிழ்ச்சியடைவார். கணவன் மனைவிக்குள் சிறு சிறு வாக்கு வாதம் வந்து மறையும். குடும்பத்தில் அமைதி நிலைக்க பொறுமை தேவை. வீண் செலவுகளை குறைக்க வேண்டும். வாக்கு கொடுக்கும் போது கவனம் தேவை. சிலருக்கு பரிந்து பேசுவதால் பிரச்சினை வரலாம். குடும்ப ரகசியங்களை மூன்றாம் நபர் முன் விவாதிக்க வேண்டாம். இதுவரை இருந்த மன உளைச்சல் நீங்கி நிம்மதி ஏற்படும். தாயார் மற்றும் தாய் வழி உறவினர்களிடம் கவனம் தேவை. தாயார் உடல்நிலையில் அக்கறை செலுத்தவும். வீடு, மனை, வாகனம் வாங்குவதில் சற்று கவனம் தேவை. நண்பர்களின் உறவில் கவனமாக இருக்கவும். அயல்நாட்டு பயணங்கள் மற்றும் எதிர்பாராத பயணங்கள் ஏற்படலாம். சித்தர்கள் மற்றும் மகரிஷிகளின் ஆசிகள் கிடைக்கும். பொது விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி இருப்பது நன்மையைத்தரும். புதிய வியாபாரம் மற்றும் தொழில் துவங்க அனுகூலமான நேரமிது. தைரியம் அதிகரிக்கும். வழக்கு வியாஜ்ஜியங்களில் வெற்றிகள் கிடைக்கும். திருமணத் தடைவிலகும். வாழ்க்கைத்துணையுடனான கருத்து வேறுபாடுகள் நீங்கும். பிரிந்த நண்பர்கள் ஒன்று சேருவர். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. உங்கள் உடல்நிலையிலும் அக்கறை எடுத்துக் கொள்ளவும். ஹ்ருதய சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தகுந்த வைத்தியம் பெற்றுக் கொள்ளவும். புதிய வாகனம் வாங்குவதாயிருந்தால் உங்கள் பெயரில் வாங்குவதை தவிர்க்கவும், மற்ற குடும்ப உறுப்பினர்களின் பெயரில் வாங்கலாம். புதிய பங்குதாரர்கள் கிடைப்பார்கள். அரசாங்க அலுவல் அனுகூல்யங்கள் மெள்ள மெள்ள கிடைக்கும். தங்களது திறமைக்கேற்ப பதவி உயர்வு கிடைக்கும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் கவனம் தேவை. மனனம் செய்வதில் கவனம் தேவை. கலைஞர்களுக்கு தகுந்த சன்மானம் கிடைக்கும். இதுவரை இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு ஏற்படும். உங்கள் தொழிலில் லாபங்கள் படிப்படியாக கிடைக்கும். முதலீடுகள் செய்யும்போது தகுந்த ஆலோசனை பெற்று செய்யவும். மூத்த சகோதர சகோதரிகளிடம் கவனமாக இருக்கவும். வேலையில்லாதவர்களுக்கு தகுந்த வேலை கிடைக்கும். கூடாநட்பை விட்டு விலகவும். கடன் சுமை நீங்கி நிம்மதி ஏற்படும். பொதுவாக சங்கடங்கள் நீங்கி சந்தோஷத்தைக் கொடுக்கும்.

நக்ஷத்திர ரீதியான பலன்கள்:

மகம்: உடல்நலம் மற்றும் தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தடைகளைத்தாண்டி வெற்றிகளைக் குவிப்பீர்கள். கல்வியில் மந்தமான சூழ்நிலை விலகி நன்மை கிடைக்கும். கல்வி மற்றும் தொழிலில் சிறக்க ஸ்ரீ கணபதியை வணங்குங்கள்.

