நிகழும் மங்களகரமான விரோதி வருஷம் புரட்டாசி மாஸம் 11ம் தேதி(26-09-2009) அன்று அதிகாலை 3.31க்கு [வாக்யப் பஞ்சாக்கப்படி] சனி பகவான் ஸிம்ஹ ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இந்த சனிப் பெயர்ச்சியால் 12 இராசிகளுக்கும் ஏற்படக்கூடிய பொதுபலாபலன்களை சொல்லக்கூடிய வாய்ப்பை இட்லிவடையின் மூலம் பகவான் எனக்கு ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார். கன்னி இராசிக்கு செல்லும் பகவான் 20.12.2011 வரை கன்னியில் சஞ்சாரம் செய்கிறார். இந்த பலன்களில் லக்ன ரீதியாகவும் ஆராய்ந்து பலன்களை சொல்லியிருக்கிறேன். பரிகாரமும் தனித்தனியாக சொல்லியிருக்கிறேன். மேஷ இராசிக்குள்ள சனிப்பெயர்ச்சி பொது பலன்கள் உங்களைப் பற்றி: நண்பர்களையும் உறவினர்களையும் அன்பினாலும் பாசத்தினாலும் வீழ்த்துபவர்களே, சமாதானத்தையும், அமைதியையும் விரும்புபவர்களே, கடினமான முட்பாதைகளையும் மலர் பாதைகளாக மாற்றும் சக்தி கொண்டவர்களே, உங்களைப் பற்றி மதீப்பீடு செய்வது மிகவும் கடினம். மிகவும் மன உறுதி உடையவர். எடுத்த வேலையை சரியாக முடிக்கும், எடுத்த முடிவில் மாறாமல் இருக்கும், யாரையும் சாராமல் தனதுழைப்பால் முன்னேறும் மேஷ இராசி வாசகர்களே, எப்படி இருக்கப் போகிறது இந்த சனிப் பெயர்ச்சி: இது வரை உங்களது பூர்வபுண்ணிய பஞ்சம ஸ்தானத்தில் இருந்த சனிபகவான் இனி ரணருணரோகஸ்தானமான் ஆறாமிடத்தில் இருந்து வரும் 21/2 ஆண்டுகளுக்கு என்னென்னெ பலன் தரப்போகிறார் என்பதைப் பார்ப்போம். எதை எடுத்தாலும் காரியத்தடை, மனைவி பிள்ளைகள் நண்பர்களுடன் வாக்குவாதம், வீண் பணவிரயம் என்றிருந்த காலம், மாறும் நேரம் வந்துவிட்டது. அதிரடியான திட்டங்கள் மூலம் இழந்ததை மீட்க வழியைப் பாருங்கள். நீங்கள் எடுத்த காரியம் ஜெயமாகும் காலமிது. வாழ்க்கைத்துணைக்கும் உங்களுக்கும் இருந்த சிற்சில பிரச்சினைகள் தீரும் காலமிது. பிள்ளைகள் தங்கள் சொற்படி கேட்டு நடப்பார்கள். அதனால் சமுதாயத்திலும், உறவினர் மத்தியிலும் உங்கள் மதிப்பு கூடும் காலமிது. கடந்த 21/2 ஆண்டு காலமாக உங்களிடம் போயிருந்த கம்பீரம் மீண்டும் வரும் நேரமிது. தங்களது குடும்ப வருமானம் செலவு சரியாக இருந்தது இல்லையா, இனி இது மாறும். சுபகாரியங்கள் பல நடக்கும். தடைபட்டிருந்த திருமணம் மற்றும் பிள்ளைப்பேறு தடை நீங்கும் காலமிது. ஆடை