உங்களைப் பற்றி: "துலாத்தான் எங்கும் உண்டு" என்பதற்கேற்ப எல்லோரிடமும் நல்ல பெயரை எளிதில் சம்பாதித்து விடும் துலா இராசி வாசகர்களே, நீங்கள் தோல்வியைக்கண்டு துவளாதவர். போராட்ட குணம் உடையவர். எதிலும் முயற்சி செய்து வெற்றி காண வேண்டும் என்று விரும்புபவர். எப்படி இருக்கப் போகிறது இந்த சனிப் பெயர்ச்சி: இது வரை லாபஸ்தானத்தில் இருந்து உங்களுக்கு பல விதமான முறையிலும் லாபங்களையும் விரையமாக்கிய சனீஸ்வரன் இனி விரையச்சனியாகவும், ஏழரைச்சனியாகவும் வரும் 21/2 ஆண்டுகளுக்கு என்னென்னெ பலன்கள் தரப்போகிறார் என்பதைப் பார்ப்போம். இதுவரை லாபஸ்தானத்தில் இருந்து மூன்றாம் பார்வையாக உங்கள் இராசியைப் பார்த்த சனீஸ்வரன் உங்களது தைரியத்தையும், முயற்சியையும் தடுத்திருந்தார். அதனால் எதிலும் தோல்வி, சோம்பல் என்று முடங்கிக் கிடந்தீர்கள். இனி உங்களுக்கு அவர் யோக பலனையேத் தருவார். என்ன ஐயா, எங்களுக்கு ஏழரைசனி ஆரம்பிக்கிறது என்று நாங்களே பயந்து கொண்டிருக்கிறோம், யோகம் வரும் என்று சொல்கிறீர்களே, இது எப்படி? என்று நீங்கள் கேட்கும் கேள்வி எனது காதில் விழுகிறது. உங்கள் இராசிக்கு சுகஸ்தானாதிபதியே சனிதான், எனவே நீங்கள் பயப்பட தேவையில்லை. பய உண்ர்வு நீங்கி தெளிந்த சிந்தனை பிறக்கும். கோப உண்ர்வு நீங்கி சாந்தமாகி நிதானமாக பேசுவீர்கள். பல பிரச்சனைகளில் சமாதானமாகப் போவீர்கள். பழைய நீண்ட கால பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உங்களது பிள்ளைகளின் பிடிவாதம் நீங்கும். உங்கள் சொற்படி கேட்டு நடப்பார்கள். உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். உங்கள் பிள்ளைகளுக்கு சொந்த பந்தமெல்லாம் ஆச்சரியபடும் அளவுக்கு திருமணம் நடத்தி வைப்பீர்கள். சிலரின் குழந்தைகளுக்கு கல்வி சம்பந்தமாகவோ, பணி சம்பந்தமாகவோ வெளிநாடு வேலைவாய்ப்பு கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும், அதேபோல் செலவினங்களும் அதிகரிக்கும். வங்கிக் கடனுதவியுடன் வீடு மனை வாகனம் வாங்குவீர்கள். பிறரிடம் ஏமாந்த நிலை மாறும். எவருக்காகவும் சாட்சிகையெழுத்து போடுவதோ, பரிந்து பேசுவதோ கூடாது. எதிலும் மூக்கை நுழைக்காமல் பார்வையாளராக இருப்பது நல்லது. பிறரை விமர்சனம் செய்தல் கூடவே கூடாது. கருத்து சொல்லும் போது மிகஜாக்கிரதையாக இருக்கவும். பித்தம் சம்பந்தபட்ட உணவுவகைகளை அறவே தவிர்த்தல் வேண்டும். வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கை தேவை. பெரிய பொறுப்புகள் வரும் போது யோசித்து ஏற்றுக் கொள்ளவும். வாக்கு கொடுக்கும் போது நன்கு பரிசீலித்து வாக்கு கொடுக்கவும். முடிந்தளவு கமிட்மெண்ட்ஸை தவிர்க்கவும். யாருடனும் தேவையில்லாமல் பேசக்கூடாது. வம்புச் சண்டைக்கு போகவே கூடாது. வாழ்க்கைத்துனையுடன் வரும் கருத்து மோதலுக்கு நீங்கள் பனிந்து போவதே நன்மையைத்தரும். தங்களைப் பற்றிய தவறான செய்திகள் வந்தால் புறந்தள்ளுங்கள். கிசுகிசுக்களுக்கு செவிசாய்க்காதீர்கள். முடிந்தளவு தியானம் செய்யுங்கள். குலதெய்வகோவிலுக்கு சென்று வாருங்கள். பெற்றோர் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளவும். வியாபாரத்தில் புதுமையைக் கொண்டு வாருங்கள், வெற்றி பெறலாம். பங்குதாரர்களிடம் பணிந்து போங்கள். பிறரின் மேல் தேவையில்லாமல் வீண்பழி சுமத்தாதீர்கள். அனுபவம் மிக்க ஆட்களை பனியில் அமர்த்துங்கள். உணவு, எலக்ட்ரானிக்க்ஸ், ஏற்றுமதி இறக்குமதி, அக்கவுண்ட்ஸ் போன்ற தொழில்கள் சிறப்படையும். போட்டிகள் இருந்தாலும் முயற்சி செய்தால் எளிதில் வெற்றி பெறலாம். