பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, September 05, 2009

புதிய ரட்சகர் புறப்பட்டு விட்டார்...

புதிய ரட்சகர் புறப்பட்டு விட்டார்... - தமிழருவி மணியன்

'மரணம் என் வாழ்வின் வாசற்கதவைத் தட்டுவது என் காதில் கேட்கிறது. என் மனம் எல்லையற்ற பெருவெளியை நோக்கி மெள்ளப் பறக்கத் தொடங்கிவிட்டது. விழிமூடும் இந்த மரணப் பொழுதில் என் நண்பர்களிடம் நான் ஒன்றை மட்டும் என் நினைவாக விட்டுச் செல்கிறேன். அதுதான் 'சுதந்திர இந்தியா' என்ற என் பொற்கனவு. இந்தக் கனவை நனவாக்க நம் லட்சியத்தை முன்னெடுத்துச் செல்லுங்கள். எந்த நிலையிலும் ஓரடிகூடப் பின்வாங்கலாகாது. நம் நாட்டின் அடிமைப் பொழுது முடிந்துவிடும். சுதந்திரத்தின் ஒளிக்கதிர்கள் பொன்னொளி வீசுவதைக் காணுங்கள். எல்லோரும் எழுங்கள். அவநம்பிக்கை அடையாதீர்கள். வெற்றி விரைவில் வந்து சேரும்.'

- தூக்கில் தொங்குவதற்கு முன்பு மாவீரன் சூர்யா சென், தன் தோழர்களுக்கு எழுதிய கடிதத்தில் இப்படிக் குறிப்பிட்டான்.

பிரிட்டிஷ் சிங்கத்தின் பிடரியைப் பிடித்து உலுக்கியவன் சூர்யா சென். இளம் புரட்சிப் போராளிகளின் படை நடத்தி, சிட்டகாங் ஆயுதக் கிடங்கைச் சூறையாடியவன். 37 வயதில் அவன் சிறைப்பட்டபோது, வெள்ளை அதிகாரிகள் சுத்தியல் கொண்டு அவனுடைய பற்கள் அனைத்தையும் உடைத்து, விரல் நகங்களைச் சதையோடு பறித்து, உடலின் ஒவ்வொரு மூட்டு இணைப்பையும்

முறித்து, நினைவு தவறிய நிலையில் தூக்கில் தொங்கவிடப்பட்டு, உடலை வங்கக் கடலில் வீசியெறிந்தனர். சூர்யா சென், பகத்சிங், சந்திர சேகர ஆசாத், ராஜகுரு, சுகதேவ், மகாவீர் சிங், மதன்லால் திங்ரா, ராம் பிரசாத் பிஸ்மில், வாஞ்சிநாதன் போன்ற எண்ணற்ற வீர இளைஞர்கள் இந்திய விடுதலைக்காகத் தங்கள் உயிரைத் தந்தனர். நம் வாழ்கால இளைஞர்களில் பலருக்கு இவர்களின் வரலாறு தெரியாது. ஆனால், ஒவ்வொருவருக்கும் நடிகர் விஜய் தெரியும்; விஜயகாந்த்தைத் தெரியும். ஒருவர் நாறிக் கிடக்கும் அரசியலில் நறுமணம் படைக்க வந்தவர். இன்னொருவர் இளைஞர் காங்கிரஸை வலுப்படுத்த அரசியல் களம் நோக்கி வருபவர். தமிழகத்து அரசியலில் புதிய அத்தியாயம் வரைவதற்கு இவர்களை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்?

நீண்ட காலமாகவே தமிழர் வாழ்வில் கோடம்பாக்கம், வழிபடும் கோயிலாகிவிட்டது. அரிஸ்டாட்டில் அரசியலை (Master Science) 'தலைமை அறிவியல்' என்றான். நம் வாக்காளப் பெருமக்களுக்குக் கஞ்சிக் கலயமும், காதுக்கு சுகமளிக்கும் பேச்சுக் கச்சேரியும்தான் முக்கியம். ஆட்சிக்கலை குறித்தோ, அரசியல் நிலை குறித்தோ அவர்கள் அதிகமாகக் கவலைப்படுவதில்லை. சங்கத் தமிழன் பேகன்கூட பொதி சுமக்கும் கழுதையின் துயர் கண்டு துடித்துப் போர்வை போர்த்தவில்லை. தோகை விரித்துக் கவர்ச்சி விருந்தளித்த மயிலுக்குத்தான் போர்வை தந்து மகிழ்ந்தான். கவர்ச்சியைக் கொண்டாடுவதில் நாம் அனைவரும் வள்ளல் பேகனின் வாரிசுகள்.

