பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, September 03, 2009

வாய் நிறைய வாக்குறுதிகள்!

தேர்தலுக்குத் தேர்தல் அனைத்து அரசியல் கட்சிகளும், அதன் தலைவர்களும் வாக்குறுதிகளை அள்ளி வீசுவது சகஜமே!! கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது, திமுக, தங்கள் கட்சி வெற்றி பெற்று மத்திய ஆட்சியில் பங்கு வகிக்கும் நிலை வந்தால் சென்னையை குடிசைகளே இல்லாத நகரமாக்குவேன் என்றும் கூவத்தை 1967 - ல் சொன்னது போலவே மணக்கச் செய்வேன் என்றும் உறுதியளித்தது. சமீபத்தில் விஜயகாந்த் கூட ஸ்ரீவைகுண்டம் இடைத்தேர்தலில் தேமுதிக வெற்றி பெற்றால், ஸ்ரீவைகுண்டத்தை வைகுண்டமாக மாற்றுவேன் என்றார். இவற்றையெல்லாம் கூட ஒரு வகையில் சேர்த்து விடலாம். அதாவது கடினமாக முயன்றால் செய்துவிடலாம். ஆனால் விஷயம், விடுதலை சிறுத்தைகளின் திருமாவளவன் தேர்தலுக்கு முன் வீரவுரையாற்றிய கூட்டங்களில் அளித்த இரு வாக்குறுதிகள் பற்றியது. ....

1. கடந்த ஆண்டு கோவையில் ஏதோ ஒரு பொதுக்கூட்டத்தில் வீரவுரையாற்றிய, இனமான மற்றும் மானமிகு திருமாவளவன் அவர்கள் பாபர் மசூதியை கட்டவதற்காக தனது தொண்டர்படையுடன் சிறப்பு ரயில் மூலமாக அயோத்திக்கு டிசம்பர் மாதம் கிளம்பப் போவதாக மிகப்பெரிய அதிர்வெடியைத் தன்னாலும் வீச முடியும் என நிரூபித்தார். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை டிசம்பர் மாதம் வந்து சென்றுவிட்டது ஆனால் திருமாவளவன் இன்னும் கிளம்பிய பாடில்லை.இந்த வருடம் கிளம்பப் போவதாக போன வருடம் கிளம்பாததற்கு காரணம் கற்பித்தார். எந்தவொரு பதவியிலுமில்லாத போதே மசூதி கட்டப் புறப்படப் போவதாகச் சொன்னவர் இப்போது மத்திய அரசை ஆதரிக்கும் கூட்டணியில் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறாரே?? சொன்னதைச் செய்வாரா திருமா?? மசூதியோடு சேர்த்து ராமர் கோவிலையும் கட்டுவாரா "மதச்சார்பற்ற" "திருமால்" வளவன்??


2. அவரது இரண்டாவது வாக்குறுதி, முதல் வாக்குறுதியைத் தூக்கிச் சாப்பிடுமளவிற்கு பெரிய அணுகுண்டு. அதுவாவது, இலங்கையில் நடக்கும் இனப்படுகொலைக்கு துணைபோவதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியை தூஷித்து, அதன் தமிழக கிளையை புல் பூண்டு இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்போவதாக சபதமியற்றினார். பிறகு இடையில் என்ன பேரங்கள் நிகழ்ந்தனவோ வாக்களர்களாகிய நம்மைப் போன்ற மூடர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. திடீரென்று அன்னை சோனியா காந்திதான் இலங்கைத் தமிழர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கைச் சுடர், விடிவெள்ளி என்றெல்லாம், ஸ்டாலினைப் புகழும் தமிழக காங்கிரஸார் போல் அன்னையைத் துதிக்க ஆரம்பித்து விட்டார். இதற்கு காரணம் என்னவாக இருக்கும் என பல்வேறு விதமாக ஆராய்ந்தும் வாக்காளர்களின் சிற்றறிவுக்கு எட்டவில்லை. ஒருவேளை, இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவே இல்லையா அல்லது அதற்கு இந்திய அரசாங்கம் அதாவது காங்கிரஸ் கட்சி உடந்தையாக இல்லை என்று நம்பத் தகுந்த புலி வட்டாரங்கள் மூலமாக திருமாவிற்கு தகவல் கிடைத்து விட்டிருக்குமா அல்லது வேறு ஏதாவதா?? ஆக இனி காங்கிரஸ் வளர்வதற்கு திருமா பாடுபடப் போகிறாரா?? வாக்குறுதி என்னவாயிற்று??

--யதிராஜ சம்பத் குமார்

நீதி: திருமா வளவள என்று பேசுவார் அதை எல்லாம் சீரியஸாக எடுத்துக்கொள்ள கூடாது.

18 Comments:

Unknown said...

IV,

Ennamo ponga ivanga ularal ellam kettundu irukka vendiyathuthaan...
Namma thalavithi.. thani oruvanaal intha mathiri alungala ellam onnum panna mudiyathu... makkalidam vizhipunarchi thevai... namma aalunga biriyani pottalathukkum Rs 500 vota vikkara varaikkum ivangala onnume panna mudiyaathu..