அணிகலன்கள் சேரும் காலமிது. பிரிந்து போயிருந்த நண்பர்கள் ஒன்று சேரலாம் எனவே நீங்கள் சற்று இறங்கி வாருங்கள். புண்ணிய ஸ்தல பயணம், வெளிநாட்டு பயணம் தங்களைத் தேடி வரும், பயன்படுத்திக் கொள்ளுங்கள். அனுபவம் மிகுந்த வேலையாட்களைப் பார்த்து ஒப்படையுங்கள், வெற்றி வரும். புது ஒப்பந்தங்களில் கையெழுத்து போடும் போது வாழ்க்கைத்துணையிடம் கருத்து கேட்டுக் கொள்ளுங்கள். கூட்டுத்தொழில் செய்பவர்கள் பார்ட்னரை அனுசரித்துப் போங்கள். உத்தியோகத்தில் இருந்த சுணக்க நிலை மாறும். மேலதிகாரிகளின் பேராதவு கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கமிஷன், ஏஜண்ட், காண்டிராக்ட் போன்ற வேலைவாய்ப்பு தேடிவரும். கல்வியைப் பொருத்தவரை இதுநாள் வரை இருந்த சுணக்க நிலை மாறும். இருந்த போதும் ஒருமுறைக்கு மீண்டும் ஒரு முறை படிப்பது நல்லது. கவிதை, கட்டுரை, ஓவியம் போன்ற கலைகளை கற்றுக்கொள்ள இது ஒரு வாய்ப்பான காலம். அறிவியல், தொழில்நுட்பம் பயில்பவர்களுக்கு நல்ல காலமிது, பயன்படுத்திக் கொள்ளுங்கள். நண்பர்களுடன், உறவினர்களுடன் பல நாட்கள் சந்தோஷ சம்பவங்கள் நடைபெறும். அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு பதவிகள் தேடிவரும் காலமாக இந்த காலம் அமைந்துள்ளது. மக்களிடம் செல்வாக்கு பெறவும், எடுத்த காரியத்தில் வெற்றி பெறவும் முயற்சி செய்யுங்கள். வயிற்று வலி பிரச்சினைகள் நீங்கும். உடல்நலம் நன்றாகவும், சிறப்பாகவும் இருக்கும். இருந்தாலும் வாத, நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வர வாய்ப்பு இருக்கிறது. மருத்துவ செலவினம் இல்லாத காலமாகவே இருக்கும். பொதுவாக மறைந்திருந்த புண்ணியங்கள் மீண்டும் உங்களுக்கு கிடைக்கும். நக்ஷத்திர ரீதியான பலன்கள்: அசுபதி: உங்களுக்கு நல்ல பலன்கள், நல்ல முறையில் வந்து சேரும். பொருளாதார முன்னேற்றம், வழக்கு வியாஜ்ஜியங்களில் வெற்றி என நற்பயன்கள் வந்து சேரும் காலமிது. தாய்தந்தையரை வணங்கி எந்த காரியங்களையும் ஆரம்பியுங்கள், வெற்றிகளைக் குவிப்பீர்கள். அபபரணி: உத்தியோகத்தில் பதவிஉயர்வு, இடமாற்றம், பணியாளர்கள் ஆதரவு, மேல்மட்ட அதிகாரிகளின் ஆதரவு என நல்ல பலன்கள் ஏற்படும். சிறுசிறு பாதிப்புகள் வந்தாலும் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஸ்ரீ மஹாலக்ஷிமி காயத்ரி சொல்லி, வணங்கிவிட்டு காரியங்களை