எம்.ஜி.ஆர் முதல்வரான பின்பு சில திரையுலக கதாநாயகர்களுக்கு அரசியல் ஆசை வந்து விட்டது. எல்லாரும் எம்.ஜி.ஆராகிவிட முடியாது என்பதை ஏனோ அவர்கள் உணர்வதாக வே இல்லை. கலையுலகில் இருந்தபடி கனவு வெளி யில் சிறகடிக்கும் இவர்கள், தங்கள் திரையுலக மூதாதையரைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்க வேண்டும். விடுதலை வேட்கை, சமூக சீர்திருத்தம், பெண்ணுரிமை, சாதிக்கொடுமை ஆகியவற்றைத் திரைப்படங்களின் மூலம் வெகுமக்களிடம் சேர்ப்பதற்கு முயன்றவர் கே.சுப்பிரமணியம். வெள்ளையர் அரசால் தடைசெய்யப்பட்ட ஒரே இந்தியத் திரைப்படம் அவர் இயக்கிய 'தியாக பூமி'. சாதி வேற்றுமைகளுக்கு எதிராகவும், விதவை மணத்தை ஆதரித்தும் அவர் தயாரித்த 'பால யோகினி' படத்துக்காகப் பிராமண சமூகம் அவரை 'சாதி பிரஷ்டம்' செய்தது. சினிமா மூலம் நல்ல சமூகத் தாக்கத்தை ஏற்படுத்திய அந்த மாபெரும் கலைஞனுக்கு அரசியல் ஆசை அன்று வரவில்லை.

இசைமேதை கிட்டப்பாவை வாழ்க்கைத் துணையாக ஏற்று 25 வயதில் விதவையாகிவிட்ட கே.பி.சுந்தராம்பாள் கைம்மை நோன்பு பூண்டு, தேனாம்பேட்டை கிராமணியார் தோட்டத்தில் ஆசிரமம் போன்ற வீட்டில் ஒதுங்கி வாழ்ந்தார். அடிமை இந்தியாவில் சுதந்திரக் கனல் சுடர் பரப்புவதற்காக அச்சமின்றி காங்கிரஸ் மேடைகளில் 'காந்தியோ பரம ஏழை சந்நியாசி' என்று பாடிய அந்தக் கொடுமுடி கோகிலம் ஒதுங்கி வாழ்ந்தபோது, மகாத்மா காந்தியே நேரில் அவர் இருக்குமிடம் தேடி வந்தார். தேச சேவையில் மீண்டும் ஈடுபட வேண்டினார். சுயராஜ்ய கட்சி வெற்றிபெற சத்தியமூர்த்தி முழங்கிய மேடைகளிலெல்லாம் சுந்தராம்பாள், 'ஓட்டுடையாரெல்லாம் கேட்டிடுங்கள்: இந்த நாட்டின் நலம் நாடிப் போட்டிடுங்கள்' என்று பாட்டு யாகம் நடத்தினார். 'வீட்டுக்குள்ளிருந்து - வீண் பேச்சுப் பேசுவதால் - நாட்டின் விடுதலை - நாம் அடையக் கூடுமோ?' என்று மக்களிடையே பாடிப் பாடி சுதந்திர உணர்வைத் தூண்டிய கே.பி.எஸ்., அரசியல் ஆதாயம் அடைய ஆசைப்படவில்லை.

கலைவாணர் தான் சம்பாதித்த எல்லாவற்றையும் வறியவர்க்கு அள்ளிக் கொடுத்து, அதனால் வறுமையில் வாடினார். திருமணத்துக்கு உதவி கேட்டு வந்த இளைஞருக்கு வெள்ளி கூஜாவை கொடுத்து 'இதைத் தவிர என்னிடம் வேறேதுமில்லை' எனச் சொல்லி வழங்கிய வள்ளல். பெரியார் கடுமையாக வெளிப்படுத்திய சுயமரியாதை கருத்துகளை மிகவும் மென்மையாக, சிரிக்கச் சிரிக்க நகைச்சுவை விருந்தாய் நமக்குப் பரிமாறிய அந்த உன்னதக் கலைஞர் சினிமா கவர்ச்சியை மூலதனமாக்கி அரசியல் கடை திறக்கவில்லை.

