பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, September 20, 2009

தமிழ் பற்றும் பாசாங்கும் - ஆர்.ரங்கராஜ் பாண்டே

உரத்த சிந்தனை - தமிழ் பற்றும் பாசாங்கும்
ஆர்.ரங்கராஜ் பாண்டே பத்திரிகையாளர்....

சமூக நல விரும்பிகள், அறிஞர் கள், ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், பொருளாதார வல்லுனர்கள், உற்பத்தி யாளர்கள், அரசியல் விமர்சகர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், சிந்தனையாளர்கள் ஆகியோர் அவ்வப்போது நடைபெறும் நிகழ்வுகள் குறித்து தமது கருத்துகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பகுதி இது. ஞாயிறு தோறும் வெளிவரும்.


எனக்கும்
தமிழ் தான் மூச்சு ஆனால்,
அதை பிறர் மேல் விடேன்!
- ஞானக்கூத்தன்


நல்ல வியாபாரி, குப்பையைக் கூட விற்று காசு சம்பாதித்து விடுவான். அவன் கையில், கோமேதகத்தைக் கொடுத்தால்...? அப்படி, இன்றைய அரசியல் வியாபாரிகளின் கையில் சிக்கித் தவிக்கும் கோமேதகம் தான் தமிழ். இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தினர்; அதற்குப் பதிலாக, தமிழ் வளர்ப்புப் போராட்டம் நடத்தியிருந்தால், புண்ணியமாக இருந்திருக்கும். இவர்கள் நடத்திய கூத்தில், இரண்டு மூன்று தலைமுறைக்கு, தமிழைத் தவிர வேறு எந்த மொழியும் தெரியவில்லை. அந்தோ பரிதாபம்... தமிழும் முழுதாய் தெரியவில்லை. வியாபாரப் பொருளாகவும், அரசியல் ஆதாயமாகவும் ஆக்கப்பட்ட தமிழ், சேர்ந்தாற்போல் நான்கு வார்த்தைகள் தமிழில் பேசிவிட்டாலே, வியப்போடு பார்க்கப்படும் காலம் இது.


ஆங்கிலத்தில் பேசினால் கவுரவம்; தமிழில் செப்பினால் அவமானம் என்பது தான் யதார்த்த நிலை. தொடர்ந்து 35 ஆண்டுகளாய், தமிழாய்ந்த தமிழர்கள் ஆட்சி நடத்தும் இந்த தமிழகத்தில் தான், தமிழ் பேசினால் தங்கக் காசு வழங்கும் போட்டி, ஒரு "டிவி' நிகழ்ச்சியானது. இன்னொரு தமிழ்ச் சேனல், தமிழ் பேச்சு எங்கள் மூச்சு என, தடையின்றி தமிழ் பேசத் தெரிந்தவர்களுக்காக, ஒரு போட்டியே நடத்துகிறது. இவற்றைக் கூட ஏற்றுக்கொள்ளலாம். தமிழக அரசே தலைமையேற்று நடத்தும் கொடுமையைத் தான் ஜீரணிக்கவே முடியவில்லை. "அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்படும்' என அறிவிப்பு பலகை வைக்க உத்தரவிட்டனர். "அனைத்தும் தெரிந்த கடவுளுக்கு, தமிழ் மட்டும் தெரியாதா' என கேலி வேறு.


இன்று நடக்கும் அர்ச்சனைகளில் எத்தனை, தமிழில் நடக்கின்றன என ஆய்வு நடத்தினால், தெரிந்துவிடும் இவர்கள் திட்டத்துக்கு உள்ள வரவேற்பு. தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை என ஒரு தனித் துறையையே உருவாக்கினர். சாத்தையா என, இயற்பெயரே தமிழில் அமைந்திருந்தாலும், மொழி மீது கொண்ட காதலால் தமிழ்க்குடிமகனாக மாறியவரை, அமைச்சராக்கி அழகு பார்த்தனர். சரி, என்ன சாதித்தனர்? "அதிகாரிகளும், அலுவலர்களும் தமிழில் தான் கையெழுத்திட வேண்டும்; கோப்புகளும், கடிதங்களும், அரசாணைகளும் தமிழில் தான் இருக்க வேண்டும்' என அரசாணை வெளியிட்டதோடு சரி. அந்த அரசாணையாவது தமிழில் இருந்ததா எனத் தெரியவில்லை.