பூரம்: உங்களுக்கு அரசாங்க சம்பந்தப்பட்ட காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வாழ்க்கைத்துணையுடன் இருந்த கசப்புணர்ச்ச்சி நீங்கும். வரவேண்டிய கடன்பாக்கி வந்துசேரும். காதல் விவகாரங்களில் தலையிட வேண்டாம். ஸ்ரீமஹாலக்ஷிமியை வணங்கி எதை ஆரம்பித்தாலும் வெற்றிதான்.

உத்திரம் 1ம் பாதம் : உங்கள் சகோதர சகோதரிகளின் உறவு பலமாகும். புதிய தொழில் ஆரம்பிப்பீர்கள். நீண்ட நாட்களாக உள்ள திருமணத்தடை நீங்கி திருமணம் நடைபெறும். ஸ்ரீஆதித்யஹ்ருதயம் சொல்ல சொல்ல தடைகள் விலகி நன்மை பிறக்கும்.

குறிப்பு: இது மாணவ மணிகளுக்கு: ஸ்ரீ ஹயக்ரீவர் வழிபாடு நன்மையைத்தரும்.

லக்ன ரீதியான பலன்கள்:

லக்னம் இராசி பலன்கள் பரிகாரம்
மேஷம் ஸிம்ஹம் 60/100 கந்த ஷஷ்டி கவசம் சொல்வது
ரிஷபம் ஸிம்ஹம் 60/100 ஸ்ரீ மன் நாராயணீயம் சொல்வது மற்றும் ஸ்ரீஸூக்தம் சொல்வது
மிதுனம் ஸிம்ஹம் 55/100 கணபதி பூஜை மற்றும் விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது,மகான்களை வழிபடவும்
கடகம் ஸிம்ஹம் 60/100 புருஷ ஸூக்தம், நாராயண ஸூக்தம், விஷ்ணு ஸுக்தம் சொல்வது மற்றும் சூரிய வழிபாடு
ஸிம்ஹம் ஸிம்ஹம் 60/100 ஆதித்யஹ்ருதயம், மஹாலக்ஷிமி காயத்ரி, ஹனுமத் காயத்ரி சொல்வது
கன்னி ஸிம்ஹம் 50/100 விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது, முடிந்த வரை இராம நாமம் சொல்வது, மகான்களை வழிபடவும்
துலாம் ஸிம்ஹம் 55/100 கணபதி காயத்ரி, நவக்ரஹ மூலமந்த்ரம் சொல்வது, ஸ்ரீஸூக்தம் சொல்வது.
விருச்சிகம் ஸிம்ஹம் 60/100 கணபதி பூஜை மற்றும துர்ஹா ஸூக்தம் சொல்வது, முடிந்த வரையில் அம்பாள் நாமாவை சொல்வது.
தனுர் ஸிம்ஹம் 60/100 கணபதி அதர்வஷீர்ஷ உபநிஷத், துர்க்கா மூலமந்த்ரம் மற்றும் ஹனுமத் கவசம் சொலவது.
மகரம் ஸிம்ஹம் 65/100 கணபதி வழிபாடு மற்றும் குலதெய்வ வழிபாடு செய்வது.
கும்பம் ஸிம்ஹம் 55/100 லலிதா ஸகஸ்ரநாம பாராயணம் மற்றும் மூகபஞ்சக சதீ சொல்வது, தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது.
மீனம் ஸிம்ஹம் 60/100 தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது மற்றும் துர்க்கா காயத்ரி சொல்வது, வீட்டிலுள்ள முன்னோர்களை வழிபடவும்.
லக்னமே தெரியாது ஸிம்ஹம் 60/100 ஆதித்யஹ்ருதயம், மஹாலக்ஷிமி காயத்ரி, ஹனுமத் காயத்ரி சொல்வது
குறிப்பு:

[1] மேலே உள்ள டேபிளை எப்படி பயன்படுத்துவது?