ஆரம்பியுங்கள். கிருத்திகா: நேரம் கிடைக்கும் போதெல்லாம் உழையுங்கள், அது ஒன்றே உங்களது பலம். அரசாங்க அனுகூல்யம் கிடைக்கும். தடைப்பட்ட சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். ஆடை அணிகலன்கள் சேரும். ஆதிதயஹ்ருதயம் சொல்லுங்கள். ஆதித்யனின் அருளால் அனைத்தும் நடக்கும். லக்ன ரீதியான பலன்கள்: [1] மேலே உள்ள டேபிளை எப்படி பயன்படுத்துவது? நீங்கள் மேஷ இராசியில் பிறந்து லக்னம் தெரிந்ததென்றால் அதற்குள்ள பலனைத் தெரிந்து கொள்ளவும். அதற்குள்ள பரிகாரத்தை தெரிந்து கொள்ளவும். உதாரணமாக, நீங்கள் மேஷ இராசியில் பிறந்து விருச்சிக லக்னத்தில் பிறந்தவரென்றால் உங்களுக்கு 65% சதவிகிதம் நல்ல பலன்கள் கிடைக்கும். மேலும் நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்: துர்ஹா ஸூக்தம் சொல்வது. எனக்கு லக்னமேத் தெரியாது என்பவர்கள் கந்த ஷஷ்டி கவசம் சொல்லாம். [2] இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம். நக்ஷத்திர வாரியாக சில பாய்ண்ட்ஸ்: அதிர்ஷ்டம் தரும் எண்களும், திசைகளும் ஜாதகத்திற்கு ஜாதகம் மாறும். இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுவானவையே. இன்றைய ஜோதிடக் குறிப்பு: சனி பகவானுக்குள்ள பரிகாரம் பல பேர் பல விதமாக சொல்கின்றனர். ஆனால் எங்களது ஜோதிட நிலையத்தின் ஸ்தாபகர் ப்ரும்மஸ்ரீ குப்பு ஜோஸ்யரவர்கள் கூற்றுப்படி காக்கைக்கு சாதம் வைப்பதே மிகச்சிறந்த பரிகாரம். மேலும் முன்னோர் வழிபாடும் மிக நன்மையைத் தரும். காக்கைக்கு சாதம் வைக்கும் முறை: [1] காலையில் குளித்து விட்டு தீபம் ஏற்றி முன்னோர்களை வணங்க வேண்டும். [பஞ்ச முக தீபமாக இருந்தால் நல்லது] [2] பச்சரிசி சாதம் + நெல்லிவிதையளவு எள் + 2 ஸ்பூன் நல்லெண்ணெய் + சிறு துண்டளவு வெல்லம் கலந்து வைக்கவும். குறிப்பு: சில நாடுகளில், சில இடங்களில் காக்கை இருப்பதில்லை, அங்கு நீங்கள் முன்னோர்களை வணங்கியபின் ஆற்றிலோ, குளத்திலோ, கிணற்றிலோ கரைத்து விடலாம். அடுத்ததாக ரிஷப இராசி பலன்களில் சந்திப்போம். நன்றி. அன்புள்ள இட்லிவடை வாசகப்பெருமக்களுக்கு எனது பணிவான வணக்கங்களையும், வாழ்த்துக்களையும் அடியேன் பெருங்குளம் இராமகிருஷ்ணன் தெரிவித்துக் கொள்கிறேன். முதலில் இந்த அரிய வாய்ப்பை வழங்கிய இட்லிவடைக்கு அந்த ஆதிசக்தியும், ஆதிபகவானும், ஸ்ரீ ஸாயியும் அருள் புரியட்டும்.
