உங்களைப் பற்றி: எல்லோரிடமும் கண்டிப்பும் கட்டாயமும் உள்ள விருச்சிகம் இராசி வாசகர்களே, நீங்கள் எதிலும் சுறுசுறுப்பாக இருப்பவர்.துணிச்சலுக்கும், தைரியத்திற்கும் பெயர் போனவர். வாக்கு தவறாதவர். எப்படி இருக்கப் போகிறது இந்த சனிப் பெயர்ச்சி: இது வரை பத்தாம்ஸ்தானத்தில் இருந்த சனீஸ்வரன் இனி லாபச்சனியாக வரும் 21/2 ஆண்டுகளுக்கு என்னென்னெ பலன்கள் தரப்போகிறார் என்பதைப் பார்ப்போம். இதுவரை பத்தாம் ஸ்தானத்தில் இருந்த சனி உங்கள் தொழிலில் சுணக்கம் ஏற்படுத்தியிருக்கலாம். இனி அவையெல்லாமே மெள்ள மெள்ள விலகும். தந்தையாரிடம் இருந்த எதிர்ப்போக்கு விலகும். நல்ல இணக்கம் ஏற்படும். தொழிலில் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். புதிய வகையில் தொழில் அமைக்க கடன் வசதி கிடைக்கும். தூங்கப்போகும் போது நிறைய யோசித்தீர்களே,அந்த யோசனைகளை உபயோகப்படுத்துங்கள். தடைபட்ட பயணங்கள் இனிதே நிறைவேறும். சுகங்களை அனுபவிக்க முடியாமல் போன காலங்களை நினைக்காமல் இந்த நல்ல காலத்தை நினைத்து புதிய சுகங்களை அனுபவியுங்கள். பிள்ளைகளை கூர்ந்து கவனியுங்கள். சிலரது பிள்ளைகள் வழிமாறி போகவும் வாய்ப்பு இருக்கிறது, எனவே எச்சரிக்கை தேவை. தாயார் மற்றும் தாய் வழி உறவினர்களிடம் இருந்த கசப்புணர்ச்சி நீங்கும். புதிய வீடு, வாகனம், மனை வாங்கும் நேரமிது, பயன்படுத்திக் கொள்ளுங்கள். கர்ப்பினிப் பெண்கள் உடல்நிலையில் கவனம் எடுத்துக் கொள்ளவும். சிகரெட் மற்றும் குடிப்பழக்கம் உள்ளவர்கள் அதனை விடுவது நல்லது. வாகனங்களில் செல்லும்போது கவனத்துடன் செல்லவும். அடிக்கடி எரிச்சல் வரும் சூழ்நிலைகள் வரலாம், பொறுமையைக் கையாளுங்கள். வாழ்க்கைத்துணையுடன் ஒத்துப் போங்கள். சொன்ன வாக்கை காப்பாற்றுங்கள். நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனனகளில் பெரியவர்களின் பேச்சைக் கேளுங்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாறுதல், எதிர்பார்த்த பணிஉயர்வு கிடைக்கும். வேலையிழந்தவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். தந்தை வழி உறவினர்களி்ன் ஆதரவு கிடைக்கும். பூர்வீகச் சொத்தில் இருந்து வந்த வில்லங்கம் நீங்கும் உங்கள் பக்கம் தீர்ப்பாகும். ஆன்மீகம் நாட்டம் அதிகரித்து பெரிய மகான்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். மங்கள் நிகழ்ச்சிகள் தடையின்றி நடக்கும், சில நிகழ்ச்சிகளுக்கு நீங்களே தலைமை வகிக்க வேண்டிய நிலை. உறவினர்களிடத்திலும், நண்பர்களிடத்திலும், சமுதாயத்திலும் உங்கள் மரியாதை கூடும். சிலருக்கு வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி கிடைக்கும். வழக்கு வியாஜ்ஜியங்களில் வெற்றி கிடைக்கும். தொலைதூர பிரயாணங்கள், ஆன்மீக யாத்திரைகள் கிடைக்கும். உடல் பருமன் ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வறுத்த, பொரித்த உணவு வகைகளை அறவே தவிருங்கள். கலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் நாட்டம் பிறக்கும்.