இப்போது ஏன், தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறைக்கு தனி அமைச்சரில்லை? ஒருவேளை, தேவையான அளவுக்கு தமிழும், பண்பாடும் வளர்ந்துவிட்டதோ! அடுத்து, தமிழ் சினிமாக்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரிச்சலுகை. எதற்காக? தமிழ் வளர்ச்சிக்காக. அப்படி என்ன தமிழ் வளர்த்திருக்கின்றனர்? "சம்திங்... சம்திங்...' என வைக்கப் பட்ட சினிமா பெயர், "உனக்கும் எனக்கும்' என மாற்றப்பட்டது. தமிழ்த் தாய் பூரிப்பதற்கு இதை விட உருப்படியான காரணம், வேறு என்ன வேண்டும்? இன்று வரை அந்தப் படத்தின் பெயர், எல்லாராலும், "சம்திங்... சம்திங்...' என்று தான் அறியப்படுகிறது. "எல்லாரும் தலைக்கவசம் அணிந்து தான் வண்டி ஓட்ட வேண்டும்' என உத்தரவு போட்டவர்களுக்கு, "எல்லா திரைப்படங்களுக்கும் தமிழில் தான் பெயர் வைக்க வேண்டும்' என உத்தரவு போடத் தெரியவில்லை போலும்.


தலைக்கவச உத்தரவால், வாகன ஓட்டிகள் வாழ்கின்றனரோ இல்லையோ... போலீஸ்காரர்கள் வாழ்கின்றனர். தமிழ் சினிமா பெயரால் யார் வாழ்கின்றனர் என்பதை, நான் சொல்லப்போவதில்லை. ஜெயலலிதா மட்டும் சளைத்தவரா? தன் ஆட்சிக் காலத்தில், "அறிவியல் தமிழ்' என்றொரு அருமைத் திட்டத்தைக் கொண்டு வந்தார். அதன் நோக்கம் என்ன? அதை எப்படி செயல்படுத்துவது என்பதெல்லாம், கல்வித் துறை அதிகாரிகளுக்கே மில்லியன் டாலர் கேள்விகளாய் மிரட்டின. ஒப்புக்கு ஒரு தேர்வாம்... எழுதினால் மட்டும் போதுமாம்... தேர்வாக வேண்டிய தேவை இல்லையாம். கட்டாயத் தேர்வு வைத்தாலே, "பிட்' எடுத்துச் செல்கிற நம் சமுதாயத்தில், இப்படி ஓர் அறிவிப்பு வெளியிட்டால், எவன் முக்கியத்துவம் கொடுப்பான்? யாரும் கொடுத்துவிடக் கூடாது என்பது தான் தங்கத்தாரகையின் நோக்கம் போலும்.


இவர்கள் பாஷையில், மொழித் துரோக காங்கிரஸ் ஆட்சி நடந்து, 40 ஆண்டுகள் முடிந்துவிட்டன. என்ன செய்திருக்கின்றனர் திராவிட சிகாமணிகள்? இன்றைய அமைச்சர் பெருமக்களில், பார்லிமென்ட் உறுப்பினர்களில், சட்டசபை சிங்கங்களில் எத்தனை பேருக்கு தங்குத் தடையின்றி தமிழை எழுதப் படிக்கத் தெரியும்...? பாவம், அன்புமணி ராமதாஸ். ஒரு நிகழ்ச்சியில், கேமரா முன்னாலேயே தப்பு தப்பாக தமிழ் எழுதி மாட்டிக்கொண்டார். அதற்குப் பொருள், அவர் ஒருவர் மட்டுமே தமிழ் தெரியாதவர் என்பதல்ல; அவர் மட்டுமே மாட்டிக் கொண்டவர். கல்லூரிகளில் தமிழ் இன்று எத்தகைய படிப்பாகப் பார்க்கப்படுகிறது? வேறு எந்தத் துறையும் கிடைக்காத மாணவர்கள் தான் தமிழைத் தேர்ந்தெடுக்கின்றனர்.