Kamesh

ராஜெஷ்.ப. said...

வாக்குருதி - அனுபவிகனும் ஆராயகுடாது :(

Rahul said...
This comment has been removed by a blog administrator.
கௌதமன் said...

இன்னும் ஐந்து ஆண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தல் வரும்பொழுது -அயோத்திக்கு மீண்டும் ரயில் டிக்கட் ரிசர்வ் செய்வார். அதுவரை அதற்காக காசு சேர்ப்பார். இலங்கையில் 2011 க்குள் வேறு யாராவது இன, மான உணர்வுகளோடு - தலை எடுப்பார்கள்! அவர்கள் பெயரைப் பயன்படுத்தி - இவர் வோட்டு வாங்குவார்.

pachhamilaka said...

ஏம்ம்பா ...சொன்னவரே மறந்துவிட்டார் நீங்களாம் மறக்கலியா?

யதிராஜ சம்பத் குமார் said...

பச்சை மிளகாய் ::


என்னங்க இது?? அவ்வளவு சீக்கிரம் மறக்கற மாதிரி விஷயமா பேசிருக்கார் அவரு??

pachhamilaka said...

ஆமா இப்படில்லாம் மறந்தத நினைவு படுத்தினா தமிழ்நாடு மக்கள் தப்பமுடியுமா?

blogpaandi said...

கண்ணால் காண்பதும் பொய்... காதால் கேட்பதும் பொய்... தீர விசாரித்து அறிவதே மெய்.

எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

Loganathan - Web developer said...

திருமாவின் இச்செயலுக்கு நிச்சயம் வருந்துவார்... எங்கே இருக்கிறார் இப்பொழுது..?

சீனு said...

பழகிடுச்சுங்க...இப்படி பேசக்கேட்டு...

Baski said...

நான் சென்னை வந்த புதுசு (~2000). ஒரு நேர் காணலில் (ரவி பெர்நாட) உளறியதை உண்மையில் சகிக்க முடியாது. மீண்டும்/மீண்டும் சொன்னதையே சொல்லிகொண்டிருண்டார். ரவி பெர்நாட் க்கு உண்மையில் பொறுமை (சகிப்பு தன்மை) ரொம்ப ஜாஸ்தி. அவர் கேட்ட ஒரே கேள்வி "எதற்காக போராடுகிறீர்கள்?". அப்போ ஈழபிரச்சனை அவருக்கு தோன்றவில்லை போல, ரொம்பவே அசடு வழிந்தார்.

இவருக்கு இவர் ஜாதி பெரிய பலம்.
தாழ்த்தப்பட்டவர் என்ற கேடையம்.
எதற்கெடுத்தாலும் போராட்டம் என பட்ட்ரைபோடுவது இவரது ஸ்டைல்.

எல்லாம் இவர் முதலாளி மு.க. வின் யோசனையாக இருக்குமே தவிர வளவனுக்கு சுயபுத்தி கிடையாது.

வளவளவன் 'வாள்'க!

Krish said...

எல்லாரையும் போல திருமாவும் ஒரு அரசியல்வாதி! என்ன செய்வர் பாவம்?

தமிழ் நாட்டில் இன்னும் ஜாதிக் கொடுமையால் துன்புறுவோர் பலர். சமத்துவ சமுதாயத்தை முதலில் இங்கு கொண்டு வார முயற்சி செய், பாபர் மசூதியை கட்டுவது இருக்கட்டும்.

( சமத்துவபுரம் என்று ஆரம்பித்தார்களே! அங்கு யாராவது இருக்கிறார்கள?

Vilvarani said...

vilvarani said

பச்சை மிளகாய் :
தாங்கி கொண்டுதான் இருக்கிறோம்

வலைஞன் said...

ஆட்டோ வேணும்னா ஸ்டாண்ட்க்கு போய் வச்சுக்கோங்க!
வீட்டுக்கு வரவழிக்காதீங்க !!

Vilvarani said...

vilvarani said
நமது ஆரம்பத்தின் அடித்தளம் ஆசிரியர்கள். எல்லா ஆசிரியர், ஆசிரியைகளுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்

Anonymous said...

எங்க சாமி இந்த போட்டோவ புடீச்சீங்க????? terrible photo which perfectly matches for the post!!!!

Anonymous said...

தலித் மக்களை மத மாற்றம் செஞ்சு காட்டறேன்னு "அன்னை" கிட்ட வாங்கின கோடிகள் தடுக்குது போல...

Vilvarani said...

vilvarani said

என்னுடைய ராசி மேஷம் ராசி. பலம்களை சொன்னதற்கு மிகவும் நன்றி. இந்த சனி பெயர்ச்சி எல்லோருக்கும் நன்மையாக அமைய நான் கடவுளை வேண்டி கொள்கிறேம்.