பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, September 12, 2009

கடக இராசி பலன்கள்


கடக இராசிக்குள்ள சனிப்பெயர்ச்சி பொது பலன்கள்

"Cancer is Sensitive" என்பதற்கேற்ப எதிலும் துடிப்புடனும், ஈடுபாட்டுடனும் ஈடுபடும் கடக இராசி வாசகர்களே! எளிதில் உணர்ச்சிவசப்படுபவ்ர் நீங்கள். உங்கள் கடமையிலும், காரியத்திலும் கண்ணாக இருப்பீர்கள். சோம்பலை விரும்ப மாட்டீர்கள். எந்த வேலையையும் முதல் முறையிலேயே முடிக்க வேண்டும் என நினைப்பவர்கள் நீங்கள். கொஞ்சம் சந்தேகப்புத்தி(Detective Mind) உடையவர்கள் நீங்கள்.

எப்படி இருக்கப் போகிறது இந்த சனிப் பெயர்ச்சி:

இது வரை உங்களது தன, வாக்கு, குடும்பஸ்தானமான இரண்டாம் வீட்டில் அமர்ந்து சோகம், குழப்பம், மனஉளைச்சல் என உங்களின் பொறுமையை சோதித்த சனீஸ்வரன் இனி மூன்றாம் ஸ்தானத்தில் இருந்து வரும் 21/2 ஆண்டுகளுக்கு என்னென்னெ பலன்கள் தரப்போகிறார் என்பதைப் பார்ப்போம்.

ஏழரை வருடம் போதும் போதும் என்றாகி விட்டதா? நீங்கள் வாயைத் திறந்தாலே தவறு என்றிருந்த நிலை மாறுகிறது. எதிர்ப்புகள் மறையும். குடும்பத்தில் இருந்த சண்டை, சச்சரவுகள் நீங்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். கொடுத்த வாக்கை நிறைவேற்றும் காலம் வந்துவிட்டது. சொத்துப் பிரச்சனைகள் நீங்கும். தாயார், தாய் வழி உறவினர்களிடம் நெருக்கம் ஏற்படும். தாயார் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வாகனம் வாங்கும் கனவு நினைவாகும். பழைய வாகனத்தை விற்று புதிய வாகனம் வாங்குவீர்கள். பழைய வீட்டை புதுப்பித்துக் கொள்வீர்கள். சிலருக்கு புதிய வீடு வாங்கும் யோகம் உண்டு. கடன் பிரச்சினை நீங்கும். வழக்கு வியாஜ்ஜியங்களில் உங்களுக்கு வெற்றி ஏற்படும். உங்களை பற்றிய விமர்சனங்கள் அகலும். பிரச்சனைகள் நீங்கும். உங்களிடம் பேசவும், பழகவும் யோசித்த பலர் இனி வலிய வந்து பேசுவர், பழகுவர். உங்களைப் பற்றிய தவறான எண்ணங்கள் நீங்கும். அவமானம் நீங்கி வெகுமானம் கிடைக்கும். அலைச்சல், அல்லல் குறையும். பல விழாக்களுக்கும் முன்னின்று நடத்தும் பாக்கியம் வந்துவிட்டது.சந்தான பாக்கியம் இல்லாதவர்களுக்கு சந்தான பாக்கியம் கிடைக்கும். உங்களின் குழந்தைகள் கெட்ட பழக்க வழக்களிலிருந்து விடுபடுவார்கள். கடந்து போன திருமணம் இனிதே நடைபெறும். தொல்லை தந்த நோய்கள் எல்லாம் நீங்கி இன்பம் பிறக்கும். நண்பர்களிடம் இருந்த மனக்கசப்பு நீங்கும். புது வாகன சேர்க்கை உண்டு. புதிய நண்பர்கள் கிடைப்பர். பிரபலங்களது நட்பு கிடைக்கும். பெரிய பதவிகளுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் இருந்து வந்த போட்டி, பொறாமை நீங்கும். பார்ட்னரிடம் இருந்து வந்த கருத்து மோதல் நீங்கும். உத்தியோகத்தில் இருந்து வந்த தடங்கல்கள் நீங்கும். உங்கள் கீழ் வேலை பார்ப்பவர்கள் உங்கள் சொல்படி நடப்பார்கள். பிரிந்த சென்ற உறவுகள் ஒன்றுசேர்வர். கம்ப்யூட்டர், முலிகை, விவசாயம் சம்பந்தப்பட்ட தொழில்கள் லாபம் தரும். சம்பளம் கூடும். உயர் கல்வி கிடைக்கும். பணியில் நிரந்தரம் ஏற்படும். உத்தியொகம் தொடர்பாக வெளிநாட்டு பயணம் உண்டு. பெற்றோர்களுக்கு பாரமாக இல்லாமல் நல்ல வேலை கிடைக்கும். சலுகைகள் நிரம்ப கிடைக்கும். இதுவரை இருந்து வந்த மந்தபுந்தி, மறதி ஆகியவை நீங்கும். மாணவ மாணவிகளே அதிக மதிப்பெண்கள் எடுக்கும் காலம் வந்து விட்டது. விருதுகள், பரிசுகள் கிடைக்கும். உங்களுக்கும் அங்கீகாரம் கிடைக்கும். கடன் பெறுவதில் இருந்த சிக்கல்கள் நீங்கும். மொத்தத்தில் மந்த வளர்ச்சி மாறி அசுர வளர்ச்சி ஏற்படும்.