லக்னம் இராசி பலன்கள் பரிகாரம் மேஷம் மேஷம் 65/100 கந்த ஷஷ்டி கவசம் சொல்வது ரிஷபம் மேஷம் 80/100 திருப்பாவை படிப்பது மிதுனம் மேஷம் 60/100 விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது கடகம் மேஷம் 75/100 லலிதா த்ருசதி படியுங்கள் ஸிம்ஹம் மேஷம் 55/100 ஆதித்யஹ்ருதயம் சொல்வது கன்னி மேஷம் 50/100 விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது, முடிந்த வரை இராம நாமம் சொல்வது துலாம் மேஷம் 55/100 கந்த ஷஷ்டி கவசம் சொல்வது விருச்சிகம் மேஷம் 65/100 துர்ஹா ஸூக்தம் சொல்வது தனுர் மேஷம் 60/100 ஹனுமத் கவசம் சொல்வது மகரம் மேஷம் 75/100 கணபதி உபநிஷத் பாராயணம் கும்பம் மேஷம் 55/100 லலிதா த்ருசதி படியுங்கள் மீனம் மேஷம் 60/100 தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது லக்னமே தெரியாது மேஷம் 65/100 கந்த ஷஷ்டி கவசம் சொல்வது குறிப்பு:
* நக்ஷத்திரங்கள் பலன்கள் அசுபதி அபபரணி கிருத்திகா - 1ம் பாதம் இராசி மேஷம் மேஷம் மேஷம் இராசியாதிபதி செவ்வாய் செவ்வாய் செவ்வாய் நக்ஷத்திர அதிபதி கேது சுக்ரன் சூரியன் கணம் தேவகணம் மனுஷ்யகணம் இராக்ஷஸகணம் நாடி பார்ஸுவ - வலது மத்ய ஸமான - இடது மிருகம் ஆண் குதிரை யானை ஆடு பக்ஷி இராஜாளி காக்கை மயில் விருக்ஷம் எட்டி நெல்லி அத்திமரம் இரஜ்ஜு பாத இரஜ்ஜு தொடை தொப்புள், வயிறு வேதை நக்ஷத்ரம் கேட்டை அனுஷம் விசாகம் அதிர்ஷ்டம் தரும் எண்கள் 1, 2, 3, 9 2, 7, 5, 9 1, 2, 3, 9 அதிர்ஷ்டம் தரும் திசைகள் கிழக்கு தெற்கு கிழக்கு குறிப்பு:
நன்றி: பெருங்குளம் இராமகிருஷ்ணன்,
ஜோதிடர். [ முகவரி: rameshramky06.venkat@gmail.com ]
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, September 08, 2009
மேஷ இராசிக்குள்ள சனிப்பெயர்ச்சி பொது பலன்கள்
Posted by IdlyVadai at 9/08/2009 01:31:00 PM
Labels: ராசிபலன்
Subscribe to:
Post Comments (Atom)
36 Comments:
/**ரிஷபம் மேஷம் 80/100 திருப்பாவை படிப்பது **
மறுபடியும் திருப்பாவையா???
நல்ல முயற்சி. பாராட்டுகள். அடுத்த சனிப் பெயர்ச்சிக்குள் - எல்லா ராசிகளுக்கும் பலன் வெளியிடவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இதென்ன புதுசா ராசி பலன் எல்லாம்.
மொதல்ல நான் தான் - மேஷ ராசி - முழுவதும் படிச்சாச்சு - நன்றி.
நல்ல பதிவு.
Please give palan for Kumba rasi
Thanks.. Nanum Mesham than.. :). BTW where is Mr. Manasthan...?
Yean ippadi nallaathane poikittu irunthuthu
//கடகம் மேஷம் 75/100 லலிதா த்ருசதி படியுங்கள்//
லலிதா கோவிச்சுக்க மாட்டாங்களா?
Can you post for capricorn(MAKARA)also?
eppdi da count-a increase pandradhu-nu ukkandhu yosippengalo???
what happened to mAnasthan? can you ask rAmakrishnanji and publish..
@@@@@@@@@@@@
சனிப்பெயர்ச்சி பொது பலன்கள்
@@@@@@@@@@@@
எனது பள்ளி பருவத்தில் எழுந்த வினா(Before 15 years)
Q1: சனியை கண்டு பயப்படும் ஹிந்துவை மட்டும் தன் சனி பாதிக்குமா ?
(அல்லது)
முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், பார்சிகள்... போன்ற பல்வேறு இனமக்களையும் பாதிக்குமா ?
அனைவரும் பாதிக்கப்படுவர் என்றால்...
இந்த பெயர்ச்சியை கண்டுகொள்ளாத அமெரிக்கனும் ரஷ்யனும் நன்றாக தானே மகிச்சியாக வாழுந்து வருகின்றனர் !!!
Q2:
மனமது செம்மையானால் மந்திரஞ் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே(அகத்தியர்)
அகத்தியர் என்ன சொல்கிறார் ?