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் கூடுதல் அக்கறை தேவை. முக்கியமாக அறிவியல், கணிதம் படிப்பவர்கள் அதிக முயற்சி எடுக்கவும். எதிர்பார்த்த மதிப்பெண்கள் வராமல் போகலாம், கவனம் தேவை. கலைஞர்களுக்கு தகுந்த மரியாதையும் சன்மானமும் கிடைக்கும். மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி உங்களை வெளியுலகுக்கு அழைத்து வருவதுடன் மரியாதையையும் மதிப்பையும் அளிப்பதாக அமையும். நக்ஷத்திர ரீதியான பலன்கள்: சித்திரை 3, 4ம் பாதங்கள்: உடல்நலம் சம்பந்தமான விஷயங்களில் கவனம் தேவை. கடன் தொல்லைகள் வரலாம். முடிந்தவரை கடன் வாங்காமிலிருப்பது நல்லது. எந்த தருணத்திலும் டென்ஷன் கூடவே கூடாது. செவ்வாய் கிழமையன்று முருகன் வழிபாடு நன்மையைத் தரும். ஸ்வாதி: மனதில் எதையும் வைத்திராமல் யாருடனாவது கலந்துரையாடுங்கள். முடிந்தவரை தனிமையைத் தவிருங்கள். வெளியூர் வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். பண விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கொடுக்கல் வாங்கலில் தகராறு வரலாம். முடிந்த வரை வெள்ளிக் கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வரவும். விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள் : உற்சாகம் இல்லா காரியங்களில் ஈடுபட வேண்டாம். மனத்தை ஒருமுகப்படுத்தி எந்த காரியத்திலும் ஈடுபடுங்கள். அரசுவழியில் சோதனைகள் வரலாம் கவனம். கூட்டுதொழில் ஆரம்பிப்பதாய் இருந்தால் நன்கு பரிசீலித்து ஈடுபடவும். மகான்களை வழிபடவும். குறிப்பு: இது மாணவ மணிகளுக்கு: ஸ்ரீ ஸரஸ்வதி வழிபாடு நன்மையைத்தரும். லக்ன ரீதியான பலன்கள்: [1] மேலே உள்ள டேபிளை எப்படி பயன்படுத்துவது? நீங்கள் துலாம் இராசியில் பிறந்து லக்னம் தெரிந்ததென்றால் அதற்குள்ள பலனைத் தெரிந்து கொள்ளவும். அதற்குள்ள பரிகாரத்தை தெரிந்து கொள்ளவும். உதாரணமாக, நீங்கள் துலாம் இராசியில் பிறந்து மீனம் லக்னத்தில் பிறந்தவரென்றால் உங்களுக்கு 55% சதவிகிதம் நல்ல பலன்கள் கிடைக்கும். மேலும் நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்: தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது மற்றும் துர்க்கா காயத்ரி சொல்வது. எனக்கு லக்னமேத் தெரியாது ஆனால் துலாம் இராசி என்பவர்கள் கணபதி காயத்ரி, நவக்ரஹ ஸூக்தம் சொல்வது, ஸ்ரீஸூக்தம் சொல்வது பரிகாரமாகும். [2] இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம். நக்ஷத்திர வாரியாக சில குறிப்புகள்: அதிர்ஷ்டம் தரும் எண்களும், திசைகளும் ஜாதகத்திற்கு ஜாதகம் மாறும். இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுவானவையே. இன்றைய ஜோதிடக் குறிப்பு: இன்று எந்த ஜோதிடக் குறிப்பும் கிடையாது. அடுத்த பதிவில் மிகவும் முக்கியமான அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய திருமணப் பொருத்தம் தொடர்பான குறிப்பு தரப்போகிறேன். காத்திருங்கள். இனி விருச்சிகம் இராசிக்குண்டான பலன்களில் சந்திபோம். நன்றி.