பத்தாம் வகுப்பிலும், பன்னிரண்டாம் வகுப்பிலும் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களில் எத்தனை பேர், தமிழைத் தங்கள் எதிர்காலமாய்த் தேர்ந்தெடுக்கின்றனர்? ஏதோ ஆர்வக் கோளாறில் மகன்காரன் கேட்டால் கூட, அப்பாக்காரர் பிடரியில் தட்டுவார், "உருப்படறதுக் கான வழியைப் பாருடா, எருமை' என்று. தங்கத் தமிழகத்தில், "தமிழ் படித்திருந்தால் மட்டுமே இந்த வேலை கிடைக்கும்' என ஒரு வேலையாவது உண்டா? இந்தத் தமிழக அரசு நடத்தும் எந்தப் போட்டித் தேர்விலாவது, "தமிழ் படித்தவர்களுக்கு முன்னுரிமை' என்றொரு வாசகம் அச்சடிக்கப்பட்டது உண்டா? தமிழைத் தவிர வேறு எந்த மொழியும் தெரியாமல், எந்தக் கலையும் பயிலாமல், பள்ளியிலும் கல்லூரியிலும் தமிழ் மட்டுமே படித்து வெளிவரும் மாணவர்களின் எதிர்காலத்துக்கும், வேலைவாய்ப்புக்கும் எந்த உத்தரவாதமாவது இருக்கிறதா?


பள்ளிக் கல்வியில் எந்த வகுப்பிலாவது, தமிழ்ப் பாடத்துக்கு 100க்கு 100 மதிப்பெண் வழங்கப்படுகிறதா? பிற பாடங்களுக்கும், சமஸ்கிருதம், பிரெஞ்ச் போன்ற பிற மொழிகளுக்கும் 100 சதவீத மதிப்பெண்கள் வழங்கப்படும் போது, தமிழ் மட்டும் புறக்கணிக்கப்படும் பின்னணி என்ன? நுழைவுத் தேர்வையே ரத்து செய்த, தேர்வு நேரத்தை 15 நிமிடம் வரை அதிகரிக்க முடிந்த அரசால், தமிழுக்கு 100க்கு 100 வழங்க முடியாதா? ஆண்டுதோறும் உயர்நிலைக் கல்வி முடிக்கும் ஒன்பது லட்சம் மாணவர்கள், மேனிலைக் கல்வி முடிக்கும் ஆறு லட்சம் மாணவர்களில், ஒருவர் கூடவா தமிழில் 100 மதிப்பெண் பெறத் தகுதியில்லாதவர்? அதுவே உண்மையெனில், அந்நிலைக்கு காரணம் யார்? தமிழ், தமிழ் என முழங்கி தமிழகத்தைக் கூறு போட முயன்றவர்கள், தமிழை சோறு போடும் மொழியாக மாற்றினார்களா?


தமிழ் படித்தால் கஞ்சிக்கு வழி கிடைக்கும் என்ற நிலையிருந்தால், இவன் ஏன் பரதேசம் போகிறான்? தமிழ் மட்டும் படித்ததால், உள்ளூரில் போணியாகாத நிலை. தமிழைத் தவிர வேறெதுவும் தெரியாததால், வெளிமாநிலங்களிலும் விலை போகாத அவலம். இது தானே மிச்சம்! இது தானே இவர்கள் வாங்கித் தந்த வரம்! எந்தத் துறையிலும் விற்பன்னராய் இல்லாது, வெறும் ஆங்கிலம் மட்டுமே தெரியும் என்ற ஒரே காரணத்தை வைத்து, கைநிறைய கரன்சிகளை எண்ணும் இளைய தலைமுறையை இன்று காண்கிறோம். நுனிநாக்கில் ஆங்கிலம் பேசினால் தான், இன்றைய இளம்பெண்கள் கூட என்னவென்று கேட்கின்றனர்.


அங்கு போய், தமிழில் தத்துவம் பேசினால், ஏற இறங்கப் பார்க்கின்றனர். தமிழில் பேசுவோர் என்றால், அவ்வளவு அவமானம். இந்த இழிநிலைக்கு காரணம் என்ன? தமிழுக்காக உண்மையிலேயே திராவிடக் கட்சிகள் செய்தது தான் என்ன? எல்லாம் வெறும் கேள்விகள் தான். பதில் தெரிந்த கேள்விகள்; பதில் சொல்ல முடியாத கேள்விகள். "செம்மொழியானது சாதனை இல்லையா?' என யாரேனும் முறையிடக் கூடும். அதனால் என்ன பலன் கிடைத்தது என்பதை, அவர்கள் தான் சொல்ல வேண்டும். "இந்த அறிவிப்பையே மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தான் வெளியிட்டிருக்க வேண்டும்; கலை, பண்பாட்டுத் துறை வெளியிட்டதால் எந்தப் பலனும் இல்லை' என்ற குற்றச்சாட்டுக்கு இன்று வரை பதில் இல்லை