அரசிடமிருந்து பாராட்டு புகழ்ச்சி கிடைக்கும். சமூக சேவையில் ஆர்வம் பிறக்கும். உத்தியோகத்தில் இருந்த சச்சரவுகள் நீங்கும். லாபம் பிறக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். லீசில் இருந்த சொத்து திரும்பும். மேலதிகாரிடம் இருந்த சுணக்கம் நீங்கும். பேச்சில் இருந்த திருமணம் உங்கள் விருப்பபடி இனிதே நடைபெறும். மாணவ மாணவிகள் படிப்பில் கொஞ்சம் முயற்சி செய்தால் சாதனைகள் புரியலாம். முன்னோர்கள் ஆசி இனிதே கிடைக்கும். பட்டப்படிப்பில் இருந்த தடைகள் நீங்கி பட்டத்தை வாங்குவீர்கள். மொத்தத்தில் அரைகுறையுடன் இருந்த வாழ்க்கையை செல்வம், செல்வாக்குடன் முழுமையாக்கி விடும் இந்த சனிப்பெயர்ச்சி. நக்ஷத்திர ரீதியான பலன்கள்: விசாகம் 4ம் பாதம்: தொழிலில் அதீத முன்னேற்றம் ஏற்படும். போட்டிகள் பொறாமைகள் விலகும். சந்தையில் உங்கள் வியாபாரம் பெருகும். உடல்நிலை சிறப்பாக இருக்கும். வாராக்கடன்கள் வந்து சேரும். சகோதர சகோதரி்களிடம் அன்பு கூடும். ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியை வணங்கினால் எல்லாம் தடையின்றி நடக்கும். அனுஷம்: சில காலங்களாக இருந்த சோதனைகள் விலகி சாதனைகள் வரும். தொழிலில் அபிவிருத்தி, லாபம் கிடைக்கும். கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும். அன்னியோன்னியம் ஏற்படும். சுபகாரியங்கள் இனிதே நடக்கும். ஹனுமனை வணங்கி எதையும் ஆரம்பித்தால் வெற்றிதான். கேட்டை : தன லாபம், தன சேர்க்கை உங்களைத் தேடி வரும். தைரியமும் தன்னம்பிக்கை சுடர்விடும். சோம்பலை விடுங்கள். பிரிந்த சொந்தங்கள் தேடிவரும். ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் பெண்ணுக்கு நல்ல வரன் கிடைக்கும். எதிர்பாராத பயணத்தில் அனுகூலம் உண்டாகும். ஸ்ரீவிஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்லுங்கள், நனமைகள் தேடிவரும். குறிப்பு: இது மாணவ மணிகளுக்கு: ஸ்ரீ நவக்ரஹ வழிபாடு நன்மையைத்தரும். லக்ன ரீதியான பலன்கள்: [1] மேலே உள்ள டேபிளை எப்படி பயன்படுத்துவது? நீங்கள் விருச்சிகம் இராசியில் பிறந்து லக்னம் தெரிந்ததென்றால் அதற்குள்ள பலனைத் தெரிந்து கொள்ளவும். அதற்குள்ள பரிகாரத்தை தெரிந்து கொள்ளவும். உதாரணமாக, நீங்கள் விருச்சிகம் இராசியில் பிறந்து கும்பம் லக்னத்தில் பிறந்தவரென்றால் உங்களுக்கு 