உங்களைப் பற்றி: "கன்னியான் ஏய்க்கப்படுவான்" என்பதற்கேற்ப யாரையும் எளிதில் நம்பி விடும் பழக்கம் உடையவர். அடுத்தவருக்கு செய்யும் உபதேசத்தில் பாதியளவாவது நீங்கள் அதை கடைபிடியுங்கள். நீங்கள் இந்து மதத்தில் பிறந்தவர் என்றால் பொதுவாக உங்களுக்கு முருகன், விஷணு, ஐயப்பன் சம்பந்தப்பட்ட பெயர்கள் அமைந்திருக்கும். உங்களுக்கு பொதுவாக புத்தி கூர்மையுள்ள மதிநுட்பம் மிகுந்த வாழ்க்கைத்துணை அமைந்திருக்கும். எப்படி இருக்கப் போகிறது இந்த சனிப் பெயர்ச்சி: இது வரை விரையச் சனியாகி உங்களுக்கு பல விதமான முறையிலும் விரையங்களை ஏற்படுத்திய சனீஸ்வரன் இனி உங்களது ஜென்மஸ்தானத்தில் அமர்ந்து வரும் 21/2 ஆண்டுகளுக்கு என்னென்னெ பலன்கள் தரப்போகிறார் என்பதைப் பார்ப்போம். செலவுகளும், விரையங்களும் நிறைந்த கடந்த 2 1/2 ஆண்டுகள் போராட்டமாகவும், குழப்பமாகவும் இருந்ததா? இனி அந்த நிலை மாறும். தைரியம் பிறக்கும். மன சம்பந்தமான குழப்பங்கள் நீங்கும். குருவும், கேதுவும் அனுகூலமான இடங்களுக்கு வருவதால் இனி தடைகள் நீங்கும். பணத்தட்டுப்பாடு நீங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பல வழிகளிலும் பணம் வரும் என எதிர்பார்க்கலாம். வாழ்க்கைத்துணையுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படும். வாழ்க்கைத்துணை உறவினர்களால் அலைச்சலும், சிரமங்களும் நேரலாம். எல்லா வேலைகளிலும் சிறிது முயற்சி செய்தால் முதலிடம் உங்களுக்குதான். அசைவ உணவு பதார்த்தங்கள், ஜங்க் புட்ஸ், கொழுப்பு நிறைந்த உணவுவகைகள் ஆகியவைகளை முற்றிலுமாக தவிருங்கள். உணவு விஷயத்தில் மிகுந்த கவனம் தேவை. இளைய சகோதர சகோதரிகளிடம் கொஞ்சம் அனுசரித்து செல்லவும். வீடு மனை வாகனம் யோகம் உண்டு. எந்த விஷயமானாலும் சரி, நேர் வழியில் சென்றால் வெற்றிதான். அடுத்தடுத்து மங்கள நிகழ்ச்சிகள் உங்கள் வீட்டில் நடைபெறும். இது வரை இருந்து வந்த சிற்சில கருத்துவேறுபாடுகள் நீங்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். கொடுத்திருந்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வராதிருந்த கடன் பாக்கி வந்து சேரும்.இனி தனவரவுகள் சேரும். முன்னோர்களின் ஆசி கிடைக்கும். தந்தையுடனான உறவில் முன்னேற்றம் ஏற்படும், மேலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தந்தைவழி சொத்துக்கள் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்பு கிட்டும். வெளிநாட்டு வேலை கிடைக்கும். வெளிநாட்டு பிரயாணங்களால் அனுகூலம் ஏற்படும், தவிர வெளிநாட்டுடனான வியாபாரத் தொடர்பும் கிட்டும். நிறைய பேர் உங்களை ஏமாற்ற வாய்ப்புகள் உள்ளது, கவனமாக இருக்கவும். எதிலும் எப்பொழுதும் நேரத்தைக் கடைபிடியுங்கள்.