பகுத்தறிவுக் கொள்கைகளைத் தன்னுடைய நாடகங்கள் மூலம் பரப்பியவர் நடிகவேள் எம்.ஆர்.ராதா. 'பெரியாரின் தொண்டன்' என்று சொல்லிப் பெருமிதம் கொண்ட ராதா, திராவிடர் கழக மாநாட்டு ஊர்வலங்களில் முதல் மனிதனாக வெள்ளைப் புரவியில் அமர்ந்து கழகக் கொடியுடன் வலம் வந்தவர்; பட்டுக்கோட்டை அழகிரியால் 'நடிகவேள்' என்று பாராடப்பட்டவர். அந்த நடிகவேளால் 'கலைஞர்' என்ற சிறப்பை அடைந்தவர் நம் முதல்வர். ராதாவின் வலிமையான நாடகப் பிரசாரத்துக்கு அஞ்சி அன்றைய காங்கிரஸ் அரசு, 'நாடகத்தின் முழுமையான கதை வசனத்தையும் மாவட்ட ஆட்சியரிடம் முதலிலேயே சமர்ப்பிக்க வேண்டும்' என்று சட்டம் தீட்டியது. ஒரு தனி மனிதனின் கூர்மையான விமர்சனங்கள் ஆட்சியையே அன்று அலைக்கழித்தது. இந்தியாவிலேயே ராதாவுக்கு இணையாக மக்களின் சிந்தனையில் மறுமலர்ச்சியை உருவாக்க ஒரு சமூகப் போராளியாய் வீறுகொண்டெழுந்த இன்னொரு கலைஞன் இல்லை. 'நடிகர்களை நம்பாதே' என்று மேடைதோறும் மக்களின் மயக்கத்தை ஒழிக்க ஓங்கிக் குரல் கொடுத்த நடிகவேள் அரசியலில் எந்தப் பதவிக்காகவும் எவரிடத்தும் பல்லிளிக்கவில்லை.

ஆனால், இன்று... கோட்டை நாற்காலிக் கனவில் எத்தனை கோடம்பாக்கத்து நாயகர்கள்? சினிமாவில் மார்க்கெட் போனதும், அடுத்த பிழைப்பாக நினைத்தல்லவா அரசியலில் குதிக்கிறார்கள்! ஆட்சி நாற்காலிப் பேரின்ப வாசல் நோக்கி அடியெடுத்து வைக்கின்றார் கள்! எம்.ஜி.ஆர் என்ற துருவ நட்சத்திரத்தைப் போல் மின்ன நினைக்கும் இவர்களில் பலர் வெறும் எரிநட்சத்திரங்களே!

விஜய்காந்த், சரத்குமார், கார்த்திக், டி.ராஜேந்தர் போன்றவர்கள் எந்த நம்பிக்கையில் அரசியல் அங்காடியில் ஆளுக்கொரு பெட்டிக்கடை வைத்து அமர்ந்திருக்கின்றனர்? அதிகபட்சம் இவர்கள் ஒரு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராக வேண்டும்; முடிந்தால் அமைச்சராக வேண்டும்; வாக்காளர்கள் விவரமே இல்லாத இளிச்சவாயர்களாக இருப்பதைப் பயன்படுத்தி என்றாவது ஒரு நாள் தமிழகத்தின் முதல்வராக வேண்டும். இதற்கு மேல் இவர்களுக்கு என்ன சமூக அக்கறை? இவ்வளவு நாட்கள் இல்லாத கரிசனம் இன்று எப்படி இந்த ஏழைகள் மேல் வந்தது?

இத்தனை ரட்சகர்கள் போதாது என்று விஜய் எந்த அடிப்படைத் தகுதிகளோடு புதிய ரட்சகராகப் புறப்பட்டுவிட்டார்? 'விதியே, விதியே! தமிழ்ச் சாதியை என் செய்ய நினைத்தாய்?' என்று பாரதி அன்று புலம்பியதன் அர்த்தம் இன்றல்லவா புரிகிறது.