சனிப்பெயர்ச்சி பலன்கள் கண்டு பயப்படு என்ற சொன்னார் ?
மனதை செம்மையாக்கு என்று தானே சொன்னார்.
உள்ளம் பெரும் கோவில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளித் தெளிவார்க்குச் சீவன் சிவலிங்கம்(திருமூலர்)
//உள்ளம் பெரும் கோவில் - மனதை சுத்தமா வைக்க
//ஊனுடம் பாலயம் - Body is the temple, so keep it healthy.
//தெள்ளித் தெளிவார்க்குச் சீவன் சிவலிங்கம் - Treat all Living things(Includes Human) as SivaLinga
முதியோர்(அகத்தியர்,திருமூலர்)சொல்லும் முதுநெல்லியும் முன்பு கசக்கும், பின்பு இனிக்கும்.
Learn பஞ்சபூத நவக்கிரக தவம் in any one SKY(வாழ்க வளமுடன்) centers to get TRUE BENEFIT from பஞ்சபூதம் and நவக்கிரகம்.
ஏற்கனவே ஹிட் கவுன்டர் எகிறும்... இனிமே கேக்கனுமா?
/**எனது பள்ளி பருவத்தில் எழுந்த வினா(Before 15 years)
Q1: சனியை கண்டு பயப்படும் ஹிந்துவை மட்டும் தன் சனி பாதிக்குமா ?**/
கிரக அமைப்புகளை தெய்வத்தின் பெயர் சொல்லி அழைப்பது ஒரு நன்னெறிப்படுத்தும் முயற்சியே!!! சனி பெயர்ச்சி என்பது சனி கோளின் நிலை மாற்றம் அந்த நிலைகளின் பெயர் மேசம், ரிசபம்.... இசையில் ச (ஷட்ஜம் அல்லது குரல்), ரி(ரிஷபம் அல்லது துத்த்ம்) , க(காந்தாரம் அல்லது கைக்கிளை).... என்பது போல என கொள்ளலாம், எல்லாம் ஒரு முறையாக ஒழுங்குப்படுத்த அவ்வளவே!!! ஏதோ நாம் அரைகுறையாக அறிவியல் படித்து பரிட்சை பாஸ் செய்து விட்டோம் என்ற எண்ணத்தில் இந்த மாதிரி கேள்விகள் எழும், அதை ஒரு வரி விடையில் விளக்க முடியாது... ஒரு 12 வோல்ட் மின்சாதனத்தில் வரும் மின்காந்த அலைகள் நமது உறுப்புகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் போது (புற்றுநோய் செல்களை அழிக்கிறது, நரம்பு செல்களை அழிக்கிறது, நிலவின் ஈர்ப்பு சக்தியால் பௌர்ணமி அன்று கடலில் அலை மாறுபடுகிறது) சனி கோளின் நிலை உலகில் உள்ள உயிரினங்களை பாதிக்காது என்கிறீர்கள்... நல்லது! இதையும் ஒரு வெள்ளைக்காரன் சொன்னால் நாம் வாய் பிளப்போம்!
Can I expect - Weekly Rasi Palan; Daily Predictions; Raghu - Gethu - Ghuru - Saturn - Peyarchi Palangal - Jathaga Poruththam, - Parikarangal for evil effects - Vaasthu Sasthram - Agasthiyar Nadi Jothidam - Pallli Sol; Palangal -Kili Jothisham - Eli Jothisham etc, etc,,, would also to be continued? Very Good - Keep it up -
Panchanaga Sastrigal
”எனது பள்ளிப் பருவத்தில் எழுந்த வினா” அனுப்பிய அனானிக்கு, சரியான பதில் அளித்த இன்னொரு அனானிக்குப் பாராட்டுக்கள்.
”இதையும் ஒரு வெள்ளைக்காரன் சொன்னால் நாம் வாய் பிளப்போம்” - மிகவும் சரி.
ராஜ சுப்ரமணியன்
Enna achu idly vadaikku. What is the use of this post?