65% சதவிகிதம் நல்ல பலன்கள் கிடைக்கும். மேலும் நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்: லலிதா ஸகஸ்ரநாம பாராயணம் மற்றும் மூகபஞ்சக சதீ சொல்வது, தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது. எனக்கு லக்னமேத் தெரியாது ஆனால் விருச்சிகம் இராசி என்பவர்கள் கணபதி பூஜை மற்றும துர்ஹா ஸூக்தம் சொல்வது, முடிந்த வரையில் அம்பாள் நாமாவை சொல்வது. [2] இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம். நக்ஷத்திர வாரியாக சில குறிப்புகள்: அதிர்ஷ்டம் தரும் எண்களும், திசைகளும் ஜாதகத்திற்கு ஜாதகம் மாறும். இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுவானவையே. இன்றைய ஜோதிடக் குறிப்பு: இன்று நாம் பார்க்கப் போகும் தலைப்பு: திருமணப் பொருத்தம் எப்படி பார்ப்பது? [ குறிப்பு: திருமணமானவர்கள் இதை பிரயோகப்படுத்தி பார்க்க கூடாது, மிக முக்கியமாக திருமணம் முடிவானவர்கள், காதலித்துக் கொண்டிருப்பவர்கள் பிரயோகப்படுத்தி பார்க்காதீர்கள்] இதில் பல ஜோதிடர்கள் பல விதமான முறைகளில் பார்க்கிறார்கள். ஆனால் எங்கள் பரம்பரையில் சில முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றது. அந்த சூக்ஷுமத்தை நமது இட்லிவடை வாசகர்கள் தெரிந்து கொள்ள தருகிறேன். முதலில் ஒரு விஷயம் சொல்கிறென், அதை புரிந்து கொள்ளுங்கள். பொருத்தம் பார்க்க வேண்டிய ஆண் ஜாதகம் - அதை இனி வரன் ஜாதகம் என்று நினைவில் கொள்ளுங்கள். பொருத்தம் பார்க்க வேண்டிய பெண் ஜாதகம் - அதை இனி வதூ ஜாதகம் என்று நினைவில் கொள்ளுங்கள். எத்தனை ஸ்டெப்ஸ் உள்ளன? [1] நக்ஷத்ர விஷயாதி - தசவிதப் பொருத்தம் [2] திசா விஷயாதி - இருவருக்கும் உள்ள திசையை வைத்து பார்ப்பது. [3] பாப ஸாம்மிய விஷயாதி. [4] செவ்வாய் தோஷ விஷயாதி. [5] தோஷ நிவர்த்தி விஷயாதி. என 5 விதமான ஸ்டெப்ஸ் உள்ளன. நக்ஷத்ர விஷயாதி: இந்த விஷயத்தில் நாம் வதூ, வரன் ஆகியோரின் ஜாதகத்திலுள்ள நக்ஷத்ரத்தை வைத்து பார்ப்பது. [1] தினம் - Dhina Porutham - வதூ நக்ஷத்ரதிலிருந்து வரன் நக்ஷத்ரத்தை CLOCKWISE ஆக எண்ணுங்கள். எண்ணும் போது வதூ நக்ஷத்ரம் ஒன்றாகக் கொண்டு எண்ணவும். உதாரணம் 01: வதூ நக்ஷத்ரம்: உத்திரம் இராசி: ஸிம்ஹம்; வரன் நக்ஷத்ரம்: ரேவதி, இராசி. மீனம் CLOCKWISE ஆக எண்ணுங்கள் 16 விடையாக வரும் வருகிறதா? உதாரணம் 02: வதூ நக்ஷத்ரம்: ரேவதி, இராசி. மீனம்; வரன் நக்ஷத்ரம்: பூசம், இராசி. கடகம் CLOCKWISE ஆக எண்ணுங்கள் 9 விடையாக வரும் வருகிறதா? அப்படி வருகிற விடையை 9ஆல் வகுக்கவும்(Divide by 9) உங்களுக்கு என்ன மீதி வருகிறதோ அதுதான் நமக்கு தேவை. உங்களுக்கு