வங்கத்தில் ஆளுநராக இருந்து விடைபெற்றபோது மலை போல் குவிந்த பரிசுப் பொருள்களில் எதையும் ஏற்க மறுத்தார் ராஜாஜி. 'தந்தத்தாலான கைத்தடியையாவது எங்கள் அன்பின் அடையாளமாக எடுத்துச் செல்ல வேண்டும்' என்று வேண்டிய போதும், அதை மறுதலித்துவிட்டு வெறுங்கையுடன் திரும்பியவர் அந்த மூதறிஞர். ராமாயணத்து ஜனகனைப் போல் முதல்வர் நாற்காலியில் பற்றற்ற துறவியாய் அமர்ந்து பரிபாலனம் செய்தவர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். தன் சொத்துகள் முழுவதையும் வடலூர் வள்ளலார் சபைக்கு எழுதிவைத்த ஏந்தல் அவர். பூரண மதுவிலக்கை மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்திய முதல்வர் குமாரசாமி ராஜா, தான் வாழ்ந்த வீட்டையும், சொத்து களையும் தமிழகத்து மக்களுக்கு அர்ப்பணித்தார். தன் எஞ்சிய சொத்தாக வங்கியில் இருந்த 50 ரூபாயையும் பாரதி நினைவு மண்டபம் கட்ட நன்கொடையாகத் தந்துவிட்டு, கையை விரித்தபடி கண்மூடிய ராஜா ஓர் அரிய தலைவர். 10 வேட்டி சட்டையுடன் தன் வாழ்வை முடித்துக் கொண்ட பெருந்தலைவர் காமராஜர் கறுப்பு காந்தியாகவே நம்மிடையே வாழ்ந்து மறைந்தார். இவர்கள் அனைவரும் வளர்த்த காங்கிரஸ் இன்று நடிகர் விஜய்யின் நிழலில் இளைப்பாற இருக்கிறது. விவேக் ஒரு படத்தில் சொன்னதுபோல் 'எப்படி இருந்த காங்கிரஸ் இப்படியாகிவிட்டது'!

சொந்தப் பணத்தைச் சேதப்படுத் தாமல் காங்கிரஸ் கணக்கில் அரசியல் நடத்தி அதிகாரத்தைச் சுவைக்க நினைக்கும் விஜய், ஒருவகையில் விஜய்காந்த்தைவிட விவரமானவர் என்று கருதி மகிழலாம். ஆனால், நடந்தால் நிழல் மட்டுமே தொடரக்கூடிய காங்கிரஸ் தலைவர்கள், ரசிகர் பட்டாளத்துடன் வரும் விஜய்யை ரசிக்கமாட்டார்கள். சிவாஜிகணேசனுக்கு கிடைத்த காங்கிரஸ் அனுபவங்களை விஜய் அறிந்திருக்க நியாயமில்லை. ஓர் அங்குலம் உயரமானவனைக்கூட ஒப்புக் கொள்ளாத குள்ளர்களின் சாம்ராஜ்ஜியம்தான் தமிழக காங்கிரஸ். அங்கே நீண்ட காலம் விஜய் நீடிக்க முடியாது. நீடித்தால் இந்தப் புதிய ரட்சகர் அவமானச் சிலுவையில் அறையப்படுவார்.

அது சரி... விஜய்க்கு ஏன் இந்த ஆசை? அவரிடம் ஏதாவது புதிய அரசியல், சமூகப் பொருளாதார மாற்றுத் திட்டங்கள் இருந்தால் முதலில் அவற்றை அறிவிக்கட்டும். முதல்வர் கனவைத் தவிர வேறெதுவும் இல்லையென்றால், இப்போதே இந்த நெட்டைக் கனவை விட்டு விட்டு, தமிழ் சினிமா பக்கமே தன் கவனத்தை வைத்திருக்கட்டும்!
( நன்றி: ஜூவி )

25 Comments:

"ராஜா" said...

விஜய் அரசியலுக்கே போகட்டும்... தமிழ் சினிமா பிழைக்கட்டும்.....

சுவாதி, யுவராணி, சங்கவி இவர்களின் உடம்பை காட்டி தன்னை சினிமாவில் நிலை நிறுத்தி கொண்ட கூட்டம், இன்று மகாத்மா நேரு வளர்த்த கட்சியை பயன்படுத்தி அரசியலுக்குள் நுழைகிறது.... "எப்டி இருந்த காங்கிரசஸ் இப்டி ஆகிடுச்சி"

sreeja said...