நக்ஷத்திர ரீதியான பலன்கள்:

புனர்பூசம் 4: சொத்துக்களில் மூலம் செலவுகள் நேரலாம். குடும்பத்தில் கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும் உங்கள் கருத்து ஏற்கப்படும். பெரிய முதலீடுகளில் ஈடுபடும்போது தகுந்த நபரிடம் ஆலோசனை பெற்று செய்யவும். சூடு, நரம்பு சம்பந்தப்பட்ட உடல் உபாதைகள் ஏற்படலாம். எச்சரிக்கை. குரு பகவானை நினைத்து எதையும் ஆரம்பித்தால் எதிலும் வெற்றிதான்.

பூசம்: உங்களுக்கு நெருக்கமானவர்களே உங்களுக்கு துரோகம் செய்யும் நிலையிருந்து மாற்றம் வந்துவிட்டது. வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்து போங்கள். பணப்பற்றாக்குறை இன்றி இருக்க சியாமளா தண்டகம் படியுங்கள்.

ஆயில்யம் : உத்தியோகத்தில் இடமாற்றம், பணிஉயர்வு உண்டு. எதிர்பாராத செலவினம் ஏற்படலாம். கூட்டுத்தொழிலில் ஈடுபடுபவர்கள் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும்.

லக்ன ரீதியான பலன்கள்:

லக்னம் இராசி பலன்கள் பரிகாரம்
மேஷம் கடகம் 65/100 சௌந்தர்யலஹரி சொல்வது.
ரிஷபம் கடகம் 70/100 ஸ்ரீ மன் நாராயணீயம் சொல்வது.
மிதுனம் கடகம் 60/100 கணபதி பூஜை மற்றும் விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது,மகான்களை வழிபடவும்
கடகம் கடகம் 70/100 புருஷ ஸூக்தம், நாராயண ஸூக்தம், விஷ்ணு ஸுக்தம் சொல்வது மற்றும் அம்மன் வழிபாடு
ஸிம்ஹம் கடகம் 60/100 ஆதித்யஹ்ருதயம், மஹாலக்ஷிமி காயத்ரி, ஹனுமத் காயத்ரி சொல்வது
கன்னி கடகம் 60/100 விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது, முடிந்த வரை இராம நாமம் சொல்வது, மகான்களை வழிபடவும்
துலாம் கடகம் 60/100 கணபதி காயத்ரி, நவக்ரஹ மூலமந்த்ரம் சொல்வது, துர்க்கா ஸூக்தம் சொல்வது.
விருச்சிகம் கடகம் 70/100 கணபதி பூஜை மற்றும துர்ஹா ஸூக்தம் சொல்வது, முடிந்த வரையில் அம்பாள் நாமாவை சொல்வது.
தனுர் கடகம் 65/100 துர்க்கா மூலமந்த்ரம் மற்றும் சியாமளா தண்டகம் சொல்வது, ஹனுமத் கவசம் சொலவது.
மகரம் கடகம் 65/100 கணபதி வழிபாடு மற்றும் குலதெய்வ வழிபாடு செய்வது.
கும்பம் கடகம் 60/100 லலிதா ஸகஸ்ரநாம பாராயணம் மற்றும் மூகபஞ்சக சதீ சொல்வது, தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது.
மீனம் கடகம் 60/100 தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது மற்றும் துர்க்கா காயத்ரி சொல்வது, வீட்டிலுள்ள முன்னோர்களை வழிபடவும்.
லக்னமே தெரியாது கடகம் 70/100 குலதெய்வ வழிபாடு மற்றும் கணபதியைப் பூஜிப்பது நல்லது, மகான்களை வழிபடவும்
குறிப்பு:

[1] மேலே உள்ள டேபிளை எப்படி பயன்படுத்துவது?

நீங்கள் கடக இராசியில் பிறந்து லக்னம் தெரிந்ததென்றால் அதற்குள்ள பலனைத் தெரிந்து கொள்ளவும். அதற்குள்ள பரிகாரத்தை தெரிந்து கொள்ளவும். உதாரணமாக, நீங்கள் கடக இராசியில் பிறந்து மேஷம் லக்னத்தில் பிறந்தவரென்றால் உங்களுக்கு 65% சதவிகிதம் நல்ல பலன்கள் கிடைக்கும். மேலும் நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்: சௌந்தர்யலஹரி சொல்வது. எனக்கு லக்னமேத் தெரியாது ஆனால் கடக இராசி என்பவர்கள் குலதெய்வ வழிபாடு மற்றும் கணபதியைப் பூஜிப்பது நல்லது, மகான்களை வழிபடவும்.

[2] இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.