. இதோ, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடும் அறிவித்தாகிவிட்டது. எட்டு மாநாடுகளின் முடிவாய் என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொண்டால், ஒன்பதாம் மாநாட்டின் பலனையும் எளிதில் புரிந்து கொள்ளலாம். இடையில், ஐம்பெருங்குழு, எண்பேராயம் என இரண்டு குழுக்களை அமைத்தனர். எட்டாம் வகுப்பு தமிழ்ப் புத்தகத்தில் படித்த மாதிரி ஞாபகம். அந்தக் காலத்தில், தமிழ்ச் சங்கத்தில் இருந்தனவாம். இப்போது, இவர்கள் கூடி தமிழ் வளர்க்கப்போகிறார்களாம். இரு குழுக்களின் முதல் கூட்டம் கூடியது. முக்கிய தீர்மானம் நிறைவேற்றி கலைந்தது. என்ன அது? முன்னாள் துணைவேந்தர் அகத்தியலிங்கம் மறைவுக்கு அஞ்சலி.


அடுத்த கூட்டம் எப்போது? இருங்கள்! இன்னும் எத்தனையோ முன்னாள் துணைவேந்தர்கள் இருக்கின்றனர்; சந்தர்ப்பம் கிடைக்காமலா போய்விடும்? rangarajpandey@yahoo.co.in

( நன்றி: தினமலர் )

18 Comments:

யதிராஜ சம்பத் குமார் said...

மிகவும் அருமையான "நச்" கட்டுரை. பிரசுரித்தமைக்காக இட்லிவடைக்கு நன்றிகள்.


தமிழ் தமிழ் என்று மக்களிடையே அரசியல் வர்த்தகம் செய்யும் வியாபாரிகள் மற்றுமவர்களது குடும்பத்தார்கள் மட்டும் என்னவோ பன்மொழி வித்தகர்களாகத்தான் இருக்கிறார்கள். ராமதாஸ் தமிழ்ப் பெயரல்லாத வர்த்தகஸ்தலங்களின் பெயர்ப்பலகைகளை அழிக்க தார் டின்-களுடன் புறப்பட்டார். ஆனால் அவருடைய பெயரே ஸம்ஸ்க்ருதப் பெயர்...ராமதாஸை இராமதாசு என்றழைத்தால் தமிழாகிவிடும் என்று எந்த அறிவாளி சொன்னாரோ தெரியவில்லை. தவிர, அன்புமணியின் இரு மகள்களின் பெயரும் முறையே ஸம்யுக்தா மற்றும் ஸங்கமித்ரா....இவர்கள்தான் மற்றவர்கள் தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று ரெளடித்தனத்தில் இறங்குகின்றனர்.


தமிழை செம்மொழியாக்கி என்ன பலனடைந்தார்கள் என்று கட்டுரையாளர் வினவியுள்ளார். ஏன் பலனில்லை?? தமிழகத்தில் செம்மொழி ஆய்வு மையம் என்று ஒன்று ஏற்படுத்தப்பட்டு அதற்கு கனிமொழி தலைவராக்கப்பட்டுள்ளார். தவிர மத்திய மாநில அரசுகள் பல கோடிகளை ஒதுக்கியுள்ளன. இது ஒன்று போதாதா?? வந்தாரை வாழ வைப்பது தமிழ்நாடு என்பார்கள்; தம்மை வளர்ப்பதாகச் சொல்வோரையும் வாழ வைப்பது தமிழ்.

ஆனந்த் said...

மிகச்சரி ! ஆனால் உங்களால் தமிழை காப்பாற்றுவது என்று சொல்ல முடியுமா? அரசு என்ன செய்ய வேண்டும் என்பதையும் நீங்கள் கூற வேண்டும்.

தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண் வழங்கினால் போதுமா? இன்றைய கலாசாரம் அடிப்படையில் எவ்வாறு அரசு இந்த சிக்கலை தீர்க்க வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா? முடிந்தால் அதையும் ஒரு பதிவாக போடவும். உலக மயமாக்கல் நம் மொழியயும் காவு கொண்ட்ருப்பதே நிஜம்.