வரும் விடை 0, 1, 2, 4, 6, 8 வந்தால் பொருத்தம் இருக்கிறது என்று பொருள். உதாரணமாக நமது உதாரணம் 01ல் நமக்கு வரும் விடை 16. இந்த 16ஐ 9ல் வகுங்கள். வகுத்தால் வரும். எனவே தினப்பொருத்தம் இல்லை. [குறிப்பு: உத்தமம் - நன்று; மத்யமம்: பரவாயில்லை; அதமம், அதமாதமம்: கூடவே கூடாது] [4] ஸ்திரீ தீர்க்கம் - Sthree Theergam - வதூ நக்ஷத்ரதிலிருந்து வரன் நக்ஷத்ரத்தை CLOCKWISE ஆக எண்ணுங்கள். எண்ணும் போது வதூ நக்ஷத்ரம் ஒன்றாகக் கொண்டு எண்ணவும். உங்களுக்கு வரும் விடை 13க்கு மேலாவது, 7க்கு மேலாவது வந்தால் பொருத்தம் இருக்கிறது என்று பொருள். உதாரணமாக வதூ நக்ஷத்ரம் கார்த்திகையின் பிராணி: ஆடு. வரன் நக்ஷத்ரம் விசாகத்தின் பிராணி: புலி. இந்த இரண்டு பிராணிகளுக்கும் பொருந்தாது. எனவே பிராணி பொருத்தம் இல்லை. உதாரணம்: வதூ இராசி: மேஷம்; வரன் இராசி: துலாம் - பொருத்தம் இருக்கிறதா? வதூ அதிபதி: செவ்வாய்; வரன் அதிபதி - சுக்ரன் - செவ்வாய்க்கு சுக்ரன் மித்ரன், எனவே பொருத்தம் உள்ளது. உதாரணம்: வதூ இராசி: மேஷம்; வரன் இராசி: ஸிம்ஹம் - பொருத்தம் இருக்கிறதா? மேலே உள்ள டேபிளில் பார்க்கவும், மேஷத்திற்கு ஸிம்ஹம் வசியம் என்று போட்டிருக்கிறது. எனவே பொருத்தம் உள்ளது. [9] இரஜ்ஜு(சரட்டு பொருத்தம்) - Rajju - ஒவ்வொரு நக்ஷத்ரத்திற்கும்(As per the table: நக்ஷத்திர வாரியாக சில குறிப்புகள்) ஒவ்வொரு இரஜ்ஜு இருக்கும். ஆண் பெண் இருவருக்கும் ஒரே இரஜ்ஜு இருந்தால் பொருத்தம் இல்லை. வேறு வேறு இரஜ்ஜுவாக இருந்தால் பொருந்தும். வதூ நக்ஷத்ரம்: மிருகசீர்ஷம் - சிரோரஜ்ஜு வரன் நக்ஷத்ரம்: பூராடம் - தொடை ரஜ்ஜு இருவரும் வேறு வேறு ரஜ்ஜு. எனவே பொருத்தம் உள்ளது. [10] வேதை - Vethai - ஒவ்வொரு நக்ஷத்ரத்திற்கும்(As per the table: நக்ஷத்திர வாரியாக சில குறிப்புகள்) ஒவ்வொரு நக்ஷத்ரம் வேதையாக இருக்கும். எனவே அப்படியிருக்கும் நக்ஷத்ரம் பொருந்தாது. உதாரணம் 01: வதூ நக்ஷத்ரம்: அசுபதி வரன் நக்ஷத்ரம்: கேட்டை இரு நக்ஷத்ரமும் வேதை, எனவே பொருந்தாது. உதாரணம் : வரன் நக்ஷத்ரம் - அசுபதி - இடப்பார்சுவ நாடி வதூ நக்ஷத்ரம் - அவிட்டம் - மத்ய நாடி இருவரும் வேறு வேறு நாடி, எனவே பொருத்தம் உள்ளது. இந்த 11 பொருத்தங்களில் atleast 6 பொருத்தமாவது இருத்தல் வேண்டும். சரி ஐயா, எந்தெந்த 6 இருக்க வேண்டும்? மிக முக்கியமாக தினம், கணம், பிராணி, இரஜ்ஜு, வேதை, நாடி ஆகிய பொருத்தங்கள் கட்டாயம் இருக்க வேண்டும். சில பேர் தினப் பொருத்தத்தை விட்டு மற்ற பொருத்தத்தைப் பார்க்கிறார்கள். அது சரியல்ல. அதுதான் மிக முக்கியமானது. நான் நக்ஷத்ர ரீதியாக சில குறிப்புகள் கொடுத்து