பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, September 01, 2009

இட்லிவடை கடிதங்கள்

சற்று முன் கிடைத்த கடிதம்...

வணக்கம் இட்லிவடை,
நான் உங்கள் வலை தளத்தின் தொடர் வாசகன். நீண்ட நாட்களாக படித்து வருகிறேன். உங்கள் வலைத்தளத்தை ஒரு வலைத்தளமாக நினைத்து படிப்பதில்லை அதை ஒரு செய்தி தளமாக அல்லது அரசியல் செய்தி தளமாக நினைத்து படிக்கிறேன். சமீபமாக உங்கள் பின்னூட்ட பகுதி தட்ஸ்தமிழ் பின்னூட்ட பகுதியை போல மாறி வருகிறது, பல கேவலமான பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படுகிறது. உங்களுக்கு என்று இருக்கும் ஒரு மரியாதையை இது குறைக்கிறது. அனைவரையும் போல நீங்களும் மாறி விட்டீர்கள் என்பது வருத்தம் அளிக்கிறது. உங்கள் மீது ஒரு சில விசயங்களில், கருத்துக்களில் எனக்கு வருத்தம் உண்டு, ஆனால் அனைவரையும் திருப்தி படுத்தும் படி எழுத முடியாது என்பதும் எனக்கு தெரியும் எனவே அது குறித்து நான் கவலைப்படவில்லை. காரணம் நிதர்சனத்தை நான் அறிவேன். ஆனால் பின்னூட்ட மட்டுறத்தல் என்பது உங்கள் கையில் தான் உள்ளது, நீங்களும் ஹிட்ஸ் க்காக இதை போல செய்கிறீர்கள் (நீங்கள் திரட்டிகளில் இணைக்கவில்லை எனபதை ஒரு காரணமாக கூற மாட்டீர்கள் என்று நம்புகிறேன்) அல்லது மேலும் பிரபலமாக இதை போல செய்கிறீர்கள் என்ற எண்ணம் வருவதை தவிர்க்க முடியவில்லை. எவனோ அடித்துகிடட்டும் நமக்கு என்ன என்கிற மனோபாவனையே தெரிகிறது. இதனாலே தற்போது உங்கள் தளத்தில் பின்னூட்டம் இடும் ஆர்வம் எனக்கு குறைந்து விட்டது. என்னை போன்றவர்கள் சிலர் இருக்கலாம். கருத்து தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உண்டு அதை வெளியிட உங்களுக்கும் பொறுப்பு உண்டு, மாற்று கருத்துக்களாக இருந்தாலும் நமக்கு பிடிக்கவில்லை என்றாலும் மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டியது அவசியம். ஆனால் அதே சமயம் கருத்து சுதந்திரம் என்கிற பெயரில் கீழ்த்தரமான பின்னூட்டங்களை அனுமதிப்பதை என்னால் ஒரு வாசகனாக ஏற்று கொள்ள முடியவில்லை. மேற்கூறியவை யாவும் என் எண்ணங்களே என் சொந்த கருத்துக்களே ..இது உங்கள் தளம் உங்கள் விருப்பம் இதை யாரும் கட்டுப்படுத்தவும் முடியாது கட்டுப்பாடு விதிக்கவும் முடியாது. எனவே யோசித்து உங்கள் மனசாட்சிக்கு எது சரி என்று படுகிறதோ அதை செய்யுங்கள். ஒரு வாசகனாக சுட்டி காட்ட வேண்டியது என் கடமையாக நினைக்கிறேன். புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்
அன்புடன்
[ edited ]


அன்புள்ள [edited],

கடிதத்துக்கு பதில் சொல்ல ஆசை தான், ஆனால் நான் பெரிய எழுத்தாளன் இல்லையே என்ன செய்ய. அதனால் நீங்க சொல்லுவது போல், ஒழுங்காக மாடரேட் செய்யப் பார்க்கிறேன். உங்க அலோசனைக்கு நன்றி. அதே போல் கமெண்ட் போடுபவர்களும் உங்க அறிவுரையை கடைப்பிடித்தால் கடை நடத்துவது சுலபம்.
இவ


ஒரே ஒரு கடிதம் தான் இருக்கு இருந்தலும் 'கடிதங்கள்' என்று தலைப்பு வைப்பதில் ஒரு அல்ப சந்தோஷம்.



24 Comments:

Anonymous said...