எல்லா பத்திரிக்கையும் ஜோசிய பக்கங்களை காண்ட்ராக்ட்க்கு விட்டு காசு பார்க்கறாங்க. இ.வ எவ்வளவு எதிர்பார்க்கிறார்? பேசாமே 'ஓப்பன் டெண்டர்' விட்டுறலாமே!
//எல்லா பத்திரிக்கையும் ஜோசிய பக்கங்களை காண்ட்ராக்ட்க்கு விட்டு காசு பார்க்கறாங்க. இ.வ எவ்வளவு எதிர்பார்க்கிறார்? பேசாமே 'ஓப்பன் டெண்டர்' விட்டுறலாமே!//
டகிள் பாட்சா உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா ? matrimonial கூட ஆரம்பிக்கலாம் என்று இருக்கேன்.
"matter-moan-இயல்" கூட ஆரம்பிக்காலாம்... உம்ம blog.. உம்ம இஷ்டம்..
but, i think everyone likes to read astrology stuff but pretend to be aloof, so far this issues are concerned...
AMR beraved - was a 'news' i heard this evening in Nanganallur. I thought idly-vadai would have brought out some more insight into this.
Any news?
Would you be covering the other 'Raasis' as well?
When?
இ.வ
ஐயையோ! நா எதோ சும்மணாங்காட்டியும் சொன்னா, ரோசத்தில வரிசையா Matrimonial, Auction, Classified எல்லாம் ஆரம்பிச்சிடுவீங்க போலிருக்கே!
//kggouthaman said...
நல்ல முயற்சி. பாராட்டுகள். அடுத்த சனிப் பெயர்ச்சிக்குள் - எல்லா ராசிகளுக்கும் பலன் வெளியிடவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.//
ஆஹா... ஒரு வார்த்தை சொன்னாலும், திருவார்த்தையா சொன்னார் கௌதமன் அண்ணா....
பின்னீட்டேள் போங்கோ...
ஆமாம்... இட்லிவடை என்ன ராசி??
ராமகிருஷ்ணன் கிட்ட சொல்லி, மானஸ்தன் எங்கே இருக்கார்னு கண்டுபிடிக்க சொல்லுங்கோ மொதல்ல....
கச்சேரி வர வர களையே கட்டறதில்லையே சுவாமி....
கோபி தம்பி,
இ வ பிறந்த தேதி - நேரம் (முதல் பதிவு) வைத்துப் பார்க்கையில் - இ.வ - அனுஷ நட்சத்திரம், விருச்சிக ராசி என்று தெரிகிறது. எல்லோரையும் கொட்டிவிட்டு, ஓடிப் போய் முகமூடிக்குள் ஒளிந்து கொள்வதால் அது உறுதியாகிறது! - 'அவர்' வேறு ஒரு முகமூடி அணிந்து கொண்டு விட்டார் என்று நினைக்கிறேன் - எங்கிருந்தாலும் வாழ்க; எப்படியிருந்தாலும் வாழ்க!
கேள்வி: சனியை கண்டு பயப்படும் ஹிந்துவை மட்டும் தன் சனி பாதிக்குமா ?
பதில்: உலகத்தில் உள்ள அனைவரையும் சனி பாதிக்கத்தான் செய்யும். அமேரிக்காகாரனும், ரஷ்யாகாரனும் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்றால் அங்கே ஏன் அவ்வளவு குழப்பம்?
---------------------------------------------------------
கேள்வி: தெள்ளித் தெளிவார்க்குச் சீவன் சிவலிங்கம்(திருமூலர்)
பதில்: தெள்ளத் தெளிந்தார் - இன்பத்தை இன்பமாகவும் துன்பத்தை துன்பமாகவும் கருதாதவர்கள். நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதனை யோசித்துப் பாருங்கள்.
---------------------------------------------------------
பெருங்குளம் இராமகிருஷ்ணன்,
ஜோதிடர்.
//சனி பெயர்ச்சி என்பது சனி கோளின் நிலை மாற்றம் அந்த நிலைகளின் பெயர் மேசம், ரிசபம்....