நீங்கள் ஸிம்ஹம் இராசியில் பிறந்து லக்னம் தெரிந்ததென்றால் அதற்குள்ள பலனைத் தெரிந்து கொள்ளவும். அதற்குள்ள பரிகாரத்தை தெரிந்து கொள்ளவும். உதாரணமாக, நீங்கள் ஸிம்ஹ இராசியில் பிறந்து கடகம் லக்னத்தில் பிறந்தவரென்றால் உங்களுக்கு 60% சதவிகிதம் நல்ல பலன்கள் கிடைக்கும். மேலும் நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்: புருஷ ஸூக்தம், நாராயண ஸூக்தம், விஷ்ணு ஸுக்தம் சொல்வது மற்றும் சூரிய வழிபாடு. எனக்கு லக்னமேத் தெரியாது ஆனால் ஸிம்ஹ இராசி என்பவர்கள் ஆதித்யஹ்ருதயம், மஹாலக்ஷிமி காயத்ரி, ஹனுமத் காயத்ரி சொல்வத பரிகாரமாகும்.

[2] இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.

நக்ஷத்திர வாரியாக சில குறிப்புகள்:

* நக்ஷத்திரங்கள்
பலன்கள் மகம் பூரம் உத்திரம் 1ம் பாதம்
இராசி ஸிம்ஹம் ஸிம்ஹம் ஸிம்ஹம்
இராசியாதிபதி சூரியன் சூரியன் சூரியன்
நக்ஷத்திர அதிபதி கேது சுக்ரன் சூரியன்
அதிதேவதைகள் பித்ருக்கள் அர்யமா பகன்
கணம் இராக்ஷஸ மனுஷ்யகணம் மனுஷய கணம்
நாடி பார்ஸுவ - இடது மத்ய பார்ஸுவ - வலது
மிருகம் ஆண் எலி பெண் எலி பசுமாடு
பக்ஷி ஆண் கழுகு பெண் கழுகு கழுகு
விருக்ஷம் ஆலமரம். புரசு இலந்தை
இரஜ்ஜு பாத ரஜ்ஜு தொடை தொப்புள்
வேதை நக்ஷத்ரம் ரேவதி உத்திரட்டாதி பூரட்டாதி
அதிர்ஷ்டம் தரும் எண்கள் 1, 3, 4, 7, 9 1, 3, 4, 6, 7, 9 1, 3, 4, 5, 7, 9
அதிர்ஷ்டம் தரும் திசைகள் கிழக்கு கிழக்கு, வடக்கு கிழக்கு
குறிப்பு:

அதிர்ஷ்டம் தரும் எண்களும், திசைகளும் ஜாதகத்திற்கு ஜாதகம் மாறும். இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுவானவையே.

இன்றைய ஜோதிடக் குறிப்பு:

பாவக சக்கிரத்திற்கும் இராசிக் கட்டத்திற்கும் என்ன வித்தியாசம்?

பார்க்க படம்

இந்தக் குழந்தை பிறந்தது, 25-டிசம்பர்-1975, காலை 1.45, இடம்: சென்னை. லக்னம்: துலாம்,

இதில் இடது புறம் உள்ளது இராசிச் சக்கரம், வலதுபுறம் உள்ளது பாவகச்சக்கரம்.

இவரது ராசிச் சக்கரத்தில் "ல" என்று போட்டு இருக்கும் இடம்தான் லக்னம். அது ஒன்றாம் இடம். அதிலிருந்து "CLOCKWISE" ஆக எண்ணுங்கள். எண்ணிணால்

1ம் இடத்தில் - சுக்ரன், இராகு

2ம் இடத்தில் - மாந்தி

3ம் இடத்தில் - சூரியன், புதன்

6ம் இடத்தில் - வியாழன்

7ம் இடத்தில் கேது

8ம் இடத்தில் - செவ்வாய்

10ம் இடத்தில் - சனி

11ம் இடத்தில் சந்த்ரன் ஆகியவை விடையாக வரும்.