நக்ஷத்திர வாரியாக சில குறிப்புகள்:

* நக்ஷத்திரங்கள்
பலன்கள் புனர்பூசம் - 4ம் பாதம் பூசம் ஆயில்யம்
இராசி கடகம் கடகம் கடகம்
இராசியாதிபதி சந்த்ரன் சந்த்ரன் சந்த்ரன்
நக்ஷத்திர அதிபதி குரு சனி புதன்
அதிதேவதைகள் அதிதி குரு சர்ப்பம்
கணம் தேவகணம் தேவகணம் இராக்ஷஸ கணம்
நாடி பார்ஸுவ - இடது மத்ய பார்ஸுவ - இடது
மிருகம் பெண் பூனை ஆண் ஆடு ஆண் பூனை
பக்ஷி அன்னம் நீர்க்காக்கை சிட்டுக்குருவி
விருக்ஷம் மூங்கில் அரசு புன்னை
இரஜ்ஜு உதர ரஜ்ஜு தொடை பாதம்
வேதை நக்ஷத்ரம் உத்திராடம் பூராடம் மூலம்
அதிர்ஷ்டம் தரும் எண்கள் 2, 3, 4, 5, 9 2, 3, 4, 5, 9 2, 3, 4, 5, 6, 9
அதிர்ஷ்டம் தரும் திசைகள் வடக்கு மேற்கு, வடக்கு வடக்கு
குறிப்பு:

அதிர்ஷ்டம் தரும் எண்களும், திசைகளும் ஜாதகத்திற்கு ஜாதகம் மாறும். இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுவானவையே.

இன்றைய ஜோதிடக் குறிப்பு:

நாம் இன்று அலசப் போவது மிக முக்கியமானதும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியதுமான சில நக்ஷதிரங்கள் பற்றிய தவறான குறிப்புகள்: பாகம் 2

[1] உரோஹினி நக்ஷத்திரத்தில் ஒருவர் பிறந்தவர் என்றால் உடனே "ஐயய்யோ தாய்மாமனுக்கு ஆகாது" என்பார்கள்.

காரணம்: ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மா தனது கிருஷ்ணாவதாரத்தில் மாமன் கம்சனைக் கொன்றார். ஸ்ரீகிருஷ்ணர் பிறந்தது உரோகினி நக்ஷத்ரம். எனவே உரோஹினி நக்ஷத்திரத்தில் குழந்தை ஜெனித்தால் தாய்மாமனுக்கு ஆகாது.

[பார்க்க உதாரண ஜாதகம் படம் 1] இந்த குழந்தை ஜெனித்தது உரோஹினி நக்ஷத்ரம். இந்த குழந்தையுடைய மாமன் தற்போது சென்னையில் தொழில் அதிபராக உள்ளார். குழந்தை பிறக்கும் முன்பு ஒரு கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். இதேபோல் என்னால் பல ஜாதகம் உதாரணம் காட்ட இயலும்.

[2] மூலம் நக்ஷத்திரத்தில் பிறந்த ஒரு பெண்ணை (சமீப காலமாக சில பேர் ஆண்களையும் சொல்கிறார்கள்) திருமணம் செய்து கொண்டால் மாமனார் இறந்து விடுவார்.

காரணம்: எனக்குத் தெரியவில்லை.

[பார்க்க உதாரண ஜாதகம் படம் 2] இந்த பெண்குழந்தை ஜெனித்தது மூலம் நக்ஷத்ரம். இந்த குழந்தையுடைய மாமனார் தர்போது மும்பையில் மிக திடகாத்திரமாக உள்ளார். அவருக்கு வயது 85. மாமியாரும் உள்ளார். இதேபோல் என்னால் பல ஜாதகம் உதாரணம் காட்ட இயலும்.

குறிப்பு: நமது எண்ண ஓட்டங்கள் பொதுவாக கெட்ட செய்திகளை மிக சீக்கிரமாக நம்புமே தவிர, நல்லவைகளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அந்தளவுக்கு நம்மை பயமுறுத்தி வைத்திருக்கிறார்கள். சில ஜோதிட சங்கங்கள் நமது இந்தியாவில் இயங்கி வருகின்றன. அவை இது போன்ற ஆதாரமில்லா நம்பிக்கைகளை அகற்றுமா? பார்க்கலாம், இதுவும் கடந்து போகும்.

அடுத்ததாக ஸிம்ஹ இராசி சனிப் பெயர்ச்சி பலன்களில் சந்திபோம், நன்றி.





6 Comments:

அமுதப்ரியன் said...

அவை இது போன்ற ஆதாரமில்லா நம்பிக்கைகளை அகற்றுமா? பார்க்கலாம், இதுவும் கடந்து போகும்.
நெத்தியடி.

Anonymous said...

ஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

கானகம் said...

மொக்கைப் பதிவுக்கு இருக்கும் ஆதரவுகூட ராசிபலனுக்கு இல்லையே...

அதுக்காக பாக்கி ராசிபலன்களை போடம் நிறுத்திராதீங்க...

Rahul said...

At least give many more details about சில நக்ஷதிரங்கள் பற்றிய தவறான குறிப்புகள். Please do not stop this.
Thanks!

Anonymous said...

Please give some more stars details.

Meera

Anonymous said...

Why has rasi-palan stopped? I am looking forward for Thulam!!!