// அது சரி... விஜய்க்கு ஏன் இந்த ஆசை? //

என்னங்கண்ணா இப்படி சொல்லிட்டீங்க. நானென்ன வேணும்னா அரசியலுக்கு வர்ரேன். வில்லெடுத்த வேட்டைக்காரன் வேற எங்கங்கண்ணா போவேன்.

ஆமா, புதிய அரசியல் சமுதாய பொருளாதார மாற்று திட்டங்களை - னு புரியாததெல்லாம் போட்டு ஏனுங்கண்ணா கொளப்புறீங்க. விஜயகாந்தும் தான் 3 வாரதில தமிழ்நாட்டோட மின் பிரச்சனய தீர்க்க தன்கிட்ட ஐடியா இருக்குறதா சொன்னாரு - அவர யாராவது கேட்டீங்களா? என்ன கேக்குறீங்க, அவர சொல்ல சொல்லுங்க நா சொல்லுறேன்.

ஏனுங்கண்ணா எங்கப்பன் என்ன எப்படியாவது கோட்டைக்கு அனுப்பணும்னு ஆச படுறாரு அத கெடுக்க சொல்றீங்களாங்ணா ?

நானு ஆல்டோட்டல் பூபதிங்கண்ணா - காங்ரஸ்ல என்ன தான் பழம் தின்னு கொட்ட போட்டவங்க இருந்தாலும் கோட்ட நமக்குதாங்கண்ணா.

சிலுவைல அறைய வேண்டாங்கண்ணா, அத ஏணி மாதிரி வாச்சே கோட்டைக்குள்ள ஏறி குதிச்சிருவேங்கண்ணா, இத்தாலி சாமி நம்மள கைவிட்டுருமா என்ன ?

Rahul said...

அதான் புட்டு புட்டு வைத்து விட்டார்களே! இனி நாம் சொல்வதற்கு ஒன்றுமே இல்லை.

அக்னி பார்வை said...

//அது சரி... விஜய்க்கு ஏன் இந்த ஆசை? ///

Three big Flop Films and after seeing the vettaikaaran preview he confirmed it s going to be another flop soo next safe job to earn money is Politics specially ..Congress

கானகம் said...

அருமையான பதிவு. தமிழருவி மணியனுக்கு எனது வணக்கங்கள்.. பாரதியின் புலம்பல்கள் இன்று உண்மையாவது அவனது தீர்க்கதரிசனம்தானோ???

பாவம் தமிழினம்.. நாட்டு நலன் கருதாது தனது நலன் மட்டுமே கருதுவோர்தான் இன்றைய அமைச்சர்களும், முதலமைச்சர்களும், அரசியல்வாதிகள் என்ற போர்வையில் இருக்கும் சுயநல கும்பல்களும்..

காத்திருப்போம்.. விதி அப்படி ஒன்றும் விட்டுவிடாது என்ற நம்பிக்கையுடன்...


//சூர்யா சென், பகத்சிங், சந்திர சேகர ஆசாத், ராஜகுரு, சுகதேவ், மகாவீர் சிங், மதன்லால் திங்ரா, ராம் பிரசாத் பிஸ்மில், வாஞ்சிநாதன் //

தமிழருவி மணியன் போன்றோர் தவிர வேறு யரால் இவர்களையெல்லாம் நினைவில் வைத்திருக்க முடியும்??

மதன்லால் திங்க்ராவின் மரண அறிக்கையை இங்கே படிக்கலாம்..

http://www.tamilhindu.com/2009/08/martyrdom-centenary-of-madan-lal-dhingra/

தமிழ் இந்து போன்ற தளங்கள்தான் இவரை நினைவில் வைத்திருக்கின்றன..

ஜெயக்குமார்

Anonymous said...

Good Posting. Deep Analysis.

ThankYou for sharing this information with us.

Salute for the lived Political/Non Political Diamonds of Tamil Nadu.

TamilNadu doesn't have single Good leader as of before (or) Hiding them self from Light !!!

Nature/God/Almighty/Divine Force should give TamilNadu/India/World with Service Minded Leaders in Politics/Judiciary/PM/CM/UN Sec etc in near feature.

Anonymous said...

His (vijay) films are produced by DMK members, why he is joining congress. He can join DMK and make his films produce by Sun pictures :-)

sathiyabal said...

I agree with Raja. Let Vijay spend sometime in Tamil Nadu politics to save Tamil cinema. Some innovative directors are trying to create the next stage of tamil cinema. Let Vijay not spoil it. Atleast by now, story based cinemas should get success instead of hero based ones.