இப்போது வலப்புறம் உள்ள பாவக சக்கரத்தில் "ல" என்று போட்டு இருக்கும் இடம்தான் லக்னம். அது ஒன்றாம் இடம். அதிலிருந்து "CLOCKWISE" ஆக எண்ணுங்கள். எண்ணிணால்

2ம் இடத்தில் - சுக்ரன், இராகு,மாந்தி

3ம் இடத்தில் - சூரியன்

4ம் இடத்தில் - புதன்

7ம் இடத்தில் - வியாழன்

8ம் இடத்தில் கேது

9ம் இடத்தில் - செவ்வாய்

10ம் இடத்தில் - சனி

12ம் இடத்தில் சந்த்ரன் ஆகியவை விடையாக வரும்.

இவருக்குச் பலன் சொல்வோமானால் இவர் இரும்பு சம்பந்தப்பட்ட படிப்பு படித்திருப்பார்[According to இராசி சக்கரம்]. ஆனால் அவர் இரும்பு சம்பந்தமான படிப்பு படிக்கவில்லை, அக்கவுண்ட்ஸ் சம்பந்தமான படிப்பு படித்துள்ளார்.

எப்படி?

ஏனென்றால் பாவகச் சக்கிரத்தில் 4ம் இடத்தில் புதன் அமர்ந்திருப்பதால், அவர் அக்கவுண்ட்ஸ் சம்பந்தப பட்ட படிப்பு படித்துள்ளார்.

பாவக சக்கரத்திற்கும் இராசி சக்கரத்திற்கும் இடையேயான வித்தியாசங்கள் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. மேலும் ஒரு பலனை ஆராயலாம். 6ம் இடத்தில் உள்ள வியாழனாலும், 7ம் இடத்தில் உள்ள கேதுவாலும் இவருக்கு படித்த மனைவி கிடைப்பது கடினம். [According to இராசி சக்கரம்]. ஆனால் இவருக்கு இணையாக படித்துள்ள மனைவி இவருக்கு அமைந்திருக்கிறார்.

எப்படி?

ஏனென்றால் பாவகச் சக்கிரத்தில் 7ம் இடமான களத்திரஸ்தானத்தில் வியாழன் அமர்ந்துள்ளதால் இது சாத்தியமாகிஉள்ளது. எனவே பலன்கள் சொல்லும் போது இராசி சக்கரத்தை விட பாவ சக்கரமே உகந்தது. இதை நமது வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இனி கன்னி இராசிக்குண்டான பலன்களில் சந்திபோம். நன்றி.

நன்றி: பெருங்குளம் இராமகிருஷ்ணன்,ஜோதிடர்.
[ முகவரி: rameshramky06.venkat@gmail.com ]

6 Comments:

ஜோசியக்காரன் said...

நல்லா இருக்கு..ஸிம்ஹ ராசி பலன்.. சிம்ம ராசிப் பலனா இருந்தாத்தான் நாங்க படிப்போம்.. தமில் வால்க.. வடமொலி ஒளிக

கானகம் said...

யாராச்சும் சொன்னாத்தான் ஜோக்ஸ் ஜோதிகாவையும், லார்டு லபக்குதாசையும் மாத்துவீங்களாக்கும்???

நமீதா மேட்டர் சூப்பரு!!!!!!

Rahul said...

இன்றைய ஜோதிடக் குறிப்பு:
Superb!!!

Rahul said...

/***ஸிம்ஹ ராசி பலன்.. சிம்ம ராசிப் பலனா இருந்தாத்தான் நாங்க படிப்போம்.. தமில் வால்க.. வடமொலி ஒளிக
***/

நல்ல கிண்டல்!!

Anandam said...

please sollunga ungoloda google adsense income monthly evlo kidaikuthu.yen intha question unga kitta ketu irukenu first purinchikonga,nan intha adsense program tamilnadu muluvathum kondu serkanum enpathu than ennoda ennam so please reply pannunga pl....................

Anandam said...

please sollunga ungoloda google adsense income monthly evlo kidaikuthu.yen intha question unga kitta ketu irukenu first purinchikonga,nan intha adsense program tamilnadu muluvathum kondu serkanum enpathu than ennoda ennam so please reply pannunga pl....................