உத்தியோகத்தில் வரவேண்டிய பதவிஉயர்வு, இடமாற்றம் ஆகியவைகளுக்கு நன்கு உழையுங்கள். சிலருக்கு கூடுதல் சம்பளத்துடன் வேறு நிறுவனத்திலும் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது. சிலருக்கு தங்கள் இரசனைக்கேற்ப வேலையும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மற்றவர்களை நம்பி எந்த ஒரு பெரிய முடிவும் எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. பங்குதாரர்கள் உடனான கருத்துக்களின் மீது விவாதம் செய்யாதீர்கள். சோம்பலைத் தவிருங்கள். அன்றன்றுள்ள பணிகளை அன்றே முடியுங்கள். வேலைகளில் சுணக்கம் காட்டாதீர்கள். பொதுவாக இந்த சனிப் பெயர்ச்சி சிக்கல்களையும், கடினமான பாதைகளையும் தாண்டி சாதனைகளைப் படைப்பதாக அமையும். நக்ஷத்திர ரீதியான பலன்கள்: உத்திரம் 2, 3, 4ம் பாதங்கள்: உடல்நலம் சம்பந்தமான விஷயங்களில் கவனம் தேவை. எந்த வேலையிலும் முழுமுயற்சி தேவை. உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். ஆதித்யஹ்ருதயம் மற்றும் ஸ்ரீ விஷணு ஸகஸ்ரநாமம் சொல்வது பயனைத்தரும். ஹஸ்தம்: தொழில் மற்றும் வியாபார விஷயங்களில் கவனத்துடன் செயல்பட்டால் வெற்றியடைவீர்கள். மனதில் புதிய உற்சாகமும் எழுச்சியும் பிறக்கும். கூட்டுத்தொழிலில் கூட்டாளிகளிடம் உறவு மேம்படும். கூடிய விரைவில் எதிர்பார்த்த திருமணம் நடக்கும். ஸ்ரீ லலிதா த்ரிசதி சொல்ல சொல்ல வாழ்வில் ஒளி பிறக்கும். சித்திரை 1, 2 ம் பாதங்கள் : கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. சிலருக்கு வீடு, மனை, வாகனம் யோகம் மெதுவாக கிடைக்கும். எந்த ஒரு காரியத்திலும் ஆரம்பத்திலுள்ள முயற்சியைக் குறைக்காமலிருந்தால் வெற்றி கிடைக்கும். ஸ்ரீ முருக வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். குறிப்பு: இது மாணவ மணிகளுக்கு: ஸ்ரீ ஹயக்ரீவர் வழிபாடு நன்மையைத்தரும். லக்ன ரீதியான பலன்கள்: [1] மேலே உள்ள டேபிளை எப்படி பயன்படுத்துவது? நீங்கள் கன்னி இராசியில் பிறந்து லக்னம் தெரிந்ததென்றால் அதற்குள்ள பலனைத் தெரிந்து கொள்ளவும். அதற்குள்ள பரிகாரத்தை தெரிந்து கொள்ளவும். உதாரணமாக, நீங்கள் கன்னி இராசியில் பிறந்து மீனம் லக்னத்தில் பிறந்தவரென்றால் உங்களுக்கு 60% சதவிகிதம் நல்ல பலன்கள் கிடைக்கும். மேலும் நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்: தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது மற்றும் துர்க்கா காயத்ரி சொல்வது, வீட்டிலுள்ள முன்னோர்களை வழிபடவும். எனக்கு லக்னமேத் தெரியாது ஆனால் கன்னி இராசி என்பவர்கள் விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது, முடிந்த வரை இராம நாமம் சொல்வது, மகான்களை வழிபடவும். [2] இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம். நக்ஷத்திர வாரியாக சில குறிப்புகள்: அதிர்ஷ்டம் தரும் எண்களும், திசைகளும் ஜாதகத்திற்கு ஜாதகம் மாறும். இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுவானவையே. இன்றைய ஜோதிடக் குறிப்பு: ஒருவர் என்னிடம் இமெயிலில் தொடர்பு கொண்டு "ஐயா என்னிடம் ஜாதகமே இல்லை. நான் எப்படி உங்கள் பலன்களை அறிந்து கொள்வது?" என்று என்னிடம் கேட்டார். இதே போல் பல பேருக்கு சந்தேகம் உள்ளது. அவர்களுக்காக இந்த குறிப்பு. உதாரணமாக இட்லிவடை என்று ஒருவர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருடைய பெயரின் முதல் எழுத்தை எடுத்துக் கொள்வோம். நமது உதாரண பெயரில் "இ" என்பது முதல் எழுத்து. அதற்குண்டான நாம நக்ஷத்ரம் - கார்த்திகை 2ம் பாதம்.