@கடிதம் எழுதிய இவ வாசகர்.
நல்ல கருத்துகள். நன்றி, சக வாசகர்கள் சார்பாக.
***************************************************

///அதே போல் கமெண்ட் போடுபவர்களும் உங்க அறிவுரையை கடைப்பிடித்தால் கடை நடத்துவது சுலபம். ///

@இட்லிவடை
less tension more work. less பின்னூட்டம், less work.

தங்கள் அறிவுரையை ஏற்று இனி நான் இட்லிவடையில் "குரைப்பதைக்" குறைத்துக் கொள்கிறேன்/நிறுத்திக் கொள்கிறேன்.

:-D

நன்றி.

Anonymous said...

Very good advice at correct time. Please moderate all the comments.

Anonymous said...

I feel the same.

கௌதமன் said...

நான் நெனச்சேன்; அவரு சொல்லிட்டாரு. ஆமாம் - பின்னோட்டம் இடுபவர்கள், Unparliamentary வார்த்தைகள் வராமல் பார்த்துக் கொண்டால் நல்லது. அப்போதான் "இட்லி வடை - கண்ணியமானவர்கள் கணனியில் காணப்படும் வலைப் பதிவு" என்ற சந்தோஷம் நமக்கு ஏற்படும்.

கிருஷ்ண மூர்த்தி S said...

/ஒரே ஒரு கடிதம் தான் இருக்கு இருந்தலும் 'கடிதங்கள்' என்று தலைப்பு வைப்பதில் ஒரு அல்ப சந்தோஷம்./

இவ, இதுக்குல்ல மஞ்சத் துண்டு...பெயிண்ட் அடிச்சுருக்கணும்?

இட்லி ஆறிப்போச்சு, அதன் மேல கொதிக்கிற சாம்பாரை ஊத்தி, சூடா இட்லின்னு சொல்ற வேலையெல்லாம் வேண்டாம்னு நானும் இந்தப் பின்னூட்டக் கடிதத்தின் வழியாகக் கேட்டுக் கொள்கிறேன்!

கௌதமன் said...

கந்தசாமி 5.5/10, ஸ்ரேயா 8/10 !
பலராமரே! அப்பிடீன்னா விக்ரம்
minus (2.5) ?

Unknown said...

மானஸ்தன்
பெயருக்கு ஏற்ற பின்னூட்டம்
உங்களுக்கு மானம் இருக்கு என்று நிரூப்பித்துக்காட்டுங்கள்

Unknown said...

அண்ணன் மானஸ்தன் என்னைக்கு பின்னூட்டம் இடுகிறாரோ அன்னைக்குத்தான் நான் பின்னூட்டம் இடுவேன்

புலிகேசி said...

உங்களுக்கு என்று இருக்கும் ஒரு மரியாதையை இது குறைக்கிறது.
நான் நெனச்சேன்; அவரு சொல்லிட்டாரு.

kiram said...

ஒரே கடிதத்தை பல விண்டோக்களில் திறந்தால் அது பல கடிதங்களாகும் !

Krish said...

ஸ்ரேயா 10/10 ....இட்லிவடையின் அதிக பட்ச மதிப்பெண்???

மஞ்சள் ஜட்டி said...

கடிதம் எழுதியவர் சரியா தான் சொல்லி இருக்கார்...

சீனியர் வலை புலி, வலையுலக ராஜ...அப்படின்னு பெருமை பீத்திகிட்டு தினமும் மொக்கை பதிவுகளை போடும் சில பல பதிவர்களுக்கு இணையாக "இட்லிவடை"யும் (எச்சை இலைக்கு எதிர் இலை போடுவது போல்) எழுதியும் ...அர்த்தமில்லாத "அனானி" பின்னூட்டங்களை அனுமதித்தும், தானே சில சமயம் "அனானி" பெயரில் பின்னூட்டம் போடுவதையும்...(???) குறைத்துக்கொண்டு, வழாக்கம் போல் சூடான அரசியல் நக்கல், நையாண்டிகளை தொடர்வது சால சிறந்தது...

- நன்றி...

Rahul said...

எனக்கு என்னவோ நம்பிக்கை இல்லை, இதுவும் கூட இட்லிவடையின் வேலையாக இருக்கும் என்று நினைக்கிறேன்!!

அணானி பெயரில் வரும் நல்ல பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படவேண்டியவை என்பது என் தாழ்மையான கருத்து!!