வருகிறேன் அல்லவா, அவை இது போன்ற பொருத்தம் பார்க்க உதவுவதற்குதான். அடுத்த ஸ்டெப்ஸ்களை அடுத்தடுத்த பதிவுகளில் தருகிறேன். [குறிப்பு: நமது இட்லிவடை வாசகர்களுக்காக ஸ்பெஷல் பொருத்தம் சாப்ட்வேர் தயாரித்து வருகிறேன். அதை எனது இணையதளத்திலும் இணைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மிக விரைவில் அதற்கான பணிகள் நடந்து முடிந்தவுடன் சொல்கிறேன். நமது வாசகர்கள் அதில் சென்று இலவசமாக பொருத்தம் பார்த்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளலாம். எனக்கு(ஜோதிடர்) தரவேண்டிய காணிக்கையை பக்கத்திலிருக்கும் கோவிலில் சேருங்கள். ஏனைய மதத்தினர் என்றால் அவரவர் ஆலயத்தில் சேர்க்கவும். ] இனி தனுசு இராசிக்குண்டான பலன்களில் சந்திபோம். நன்றி
விருச்சிகம் இராசிக்குள்ள சனிப்பெயர்ச்சி பொது பலன்கள்லக்னம் இராசி பலன்கள் பரிகாரம் மேஷம் விருச்சிகம் 70/100 கந்த ஷஷ்டி கவசம் படிப்பது ரிஷபம் விருச்சிகம் 65/100 ஸ்ரீஸூக்தம் சொல்வது மிதுனம் விருச்சிகம் 60/100 விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது கடகம் விருச்சிகம் 65/100 ஸ்ரீ லலிதா ஸகஸ்ரநாமம் சொல்வது ஸிம்ஹம் விருச்சிகம் 60/100 ஆதித்யஹ்ருதயம், மஹாலக்ஷிமி காயத்ரி, நாராயண காயத்ரி, நவக்ரஹ காயத்ரி சொல்வது கன்னி விருச்சிகம் 60/100 விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது, முருகனை வழிபடுவது, முடிந்த வரை இராம நாமம் சொல்வது, மகான்களை வழிபடவும் துலாம் விருச்சிகம் 55/100 கணபதி காயத்ரி, நவக்ரஹ ஸூக்தம் சொல்வது, ஸ்ரீஸூக்தம் சொல்வது. விருச்சிகம் விருச்சிகம் 75/100 கணபதி பூஜை மற்றும துர்ஹா ஸூக்தம் சொல்வது, முடிந்த வரையில் அம்பாள் நாமாவை சொல்வது. தனுர் விருச்சிகம் 70/100 அபிராமி அந்தாதி சொல்லுங்கள் மகரம் விருச்சிகம் 65/100 குலதெய்வ வழிபாடு செய்வது மற்றும் முன்னோர்களை வழிபடுவது. கும்பம் விருச்சிகம் 65/100 லலிதா ஸகஸ்ரநாம பாராயணம் மற்றும் மூகபஞ்சக சதீ சொல்வது, தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது. மீனம் விருச்சிகம் 60/100 தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது மற்றும் கணபதி காயத்ரி சொல்வது லக்னமே தெரியாது விருச்சிகம் 75/100 கணபதி பூஜை மற்றும துர்ஹா ஸூக்தம் சொல்வது, முடிந்த வரையில் அம்பாள் நாமாவை சொல்வது. குறிப்பு: * நக்ஷத்திரங்கள் பலன்கள் விசாகம் - 4 ம் பாதம் அனுஷம் கேட்டை இராசி விருச்சிகம் விருச்சிகம் விருச்சிகம் இராசியாதிபதி செவ்வாய் செவ்வாய் செவ்வாய் நக்ஷத்திர அதிபதி வியாழன் சனி புதன் அதிதேவதைகள் இந்திரன், அக்னி மித்திரன் இந்திரன் கணம் இராக்ஷஸ் கணம் தேவகணம் இராக்ஷஸ் கணம் நாடி