@@@@@@@@@@@@@
Most of us were unaware of simple fact behind the stars and Rasi.
@@@@@@@@@@@@@
Answer: All the stars in this Whole Universe were divided in 12 Rasi.(Done this before 1000 years by Indians).
//சனி கோளின் நிலை உலகில் உள்ள உயிரினங்களை பாதிக்காது என்கிறீர்கள்...
Who said from Sani, Rays won't reach body in earth. It will come to all if we wish or not. Each Planets have its own wave, reaching all of us. No need to afraid of it(No Americans/Russians Afraid of Planet waves). Think Sani as good planet and you will receive only good waves from that planet.
My question is that by reading Sani Peyarchi is there any use ..?
Ans:If we do good to ourselves and others, then at any time you will receive only good rays form all planets and stars.
Its also called Dharmam/Puniyam.(தர்மம்/புண்ணியம்)
//இதையும் ஒரு வெள்ளைக்காரன் சொன்னால் நாம் வாய் பிளப்போம்!
A:If you open your mouth its your wish.
நமது முன்னோர்கள் மிகவும் திறமை/ அறிவுக் கூர்மையுடன் வாழ்ந்தவர்கள்.(Before 1000 of years back they calculated about the planets/Universal secrets.(Present developed country Ancestors lived in caves... while our Ancestors found the universal secrets !!!)
India well RICH in Culture/Astrology/Wealth before 1000 of years itself. so only from all parts of world, they searched for India.(Read the whole Indian History)
If you need more to know about the secrets behind Temple/Universe/Planets get it cleared from someone who knows well(Only Rare know about that !!!)
will continue in the name of RAM from next posting...
/*** Anonymous said...
//சனி பெயர்ச்சி என்பது சனி கோளின் நிலை மாற்றம் அந்த நிலைகளின் பெயர் மேசம், ரிசபம்....
@@@@@@@@@@@@@
Most of us were unaware of simple fact behind the stars and Rasi.
@@@@@@@@@@@@@
Answer: All the stars in this Whole Universe were divided in 12 Rasi.(Done this before 1000 years by Indians).
will continue in the name of RAM from next posting...**/
What do you want to convey from your comment to the others? I did not ask any question to anybody. Just i added my view about the astrology.That might not be true or not!! and that is my perception.
//பதில்: உலகத்தில் உள்ள அனைவரையும் சனி பாதிக்கத்தான் செய்யும்.
RAM பதில்: சனி என்பது ஒரு ஆற்றல் மிக்க பெரும் கோள்.நீங்கள் சனியில் இருந்து வரும் அலைகள் பாதிக்கத்தான் செய்யும் என்று கற்பனை செய்தால் அது என் தவறு இல்லை.(Be More optimistic than pessimistic)
//தெள்ளத் தெளிந்தார் - இன்பத்தை இன்பமாகவும் துன்பத்தை துன்பமாகவும் கருதாதவர்கள். நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதனை யோசித்துப் பாருங்கள்.
RAM பதில்: நீங்கள் அந்த நிலையில் இல்லை என்றல் எவரும் இல்லை என்று பொருளா ?
(Can you bet me: Will show thousands of people in that stage in Vethathirium, Let me be the first example)
//”இதையும் ஒரு வெள்ளைக்காரன் சொன்னால் நாம் வாய் பிளப்போம்”
RAM பதில்: Indian's are far better than any other people in this world. But Modern Indians unknowing of our value behave like that !!!
(Now a days Foreign People learn what we practice 1000 years before like YOGA,Meditation etc)
OUR People like Manada Mayilada and any-time-rush Tasmark Wine Shop(Huge income to Government !!!) and post their comments here.
/***RAM பதில்: சனி என்பது ஒரு ஆற்றல் மிக்க பெரும் கோள்.நீங்கள் சனியில் இருந்து வரும் அலைகள் பாதிக்கத்தான் செய்யும் என்று கற்பனை செய்தால் அது என் தவறு இல்லை.(Be More optimistic than pessimistic)**/
No body is going to push you. Its upto you!Thanks for your suggestion!!