Anonymous said...

கலைஞர் எந்த துறைல இருந்து இந்த சாக்கடைக்கு வந்தாரு?. அதுசரி கட்டுரை முழுதும் ஒரு வயிறெரிச்சல் (மக்கள் அக்கறையை விட) தெரியுதே - யாருகிட்ட எவ்வளவு பணம் வாங்கினாரு இந்த குப்பையை எழுத?

வழிப்போக்கன் said...

மக்கள் அதரவு உள்ள எவர் வேண்டுமேன்ரலும்
அரசியலுக்கு வரலாம். நீங்கள் எல்லாம் ஏன்
இவள்ளவு பதட்ட படறிங்க பாஸ்

Anonymous said...

தமிழ் அருவி மணியன் இதுவரை எழுதிய கட்டுரைகளில் இது தான் முழுமையான, சத்தியமான ஆதங்கத்துடன் எழுதப்பட்ட வீறு கொண்ட கட்டுரை. பாரதி அவ்வப்போது யார் பேனா மூலமாகவோ வெளிப்படுகிறான்.
-- டில்லி பல்லி

Anonymous said...

His first name is 'joseph'. Maybe that's why he is preferred by the All India Christian Congress led by the roman catholics sonia and rahul !!

டகிள் பாட்சா said...

கருப்பு பணம் நிறய சேர்ந்தா காப்பாற்றிக் கொள்ள ஒரே வழி அரசியல்தான்! எல்லோரையும் எட்டிவிடும் சட்டம் இவர்களுக்கு மட்டும் சலாம் வைத்து நிற்கிறது. வின்ஸ்டன் சர்ச்சில் எப்போதோ சொன்ன " Politics is the last resort of a Scoundrel" என்பது என்றென்றைக்கும் எங்கெங்கும் பொருந்தும்!

R.Gopi said...

எங்கள் இளைய தொளபதியை திட்டுவதை நிறுத்துங்கள்...

நாளைக்கே "இளைய தொளபதி" உங்கள பழி வாங்க நெனச்சா, குருவி, வில்லு பார்ட் 2 எடுத்தா என்ன பண்ணுவீங்க...

சொல்றத சொல்லிபுட்டேன்... அம்புடுதேன்...

Rahul said...

/***கலைஞர் எந்த துறைல இருந்து இந்த சாக்கடைக்கு வந்தாரு?. அதுசரி கட்டுரை முழுதும் ஒரு வயிறெரிச்சல் (மக்கள் அக்கறையை விட) தெரியுதே - யாருகிட்ட எவ்வளவு பணம் வாங்கினாரு இந்த குப்பையை எழுத?**/

கலைத்துறையில் இருப்பவர்கள் அரசியலுக்கு வரக் கூடாது என்று இங்கு யாரும் சொல்லவில்லை, சமூக அக்கறை உள்ளவர்கள் மட்டுமே வர வேண்டும், மாறாக வேறு நோக்கோடு உள்ளே வருபவர்களை தடுக்க முடியாது ஆனால் தடுப்பதற்கு இது ஒரு சின்ன முயற்சியாக (வரும் முன் காக்க!!) பாருங்களேன், இது வயிறு எரிச்சல் அல்ல, சமூக அக்கறை கொண்ட ஒவ்வொருவனுள்ளும் இருக்கும் குமுறலின் வெளிப்பாடு! இதற்கு யாரிடமாவது பணம் வாங்கணுமா என்ன??? சினிமாவில் கருப்பு பணம், வைத்திருப்பவர்களை அடித்து அவர்களிடமிருந்து பிடுங்கி ஏழைகளுக்கு கொடுப்பது போல நடிக்க மட்டுமே தெரிந்தவர்கள் (உண்மையில் அவர்களிடம் தான் அடித்து பிடுங்க வேண்டும்!) மக்களுக்கு சேவை செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது எப்படி நியமாகும்???

யதிராஜ சம்பத் குமார் said...

நிதர்சனம்!!