[பார்க்க திருநெல்வேலி வாக்கியப்பஞ்சாங்கம் - விரோதி வருஷம் - பக்கம் 40]. எனவே இட்லிவடை ரிஷப ராசியில் வருவார். எனவே இட்லிவடை ரிஷப ராசி பலன்களை பார்க்க வேண்டும். இன்னொரு உதாரணம்: பிரபாகர் என்று ஒருவர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம், அவருடைய பெயரின் முதல் எழுத்து "பி" , அவரது நக்ஷத்ரம் உத்திரம் 4ம் பாதத்தில் வரும். எனவே பிரபாகர் கன்னி இராசி. அவர் கன்னி இராசிகளுக்குடைய பலன்களை பார்க்க வேண்டும். [குறிப்பு: மேற்கண்ட முறையில் பலன் பார்ப்பது, பொதுவான பலன்களைத் தருமே தவிர 100% பலன்களைத் தராது] இனி துலாம் இராசிக்குண்டான பலன்களில் சந்திபோம். நன்றி.கன்னி இராசிக்குள்ள சனிப்பெயர்ச்சி பொது பலன்கள்
லக்னம் இராசி பலன்கள் பரிகாரம் மேஷம் கன்னி 60/100 கந்த ஷஷ்டி கவசம் சொல்வது ரிஷபம் கன்னி 55/100 ஸ்ரீ மன் நாராயணீயம் சொல்வது மற்றும் ஸ்ரீஸூக்தம் சொல்வது மிதுனம் கன்னி 50/100 விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது,மகான்களை வழிபடவும் கடகம் கன்னி 55/100 புருஷ ஸூக்தம், நாராயண ஸூக்தம், விஷ்ணு ஸுக்தம் சொல்வது மற்றும் சூரிய வழிபாடு ஸிம்ஹம் கன்னி 55/100 ஆதித்யஹ்ருதயம், மஹாலக்ஷிமி காயத்ரி, நாராயண காயத்ரி, ஹனுமத் காயத்ரி சொல்வது கன்னி கன்னி 50/100 விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது, முடிந்த வரை இராம நாமம் சொல்வது, மகான்களை வழிபடவும் துலாம் கன்னி 55/100 கணபதி காயத்ரி, நவக்ரஹ மூலமந்த்ரம் சொல்வது, ஸ்ரீஸூக்தம் சொல்வது. விருச்சிகம் கன்னி 60/100 கணபதி பூஜை மற்றும துர்ஹா ஸூக்தம் சொல்வது, முடிந்த வரையில் அம்பாள் நாமாவை சொல்வது. தனுர் கன்னி 55/100 துர்க்கா மூலமந்த்ரம் மற்றும் ஹனுமத் கவசம் சொலவது. மகரம் கன்னி 60/100 கணபதி வழிபாடு மற்றும் குலதெய்வ வழிபாடு செய்வது மற்றும் முன்னோர்களை வழிபடுவது. கும்பம் கன்னி 50/100 லலிதா ஸகஸ்ரநாம பாராயணம் மற்றும் மூகபஞ்சக சதீ சொல்வது, தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது. மீனம் கன்னி 60/100 தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது மற்றும் துர்க்கா காயத்ரி சொல்வது, வீட்டிலுள்ள முன்னோர்களை வழிபடவும். லக்னமே தெரியாது கன்னி 50/100 விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது, முடிந்த வரை இராம நாமம் சொல்வது, மகான்களை வழிபடவும் குறிப்பு:
* நக்ஷத்திரங்கள் பலன்கள் உத்திரம் 2, 3, 4ம் பாதங்கள் ஹஸ்தம் சித்திரை - 1, 2 ம் பாதங்கள் இராசி கன்னி கன்னி கன்னி இராசியாதிபதி புதன் புதன் புதன் நக்ஷத்திர அதிபதி சூரியன் சந்த்ரன் செவ்வாய் அதிதேவதைகள் பகன் ஆதித்யன் துவஷ்டா கணம் மனுஷ்ய தேவகணம் இராக்ஷஸ் கணம் நாடி பார்ஸுவ - வலது பார்ஸுவ - வலது மத்ய மிருகம் பசுமாடு எருமை பெண் புலி பக்ஷி கழுகு பருந்து (கிளி) மரங்கொத்தி விருக்ஷம் இலந்தை அத்தி வில்வம் இரஜ்ஜு தொப்புள் ரஜ்ஜு தலை தொப்புள் வேதை நக்ஷத்ரம் பூரட்டாதி ஸதயம் மிருகசீர்ஷம் அவிட்டம் அதிர்ஷ்டம் தரும் எண்கள் 1, 3, 4, 5, 7, 9 1, 2, 3, 5, 7, 9 1, 3, 5, 7, 9 அதிர்ஷ்டம் தரும் திசைகள் கிழக்கு கிழக்கு, வடக்கு கிழக்கு குறிப்பு:
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Thursday, September 17, 2009
கன்னி ராசி பலன்கள்
Posted by IdlyVadai at 9/17/2009 11:30:00 PM
Labels: ராசிபலன்
Subscribe to:
Post Comments (Atom)
6 Comments:
பின்னூட்டம் வருதோ வரலையோ, appreciataions வருதோ வரலையோ, இட்லிவடை (நண்)(அன்)பர்கள் எதிர் பார்க்கிறார்களோ இலையோ, இப்படி எதைப்பற்றியும் கவலை படாமல் கடமையைச் செய், "பலனை" எதிர்பார்க்காதே என்ற மொழிக்கேற்ப, இந்த லோகத்தில் உள்ள "பொது" மக்களுக்கான பொதுப் "பலன்களை" கணித்து தனது தொழில்முறை சிறப்பை (professionalism) வெளிக்காட்டிக் கொண்டிருக்கும் பெருங்குளம் திரு இராமகிருஷ்ணன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்/நன்றிகள்.
பின்குறிப்பு:
நான் கன்னிராசிக்காரன் என்று இட்லிவடை மக்கள் தவறாகக் கணித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.
முன்குறிப்பு:
வீட்டில் அம்மா இங்கே வாவா என்று யாரோ பாடிக்கொண்டு இருந்தார்கள். அதன் effect, இதோ.
அர்த்தராத்திரியிலும்-
ஆனந்தமாக ஆடி அப்டேட்செய்யும்-
இட்லிவடையின்-
ஈகைமனதை-
உளமார-
ஊக்கப்படுத்தி-
எப்போதும்-
ஏற்றம்தர-
ஐங்கரனைவேண்டி, இட்லி-
ஒவ்வொருநாளும் மென்மேலும்-
ஓங்க, தமிழ்ப் பாட்டி
ஒளவையை நினைத்தால்
அஃதே நடத்துவார்.
ஜோதிடம் என்பது மக்களுக்காக உள்ள கலை. மக்களுக்கு நன்மை செய்வதற்காக வந்த கலை. இதில் என்று காசு புகுந்ததோ அன்றே அதன் மகத்துவமும் குறைந்தது. நான் பரம்பரை ஜோதிடர் ஆதலால் என்னால் முடிந்த அளவு மக்களுக்கு நன்மை தரும் வகையில் ஜோதிடம் பார்ப்பேன். இட்லிவடைக்கு எனது மனமார்ந்த நன்றி. மானஸ்தனிடமிருந்தும் பின்னூட்டம் வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவருக்கு எந்து மனமார்ந்த நன்றி. என்னைப் பொருத்தவரை "ஸர்வோ ஜனா ஸுகினோ பவந்து".
--- பெருங்குளம் இராமகிருஷ்ணன்
/***இட்லிவடைக்கு எனது மனமார்ந்த நன்றி. மானஸ்தனிடமிருந்தும் பின்னூட்டம் வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவருக்கு எந்து மனமார்ந்த நன்றி**/
Ramkrishnan sir why did you say thanks for twice unnecesarily??
Don't you know IV and manasthan are like Indiran and Chandiran. (remember Thillu Mullu!).He is only one person and has two names.
நான் கன்னிராசிக்காரன் என்று இட்லிவடை மக்கள் தவறாகக் கணித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.//
அப்ப உங்க வூட்டுக்காரம்மா கன்னிராசிக்காரராக இருக்கும்!!!
Please provide new year and sani peyarchi horoscope sir...
Post a Comment