நல்ல பதிலை எதிர்பார்க்கும்,
ஆனந்த்.

Gowtham said...

என்னதான் செய்யனும்னு சொல்லுறாரு திரு. ரங்கராஜன், தமிழை வளர்க??

Krish said...

அருமையான கட்டுரை...."தமிழ்க் குடிகளிடமும்" "தமிழ்த் தாங்கிகளிடமும்" இந்தக் கட்டுரையை கொடுங்கள். ஆட்சிக்கு வரவேண்டும், ஓட்டு வாங்க வேண்டும் என்பதற்க்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.

கௌதமன் said...

தமிழைக் காக்கிறோம் - நாங்கள் இல்லையேல் தமிழ் அழிந்துவிடும் என்று சொல்லிக் கொள்பவர்களைக் கூட - அந்த தமிழன்னை காப்பாற்றி, வளர்த்து வருகிறாள்! பதவியைப் பிடிக்க, வோட்டுகள் வாங்க மிகவும் சுலபமான வழிகள் - மொழி வெறி - மத வெறி - சினிமா வெறி. இப்போ பணம் சேர்ந்து கொண்டு விட்டது!

J said...

புரியுதையா, உம்மோட கோபம்! சரியாத்தான் சொல்லியிருக்கின்றீர், "குப்பையை கூட வித்து காசாக்குவான் ஒரு நல்ல வியாபாரி" என்று. எங்காளு கோமனத்த கூட அவுப்பான் கொடி பிடிக்கிறதுக்காக. புரிந்துகொள்ளும்!
கீழ்த்தரமான வாழ்க்கைக்கு தமிழ் இலக்கியங்களில் எவ்வாறெல்லாம் விளக்கம் உள்ளதோ அது அத்தனையும் நம் தமிழ்-பற்று அரசியல்வாதிகளால் செவ்வனே பின்பற்றப்பட்டு வருகிறது. பின் இவரன்றி வேறு யார் தமிழ் வளர்க்க குரலெழுப்ப முடியும்?!

Anonymous said...

மிளகாய் சாப்பிட்ட மாதிரி உள்ளது...!

அமைதி அப்பா said...

புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி, சந்தேகம்தான். சங்கை ஊதுவோம்...!

Unknown said...

idly vadai very nice blog . plasuvai seithikalum ullathu migavum nandru .



www.sundaramahalingam.blogspot.com

Anonymous said...

Hi,
good post, you see,all the politican family members childrens are learn more lanuguge,but only middle class people need learn tamil only,please ignore this politican speech,should need to learn hindi,just compare next state they learn hindi,butonly tamil nadu not learn hindi,even more suffering tamil people who ever woking other than tamil nadu???....we are speaking tamil in our home,so should learn Hindi.
I hope this is not only my voice,also where ever tamil people working other than tamil nadu.
I really suffering because of not learn hindi,may be some people will say why going to work other than our state,,,,,,,is it possible to get the job tamil nadu only????.
only people know the who's come accress the problem.
hope people/student will understand.
sfffering tamilan....

சீனு said...

'தமிழ்' 'தமிழ்' என்று மக்களை உசுப்பிவிட்டு ஆட்சிக்கு வந்தவர்கள் என்ன செய்து கிழித்துவிட்டார்கள்?

1) தமிழ்நாட்டு மக்களை குடிக்க வைத்து சிந்திக்காதவர்களாக ஆக்கியது. இன்று வருடத்திற்கு 10,000+ கோடிகளை குடி மூலம் மட்டுமே ஈட்டும் அரசும் மக்களும் எப்படி உருப்படுவார்கள்?

2) ஒவ்வொரு தேர்தல் வரும் போதும் மக்களிடம் "இந்த முறை ஒரு ஓட்டுக்கு எவ்வளவு கிடைக்கும்?" என்று எதிர்பார்க்க வைத்தது. காசுக்கு ஓட்டுப் போடும் தமிழன் இருந்தால் என்ன இல்லாமல் போனால் என்ன? வாழ்ந்தால் என்ன, வீழ்ந்தால் என்ன?