பார்ஸுவ - இடது மத்ய பார்ஸுவ - வலது மிருகம் பெண் புலி பெண் மான் ஆண் மான் பக்ஷி செவ்வாக் சாதகம் சக்கிரவா விருக்ஷம் விளா மகிழ் பிராய் இரஜ்ஜு வயிறு தொடை பாதம் வேதை நக்ஷத்ரம் கார்த்திகை பரணி அசுவதி அதிர்ஷ்டம் தரும் எண்கள் 1, 3, 4, 6, 7, 9 1, 2, 3, 6, 7, 9 1, 3, 5, 6, 7, 9 அதிர்ஷ்டம் தரும் திசைகள் கிழக்கு, வடக்கு கிழக்கு, தெற்கு கிழக்கு குறிப்பு: நக்ஷத்ரம் இராசி அசுபதி, பரணி, கார்த்திகை 1ம் பாதம் மேஷம் கார்த்திகை 2,3,4ம் பாதங்கள், உரோஹினி, மிருகசீர்ஷம் 1,2 ம் பாதங்கள் ரிஷபம் மிருகசீர்ஷம் 3,4 ம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள் மிதுனம் புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம் கடகம் மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம் ஸிம்ஹம் உத்திரம் 2,3,4ம் பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1, 2ம் பாதங்கள் கன்னி சித்திரை 3,4ம் பாதங்கள், ஸ்வாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள் துலாம் விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை விருச்சிகம் மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் தனுசு உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2ம் பாதங்கள் மகரம் அவிட்டம் 3,4ம் பாதங்கள், ஸதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதங்கள் கும்பம் பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி மீனம்
[2] கணம் - Ganaporutham - ஒவ்வொரு நக்ஷத்ரத்திற்கும(As per the table: நக்ஷத்திர வாரியாக சில குறிப்புகள்) ஒவ்வொரு கணம் இருக்கும். ஆண் பெண் ஒரே கணமானால் உத்தமம். ஆண் தேவகணமாகவும் பெண் மனுஷயகணமாகவும் ஆனால் அது மத்யமம். ஆண் தேவகணமாகவும் பெண் இராக்ஷஸகணமாகவும் ஆனால் அது அதமம். ஆண் மனுஷயகணமாகவும் பெண் இராக்ஷஸகணமாகவும் ஆனால் அது அதமாதமம்.
[3] மாஹேந்திரம் - Mahendram - வதூ நக்ஷத்ரதிலிருந்து வரன் நக்ஷத்ரத்தை CLOCKWISE ஆக எண்ணுங்கள். எண்ணும் போது வதூ நக்ஷத்ரம் ஒன்றாகக் கொண்டு எண்ணவும். உங்களுக்கு வரும் விடை 4, 7, 10, 13, 16, 19, 22, 25 வந்தால் பொருத்தம் இருக்கிறது என்று பொருள்.
[5] பிராணி - Prani Porutham - ஒவ்வொரு நக்ஷத்ரத்திற்கும(As per the table: நக்ஷத்திர வாரியாக சில குறிப்புகள்) ஒவ்வொரு பிராணி இருக்கும்.
[6] இராசி - Rasi - வதூ இராசியிலிருந்து வரன் இராசியை CLOCKWISE ஆக எண்ணுங்கள். எண்ணும் போது வதூ இராசியை ஒன்றாகக் கொண்டு எண்ணவும். உங்களுக்கு வரும் விடை 6க்கு மேல் வந்தால் பொருத்தம் இருக்கிறது என்று பொருள்.