லக்னம் இராசி பலன்கள் பரிகாரம் மேஷம் துலாம் 60/100 சுப்பிரமணிய புஜங்கம் படிப்பது ரிஷபம் துலாம் 60/100 விநாயகர் அகவல் படிப்பது மற்றும் ஸ்ரீஸூக்தம் சொல்வது மிதுனம் துலாம் 50/100 விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது கடகம் துலாம் 55/100 ஸ்ரீ லலிதா ஸகஸ்ரநாமம் சொல்வது ஸிம்ஹம் துலாம் 50/100 ஆதித்யஹ்ருதயம், மஹாலக்ஷிமி காயத்ரி, நாராயண காயத்ரி, ஹனுமத் காயத்ரி சொல்வது கன்னி துலாம் 50/100 விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது, முடிந்த வரை இராம நாமம் சொல்வது, மகான்களை வழிபடவும் துலாம் துலாம் 50/100 கணபதி காயத்ரி, நவக்ரஹ ஸூக்தம் சொல்வது, ஸ்ரீஸூக்தம் சொல்வது. விருச்சிகம் துலாம் 60/100 கணபதி பூஜை மற்றும துர்ஹா ஸூக்தம் சொல்வது, முடிந்த வரையில் அம்பாள் நாமாவை சொல்வது. தனுர் துலாம் 60/100 ஹனுமத் கவசம் சொலவது. மகரம் துலாம் 55/100 கணபதி வழிபாடு மற்றும் குலதெய்வ வழிபாடு செய்வது மற்றும் முன்னோர்களை வழிபடுவது. கும்பம் துலாம் 50/100 லலிதா ஸகஸ்ரநாம பாராயணம் மற்றும் மூகபஞ்சக சதீ சொல்வது, தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது. மீனம் துலாம் 55/100 தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது மற்றும் துர்க்கா காயத்ரி சொல்வது லக்னமே தெரியாது துலாம் 50/100 கணபதி காயத்ரி, நவக்ரஹ ஸூக்தம் சொல்வது, ஸ்ரீஸூக்தம் சொல்வது. குறிப்பு:
* நக்ஷத்திரங்கள் பலன்கள் சித்திரை - 3, 4 ம் பாதங்கள் ஸ்வாதி விசாகம் - 1, 2, 3 ம் பாதங்கள் இராசி துலாம் துலாம் துலாம் இராசியாதிபதி சுக்ரன் சுக்ரன் சுக்ரன் நக்ஷத்திர அதிபதி செவ்வாய் இராகு வியாழன் அதிதேவதைகள் துவஷ்டா வாயு இந்திராக்னி கணம் இராக்ஷஸ் கணம் தேவகணம் இராக்ஷஸ் கணம் நாடி மத்ய பார்ஸுவ - இடது பார்ஸுவ - இடது மிருகம் பெண் புலி ஆண் எருமை ஆண் புலி பக்ஷி மரங்கொத்தி தேனீ செவ்வாக் விருக்ஷம் வில்வம் மருது விளா இரஜ்ஜு தொப்புள் கழுத்து வயிறு வேதை நக்ஷத்ரம் மிருகசீர்ஷம் அவிட்டம் உரோஹினி கார்த்திகை அதிர்ஷ்டம் தரும் எண்கள் 1, 3, 4, 6, 7, 9 1, 2, 3, 6, 7, 9 1, 3, 6, 7, 9 அதிர்ஷ்டம் தரும் திசைகள் வடக்கு கிழக்கு, வடக்கு மேற்கு, வடக்கு குறிப்பு:
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Saturday, September 19, 2009
துலாம் ராசி பலன்
Posted by IdlyVadai at 9/19/2009 10:02:00 PM
Labels: ராசிபலன்
Subscribe to:
Post Comments (Atom)
3 Comments:
Naan Meena Rasi eppa Varum ennadoia Rasi Palan. Sani piarchi mundai pondugaa paaa
Dear Ramkrishnan sir,
why இன்று எந்த ஜோதிடக் குறிப்பும் கிடையாது? please some good tips about the wrong assumptions are being followed. please dont leave any post with out any ஜோதிடக் குறிப்பு.
Thanks!!
Thanks Idly vadai,
Very Clear.
Post a Comment