3) அதிகாரம் மையமாக ஒருத்தர் மட்டுமே இருப்பதில் பல நன்மைகள் இருந்தாலும், சர்வாதிகாரமும் குடி கொள்ளும் இடமாகிறது. அது தான் இப்பொழுது நடக்கிறது. மன்னராட்சியா நடக்கிறது தமிழ் நாட்டில்? தனக்குத் தானே விருதுகள் கொடுத்துக் கொள்வது, தன் அடிப்பொடிகளை விட்டு தன்னை புகழ விடுவது போன்றவை. (நேற்று கலைஞர் தொலைக்காட்சியை பார்த்து வாந்தி எடுக்காத குறைதான்).

4) ஒருவன் பேருந்தில் 3 பிள்ளைகளை வைத்து எரித்தால், இவனோ அலுவலில் வைத்து 3 பேரை எரிக்கிறான். இதென்ன கணக்கு தீர்க்கும் முறையா? ஆனால், இந்த நாள் எந்த நாயும் தண்டிக்கப்படவில்லை (நாய்கள் மன்னிக்க).

5) இயற்கையின் விதியால், அடுத்தவன் கிட்ட இருந்தே நீரை வாங்கும் நிலைக்கு தள்ளபட்டுள்ளோம். இருந்தாலும் எந்த முன் யோசனையும் இன்றி அடுத்த 10 ஆண்டுகள் தண்ணீருக்கு என்ன செய்யோம் என்று எந்த அமைச்சரிடமாவது கேளுங்கள், பதில் கிடைக்கிறதா என்று பார்ப்போம். இதில் இருக்கும் ஆற்று மணலையும் சுரண்டிக் கொண்டிருக்கிறோம். இதை எதிர்த்து கமல் சினிமாவில் சொன்னால் அந்த படம் எடுத்தவனுக்கும் காசை அள்ளி அள்ளி கொடுக்கிறோம். ஆனால், தீர்வு தான் கிடைக்கவில்லை.

6) ஈழத்தில் எத்தனை பேர் செத்தாலும் உணர்ச்சியற்ற ஜென்மமாக இருக்கின்றனர் தமிழக மக்கள். எவன் செத்தால் எனக்கென்ன? எனக்கு 1 ரூ அரிசியும், டாஸ்மாக்கும் இருந்தால் போதும். முத்துக்குமாரில் ஓலமும் அவன் உயிருடனேயே கரைந்து விட்டது. அவனை நினைக்கக் கூட இனி யாரும் இல்லை.

7) அவனவன் சேர்த்துவைத்துள்ள சொத்துக் கணக்கு எவ்வளவு? அவனுக்கே கணக்கு தெரியாது, அதை கேட்க வேண்டிய மக்களோ கமிஷன் மட்டும் கொடுத்தால் போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள். இந்த மக்கள் இருந்தால் என்ன, செத்தால் என்ன?

இந்த கேடுகெட்ட அரசியலும், அரசியல் வியாதிகளும் அழியவேண்டும். கூடிய சீக்கிரம் அழிவார்கள்.

Varatharajan said...

Tamil...Tamil...Tamil...today's poltical leaders speech..but their family members are studied in foreing..they create a film industry with the name sun pictures....valzha Tamil

ஆதி மனிதன் said...

அடுத்த தலைமுறை தமிழர்களாவுது இந்த அரசியல் வியாதிகளிடம் இருந்து விடுதலை பெறட்டும்.

அதற்கு சிறந்தவழி நம் பிள்ளைகளை நாமாவது ஹிந்தி மற்றும் பிற மொழிகளை பயில ஊக்குவிக்கவேண்டும்.

Tamil astrology said...

உங்கள் blog மிகவும் நன்றாக உள்ளது . உங்கள் தகவல்கள் பயனுள்ளதாக உள்ளது. தங்கள் சேவையை மேம்மேலும் தொடர வாழ்த்துக்கள்.. மிக்க நன்றி

Anonymous said...

China and Russia put the blame on some screwed up experiments of US for the earthquake that happened in Haiti.
Chinese and Russian Military scientists, these reports say, are concurring with Canadian researcher, and former Asia-Pacific Bureau Chief of Forbes Magazine, Benjamin Fulford, who in a very disturbing video released from his Japanese offices to the American public, details how the United States attacked China by the firing of a 90 Million Volt Shockwave from the Americans High Frequency Active Auroral Research Program (HAARP) facilities in Alaska
If we can recollect a previous news when US blamed Russia for the earthquake in Georgio. What do you guys think? Is it really possible to create an earthquake by humans?
I came across this [url=http://universalages.com/hot-news/what-happened-in-haiti-is-it-related-to-haarp/]article about Haiti Earthquake[/url] in some blog it seems very interesting, but conspiracy theories have always been there.