Rahul said...

தனிநபர்களை கிண்டல் செய்யும் நோக்ககத்தில் தயவு செய்து பதிவு போடாதீர்கள், அதுதான் பின்னூட்டங்களில் அன்ல் தெறிக்க வைக்கிறது என்று நினைக்கிறேன்.

Vilvarani said...

vilvarani said
பசித்தால் பணத்தையா சாப்பிடமுடியும் . எல்லோரும் இதை புரிந்துகொண்டால் புரட்சி
தேவை இல்லை

Anonymous said...

@@@@@
Please leave Anonymous comments, others wise will quit IdlyVadai ...
@@@@@

BY
HUMAN

ராமகிருஷ்ணன் said...

அன்புள்ள இட்லிவடை,
நான் ராமகிருஷ்ணன்,ஜோதிடர்.
தங்களை அமுதப்ரியன் அறிமுகப்படுத்தினார். நான் உங்களது வலைத்தளத்துக்காக 12 இராசிகளுக்குண்டான சனிப் பெயர்ச்சி பலன்கள் எழுதிக் கொண்டிருக்கிறேன். முற்றிலும் மாறுபட்ட முறையில் தயாரித்துக் கொண்டிருக்கிறேன். லக்ன ரீதியாக, திசை ரீதியாக தயாரிப்பதால் தாமதமாகிறது. 6ம் தியதி முதல் 2 நாட்களுக்கு ஒரு முறை ஒவ்வொரு இராசிக்கும் பலன்களை தங்களுக்கு அனுப்பி வைப்பேன்[With Pictures]. நமது இட்லிவடை வாசகர்களுக்காக நான் இதற்கு கடமைப்பட்டுள்ளேன்.
நன்றி.
இராமகிருஷ்ணன்.
பெருங்குளம்.
தூத்துக்குடி மாவட்டம்.

IdlyVadai said...

இராமகிருஷ்ணன்,

என்ன வெச்சு காமடி கீமடி ஒன்னும் பண்ணலையே?

Balu said...

/***Anonymous said...
@@@@@
Please leave Anonymous comments, others wise will quit IdlyVadai ...
@@@@@

BY
HUMAN
**/

பெயர் போட்டு பின்னூட்டம் போட்டால் அவைகள் எல்லாம் புரட்சிகரமான கருத்துகளாகிவிடுமா???? அடக் கடவுளே!!!


/***பின்னோட்டம் இடுபவர்கள், Unparliamentary வார்த்தைகள் வராமல் பார்த்துக் கொண்டால் நல்லது. ***/

I agree this!!!

Anonymous said...

அய்யா ராசாக்களே.... இது இட்லி வடை தனக்குத்தானே எழுதிக் கொண்ட கடிதம் தான் ... கூடவே கொஞ்சம் சட்னி சாம்பார் சேர்த்து... அவ்வளவுதான்...?????

Anonymous said...

எல்லாம் உடான்ஸ் .....யாரும் நம்பாதீங்கோ!!!!

Erode Nagaraj... said...

அனானி, உடான்ஸ்னா இன்னாபா? லியனார்டோ டிக்காப்ரியோவும் கேட்வின்ஸ்லெட்டும் ஆடுவாங்களே wood-dance... அதுவா? மெய்யாலுமா?

Anonymous said...

/***Erode Nagaraj... said...
அனானி, உடான்ஸ்னா இன்னாபா? லியனார்டோ டிக்காப்ரியோவும் கேட்வின்ஸ்லெட்டும் ஆடுவாங்களே wood-dance... அதுவா? மெய்யாலுமா?**/

இன்னாபா நீ மெட்ராஸ்ல குந்திக்கீனு உடான்ஸ்னா இன்னானு தெரியலனு உடான்ஸ் உடுறீயேபா படா ஸோக்காகீது பா ஒன் பேச்சு ஆனா ஏதோ வாய்ல நுழையாத வார்த்தைல பேசூரியா ஒண்ணுமே புரியலபா!!

நாகு (Nagu) said...

எனது கோரிக்கை: உங்கள் தளத்தில் வலது பக்கம் இருக்கும் குப்பைகளில் அனைத்திற்கும் மேலே ஊசிப்போனவைகளை(archives) வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். ஒவ்வொரு முறையும் ஸ்க்ரோல்பாரில் வழுக்கி வழுக்கி மௌஸ் புண்ணாகிறது :-)