[7] இராசியாதிபதி - Rasiyathipathi -இராசி அதிபதி மித்ரர்கள்(நட்பு) மேஷம், விருச்சிகம் செவ்வாய் புதன், சுக்ரன் ரிஷபம், துலாம் சுக்ரன் சூரியன், சந்திரனைத் தவிர மற்றவர்கள் மிதுனம், கன்னி புதன் சூரியனைத் தவிர மற்றவர்கள் கடகம் சந்திரன் வியாழன், புதன் ஸிம்ஹம் சூரியன் வியாழன் தனுசு, மீனம் வியாழன் செவ்வாயைத் தவிர மற்ற்வர்கள் மகரம், கும்பம் சனி புதன், வியாழன், சுக்ரன்
[8] வசியம் - Vasiyamவதூ இராசி வரன் இராசி மேஷம் ஸிம்ஹம், விருச்சிகம் ரிஷபம் கடகம், துலாம் மிதுனம் கன்னி கடகம் விருச்சிகம், தனுசு ஸிம்ஹம் துலாம் கன்னி மேஷம், மிதுனம், மீனம் துலாம் மகரம் விருச்சிகம் கடகம், தனுசு தனுசு மேஷம் மகரம் மேஷம், மீனம் கும்பம் மகரம் மீனம் மேஷம்
உதாரணம்:
[11] நாடி - Nadi - ஒவ்வொரு நக்ஷத்ரத்திற்கும்(As per the table: நக்ஷத்திர வாரியாக சில குறிப்புகள்) ஒவ்வொரு நாடி இருக்கும். ஆண் பெண் இருவருக்கும் ஒரே நாடி இருந்தால் பொருத்தம் இல்லை. வேறு வேறு நாடியாக இருந்தால் பொருந்தும்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, September 22, 2009
விருச்சிக இராசி பலன்கள்
Posted by IdlyVadai at 9/22/2009 02:22:00 PM
Labels: ராசிபலன்
Subscribe to:
Post Comments (Atom)
7 Comments:
Keep going on your good work sir!!!
திருவாளர் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு, நன்றிகள் பல. எனக்கு ஒரு அடிப்படை சந்தேகம்! தங்களது முதல் பதிவில் சனி பகவான் ஸிம்ஹ ராசியிலிருந்து கன்னி ராசிக்கு இடம் பெயர்வதாக சொல்லி இருந்தீர்கள். விளக்கப்படத்தில் கன்னி ராசியிலிருந்து மிதுனத்திற்க்கும், விருச்சிகத்திற்க்கும், மீனத்திற்க்கும் அம்புக்குறிகள் வரைந்துள்ளீர்கள். அதை அடிப்படையாக வைத்து தங்களது விளக்கப்படம் பற்றி மேலும் விவரங்கள் அளித்தால் பயனுள்ளதாக இருக்கும்.
திருவாளர் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு, நன்றிகள் பல. எனக்கு ஒரு அடிப்படை சந்தேகம்! தங்களது முதல் பதிவில் சனி பகவான் ஸிம்ஹ ராசியிலிருந்து கன்னி ராசிக்கு இடம் பெயர்வதாக சொல்லி இருந்தீர்கள். விளக்கப்படத்தில் கன்னி ராசியிலிருந்து மிதுனத்திற்க்கும், விருச்சிகத்திற்க்கும், மீனத்திற்க்கும் அம்புக்குறிகள் வரைந்துள்ளீர்கள். அதை அடிப்படையாக வைத்து தங்களது விளக்கப்படம் பற்றி மேலும் விவரங்கள் அளித்தால் பயனுள்ளதாக இருக்கும்.
Hello Sir,
Really good work!!! Thank you.
adhuvum thirumana palangal and about the software you told here, mikka nandri.
//எனக்கு(ஜோதிடர்) தரவேண்டிய காணிக்கையை பக்கத்திலிருக்கும் கோவிலில் சேருங்கள். ஏனைய மதத்தினர் என்றால் அவரவர் ஆலயத்தில் சேர்க்கவும்.//
தங்களின் நல்ல உள்ளத்திற்கு இறைவன் நல்லதையே செய்வார்.
நன்றி.
சூப்பர் சார்...மிக்க நன்றி..
danusa rasi mattrum magaram, kumbam, meena rasi palan ellam podalaya?
Post a Comment