நட்சத்திரம், விருச்சிக ராசி என்று தெரிகிறது. எல்லோரையும் கொட்டிவிட்டு, ஓடிப் போய் முகமூடிக்குள் ஒளிந்து கொள்வதால் அது உறுதியாகிறது! - 'அவர்' வேறு ஒரு முகமூடி அணிந்து கொண்டு விட்டார் என்று நினைக்கிறேன் //
"அவரைப் போல ஒருவர்" உண்டா? :)
//No body is going to push you. Its upto you!Thanks for your suggestion!!
@@@@@
Not giving any suggestions my friend, its simple truth.
@@@@@
Some fill their pockets by threatening in the name of Peyarchi etc
வழிபாடு அனைத்தும் மனதை ஒருமை நிலைக்குக் கொண்டு வரவும், உயர்த்தவும், வாழ்வில் ஒற்றுமை, ஒழுக்கம், ஈகை, அன்பு, இவற்றை வளர்க்கவும், பொதுமக்களுக்கு ஏற்ற உள பயிற்சி முறையே ஆகும். பக்தி வழியில் இவையெல்லாம் அவசியமே. பக்தி வழியிள்ளது போனால் சிறு குழந்தை முதல், சிந்தனை ஆற்றல் பெருகும் வரைக்கும், மனிதன் நல்ல செயல்களிலேயே பழக்கம் பெற, தீய செயல்களிருந்து விடுபட வழிஇல்லை.
ஆயினும் பக்தி வழி மூலம் மகளைச் சிலர் ஏமாற்றுவதும், அவர்களிடம் பொருள் சுரண்டுவதும் பெருகி விட்டதால் இக்காலத்தில் பக்தி வழி பரிகாசத்திற்குட்பட்டு விட்டது.
//No body is going to push you. Its upto you!Thanks for your suggestion!!
@@@@@
Not giving any suggestions my friend, its simple truth.
@@@@@
Some fill their pockets by threatening in the name of Peyarchi etc
வழிபாடு அனைத்தும் மனதை ஒருமை நிலைக்குக் கொண்டு வரவும், உயர்த்தவும், வாழ்வில் ஒற்றுமை, ஒழுக்கம், ஈகை, அன்பு, இவற்றை வளர்க்கவும், பொதுமக்களுக்கு ஏற்ற உள பயிற்சி முறையே ஆகும். பக்தி வழியில் இவையெல்லாம் அவசியமே. பக்தி வழியிள்ளது போனால் சிறு குழந்தை முதல், சிந்தனை ஆற்றல் பெருகும் வரைக்கும், மனிதன் நல்ல செயல்களிலேயே பழக்கம் பெற, தீய செயல்களிருந்து விடுபட வழிஇல்லை.
ஆயினும் பக்தி வழி மூலம் மகளைச் சிலர் ஏமாற்றுவதும், அவர்களிடம் பொருள் சுரண்டுவதும் பெருகி விட்டதால் இக்காலத்தில் பக்தி வழி பரிகாசத்திற்குட்பட்டு விட்டது.
/*** Anonymous said...
//No body is going to push you. Its upto you!Thanks for your suggestion!!
@@@@@
Not giving any suggestions my friend, its simple truth.
@@@@@
Some fill their pockets by threatening in the name of Peyarchi etc**/
Once again thanks for your comments!! But i strongly beleive that the plantary positions will affect all the living and non living things in the universe.
//ஆமாம்... இட்லிவடை என்ன ராசி??//
கும்பலா இருக்காய்ங்கல்ல...அதனால கும்ப ராசி.
@@@@@@@@@@@@
Astrology and all these mystical things are generally signs of a weak mind; therefore as soon as they are becoming prominent in our minds, we should see a physician, take good food, and rest(Vivekananda)
@@@@@@@@@@@@
Post a Comment