காங்கிரஸ் கட்சிக் கூட்டங்களுக்கு பட்டாளங்களைச் சேர்ப்பதற்கு விஜய் ஒரு காட்சிப் பொருளாக விளங்குவாரே தவிர, விஜயால் தமிழக காங்கிரஸாருக்கு ஓட்டுக்கள் பெயராது. தவிர, தமிழக காங்கிரஸ் வளர்வதற்கு ஒரே வழி, ஓரிரு தேர்தல்களில் தொடர் தோல்விகளைச் சந்தித்தாலும், அனைத்து தொகுதிகளில் இல்லாவிட்டாலும், செல்வாக்கு மிகுந்த சில தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவதே. மற்றபடி தேர்தலுக்குத் தேர்தல் திராவிடக் கட்சிகளுக்கு வால் பிடித்தால் இப்போதிருப்பது போல் சிலபல சட்டசபை இடங்களோடு திருப்திப் பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

Unknown said...

தமிழருவி மணியன் மீது ஒரு மரியாதையே வருகிறது

Anonymous said...

/***Anonymous said...
கலைஞர் எந்த துறைல இருந்து இந்த சாக்கடைக்கு வந்தாரு?. அதுசரி கட்டுரை முழுதும் ஒரு வயிறெரிச்சல் (மக்கள் அக்கறையை விட) தெரியுதே - யாருகிட்ட எவ்வளவு பணம் வாங்கினாரு இந்த குப்பையை எழுத?****/


நீங்க தான் யாரிடமோ காசு வாங்கியது போல தெரிகிறது!நீங்கள் யோசித்து பேசி இருந்தால், குப்பையை குப்பை என்று சொல்வதை குப்பை என்று சொல்லமாட்டீர்கள்.

Erode Nagaraj... said...

நான் ஒரு ஆசிரியனாக என் மாணவர்களிடத்தில் நிஜமான தலைவர்களைப் பற்றி, அவர்களை தலைவர்கள் என்பதைவிட மதிப்புக்குதந்தவர்கள் என்ற விதத்தில் அறிமுகம் செய்தும் நினைவுபடுத்தியும் வருகிறேன். இதனால் விஜய்-அஜீத் மாயைகள் வெறும் பொம்மைகள் என்ற அளவிலோ அல்லது பொழுது போக்கு என்ற அளவிலோ நிறுத்தப்பட்டுவிடுகின்றன.

இதைப் பெற்றோரும் பள்ளி ஆசிரியர்களும் செய்யும்போது தான் விடிவு காலம் ஏற்படும்.

Rahul said...

/*** Erode Nagaraj... said...
நான் ஒரு ஆசிரியனாக என் மாணவர்களிடத்தில் நிஜமான தலைவர்களைப் பற்றி, அவர்களை தலைவர்கள் என்பதைவிட மதிப்புக்குதந்தவர்கள் என்ற விதத்தில் அறிமுகம் செய்தும் நினைவுபடுத்தியும் வருகிறேன். இதனால் விஜய்-அஜீத் மாயைகள் வெறும் பொம்மைகள் என்ற அளவிலோ அல்லது பொழுது போக்கு என்ற அளவிலோ நிறுத்தப்பட்டுவிடுகின்றன.

இதைப் பெற்றோரும் பள்ளி ஆசிரியர்களும் செய்யும்போது தான் விடிவு காலம் ஏற்படும்.**/

Yes, Excellent job! I am also explaining this to my nephews and niece when ever i have the oppurtinity...... most of the students do not bother about teachers words or advice, so parents are supposed to do this..

Anony8 said...

Instead of speaking to the Indian Agents of the Vatican, Joseph Vijay should take a flight to Rome and talk to them directly. He surely can get more. TNCC president straight away can also be possible.

Anonymous said...

I feel Vijay is lot better than the most of the present politicians. Look at his age, it's definitely not the age at which someone will quit cine field to enter into politics.
This post is heavily biased. What if Vijay turns out to be the next M.G.R/Kamaraj?. Indians basically don't like the new kids on the block, they show their best poetical/oratorial skills in defaming them, but they'll quietly vote for those who give money.
Shame on you indians.

Anonymous said...

/***This post is heavily biased. What if Vijay turns out to be the next M.G.R/Kamaraj?. ***/

Poyya loosu....

Anonymous said...

இங்க பேசுறதுல எத்தன பேரு போன election la ஓட்டு போட்டீங்க

Rahul said...

/**Anonymous said...
இங்க பேசுறதுல எத்தன பேரு போன election la ஓட்டு போட்டீங்க**/

நான் போட்டேன் ஐயா... 49 ஓ விற்கு....