Anonymous said...

Shalom

This is the best place to watch movies for free:
http://www.freemoviez.biz

Movies are very good

See you later

[URL=http://www.freemoviez.biz][IMG]http://static.thepiratebay.org/img/firefox-22.png[/IMG][/URL]

Anonymous said...

The Brand-new York Hilarious System is a privately owned business that offers the following servics:

•Lyrics or Charter rent out a defend up comedian / comical / artists comedy / comedy symbolize emissary / agents / agencies: If you are interested in booking or hiring apply up comics / comedians, we take not too hundred on our roster and give birth to access to upward of 5,000 comedians across the U.S. If you are interested in a good corporate funster, a corporate comedy elucidate, church comedy, comedy magician, comedy hypnotist, comedy ventriloquist, college clown, comedy speakers, Dark-skinned jokesmith, female jester, Jewish Buffoon, Christian Jokesmith, or any other specialty buffoon, this is your complete comedy booking cause service.




[url=http://www.nyhystericalsociety.com]Hire a Comedian[/url]
[url=http://www.nyhystericalsociety.com]Hire a Corporate Comedian[/url]

Anonymous said...

We be struck nigh donned Canada goose along Jacket representing in every way some while in every instant the winter ripen, and I like them. These days, my elderly Canada goose soundless raison d'etre effectively, but I gather they are a elfin idea gone away from like a light of fashion. So I am functional to take another up to epoch kind-hearted of Canada goose along hat in take care of to myself. My ancient the veritable is a malignant Canada goose hat, and devoid of the mix headgear. And this snippet I am thither to purchasing a bule Canada goose hat using the engage headgear, to hand out my percipience warm check the winter season.And So I fitting got a brisk North america goose jumper within the North america goose network sentimentality, beats ill-defined Friday saleand I was hoping to recuperate them. That i’m in truth au fond after i reached it, it is so gentlemanly, exceptionally the colour. This azure jumper scarcely isn’t like other besmirch’s azure tinge, it’s terrific and chic. While I agree with at it my fuselage, I felt mild and tolerable this North america goose kacket ‘s what I extraordinarily want. And I Also recompense the formerly being it swap unpleasantness instead of my ruin, and he or she adores it as soberly, so I plagiarist her sisterhood a stock identical North america goose jumper as me. Promptly, she inquired just about every lover connected with when her North america goose is showed up. I fancy she demand as a matter of act important to them.

http://www.maxituning.es/latribu/tuningdigital/lv-clutches-about-style-and-exquisiteness-ford-
http://araboolist.com/ads/the-proven-and-cheap-lv-purses/
http://dyayo.pf-control.de/bbPress/topic.php?id=90415
http://articlegnome.com/article.php?id=104075
http://wanghandbags.quebecblogue.com/2012/11/22/good-looking-dressed-in-black-form-of-bvlgari-with-traditions-and-game-blend/
http://www.classifiedadlisting.com/replica-louis-vuitton-alize-heures-bag-the-one-that-is-ever-lasting-in-fashion-world/7879
http://bringaut.hu/node/7342
http://freeaddclassified.com/bvlgari-rolex-replica-affordable-and-finest/27583/
http://homelab.8bit.hu/?q=node/29981
http://www.advertforindia.com/staying-cool-stylish-and-trendy-with-louis-vuitton-replica-handbags/
http://jkc.asesinato.nl/bbpress/topic.php?id=26489
http://wanghandbags.insanejournal.com/19385.html
http://www.savorybits.com/bbpress/topic.php?id=448387
http://ligas.clansbk.com/node/16928
http://www.myupdater.co.uk/?q=node/27081
http://chenly.free-php-webhosting.com/lv-reproduction-boots-and-shoes-vogue-gives-ecstacy.html
http://174.132.79.187/~sgzou/?q=node/14343
http://www.commercemr.com/?p=44
http://www.differencebetween.us/ads/great-and-world-class-bvlgari-designer-watches/
http://www.myarticleworld.net/article.php?id=20555
http://handbags.isafake.org/2012/11/21/wonderful-cartier-ronde-fantaisiste-watch-out-for-elegant-females/
http://fyodor.eu/node/6312
http://konstlib.net/node/3198
http://mytutoronline.com/node/10888
http://dage.fr/forum/topic.php?id=20673